<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,248,958,1197" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 08 2026 03:44:17 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260908T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="08092026-MDU-07" position.sequence="07" ex-ref="08092026-MDU-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">முதல்வர் பரிந்துரை செய்த பிறகும் – எதிர்க்கட்சியினருக்கு பதிலளிக்க</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">சபாநாயகர் மறுத்தது அதிர்ச்சியளிக்கிறது! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தபின் தமீமுன் அன்சாரி பேட்டி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="thameemunansar_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சென்னை, செப். 8–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">முதல்வர் பரிந்துரை செய்தபிறகும் எதிர்க் 
கட்சியினருக்கு பதிலளிக்க சபாநாயகர் மறுத்தது அதிர்ச்சி யளிக்கிறது என்று பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த மனித நேய ஜனநாயக கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சட்­டப் பேர­வை­யில் இருந்து வெளி­ந­டப்பு செய்த மனி­த­நேய ஜன­நா­யக கட்­சித் தலை­வர் 
தமீ­முன் அன்­சாரி அளித்த பேட்டி வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடந்த வெள்­ளிக் கி­ழமை அமர்வு முதல் சட்­ட­ச­பை­யில் திங்­கள்­கி­ழமை என்ன நடக்­கும் என்ற பர­ப­ரப்­பில், தமிழ்­நாட்­டில் மட்­டு­மல்ல, நாடு கடந்த தமிழ்­நாட்­டைச் சார்ந்த மக்­க­ளும் இருந்­தார்­கள். அந்த எதிர்­பார்ப்பு என்­பது ஆரோக்­கி­ய­மான விடை­க­ளைத் தரக்­கூ­டி­ய­தாக அமை­யும் என்­று­தான் எங்­க­ளைப் போன்­ற­வர்­க­ளுமே எதிர்­பார்த்­தி­ருந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வெள்­ளிக்­கி­ழமை அன்று, கடந்த வியா­ழக்­கி ­ழமை அன்று எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­கள் இந்த அரசு மீது பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பி­னார். எதிர்க்­கட்­சித் தலை­வர் என்­பது கேள்­வி­களை எழுப்­பு­வ­தற்­காக அவர்­க­ளுக்­குத் தந்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்­து­வது என்­பது எதார்த்­த­மா­னது. அந்த அடிப்­ப­டை­யில் தான் அவர் பல்­வேறு சட்ட ஒழுங்கு குறித்த கேள்­வி­களை எழுப்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நேற்­றைய தினம் கூட தலை­ந­கர் சென்­னை­யில், ஆளுங்­கட்­சியை... தமி­ழக வெற்­றிக் கழ­கத்­தைச் சேர்ந்த ஒரு­வர் அநி­யா­ய­மாக வெட்­டிக் கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றார். அந்த அள­வுக்கு தலை­ந­க­ரி­லேயே ஒரு அசா­தா­ர­ண­மான ஒரு சூழல் ஏற்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய நிலை­யில்­தான், இன்­றைய தினம் போலீஸ்­துறை மானி­யக் கோரிக்­கை­யின் மீது நம்­மு­டைய முதல்­வர் அவர்­கள் பதி­ல­ளிக்­கத் தொடங்­கி­னார். கிட்­டத்­தட்ட 53 நிமி­டங்­க­ளில் அவர் பதி­ல­ளித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எழுதி தயா­ரிக்­கப்­பட்ட உரை­யை­யும் வாசித்­தார். தானா­கவே இருந்து பல்­வேறு கருத்­துக்­க­ளை­யும் சொன்­னார்­கள். அவர் கூறி­ய­திலே சிலகருத்­துக்­கள் உண்­மை­யாக இருக்­க­லாம், சில கருத்­துக்­கள் மிகை­யாக இருக்­க­லாம், சில கருத்­துக்­கள் உண்­மைக்கு மாறா­ன­தாக இருக்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால், முன்­னாள் முதல்­வர்­க­ளைப் பற்­றி­யெல்­லாம் குற்­றச்­சாட்­டு ­களை எழுப்­பு­கின்­ற­போது, அந்­தச் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள் நியா­ய­மாக எதிர்ப்பு தெரி­விப்­பது வழக்­கம். அவர்­கள் எப்­படி அமை­தி­யாக இருப்­பார்­கள்? அதே நேரத்­தில், எதிர்க்­கட்­சி­யி­னர் தங்­க­ளு­டைய எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தக்­கூ­டிய நேரத்­தில், மீண்­டும் சபா­நா­ய­கர்ட்ட எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­கள் ‘ இந்­தக் கருத்து சம்­பந்­த­மாக பேசு­வ­தற்கு ஒரு வாய்ப்பை’ கேட்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சட்­ட­சபை என்­பது ஜன­நா­ய­கம் தானே? கடந்த வியா­ழக்­கி­ழமை கூட பொதுப்­ப­ணித்­துறை அமைச்­சர் எ.வ.வேலு அவர்­கள், “அதா­வது சந்­தே­கம் இல்­லா­மல் இருக்க முடி­யாது, பேசி­விட்டு சண்டை போட முடி­யாது. இது ஜன­நா­யக களத்­தில் ஆரோக்­கி­ய­மான சண்டை இருக்­க­லாம்” என்று அவரே சொன்­னார். அந்த அடிப்­ப­டை­யில் தான் இன்­றைய தினம் முதல்­வர் பேசி அமர்ந்­த­துக்கு அப்­பு­றம் எதிர்க்­கட்­சித் தலை­வர் வாய்ப்பு கேட்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அப்போ வாய்ப்பு மறுக்­கப்­ப­டு­கி­றது. மறு­ப­டி­யும் திமு­க­வி­னர் தங்­க­ளு­டைய ஆட்­சே­ப­ணை­யை­யும் வெளிப்­ப­டுத்­து­றாங்க. ஜன­நா­ய­கத்­தில் அது­வும் ஒரு அம்­சம். அவங்க ஏதா­வது வன்­மு­றை­யில் ஈடு­பட்­டாங்­களா? ஏதா­வது அரா­ஜ­கத்­தில் ஈடு­பட்­டாங்­களா? அதா­வது தர்ணா என்­பது நாடா­ளு­மன்­றத்­தி­லும், சட்­ட­மன்­றத்­தி­லும் இயல்­பாக நடக்­கக்­கூ­டி­யது. வன்­முறை செய்­தால்­தான் தவறு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால் என்ன செய்­தாங்க? ஒரு கட்­டத்­தில் வந்து முத­ல­மைச்­சரே தலை­யி­டு­றார். முத­ல­ 
மைச்­சரே தலை­யிட்டு என்ன சொல்­றார்னா, “அவங்­க­ளுக்கு பதில் சொல்­லக்­கூ­டிய வாய்ப்­பைத் தாருங்­க”ங்­கி­றார். ஒரு முத­ல­மைச்­சரே அவ­ருக்கு பதில் சொல்­லக்­கூ­டிய வாய்ப்­பைத் தாருங்க என்­கின்ற பொழுது, அது ஒரு பரிந்­துரை. சபா­நா­ய­க­ருக்கு வான­ளா­விய அதி­கா­ரம் இருக்­கி­றது என்­பது வேறு விஷ­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால், உட­ன­டி­யாக சபா­நா­ய­கர் இருக்­கை­யி­லேயே கோபப்­பட்­டார்.கோபப்­பட்டு, “நான் தான் முடிவு செய்­வேன். உங்­க­ளுக்கு அனு­மதி இல்லை” அப்­ப­டிங்­கி­றார். அதன் பிறகு தான் இறு­திக்­கட்­ட­மாக அவங்க வெளி­ந­டப்பு செய்­றாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திமு­க­வி­னர் வெளி­ந­டப்பு செய்த பிறகு, நானும் கொங்கு மண்­டல மக்­கள் தேசி­யக் கட்­சி­யி­னு­டைய பொதுச்­செ­ய­லா­ளர் ஈஸ்­வ­ரன் அவர்­க­ளும், மனி­த­நேய மக்­கள் கட்­சி­யின் தலை­வர் பேரா­சி­ரி­யர் ஜவா­ஹி­ருல்லா அவர்­க­ளும், “இந்த போக்­கு­கள் முற்­றி­லும் சரி­யற்ற போக்கு. ஏனென்­றால் ஒரு முத­ல­மைச்­சரே பரிந்­து­ரைக்­கி­றார். ஒரு முத­ல­மைச்­சரே பரிந்­து­ரைக்­கும் போது கூட, வான­ளா­விய அதி­கா­ரம் தங்­க­ளி­டம் இருக்­கி­றது என்ற ஒரே கார­ணத்­திற்­காக சபா­நா­ய­கர் அதை மறுக்­க­லாமா?”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த சபா­நா­ய­க­ரைத் தான் இந்த கூட்­டத் 
தொ­டர்ல எதிர்க்­கட்­சி­யி­ன­ரும் பாராட்­டி­னாங்க, ஆளுங்­கட்­சி­யி­ன­ரும் பாராட்­டி­னாங்க. நேற்று கூட நாங்­க­ளெல்­லாம் இந்த சபா­நா­ய­க­ரின் நடத்தை குறித்து பாராட்­டி­னோம். அவர் ஆளுங்­கட்­சியை சேர்ந்­த­வ­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வ­ராக இருந்­தா­லும், அவ­ரு­டைய நட­வ­டிக்கை நன்­றாக இருந்­தது என்று சொல்லி. ஆனால் இன்று அவர் நடந்து கொண்­டது, முத­ல­மைச்­சரே பரிந்­து­ரைத்த பிறகு அவர் நடந்து கொண்­டது உண்­மை­யி­லேயே எங்­க­ளுக்கு அதிர்ச்­சி­யாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாங்­கள் வந்து எந்­தி­ரிச்சு வாய்ப்பு கேட்­கி­றோம். “எங்­க­ளு­டைய கருத்­துக்­களை சொல்ல விடுங்க, எங்­க­ளு­டைய கருத்­துக்­களை பேச அனு­ம­தி­யுங்க” என்று சொல்லி கேட்­கி­றோம். அதற்கு வாய்ப்பு மறுக்­கி­றார்­கள். அப்­பு­றம் சபா­நா­ய­கர் என்ன சொல்­றார்னா என்னை அழைக்­கி­றார். சபைக்­கும் முன்­பாக நடந்­தது. என்னை அழைத்து, கூப்­பிட்டு “என்ன விஷ­யம்?”னு கேட்­கி­றார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அப்ப நான் சொல்­றேன், “முத­ல­மைச்­சர் வாய்ப்பு தாங்­கனு சொன்ன பிற­கும் கூட, நீங்க வந்து ஒரு எதிர்க்­கட்­சித் தலை­வ­ருக்கு பேச வாய்ப்பு மறுப்­பது நியா­யம் இல்­லைண்ணே. அதை நாங்க தய­வு­செய்து பேச­ணும், அவங்­க­ளுக்கு மீண்­டும் வாய்ப்பு கொடுங்­க”னு சொன்­னால், “அதெல்­லாம் முடி­யாது” அப்­ப­டிங்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நான் இருக்­கைக்கு போயிட்­டேன். ஏன்னா ஏதா­வது ஒரு வகை­யில் வாய்ப்பு தரு­வாங்­கனு. மீண்­டும் எந்­தி­ரிச்சு வாய்ப்பு கேட்­கி­றேன். முதல்­வர் உட்­கார்ந்­தி­ருக்­கார், அவை முன்­ன­வ­ரைப் பார்த்­தும் சொல்­றேன், “நீங்­க­ளும் கொஞ்­சம் பரிந்­து­ரைங்க”. ஜன­நா­ய­கத்­துல கார­சா­ர­மான விவா­தங்­கள் இருக்­க­லாம், தவ­றில்லை. வரம்பு மீறா­மல் இருக்­க­ணும் அவ்­ளோ­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால் திமு­க­வி­னர் எதிர்க்­கட்சி என்ற அடிப்­ப­டை­யில் அவங்க வெளி­ந­டப்பு செய்­தி­ருக்­காங்க. முக்­கி­ய­மாக அவங்க வெளி­ந­டப்பு செய்­தது, முத­ல­மைச்­ச­ரு­டைய உரையை எதிர்த்து அல்ல. அதை யாரும் தவ­றாக விளங்­கிக் கொள்­ளக் கூடாது. அவங்க முத­ல­மைச்­ச­ரின் உரைக்கு மாற்­றுக்­க­ருத்து சொல்­ல­ணும்னு சொல்லி கேட்­கி­றாங்க. ஒரு முத­ல­மைச்­சரே வாய்ப்பை பரிந்­துரை செய்த பிற­கும் சபா­நா­ய­கர் மறுத்­தது தவறு என்­கிற அடிப்­ப­டை­யில் தான் வெளி­ந­டப்பு செய்­தாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதை பேசு­வ­தற்கு நானும் எழுந்து வாய்ப்பு கேட்­கி­றேன். அவை முன்­ன­வர் அண்­ணன் அமைச்­சர் செங்­கோட்­டை­யன் அவர்­கள்ட்­ட­யும் சுட்­டிக் காட்­டி­னேன், “பரிந்­துரை பண்­ணுங்­க”னு. அவங்­க­ளும் “உட்­கா­ருங்க உட்­கா­ருங்க, வாய்ப்பு தர­லாம்”ங்­கி­றாங்க. ஆனால் ரெண்டு முறை உட்­கார்ந்­தும் வாய்ப்பு கிடைக்­கல. அதன் பிற­கு­தான், இந்த சபா­நா­ய­கர் அவர்­க­ளு­டைய இந்த நட­வ­டிக்கை என்­பது ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­கது அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒரு நல்ல சபா­நா­ய­கர் கிடைத்­தார் என்று நாமெல்­லாம் எப்­போ­தும் பாராட்­டு­கி­றோம் அவரை. நான் எது­வும் குறை சொல்­லல. ஆனால் இன்று நடந்த விதம் என்­பது, சபா­நா­ய­க­ருக்கு இவ்­வ­ளவு கோபம் வர­லாமா? சபா­நா­ய­கர் என்­ப­வரே எல்லா உறுப்­பி­னர்­க­ளு­டைய பாது­காப்­பை­யும்உறுதி செய்­யக்­கூ­டி­ய­வரே, அவரை நம்ம எல்­லா­ருமேகொண்­டா­டு­றோம், இப்­போ­தும் மதிக்­கி­றோம், இப்­போ­தும் கொண்­டா­டு­றோம். ஆனால்இவ்­வ­ளவு கடு­மை­யைக் காட்­டி­யி­ருக்­கக் கூடாது. இது நல்­ல­தல்ல என்­ப­து­தான் எங்­க­ளு­டைய கருத்து. அதைக் கண்­டித்து மனி­த­நேய ஜன­நா­யக கட்­சி­யின் சார்­பில் நாங்­கள் வெளி­ந­டப்பு செய்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அவர் கூறி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>