<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,601,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 08 2026 03:31:55 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260908T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="08092026-CBE-05" position.sequence="05" ex-ref="08092026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">கடையநல்லூர் தொகுதி – மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகளால்</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="23"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="36">விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அரசு முன்வருமா?</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">சட்டப்பேரவையில் தி.மு.இராசேந்திரன் பேச்சு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="tmubw_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Shakthiphotob_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சென்னை, செப். 7 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">கடை­ய­நல்­லூர் தொகு­தி­யில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகு­தி­யில் வன விலங்­கு­க­ளால் விவ­சாய நிலங்­கள் பாதிக்­கப்­ப­டு­வதை தடுக்க அரசு முன் வருமா? என சட்­டப் பேர­வை­யில்தி.மு.இரா­ஜேந்­தி­ரன் கேள்வி எழுப்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இது குறித்து பேர­வை­யில் நடை­பெற்ற விவா­தம் வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">தி.மு.இரா­சேந்­தி­ரன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கடை­ய­நல்­லூர் தொகுதி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகு­தி­க­ளில் வன­வி­லங்­கு க­ளால் விவ­சாய நிலங்­கள் பாதிக்­கப்­ப­டு­வ­தைத் தடுக்க அரசு முன்­வ­ருமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">ஆம் எனில், எப்­போது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">அமைச்­சர் ரா.வீ.இரஞ்­சித் குமார்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">விவ­சாய நிலங்­க­ளைப் பாது­காக்க கடை­ய­நல்­லூர் சட்­ட­மன்­றத் தொகு­திக்­குட்­பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடி­வா­ரப் பகு­தி­க­ளில் வன­வி­லங்­கு­கள் விவ­சாய நிலங்­க­ளுக்­குள் வரா­மல் தடுப்­ப­தற்கு ரூபாய் 1 கோடியே 50 இலட்­சம் செல­வில் வன எல்­லை­யோ­ரம் 20 கிலோ மீட்­டர் தூரத்­திற்கு சூரிய ஆற்­ற­லில் இயங்­கும் மின்­வேலி அமைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">மனி­தர்­க­ளுக்­கும் காட்­டுப் பன்­றி­க­ளுக்­கும் இடையே ஏற்­ப­டும் மோதல்­களை தடுக்க திறம்­பட கையா­ளும் வகை­யில் வனப் பகு­தி­களை சுற்­றி­ யுள்ள விவ­சா­யப் பயிர்­களை காட்­டுப் பன்­றி­கள் சேதப்­ப­டுத்­து­வ­தைத் தடுப்­ப­தற்­காக விரி­வான நிலை­யான செயல்­பாட்டு நடை­மு­றை­கள் வகுக்­கப்­பட்டு, நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">தி.மு.இரா­சேந்­தி­ரன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">உங்­களை இரண்­டாம் சபா­நா­ய­கர்  செல்­ல­பாண்­டி­ய­னாக பார்க்­கி­றேன். அப்­ப­டி­யென்­றால், முதல் சபா­நா­ய­கர்  செல்­ல­பாண்­டி­யன் உங்­க­ளுக்­குத் தெரி­யுமா என்று கேட்­டால், நான் பயின்ற மேல­நீ­லி­த­நல்­லூ­ரில் உள்ள பசும்­பொன் முத்­து­ரா­ம­ லிங்க தேவர் கல்­லூ­ரி­யோடு அவர் தொடர்­பு­கொண்­ட­வர். அடிக்­கடி அவ­ரைச் சந்­தித்து பேசு­கிற வாய்ப்பு எனக்கு கிடைத்­தது உண்டு. அது­கு­றித்து, உரி­ய­நே­ரத்­தில் எனது உரை அமை­கி­ற­போது பதி­வு­செய்­வேன் என்­ப­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கடை­ய­நல்­லூர் தொகு­தி­யில் வன­வி­லங்­கு­க­ளின் நட­மாட்­டத்­தால் வேளாண்மை பாதிக்­கப்­ப­டு­வது குறித்த எனது கேள்­விக்கு தக்க விளக்­க­ம­ளித்த  வனத் துறை அமைச்­சர் அவர்­க­ளுக்கு எனது நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன். எனது கோரிக்­கை­யு­டன்­கூ­டிய வினா என்­ன­வென்­றால்,கடந்த மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்பு எல்­லோ­ரும் பார்த்­தி­ருப்­போம். கோவை -– -பாலக்­காடு இர­யில் வழித்­த­டத்­தில், இர­யில் மோதி பல யானை­கள் இறந்­து­கி­டந்­தன. அன்­றைய முத­ல­மைச்­சர் தலை­வர்  மு.க. ஸ்டாலின் அவர்­கள், விரைந்து நட­வ­டிக்கை மேற்­கொண்டு கோவை-–­பா­லக்­காடு வழித்­த­டத்­தில் மனி­த-­யானை மோதல் நிக­ழா­ம­லும், இர­யில்-­யானை மோதல் நிக­ழா­ம­லும் தடுப்­ப­தற்கு 13 கிலோ மீட்­டர் தூரம், இந்­திய வனத் துறைச் சரித்­தி­ரத்­தி­லேயே முதன் ­மு­றை­யாக முழு கோபு­ரங்­களை அமைத்து, 24 மணி­நேர கண்­கா­ணிப்­பில் இயங்­கக்­கூ­டிய அதற்கு ஒரு கட்­டுப்­பாட்டு அறை­யை­யும் அமைத்­தார்­கள். இந்த மூன்­றாண்டு காலங்­க­ளில் அங்கு யானை- மனித மோதல் நிக­ழ­வில்லை என்­றும், யானை-­இ­ர­யில் மோதல் நிக­ழ­வில்லை என்­றும் தக­வல்­கள் கிடைக்­கப்­பெ­று­கின்­றன. வனத் துறை அமைச்­சர் அவர்­கள் தமிழ்­நாடு அரசு, அந்­தத் திட்­டம் சிறப்­பாக இயங்­கு­கி­றதா என்­பதை ஆய்­வு­செய்து, இயங்­கு­கி­றது எனில் அதை முதற்­கட்­ட­மாக எங்­கள் கடை­ய­நல்­லூர் தொகு­தி­யி­லும், தென்­காசி மாவட்­டத்­தில் 80 கிலோ மீட்­டர் தூர­மி­ருக்­கின்ற மேற்கு தொடர்ச்சி மலை அடி­வா­ரப் பகு­தி­யி­லும் அமல்­ப­டுத்­து­வ­தற்கு தமிழ்­நாடு அரசு முன்­வ­ருமா என்­ப­தை­யும் கேட்­டுக்­கொள்­கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">காட்­டுப் பன்­றி­க­ளின் தொல்­லை­யால் விவ­சா­யம் சீர்­கு­லைந்­தி­ ருக்­கி­றது; இயற்கை இடர், விளைச்­சல் இன்மை, மழை­யின்மை, விலை­யின்மை ஆகிய நான்கு கார­ணி­கள்­தான் வேளாண்­மைக்கு இடை­யூ­றாக இருக்­கின்­றன என்று சொன்­னால், ஐந்­தா­வது கார­ணி­யாக சில ஆண்­டு­க­ளா­கக் காட்­டுப் பன்­றி­கள் வனப் பகு­தி­க­ளில் மட்­டு­மல்­லா­மல், சம­வெ­ளிப் பகு­தி­க­ளி­லும் வந்து வேளாண்­மை­யைச் சீர்­கு­லைக்­கும் அவ­லம் நேர்ந்­தி­ருக்­கி­றது. விவ­சா­யி­க­ளி­டம் கேட்­கும்­போது அவர்­கள் முன்­வைக்­கும் ஒரே கோரிக்கை, காட்­டுப் பன்­றி­களை வன­வி­லங்­கு­க­ளின் பட்­டி­ய­லி­லி­ருந்து அகற்­றி­விட்­டால் அதை நாங்­களே அப்­பு­றப்­ப­டுத்­து­வோம் என்­ப­து­தான். ஆகவே, அரசு இந்த இரண்டு கோரிக்­கை­க­ளை­யும் நிறை­வேற்ற, காட்­டுப் பன்­றி­களை வன­வி­லங்­கு­க­ளின் பட்­டி­ய­லி­லி­ருந்து அகற்­று­வ­தற்கு ஒன்­றிய அர­சிற்­குத் தேவை­யான அழுத்­தங்­க­ளைக் கொடுக்­குமா என்­பதை   அறிய விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">அமைச்­சர் ரா.வீ.இரஞ்­சித் குமார்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">நம்­மு­டைய தமிழ்­நாட்­டில் 23,188 சதுர கிலோ மீட்­டர் வனப் பகுதி உள்­ளது; சுமார் ஆயி­ரக்­க­ணக்­கான கிரா­மங்­க­ளில் வனத்­தை­யொட்­டிய விவ­சாய நிலங்­கள் உள்­ளன. இந்­தக் காட்­டுப்­பன்­றிப் பிரச்­சி­னை ­யால் தமிழ்­நாடு முழு­வ­தும் உள்ள விவ­சாய நிலங்­கள் அதி­க­மா­கப் பாதிக்­கப்­ப­டு­வது உண்­மை­தான்; அதற்கு விதி­கள் உள்­ளன. ஒரு கிலோ மீட்­டர், இரண்டு கிலோ மீட்­டர் வரை வெளியே வந்­தால் வன அலு­வ­லர்­க­ளி­டம் தெரி­வித்­தால், அவர்­கள் அதை காட்­டிற்­குள் விரட்டி அனுப்­பு­வார்­கள். மூன்று கிலோ மீட்­டர் தூரம் வெளியே வந்­தால் அதைச் சுடு­வ­தற்­கும் நம்­மு­டைய தமி­ழக அரசு வனத் துறைச் சட்­டத்­தில் இடம் இருக்­கி­றது என்­பதை இந்த அவை­யில் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">தி.மு. இரா­சேந்­தி­ரன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">வனத் துறை அமைச்­சர் அவர்­கள் கூறி­யது, கடந்த திரா­விட மாடல் அர­சில் தலை­வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்­கள் வழங்­கிய அந்த உத்­த­ர­வு­தான் தற்­போது நடை­மு­றை­யில் இருக்­கி­றது. நீங்­கள், காட்­டுப் பன்­றி­களை விலங்­கு­க­ளின் பட்­டி­ய­லி­லி­ருந்து-- கரடி, சிங்­கம், புலி இவை­யெல்­லாம் விலங்­கு­க­ளின் பட்­டி­ய­லில் உள்­ளன, அதை மனி­தர்­கள் அகற்ற முடி­யாது; அது­போ­லவே, வேளாண்­மையை அழிக்­கின்ற காட்­டுப் பன்­றி­க­ளும் அந்த வன­வி­லங்­கு­க­ளின் பட்­டி­ய­லில் இருப்­ப­தால், அதை விவ­சா­யி­க­ளால் அப்­பு­றப்­ப­டுத்த முடி­யாத நெருக்­கடி உள்­ளது. ஆகவே, காட்­டுப் பன்­றி­களை வன­வி­லங்­கு­க­ளின் பட்­டி­ய­லி­லி­ருந்து அகற்­றுங்­கள் என்­கிற அழுத்­தத்தை ஒன்­றிய அர­சிற்­குத் தமிழ்­நாடு அரசு கொடுத்து, அந்­தப் பட்­டி­ய­லி­லி­ருந்து எடுத்­து­விட்­டால், வேளாண்­மைக்கு இருக்­கின்ற பெரும் துயர் நீங்­கும் என்­ப­தைத் தெரி­வித்து, தமிழ்­நாடு அரசு அதற்கு ஆவன செய்­யுமா என்­ப­தைத் தங்­கள் மூல­மாக அறிய விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">அமைச்­சர் ரா.வீ.இரஞ்­சித் குமார்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">நம்­மு­டைய தமி­ழக அரசு வனத் துறை உயர் அதி­கா­ரி­க­ளு­டன் ஆலோ­சித்து பரி­சீ­லிக்­கப்­ப­டும் என்­பதை இந்த நேரத்­தில் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு விவா­தம் நடை­
பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கரூர் அரசு மகளிர் மற்றும் கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி குழுமத் தலைவர்  பேராசிரியர்  முனைவர் பி.நடேசன் தலைமையில் பேராசிரியர், முனைவர் பொன்.கதிரேசன்  ஏற்பாட்டில்  நடைபெற்ற பன்னாட்டு ஆசிரியர்கள் தின விழா,நூல் வெளியீட்டு விழா மற்றும் முப்பெரும் விழாவில், கழக மாற்றுத்திறனாளிகள் அணி மாநிலத் தலைவரும்,தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தலைவருமான ரெ.தங்கம் அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை பணியாற்றியமைக்காக விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. கல்லூரி குழுமத்தின் செயலாளர் என்.கண்ணன், ஆசிரியர்கள்,  பேராசிரியர்களும், அரசு அதிகாரிகளும், எழுத்தாளர்களும்,  அறிஞர்களும் பங்கேற்றனர்.  சிறப்பாக செயலாற்றிய  பேராசிரியர் களுக்கும்,  ஆசிரியர்களுக்கும், விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>