<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,67,958,1404" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Sep 07 2026 17:00:48 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260908T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="08092026-VLR-03" position.sequence="03" ex-ref="08092026-VLR-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="Minion Pro" fontStyle="Regular" size="12">   </lang>
	</hl4>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="67">முதலமைச்சர் நடித்த படங்கள், காட்சிகளையெல்லாம் பேசினால் விஜய்யால் தாங்க முடியாது!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="41">பேரவைத் தலைவரைக் கண்டித்து வெளிநடப்பு – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!...</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="41">    முதல் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl3>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="45">‘மிசா’வைப் பற்றி பேச விஜய்க்கு அருகதை கிடையாது! </lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="20">ச</lang>
	<lang class="3" style="Headline6"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular"  size="20">ர்க்­கா­ரியா கமி­ஷ­னில் “எந்­தத் தவ­றும் நடக்­க­வில்லை” என்று அந்­தக் கமி­ஷனே அறிக்கை கொடுத்­தி­ருக்­கி­றது. அதே­போன்று, மிசா­வைப் பற்றி இவர் பேசு­கி­றார். கொட­நாட்­டில் இவ­ரு­டைய திரைப்­ப­டத்­தின் வெளி­யீட்­டிற் காக ‘வாட்ச்­மேன்’ வேலை பார்த்­த­வர்­தான் இந்த முத­ல­மைச்­சர் அவர்­கள். இவ­ருக்கு மிசா­வைப் பற்­றி­யும், எங்­க­ளு­டைய தலை­வ­ரைப் பற்­றி­யும் பேசு­வ­தற்கு ஏதா­வது தகுதி இருக்­கி­றதா? ஒரு சத­வி­கி­த­மா­வது தகுதி இருக்­கி­றதா? அந்­தத் தகு­தியை இவர் வளர்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றாரா?</lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="15">இவர் அர­சி­ய­லுக்கு வந்­தது ஒரு விபத்து. இவர் ஆட்­சிக்கு வந்­தது மிகப் பெரிய ஒரு விபத்து. இவ­ருக்கு மிசா­வைப் பற்­றி­யும், சர்க்­கா­ரியா கமி­ஷன் பற்­றி­யும் பேசு­வ­தற்கு எந்­தத் தகு­தி­யும் இல்லை. அவற்­றில் எந்த ஆதா­ர­மும் இல்லை, அவை­கள் வெறும் குற்­றச்­சாட்­டு­கள் மட்­டுமே!</lang>
	</hl7>
<hl8 id="Headline1" class="1" style="Headline8">
		<lang class="3" style="Headline8"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">சர்க்காரியா கமிஷன் பற்றி ஏதாவது தெரியுமா? </lang>
	</hl8>
<hl9 id="Headline1" class="1" style="Headline9">
		<lang class="3" style="Headline9"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="16">நூ</lang>
	<lang class="3" style="Headline9"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular"  size="16">ல­கத்­தைப் பற்­றி­யெல்­லாம், இப்­போது இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர் பேச­லாமா? பிறகு பெண்­க­ளைத் தவ­றா­கப் பேசி­னோம் என்­கி­றார். இரட்டை அர்த்­தத்­தில் பேசக் கூடாது, மூன்று அர்த்­தத்­தில் பேசக்­கூ­டாது என்­கி­றார். இவற்றை யெல்­லாம்   இந்த  முத­ல­மைச்­ச­ருக்­குச்      சொல்­வ­தற்கு   எந்­தத்  தகு­தி­யும் கிடை­யாது.</lang>
	</hl9>
<hl10 id="Headline1" class="1" style="Headline10">
		<lang class="3" style="Headline10"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="15">இவர் நடித்த படங்­கள் என்ன? நடித்த காட்­சி­கள் என்ன? பாடிய பாடல்­கள் என்ன? இதை­யெல்­லாம் இப்­போது பேசி­னால் அவ­ரால் தாங்க முடி­யாது.  உங்­க­ளு­டைய நண்­பர் விஷ்ணு ரெட்டி என்ன பொறுப்­பில் இருக்­கி­றார்? சுஜய் ரெட்டி என்ன பொறுப்­பில் இருக்­கி­றார்? அனில்  ரெட்டி   என்ன                        பொறுப்­பில் இருக்­கி­றார்? ஏன் இப்­போது வரக்­கூ­டிய எல்லா சுரங்­கங்­கள், எல்லா பொறுப்­பு­க­ளை­யும் அவர்­க­ளி­டம் ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றீர்­கள்? அதற்­கான ஆதா­ரத்தை நாங்­கள் வெளி­யி­டு­வோம். </lang>
	</hl10>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">முதலமைச்சர், “இதற்கெல்லாம் திங்கட் கிழமை பதில் சொல்கிறேன்” என்று கடந்த வியாழக்கிழமை சொல்லிவிட்டு, வேகமாக ஓடிப் போய்விட்டார்.  நான்கூட,  தயாராகி வருவார்..  மூன்று நாள் டைம் இருக்கிறது. நன்றாக மனப்பாடம் செய்துவிட்டு வருவார் என்று நினைத்தேன்.  அதேமாதிரி, வியா ழக்கிழமை எப்படி ஓட்டப் பந்தயத்தில் ஓடியது மாதிரி ஓடினாரோ, அதேமாதிரி இன்று மனப்பாடம் செய்துவந்து  ஒப்பித்தல் போட்டி மாதிரி, சட்டசபையில் தவறான கருத்துகளை, பொய்யான குற்றச்சாட்டுகளை ஒப்பித்துள்ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">ரீல்ஸ்களுக்காக மட்டுமே பதிலுரை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நான் சொன்ன அதே பஞ்ச் டயலாக், அதே சினிமா வசனங்கள், அதே ஆக்டிங் ரீல்ஸ்க ளுக்காக மட்டுமே முதலமைச்சர் அவர்கள் இந்தப் பதிலுரையைச் சொல்லியிருக்கிறார்.  இந்த ஆட்சி அமைந்ததிலிருந்து, சட்டம்–ஒழுங்கு எந்த நிலைமையில் இருக்கிறது என்று பத்திரிகையாள  நண்பர்கள் உங்க ளுக்குத் தெரியும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தினமும் தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்.  அப்படி சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக நாங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல், வெறும் பஞ்ச் டயலாக், வெறும் திசைதிரும்பும்  உத்தி தான் இன்றும் நடந்தது. உதாரணத்துக்கு, அவர்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், உறுப்பினர்கள் மேல் எல்லாம் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.  அதன்மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்று நாங்கள் கேட்டிருந்தோம்.  அதற்கு மாறாக, தி.மு.க. ஆட்சியில் இவர்கள் மேல் எல்லாம் இந்தந்த வழக்கு இருக்கிறது என்று, எங்கள் மேல் திரும்புகிறார்.  எங்கள் மேல் வழக்கு இருந்தால், நீங்கள் நடவடிக்கை எடுங்கள் என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்னும் சொல்லப்போனால், ஒரு அமைச்சர் ஐ.பி.எல் விளையாட்டு அரங்கி லேயே உட்கார்ந்து பவுடர் போட்டதை யெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.  அவர் மேல் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  நாங்கள் வியாழக்கிழமை பேசியதும், அமைச்சர்கள் எல்லாம் கடந்த மூன்று நாட்களாக என்ன செய்துகொண்டு இருந்தார்கள். என்னென்ன பிரச்சினைகளை எல்லாம் சரிசெய்யப் பார்த்தார்கள் என்பதை பத்திரிகை நண்பர்கள் நீங்களும் பார்த்திருப் பீர்கள்.  அவர்களின் கட்சிக்காரர்களே இன்று போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட் டுள்ளார்கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">பட்­டப்­ப­க­லில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">இரண்டு கொலை­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நேற்று, சென்­னை­யில் பட்­டப்­ப­க­லில் இரண்டு கொலை­கள் நடந்­தி­ருக்­கின்­றன.  சி.சி.டி.வி. கேம­ராக்­க­ளில் அவை பதி­வா­கி­யுள்­ளன.  அவற்­றைப் பற்­றிப் பேச வாய்ப்­புக் கேட்­டேன்.  அதற்­கும் வாய்ப்பு கொடுக்­க­வில்லை.  இதைப் பற்­றிக் கேட்­டால், இதற்­கெல்­லாம் பதில் சொல்­லா­மல், 1970–ஆம் ஆண்­டுக்­குச் சென்­று­விட்­டார் முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">மிசா பற்­றிப் பேச இவ­ருக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">அரு­கதை உண்டா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">`சர்க்­கா­ரியா கமி­ஷன்’ பற்­றிப் பேசு­கி­றார். `மிசா’­வைப் பற்­றிப் பேசு­கி­றார். `மிசா’­வைப் பற்­றிப் பேசு­வ­தற்கு இவ­ருக்கு ஏதா­வது அரு­கதை இருக்­கி­றதா? அல்­லது தகுதி இருக்­கி­றதா? சர்க்­கா­ரியா கமி­ஷன் பற்றி இவ­ருக்கு ஏதா­வது தெரி­யுமா? யாரோ எழு­திக் கொடுத்­ததை மூன்று நாட்­க­ளாக உட்­கார்ந்து மனப்­பா­டம் செய்­து­விட்டு வந்து, இங்கே அதை அப்­ப­டியே வாந்தி எடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">இவர் ஆட்­சிக்கு வந்­தது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">மிகப் பெரிய ஒரு விபத்து!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சர்க்­கா­ரியா கமி­ஷ­னில் “எந்­தத் தவ­றும் நடக்­க­வில்லை” என்று அந்­தக் கமி­ஷனே அறிக்கை கொடுத்­தி­ருக்­கி­றது. அதே­போன்று, மிசா­வைப் பற்றி இவர் பேசு­கி­றார். கொட­நாட்­டில் இவ­ரு­டைய திரைப்­ப­டத்­தின் வெளி­யீட்­டிற்­காக ‘வாட்ச்­மேன்’ வேலை பார்த்­த­வர்­தான் இந்த முத­ல­மைச்­சர் அவர்­கள். இவ­ருக்கு மிசா­வைப் பற்­றி­யும், எங்­க­ளு­டைய தலை­வ­ரைப் பற்­றி­யும் பேசு­வ­தற்கு ஏதா­வது தகுதி இருக்­கி­றதா? ஒரு சத­வி­கி­த­மா­வது தகுதி இருக்­கி­றதா? அந்­தத் தகு­தியை இவர் வளர்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவர் அர­சி­ய­லுக்கு வந்­தது ஒரு விபத்து. இவர் ஆட்­சிக்கு வந்­தது மிகப் பெரிய ஒரு விபத்து. இவ­ருக்கு மிசா­வைப் பற்­றி­யும், சர்க்­கா­ரியா கமி­ஷன் பற்­றி­யும் பேசு­வ­தற்கு எந்­தத் தகு­தி­யும் இல்லை. அவற்­றில் எந்த ஆதா­ர­மும் இல்லை, அவை­கள் வெறும் குற்­றச்­சாட்­டு­கள் மட்­டுமே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதே­போன்று, அம­லாக்­கத் துறை (E.D) சொன்ன விஷ­யங்­க­ளை­யெல்­லாம், இவர் இங்கே படித்­துக் காட்­டு­கி­றார். அவை­யெல்­லாம் வெறும் குற்­றச்­சாட்­டு­கள்! எது­வுமே நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை; விசா­ரணை நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது. மூன்று கோப்­பு­க­ளைத் திறக்­கச் சொன்­னார்­கள் என்று சொல்­லி­விட்டு, அதைப் பற்றி எது­வுமே கூற­வில்லை. அம­லாக்­கத் துறை என்­னென்ன குற்­றச்­சாட்­டு ­க­ளைச் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள் என்று, அந்­தக் குற்­றச்­சாட்­டு­க­ளைத்­தான் இவர் சட்­ட­மன்­றத்­தில் படித்­துக் காட்­டு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">நீதி­மன்­றத்­தால் தண்­டிக்­கப்­பட்ட</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">ஒரே முத­ல­மைச்­சர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இன்­னும் சொல்­லப்­போ­னால், சர்க்­கா­ரியா கமி­ஷ­னுக்­குப் பிறகு மக்­க­ளு­டைய ஆத­ர­வைப் பெற்று மூன்று முறை திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆட்­சி­யில் அமர்ந்­தி­ருக்­கி­றது. இங்கே இருக்­கக்­கூ­டிய அத்­தனை பேருக்­கும் தெரி­யும்; தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­குத் தெரி­யும், 
ஆட்­சி­யில் இருக்­கும்­போது ஊழல் செய்­தார்­கள் என்று நிரூ­பிக்­கப்­பட்டு, நீதி­மன்­றத்­தால் தண்­டிக்­கப்­பட்ட ஒரே முத­ல­மைச்­சர் யார், ஒரே தலை­வர் யார்  என்­பது இங்கே இருக்­கக்­கூ­டிய அத்­தனை பேருக்­கும், உங்­க­ளுக்­கும் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5"> டம்மி முத­ல­மைச்­சர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தைச் சேர்ந்த எங்­க­ளு­டைய தலை­வர்­களோ, எங்­க­ளு­டைய முன்­னாள் அமைச்­சர்­களோ, முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களோ, இது­வ­ரைக்­கும் யாரும் அது­போன்று தண்­டிக்­கப்­ப­ட­வில்லை.எந்த ஊழல் குற்­றச் ­சாட்­டும் நிரூ­பிக்­கப்­ப­ட­ வில்லை. எனவே, இப்­படி எங்­கள் மேல் அடுக்­க­டுக்­கான குற்­ற ச்­சாட்­டு­களை வைத்­துள்­ளார்.  இவ்­வ­ளவு குற்­றச் ­சாட்­டு­கள் உங்­கள் மீது இருக்­கின்­றன என்று நாங்­க­ளும் கூற முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">முத­ல­மைச்­சர் மீது கூடத்­தான் வரு­மான வரித்­துறை வழக்கு இருக்­கி­றது. 15 கோடி ரூபாய் ஊதி­யம் பெற்­றதை மறைத்­த­தாக, அவர்­மீது ஒரு வழக்கு இருக்­கி­றது. வரு­மான வரித் துறை வழக்கு இருக்­கி­றது. வரு­மா­னத்தை மறைத்­த­தற்கு வழக்­குத் தொடர்ந்­தால், மிக­வும் தாம­த­மாக வழக்­குத் தொடர்ந்­தி­ருக்­கி­றீர்­கள் என்று நீதி­மன்­றத்­தில் வெளிப் ­ப­டை­யாக ஒப்­புக்­கொண்­ட­வர்­தான், இன்­றைக்கு இருக்­கக்­கூ­டிய இந்த டம்மி முத­ல­மைச்­சர். அது­மட்­டு­மில்­லா­மல், இங்கே இருக்­கக்­கூ­டிய பொதுப்­ப­ணித் துறை அமைச்­சர்­மீது அம­லாக்­கத் துறை வழக்கு இருக்­கி­றது, அது நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">இவர்­க­ளுக்கு என்ன 
தகுதி இருக்­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­போது, அவர்­கள் கட்­சி­யில் புதி­தா­கச் சேர்த்­தி­ருக்­கி­றார்­களே, திரு. விஜ­ய­பாஸ்­கர், திரு.கு.ப.கிருஷ்­ணன்,  இப்­ப­டிப் பல்­வேறு தலை­வர்­கள் மீது, முன்­னாள் அமைச்­சர்­கள்­மீது எல்­லாம் அம­லாக்­கத் துறை வழக்­கு­கள் இருக்­கின்­றன. இப்­படி இவர்­கள் எல்­லா­ரை­யும் கூட சேர்த்து வைத்­துக்­கொண்டு, எங்­க­ளைக் குறை சொல்­வ­தற்கு இவர்­க­ளுக்கு என்ன தகுதி இருக்­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அது­மட்­டு­மில்­லா­மல், நேற்று இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீக் (IUML) கட்­சி­யைச் சேர்ந்த சட்­ட­மன்ற உறுப்­பி­னர் கூட்­டத்­தில் பேசும்­போது, என்ன பேசி­னார் என்­பதை நீங்­கள் அனை­வ­ரும் பார்த்­தி­ருப்­பீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“ஆட்சி அமைப்­ப­தற்­குப் பெட்டி பெட்­டி­யா­கப் பணத்தை எடுத்­துக்­கொண்டு வந்து, என்ன அமைச்­சர் பொறுப்பு வேண்­டும். இப்­போது நாங்­கள் கொடுப்­ப­தற்­குத் தயா­ராக இருக்­கி­றோம், உங்­கள் ஆத­ரவு வேண்­டும்” என்று கேட்­டி­ருப்­ப­தாக ஐ.யூ.எம்.எல். சட்­ட­மன்ற உறுப்­பி­னர் வெளிப்­ப­டை­யா­கவே சொல்­லி­யி­ருக்­கி­றார். இப்­ப­டிப் பகி­ரங்­க­மா­கக் குதிரை பேரத்­தில் இந்த அரசு நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எங்­கள்­மீது அம­லாக்­கத் துறை வழக்கு நடக்­க­லாம், நீதி­மன்­றத்­தில் வழக்கு நடக்­க­லாம். ஆனால், அவற்­றை­யெல்­லாம் சட்­டப்­படி சந்­திப்­ப­தற்கு நாங்­கள் அத்­தனை பேரும் தயார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நேற்று முன்­தி­னம் எங்­களை மிரட்­டு ­வ­தற்­காக, நாங்­கள் எல்­லாம் பயந்­து­வி­டு­வோம் என்று லஞ்ச ஒழிப்­புத் துறையை (DVAC) வைத்து முன்­னாள் அமைச்­சர், முதன்­மைச் செய­லா­ளர் அண்­ணன் நேரு அவர்­க­ளின் வீட்­டிற்­குச் சோத­னை­யி­டச் சென்­றார்­கள். சோத­னை­யி­டச் சென்­ற­வர்­கள், ஒரு ஐந்து ஆறு மணி நேரத்­தி­லெல்­லாம் முடித்­து க்­கொண்டு வெளியே வந்து, `ஒன்­றும் இல்லை’ என்று கூறி­விட்­டார்­கள். வெளியே வந்து அண்­ணன் நேரு அவர்­களே தெளி­வா­கப் பேட்டி கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். எனவே, இதை­யெல்­லாம் சட்­டப்­படி சந்­திப்­ப­தற்கு நாங்­கள் அனை­வ­ரும் தயார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">விஷ்ணு ரெட்டி கட்­டுப்­பாட்­டில் தமிழ்­நாடு சுரங்­கத்­துறை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நான் இந்த அர­சின்­மீது இப்­போது பகி­ரங்­க­மாக ஒரு குற்­றச்­சாட்டை வைக்­கி­றேன். முத­ல­மைச்­ச­ரு­டைய நண்­பர்­கள் அவ­ரு­டைய அலு­வ­ல­கத்­தில் இருக்­கக்­கூ­டிய ஆலோ­ச­கர்­கள் அவர் பெயர் விஷ்ணு ரெட்டி. சமீ­பத்­தில், ஒரு அமைச்­சர் பேசும்­போது நன்றி கூறு­கி­றார்,  விஷ்ணு ரெட்டி. அவ­ரு­டைய மைத்­து­னன்  சுஜய் ரெட்டி. அவ­ரு­டைய பிசி­னஸ் பார்ட்­னர்  அனில் ரெட்டி. இவர்­கள் அனை­வ­ரும் சேர்ந்து அர­சாங்­கம் நடத்­தக்­கூ­டிய சுரங்­கங்­கள் அனைத்­தை­யும் இப்­போது முழு­மை­யான கட்­டுப்­பாட்­டில் வைத்­தி­ருக்­கி­றார்­கள். இதற்­கான ஒவ்­வொரு ஆதா­ரத்­தை­யும் நான் ஒவ்­வொன்­றாக வெளி­யி­டப்­போ­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">ஒரு­த­லைப் பட்­ச­மாக நடந்து 
கொள்­ளும் பேர­வைத் தலை­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­படி நாங்­கள் கேட்ட கேள்வி எதற்­கும் பதில் சொல்­வ­தற்கு, வக்­கற்ற ஓர் அரசு இன்­றைக்கு அமைந்­தி­ருக்­கி­றது. முத­ல­மைச் ­ச­ரு­டைய பதில் முழுக்க முழுக்க ஒரு திரைப்­ப­டப் படப்­பி­டிப்­பிற்கு என்­னென்ன தேவையோ, அதை மூன்று நாட்­க­ளாக உட்­கார்ந்து மனப்­பா­டம் செய்து வந்து இங்கே பேசி­யி­ருக்­கி­றார். இவற்­றை­யெல்­லாம் கண்­டித்­துத்­தான், திரா­விட முன்­னேற்­றக் கழக உறுப்­பி­னர்­கள் வெளி­ந­டப்­புச் செய்­கி­றோம். அதே­போன்று பார­பட்­ச­மாக, ஒரு­த­லைப் பட்­ச­மாக நடந்­து­கொண்­டி­ ருக்­கக்­கூ­டிய சட்­டப் பேர­வைத் தலை­வர் அவர்­க­ளுக்கு, எங்­க­ளு­டைய கண்­ட­னத்தை நாங்­கள் தெரி­வித்­துக் கொள்­கி­றோம். நன்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு சட்­டப் பேரவை எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் நிரு­பர்­க­ளி­டம் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">கேள்வி – பதில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இத­னைத் தொடர்ந்­து­ நி­ரு­பர்­கள் கேட்ட கேள்­வி­க­ளுக்கு அவர் அளித்த பதில்­கள்  
வரு­மாறு: –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">செய்தியாளர் :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பொது­வாக பதி­லுரை முடிந்­த­பி­ற­கு­தான், கேள்வி கேட்க வேண்­டும் என்று விதி­முறை இருக்­கி­றது.  நீங்­கள் பதி­லுரை பேச­வி­டா­மல், தொடர்ச்­சி­யாக குறுக்­கி­டு­ வ­தாக சபா­நா­ய­கர் சொல்­லி­யி­ருக்­கி­றாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்: </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">முத­ல­மைச்­சர் என்ன பேசப்­போ­கி­றார் என்­ப­தைக் கேட்­ப­தற்­குத்­தான் நாங்­க­ளும் வந்­தோம். ஏனெ­னில், நாங்­கள் 15 கேள்­வி­கள் கேட்­டி­ருக்­கி­றோம்; அதற்கு ஏதா­வது பதில் சொல்­வாரா என்­று­தான் நானும் கேள்­வி­க­ளின் பட்­டி­ய­லை­யெல்­லாம் எடுத்து வைத்­துக்­கொண்டு, பதில் சொல்­வாரா என்று குறிப்­பெ­டுக்க உட்­கார்ந்­தி­ருந்­தேன். ஒரே ஒரு பதில் மட்­டும் சொன்­னார் ;  வேறு எந்­தப் பதி­லும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">15–வது நிமி­டத்­தில் குற்­றச்­சாட்­டு­களை வைப்­ப­தற்கு ஆரம்­பித்­து­விட்­டார். பொய்க் குற்­றச்­சாட்­டு­கள், எந்த ஆதா­ர­மும் இல்­லாத குற்­றச்­சாட்­டு­களை வைக்க ஆரம்­பித்­து­விட்­டார். அவை­யில் தவ­றான தக­வல்­களை, பொய்­க­ளைச் சொல்­லும்­போது, குற்­றச்­சாட்­டு ­க­ளைச் சொல்­லும்­போது, எழுந்து ஆட்­சே­பணை தெரி­விப்­பது எங்­க­ளு­டைய உரிமை. அத­னால் எங்­க­ளுக்­குப் பேச அனு­மதி கொடுங்­கள் என்று கேட்­டோம். `பேசி முடித்­த­தற்­குப் பிறகு கொடுக்­கி­றேன்’ என்று சொன்­னார் சபா­நா­ய­கர். அது­வ­ரைக்­கும் நாங்­கள் காத்­தி­ருந்­தோம். ஆனால், இவர் பேசு­வது எல்­லாமே `ரீல்ஸ் கன்­டென்ட்’ ஆக உள்­ளது. எல்­லாமே திரைப்­ப­டப் படப்­பி­டிப்­பிற்­கான டய­லாக்ஸ், எல்­லாமே பஞ்ச் டய­லாக்ஸ்­தான். எனவே தொடர்ந்து அவர் பேசப் பேச எங்­க­ளு­டைய உறுப்­பி­னர்­க­ளின் உணர்ச்­சி­யைக் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­ வில்லை. அத­னால் நாங்­கள் தொடர்ந்து முழக்­க­மிட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">முத­ல­மைச்­சர் பேசி முடித்த உடனே, எங்­க­ளுக்கு வாய்ப்­புத் தரு­வ­தா­கச் சொன்­னார் சபா­நா­ய­கர். ``எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக உங்­க­ளுக்கு நான் வாய்ப்­புத் தரு­கி­றேன்’’ என்று கூறி­னார். நான் சொன்­னேன், ``ஆமாம், நாங்­கள் பதில் சொல்லி ஆக­வேண்­டும், எங்­கள் மீது குற்­றச்­சாட்டு வைத்­தி­ருக்­கி­றார், பொய்க் குற்­றச்­சாட்­டு­க­ளைச் சொல்­கி­றார்’’ என்று சொன்­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">சபாநாயகருக்கு கண்டனம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">`வாய்ப்­புத் தரு­கி­றேன்’ என்று சொன்ன சபா­நா­ய­கர் இரண்­டா­வது நிமி­டத்­தி­லேயே மாற்­றி­விட்­டார். அதா­வது அவ­ருக்கு ஏதோ ஒரு குறிப்பு வந்­தது; வந்த உடனே பார்த்­து­விட்டு, “இல்லை இல்லை, உங்­க­ளுக்கு நான் வாய்ப்­புக் கொடுக்க முடி­யாது’’ என்று சொல்­லி­விட்­டார். அப்­போது நாங்­கள் எங்கே சென்று இந்­தப் பொய்க் குற்­றச்­சாட்­டு­க­ளுக்­குப் பதில் சொல்­வது? அத­னால்­தான் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளைச் சந்­தித்­தி­ருக்­கி­றேன். சபா­நா­ய­க­ரு­டைய ஒரு­த­லைப்­பட்­ச­மான நட­வ­டிக்­கையை நாங்­கள் கண்­டிக்­கின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இன்­றைக்­குப் பார்த்­தீர்­கள் என்­றால், முத­ல­மைச்­சர் பேசும்­போது பேர­வைத் தலை­வர், எங்­கள் பக்­கம் திரும்­பக் கூட இல்லை. நான், துணைத் தலை­வர், கொறடா அனை­வ­ரும் குரல் கொடுத்­தோம். “எங்­க­ளுக்கு ஒரு வாய்ப்­புக் கொடுங்­கள், முத­ல­மைச்­சர் பேசி முடித்­த­தற்­குப் பிற­கா­வது, வாய்ப்­புக் கொடுக்­கி­றேன் என்று சொல்­லுங்­கள்’’ என்று கேட்­டோம். ஆனால், அவர் எங்­கள் பக்­கமே திரும்­பவே இல்லை. ஒரு பக்­க­மா­கவே பார்த்­து க்­கொண்­டி­ருந்­தார். முழுக்க முழுக்க இந்த அர­சுக்­கும் முத­ல­மைச்­ச­ரு ­டைய பேச்­சுக்­கும் ‘ஜால்ரா’ அடித்­துக்­கொண்டே இருந்­தார். எனவே அவற்­றை­யும் கண்­டித்து, நாங்­கள் இன்­றைக்கு வெளி­ந­டப்­புச் செய்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">‘பா’ என்ற வார்த்தையை கேட்டாலே பயம் வந்து விடுகிறது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">செய்தியாளர் :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பா.ஜ.க. பற்றி நீங்­கள் கடந்த வியா­ழக்­கி­ழமை பேசி­யி­ருந்­தீர்­கள்.  பா.ஜ.க. பற்றி முத­ல­மைச்­சர் எது­வுமே பேச­வில்­லையே ஏன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">உதயநிதி ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> அவர்­கள், பா.ஜ.க. இல்லை. அமீத் ஷா கூடத் தேவை­யில்லை, ‘பா’ கூட வராது.  இன்­னும் சொல்­லப்­போ­னால், ஒரு அமைச்­சர் பா.ஜ.க.–வைக் கண்­டித்து, பா.ஜ.க தலை­வர்­க­ளைக் கண்­டித்து, அவை­யில் பேசு­கி­றார். உடனே இன்­னொரு அமைச்­சர் எழுந்து, ``அவற்றை அவைக்­கு­றிப்­பி­லி­ருந்து நீக்­குங்­கள்’’ என்­கி­றார். அந்த அள­வுக் ­குத்­தான் இந்த அரசு இருக்­கி­றது. தைரி­ய­மற்ற, வக்­கற்ற அரசு. ஒரு `டம்மி முத­ல­மைச்­சர்’­தான் இப்­போது உட்­கார்ந்­தி­ருக்­கி­றார். யார் யார் வச­னம் எழு­து­ப­வர்­கள் எழு­தித் தரு­கி­றார்­களோ, அதை நன்­றா­கப் படித்­து­விட்டு, மூன்று நாளில் நன்­றாக ஆயத்­த­மாகி வந்­தி­ருக்­கி­றார். அதை இன்­றைக்கு நேரம் கிடைத்த உடனே பேசி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எங்­க­ளோடு சேர்ந்து எங்­க­ளு­டைய கூட்­ட­ணிக் கட்­சி­யைச் சேர்ந்த தலை­வர்­கள், மனி­த­நேய மக்­கள் கட்சி, மனி­த­நேய ஜன­நா­ய­கக் கட்சி ஆகிய கட்­சி­க­ளின் உறுப்­பி­னர்­கள் 
இரு­வ­ருமே சேர்ந்து வெளி­ந­டப்­புச் செய்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">செய்தியாளர் :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">முத­ல­மைச்­ச­ரி­டம் நீங்­கள் ஆதா­ரம் எடுத்­துக்­காட்­டுங்­கள் என்று கேட்­ட­தற்கு, முத­ல­மைச்­சர் என்­னி­டம் ஆதா­ரம் இருக்­கி­றது என்று ஆதா­ரங்­களை கையில் வைத்­தி­ருந்­தாரே, அதைப் பற்றி என்ன சொல்ல வரு­கி­றீர்­கள்?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">உதயநிதி ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதெல்­லாம் ஆதா­ரம் கிடை­யாது. அவை வெறும் குற்­றச்­சாட்­டு ­கள்­தான். இந்த மாதிரி எல்லா ஆதா­ர­மும் எங்­க­ளி­டம் இருக்­கின்­றன. இதைத்­தான் நாங்­க­ளும் சொல்­கி­றோம். அம­லாக்­கத்­துறை வழக்­கின் குற்­றச்­சாட்­டைக் கூறு­கி­றாரே, இதே­ போன்று பொதுப்­ப­ணித்­துறை அமைச்­சர் மீதும் குற்­றச்­சாட்­டு­கள் இருக்­கின்­றன. முத­ல­மைச்­சர் மீதே குற்­றச்­சாட்­டு­கள் இருக்­கின்­றன. சி.பி.ஐ. குற்­றச்­சாட்­டு­கள் எல்­லாம் ஆதா­ரம் கிடை­யாது, அதை நிரூ­பிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">செய்தியாளர் :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முத­ல­மைச்­சர் பேசு­வது மக்­க­ளுக்­குச் சென்­ற­டை­யக்­கூ­டாது என்­ப­தற்­கா­கத்­தான் தொடர்ந்து அம­ளி­யில் ஈடு­பட்டு வரு­கி­றீர்­கள் என்று சபா­நா­ய­கர் குற்­றச்­சாட்டு வைக்­கி­றாரே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">உதயநிதி ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> நாங்­கள் பதி­லுரை முடிந்­து­தான் கேட்­டோம். முத­லில் சபா­நா­ய­கர் அனு­ம­திப்­ப­தா­கக் கூறி­னார். அதன் பிறகு என்ன நிர்­பந்­தமோ தெரி­ய­வில்லை, `அனு­ம­திக்க முடி­யாது’ என்­றார். அத­னால்­தான் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளா­கிய உங்­க­ளைச் சந்­திக்க வந்­துள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">பெண்­க­ளைப் பற்­றிப் பேச இந்த முத­ல­மைச்­ச­ருக்­குத் தகுதி உண்டா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">செய்தியாளர் :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">முத­ல­மைச்­சர் ரத்­தீஷ் யார் என்று கேட்­கி­றாரே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">உதயநிதி ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆதா­ரம் இருக்­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">செய்தியாளர் :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">நூல­கத்­தில் இருக்­கி­றது என்று சொல்­லி­யி­ருக்­கி­றார்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">உதயநிதி ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வாருங்­கள், இரண்டு பேரும் நூல­கத்­திற்­குப் போவோம். நூல­கத்­தைப் பற்­றி­யெல்­லாம், இப்­போது இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர் பேச­லாமா? பிறகு பெண்­க­ளைத் தவ­றா­கப் பேசி­னோம் என்­கி­றார். இரட்டை அர்த்­தத்­தில் பேசக்­கூ­டாது, மூன்று அர்த்­தத்­தில் பேசக்­கூ­டாது என்­கி­றார். இவற்­றை­யெல்­லாம் இந்த முத­ல­மைச்­ச­ருக்­குச் சொல்­வ­தற்கு எந்­தத் தகு­தி­யும் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவர் நடித்த படங்­கள் என்ன? நடித்த காட்­சி­கள் என்ன? பாடிய பாடல்­கள் என்ன? இதை­யெல்­லாம் இப்­போது பேசி­னால் அவ­ரால் தாங்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உங்­க­ளு­டைய நண்­பர் விஷ்ணு ரெட்டி என்ன பொறுப்­பில் இருக்­கி­றார்? சுஜய் ரெட்டி என்ன பொறுப்­பில் இருக்­கி­றார்? அனில் ரெட்டி என்ன பொறுப்­பில் இருக்­கி­றார்? ஏன் இப்­போது வரக்­கூ­டிய எல்லா சுரங்­கங்­கள், எல்லா பொறுப்­பு­க­ளை­யும் அவர்­க­ளி­டம் ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றீர்­கள்? அதற்­கான ஆதா­ரத்தை நாங்­கள் வெளி­யி­டு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள், செய்­தி­யா­ளர்­க­ளுக்­குப் பேட்­டி­ய­ளித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>