<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,67,958,1404" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 08 2026 14:31:26 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260909T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="09092026-TRY-03" position.sequence="03" ex-ref="09092026-TRY-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="Minion Pro" fontStyle="Regular" size="12">   </lang>
	</hl4>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="70">முதலமைச்சர் நடித்த படங்களில் பெண்கள் குறித்த காட்சிகளையெல்லாம் பேசினால் அவரால் தாங்க முடியாது!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="41">பேரவைத் தலைவரைக் கண்டித்து வெளிநடப்பு – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!...</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="41">    முதல் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl3>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="45">‘மிசா’வைப் பற்றிப் பேச விஜய்க்கு அருகதை கிடையாது! </lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="20">ச</lang>
	<lang class="3" style="Headline6"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular"  size="20">ர்க்­கா­ரியா கமி­ஷ­னில் “எந்­தத் தவ­றும் நடக்­க­வில்லை” என்று அந்­தக் கமி­ஷனே அறிக்கை கொடுத்­தி­ருக்­கி­றது. அதே­போன்று, மிசா­வைப் பற்றி இவர் பேசு­கி­றார். கொட­நாட்­டில் இவ­ரு­டைய திரைப்­ப­டத்­தின் வெளி­யீட்­டிற் காக ‘வாட்ச்­மேன்’ வேலை பார்த்­த­வர்­தான் இந்த முத­ல­மைச்­சர் அவர்­கள். இவ­ருக்கு மிசா­வைப் பற்­றி­யும், எங்­க­ளு­டைய தலை­வ­ரைப் பற்­றி­யும் பேசு­வ­தற்கு ஏதா­வது தகுதி இருக்­கி­றதா? ஒரு சத­வி­கி­த­மா­வது தகுதி இருக்­கி­றதா? அந்­தத் தகு­தியை இவர் வளர்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றாரா?</lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="15">இவர் அர­சி­ய­லுக்கு வந்­தது ஒரு விபத்து. இவர் ஆட்­சிக்கு வந்­தது மிகப் பெரிய ஒரு விபத்து. இவ­ருக்கு மிசா­வைப் பற்­றி­யும், சர்க்­கா­ரியா கமி­ஷன் பற்­றி­யும் பேசு­வ­தற்கு எந்­தத் தகு­தி­யும் இல்லை. அவற்­றில் எந்த ஆதா­ர­மும் இல்லை, அவை­கள் வெறும் குற்­றச்­சாட்­டு­கள் மட்­டுமே!</lang>
	</hl7>
<hl8 id="Headline1" class="1" style="Headline8">
		<lang class="3" style="Headline8"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">சர்க்காரியா கமிஷன் பற்றி ஏதாவது தெரியுமா? </lang>
	</hl8>
<hl9 id="Headline1" class="1" style="Headline9">
		<lang class="3" style="Headline9"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="16">நூ</lang>
	<lang class="3" style="Headline9"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular"  size="16">ல­கத்­தைப் பற்­றி­யெல்­லாம், இப்­போது இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர் பேச­லாமா? பிறகு பெண்­க­ளைத் தவ­றா­கப் பேசி­னோம் என்­கி­றார். இரட்டை அர்த்­தத்­தில் பேசக் கூடாது, மூன்று அர்த்­தத்­தில் பேசக்­கூ­டாது என்­கி­றார். இவற்றை யெல்­லாம்   இந்த  முத­ல­மைச்­ச­ருக்­குச்      சொல்­வ­தற்கு   எந்­தத்  தகு­தி­யும் கிடை­யாது.</lang>
	</hl9>
<hl10 id="Headline1" class="1" style="Headline10">
		<lang class="3" style="Headline10"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="15">இவர் நடித்த படங்­கள் என்ன? நடித்த காட்­சி­கள் என்ன? பாடிய பாடல்­கள் என்ன? இதை­யெல்­லாம் இப்­போது பேசி­னால் அவ­ரால் தாங்க முடி­யாது.  உங்­க­ளு­டைய நண்­பர் விஷ்ணு ரெட்டி என்ன பொறுப்­பில் இருக்­கி­றார்? சுஜய் ரெட்டி என்ன பொறுப்­பில் இருக்­கி­றார்? அனில்  ரெட்டி   என்ன                        பொறுப்­பில் இருக்­கி­றார்? ஏன் இப்­போது வரக்­கூ­டிய எல்லா சுரங்­கங்­கள், எல்லா பொறுப்­பு­க­ளை­யும் அவர்­க­ளி­டம் ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றீர்­கள்? அதற்­கான ஆதா­ரத்தை நாங்­கள் வெளி­யி­டு­வோம். </lang>
	</hl10>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">முத­ல­மைச்­சர், “இதற்­கெல்­லாம் திங்­கட் கிழமை பதில் சொல்­கி­றேன்” என்று கடந்த வியா­ழக்­கி­ழமை சொல்­லி­விட்டு, வேக­மாக ஓடிப் போய்­விட்­டார்.  நான்­கூட,  தயா­ராகி வரு­வார்..  மூன்று நாள் டைம் இருக்­கி­றது. நன்­றாக மனப்­பா­டம் செய்­து­விட்டு வரு­வார் என்று நினைத்­தேன்.  அதே­மா­திரி, வியா ழக்­கி­ழமை எப்­படி ஓட்­டப் பந்­த­யத்­தில் ஓடி­யது மாதிரி ஓடி­னாரோ, அதே­மா­திரி இன்று மனப்­பா­டம் செய்­து­வந்து  ஒப்­பித்­தல் போட்டி மாதிரி, சட்­ட­ச­பை­யில் தவ­றான கருத்­து­களை, பொய்­யான குற்­றச்­சாட்­டு­களை ஒப்­பித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">ரீல்ஸ்­க­ளுக்­காக மட்­டுமே பதி­லுரை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நான் சொன்ன அதே பஞ்ச் டய­லாக், அதே சினிமா வச­னங்­கள், அதே ஆக்­டிங் ரீல்ஸ்களுக்­காக மட்­டுமே முத­ல­மைச்­சர் அவர்­கள் இந்­தப் பதி­லு­ரை­யைச் சொல்­லி­யி­ருக்­கி­றார்.  இந்த ஆட்சி அமைந்­த­தி­லி­ருந்து, சட்­டம்–­ஒ­ழுங்கு எந்த நிலை­மை­யில் இருக்­கி­றது என்று பத்­தி­ரி­கை­யாள  நண்­பர்­கள் உங்க ளுக்­குத் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தின­மும் தொலைக்­காட்­சி­க­ளில் பார்த்­துக் கொண்டு இருக்­கி­றீர்­கள். அப்­படி சட்­டம் ஒழுங்கு சம்­பந்­த­மாக நாங்­கள் கேட்ட எந்­தக் கேள்­விக்­கும் பதில் சொல்­லா­மல், வெறும் பஞ்ச் டய­லாக், வெறும் திசை­தி­ரும்­பும்  உத்தி தான் இன்­றும் நடந்­தது. உதா­ர­ணத்­துக்கு, அவர்­க­ளின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், அமைச்­சர்­கள், மாவட்­டச் செய­லா­ளர்­கள், உறுப்­பி­னர்­கள் மேல் எல்­லாம் ஏகப்­பட்ட குற்­றச்­சாட்­டு­கள் இருக்­கின்­றன.  அதன்­மேல் என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­போ­கி­றீர்­கள் என்று நாங்­கள் கேட்­டி­ருந்­தோம்.  அதற்கு மாறாக, தி.மு.க. ஆட்­சி­யில் இவர்­கள் மேல் எல்­லாம் இந்­தந்த வழக்கு இருக்­கி­றது என்று, எங்­கள் மேல் திரும்­பு­கி­றார்.  எங்­கள் மேல் வழக்கு இருந்­தால், நீங்­கள் நட­வ­டிக்கை எடுங்­கள் என்­று­தான் நாங்­கள் சொல்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­னும் சொல்­லப்­போ­னால், ஒரு அமைச்­சர் ஐ.பி.எல் விளை­யாட்டு அரங்கி லேயே உட்­கார்ந்து பவு­டர் போட்­டதை யெல்­லாம் நீங்­கள் பார்த்­தி­ருப்­பீர்­கள்.  அவர் மேல் இது­வரை எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை.  நாங்­கள் வியா­ழக்­கி­ழமை பேசி­ய­தும், அமைச்­சர்­கள் எல்­லாம் கடந்த மூன்று நாட்­க­ளாக என்ன செய்­து­கொண்டு இருந்­தார்­கள். என்­னென்ன பிரச்­சி­னை­களை எல்­லாம் சரி­செய்­யப் பார்த்­தார்­கள் என்­பதை பத்­தி­ரிகை நண்­பர்­கள் நீங்­க­ளும் பார்த்­தி­ருப் பீர்­கள்.  அவர்­க­ளின் கட்­சிக்­கா­ரர்­களே இன்று போதைப்­பொ­ருள் கடத்­த­லில் 
ஈடு­பட்டுள்­ளார்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">பட்­டப்­ப­க­லில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">இரண்டு கொலை­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நேற்று, சென்­னை­யில் பட்­டப்­ப­க­லில் இரண்டு கொலை­கள் நடந்­தி­ருக்­கின்­றன.  சி.சி.டி.வி. கேம­ராக்­க­ளில் அவை பதி­வா­கி­யுள்­ளன.  அவற்­றைப் பற்­றிப் பேச வாய்ப்­புக் கேட்­டேன்.  அதற்­கும் வாய்ப்பு கொடுக்­க­வில்லை.  இதைப் பற்­றிக் கேட்­டால், இதற்­கெல்­லாம் பதில் சொல்­லா­மல், 1970–ஆம் ஆண்­டுக்­குச் சென்­று­விட்­டார் முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">மிசா பற்­றிப் பேச இவ­ருக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">அரு­கதை உண்டா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">`சர்க்­கா­ரியா கமி­ஷன்’ பற்­றிப் பேசு­கி­றார். `மிசா’­­வைப் பற்­றிப் பேசு­கி­றார். `மிசா’­­வைப் பற்­றிப் பேசு­வ­தற்கு இவ­ருக்கு ஏதா­வது அரு­கதை இருக்­கி­றதா? அல்­லது தகுதி இருக்­கி­றதா? சர்க்­கா­ரியா கமி­ஷன் பற்றி இவ­ருக்கு ஏதா­வது தெரி­யுமா? யாரோ எழு­திக் கொடுத்­ததை மூன்று நாட்­க­ளாக உட்­கார்ந்து மனப்­பா­டம் செய்­து­விட்டு வந்து, இங்கே அதை அப்­ப­டியே வாந்தி எடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">இவர் ஆட்­சிக்கு வந்­தது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">மிகப் பெரிய ஒரு விபத்து!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சர்க்­கா­ரியா கமி­ஷ­னில் “எந்­தத் தவ­றும் நடக்­க­வில்லை” என்று அந்­தக் கமி­ஷனே அறிக்கை கொடுத்­தி­ருக்­கி­றது. அதே­போன்று, மிசா­வைப் பற்றி இவர் பேசு­கி­றார். கொட­நாட்­டில் இவ­ரு­டைய திரைப்­ப­டத்­தின் வெளி­யீட்­டிற்­காக ‘வாட்ச்­மேன்’ வேலை பார்த்­த­வர்­தான் இந்த முத­ல­மைச்­சர் அவர்­கள். இவ­ருக்கு மிசா­வைப் பற்­றி­யும், எங்­க­ளு­டைய தலை­வ­ரைப் பற்­றி­யும் பேசு­வ­தற்கு ஏதா­வது தகுதி இருக்­கி­றதா? ஒரு சத­வி­கி­த­மா­வது தகுதி இருக்­கி­றதா? அந்­தத் தகு­தியை இவர் வளர்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவர் அர­சி­ய­லுக்கு வந்­தது ஒரு விபத்து. இவர் ஆட்­சிக்கு வந்­தது மிகப் பெரிய ஒரு விபத்து. இவ­ருக்கு மிசா­வைப் பற்­றி­யும், சர்க்­கா­ரியா கமி­ஷன் பற்­றி­யும் பேசு­வ­தற்கு எந்­தத் தகு­தி­யும் இல்லை. அவற்­றில் எந்த ஆதா­ர­மும் இல்லை, அவை­கள் வெறும் குற்­றச்­சாட்­டு­கள் மட்­டுமே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதே­போன்று, அம­லாக்­கத் துறை (E.D) சொன்ன விஷ­யங்­க­ளை­யெல்­லாம், இவர் இங்கே படித்­துக் காட்­டு­கி­றார். அவை­யெல்­லாம் வெறும் குற்­றச்­சாட்­டு­கள்! எது­வுமே நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை; விசா­ரணை நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது. மூன்று கோப்­பு­க­ளைத் திறக்­கச் சொன்­னார்­கள் என்று சொல்­லி­விட்டு, அதைப் பற்றி எது­வுமே கூற­வில்லை. அம­லாக்­கத் துறை என்­னென்ன குற்­றச்­சாட்டு ­களைச் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள் என்று, அந்­தக் குற்­றச்­சாட்­டு­க­ளைத்­தான் இவர் சட்­ட­
மன்­றத்­தில் படித்­துக் காட்­டு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">நீதி­மன்­றத்­தால் தண்­டிக்­கப்­பட்ட</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">ஒரே முத­ல­மைச்­சர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இன்­னும் சொல்­லப்­போ­னால், சர்க்­கா­ரியா கமி­ஷ­னுக்­குப் பிறகு மக்­க­ளு­டைய ஆத­ர­வைப் பெற்று மூன்று முறை திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆட்­சி­யில் அமர்ந்­தி­ருக்­கி­றது. இங்கே இருக்­கக்­கூ­டிய அத்­தனை பேருக்­கும் தெரி­யும்; தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­குத் தெரி­யும், 
ஆட்­சி­யில் இருக்­கும்­போது ஊழல் செய்­தார்­கள் என்று நிரூ­பிக்­கப்­பட்டு, நீதி­மன்­றத்­தால் தண்­டிக்­கப்­பட்ட ஒரே முத­ல­மைச்­சர் யார், ஒரே தலை­வர் யார்  என்­பது இங்கே இருக்­கக்­கூடிய அத்­தனை பேருக்­கும், உங்­க­ளுக்­கும் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5"> டம்மி முத­ல­மைச்­சர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தைச் சேர்ந்த எங்­க­ளு­டைய தலை­வர்­களோ, எங்­க­ளு­டைய முன்­னாள் அமைச்­சர்­களோ, முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களோ, இது­வ­ரைக்­கும் யாரும் அது­போன்று தண்­டிக்­கப்­ப­ட­வில்லை.எந்த ஊழல் குற்­றச் ­சாட்­டும் நிரூ­பிக்­கப்­பட­ வில்லை. எனவே, இப்­படி எங்­கள் மேல் அடுக்­க­டுக்­கான குற்ற ச்சாட்­டு­களை வைத்­துள்­ளார்.  இவ்­வ­ளவு குற்­றச் ­சாட்­டு­கள் உங்­கள் மீது இருக்­கின்­றன என்று நாங்­க­ளும் கூற முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">முத­ல­மைச்­சர் மீது கூடத்­தான் வரு­மான வரித்­துறை வழக்கு இருக்­கி­றது. 15 கோடி ரூபாய் ஊதி­யம் பெற்­றதை மறைத்­த­தாக, அவர்­மீது ஒரு வழக்கு இருக்­கி­றது. வரு­மான வரித் துறை வழக்கு இருக்­கி­றது. வரு­மா­னத்தை மறைத்­த­தற்கு வழக்­குத் தொடர்ந்­தால், மிக­வும் தாம­த­மாக வழக்­குத் தொடர்ந்­தி­ருக்­கி­றீர்­கள் என்று நீதி­மன்­றத்­தில் வெளிப் ­படை­யாக ஒப்­புக்­கொண்­ட­வர்­தான், இன்­றைக்கு இருக்­கக்­கூ­டிய இந்த டம்மி முத­ல­மைச்­சர். அது­மட்­டு­மில்­லா­மல், இங்கே இருக்­கக்­கூ­டிய பொதுப்­ப­ணித் துறை அமைச்­சர்­மீது அம­லாக்­கத் துறை வழக்கு இருக்­கி­றது, அது நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">இவர்­க­ளுக்கு என்ன 
தகுதி இருக்­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­போது, அவர்­கள் கட்­சி­யில் புதி­தா­கச் சேர்த்­தி­ருக்­கி­றார்­களே, திரு. விஜ­ய­பாஸ்­கர், திரு.கு.ப.கிருஷ்­ணன்,  இப்­ப­டிப் பல்­வேறு தலை­வர்­கள் மீது, முன்­னாள் அமைச்­சர்­கள்­மீது எல்­லாம் அம­லாக்­கத் துறை வழக்­கு­கள் இருக்­கின்­றன. இப்­படி இவர்­கள் எல்­லா­ரை­யும் கூட சேர்த்து வைத்­துக்­கொண்டு, எங்­க­ளைக் குறை சொல்­வ­தற்கு இவர்­க­ளுக்கு என்ன தகுதி இருக்­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அது­மட்­டு­மில்­லா­மல், நேற்று இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீக் (IUML) கட்­சி­யைச் சேர்ந்த சட்­ட­மன்ற உறுப்­பி­னர் கூட்­டத்­தில் பேசும்­போது, என்ன பேசி­னார் என்­பதை நீங்­கள் அனை­வ­ரும் பார்த்­தி­ருப்­பீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“ஆட்சி அமைப்­ப­தற்­குப் பெட்டி பெட்­டி­யா­கப் பணத்தை எடுத்­துக்­கொண்டு வந்து, என்ன அமைச்­சர் பொறுப்பு வேண்­டும். இப்­போது நாங்­கள் கொடுப்­ப­தற்­குத் தயா­ராக இருக்­கி­றோம், உங்­கள் ஆத­ரவு வேண்­டும்” என்று கேட்­டி­ருப்­ப­தாக ஐ.யூ.எம்.எல். சட்­ட­மன்ற உறுப்­பி­னர் வெளிப்­ப­டை­யா­கவே சொல்­லி­யி­ருக்­கி­றார். இப்­ப­டிப் பகி­ரங்­க­மா­கக் குதிரை பேரத்­தில் இந்த அரசு நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எங்­கள்­மீது அம­லாக்­கத் துறை வழக்கு நடக்­க­லாம், நீதி­மன்­றத்­தில் வழக்கு நடக்­க­லாம். ஆனால், அவற்­றை­யெல்­லாம் சட்­டப்­படி சந்­திப்­ப­தற்கு நாங்­கள் அத்­தனை பேரும் தயார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நேற்று முன்­தி­னம் எங்­களை மிரட்டு ­வதற்­காக, நாங்­கள் எல்­லாம் பயந்­து­வி­டு­வோம் என்று லஞ்ச ஒழிப்­புத் துறையை (DVAC) வைத்து முன்­னாள் அமைச்­சர், முதன்­மைச் செய­லா­ளர் அண்­ணன் நேரு அவர்­களின் வீட்­டிற்­குச் சோத­னை­யி­டச் சென்­றார்­கள். சோத­னை­யி­டச் சென்­ற­வர்­கள், ஒரு ஐந்து ஆறு மணி நேரத்­தி­லெல்­லாம் முடித்துக் கொண்டு வெளியே வந்து, `ஒன்­றும் இல்லை’ என்று கூறி­விட்­டார்­கள். வெளியே வந்து அண்­ணன் நேரு அவர்­களே தெளி­வா­கப் பேட்டி கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். எனவே, இதை­யெல்­லாம் சட்­டப்­படி சந்­திப்­ப­தற்கு நாங்­கள் அனை­வ­ரும் தயார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">விஷ்ணு ரெட்டி கட்­டுப்­பாட்­டில் தமிழ்­நாடு சுரங்­கத்­துறை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நான் இந்த அர­சின்­மீது இப்­போது பகி­ரங்­க­மாக ஒரு குற்­றச்­சாட்டை வைக்­கி­றேன். முத­ல­மைச்­ச­ரு­டைய நண்­பர்­கள் அவ­ரு­டைய அலு­வ­ல­கத்­தில் இருக்­கக்­கூ­டிய ஆலோ­ச­கர்­கள் அவர் பெயர் விஷ்ணு ரெட்டி. சமீ­பத்­தில், ஒரு அமைச்­சர் பேசும்­போது நன்றி கூறு­கி­றார்,  விஷ்ணு ரெட்டி. அவ­ரு­டைய மைத்­து­னன்  சுஜய் ரெட்டி. அவ­ரு­டைய பிசி­னஸ் பார்ட்­னர்  அனில் ரெட்டி. இவர்­கள் அனை­வ­ரும் சேர்ந்து அர­சாங்­கம் நடத்­தக்­கூ­டிய சுரங்­கங்­கள் அனைத்­தை­யும் இப்­போது முழு­மை­யான கட்­டுப்­பாட்­டில் வைத்­தி­ருக்­கி­றார்­கள். இதற்­கான ஒவ்­வொரு ஆதா­ரத்­தை­யும் நான் ஒவ்­வொன்­றாக வெளி­யி­டப்­போ­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">ஒரு­த­லைப் பட்­ச­மாக நடந்து 
கொள்­ளும் பேர­வைத் தலை­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­படி நாங்­கள் கேட்ட கேள்வி எதற்­கும் பதில் சொல்­வ­தற்கு, வக்­கற்ற ஓர் அரசு இன்­றைக்கு அமைந்­தி­ருக்­கி­றது. முத­ல­மைச் ­சரு­டைய பதில் முழுக்க முழுக்க ஒரு திரைப்­ப­டப் படப்­பி­டிப்­பிற்கு என்­னென்ன தேவையோ, அதை மூன்று நாட்­க­ளாக உட்­கார்ந்து மனப்­பா­டம் செய்து வந்து இங்கே பேசி­யி­ருக்­கி­றார். இவற்­றை­யெல்­லாம் கண்­டித்­துத்­தான், திரா­விட முன்­னேற்­றக் கழக உறுப்­பி­னர்­கள் வெளி­ந­டப்­புச் செய்­கி­றோம். அதே­போன்று பார­பட்­ச­மாக, ஒரு­த­லைப் பட்­ச­மாக நடந்­து­கொண்டி­ ருக்­கக்­கூ­டிய சட்­டப் பேர­வைத் தலை­வர் அவர்­க­ளுக்கு, எங்­க­ளு­டைய கண்­ட­னத்தை நாங்­கள் தெரி­வித்­துக் கொள்­கி­றோம். நன்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு சட்­டப் பேரவை எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் நிரு­பர்­க­ளி­டம் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">கேள்வி – பதில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இத­னைத் தொடர்ந்து­ நிரு­பர்­கள் கேட்ட கேள்­வி­க­ளுக்கு அவர் அளித்த பதில்­கள்  
வரு­மாறு: –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">செய்­தி­யா­ளர் :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பொது­வாக பதி­லுரை முடிந்­த­பி­ற­கு­தான், கேள்வி கேட்க வேண்­டும் என்று விதி­முறை இருக்­கி­றது.  நீங்­கள் பதி­லுரை பேச­வி­டா­மல், தொடர்ச்­சி­யாக குறுக்­கிடு­ வதாக சபா­நா­ய­கர் சொல்­லி­யி­ருக்­கி­றாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின்: </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">முத­ல­மைச்­சர் என்ன பேசப்­போ­கி­றார் என்­ப­தைக் கேட்­ப­தற்­குத்­தான் நாங்­க­ளும் வந்­தோம். ஏனெ­னில், நாங்­கள் 15 கேள்­வி­கள் கேட்­டி­ருக்­கி­றோம்; அதற்கு ஏதா­வது பதில் சொல்­வாரா என்­று­தான் நானும் கேள்­வி­க­ளின் பட்­டி­ய­லை­யெல்­லாம் எடுத்து வைத்­துக்­கொண்டு, பதில் சொல்­வாரா என்று குறிப்­பெ­டுக்க உட்­கார்ந்­தி­ருந்­தேன். ஒரே ஒரு பதில் மட்­டும் சொன்­னார் ;  வேறு எந்­தப் பதி­லும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">15–வது நிமி­டத்­தில் குற்­றச்­சாட்­டு­களை வைப்­ப­தற்கு ஆரம்­பித்­து­விட்­டார். பொய்க் குற்­றச்­சாட்­டு­கள், எந்த ஆதா­ர­மும் இல்­லாத குற்­றச்­சாட்­டு­களை வைக்க ஆரம்­பித்­து­விட்­டார். அவை­யில் தவ­றான தக­வல்­களை, பொய்­களைச் சொல்­லும்­போது, குற்­றச்­சாட்டுகளைச் சொல்­லும்­போது, எழுந்து ஆட்­சே­பணை தெரி­விப்­பது எங்­க­ளு­டைய உரிமை. அத­னால் எங்­க­ளுக்­குப் பேச அனு­மதி கொடுங்­கள் என்று கேட்­டோம். `பேசி முடித்­த­தற்­குப் பிறகு கொடுக்­கி­றேன்’ என்று சொன்­னார் சபா­நா­ய­கர். அது­வ­ரைக்­கும் நாங்­கள் காத்­தி­ருந்­தோம். ஆனால், இவர் பேசு­வது எல்­லாமே `ரீல்ஸ் கன்­டென்ட்’ ஆக உள்­ளது. எல்­லாமே திரைப்­ப­டப் படப்­பி­டிப்­பிற்­கான டய­லாக்ஸ், எல்­லாமே பஞ்ச் டய­லாக்ஸ்­தான். எனவே தொடர்ந்து அவர் பேசப் பேச எங்­க­ளு­டைய உறுப்­பி­னர்­களின் உணர்ச்­சி­யைக் கட்­டுப்­ப­டுத்த முடிய­ வில்லை. அத­னால் நாங்­கள் தொடர்ந்து முழக்­க­மிட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">முத­ல­மைச்­சர் பேசி முடித்த உடனே, எங்­க­ளுக்கு வாய்ப்­புத் தரு­வ­தா­கச் சொன்­னார் சபா­நா­ய­கர். ``எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக உங்­க­ளுக்கு நான் வாய்ப்­புத் தரு­கி­றேன்’’ என்று கூறி­னார். நான் சொன்­னேன், ``ஆமாம், நாங்­கள் பதில் சொல்லி ஆக­வேண்­டும், எங்­கள் மீது குற்­றச்­சாட்டு வைத்­தி­ருக்­கி­றார், பொய்க் குற்­றச்­சாட்­டு­க­ளைச் சொல்­கி­றார்’’ என்று சொன்­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">சபா­நா­ய­க­ருக்கு கண்­ட­னம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">`வாய்ப்­புத் தரு­கி­றேன்’ என்று சொன்ன சபா­நா­ய­கர் இரண்­டா­வது நிமி­டத்­தி­லேயே மாற்­றி­விட்­டார். அதா­வது அவ­ருக்கு ஏதோ ஒரு குறிப்பு வந்­தது; வந்த உடனே பார்த்­து­விட்டு, “இல்லை இல்லை, உங்­க­ளுக்கு நான் வாய்ப்­புக் கொடுக்க முடி­யாது’’ என்று சொல்­லி­விட்­டார். அப்­போது நாங்­கள் எங்கே சென்று இந்­தப் பொய்க் குற்­றச்­சாட்­டு­க­ளுக்­குப் பதில் சொல்­வது? அத­னால்­தான் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளைச் சந்­தித்­தி­ருக்­கி­றேன். சபா­நா­ய­க­ரு­டைய ஒரு­த­லைப்­பட்­ச­மான நட­வ­டிக்­கையை நாங்­கள் கண்­டிக்­கின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இன்­றைக்­குப் பார்த்­தீர்­கள் என்­றால், முத­ல­மைச்­சர் பேசும்­போது பேர­வைத் தலை­வர், எங்­கள் பக்­கம் திரும்­பக் கூட இல்லை. நான், துணைத் தலை­வர், கொறடா அனை­வ­ரும் குரல் கொடுத்­தோம். “எங்­க­ளுக்கு ஒரு வாய்ப்­புக் கொடுங்­கள், முத­ல­மைச்­சர் பேசி முடித்­த­தற்­குப் பிற­கா­வது, வாய்ப்­புக் கொடுக்­கி­றேன் என்று சொல்­லுங்­கள்’’ என்று கேட்­டோம். ஆனால், அவர் எங்­கள் பக்­கமே திரும்­பவே இல்லை. ஒரு பக்­க­மா­கவே பார்த்து க்கொண்­டி­ருந்­தார். முழுக்க முழுக்க இந்த அர­சுக்­கும் முத­ல­மைச்­சரு ­டைய பேச்­சுக்­கும் ‘ஜால்ரா’ அடித்­துக்­கொண்டே இருந்­தார். எனவே அவற்­றை­யும் கண்­டித்து, நாங்­கள் இன்­றைக்கு வெளி­ந­டப்­புச் செய்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">‘பா’ என்ற வார்த்­தையை கேட்­டாலே பயம் வந்து விடு­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">செய்­தி­யா­ளர் :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பா.ஜ.க. பற்றி நீங்­கள் கடந்த வியா­ழக்­கி­ழமை பேசி­யி­ருந்­தீர்­கள்.  பா.ஜ.க. பற்றி முத­ல­மைச்­சர் எது­வுமே பேச­வில்­லையே ஏன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">உத­ய­நிதி ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> அவர்­கள், பா.ஜ.க. இல்லை. அமீத் ஷா கூடத் தேவை­யில்லை, ‘பா’ கூட வராது.  இன்­னும் சொல்­லப்­போ­னால், ஒரு அமைச்­சர் பா.ஜ.க.–வைக் கண்­டித்து, பா.ஜ.க தலை­வர்­க­ளைக் கண்­டித்து, அவை­யில் பேசு­கி­றார். உடனே இன்­னொரு அமைச்­சர் எழுந்து, ``அவற்றை அவைக்­கு­றிப்­பி­லி­ருந்து நீக்­குங்­கள்’’ என்­கி­றார். அந்த அள­வுக் ­குத்­தான் இந்த அரசு இருக்­கி­றது. தைரி­ய­மற்ற, வக்­கற்ற அரசு. ஒரு `டம்மி முத­ல­மைச்­சர்’­­தான் இப்­போது உட்­கார்ந்­தி­ருக்­கி­றார். யார் யார் வச­னம் எழு­து­ப­வர்­கள் எழு­தித் தரு­கி­றார்­களோ, அதை நன்­றா­கப் படித்­து­விட்டு, மூன்று நாளில் நன்­றாக ஆயத்­த­மாகி வந்­தி­ருக்­கி­றார். அதை இன்­றைக்கு நேரம் கிடைத்த உடனே பேசி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எங்­க­ளோடு சேர்ந்து எங்­க­ளு­டைய கூட்­ட­ணிக் கட்­சி­யைச் சேர்ந்த தலை­வர்­கள், மனி­த­நேய மக்­கள் கட்சி, மனி­த­நேய ஜன­நா­ய­கக் கட்சி ஆகிய கட்­சி­க­ளின் உறுப்­பி­னர்­கள் 
இரு­வ­ருமே சேர்ந்து வெளி­ந­டப்­புச் செய்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">செய்­தி­யா­ளர் :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">முத­ல­மைச்­ச­ரி­டம் நீங்­கள் ஆதா­ரம் எடுத்­துக்­காட்­டுங்­கள் என்று கேட்­ட­தற்கு, முத­ல­மைச்­சர் என்­னி­டம் ஆதா­ரம் இருக்­கி­றது என்று ஆதா­ரங்­களை கையில் வைத்­தி­ருந்­தாரே, அதைப் பற்றி என்ன சொல்ல வரு­கி­றீர்­கள்?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">உத­ய­நிதி ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதெல்­லாம் ஆதா­ரம் கிடை­யாது. அவை வெறும் குற்­றச்­சாட்டு ­கள்­தான். இந்த மாதிரி எல்லா ஆதா­ர­மும் எங்­க­ளி­டம் இருக்­கின்­றன. இதைத்­தான் நாங்­க­ளும் சொல்­கி­றோம். அம­லாக்­கத்­துறை வழக்­கின் குற்­றச்­சாட்­டைக் கூறு­கி­றாரே, இதே­ போன்று பொதுப்­ப­ணித்­துறை அமைச்­சர் மீதும் குற்­றச்­சாட்­டு­கள் இருக்­கின்­றன. முத­ல­மைச்­சர் மீதே குற்­றச்­சாட்­டு­கள் இருக்­கின்­றன. சி.பி.ஐ. குற்­றச்­சாட்­டு­கள் எல்­லாம் ஆதா­ரம் கிடை­யாது, அதை நிரூ­பிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">செய்­தி­யா­ளர் :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முத­ல­மைச்­சர் பேசு­வது மக்­க­ளுக்­குச் சென்­ற­டை­யக்­கூ­டாது என்­ப­தற்­கா­கத்­தான் தொடர்ந்து அம­ளி­யில் ஈடு­பட்டு வரு­கி­றீர்­கள் என்று சபா­நா­ய­கர் குற்­றச்­சாட்டு வைக்­கி­றாரே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">உத­ய­நிதி ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> நாங்­கள் பதி­லுரை முடிந்­து­தான் கேட்­டோம். முத­லில் சபா­நா­ய­கர் அனு­ம­திப்­ப­தா­கக் கூறி­னார். அதன் பிறகு என்ன நிர்­பந்­தமோ தெரி­ய­வில்லை, `அனு­ம­திக்க முடி­யாது’ என்­றார். அத­னால்­தான் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளா­கிய உங்­க­ளைச் சந்­திக்க 
வந்­துள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">பெண்­க­ளைப் பற்­றிப் பேச இந்த முத­ல­மைச்­ச­ருக்­குத் தகுதி உண்டா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">செய்­தி­யா­ளர் :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">முத­ல­மைச்­சர் ரத்­தீஷ் யார் என்று கேட்­கி­றாரே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">உத­ய­நிதி ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆதா­ரம் இருக்­கிறதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">செய்­தி­யா­ளர் :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">நூல­கத்­தில் இருக்­கி­றது என்று சொல்­லி­யி­ருக்­கி­றார்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">உத­ய­நிதி ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வாருங்­கள், இரண்டு பேரும் நூல­கத்­திற்­குப் போவோம். நூல­கத்­தைப் பற்­றி­யெல்­லாம், இப்­போது இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர் பேச­லாமா? பிறகு பெண்­க­ளைத் தவ­றா­கப் பேசி­னோம் என்­கி­றார். இரட்டை அர்த்­தத்­தில் பேசக்­கூடாது, மூன்று அர்த்­தத்­தில் பேசக்­கூ­டாது என்­கி­றார். இவற்­றை­யெல்­லாம் இந்த முத­ல­மைச்­ச­ருக்­குச் சொல்­வ­தற்கு எந்­தத் தகு­தி­யும் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவர் நடித்த படங்­கள் என்ன? நடித்த காட்­சி­கள் என்ன? பாடிய பாடல்­கள் என்ன? இதை­யெல்­லாம் இப்­போது பேசி­னால் 
அவ­ரால் தாங்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உங்­க­ளு­டைய நண்­பர் விஷ்ணு ரெட்டி என்ன பொறுப்­பில் இருக்­கி­றார்? சுஜய் ரெட்டி என்ன பொறுப்­பில் இருக்­கி­றார்? அனில் ரெட்டி என்ன பொறுப்­பில் இருக்­கி­றார்? ஏன் இப்­போது வரக்­கூ­டிய எல்லா சுரங்­கங்­கள், எல்லா பொறுப்­பு­க­ளை­யும் அவர்­க­ளி­டம் ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றீர்­கள்? அதற்­கான ஆதா­ரத்தை நாங்­கள் வெளி­யி­டு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள், செய்­தி­யா­ளர்­க­ளுக்­குப் பேட்­டி­ய­ளித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>