<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,56,958,928" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 08 2026 14:35:23 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260909T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="09092026-CBE-04" position.sequence="04" ex-ref="09092026-CBE-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="31">சர்க்காரியா கமிஷன் பற்றி நேருக்கு நேர் விவாதிக்க விஜய் தயாரா? </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="31"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="43">த.வெ.க. ஆட்சிமீது தி.மு.க. வைத்த குற்றச்சாட்டுகளை எல்லாம் திசைதிருப்பும் முயற்சி! கபட நாடகத்தை அரங்கேற்றிவிட்டு ஓடியிருக்கிறார் விஜய்!   </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">முதல்வர் விஜய்யின் சட்டமன்ற பேச்சு தொடர்பாக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேட்டி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="RSBharathiPho_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">சென்னை, செப். 9–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">சர்க்­கா­ரியா கமி­ஷன் பற்றி நேருக்கு நேர் விவா­திக்க விஜய் தயாரா.?  என்­றும் த.வெ.க. ஆட்­சி­மீது தி.மு.க. வைத்த குற்­றச்­சாட்­டு ­களை எல்­லாம் திசை­தி­ருப்­பும் முயற்சி கபட நாட­கத்தை அரங்­கேற்­றி­விட்டு ஓடி­யி­ருக்­கி­றார் விஜய் என்­றும் முதல்­வர் விஜ­யின் சட்­ட­மன்ற பேச்சு தொடர்­பாக கழக அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ். பாரதி அளித்த பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது குறித்து கழக அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­றைய முத­ல­மைச்­சர் இந்த ஆட்சி மீது வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டு­ க­ளுக்கு பதில் சொல்ல எது­வு­மில்­லாத கார­ணத்­தால் அவர் பிறப்­ப­தற்கு முன்பு சொல்­ல­பட்ட குற்­றச்­சாட்டை எடுத்து வந்து இப்­போது பேசி உள்­ளார். எதிர்க்­கட்சி தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் இந்த 116 நாள் ஆட்­சி­யில் நடை­பெற்­றுள்ள கொலை­கள், பாலி­யல் வன்­கொ­டு­மை­கள், கொள்­ளை­கள், சட்­டம் ஒழுங்கு சீர­ழிவு பற்றி ஆதா­ரங்­க­ளோடு நேருக்கு நேராக குற்­றம் சாட்டி கேள்வி எழுப்­பி­னார். மற்ற எதிர்க்­கட்சி தலை­வர்­க­ளும் அடுக்­க­டுக்­கா­டுக்­கான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­த­னர். அவை எதற்­கும் பதில் அளிக்க யோக்­கி­யதை இல்­லா­மல், தைரி­ய­மில்­லா­மல், செத்த பாம்பை அடிப்­பது போல முடிந்து போன சர்க்­கா­ரியா கமி­ஷன் பற்றி பேசி உள்­ளார். சர்க்­கா­ரியா கமி­ஷன் பற்றி இவ­ருக்கு தெரி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சர்க்­கா­ரியா கமி­ஷன் தொடர்­பான உண்­மை­களை தற்­போ­தைய சூழ்­நி­லை­யில் மக்­க­ளு­டன் பகிர்­வது என்­னைப்­போன்­ற­வர்­க­ளின் கட­மை­யா­கும். அவர் குறிப்­பிட்ட குற்­றச்­சாட்­டு­கள் எதற்­கும் எந்­த­வொரு அடிப்­படை ஆதா­ர­மும் இல்லை. அதற்கு சில உதா­ர­ணங்­க­ளைத் தரு­கி­றேன். உதா­ர­ண­மாக, அண்ணா சாலை­யில் அண்ணா தியேட்­டர் இருக்­கி­றது. இந்த அண்ணா தியேட்­டர் கலை­ஞ­ருக்­குச் சொந்­த­மா­னது என்று கூறி சர்க்­கா­ரியா கமி­ஷ­னி­டம் ஒரு புகார் அளிக்­கப்­பட்­டது. இது உண்­மை­யில் யாருக்­குச் சொந்­த­மா­னது என்­ப­தற்­கான தக­வல்­கள் விஜய்­யின் கைக­ளில் உள்­ளன. சர்க்­கா­ரியா கமி­ஷ­னைப் பற்­றிப் பேசும் விஜய்க்கு தெம்­பும் திரா­ணி­யும் இருந்­தால், அண்ணா தியேட்­டர் உண்­மை­யில் யாருக்­குச் சொந்­த­மா­னது என்­பதை அவர் கூறட்­டும். இது ஜக்­க­ரியா சேட் என்­ப­வ­ருக்­குச் சொந்­த­மா­னது. ஆனால் அது கலை­ஞ­ருக்கு சொந்­த­மா­னது என்று அந்­தப் புகா­ரில் எழு­தப்­பட்­டி­ருந்­தது. இதுமுத­லா­வது; இரண்­டா­வது, பூவி­ருந்­த­வல்லி நெடுஞ்­சா­லை­யில் இன்று அந்த ஹோட்­டல் இல்லை. அப்­பொது ஓசி­யா­னிக் ஹோட்­டல் போன்ற இரண்டோ அல்­லது மூன்றோ மட்­டுமே இருந்­தன. சாந்­தோம் கடற்­க­ரை­யில், கடற்­கரை ஓரத்­தில் ஓசி­யா­னிக் ஹோட்­டல் என்று ஒரு ஹோட்­டல் இருந்­தது. இது திரைப்­பட நடி­கர்­க­ளும் மற்ற வசதி படைத்­த­வர்­க­ளும் தங்­கி­யி­ருந்த ஒரு ஹோட்­ட­லா­கும். அதே­போல், பூவி­ருந்­த­வல்லி சாலையை எடுத்­துக் கொண்­டால், அருண் ஹோட்­டல் என்று ஒரு ஹோட்­டல் இருந்­தது. எல்­லா­வற்­றை­யும் கிழித்­தெ­றிந்து கீழே தள்­ளு­வேன் என்று சர்க்­கா­ரியா கமி­ஷ­னி­டம் புகார் அளிக்­கும் விஜய், அருண் ஹோட்­டல் கலை­ஞ­ருக்­குச் சொந்­த­மா­னது என்று எழு­தி­னார். ஆனால் அந்த அருண் ஹோட்­டல் யாருக்­குச் சொந்­த­மா­னது? விஜய்க்கு இன்று தெம்பு, திராணி, தைரி­யம் இருந்­தால், அவர் இந்த சொத்து யாருக்­குச் சொந்­த­மா­னது என்­ப­தைக் கண்­டு­பி­டித்து வெளிப்­ப­டுத்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதை­விட மிக­வும் நகைப்­புக்­கு­ரிய விஷ­யம். திரு­வா­ரூ­ரில் கலை­ஞர் 10 அல்­லது 15 ஏக்­கர் நிலம் தான் அப்­போது வைத்­தி­ருந்­தார் அந்த நிலம் இப்­போது அவ­ரது குடும்ப உறுப்­பி­னர்­க­ளால் ஒரு நினை­வி­ட­மா­கப் பெரி­தும் மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆனால் அதற்கு லண்­ட­னி­லி­ருந்து ஒரு டிராக்­டர் அவ­ருக்கு லஞ்­ச­மாக வழங்­கப்­பட்­ட­தா­க­வும், அதை அவர் திரு­வா­ரூ­ரில் உள்ள தனது சொந்த நிலத்தை உழவு செய்­யப் பயன்­ப­டுத்­தி­ய­தா­க­வும் குற்­றம் சாட்­டப்­பட்­டது. குறிப்­பி­டப்­பட்ட அந்த டிராக்­ட­ரைப் 
பயன்­ப­டுத்­து­வ­தற்கு குறைந்­தது 50 ஏக்­கர் நில­மா­வது இருந்­தி­ருக்க வேண்­டும். ஆனால் கலை­ஞ­ரி­டம் இருந்­தது வெறும் பதி­னைந்துஏக்­கர்­தான். நாங்­கள் அதை அப்­போதே அம்­ப­லப்­ப­டுத்­தி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">திரு­மதி.இந்­தி­ரா­காந்தி 
மன்­னிப்பு கேட்­டார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது நான் பேசு­வ­தைப் போல, சர்க்­கா­ரியா கமி­ஷன் எத்­த­கைய சூழ்­நி­லை­யில் நடை­பெற்­றது என்­பதை அவர் முத­லில் புரிந்து கொள்ள வேண்­டும் – அவ­சர நிலை பிர­க­ட­னத்­தின் போது­தான் அது நடந்­தது. ஆனால், இன்­றி­ருக்­கும் தக­வல் தொழில்­நுட்ப வளர்ச்சி அன்­றைக்கு இல்லை. சர்க்­கா­ரியா கமி­ஷன் அமைக்­கப்­பட்­ட­போது பேச்­சு­ரிமை இல்லை. பத்­தி­ரிகை சுதந்­தி­ர­மும் இல்லை. பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளைச் சந்­திக்க முடி­யாது. எந்­த­வொரு செய்­தி­யும் பத்­தி­ரி­கை­க­ளில் வராது. மறுப்­பு­க­ளும் வெளி­யி­டப்­ப­டாது. அந்­தக் காலக்­கட்­டத்­தில் இந்த ஆணை­யத்தை அமைத்த இந்­திரா காந்தி கூட, 1980 இல் கடற்­க­ரைக்கு வந்து, அவ­சர நிலை­யின் போது தனக்கு தெரி­யா­மல் சில தவ­று­கள் நடந்­து­விட்­ட­தா­கக் கூறி கலை­ஞ­ருக்கு முன்­னால் பகி­ரங்­க­மாக மன்­னிப்பு கேட்­டார். இது பத்­தி­ரிகை உல­கத்­திற்­கும், அர­சி­யலை அறிந்­த­வர்­க­ளுக்­கும், மூத்த அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கும் தெரிந்த ஒன்­றா­கும். நேற்று பெய்த மழை­யில் முளைத்த காளான்­க­ளுக்கு, அர­சி­யல் விவ­ர­மற்­ற­வர்­க­ளுக்கு இது தெரி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரி­டம் நான் ஒரே ஒரு கேள்­வி­யைக் கேட்க விரும்­பு­கி­றேன். அவ­ருக்கு உண்­மை­யில் தெம்­பும் திரா­ணி­யும் இருந்­தால், அவர் வார்த்­தை­க­ளில் ஏதே­னும் உண்மை இருந்­தால், எங்­க­ளு­டன் சர்க்­கா­ரியா கமி­ஷன் குறித்து விவா­திக்­கத் தயாரா? வார்த்­தைக்கு வார்த்தை 
விவா­திக்க நாங்­கள் விவா­திக்க தயார், அவர் தயாரா? உதா­ர­ண­மாக, புகார்கொடுத்த எம். ஜி. ஆர் தான் அடுத்த 10 ஆண்­டு­கள் ஆட்­சி­யில் இருந்­தார். ஆனால்எந்த வழக்­கும் போட முடி­ய­வில்லை .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">1977 இல், அவ­சர நிலை­யின் போது இந்­திரா காந்தி தி.மு.க, ஜனதா கட்சி, மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி மற்­றும் திரா­வி­டக் கழ­கத்­தைச் சேர்ந்த பல­ரைச் சிறை­யில் அடைத்­தி­ருந்­த­தால், அக்­டோ­பர் 30 அன்று அவர் சென்­னைக்கு வந்­த­போது கருப்­புக்­கொடி காட்­டக் கலை­ஞர் முடிவு செய்­தார்; நாங்­கள் கைது செய்­யப்­பட்­டோம், மர்­ம­லாங் பாலத்­தின் அருகே ஆசி­ரி­யர் கி.வீர­மணி மற்­றும் அன்னை மணி­யம்­மை­யார் ஆகி­யோர் கைது செய்­யப்­பட்­ட­னர். கலை­ஞ­ரு­டன் நாங்­க­ளும் கைது செய்­யப்­பட்டு 45 நாட்­கள் சிறை­யில் இருந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த விவ­ரங்­க­ளை­யெல்­லாம், முத­ல­மைச்­சர் விஜய் தனக்கு எழுதி கொடுத்த ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்­த­வ­ரி­டம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்­டும். கலை­ஞர் அல்­லது திமுக ஏதே­னும் தவறு செய்­தி­ருந்­தால் எம்.ஜி.ஆரின் 10 ஆண்டு கால ஆட்­சி­யில் எங்­கள் மீது வழக்­குத் தொடர்ந்­தி­ருக்­க­லாம்; ஆனால், எம்.ஜி.ஆர். அரசு அத்­த­கைய எந்த வழக்­கை­யும் தொட­ர­வில்­லையே ஏன்.?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாங்­கள் அக்­டோ­பர் 1977இல் இந்­திரா காந்­திக்­குக் கருப்­புக்­கொடி காட்­டி­னோம். அத­னால் அந்த வழக்கு பதி­யப்­பட்டு கலை­ஞ­ரு­டன் கைது செய்­யப்­பட்டு விடு­விக்­கப்­பட்­டோம். இந்த வழக்­கு­டன் அது முடி­வ­டைந்­தது. 1981 இல் தீர்ப்பு வந்­தது, நாங்­கள் அனை­வ­ரும் விடு­தலை செய்­யப்­பட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் எம்.ஜி.ஆரின் மன­நி­லை­யைப் பற்­றிப் பேசு­கி­றேன்; இந்த வழக்­கில் எப்­ப­டி­யா­வது எங்­களை உள்ளே வைக்க வேண்­டும் என உயர் நீதி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீடு செய்­தார். உயர் நீதி­மன்­றத்­தில் நாங்­கள் விடு­தலை செய்­யப்­பட்ட பிறகு, அவர்­கள் உச்ச நீதி­மன்­றம் வரை சென்­றார். ஆக, 1977 இல் நாங்­கள் காட்­டிய கருப்­புக்­கொடி தொடர்­பான வழக்கு பிப்­ர­வரி 1996 இல்­தான் வழக்கு முடிந்­தது. இந்த ஒரு உதா­ர­ணம் போதாதா? முழு பானை சோற்­றுக்கு ஒரு சோறு பதம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­சர் விஜய் 
ரசி­கர்­க­ளுக்­காக பேசி­யுள்­ளார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு­வ­ருக்கு புத்தி கூர்­மை­யும் அர­சி­யல் தெளி­வும் இருந்­தால் அல்­லது ஸ்கிரிப்ட் எழு­தி­ய­வ­ருக்­கா­வது கடந்த கால வர­லாறு பற்றி கொஞ்­ச­மா­வது அறிவு இருக்க வேண்­டும். இந்­தக் கோப்­பு­க­ளைத் திறந்து பார்க்க வேண்­டும். முத­ல­மைச்­சர் விஜய் தனது ரசி­கர்­க­ளுக்­காக பேசி உள்­ளார் அவ்­வ­ளவே. தமிழ்­நாட்­டின் தரம், மாண்பு, பாரம்­ப­ரி­யம் மற்­றும் சட்­ட­மன்ற மர­பு­கள் அனைத்­தும் இன்று மாண்­பு­மிக்க தமிழ்­நாடு சட்­டப்­பே­ர­வை­யில் மீறப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சாதா­ரண ஒரு கருப்­புக் கொடிப் போராட்ட வழக்­கிற்­கா­கவே அன்­றைய அர­சாங்­கம் உச்ச நீதி­மன்­றம் வரை சென்­ற­போது, கலை­ஞர் அல்­லது மற்­ற­வர்­கள் உண்­மை­யில் ஏதா­வது தவறு செய்­தி­ருந்­தால் அவர்­கள் விட்­டி­ருப்­பார்­களா? அவ­ருக்கு இந்த அடிப்­படை சைக்­கா­ல­ஜி­கூட இல்­லையா? இதை தெரிந்து கொள்­ளா­மல், புரிந்து கொள்­ளா­ம­லேயே விஜய் பேசு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­னொரு விஷ­யத்­தைக் கேட்­கி­றேன்; இந்த அனைத்­துப் புகார்­க­ளும் அளிக்­கப்­பட்­ட­போது அவர் பிறக்­கவே இல்லை. இது 1972 இல் அளிக்­கப்­பட்ட ஒரு புகார். அதன் பிற­கு­தானே உங்­கள் தந்தை, கலை­ஞ­ரால் எழு­தப்­பட்ட வச­னத்­தின் அடிப்­ப­டை­யில் ஒரு திரைப்­ப­டத்தை இயக்­கச் சென்­றார்? இல்லை, இல்லை, ஊழல்­வாதி எழு­திய நாட­கத்­தைத் தொட­மாட்­டேன் என்று கூறி உங்­கள் தந்தை மறுக்­க­வில்லை? போய் உங்­கள் தந்­தைட்­டைக் கேளுங்­கள். இன்று அவ­ரது ஆட்­சி­யில் நடக்­கும் ஊழல் மட்­டு­மல்ல; இன்று காலை­யில் அமைச்­சர் ஜெக­தீஸ்­வரி அவ­ரு­டைய காரால் இடிக்­க­பட்டு ஒரு­வர் கொல்­லப்­பட்­டார். நேற்­று­தான் ஆளும் த.வெ.க.கட்­சி­யைச் சேர்ந்த ஒரு உறுப்­பி­னர் நடு ரோட்­டில் ஓட ஓட வெட்டி படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ளார். சட்­ட­மன்­றத்­தில் இதை­யெல்­லாம் பேச வேண்­டிய நேரம் இது. கார­ணம், மூன்று நாட்­க­ளுக்­குப் பிறகு சட்­ட­மன்­றம் கூடு­கி­றது. இதைக் கவ­னத்­திற்­குக் கொண்டு வாருங்­கள்—­ஒரு கொலை நடந்­துள்­ளது, உங்­கள் சொந்­தக் கட்­சி­யின் உறுப்­பி­னர் ஒரு­வ­ரின் பயங்­க­ர­மான கொலை செய்­யப்­பட்­டுள்­ளார். அது­மட்­டு­மின்றி, உங்­கள் அமைச்­ச­ருக்­குச் சொந்­த­மான கார் ஏற்­ப­டுத்­திய விபத்­தில் ஒரு­வர் இறந்­துள்­ளார். இன்­றைய சட்­ட­மன்­றத்­தில் எழுப்­பப்­பட வேண்­டிய பிரச்­சி­னை­கள் இவை­தான். ஆனால், முத­ல­மைச்­சர் விஜய் அவர்­கள் இப்­பி­ரச்­சி­னை­களை திசை­தி­ருப்­பும் வேலை­யைச் செய்­கி­றார்; இது­வொரு “திசை­தி­ருப்­பல்” தந்­தி­ர­மா­கும், இத­னால், மக்­கள் பேசப்­போ­வ­தெல்­லாம் விஜய்­யின் சட்­ட­மன்­றப் பேச்சை பற்றி மட்­டும்­தான். தொலைக்­காட்­சி­யில், சமூ­க­வ­லை­த­ளங்­க­ளில் பார்ப்­ப­வர்­க­ளுக்கு த.வெ.க. உறுப்­பி­னர் கொலை மற்­றும் அமைச்­ச­ரின் காரால் ஏற்­பட்ட உயி­ரி­ழப்பு பற்­றிய பெரிய செய்­தி­கள் எது­வும் வெளி­வ­ராது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">1989 சட்­ட­மன்ற நிகழ்வு குறித்­தும் - ஜெய­ல­லிதா குறித்­தும் விஜய் பேசு­கி­றார். அதைப் பற்­றிப் பேசு அவ­ருக்கு எந்த யோக்­கி­ய­தை­யும் இல்லை. ஏனெ­னில், அந்­நி­கழ்வு நடக்­கும்­போது 
ஜெய­ல­லிதா உட­னி­ருந்த திரு­நா­வுக்­க­ரசு அன்று சட்­ட­மன்­றத்­தில் என்ன நடந்­தது என்­ப­தைப் பல­முறை பத்­தி­ரி­கை­க­ளுக்­குத் தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளார். ஆக திசை திருப்­பு­கிற அர­சி­யல் செய்­கி­றார் விஜய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எதிர்க்­கட்­சித் தலை­வர் எழுப்­பிய கேள்­விக்கு பதில் இல்லை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆணித்­த­ர­மாக எதிர்க்­கட்­சித் த்லைவர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் எழுப்­பிய கேள்­விக்கு பதில் சொல்­வ­தற்கு தெம்­பில்­லா­மல் - திராணி இல்­லா­மல் இன்­றைக்கு ஒரு கபட நாட­கத்­தை­யும் – திசை­தி­ருப்­பும் முயற்­சி­யை­யும் சட்­ட­ச­பை­யிலே அரங்­கேற்­றி­விட்டு ஓடி­யி­ருக்­கி­றார் தமிழ்­நாட்­டி­னு­டைய முத­ல­மைச்­சர் விஜய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மூத்த தலை­வர் பேச்சை முதல்­வர் விஜய் குறிப்­பட்­டது பற்றி. .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேடை­யில் பேசும்­போது எமோ­ஷ­னலா பேசு­வது இயற்கை. அதுக்­கெல்­லாம் உள்­நோக்­கம் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இறு­தி­யாக, முத­ல­மைச்­சர் விஜய் அவர்­க­ளுக்கு சொல்­லிக் கொள்­வது, இவரை விட ஜாம்­ப­வான்ல்­லாம் 75 ஆண்­டு­க­ளாக பார்த்து வளர்ந்த கட்சி இந்த தி.மு.க. நேரு­வையே நாங்க பார்த்­த­வங்க. பண்­டி­தர் நேரு திமு­கவை ஒழிப்­ப­தற்­கா­கவே சட்­டத்­தையே திருத்­தி­னார் தெரி­யுமா? விஜய்க்கு இந்த வர­லாறு தெரி­யுமா? அறி­ஞர் அண்ணா திரா­விட நாடு கேட்­ட­போது , திமு­கவை தடை செய்­ய­ணும்ன்­ற­துக்­கா­கவே நேஷ­னல் இன்­ட­கி­ரே­ஷன் கமிட்டி என்ற ஒரு கமிட்­டியை ஒன்றை சிபி ராம­சாமி ஐயர் தலை­மை­யில போட்டு திமு­கவை தடை செய்ய முயற்சி செஞ்­சாங்க. அதுக்கு பிற­கு­தான் இந்த கட்சி வளர்ந்து ஆறு முறை ஆட்­சியை பிடித்­தது. பல பிர­த­மர்­களை உரு­வாக்­கிய - பல ஜனா­தி­ப­தி­கள் உரு­வாக்­கிய கட்சி இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">எமர்­ஜென்­சி­யில் பெருந்­த­லை­வர் காம­ரா­ஜரை கைது செய்ய மறுத்­த­வர் கலை­ஞர்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">யாரோ ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்­தாங்­கன்னு, அத வச்சு பேசு­றார் விஜய். ஆனால் அதற்கு பிறகு என்­னென்ன நடந்­தது? சர்க்­கா­ரியா கமி­ஷன் மூணு வரு­ஷம் பிற­கு­தான் போட்­டாங்க. போட்­ட­துக்கு கார­ணம் என்ன.? எமர்­ஜென்சி வந்­தது. இன்ன வெளிப்­ப­டையா சொல்­ல­ணும்னா எங்க மேல கேஸ் போட்­ட­துக்கு கார­ணம், பழைய காங்­கி­ர­சி­னு­டைய எல்லா மூத்த தலை­வர்­கள் அனை­வ­ரை­யும் இந்­திரா காந்தி அம்மா அரெஸ்ட் பண்­ணிட்­டாங்க. தமிழ்­நாட்­டுல காம­ரா­ஜர் மட்­டும்­தான் அரெஸ்ட் ஆகல. அந்த பழைய காங்­கி­ரஸ் தலை­வர்ல காம­ரா­ஜ­ரை­யும் அரெஸ்ட் பண்­ண­னும்னு சொன்ன கார­ணத்­தி­னால்­தான் கலை­ஞர் நேர­டியா காம­ரா­ஜர் வீட்­டுக்கு போய் காம­ரா­ஜரை சந்­தித்து ராஜி­னாமா கடி­தத்தை கொடுக்­கப் போறதா சொன்­னார். “நான் ஆட்­சி­யில் இருக்­கிற போது எமர்­ஜென்சி வராம தடுக்­க­வும் - உங்­கள கைது செய்­து­விட்டு, நான் தொடர்ந்து ஆட்­சி­யில் இருக்க விரும்­ப­லன்னு சொல்லி, அத­னால முத­ல­மைச்­சர் பத­வியை ராஜி­னாமா பண்­றேன்”னு கலை­ஞர், காம­ரா­ஜர் கிட்ட சொன்ன போது காம­ரா­ஜர் சொன்­னாரு “நீ இருக்­க­ற­து­னா­ல­தான் நான் வெளி­யில இருக்­கேன், நீயே ராஜி­னாமா பண்­ணிட்டா நாளைக்கே என்ன அரெஸ்ட் பண்­ணி­ரு­வாங்க” என்­றார். இது­போன்ற தமிழ்­நாட்டு அர­சி­யல் வர­லாற்றை எல்­லாம் முத­ல­மைச்­சர் தெரிஞ்­சுட்டு பேச­ணும். சும்மா யாரோ ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்­ததை வச்சு பேசக்­கூ­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு கழக அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி செய்­தி­யா­ளர்­­களுக்கு பேட்­டி­ய­ளித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>