<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,32,959,1497" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 08 2026 17:24:49 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260909T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="09092026-VLR-08" position.sequence="08" ex-ref="09092026-VLR-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">09.09.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="29">‘திராவிட மாடல்’ ஆட்சியில் மீனவர்களுக்கான மாநாடு –</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="71">2.77 இலட்சம் மீனவக் குடும்பங்களுக்கு ரூ.9 ஆயிரம் கோடியில் நல உதவிகள்! </lang>
	<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="71"> </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="45">சட்டப்  பேரவை  – மீன்வளத் துறை  மானியக்     கோரிக்கையில்    இராமநாதபுரம்   காதர்பாட்சா  முத்துராமலிங்கம்  பேச்சு!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup637302_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup626431_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup626360_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="KadharBashaMu_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சென்னை, செப்.9–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தில் இராமநாதபுரம் தொகுதி காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் பேசுகையில் திராவிட மாடல் ஆட்சியில்  மீனவர்களுக்கு 2.77 இலட்ச மீனவர்களுக்கு ரூ.9 ஆயிரம் கோடி 30 உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சட்டப்பேதவையில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் பேசியதாவது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மீன­வர் நலன் மற்­றும் மீன்­வ­ளத் துறை­யி­னு­டைய மானி­யக் கோரிக்­கை­யில் பேசு­வ­தற்கு எனக்கு வாய்ப்­பைத் தந்த  பேர­வைத் தலை­வர் அவர்­க­ளுக்கு வணக்­கம். மீன்­வ­ளத் துறை­யில் மீன­வர்­க­ளுக்­காக அடை­யாள அட்டை வழங்கி மீன­வர்­க­ளு­டைய வாழ்­வா­ தா­ரத்தை உறுதி செய்­தி­டும் வகை­யில் டீசல் மானி­யம் என்ற தொலை­நோக்கு சிந்­த­னை­க­ளிலே மீன­வர்­க­ ளு­டைய நல­னில் அக்­கறை கொண்டு கடந்த 5 முறை தமிழ்­நாட்­டில் நல்­லாட்சி செய்த தமி­ழ­கத்தை செதுக்­கிய சிற்பி, வங்­கக் கட­லோ­ரம் துயில் கொள்­ளும் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­களை நான் வணங்­கு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மீன்­வ­ளம் என்­றி­ருந்த இந்­தத் துறையை மீன்­வ­ளம் மற்­றும் மீன­வர் நலன் என்று மீன­வர்­க­ளு­டைய நல­னுக்­காக துறையை மாற்றி கடந்த 5 ஆண்­டுக்­கா­லம் பல்­வேறு திட்­டங்­களை இந்த மீன­வர்­க­ளுக்­காக, ஏன் இந்­தி­யா­வில் எந்­த­வொரு முத­ல­மைச்­ச­ரும் செய்­தி­டாத அள­வில் மீன­வர் நலன் காக்­கக்­கூ­டிய மாநாட்டை நடத்தி, அந்த மாநாட்­டின்­மூ­ல­மாக நல்ல பல திட்­டங்­களை மீன்­வ­ளத் துறைக்­குத் தந்த திரா­விட மாடல் முத­ல­மைச்­சர், தாயு­மா­ன­வர், உண்­மை­யான மீன­வர்­க­ளு­டைய பாது­கா­வ­லர், இந்த அவை­யில் என்னை இரண்­டா­வது முறை பேசு­வ­தற்­கான வாய்ப்­பைத் தந்த என் நெஞ்­சம் நிறைந்த தலை­வர் அவர்­க­ளுக்கு என்­னு­டைய வணக்­கங்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­றைய எதிர்க்­கட்­சித் தலை­வர் விளை­யாட்­டுத் துறை­யில் தான் பொறுப்பு வகிக்­கி­ற­பொ­ழுது, இந்­தி­யா­வில் எந்­த­வொரு அமைச்­ச­ரும் செய்­தி­டாத அள­வில் விளை­யாட்­டுத் துறை­யில் இருக்­கக்­கூ­டிய விளை­யாட்டு வீரர்­க­ளுக்கு அரசு வேலை­வாய்ப்­பில் இட ஒதுக்­கீடு தந்து, அந்த ஆணை­யைப் பிறப்­பித்த மகத்­தான சாதனை தந்த எங்­க­ளு­டைய எதிர்­கா­லத் தலை­வர் அவ­ருக்­கும் என்­னு­டைய வணக்­கங்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) கழ­கத்­தி­னு­டைய துணைத் தலை­வர், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய துணைத் தலை­வர் அவர்­க­ளுக்­கும், எங்­க­ளு­டைய இயக்­கத்­தி­னு­டைய கொறடா அவர்­க­ளுக்­கும்,  பேர­வைத் தலை­வர் அவர்­க­ளுக்­கும் என்­னு­டைய வணக்­கங்­களை நான் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பேர­வைத் தலை­வர் அவர்­களே, நடு­நி­லை­யோடு இந்த பேர­வையை நீங்­கள் வழி­ந­டத்­து­கி­றீர்­கள், உங்­க­ளுக்­கும் என்­னு­டைய வணக்­கங்­கள். இந்த அவை­யில் என்­னு­டைய தந்­தைக்­குப் பின்­னால், என்னை வழி­ந­டத்தி, செம்­மைப்­ப­டுத்­தக்­கூ­டிய முன்­னாள் நிதித் துறை அமைச்­சர் திருச்­சுழி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எனது மரி­யா­தைக்­கு­ரிய அத்­தான் தங்­கம் தென்­ன­ரசு அவர்­க­ளுக்­கும் என்­னு­டைய வணக்­கங்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தேசி­யத்­தை­யும், தெய்­வீ­கத்­தை­யும் தனது இரு கண்­க­ளா­கப் பாவித்து, அர­சி­யல் வாழ்­வில் தூய வாழ்வு வாழ்ந்து இந்த நாட்­டின் சுதந்­தி­ரப் போராட்­டத்­திற்­காக 4,000 நாட்­கள் சிறைக்­குப்­பின் இருந்து மறைந்த ஒப்­பற்­றத் தலை­வர் தெய்­வீ­கத் திரு­ம­கன் எனது பெரிய தந்தை பசும்­பொன் முத்­து­ரா­ம­லிங்­கத் தேவர் அவர்­க­ளுக்­கும் எனது வணக்­கங்­களை நான் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">என்­னு­டைய தொகுதி என்­பது ஒரு மத நல்­லி­ணக்­கம், சமூக நீதி, சகோ­த­ரத்­து­வத்­திற்கு எடுத்­துக்­காட்­டான ஒரு தொகு­தி­யில் இரண்­டா­வது முறை­யாக மக்­கள் பணி­யாற்­று­வ­தற்­காக வாய்ப்­புத் தந்த தொகுதி மக்­க­ளுக்­கும் என்­னு­டைய வணக்­கங்­களை நான் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். கூட்­ட­ணிக் கட்­சி­யி­னு­டைய தோழர்­க­ளுக்­கும், தேர்­தல் களத்­தில் என்­னோடு கள­மா­டிய மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக் கட்­சி­யி­னு­டைய தோழர் பெரு­மக்­க­ளுக்­கும் என்­னு­டைய நன்­றி­க­ளைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பொரு­ளா­தார மேம்­பா­டு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மீன­வர் வாழ்க்கை. மீன­வர் வாழ்க்கை என்­பது, எண்­ணிப் பார்க்க வேண்­டும். மீன­வர் வாழ்க்கை என்­பது வெறும் பொரு­ளா­தா­ரம் மட்­டு­மல்ல. அது கட­லோ­ரப் பகு­தி­க­ளில் இருக்­கக்­கூ­டிய மீனவ கிரா­மங்­க­ளு­டைய வாழ்­வா­தா­ரம், பொரு­ளா­தார மேம்­பாடு அனைத்­தும் உள்­ள­டக்­கிய ஒரு வாழ்­வி­ய­லாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கடந்த காலங்­க­ளில் நம்­மு­டைய தமிழ்­நாடு பாரம்­ப­ரிய மீன­வர்­கள் என்­ப­வர்­கள் இந்­து­மகா கட­லை­யும், தெற்கு ஆசி­யா­வை­யும் ஓர் ஏரி­போல் கட்டி ஆட்சி செய்­தி­ருக்­கி­றார்­கள். அத­னால்­தான் நம்­மு­டைய பேர­ர­சர்­கள் சேர, சோழ, பாண்­டிய மன்­னர்­கள் கடல் கடந்து பிற நாடு­க­ளைப் பிடிப்­ப­தற்கு நம்­மு­டைய பாரம்­ப­ரிய மீன­வர்­க­ளு­டைய வானிலை அறி­வும், நீரி­யல் அறி­வும் இருந்த கார­ணத்­தி­னால்­தான் அவர்­க­ளு­டைய பகு­தி­க­ளில் சென்று ஆட்சி செய்­வ­தற்கு ஏது­வாக இருந்­தி­ருக்­கி­றது. அப்­ப­டிப்­பட்ட நம்­மு­டைய பாரம்­ப­ரிய மீன­வர்­கள் 21 ஆம் நூற்­றாண்­டில் பல்­வேறு இன்­னல்­க­ளுக்கு ஆளாகி, எங்­க­ளு­டைய மீன­வர்­க­ளு­டைய வாழ்­வா­தா­ரம் என்­பது ஒரு கேள்­விக்­கு­றி­யான இடத்­தில் வந்­தி­ருக்­கி­றது. அதற்கு என்ன கார­ணம் என்­றால், இன்று ஏற்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய இயற்கை மாற்­றம். உல­கத்­தில் இருக்­கக்­கூ­டிய எந்த ஜீவ­ரா­சி­க­ளும் இயற்­கை­யோடு தன்னை இணைத்து வாழக்­கூ­டிய பாங்­கைப் பெற்­றி­ருப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆனால், அந்த மீன­வக்­குடி மட்­டும் இயற்­கையை எதிர்த்து தன்­னி­லையை நாட்­டிக்­கொள்­ளக்­கூ­டிய கடல், அலை, ஆழிப்­பே­ரலை, வெள்­ளம், மழை, காற்று போன்ற இயற்­கைச் சீற்­றங்­க­ளுக்கு தன்னை நிலை
­நி­றுத்­திக்­கொண்டு வாழக்­கூ­டிய மீன­வப் பெருங்­குடி மக்­கள் தற்­போது பல்­வேறு இன்­னல்­க­ளுக்கு ஆளா­கி­யி­ருக்­கின்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமி­ழ­கத்­தைப் பொறுத்­த­வ­ரை­யில், நாம் நீண்ட நெடிய கடற்­க­ரை­யைக் கொண்­டி­ருக்­கி­றோம். ஏறத்­தாழ 1,076 கி.மீ. பரப்­ப­ளவு கொண்ட கடற்­கரை என்­பது பெரிய கடற்­க­ரை­யா­கும். திரு­வள்­ளூர் மாவட்­டம் கூனங்­குப்­பத்­தி­லி­ருந்து கன்­னி­யா­கு­மரி நீரோடி வரை ஒரு நீண்ட பரப்­ப­ள­வு­டன் ஏறத்­தாழ 14 மாவட்­டங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக தமிழ்­நாட்­டின் நீரோடை ஆதா­ரம் இருக்­கி­றது. இவற்­றில், கடற்­க­ரையை நாம் 4 வகை­க­ளாக பிரித்­துக்­கொள்­ள­லாம். 1. சோழ­மண்­டல கடற்­கரை, சோழ­மண்­டல கடற்­கரை என்­பது கோடி­யக்­கரை முதல் மீன­வக்­குப்­பம் கூனங்­குப்­பம் வரை இருக்­கக்­கூ­டிய பகு­தி­யா­கும். பாக் ஜல­சந்தி என்­பது, கோடி­யக்­கரை முதல் பாம்­பன் தலை­மன்­னார் பகு­தி­யில் இருக்­கக்­கூ­டிய இலங்கை மன்­னார் தீவு வரை­யில் இருப்­ப­தா­கும்; இந்­தப் பகு­தி­யில் வாழக்­கூ­டிய மீன­வர்­கள் அதிக இன்­னல்­க­ளோடு வாழ­கின்­றார்­கள்; அதற்­க­டுத்­த­தாக பாக் ஜல­சந்­தி­யி­லி­ருந்து மன்­னார் தீவுப் பகுதி என்­பது, மன்­னார் வளை­கு­டா­வி­லி­ருந்து கன்­னி­யா­கு­மரி வரை இருக்­கக்­கூ­டிய பகு­தி­யா­கும்; இவ்­வா­றாக நாம் கடற்­க­ரைப் பகு­தி­யைப் பிரித்­துக்­கொள்­ள­லாம். கன்­னி­யா­கு­ம­ரி­யி­லி­ருந்து நீரோ­டிப் பகு­தியை மேற்கு மண்­ட­லக் கடற்­க­ரைப் பகு­தி­யென்று மீன­வக் கடற்­க­ரையை நான்­கா­கப் பிரித்து, அப்­ப­கு­தி­க­ளில் மீன்­பி­டித் தொழிலை செய்­து­வ­ரு­கி­றார்­கள். இந்த 4 பகு­தி­க­ளில், இந்­திய அள­வில் மீன் உற்­பத்­தி­யில் தமிழ்­நாடு, 5-வது இடத்­தில் இருக்­கி­றது. ஏறத்­தாழ 1.50 இலட்­சம் மெட்­ரிக் டன் மீன் உற்­பத்­தியை தமி­ழ­கம் செய்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மன்­னார் வளை­குடா பகுதி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதன் மூல­மாக, ரூ.6,958 கோடி தமிழ்­நாட்­டிற்கு வரு­வாய் ஈட்­டப்­ப­டு­கி­றது. இந்­தி­யா­வின் GDP-ல், 1 சத­வி­கி­தம் மீன் உற்­பத்­தி­யின் மூல­மாக, மதிப்­புக் கூட்­டுத் தொழி­லின் மூல­மாக தமி­ழ­கத்­திற்கு வரு­வாய் வரு­கி­றது. இவ்­வாறு இருக்­கக்­கூ­டிய மீன­வர்­க­ளுக்கு குறிப்­பாக, தமிழ்­நாட்­டின் ஏறத்­தாழ 20 சத­வி­கித மீன் உற்­பத்தி, இரா­ம­நா­த­பு­ரத்­தி­லி­ருந்­து­தான் கிடைக்­கி­றது. ஆனால், அந்த மீன­வர்­கள் மன்­னார் வளை­குடா பகு­தி­யில் இலங்­கைக் கடற்­க­ரை­யின் மூல­மாக கடந்த 10 ஆண்­டு­கா­ல­மாக பல்­வேறு இன்­னல்­க­ளுக்கு ஆளா­கி­யி­ருக்­கின்­ற­னர். 2018 ஆம் ஆண்­டில் இலங்­கை­யில் கடல்­க­டந்து மீன்­பி­டிக்க வரக்­கூ­டி­ய­வர்­க­ளின் உடைமை  களைக் கைய­கப்­ப­டுத்­து­வோம் என்று ஒரு சட்­டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அதன்­பின்­னர்­தான், மன்­னார்­தீ­வுப் பகு­தி­யில் வாழ்­கின்ற மீன­வர்­க­ளின் வாழ்­வா­தா­ரம் மிகப்­பெ­ரிய கேள்­விக்­கு­றி­யா­னது. அவர்­கள் எல்­லை­யைக் கடக்­கா­மல், நம்­மு­டைய எல்­லைப் பகு­தி­க­ளில் மீன்­பி­டிக்­கும்­போ­து­கூட, காற்­றின் வேகத்­தின் கார­ண­மாக, அவர்­கள் இழுத்­துச் செல்­லப்­பட்­டால், இலங்கை அரசு அவர்­க­ளைப் பிடித்து சிறை­வா­சம் செய்­வ­தோடு மட்­டு­மல்­லா­மல், அவர்­க­ளது உடை­மை­க­ளைக் கைய­கப்­ப­டுத்­திக்­கொள்­கி­றார்­கள். 2018 ஆம் ஆண்­டி­லி­ருந்து இந்த நிலை இருந்­த­போது, திரா­விட மாடல் முன்­னாள் முத­ல­மைச்­சர் அவர்­கள் ஆட்­சிப் பொறுப்­பேற்­ற­வு­டன், மீன­வர் சங்­கப் பிர­தி­நி­தி­களை, இரா­ம­நா­த­பு­ரம் தொகுதி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் என்­கி­ற­வ­கை­யில் நான் முன்­னாள் முத­ல­மைச்­சர் அவர்­களை சந்­திப்­ப­தற்கு அழைத்­து­வந்­தேன்.  அப்­போது அவர்­க­ளது பிர­தான கோரிக்­கை­யாக, ஏறத்­தாழ 2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரை சிறை­பி­டிக்­கப் 
­பட்­டி­ருக்­கக்­கூ­டிய அந்த விசைப்­ப­டகு மீன­வர்­க­ளுக்கு மானி­யம் அளிக்க வேண்­டு­மென்ற கோரிக்­கையை வைத்­தார்­கள்.  அதை முன்­னாள் முத­ல­மைச்­சர் அவர்­க­ளி­டத்­தில் அந்த கோரிக்­கையை வைத்­த­வு­டன், தாயு­மா­ன­வ­ராக தாயுள்­ளத்­தோடு, அந்த பிடி­பட்ட மீன­வர்­கள் அனை­வ­ருக்­கும் முதல் இழப்­பீ­டாக ரூ.5.00 இலட்­சம் வழங்­கி­னார்­கள். அதற்கு பின்­னர் 2021 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2023 ஆம் ஆண்­டு­வரை பிடி­பட்ட ஏறத்­தாழ 125 விசைப்­ப­ட­கு­க­ளுக்கு ரூ.6.00 இலட்­சம் வழங்­கி­னார்­கள். அதற்கு பின்­னர், 2024 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்­டு­வரை பிடி­பட்ட மீன­வர்­க­ ளுக்கு ரூ.8.00 இலட்­ச­மாக உயர்த்­திக் கொடுத்­தார்­கள். இது அந்த மீன்­பி­டித் தொழிலை வாழ்­வா­தா­ரத்தை மீண்­டும் மீட்டு உறுதி செய்­வ­தற்­கான ஒரு மகத்­தான திட்­டத்­தைத் தந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நான் இப்­போது இந்த அர­சி­டம் வலி­யு­றுத்­து­வது, நீங்­கள் அறி­வித்­தி­ருக்­கக்­கூ­டிய கொள்கை விளக்­கக் குறிப்­புப் புத்­த­கத்­தில் ஏறத்­தாழ 1,291 மீன­வர்­கள் கடந்த 5 ஆண்­டு­க­ளில் சிறை­பி­டிக்­கப்­பட்­டார்­கள்; அவர்­க­ளில் 1,253 மீன­வர்­கள் விடு­தலை செய்­யப்­பட்­டு­விட்­டார்­கள் என்று தெரி­வித்­தி­ருக்­கி­றீர்­கள். நீங்­கள் கொள்கை விளக்­கக் குறிப்­புப் புத்­த­கத்­தில் தெரி­வித்­தி­ருந்த அந்த குறிப்­பிற்கு சொந்­தக்­கா­ரர்,   முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் என்­பதை நீங்­கள் மறந்­து­வி­டக் கூடாது. (மேசை­யைத் தட்­டும் ஒலி) இதை ஏன் இந்த அவை­யில் நான் பதிவு செய்­கி­றேன் என்­றால், அவர் மீன­வப் பிர­தி­நி­தி­களை ஒவ்­வொரு நிதி­நிலை அறிக்­கைக்கு முன்­பா­க­வும் சந்­தித்து, அவர்­க­ளு­டன் கலந்­தா­லோ­சித்து, அவர்­க­ளது கோரிக்­கை­க­ளைக் கேட்டு, அதற்­கேற்ப திட்­டங்­க­ளைத் தந்­தார். அதற்­கொரு குழு அமைத்­தார்; அந்­தக் குழு­வில் முன்­னாள் முத­ல­மைச்­சர் அவர்­கள் தலைமை தாங்­கி­னார்­கள்;   நிதித் துறை அமைச்­சர் அவர்­கள் அக்­கு­ழு­வின் உறுப்­பி­ன­ராக இருந்­தார்­கள்; நிதித் துறை செய­லா­ள­ராக இருந்­தார்­கள்;  முன்­னாள் முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் தனிச் செய­லா­ளர்­கள், தொகுதி சட்­ட­மன்­றப் பேர­வை­யின் உறுப்­பி­னர் என்­கி­ற­வ­கை­யில் நானும், கடற்­க­ரை­யோர மாவட்­டங்­க­ளில் இருக்­கக்­கூ­டிய மீன­வப் பிர­தி­நிதி சங்­கங்­கள் அனை­வ­ரை­யும் வர­வ­ழைத்து, ஒரு கருத்­துக்­கேட்­பின் மூல­மாக பல்­வேறு திட்­டங்­க­ளைத் தந்­தார்­கள். அத­னால்­தான் இலங்­கை­யில் சிறை­பி­டிக்­கப்­பட்ட மீன­வர்­க­ளின் வாழ்­வா­தா­ரம் மீட்­டெ­டுக்­கப்­பட்­டது என்­பதை உங்­கள் கொள்கை விளக்­கக் குறிப்­பில் நான் இதை சுட்­டிக்­காட்ட கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கச்­சத்­தீவு பிரச்­சினை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சட்­டத் துறை அமைச்­சர் அவர்­கள், 2018 ஆம் ஆண்டு இலங்­கை­யில் நாட்­டு­ட­மை­யாக்­கப்­பட்ட பிற­கு­தான் மீன­வர்­க­ளுக்கு இன்­னல்­கள் ஏற்­பட்­டன. அங்கு ஒரு சட்­டம் இயற்­றி­னார்­கள். அதற்­குப்­பி­ற­கு­தான் அந்­தப் பிரச்­சினை வரு­கி­றது. ஐந்து ஆண்­டு­கா­லம் அந்த மீன­வர்­க­ளுக்கு எந்­த­வொரு நிவா­ர­ண­மும் கிடைக்­க­ வில்லை. எங்­க­ளு­டைய திரா­விட மாடல் முத­ல­மைச்­சர் அவர்­கள் வந்­த­வு­டன், நான் தான் அவர்­களை அழைத்து வந்து முதன்­மு­த­லில் ஏறத்­தாழ 150 நபர்­க­ளுக்­குக் கொடுத்­தார்­கள் என்­பதை நான் இந்த அவை­யில் பதிவு செய்­கி­றேன். மற்­றொன்று, கச்­சத் தீவு குறித்து நீங்­கள் சொன்­னீர்­கள். இந்த கச்­சத் தீவு இருக்­கி­ற­போது எங்­க­ளு­டைய இரா­ம­நா­த­பு­ரத்­தி­னு­டைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­த­வர் தேவர் தந்ததேவர் திரு. மூக்­கையா தேவர் அவர்­கள், இந்த கச்­சத் தீவை எதிர்த்­துத் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பில் பாரா­ளு­மன்­றத்­தில் பேசி­னார்; இது வர­லாறு. தய­வு­செய்து திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் கொடுத்­த­தாக நீங்­கள் பதிய வைக்க வேண்­டாம். இது பாரா­ளு­மன்­றத்­தில் முடி­வெ­டுக்­கப்­பட்­டது. ஒரு மாநில அர­சி­னு­டைய உரி­மை­க­ளுக்கு உட்­பட்­டுத்­தான் இது நடக்­கும். அதை­யும் இங்கே அவை­யிலே நான் பதிவு செய்ய விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இரண்­டா­வது, தற்­போது நீங்­கள் தெரி­வித்த திட்­டத்­தில்--­நாட்­டு­ட­மை­யாக்­கப்­பட்ட பிறகு இலங்­கை­யில் இருக்­கக்­கூ­டிய அர­சின் கார­ண­மாக மீன­வர்­க­ளுக்­கான பிரச்­சி­னையை நான் பதிவு செய்­தேன். இந்த 8 இலட்­சம் ரூபாய் என்­பது எங்­க­ளு­டைய தி.மு.க. ஆட்­சி­யில் கொடுக்­கப்­பட்­டதை நீங்­கள் அப்­ப­டியே கொடுத்­தி­ருக்­கி­றீர்­கள். அதை உயர்த்­திக் கொடுக்­க­வில்லை. அதைத் தய­வு­செய்து இங்கு அவை­யில் நீங்­கள் புரிந்­து­ கொள்­வீர்­கள் என்று நினைக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதற்கு அடுத்­த­ப­டி­யாக நம்­மு­டைய மண்­ட­பம் மாநாடு. இந்த மாநாட்­டைப் பற்­றிச் சொல்ல வேண்­டு­மென்­றால், இது­வரை எந்­த­வொரு முத­ல­மைச்­ச­ரும் செய்­தி­டாத அள­வில் தமிழ்­நாட்­டில் 14 மாவட்­டங்­க­ளைச் சார்ந்த 30 ஆயி­ரம் மீன­வர்­க­ளைத் திரட்டி, அந்த மீன­வர்­க­ளுக்கு ஏறத்­தாழ 2 இலட்­சத்து 77 ஆயி­ரத்து 347 குடும்­பங்­க­ளைச் சார்ந்த மீன­வர்­க­ளுக்கு 9,347 கோடி ரூபா­யில் பல்­வேறு திட்­டங்­களை வழங்­கி­னார்­கள். அதில்­தான் மீன்­பிடி தடைக்­கா­லத்­திற்­கான நிவா­ர­ணத்தை ரூ.5,000-லிருந்து ரூ.8,000 ஆக உயர்த்­தி­னார்­கள். டீசல் மானி­யத்தை ரூ.1,800-லிருந்து ரூ.1,900 ஆக உயர்த்­திக் கொடுத்­தார்­கள். நாட்­டுப் படகு மீன­வர்­க­ளுக்கு ரூ.4,000-லிருந்து ரூ.4,400 ஆக உரு­வாக்­கித் தந்­தார்­கள். மொத்­தம் 10 திட்­டங்­க­ளைக் கொண்­டு­வந்­தார்­கள். இது­மட்­டு­மல்­லா­மல், கடந்த 20 ஆண்­டு­கா­ல­மாக 60 வய­திற்கு மேற்­பட்ட மீன­வர்­கள் எந்­த­வொரு benefit-ம் அடை­யா­மல் இருந்­தார்­கள். அந்த 60 வய­திற்கு மேற்­பட்­ட­வர்­க­ளும் மீன்­பி­டிக்­கச் சென்­றால் அவர்­க­ளுக்கு இருக்­கக்­கூ­டிய அரசு சலு­கை­க­ளைப் பெற வேண்­டு­மென்று ஏறத்­தாழ 15,000 மீன­வர்­க­ளுக்கு மீன்­பிடி தடைக்­கால நிவா­ர­ணத்தை  முத­ல­மைச்­சர் அவர்­கள் அந்த மாநாட்­டின்­மூ­லம் 10 திட்­டங்­க­ளை­யும் கொண்­டு­வந்­தார். இதன்­மூ­லம் 14,000 மீன­வர்­கள் பய­ன­டைந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மீன­வர்­க­ளுக்­கான பட்டா!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தீவுப் பகு­தி­யில் ஏறத்­தாழ 5,000 மீன­வர்­கள் இது­வ­ரை­யில் பட்டா இல்­லா­மல் இருந்­தார்­கள். அந்த 5,000 மீன­வர்­க­ளுக்­கும் பட்­டாக்­களை வழங்­கக்­கூ­டிய மகத்­தான திட்­டங்­க­ளைச் செய்­தார். இப்­போ­தும் நான் நம்­மு­டைய  மீன்­வ­ளத் துறை அமைச்­சர் அவர்­க­ளி­டத்­திலே வலி­யு­றுத்­து­வது என்­ன­வென்­றால், தடைக்­கால நிவா­ர­ணத்­தைப் பற்றி நீங்­கள் கொள்கை விளக்­கக் குறிப்பு புத்­த­கத்­தில் ஒன்­றும் சொல்­ல­வில்லை. தடைக்­கா­லம் என்­பது ஏப்­ரல் மாதம் தொடங்கி ஏப்­ரல், மே, ஜூன் ஆகிய மாதங்­க­ளில் 61 நாட்­கள் மீன் 
­வ­ளத்­தைப் பாது­காத்­துக்­கொள்­வ­தற்­காக இந்­திய 
ஒன்­றிய அர­சும், நம்­மு­டைய தமி­ழக மீன்­வ­ளத் துறை­யும் சேர்ந்து, இயற்கை சூழல் அமை­தி­யாக இருக்­கக்­கூ­டிய காலத்­தில்­கூட அவர்­கள் மீன் பிடிக்­கச் செல்­லக் கூடாது என்று தடை விதித்­தி­ருக்­கி­றோம். அந்­தக் கால­கட்­டத்­தில் மீன­வர்­கள் அவர்­க­ளு­டைய வாழ்­வா­த­ரம் கேள்­விக்­கு­றி­யாக்­கப்­பட்டு, வீட்­டில் இருக்­கக்­கூ­டிய நிலை இருக்­கி­றது. அவர்­க­ளு­டைய எதிர்ப்­பார்ப்பு 14 மாவட்­டங்­க­ளில் இருக்­கக்­கூ­டிய மீன­வர்­க­ளு­டைய எதிர்­பார்ப்பு மீன்­பிடி தடைக்­கா­லத்­தில் ரூ.8,000-ஐ நீங்­கள் உயர்த்தி வழங்­கு­வீர்­கள் என்று எதிர்ப்­பார்த்­தார்­கள். அது இந்த நிதி­நிலை அறிக்­கை­யி­லும் இல்லை, நம்­மு­டைய கொள்கை விளக்­கக் குறிப்­புப் புத்­த­கத்­தி­லும் இல்லை என்­பதை நான் இந்த அவைக்கு முன்­பா­கச் சொல்­லக் கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மீன­வர்­க­ளுக்­கான தடைக்­கா­லம் போதாது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">குறைவு காலம் என்­பது வட­மேற்­குப் பரு­வ­கா­லத்­திலே ஏறத்­தாழ 30 நாட்­கள்­தான். அந்த குறைவு காலம், இயற்­கைச் சீற்­றம், ஆழிப்­பே­ரலை, மழை, வெள்­ளம் போன்ற காலங்­க­ளில் நம்­மு­டைய தமி­ழக அர­சும் வானிலை ஆய்வு மைய­மும் அறி­வு­றுத்­து­கின்­ற­போ­து­தான் மீன் பிடிக்­கச் செல்ல மாட்­டார்­கள். அந்த காலம் என்­பது 30 நாட்­க­ளுக்­குள்­ளாக தான் இருக்­கும். நீங்­கள் அந்த 30 நாட்­க­ளுக்கு 1,000 ரூபாய் ஒதுக்­கிக் கொடுத்­தி­ருக்­கி­றீர்­கள். அது மீன­வர்­க­ளுக்­குப் போதாது. அவர்­கள் எதிர்­பார்ப்­பது  தடைக்­கா­லத்­தில் தான் இன்­னும் பணம் வேண்­டு­மென்று கேட்­டி­ருக்­கி­றார்­கள். நம்­மு­டைய  தமிழ்­நாட்­டி­னு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் நாங்­கள் தடைக்­கா­லப் பணம் என்­பதை ரூ.20,000 ஆகத் தரு­வோம் என்று சொன்­னார். ஒரே நேரத்­தில் அனைத்­தை­யும் உயர்த்த முடி­யாது. அது எங்­க­ளுக்­கும் நன்கு தெரி­யும். ரூ.8,000 என்­பதை உயர்த்­தித் தரு­வ­தற்­கான பதிலை நீங்­கள் பதி­லு­ரை­யில் சொல்ல வேண்­டு­மென்று உங்­க­ளி­டத்­தில் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதற்­க­டுத்து, ஆழ்­க­டல் மீன்­பி­டிப்பு குறித்து நீங்­கள் சொல்­லி­யி­ருக்­கி­றீர்­கள். நம்­மு­டைய நிதி­நிலை அறிக்­கை­யில் 54-வது பக்­கத்­தில், நம்­மு­டைய நிதித் துறை­யி­னு­டைய அமைச்­சர் அவர்­கள் 12 கோடி ரூபாய் மீன்­வ­ளத்­திற்­காக, ஆழ்­க­டல் மீன்­பி­டிப்­பிற்­காக ஒதுக்­கி­யி­ருப்­ப­ தா­கச் சொல்­லப்­பட்­டி­ருக்­கி­றது. இந்­தத் திட்­டம் என்­பது அதே­தான்; நம்­மு­டைய கொள்கை விளக்­கக் குறிப்­புப் புத்­த­கத்­தில் 89 பட­கு­க­ளுக்கு நாங்­கள் வாங்­கி­விட்­டோம், 2 பட­கு­கள் கட்­டு­மா­னத்­தில் இருக்­கின்­றன. 12 கோடி ரூபாய்­தான் கொடுப்­போம் என்று நீங்­கள் அறி­வித்­தி­ருக்­கி­றீர்­கள், அதை­யும் தற்­போது பார்த்­தேன்; உங்­க­ளு­டைய அறி­விப்பு வந்­தி­ருக்­கி­றது. ஆனால், தமிழ்­நாட்­டில் விசைப்­ப­ட­கு­கள் என்­பது 4,400 இருக்­கின்­றன. நாட்­டுப் பட­கு­கள் 44,000 இருக்­கின்­றன. இயந்­தி­ரம் இல்­லாத பட­கு­கள் 4,000 இருக்­கின்­றன. இந்த 12 கோடி ரூபாய் என்­பது இந்த விசைப்­ப­ட­கு ­
க­ளுக்­குப் போது­மா­ன­தாக இல்லை. இன்­னொன்று, இந்த ஆழ்­க­டல் மீன்­பி­டிப்பு என்­பது நீலப் புரட்­சித் 
திட்­டத்­தின் மூல­மாக 2014 ஆம் ஆண்டு இந்­திய ஒன்­றிய அரசு அறி­வித்த திட்­டம். இந்­தத் திட்­டம் 2019 ஆம் ஆண்டு மக்­கள் பயன்­பாட்­டிற்கு வரு­கி­றது. இது 
வரு­கி­ற­போது நம்­மு­டைய பங்­க­ளிப்பு என்­பது ரூ.16 இலட்­சம், இந்­திய ஒன்­றிய அர­சி­னு­டைய பங்­க­ளிப்பு என்­பது ரூ.40 இலட்­சம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வங்­கி­யின்­மூ­லம் கடன் பெறக்­கூ­டி­யது ரூ.16 இலட்­சம், மீன­வர்­க­ளு­டைய பங்­க­ளிப்பு ரூ.8 இலட்­சம். ரூ.80 இலட்­சம் மதிப்­பீட்­டில் இந்த ஆழ்­க­டல் மீன்­பி­டிப்­புக்கு நீலப் புரட்­சித் திட்­டத்­தின்­மூ­லம் அறி­விக்­கப்­பட்­டது. ஆனால், இதில் ஏற்­கெ­னவே பயன்­பெற்ற 50 மீன­வர்­க­ளின் வாழ்­வா­தா­ரம் கேள்­விக்­கு­றி­யாகி உள்­ளது. எத­னால் என்­றால், இந்த ரூ.80 இலட்­சத்­தில் அவர்­க­ளு­டைய ஆழ்­க­டல் மீன்­பி­டிப்­புப் படகை, கட­லுக்­குச் செல்ல முடி­யாது. உப­க­ர­ணங்­கள் மற்­றும் வலை­கள் போன்­ற­வற்றை வாங்­கு­வ­தற்கு ரூ.50 இலட்­சம் தேவைப்­ப­டும். ஆகவே, ஒரு படகு மீன்­பி­டிக்­கச் செல்­வ­தற்கு ஒரு கோடியே 20 இலட்­சம் வேண்­டும். ஆனால், இந்த ரூ.80 இலட்­சம் என்­பது அவர்­க­ளுக்­குப் போது­மான நிதி­யாக இல்லை. ஆகவே, மாநில அரசு, எப்­படி இந்­திய ஒன்­றிய அரசு ரூ.40 இலட்­சம் பங்­க­ளிப்பு தரு­கி­றதோ, அது­போன்று உங்­க­ளு­டைய பங்­க­ளிப்­பை­யும் நீங்­கள் கூட்ட வேண்­டும். ஆனால், கூட்­டு­வ­தற்­கான எந்த ஒரு அறி­விப்­பும் இதில் இருப்­ப­தாக எனக்­குத் தெரி­ய­வில்லை. இது­மட்­டு­மல்­லா­மல், ஆழ்­க­டல் மீன்­பி­டிப்­புக்கு ரூ.12 கோடி என்­பது மிக மிக மிக மிகக் குறைவு என்­பதை நான் இந்த அவை­யில் பதிவு செய்ய கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன். குறைவு காலத்­திற்கு நீங்­கள் ரூ.1,000 ஒதுக்­கி­யி­ருக்­கி­றீர்­கள், தடைக் காலத்­திற்­கும் அவர்­க­ளுக்கு ஒதுக்க வேண்­டு­மென்­பது என்­னு­டைய வேண்­டு­கோள்; உங்­க­ளி­டத்­தில் நான் இதை வலி­யு­றுத்­தக் கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அது­மட்­டு­மல்­லா­மல், இதற்கு முன்பு ஆழ்­க­ட­லில் மீன்­பி­டித்த மீன­வர்­கள் 49 பேரும் வங்­கி­யி­னு­டைய பல்­வேறு பிரச்­சி­னை­க­ளால் தங்­க­ளது உட­மை­களை இழந்து நிற்­கின்­றார்­கள். அவர்­களை நம்­மு­டைய இந்த அர­சின் சார்­பில் மானி­யமோ அல்­லது வங்­கிக் கடனை பாது­காப்­ப­தற்கு ஒரு உறுதி செய்ய வேண்­டு­மென்று உங்­க­ளி­டத்­தில் நான் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தங்­கச்சி மடத்­தில் தூண்­டில் வளைவு –
மீன்­பி­டித் துறை­மு­கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இது­மட்­டு­மல்­லா­மல், மீன­வர் சார்ந்த சில­வற்றை நான் இந்த அவை­யில் பதிவு செய்ய வேண்­டு­மென்று நினைக்­கின்­றேன். இவை­யெல்­லாம் மன­தில்­கொண்­டு­தான் முத்­த­மிழ் அறி­ஞர் டாக்­டர் கலை­ஞர் வழி­யில் வந்த எங்­க­ளு­டைய திரா­விட மாடல் முத­ல­மைச்­சர் அவர்­கள், ராம­நா­த­பு­ரத்­தில் ஏறத்­தாழ 3 இலட்­சம் மீன­வர்­கள் வாழ்­கி­றார்­கள். தமிழ்­நாட்­டின் மீன் உற்­பத்­தி­யில் முதல் மாவட்­ட­மாக ராம­நா­த­பு­ரம் இருக்­கி­றது. ஏறத்­தாழ கடற்­க­ரை­யின் நீளம் மட்­டும் 247 கிலோ­மீட்­டர் இருக்­கி­றது. 189 கிரா­மங்­கள் இருக்­கின்­றன. இந்­தக் கிரா­மப்­பு­றங்­க­ளில் இருக்­கக்­கூ­டிய மீன­வர்­க­ளு­டைய வாழ்­வா­தா­ரத்தை உறுதி செய்­வ­தற்­கா­க­வும், இலங்­கைப் பிரச்­சி­னை­யி­லி­ருந்து மாற்­றுத் தொழி­லுக்கு அவர்­கள் செல்ல வேண்­டு­மென்­ப­தற்­கா­க­வும் விதி-110-ன்கீழ் ரூ.576 கோடி மதிப்­பீட்­டில் மகத்­தான மூன்று திட்­டங்­களை அறி­வித்­தார். தங்­கச்சி மடத்­தில் தூண்­டில் வளைவு மீன்­பி­டித் துறை­மு­கம், அதன்­மூ­ல­மாக அவர்­கள் மன்­னார் வளை­கு­டா­விற்­குச் செல்­லா­மல் அர­பிக் கடல் பக்­கம் தெற்­குப் பகு­தி­யில் செல்­வ­தற்­கான ஒரு மகத்­தான திட்­டம். குண்­டுக்­கல்­லில் ரூ.150 கோடி மதிப்­பீட்­டில் தூண்­டில் வளை­வோடு துறை­மு­கம் மற்­றும் பாம்­ப­னில் ஒரு தூண்­டில் வளைவு என இந்த 3 திட்­டங்­க­ளும், அந்த மீன­வர்­க­ளு­டைய, ஏறத்­தாழ இரண்டு இலட்­சம் மீன­வர்­க­ளு­டைய மீன்­பி­டித் தொழிலை மாற்­றுத் திசை­யில் செல்­வ­தற்­கான ஒரு மகத்­தான திட்­டத்தை விதி-110-ன்கீழ் அறி­வித்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அது­மட்­டு­மல்­லா­மல், இது­வரை எங்­க­ளு­டைய ராம­நா­த­பு­ரம் பகு­தி­யில் ‘நங்­கூ­ரம்’ என்ற ஒரு பெண் அமைப்பு இருக்­கி­றது. அந்த மக­ளிர் அமைப்பு என்­பது இயற்­கைச் சீற்­றத்­தால் உயி­ரி­ழந்த மீன­வர்­கள் மற்­றும் இலங்கை அர­சால் உயி­ரி­ழந்த மீன­வர்­க­ளு­டைய அனைத்து கைம்­பெண்­க­ளை­யும் உள்­ள­டக்­கிய கைம்­பெண் என்ற ஒரு தொண்டு நிறு­வ­ன­மாக மக­ளிர் குழுக்­கள்  முன்­னாள் முத­ல­மைச்­ச­ரைச் சந்­தித்து, எங்­க­ளு­டைய வாழ்­வா­தா­ரத்தை உறுதி செய்­வ­தற்கு நீங்­கள் திட்­டங்­க­ளைத் தீட்ட வேண்­டு­மென்று  முன்­னாள் முத­ல­மைச்­ச­ரி­டத்­தில் சொன்­னார்­கள். 2025 ஆம் ஆண்டு ஏறத்­தாழ ரூ.120 கோடி மதிப்­பீட்­டில் அந்த கைம்­பெண் மீன­வப் பெண்­க­ளுக்­காக பல்­வேறு தொழில்­களை எங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் தந்­தார். (மேசை­யைத் தட்­டும் ஒலி) பாசி வளர்ப்பு, தூண்­டில் மீன் வளர்ப்பு, நண்டு வளர்ப்பு, பயிற்­சி­யோடு தொழில் புரி­வது, பட­குக் கட்­டு­தல், வண்ண மீன்­கள் வளர்த்­தல், கரு­வாடு பதப்­ப­டுத்­து­தல், மீன் உற்­பத்தி, மீன் சார்ந்த கூட்­டுப் பொருட்­களை உரு­வாக்­கு­தல் போன்ற பல்­வேறு மீன­வச் சங்­கங்­களை உரு­வாக்­கு­வ­தற்­காக  முன்­னாள் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் அந்த நிதியை ஒதுக்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒதுக்­கி­யது மட்­டு­மல்­லா­மல், நம்­மு­டைய மீன்­வ­ளத் துறை, தொழி­லா­ளர் நலத் துறை, திறன் மேம்­பாட்­டுப் பயிற்­சி­யின் அலு­வ­லர் பெரு­மக்­கள் மற்­றும் மீன­வக் கூட்­டு­ற­வுச் சங்­கங்­கள் ஒருங்­கி­ணைந்து அவர்­கள் ஒரு திட்ட முன்­வ­டி­வ­மைப்­போடு கண்­கா­ணிப்­புப் பிரிவு வைக்­கப்­பட்டு, அந்­தக் கண்­கா­ணிப்­புப் பிரி­வின்­மூ­லம் அவர்­கள் பல்­வேறு பயிற்­சி­க­ளின்­மூ­ல­மாக தொழில் ஈட்­டி­ய­தன் கார­ணத்­தி­னால்­தான் நம்­மு­டைய பகு­தி­யில் மீன் உற்­பத்தி அதி­க­மாக இருந்­தது. திரா­விட மாடல் ஆட்­சி­யில் கொண்டு வந்த அந்­தத் திட்­டத்தை தயவு செய்து நீங்­கள் தொடர்ந்து நடத்த வேண்­டும். அதற்­கான நிதி ஆதா­ரத்தை இதில் நீங்­கள் அறி­விக்­க­வில்லை. கடற்­பாசி வளர்ப்பு என்று சொல்­லி­யி­ருக்­கி­றீர்­கள். ஆனால், கடற்­பாசி வளர்ப்பு மட்­டும் அந்த மீன­வப் பெண்­க­ளு­டைய வாழ்­வா­தா­ரத்தை உயர்த்­தி­வி­டாது. கூட்­டுப் பொரு­ளோடு தொழிற்­சா­லை­கள், வாசனை திர­வி­யங்­கள் போன்ற மீன் சார்ந்த மருத்­து­வப் பொருட்­கள் போன்­ற­வற்றை உள்­ள­டக்­கிய தொழிற்­சாலை அங்கு அமைந்­தால்­தான், மீன­வப் பெண்­க­ளு­டைய வளர்ச்சி இருக்­கும் என்­பதை உங்­க­ளி­டத்­தில் நான் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நம்­மு­டைய ராம­நா­த­பு­ரத்­திற்கு என்று பிர­தி­நி­தித்­து­வ­ மா­கப் பல்­வேறு அறி­விப்­பு­களை  முன்­னாள் முத­ல­மைச்­சர் அவர்­கள் தந்­தார். இவை­யெல்­லாம் மீன்­பி­டித் தடைக் காலத்­தி­லும், மீன்­பிடி குறைவு காலத்­தி­லும் அந்த மீன­வர்­கள் மாற்­றுத் தொழி­லுக்­குச் செல்லவேண்­டு­மென்­ப­தற்­காக.  இரா­ம­நாத சுவாமி கோவிலைபெருந்­திட்ட வளா­கத்­தின்­மூ­லம் சுற்­று­லாவை மேம்­ப­டுத்­து­வது, அது­மட்­டு­மல்­லா­மல் தனுஷ்­கோ­டி­யில் பற­வை­கள் சர­ணா­ல­யம் ஒன்று அமைத்­தார், பூ நாரை சர­ணா­ல­யம் என்று ஒன்றை அமைத்­தார். அந்­தச் சர­ணா­ல­யத்­தின் வர­லாறு என்­ன­வென்­றால், குளிர்ப் பிர­தே­ச­மான அட்­லாண்­டிக் கடல் பகு­தி­யி­லி­ருந்து வரக்­கூ­டிய மத்­திய ஆசி­யா­வி­லி­ருந்து வரக்­கூ­டிய பற­வை­கள் ஏறத்­தாழ 107 பறவை இனங்­கள் தனுஷ்­கோ­டி­யில் வந்து இறங்­கு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கடல் போக்குவரத்து!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பற­வை­கள், இனப்­பெ­ருக்­கத்­திற்­காக அந்­தப் பற­வை­கள் சர­ணா­ல­யத்­திற்கு, வரு­கிற கால­கட்­டங்­க­ளில், மீன­வர்­கள் backwater-ல் பட­கின் மூல­மாக சுற்­று­லாப் பய­ணி­களை ஏற்­றிச் சென்று அங்கு பார்க்க விடு­வ­தன் மூல­மாக, அவர்­கள் பொரு­ளீட்­டக்­கூ­டிய மகத்­தான திட்­டத்­தைத் தந்­தார். இன்று எங்­கள் இயக்­கத்­தி­னு­டைய கொற­டா­வாக இருக்­கக்­கூ­டிய சிறு­து­றை­மு­கங்­கள் துறை­யின் முன்­னாள் அமைச்­சர் அவர்­கள் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எங்­க­ளு­டைய இரா­ம­நா­த­பு­ரத்­திற்கு வரு­கை­தந்து, இரா­மேஸ்­வ­ரத்­தில் சிறு துறை­மு­கம் தொடர்­பான ஓர் ஆய்­வினை மேற்­கொண்­டார். 1914 ஆம் ஆண்டு இலங்­கைக்­கும், (மணி­ய­டிக்­கப்­பெற்­றது)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">1914 ஆம் ஆண்­டி­லி­ருந்து தனுஷ்­கோடி மற்­றும் இலங்கை இடையே கடல் போக்­கு­வ­ரத்து இருந்­தது. அதன்­மூ­ல­மாக பல்­வேறு பய­ணி­கள் மற்­றும் பண்­ட­மாற்று முறை­கள் மூல­மாக மீன­வர்­கள் பயன்­பெற்­றார்­கள். ஆனால், 1965-ல் தனுஷ்­கோ­டி­யில் ஏற்­பட்ட ஆழிப்­பே­ரலை கார­ண­மாக அந்­தப் போக்­கு­வ­ரத்து நிறுத்­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதற்­குப் பிறகு எங்­கள் இயக்­கத்­தி­னு­டைய இன்­றைய கொறடா அவர்­கள், கடந்த காலத்­தில் இரண்டு நாட்­கள் இரா­மேஸ்­வ­ரத்­தில் தங்கி, மீண்­டும் இரா­மேஸ்­வ­ரம்-­இ­லங்கை கப்­பல் போக்­கு­வ­ரத்து மூல­மாக நம்­மு­டைய மீன­வர்­கள், மீன்­பி­டித் தடைக்­கா­லத்­தி­லும், மீன்­பிடி குறை­வுக் காலத்­தி­லும், மாற்­றுத் தொழி­லுக்­குச் செல்­வ­தற்­கான ஒரு மகத்­தான திட்­டம் தீட்­டப்­பட்­டது. அந்­தத் திட்­டத்தை நீங்­கள் முன்­னெ­டுக்க வேண்­டு­மென்று நான் உங்­க­ளி­டம் கோரிக்கை வைத்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கால்­நடை பரா­ம­ரிப்பு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அது­மட்­டு­மல்­லா­மல், எங்­க­ளு­டைய இன்­றைய எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­கள், இந்­தி­யா­வில் இது­வரை இல்­லாத வகை­யில், ஒரு திட்­டத்­தைத் தந்­தார். விளை­யாட்­டுத் துறை­யின் மூல­மாக இரா­ம­நா­த­பு­ரத்­தில் சுமார் 50 கோடி ரூபா­யில் சர்­வ­தேச நீர்ச்­ச­றுக்கு மற்­றும் கடல்­சார் விளை­யாட்டு அகா­டமி (International Water Skiing Academy) அமைக்­கப்­பட்டு, கடல் சறுக்கு விளை­யாட்­டு­களை மீன­வர் பகு­தி­க­ளுக்கு தந்­தி­ருக்­கி­றார். மீன்­பி­டித் தொழிலை நம்­பி­யி­ருக்­கக்­கூ­டிய மீன­வர்­கள், அதன் மூல­மாக பயிற்சி பெறு­கின்ற கார­ணத்­தி­னால், 7 கடல் அலைச் சறுக்கு விளை­யாட்­டு­கள் மூல­மாக மீன­வர்­க­ளுக்­கான வாழ்­வா­தா­ரம் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இவற்­றை­யும் நீங்­கள் கவ­னத்­தில்­கொள்ள வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன். நம்­மு­டைய மீன­வர்­க­ளுக்­கான பல்­வேறு திட்­டங்­களை நான் இந்த இடத்­தில் சொல்­லி­யி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அடுத்து, கால்­ந­டைப் பரா­ம­ரிப்­புத் துறை பற்றி சில கருத்­து­களை பதிவு செய்ய வேண்­டு­மென்று நினைக்­கி­றேன். நம்­மு­டைய தமிழ்­நாட்­டில் 27 பாரம்­ப­ரிய மாட்­டி­னங்­கள் இருந்­தன. தற்­போது 6 மாட்­டி­னங்­கள்­தான் நம்­மி­டத்­தில் இருக்­கின்­றன. காங்­கே­யம், உம்­ப­ளச்­சேரி, புலிக்­கு­ளம், பர்­கூர், ஆலம்­பாடி, புங்­க­னூர் குட்டை ஆகிய 6 வகை­யான மாட்­டி­னங்­கள் மட்­டுமே தற்­போது இருக்­கின்­றன. இந்த மாட்­டி­னங்­கள் இருக்­கின்ற கார­ணத்­தால்­தான், தற்­போ­தும் நம்­மு­டைய மண் மலட்­டுத் தன்­மை­யில்­லா­மல் நுண்­ணு­யி­ரோடு இருக்­கி­றது. இந்த மாட்­டி­னங்­க­ளைக் காப்­ப­தற்கு ஒவ்­வொரு பகு­தி­க­ளி­லும் ஆராய்ச்சி நிலை­யங்­கள் இருக்­கின்­றன. ஆனால், நம்­மு­டைய டெல்டா பகு­தி­யில் இருக்­கக்­கூ­டிய உம்­ப­ளச்­சேரி மாட்­டி­னத்­திற்கு மட்­டும் ஆராய்ச்சி நிலை­யம் இல்லை. அந்த ஆராய்ச்சி நிலை­யத்தை நீங்­கள் உரு­வாக்க வேண்­டும். அது­மட்­டு­மல்­லா­மல், ஒவ்­வொரு மண்­ட­லத்­திற்­கு­மான ஒரு மாடு வகை இருக்­கி­றது. கொங்கு மண்­ட­லத்­தில் காங்­கே­யம், தென்­மா­வட்­டங்­க­ளில் புலிக்­கு­ளம். இந்த மாதி­ரி­யான மாட்­டி­னங்­களை நீங்­கள் காட்­சிப்­ப­டுத்தி, அதில் சிறந்த மாடு­க­ளுக்கு கால்­ந­டைத்   கால்­ந­டை­க­ளில், அடுத்து குதிரை. அந்­தி­யூர் என்ற இடத்­தில் இந்த ஆடி­மா­தம் மட்­டும் குதி­ரைக்­கான சந்தை உரு­வாக்­கப்­ப­டு­கி­றது. அதை தனி­யார்­தான் நடத்தி வரு­கி­றார்­கள். நம்­மு­டைய அரசு அதிலே கவ­னம் செலுத்த வேண்­டும். வட இந்­தி­யா­வி­லி­ருந்து இரா­ஜ­புத்­திர மன்­னர்­கள் வைத்­தி­ருந்த மார்­வாரி குதி­ரை­யும், குஜ­ராத்­தில் இருக்­கக்­கூ­டிய கத்­தி­ய­வாரி குதி­ரை­க­ளும் அங்கே கொண்டு வரப்­ப­டு­கின்­றன. இந்­தக் குதி­ரைச் சந்தை, திப்பு சுல்­தான் காலத்­தில் உரு­வாக்­கப்­பட்­டது. இதில் நம்­மு­டைய தமிழ்­நாட்­டி­னு­டைய பூர்­வீக நாட்­டின குதி­ரை­கள் அழிந்து வரு­கின்­றன. அந்த நாட்­டின குதி­ரை­க­ளைப் பேணிப் பாது­காப்­ப­தற்கு, அவற்­றிற்­கென ஆராய்ச்சி நிலை­யம் அமைக்க வேண்­டு­மென்று நான் உங்­க­ளி­டத்­தில் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அது­மட்­டு­மல்­லா­மல், நாய்­கள் இனத்தை எடுத்­துக்­கொண்­டால், கீழப்­பா­வூ­ரில் பாரம்­ப­ரிய நாய் இனங்­க­ளுக்கு ஆராய்ச்சி நிலை­யம் இருக்­கி­றது. அது, கன்னி, சிப்­பிப்­பாறை, ராஜ­பா­ளை­யம் போன்ற நாய்­க­ளுக்­கா­னது. ஆனால், நம்­மு­டைய தேசத்­தில், டெல்டா பகு­தி­யில் பிறந்த ஒரு நாய் இனம் அலங்கு. அந்த இனம் அழிந்து வரு­கி­றது. அதற்­கான கல்­வெட்டு, ஆதா­ரங்­கள் தஞ்சை பெரு­வு­டை­யார் கோயி­லில் இருக்­கி­றது. இந்த நாய் இனம் தற்­போது வட இந்­தி­யா­வில் பஞ்­சாப் போன்ற பகு­தி­க­ளில் இருக்­கி­றது. மனி­தர்­களை விலங்­கி­னத்­தி­ட­மி­ருந்து காப்­பாற்றி பாது­காப்­பாக வைத்­தி­ருக்­கக்­கூ­டிய பாரம்­ப­ரிய இனங்­க­ளில், இரண்டு இனங்­கள் அழிந்­து­விட்­டன. அதே­போன்று மேற்­குத் தொடர்ச்சி மலை­யின் அடி­வா­ரத்­தில், செங்­கோட்டை, தென்­காசி பகு­தி­க­ளில் செங்­கோட்டை என்ற நாய் இனம் அழிந்­தி­ருக்­கி­றது. எனவே, ஆராய்ச்­சி­யின் மூல­மாக மீண்­டும் அந்த நாய் இனங்­களை பாது­காக்க வேண்­டு­மென்று உங்­க­ளி­டத்­தில் நான் கேட்­டுக்­கொள்­கி­றேன்.   என்று கூறி விடைபெறுகிறேன்.   (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு காதர்­பாட்சா முத்­து­ரா­ம­லிங்­கம் 
பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>