<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,414,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Sep 07 2026 03:56:28 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260907T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="07092026-TRY-10" position.sequence="10" ex-ref="07092026-TRY-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">‘வைப்’ ஏற்றும்படியாக டிராமாவை அரங்கேற்றுவார்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup846396_10_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="16.5">இ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ன்று  நடக்கவிருக்கின்ற சட்டமன்ற நிகழ்ச்சியை, ஏதோ ஒரு பெரிய பேனர் சினிமாவின் FDFS அதாவது முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது போன்ற தோற்றத்தை, நடிகர் விஜய்யும் ஊடகங்களும் கடந்த இரண்டு நாட்களாக பெரிய அளவில் கட்டமைத்து வருகின்றனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்நாட்டின் அரசியலையும், ஆட்சிமுறையையும், சட்டமன்றத்தையும் ஒருவிதமான மாஸ் லைவ் சினிமாவைப் போல இந்த த.வெ.க. கட்சியினரும், விலை போகும் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் மாற்றி விட்டிருக்கின்றனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதற்குக் காரணம், வாசிப்பு அனுபவங்களை எல்லாம் கைவிட்டு விட்டு, ஒன்றாம் வகுப்பு துவங்கி... கல்லூரிப் படிப்பு வரையிலும்... கொடுக்கின்ற சிலபஸ்... அதற்கான புத்தகங்கள்... அதை மனப்பாடம் செய்து அந்தந்த தேர்வில் வாந்தியெடுத்து விட்டு, மதிப்பெண்கள் வந்தபிறகு அந்த சப்ஜெக்ட்டையே மறந்து விட்டு அடுத்த நிலைக்கான சிலபஸை மனப்பாடம் செய்யக் கிளம்பிவிடும் கல்விச் சூழல் தான் என்பது என் உறுதியான நம்பிக்கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஐந்து வயது முதல் 23 வயது வரையிலும் வேறு எதிலுமே கவனம் செலுத்தாமல் வாசிப்பு என்றால் பள்ளி கல்லூரிகளில் கொடுக்கப்படும் சிலபஸுக்கு உண்டான புத்தகத்தை மனப்பாடம் செய்து தூக்கி எரிவது என்கிற நிலைதான் இப்பொழுது இருக்கிறது. அதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கின்றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இடையில் பல்வேறு விதமான சிறுகதைகள், படக்கதைகள், காமிக்ஸ் வகை புத்தகங்கள், குழந்தைகள் மாணவர்கள், இளைஞர்களுக்கான வார இதழ்கள், மாத இதழ்கள், தினசரிகள், வரலாற்றுப் புதினங்கள், சமூக நாவல்கள்  இப்படி வகை வகையாகப் படித்து வரலாறு, சமூகம், உலக ஞானம் இப்படி எதைப் பற்றியுமே வாசித்துப் பழகாத நிலையில் தான் இன்றைய இளைஞர்கள் பள்ளிக் கல்லூரி தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்டு வெளியே தள்ளப்படுகின்றார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவர்களுக்கான பொழுது போக்கு என்றால், மிகப் பெரும்பான்மையாக வீடியோ கேம்ஸ், ஆன் லைன் சாட்டுகள், சினிமா  அவ்ளோ தான். இப்பொழுது லேட்டஸ்டாக ரீல்ஸ் பார்ப்பது அல்லது ரீல்ஸ் போடுவது !</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த வகையான மீடியாக்கள் வழியாகத்தான் அவர்கள் உலகைப் பற்றிய, தன்னைச் சுற்றியுள்ள சமூகம், அரசியல் பற்றிய பாடங்களைக் கற்கிறார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வீதிகளில் சென்று விளையாடும் வாய்ப்பு 90 சதவிகித குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை வாய்க்கப் பெறுவதே இல்லை. வீதிகளில் சக தோழர்களுடன் விளை யாடும் பொழுது கீழே விழுந்தோ, அவர்களுக்குள் ஏற்படும் சின்னச் சின்ன சண்டைகளின் போது அடிபட்டோ, முட்டிக்கால்களில் ரத்தம் வழிந்தோ, பல் உடைந்து போயோ, நெற்றிப் பொட்டில் அடிபட்டு தையல் போடும் அளவிற்கு நிலைமை சென்றோ.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்படியாக ரத்தம், காயம் சம்பந்தப்பட்ட எந்த நேரடி வலிகளையும், உணர்வுகளையும் அனுபவிக்காமலேயே 90 சதவிகிதம் பேர் இளைஞர்களாக உருமாறி வருகின்றனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவர்களுக்கு எல்லாம் திரையில் காட்டப்படும் கத்திக் குத்து, கொடூர கொலை, வன்முறை பற்றிய வைப் கிடைக்கிறதே தவிர, அதை அனுபவிப்பவர்களுக்கு ஏற்படும் உச்சக்கட்ட வலிகளும், வேதனைகளும், வாழ்க்கை முடிவடைவதும், அந்த நபர்களின் குடும்பத்தின் எதிர்காலம் குறித்தும் எந்த உணர்வுமே இல்லாத மரக்கட்டை மனிதர்க ளாகவே அவர்கள் இந்த சமூகத்தில் செயல்பட களம் இறக்கப்படுகின்றார்கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவர்களுக்கு வெட்டுபவன் தான் வில்லன், வெட்டப்படுபவன் அப்பாவி அல்லது பலவீனமானவன், வெட்டுவதை தடுப்பவன் தான் ஹீரோ என்ற உண்மைகளை யார் சொல்லிக் கொடுப்பது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சுயநலத்தாலும், பேராசையாலும், பணத்திற்காகவும் புழுப்புழுத்துப் போயிருக்கும் ஊடகங்களும், ஊடகவிய லாளர்களும் இதை எல்லாம் எடுத்துச் சொல்வார்களா? மாட்டார்கள், அவர்கள் தங்கள் கடமையை மறந்து, அறம் ஒழிந்து வெகு வருடங்கள் ஓடி விட்டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஜனநாயகத்தில் அதாவது மக்களாட்சியில் சட்டமன்றம், எதிர்க்கட்சிகள், நீதிமன்றங்கள் மற்றும் ஊடகங்கள் தான் நான்கு தூண்கள். இந்த நான்கு தூண்களின் மீது தான் மக்களாட்சி மண்டபம் கட்டப்பட்டு அதன் மீது அமர்ந்து ஆட்சியாளர் ஆட்சி செய்ய வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முதலில் சட்டமன்றம். இதில் தான் மக்கள் பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் பந்தி விரிப்பார்கள். அதற்கு ஆளுங்கட்சி மிகச் சரியான பதிலைத் தரவேண்டும். பதில் இல்லாவிட்டால் மன்னிப்புக் கோரி விரைவில் அந்தப் பிரச்சினையை சரி செய்து கொடுப்பதாக வாக்குக் கொடுத்து அதை நிறைவேற்ற வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்த ஆளுங்கட்சி இதையெல்லாம் மதிக்கவில்லை என்றால், அதாவது எதிர்க்கட்சிகள் தான் வேண்டுமென்றே குற்றச்சாட்டு வைக்கின்றார்கள் என்று சமாளித்தோ அல்லது கடந்த ஆட்சிக்காலங்களில் இப்படி நடக்கவில்லையா? என்று பிரச்சினையை திசைமாற்றி மக்களை கைவிட்டாலோ.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்தப் பிரச்சினையை எதிர்க்கட்சிகளோ அல்லது பாதிக்கப்பட்ட மக்களோ அல்லது அதன் அமைப்போ நீதிமன்றத்திற்கு எடுச்துச் செல்வார்கள். மக்கள் மன்றத்தில் ஆளுங்கட்சியால் உதாசீனப்படுத்தப்பட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளில் ஐம்பது சதவிகித பிரச்சினைகளுக்கு அங்கே தீர்வு கிடைக்கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீதிமன்றத்திலும் தீர்வு கிடைக்காத பிரச்சினைகளை, ஊடகங்கள் தான் தொடர்ந்து எழுதி, பேசி, காட்சிப்படுத்தி, அரசாங்கத்தை ஆட்சியாளர்களை வழிக்கு வரவழைத்து தீர்வு காண உதவ வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காரணம் மக்கள் பிரச்சினைகளைப் பேசும் எதிர்க்கட்சிகளை, இவர்கள் இப்படித்தான் என்று முத்திரை குத்தி ஓரம்கட்டிவிட முடியும். நீதிமன்றத்திற்கு சட்டத்தின் படி அனைத்து ஆதாரங்களும் கொடுத்தால் தான் நீதி கிடைக்கும்.  ஆனால் ஊடகங்களுக்கு இந்தப் பிரச்சினையில் உண்மை இருக்கின்றது என்று நம்பினாலே அதற்கு ஆதரவாக மக்களைத் திரட்டி அரசாங்கத்தை அடக்க முடியும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால் நான்கு தூண்களில் உச்சபட்சஅறத்தோடும், அச்சமின்றி செயல்படும்வாய்ப்பிருக்கும் ஊடகங்களே ஆட்சியாளர்களுக்கு விலை போனபிறகு.  சட்ட மன்றமும் ரீல்ஸ் கண்டண்ட் தயாரிக்கும் கூடமாக மாற்றப்பட்டு விட்ட நிலையில் எதிர்க்கட்சிகளும் நீதிமன்றங்களும் என்கிற இரண்டு தூண்கள் மட்டும் மக்களாட்சியை எப்படி தூக்கிப் பிடிக்க முடியும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மானியக் கோரிக்கை என்றால் அந்த துறை சார்ந்த தவறுகளை, சந்தே கங்களை, திட்டங்களைப் பற்றி மக்கள் சார்பாக எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் கேட்பார்கள். அதற்கு துறை சார்ந்த அமைச்சர் பதில் கூற வேண்டும். ஆனால் இங்கே முதலமைச்சரோ இந்த சட்டமன்ற நடைமுறைகளை எல்லாம் காலில் போட்டு மிதிப்பவராக, நான் மூன்று நாட்கள் கழித்து ஒட்டுமொத்தமாக பதில் சொல்றேன், யாரும் ஓடிவிடாதீர்கள் என்று ரீல்ஸ் கண்டெண்ட் கொடுத்து விட்டு அவரே ஓடிச் செல்கிறார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆக திங்கள் கிழமை ஒரு பெரும் ஸ்கிரிப்ட்டை அவர் அரசியல் ஆலோசகர்கள் எழுதி, அதை எப்படி டெலிவரி செய்ய வேண்டும் என்று இயக்குனர்களை வைத்து ஒத்திகை நடத்தி, ஸ்கிரிப்ட்டை மனப்பாடம் செய்து தயாராக சட்டமன்றத்தில் வந்து ஏற்ற இறக்கங்களுடன், எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், வைப் ஏற்றும்படியாக ஒரு டிராமாவை அரங்கேற்றுவார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதை எதிர்க்கட்சிகள் எதிர்த்துக் கேள்வி கேட்கக் கூடாது என்று சபாநாயகர் திங்கள் கிழமை அன்று கேள்வி நேரத்தையே நீக்கி விட்டார். அதையும் மீறி எதிர்க்கட்சிகள் எழுந்து கேட்டால், அவர்களை அடக்குவதற்காக முன் கூட்டியே அவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரை அனுப்பி சோதனை என்கிற பெயரில் ஊடகங்களுக்கு தீனி போட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களை உளவியல் ரீதியாக சட்டமன்றத்தில் முடக்கும் வேலையை செய்கின்றார்கள் ! இன்னும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களை அதிகாரத்தைப் பயன்படுத்தி இரண்டாக உடைத்து வாய்ப்பூட்டு போட்டுவிட்டார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்டமன்றமும், எதிக்கட்சிகளும் முடக்கப்படுகிறார்கள். நீதிமன்றத்திற்கு ஆதாரம் வேண்டும். ஊடகங்கள் விலைபோய்விட்டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இங்கே நடப்பது மக்களாட்சியா? அல்லது சினிமா மோகத்தால் நாசமாய் போய்க்கொண்டிருக்கும் மானங்கெட்டவர்கள் ஆட்சியா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நடப்பதையெல்லாம் பார்க்கும் போது, நாடும் நாட்டுமக்களும் நாசமாய்ப் போகட்டும் என்று சபிக்கின்ற மனநிலை ஏற்படுவதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>