<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,468,724,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Sep 10 2026 03:38:33 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260910T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="10092026-CHN-05" position.sequence="05" ex-ref="10092026-CHN-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="19">தமிழ்நாடு முதலமைச்சரின் சட்டமன்ற உரை!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="36">சட்டமன்றத்தின் மரபுக்கும், மாண்புக்கும் ஏற்றதல்ல! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="19">திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="veeramanbw_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Theerargal19_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சென்னை, செப்.10–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி விடுத்­துள்ள அறிக்கை வரு­மாறு:-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தமிழ்­நாடு சட்­டப் பேர­வை­யின் பட்­ஜெட் கூட்­டத் தொட­ரில், காவல்­துறை மானி­யக் கோரிக்கை மீதான விவா­தங்­க­ளுக்­குப் பதில் அளித்­துப் பேச மூன்று நாள் அவ­கா­சம் எடுத்­துக் கொண்ட முத­ல­மைச்­சர் ச.ஜோசப் விஜய் அவர்­கள், கடந்த திங்­கள் (7.9.2026) அன்று தனது பதி­லு­ரை­யின்­போது, எதிர்க்­கட்­சி­கள் கேட்­டி­ருந்த எந்­தக் கேள்­விக்­கும் பதில் அளிக்­கா­மல், கடந்த 120 நாட்­க­ளா­கத் தமது தலை­மை­யில் நடந்து வந்த ஆட்­சி­யின் போது நடை­பெற்ற சட்­டம் ஒழுங்­குப் பிரச்­சி­னை­கள் குறித்­துப் பல கட்­சி­கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு எது­வும் தெரி­விக்­கா­தது பெருத்த ஏமாற்­றம் அளிக்­கும் ஒன்று என்­ப­தோடு, பேச­வேண்­டி­ய­வற்றை விடுத்து, அவர் பேசிய மற்­றவை எல்­லாம், தமிழ்­நாட்­டின் வர­லாற்­றை­யும், அர­சி­யல் நிகழ்­வு­கள் அறிந்த எவ­ரா­லும் முற்­றி­லும் ஏற்­கவே முடி­யா­த­வை­யா­கும்.  முத­ல­மைச்­ச­ரின் உரை­யும், அதில் அவர் வெளிப்­ப­டுத்­திய பாவ­னை­க­ளும், சட்­ட­மன்­றத்­தின் மர­புக்­கும், மாண்­புக்­கும் உரி­யவை அல்ல!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அந்த அவை­யில் இடம்­பெற்­றி­ருப்­போர் எக் கட்­சி­யி­ன­ரா­யி­னும், அவர்­கள் மக்­கள் பிர­தி­நி­தி­கள் என்ற அடிப்­ப­டை­யில், அவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் மதிப்­பும், மரி­யா­தை­யும் அம் மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வ­தா­கும். அதே போலவே, அவை­யில் பேசப்­ப­டா­தவை குறித்­தும், அவ­சி­ய­மற்­றும், அவைக்­குள் பேசு­வ­தும், அவை­யில் இல்­லா­தோர் குறித்­துப் பேசு­வ­தும், பண்­பற்ற சொற்­க­ளை­யும், பாவ­னை­க­ளை­யும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வது எல்­லாம் பொது­வா­கவே தவிர்க்­கப்­பட வேண்­டி­யவை ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9">எந்­தக் கேள்­வி­க­ளுக்­கும் பதில் அளிக்­க­வில்லை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இந்த சட்­ட­மன்­றக் கூட்­டத் தொட­ரில் ஒவ்­வொரு நாளும் நடை­பெற்­றவை ஆரோக்­கி­ய­மான விவா­தங்­கள் அல்ல என்­பதே பொது­வா­ன­வர்­க­ளின் கருத்­தா­கும். எதிர்க்­கட்­சி­க­ளின் கேள்­வி­க­ளுக்­குப் பதில் சொல்ல வேண்­டிய முத­ல­மைச்­ச­ரும், அமைச்­சர்­க­ளும் எந்த நேரத்­தி­லும் ஆக்­கப் பூர்­வ­மான விவா­தத்­தில் பங்­கேற்­க­வில்லை என்­பது வருந்­தத்­தக்­க­தா­கும். முத­ல­மைச்­சர் பெரும்­பா­லும் எந்­தக் கேள்­வி­க­ளுக்­கும் பதில் அளிக்­க­வில்லை என்­ப­து­டன், அவ­சி­ய­மற்று அமைச்­சர்­கள் பிரச்­சி­னை­க­ளைத் திசை­தி­ருப்­பிய போதெல்­லாம் அதை அனு­ம­தித்­தது, மறை­மு­க­மாக அதனை வர­வேற்­றது, ஊக்­கப்­ப­டுத்­தி­யது போன்­றதே ஆகும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9">அது உரிமை மீறல் ஆகும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சட்­ட­மன்ற நிகழ்­வு­கள் நேர­லை­யில் ஒளி­ப­ரப்­பா­கின்­றன என்­ப­தால், இன்­றைய ஊடக உல­கிற்­கேற்ப, குறுங்­கா­ணொ­லி­களை உரு­வாக்­கு­வதை மன­தில் கொண்டே, தவ­றான வர­லா­று­க­ளை­யும், தக­வல்­க­ளை­யும் இளை­ஞர்­கள் மன­தில் பதிய வைக்­கும் வகை­யில் ஆளுங்­கட்­சி­யி­ன­ரின் பேச்­சு­கள் அமை­கின்­ற­னவோ என்று சந்­தே­கம் தீவி­ர­மாக எழு­கி­றது. அவற்­றில் அவைக் குறிப்­பில் இருந்து நீக்­கப்­ப­டு­ப­வை­யும் சேர்த்­து­தான் சமூக ஊட­கங்­க­ளில் திட்­ட­மிட்­டுப் பரப்­பப்­ப­டு­கின்­றன என்­னும் போது, அந்­தச் சந்­தே­கம் மேலும் உறு­திப்­ப­டு­கி­றதே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஆனால், முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் உரை இவற்­றுக்­கெல்­லாம் உச்­ச­மாக அமைந்­தது என்­பது, தமிழ்­நாட்­டுச் சட்­ட­மன்­றத்­தின் நிலையை நினைத்து நம்­மைப் போன்­ற­வர்­க­ளைக் கவ­லை­யை­யும், வேத­னை­யை­யும் கொள்­ளச் செய்­கி­றது. விசா­ரணை என்­பது நீதி­மன்­றத்­தில் நடை­பெற வேண்­டி­யது (Trial by Judiciary); ஊட­கங்­க­ளில் (Trial by media) அல்ல! அது சரி­யான முறை­யும் அல்ல!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அதி­லும் குறிப்­பாக, ‘மிசா’ காலத்­துக் கொடு­மை­க­ளைக் குறித்­துப் பேசி­ய­தும், அதற்கு முத­ல­மைச்­சர் காட்­டிய உடல்­மொ­ழி­யும் எவ­ரா­லும் ஒரு­போ­தும் ஏற்­கப்­ப­டவே முடி­யா­தவை ஆகும். (அதற்கு உள்­நோக்­க­மில்லை என்று வெளி­யில் வந்து சமூக ஊட­கத்­தில் எழு­தி­னா­லும், நேர­லை­யில் பார்த்­த­வர்­க­ளுக்கு உண்மை புரி­யும்.)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஜன­நா­ய­க­மும், அடிப்­படை உரி­மை­க­ளும் பறிக்­கப்­பட்டு, தமிழ்­நாட்­டில் இருந்த ஜன­நா­யக ரீதி­யி­லான ஆட்­சி­யைக் கலைத்­து­விட்டு, உயர்­ஜாதி அதி­கா­ரி­கள் நடத்­திய காட்­டாட்­சிக் காலம் அது! எட்­டுக்கு எட்டு இருட்­டுக் கொட்­ட­டி­யில் அடைக்­கப்­பட்டு, எதற்­குக் கைது செய்­யப்­பட்­டோம் என்று தெரி­யாது, விசா­ரணை  என்ற ஒன்றே கிடை­யாது; சிறைக்­க­த­வு­கள் திறக்­குமா, விடு­தலை ஆவ­தற்கு வாய்ப்­புண்டா? உயி­ரு­டன் திரும்­பு­வோமா? என்­றெல்­லாம் எது­வும் அறி­ய­மு­டி­யாத கொடுமை மிகுந்த அந்த நாட்­க­ளில், அத­னி­னும் கொடு­மை­யாக நடந்­தது சிறைத் தாக்­கு­தல்­கள்; மனித உரிமை மீறல்­கள்; சிறை அதி­கா­ரி­க­ளின் அரு­வ­ருப்­பான நடத்­தை­கள், ஆபாச வச­வு­கள்  இவற்­றை­யெல்­லாம் அனு­ப­வித்­த­வர்­கள் நாங்­கள்! (ஆதா­ரம்: ஜஸ்­டிஸ் இஸ்­மா­யில் கமி­ஷன் அறிக்கை).</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">முத­ல­மைச்­ச­ராக இருந்­த­வ­ரின் மகன் என்ற ஒற்­றைக் கார­ணத்­துக்­கா­கச் சிறை­யில் அடைக்­கப்­பட்ட இளை­ஞர் மு.க.ஸ்டாலி­னைத் தாக்­கிச் சிறை­யில் தள்­ளி­ய­போது தாங்­கிப் பிடித்த கரங்­கள் என்­னு­டை­யவை! அவர் மீது நடத்­தப்­பட்ட கொடுந் தாக்­கு­த­லைத் தாங்கி, தன்­னையே பலி கொடுத்­த­வர் முன்­னாள் மேயர் சிட்­டி­பாபு மற்­றும் சாத்­தூர் பால­கி­ருஷ்­ணன் ஆகி­யோர் ஆவர். அன்­றைக்­குப் பட்ட காயங்­கள் 50 ஆண்­டு­கள் கழித்து, இன்­றைக்­கும் எத்­தனை உடல் வேத­னை­யைத் தரு­கின்­றன என்­பதை எங்­க­ளைப் போன்­ற­வர்­கள் அறி­வோம்; அனு­ப­விக்­கி­றோம். நீதி­ய­ர­சர் மு.மு.இஸ்­மா­யில் ஆணை­யத்­தின் அறிக்­கை­யில் விரி­வாக எல்­லாம் பதி­வா­கி­யி­ருக்­கின்­றன. எமது வாழ்க்­கைக் குறிப்­பு­கள் உள்­பட ஏரா­ள­மான ஆவ­ணங்­கள் இருக்­கின்­றன. ஆனால், இவற்­றை­யெல்­லாம் வெகு சாதா­ர­ண­மாக ஆக்­கு­வது போல, அவ­சர நிலைக் கால­கட்­டத்தை இயல்­பாக்­கு­வது (Normalise) போல அமைந்த முத­ல­மைச்­ச­ரின் உரை நியா­ய­மா­னதா? பாசி­சம் என்ற ஆள்­தூக்கி அர­சி­ய­லைக் குறித்­துப் பேசு­வதை, ‘பாசி­சமா? பாய­சமா?’ என்று மலி­னப்­ப­டுத்த முயன்­ற­தைப் போன்ற அறி­யா­மையா? ஆண­வமா? என்றே விவ­ரம் தெரிந்­த­வர்­கள் வினா எழுப்­பு­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9">‘சர்க்­கா­ரியா கமி­ஷன்’ விசா­ரணை அறிக்கை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஆளும் வர்க்­கத்­தின் ஆள்­தூக்­கிச் சட்­டத்­திற்கு, ஜன­நா­ய­கப் படு­கொ­லைக்கு அடங்க மறுத்­த­தன் கார­ண­மா­கத் தானே கலை­ஞர் ஆட்சி கலைக்­கப்­பட்­டது? அதன் தொடர்ச்­சி­யாக அவரை மிரட்­டு­வ­தற்­குத் தானே ‘சர்க்­கா­ரியா கமி­ஷன்’ என்று கொண்டு வந்­தார்­கள். கலை­ஞ­ரின் ஆட்­சி­யைப்­பற்றி ஆளு­ந­ரி­டம் புகார் கொடுத்து, அந்­தக் கமி­ஷன் அமைக்­கக் கார­ண­மா­ன­வ­ரான எம்.ஜி.ஆர். அவர்­களே, தன்­னி­டம் எந்த ஆதா­ர­மும் இல்லை என்று  பிறகு கைவி­ரித்­து­வி­ட­வில்­லையா? அந்த ஆணை­யத்­தின் இறுதி விசா­ரணை அறிக்­கை­யின் மீது எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்கை என்ன? அது நீதி­மன்­றத்­தில் வழக்­காக ஆனதா? தீர்ப்பு வழங்­கப்­பட்­டதா? விவ­ரமே தெரி­யா­மல் ஒரு முத­ல­மைச்­சர் தகு­தி­யில் உள்­ள­வர், அது­வும் அவை­யுள் பேச­லாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">குற்­றம் சாட்­டப்­ப­டு­வ­தா­லேயே ஒரு­வர் ‘‘குற்­ற­வாளி ஆகி­வி­டு­வாரா?’’ கலை­ஞர் மீதோ, திமுக அமைச்­ச­ர­வை­யில் இருந்­த­வர்­கள் மீதோ குற்­றச்­சாட்­டு­கள் நிரூ­பிக்­கப்­பட்டு, தண்­டனை பெற்­றி­ருக்­கி­றார்­களா? தீர்ப்பு நீதி­மன்­றம் கூறி­யுள்­ளதா? அந்த மானி­யக் கோரிக்கை பதி­லுக்­கும், முர­சொலி மாற­னுக்­கும் என்ன சம்­பந்­தம்? மறைந்­த­வர்­கள் குறித்­தும், அவை­யில் இல்­லா­த­வர்­கள் மீதும், பதில் சொல்ல வாய்ப்பு இல்­லா­த­வர்­கள் மீதும், குற்­றச்­சாட்­டு­களை அடுக்­கு­வ­தற்­கான அவையா அது? அதற்­கான நேரமா - காவல்­துறை மானி­யக் கோரிக்­கைக்­கான பதி­லுரை?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9">உரக்­கப் பேச வேண்­டிய</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9">அவ­சி­யம் என்ன?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">‘‘கடந்த நான்கு மாத­மாக நடை­பெற்று வரும், முழு­மை­யான மெஜா­ரிட்டி இல்­லாத (த.வெ.க.) ஒரு ஆட்­சிக் காலத்­தில், எத்­தனை எத்­த­னைக் கொலை­கள், எத்­தனை பாலி­யல் வன்­கொ­டு­மை­கள், எத்­தனை ஆண­வப் படு­கொ­லை­கள்? தலை­ந­கர் சென்­னை­யி­லேயே கடந்த வாரத்­தில் ஆளுங்­கட்­சிப் பிர­மு­கரே கண்­டம் துண்­ட­மாக வெட்­டிப் படு­கொலை செய்­யப்­பட்­டாரே! கோவை­யில் தொடர் கொலை­கள் அரங்­கேறி வரு­கின்­ற­னவே! மக­ளி­ருக்­குப் பாது­காப்­பில்லை என்று ஆளுங்­கட்சி மக­ளிரே குற்­றம் சாட்­டு­கி­றார்­களே! சட்­டம் ஒழுங்கு சீர்­கெட்­டுக் கிடக்­கி­றதே!’’ என்று எதிர்க்­கட்­சித் தலை­வர் கேள்வி எழுப்­பி­னால், அது குறித்து உரிய பதில்­களை முன்­வைக்­கா­மல், திரைப்­ப­டக் காட்சி வச­னம் போல, உச்­சக் குர­லில் உரக்­கப் பேச வேண்­டிய அவ­சி­யம் என்ன? திசை திருப்­பு­வது அல்­லா­மல் அதற்கு வேறு நோக்­கம் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஆட்சி அமைத்­த­தற்கு ஆத­ரவு அளித்­து­வ­ரும் கூட்­டணி கட்­சி­களே கூட,  இந்த அர­சின் இத்­த­கைய செயல்­பா­டு­களை, முத­ல­மைச்­ச­ரின் உரை­யைக் கண்­டிக்­கி­றார்­களே, புரிந்­து­கொண்டு திருத்­திக் கொள்ள வேண்­டாமா? இது முதல் முறை அல்­லவே! கடந்த ஜூன் 23 அன்று ஆளு­நர் உரைக்கு நன்றி தெரி­விக்­கும் தீர்­மா­னத்­தின் மீதான உரை­யி­லும், இதே போல முத­ல­மைச்­சர் நடந்து கொண்­ட­தை­யும் எல்­லோ­ரும் கண்­டிக்­க­வில்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இது­வரை, பல சம­யங்­க­ளில் அவைத் தலை­வ­ரின் நட­வ­டிக்­கை­கள் சரி­யா­னவை போல தோற்­ற­ம­ளித்­தது கூட, உண்­மை­யா­ன­தல்­லவோ என்ற சந்­தே­கம் எழுப்­பும் வகை­யில் தானே கடந்த சில நாட்­க­ளாக அவ­ரது போக்கு அமைந்­துள்­ளது ஏமாற்­ற­மா­கும். எதிர்க்­கட்­சித் தலை­வ­ரைப் பேச அனு­ம­தித்­து­விட்டு, அடுத்த சில நொடி­க­ளில் மாற்­றிக் கொண்­ட­தெல்­லாம் எத­னால்? யாரால்? அழுத்­தமா? என்ற கேள்­விக்கு இடந்­த­ர­லாமா? அவர் பொது மனி­தர் ஆகி­வி­ட­வில்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9">நட­வ­டிக்கை எடுக்­கா­மல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9">இருப்­பது ஏன்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">யார் மீது தவறு என்­றா­லும் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­குத் தானே அரசு அதி­கா­ரம் இருக்­கி­றது. அதை விடுத்து, வெறு­மனே மிரட்­டு­வ­தால் என்ன பயன்? தவறு என்று தெரிந்­தால் நட­வ­டிக்கை எடுக்­கா­மல் இருப்­பது ஏன்? மேசை­யில் கோப்பு இருக்­கி­றது என்று பூச்­சாண்டி காட்­டு­வதா? சட்­டம் தன் கட­மை­யைச் செய்­யட்­டும் – நீதி­மன்­ற­மும், மக்­கள் மன்­ற­மும் ‘மாண்­பமை தீர்ப்பு’ கூறட்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இது தனிப்­பட்ட ஒரு­வ­ரின் பேச்சு அல்ல; முத­ல­மைச்­ச­ரின் பேச்சு, அது­வும் தமிழ்­நாடு எப்­படி அமைய வேண்­டும் என்­பதே நமது அக்­கறை. அந்­தப் பத­விக்­கென்று உள்ள கவு­ர­வ­மும், மாண்­பும் குலை­யக் கூடாது, தமிழ்­நாட்­டுக்­கென்று உள்ள ஜன­நா­ய­கப் பெருமை நிலைக்க வேண்­டும் என்­பதே பொது­வாழ்­வில் நெடுங்­கா­லத்­தைக் கடந்­தும் இன்­றைக்­கும் தமிழ்ச் சமு­தா­யத்­துக்­கா­கக் களத்­தில் நிற்­கும் எம்­மைப் போன்­ற­வர்­க­ளின் கவ­லை­யா­கும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இதுவே கடை­சி­யாக இருக்­கட்­டும் என்­பது பொது ஒழுக்­க­மும், மர­பும், மாண்­பும் காப்­பாற்­றப்­பட வேண்­டும் என்ற பொறுப்­பு­ணர்ச்­சி­யின் வெளிப்­பாடே என்­ப­தா­லேயே நாமும் சுட்­டிக்­காட்­டு­கி­றோம்! நியா­ய­மாக அவை­யில் வருத்­தம் தெரி­விக்­க­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இவ்­வாறு அவர் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>