<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Sep 09 2026 22:22:00 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260910T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="10092026-MDU-09" position.sequence="09" ex-ref="10092026-MDU-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">மதுரை</lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">10.09.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">த.வெ.க. அரசின் நிதி நிலை அறிக்கையில்</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="30"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="70">100 ஆண்டுகள் ஆனாலும் நிறைவேற்ற முடியாத – சாத்தியமில்லாத அறிவிப்புகள்தான் உள்ளன! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="34">சட்டப்பேரவையில் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் - கடையநல்லூர் தி.மு.இராஜேந்திரன் பேச்சு!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup743934_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup855726_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="tmurajendran_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சென்னை, செப்.10–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சட்­டப்­பே­ர­வை­யில் நிதி­நிலை அறிக்கை மீதான விவா­தத்­தில் கலந்து கொண்டு பேசிய கடை­ய­நல்­லூர் தொகுதி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் தி.மு. ராஜேந்­தி­ரன், “த. வெ.க. அர­சின் நிதி நிலை அறிக்­கை­யில், 100 ஆண்­டு­கள் ஆனா­லும் நிறை­வேற்ற முடி­யாத – சாத்­தி­ய­மில்­லாத அறி­விப்­பு­கள்­தான் இடம் பெற்­றுள்­ளன !” என்று  அடுக்­க­டுக்­கான ஆதா­ரங்­க­ளு­டன் குறிப்­பிட்­டார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்­டப்­பே­ர­வை­யில் அவர் பேசி­ய­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2026–2027 ஆம் ஆண்­டுக்­கான திருத்­திய நிதி­நிலை அறிக்­கை­யின்­மீது உரை­யாற்­று­வ­தற்­கான வாய்ப்­பினை வழங்­கிய தங்­க­ளுக்­கும், நான் சார்ந்­தி­ருக்­கின்ற திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்­கும் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">900 ஆண்­டு­கள் பழமை வாய்ந்த கட­கா­லீஸ்­வ­ரர் ஆல­யம் அமை­யப்­பெற்­ற­தால் கடை­ய­நல்­லூர் எனப் பெயர் பெற்று விளங்­கு­கின்ற எனது தொகு­தி­யின் தலை­ந­கர் ஒருங்­கி­ணைந்த திரு­நெல்­வேலி மாவட்­டத்­தின் மிகப்­பெ­ரிய பள்­ளி­வா­சல் அமை­யப்­பெற்­றி­ருக்­கின்ற பெரு­மை­யைப் பெற்­ற­தன்­மூ­லம் சமய ஒற்­று­மைக்­குச் சான்­றாக விளங்­கு­கின்ற எனது கடை­ய­நல்­லூர் தொகு­தி­யில் ஓர் உறுப்­பி­ன­ராக நின்று, வர­லாற்­றுப் பெரு­மைக்­கு­ரிய இந்த மன்­றத்­தில் பேசு­வ­தற்­கான வாய்ப்­பினை வழங்­கி­யி­ருக்­கின்ற அன்­பின் வடி­வங்­க­ளான கடை­ய­நல்­லூர் தொகுதி வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளுக்கு என் இத­யப்­பூர்­வ­மான நன்­றி­யி­னைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">“ஈன்­றாள் பசி­காண்­பான் ஆயி­னுஞ் 
		செய்­யற்க</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சான்­றோர் பழிக்­கும் வினை.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்­கி­றார் வள்­ளு­வர். பெற்ற தாய் பசி­யோடு இருக்க நேர்ந்­தா­லும் பர­வா­யில்லை.  சான்­றோர்­க­ளின் பழியை ஏற்­கும் நிலையை ஏற்­ப­டுத்தி விடாதே என்­பது பொது­வாழ்­வில் இருக்­கின்ற நம் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் வள்­ளு­வர் வகுத்­துத் தந்­தி­ருக்­கின்ற நீதி­யா­கும்.  அர­சி­யல் ஞானம் கொண்ட, நாள்­தோ­றும் பத்­தி­ரிகை படிக்­கின்ற, தொலைக்­காட்சி செய்­தி­க­ளைக் காண்­கின்ற, வயது முதிர்ந்த எனது தாயார், இந்த உரை­யைத் தன் கிரா­மத்­தி­லி­ருந்து ஒரு­வேளை கேட்­டுக் கொண்­டி­ருக்க முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">42 ஆண்­டு­கா­ல­மாக பாலை­வ­னப் பய­ணம் போன்ற பொது­வாழ்வை இன்­மு­கத்­தோடு ஏற்­றுக்­கொண்ட எனக்கு, பொது­வாழ்­வில் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ருக்கு மேலான வாய்ப்­பு­கள்­கூட ஒரு­வேளை வழங்­கப்­ப­டக்­கூ­டும்; கிடைக்­கக் கூ­டும்.  அது பெரி­யதா அல்­லது பெற்ற தாயே உண­வின்றி பட்­டினி கிடந்­தா­லும், சான்­றோ­ரான வாக்­கா­ளர்­கள் பழிக்­கின்ற செய­லுக்கு ஆளாகி விடாதே என்று வள்­ளு­வர் சொல்­லு­கி­றாரே அது பெரி­யதா என்று பார்த்­தால் (மேசை­யைத் தட்­டும் ஒலி) வள்­ளு­வர் பக்­கம் நிற்­ப­தற்கு முடி­வெ­டுப்­ப­து­தான் சரி­யென்று கருதி, அந்த முடிவை மேற்­கொண்டு, எனது தொகு­திக்­குப் பய­ணப்­பட்­டேன். எனக்கு வாக்­க­ளித்த 80 ஆயி­ரம் வாக்­கா­ளர்­கள் மாத்­தி­ரம் அல்ல, எனக்கு வாக்­க­ளிக்­கத் தவ­றிய பல ஆயி­ரக்­க­ணக்­கான வாக்­கா­ளர்­கள் சிறந்த முடிவை மேற்­கொண்­டீர்­கள் என்று என்னை வாழ்த்­தி­னார்­கள். எனது whatsapp–க்கு வந்­தி­ருக்­கின்ற 500–க்கும் மேற்­பட்ட குறுஞ்­செய்­தி­க­ளில் உங்­க­ளுக்கு வாக்­க­ளிக்­கத் தவ­றி­விட்­டோம். ஆனால், இப்­ப­டிப்­பட்ட சட்­ட­மன்ற உறுப்­பி­னரை நாங்­கள் பெற்­ற­தற்­காக பெரு­மை­ப­டு­கி­றோம் என்று (மேசை­யைத் தட்­டும் ஒலி) அந்த whatsapp குறுஞ்­செய்­தி­யில் பலர் குறிப்­பிட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தனி­யாக நின்று, தவிக்­கின்ற நிலை ஏற்­பட்­ட­போது, எந்த இயக்­கத்­தில் எனது 20 வய­தில் பாளை­யங்­கோட்டை சிறை­யில் அடைக்­கப்­பட்ட பெரு­மை­யைப் பெற்று சிறந்­தேனோ, அந்­தப் பெரு­மைக்­கு­ரிய திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சீர்­மிகு தலை­வர், வெகு­ஜன மக்­கள் போற்­று­கின்ற எண்­ணற்­றத் திட்­டங்­களை, வெகு­ஜன மக்­க­ளுக்கு நேர­டிப் பயன் தரு­கின்ற எண்­ணற்­றத் திட்­டங்­களை வழங்­கி­ய­தால், முதல்­வர்­க­ளில் முதல்­வ­ராக சிறந்து விளங்­கு­கின்ற முதல்­வர், தமது நடை, உடை, பாவனை செயல்­பா­டு­க­ளால் நமது பக்­கத்து வீட்­டுக்­கா­ரர் ஒரு­வர்­தான் முத­ல­மைச்­ச­ராக இருக்­கி­றாரோ என்று நினைக்­கத்­தக்க உணர்வை, ஒவ்­வொ­ரு­வ­ரி­டத்­தி­லும் ஏற்­ப­டுத்­திய முதல்­வர் அண்­ணன் மு.க. ஸ்டாலின் அவர்­கள் (மேசை­யைத் தட்­டும் ஒலி) அன்பு முகம் காட்டி, ஆற்­றுப்­ப­டுத்தி, எங்­களை அர­வ­ணைத்து, தம்­மில் ஒரு­வ­ராக ஆக்­கிக்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­வைத் தலை­வர் அவர்­களே, எதி­ரி­கள் பயன்­ப­டுத்­து­கின்ற பாணங்­க­ளைக் கைப்­பற்றி, எதி­ரி­கள் மீதேவீசு­கின்ற போர்­முறை தமி­ழர்­கள் பின்­பற்­றிய பழங்­கால போர் முறை­க­ளில் ஒன்று.  அந்த அடிப்­ப­டை­யில் ஆளு­நர் உரைக்கு நன்றி தெரி­விக்­கின்ற தீர்­மா­னத்­தின்­மீது பேசி­ய­போது, அந்த நாளை தமது நாளாக்­கிக் கொண்­ட­வர்.  தமிழ்­நாடு அர­சின் காவல் துறை­யின் கைது நட­வ­டிக்­கைக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஆளா­ன­போது, அந்த நாளை­யும் தனது நாளாக்கி, பழந்­த­மி­ழர் போர் முறை­யின் ஒரு சிறப்­புக்­கு­ரி­ய­வர் தான் என்­பதை நிரூ­பித்­த­வர்.  (மேசை­யைத் தட்­டும் ஒலி) தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் பேரப்­பிள்ளை. தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் தலைப்­பிள்ளை. நூற்­றாண்டு பாரம்­ப­ரிய சிறப்­பு­டைய திரா­விட இயக்­கத்­தின் வீரப்­பிள்ளை, எதிர்க்­கட்­சித் தலை­வர், என்­னைத் தலை­வ­ரி­டம் கொண்­டு­போய் சேர்த்த உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்கு (மேசை­யைத் தட்­டும் ஒலி) எனது நன்றி.  (குறுக்­கீ­டு­கள்)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">50 ஆயி­ரம் வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">50 ஆயி­ரம் வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் நான் வெற்றி பெறு­வேன் என்று சொன்ன வேட்­பா­ளரை எதிர்த்து நின்று நான் வெற்றி வாகை சூடி­ய­தற்கு எனக்­குச் சிறப்­பான ஒருங்­கி­ணைப்­புப் பணி­களை மேற்­கொண்ட கழ­கத்­தின் துணைப் பொதுச் செய­லா­ளர், மரி­யா­தைக்­கு­ரிய கழ­கத்­தின் நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வர் அக்கா திரு­மதி கனி­மொழி கரு­ணா­நிதி அவர்­க­ளுக்­கும், தி.மு.க. தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணி­யில் அங்­கம் வகித்து எனது வெற்­றியை உறுதி செய்து தந்த அனைத்­துச் செயல் மாம­ணி­க­ளுக்­கும் இந்த அவை­யில் எனது நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பட்­ஜெட் உரை­யில் பேசு­கி­றேன். நிதி­ய­மைச்­சர்அவர்­கள் தென்­கோடி முனை­யில் பழந்­த­மி­ழர் பூமி­யான எங்­கள் குமரி மாவட்­டத்­தின் மாப்­பிள்ளை என்­கிற முறை­யில் அவ­ருக்கு எனது மதிப்­பைப் பதிவு செய்­கின்­றேன். ஆனால், அவர் தன்­னு­டைய பட்­ஜெட் உரையை வாசிக்­கின்­ற­போது, நான் ஒரு சொற்­பொ­ழி­வா­ளன் என்­கிற முறை­யி­லும், தமிழ் ஆர்­வ­லன் என்­கிற முறை­யி­லும் உன்­னிப்­பா­கக் கவ­னித்­தேன். அவர் ஆங்­கி­லத்­தில் பெரும் புலமை பெற்­ற­வ­ராக இருப்­பார் என்று நினைக்­கி­றேன். ஆங்­கில உச்­ச­ரிப்பு மிக நேர்த்­தி­யாக இருந்­தது. தமி­ழில் பல சொற்­றொ­டர்­களை அவர்­கள் பேசா­மல் விட்­டு­விட்­டார்­கள். சில சொற்­றொ­டர்­கள் இலக்­க­ணப் பிழை­யாக அமைந்­தன. இதை குறை­யா­கவோ, குற்­றச்­சாட்­டா­கவோ இந்த அவை­யில் நான் வைக்க விரும்­ப­வில்லை. நமது பள்­ளிக் கல்­வித் துறை அமைச்­சர் அவர்­கள் தனது கட்­சிக்­காக வெகு சிறப்­பாக வாதா­டிப் பலம் சேர்க்­கி­றார் என்­பதை நாங்­கள் காண்­கி­றோம். நீங்­கள் நமது நிதி­ய­மைச்­சர் அவர்­கள் வருங்­கா­லத்­தில் பிழை­யின்றி பட்­ஜெட் வாசிக்­கக்­கூ­டிய வாய்ப்பு அவ­ருக்கு இருக்­கு­மே­யா­னால், நீங்­கள் அதற்­கான முயற்­சி­க­ளைச் செய்ய வேண்­டு­மென்று பணி­வோடு நான் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த நிதி­நிலை அறிக்­கை­யின் 43–வது பக்­கத்­தில் இந்­திய மருத்­து­வத் துறை­யில் தமிழ்­நாடு கண்­டி­ருக்­கின்ற சாதனை பட்­டி­ய­லி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. அதில் ஆயி­ரம் பிறப்பு நேர்ந்­தால் 11 இறப்­பு­தான் இருக்­கி­றது என்று சுட்­டிக்­காட்­டப் 
பட்­டுள்­ளது. தமிழ்­நாட்­டில் ஆச்­ச­ரி­யப்­ப­டத்­தக்க முன்­னேற்­றம் என்­ன­வென்­றால், 53 விழுக்­காடு மகப்­பேறு அரசு மருத்­து­வ­ம­னை­க­ளில் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது என்று அந்த பட்­ஜெட் அறிக்­கை­யிலே சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. இது உணர்த்­து­கிற செய்தி யாதெ­னில், அன்­றைக்கு கொரோனா தொற்­றால் நாடே பரி­த­வித்­துக் கொண்­டி­ருந்­த­போது இந்த அவை­யில் இருக்­கின்ற நம்­மில் பலர் எங்கே இருக்­கி­றோம் என்று தெரி­யாத நிலை இருந்­த­போது, 28 மாநி­லங்­க­ளைக் கொண்ட இந்­திய ஒன்­றி­யத்­தில் ஒரு மாநில முத­ல­மைச்­சர்­தான் கோவிட் பாதித்த நோயா­ளி­களை நேர­டி­யா­கச் சென்று தமது உயி­ருக்கு அஞ்­சா­மல் பார்த்­துப் பயப்­ப­டா­தீர்­கள் என்று சொன்­னார். (மேசை­யைத் தட்­டும் ஒலி) அந்த முத­ல­மைச்­சர் தலை­வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்­க­ளின் திரா­விட மாடல் நல்­ல­ரசு உரு­வாக்­கி­யத் திட்­டங்­க­ளின் விளை­வா­கத்­தான், இந்­திய தேசிய சரா­ச­ரி­யில் முன்­னிலை வகிக்­கின்ற மாநி­ல­மாக இந்­தி­யா­வில் தமிழ்­நாடு திகழ்­கி­றது என்­பது உங்­கள் பட்­ஜெட்­டிலே வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. இது ஒன்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">மக­ளிர் சுய உத­விக் குழுக்­கள்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இரண்­டா­வது, பட்­ஜெட் உரை­யின் 54–வது பக்­கத்­தைப் பாருங்­கள். பால் உற்­பத்­தி­யில், பால் கொள்­மு­த­லில் இந்­தி­யா­வில் தலை­சி­றந்த முன்­னணி மாநி­லம் எது என்­றால், அது தமிழ்­நாடு என்று நீங்­கள் சொல்­லி­யி­ருக்­கி­றீர்­கள். நிச்­ச­ய­மாக 90 நாட்­க­ளைக் கடந்­தி­ருக்­கின்ற நீங்­கள் அந்­தச் சாதை­னையை எட்­டி­யி­ருக்க முடி­யாது; அதை உங்­கள் ஆட்­சிக் காலம் முடி­கின்­ற­போது நாம் அல­சு­வோம். ஆனால், அந்­தச் சாத­னையை இந்த மண்­ணில் நடத்­திக்­காட்­டிய பெருமை தலை­வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்­க­ளின் தலை­மை­யி­லான திரா­விட மாடல் அர­சுக்கு உண்டு.  (மேசை­யைத் தட்­டும் ஒலி) அந்­தப் பட்­ஜெட் உரை­யின் 98–வது பக்­கத்­திற்கு வாருங்­கள். அதில் என்ன வாச­கம் இருக்­கி­றது என்­றால், மாநில சுய உத­விக் குழுக்­கள் பன்­னெ­டுங்­கா­ல­மாக வளர்க்­கப்­பட்டு இன்று மிகப்­பெ­ரிய உச்­சத்­தைத் தொட்­டி­ருக்­கி­றது என்று உங்­கள் பட்­ஜெட் பக்­கம் 98–ல் இருக்­கி­றது. அது சொல்­கிற செய்தி யாதெ­னில், பன்­னெ­டுங்­கா­ல­மாக உரு­வாகி இன்­றைக்கு வளர்ந்து செழித்­தி­ருக்­கின்ற மக­ளிர் சுய உத­விக் குழு என்­கிற இந்த concept–ஐ, இந்த கருவை உரு­வாக்கி முதல் மக­ளிர் சுய உத­விக் குழுவை தரு­ம­பு­ரி­யில் நிர்­மா­ணித்­த­வர் புத்­து­ல­கச் சிற்பி டாக்­டர் கலை­ஞர் என்­ப­தனை இங்கே பதிவு செய்­கின்­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக­ளிர் சுய உத­விக் குழு­கள் வாங்­கு­கிற கடனை முறை­யா­கத்திருப்­பிச் செலுத்­து­கி­றார்­களா, திருப்­பிச் செலுத்­து­கிற அவர்­க­ளின் அந்த திறன் எந்த அள­விற்குஇருக்­கி­றது என்­ப­தற்கு முறை­யான பயிற்சி அளித்து தன்­னு­டைய கட்­சி­யின் இளை­ஞ­ர­ணிக்­குக் கொடுத்த முக்­கி­யத் 
து­வத்­தை­விட மக­ளிர் சுய உத­விக் குழுக்­க­ளுக்­குப் பெரும் முக்­கி­யத்­து­வம் கொடுத்து, மாண்­புள்ள சுய உத­விக் குழுக்­க­ளாக வளர்த்த பெருமை ஊரக வளர்ச்­சித் துறை அமைச்­ச­ரா­க­வும், துணை முத­ல­மைச்­ச­ரா­க­வும், முத­ல­மைச்­ச­ரா­க­வும் உயர்ந்த தலை­வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்­க­ளுக்கு இருக்­கின்ற தனிப் பெருமை என்­ப­தைத்­தான் உங்­கள் பட்­ஜெட்­டிலே அந்த வாச­கம் குறிப்­பி­டு­கி­றது. (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">கழக ஆட்­சி­யில் 2 லட்­சம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">மின் இணைப்­பு­கள்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அன்­புக்­கு­ரிய சகோ­த­ரர்­களே, நமது மின்­சார வாரி­யத்­துறை அமைச்­சர் இங்கே அமர்ந்­தி­ருக்­கின்­றார்­கள். என்­னைப் போலவே நமது மின்­துறை அமைச்­சர் அவர்­கள், சட்­டத் துறை­யை­யும் கையில் வைத்­தி­ருக்­கின்­ற­வர், ஒரு வேளாண் குடி­யில் பிறந்­த­வர்­தான். 23 இலட்­சத்து 97 ஆயி­ரத்து 732 மின் இணைப்­பு­கள் நமது நாட்­டில் இல­வ­ச­மாக மும்­முனை மின்­சா­ரம் வழங்­கு­வ­தற்­காக இருக்­கி­றது என பட்­ஜெட்­டில் இடம்­பெற்­றி­ருக்­கி­றது. அந்த 23 இலட்­சத்து 97 ஆயி­ரத்து 732 மின் இணைப்­பு­கள் சரி. கடந்த ஐந்­தாண்­டு­க­ளில் திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில் இரண்டு இலட்­சம் மின் இணைப்­பு­கள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அதை­யும் சேர்த்து அந்­தக் கணக்கு சரி­யென்று நான் வரு­கி­றேன். உங்­கள் ஆட்­சி­யில், இந்த ஓராண்­டுக்கு எத்­தனை மின் இணைப்­பு­கள் வழங்­கப் போகி­றீர்­கள் என்றசெய்தி பொது பட்­ஜெட்­டி­லும் இல்லை; வேளாண்மைபட்­ஜெட்­டி­லும் குறிப்­பி­டப்­ப­ட­ வில்லை. ஒரு­வேளை உங்­க­ளது மின்­சார பட்­ஜெட்­டிலே குறிப்­பி­டக்­கூ­டு­மென நான் எதிர்­பார்த்­துக் காத்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதிலே ஓர் உட்­பி­ரி­வாக உங்­க­ளுக்­குச் சொல்ல விரும்­பு­கி­றேன். ஜன­வரி மாதத்­தில் திரா­விட முன்­னேற்­றக் கழக அரசு கொஞ்­சப் பேருக்­கா­வது அந்த மின் இணைப்பை வழங்­கி­வி­டு­வோம் என்­கிற ஆசை­யில், தட்­கல் முறை­யில் விண்­ணப்­பிப்­ப­வர்­க­ளுக்கு வழங்­க­லா­மென்று முடி­வெ­டுத்து ஓர் அறி­விப்­பைச் செய்­தது. பிப்­ர­வரி மாதமே நம்­மு­டைய தேர்­தல் பணி­கள் தொடங்­கி­விட்ட கார­ணத்­தி­னால், மீண்­டும் திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்சி மலர்ந்து ஜுன் மாதத்­தில் அதை வழங்­கக்­கூ­டிய வாய்ப்பு இல்­லா­மல் போய், தமி­ழக வெற்­றிக் கழ­கத்­தின் ஆட்சி நடந்­துக்­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஓர் ஏழ்­மை­யான சிறு விவ­சா­யக் குடும்­பத்­தில் பிறந்­த­வன் என்­கிற முறை­யில் தமிழ்­நாடு அர­சுக்­கும், முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்­கும் மற்­றும் மின்­துறை அமைச்­ச­ருக்­கும் பணி­வோடு தெரி­விக்க விரும்­பு­கி­றேன். 67,000 பேர், காதில், கழுத்­தில் அணிந்­தி­ருந்த சின்­னஞ்­சிறு நகை­களை அடகு வைத்து அந்த தட்­கல் விண்­ணப்­பத்­திற்கு காத்­தி­ருக்­கி­றார்­கள். விவ­சா­யி­க­ளுக்­குத்­தான் தெரி­யும் தட்­கல் மின் மோட்­டா­ரி­னு­டைய பெருமை, விவ­சா­யி­க­ளுக்­குத்­தான் தெரி­யும். அந்த 67,000 பேருக்கு வழங்­கு­வ­தற்­கான முயற்­சியை எடுக்க வேண்­டு­மென்று ஏரா­ள­மான விவ­சா­யி­கள் எனக்கு தொடர்­பு­கொண்டு சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். நமது வேளாண்­மைத் துறை அமைச்­சர் அவர்­கள், திரு­நெல்­வே­லிக்கு வேளாண் ஆலோ­ச­னைக் கூட்­டத்­திற்கு வந்­த­போ­தும் விவ­சா­யி­கள் அதை வலி­யு­றுத்­தி­னார்­கள்; நானும் அதை வலி­யு­றுத்தி அமைச்­ச­ருக்கு முன்­னால் பேசி­னேன் என்­பதை நினை­வூட்­டு ­கி­றேன். அதற்­கான வாய்ப்­பினை நீங்­கள் உரு­வாக்­கித்­தர வேண்­டு­மென இந்த நேரத்­தில் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">திரா­விட மாடல் ஆட்­சி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">11 ஆயி­ரம் பேருந்­து­கள்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">போக்­கு­வ­ரத்து வசதி என்­பது அந்த infrastructure மிக­வும் அவ­சி­ய­மான ஒன்று. திரா­விட மாடல் ஆட்­சி­யில், 11,000 பேருந்­து­க­ளுக்கு இலக்கு நிர்­ண­யித்து tender விட்டு 9,000 பேருந்­து­களை ஐந்­தாண்­டு­க­ளில் இயக்கி முடித்­து­விட்­டார்­கள். 2,000 பேருந்­து­கள் கட்­டு­மா­னப் பணி நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. அதை நமது தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் சில மாதங்­க­ளிலே இயக்­கக்­கூ­டும். அந்­தப் பேருந்­து­கள் அவ்­வாறு இருந்­தால், உங்­க­ளது ஆட்­சி­யில் ஓராண்டு காலத்­திற்கு எத்­த­னைப் பேருந்­து­களை உங்­கள் நிதி­யில் இந்த ஆண்­டுக்­கான நிதி­யில் இயக்­கப் போகி­றீர்­கள் என்­கிற தக­வல் நிதி­நிலை அறிக்­கை­யில் இல்லை. ஒரு தக­வல் இருக்­கி­றது. 1000 மின் பேருந்­து­களை தனி­யார் ஒத்­து­ழைப்­போடு சென்னை பட்­டி­னத்­தில் இயக்­கு­வோம் என்று குறிப்­பிட்­டி­ருக்­கி­றீர்­கள், அதை வர­வேற்­கி­றேன். ஆனால், எட்டு மண்­ட­லங்­க­ளாக இருக்­கின்ற போக்­கு­வ­ரத்­துக் கழ­கத்­திற்கு இந்த ஆண்­டில் தமி­ழக வெற்­றிக் கழக அர­சின் பங்­க­ளிப்பு என்ன என்­கிற செய்தி நிதி­நிலை அறிக்­கை­யில் இடம்­பெ­ற­வில்லை என்­ப­தைச் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நிறை­வாக, நமது நீர் வளத்­துறை அமைச்­சர் அவர்­க­ளி­டம் ஒரு சிறப்பு என்­ன­வென்­றால், நாங்­கள் தெற்கு திரு­நெல்­வேலி பகுதி, தென்­காசி பகு­தி­யி­லி­ருந்து உங்­க­ளைப் பார்க்­கின்­றோம். நாங்­கள் சென்னை தமிழை பேச வைத்து இர­சிப்­ப­துண்டு. கொங்கு நாட்­டுத் தமிழை நண்­பர்­களை பேச வைத்து இர­சிப்­ப­துண்டு. நீங்­கள் கட்­சிப் பிரச்­சார மேடை­யில் பேசி­ய­வற்றை நான் கேலி­யா­கவோ, கிண்­ட­லா­கவோ சொல்­கிற இயல்­பு­டை­ய­வன் அல்ல. உங்­க­ளு­டைய அந்­தச் சென்னை தமிழை சில நேரம் நாங்­கள் இர­சித்­துப் பார்ப்­ப­துண்டு. ஆனால், பக்­கம்–88 நிதி­நிலை அறிக்­கை­யில் நீர் வளத்­து­றை­யின் செய்­தி­கள் மிகப்­பெ­ரிய தவ­றாக இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. அதில், நீங்­கள் என்ன சொல்ல வரு­கி­றீர்­கள் என்­றால், நதி­களை இணைக்­கின்ற அந்­தத் திட்­டத்தை கடந்த கால அர­சு­கள் மிக­வும் தாம­தப்­ப­டுத்­தி­ய­தால் வேளாண் உற்­பத்தி பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது என்று குறிப்­பிட்­டி­ருக்­கி­றீர்­கள். நதி­களை இணைப்­ப­தற்கு தமிழ்­நாடு அரசு என்­னென்ன திட்­டங்­களை வைத்­தி­ருக்­கின்­றன என்­பது ஒரு பக்­கம் இருக்­கட்­டும்; தமிழ்­நாட்­டில் 32 முக்­கிய நதி­கள் இருக்­கின்­றன, அதில் மூன்று நதி­கள்­தான் இது­வரை இணைக்­கப்­பட்டு செயல்­பாட்­டுக்கு வந்­தி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்த 3 நதி­கள் எவை என்­றால், நான் தண்­ணீர் குடித்து வளர்­கின்ற தாமி­ர­ப­ரணி நதி, கரு­மே­னி­யாறு, நம்­பி­யாறு ஆகி­யவை இணைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்த மூன்று நதி­க­ளை­யும் இணைத்த புத்­து­ல­கச் சிற்பி கலை­ஞர் என்­பதை இங்கே பணி­வோடு நினை­வு­ப­டுத்­து ­கின்­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2009 ஆம் ஆண்­டில் தொடங்­கப்­பட்ட அந்­தத் திட்­டம், பிப்­ர­வரி 2026–ல் திரா­விட மாடல் அர­சின் முதல்­வர் தலை­வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்­க­ளால் நிறைவு பெற்­றி­ருக்­கி­றது என்­ப­தைச் சுட்­டிக்­காட்­டு­கி­றேன். (மணி­ய­டிக்­கப்­பெற்­றது) அது, சுமார் 1,060 கோடி ரூபாய் திட்­டம். ஆனால், நீர்­வ­ளத் துறை­யின் அமைச்­ச­ரான நீங்­கள், காவி­ரி–­வை­கை–­குண்­டாறு இணைப்­புத் திட்­டம் எங்­கள் ஆட்­சி­யில் செயல்­ப­டுத்­தப்­ப­டும் என்று நிதி­நிலை அறிக்கை, பக்­கம் 88–ல் தெரி­வித்­துள்­ளீர்­கள். ஆனால், இந்­தத் திட்­டம் 2014 ஆம் ஆண்­டில் செயல்­பாட்­டிற்கு வரும் என்று ஏற்­கெ­னவே அறி­விக்­கப்­பட்டு, நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு, ஒரு­பு­றத்­தில் 9 கிலோ மீட்­டர் தூரத்­திற்கு தேவை­யான நிலங்­க­ளும் ஆர்­ஜி­தம் செய்­யப்­பட்­டுள்­ளன என்­பதை நான் கவ­லை­யோடு சுட்­டிக்­காட்ட விரும்­பு­கி­றேன்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">3 நதி­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">இணை­ப்புத் திட்­டம்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­நி­லை­யில், நீங்­கள் 150 கோடி ரூபாய் நிதியை மட்­டும் ஒதுக்­கி­விட்டு, நமது நதி­களை விரை­வாக இணைக்­கப்­போ­கி­றோம் என்று சொல்­வது, இந்த காவி­ரி–­வை­கை–­குண்­டாறு இணைப்­புத் திட்­டத்­தில் சாத்­தி­ய­மில்லை. ஏனென்­றால், 3 கட்­டங்­க­ளாக நிறை­வேற்­றப்­பட வேண்­டிய இந்­தத் திட்­டத்­தின் மொத்த தூரம் 262 கிலோ மீட்­டர். அதற்கு இன்­றைய மதிப்­பீட்­டில் தேவைப்­ப­டு­கின்ற நிதி சுமார் 16,000 கோடி ரூபாய். அதில் பாதி தெற்கு வெள்­ளாறு வரை நிறை­வேற்­ற­லாம் என்று சொன்­னால்­கூட, அதற்­குத் தேவைப்­ப­டும் நிதி 7,000 கோடி ரூபாய். நீங்­கள் ஒதுக்­கி­யி­ருப்­பதோ 150 கோடி ரூபாய்­தான். அதி­லும், எதிர்க்­கட்­சி­க­ளாக இருக்­கின்ற முந்­தைய அர­சு­கள் ஒழுங்­காக உரிய நேரத்­தில் நதி­கள் இணைப்­புத் திட்­டத்தை நிறை­வேற்­ற­ வில்லை; நாங்­கள் நிறை­வேற்­று­வ­தற்கு இந்­தத் திட்­டத்­திற்கு இவ்­வ­ளவு நிதியை ஒதுக்­கி­யி­ருக்­கி­றோம் என்று சொல்­வது பொருத்­த­மற்ற வாத­மாக இருக்­கி­றது. அந்­தத் திட்­டத்­திற்கு இன்­றைக்கு நீங்­கள் ஒதுக்­கி­யுள்ள நிதி அடிப்­ப­டை­யில் பார்த்­தால், அதை நிறை­வேற்­று­வ­தற்கு 100 ஆண்­டு­கள் ஆகும் என்­ப­தைக் கவ­னத்­திற்­கொண்டு, நீங்­கள் இது­போன்ற குறிப்­பு­க­ளைத் தயா­ரிக்க வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கின்­றேன். (குறுக்­கீடு)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உங்­கள் பட்­ஜெட் புத்­த­கத்­தில் இருக்­கிற வாச­கங்­கள், நீர்­வ­ளத் துறை­யின் திட்­ட­மி­டல் துறை­யின்­மூ­லம் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கிற அந்த பணி­க­ளின் அடிப்­ப­டை­யில்­தான் நான் பேசு­கி­றேன் என்­பதை அமைச்­சர் அவர்­க­ளுக்­குத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். எங்­கள் பகு­தி­யின் நீர்த் திட்­டங்­க­ளுக்­காக, 10, 15 ஆண்­டு­க­ளாக நீர்­வ­ளத் துறை­யின் திட்­ட­மி­டல் துறைக்கு நான் ரெகு­ல­ராக செல்­கி­ற­வன். அதி­லுள்ள செய்­தி­க­ளைத்­தான் உங்­கள் பட்­ஜெட் விவ­ரங்­க­ளு­டன் இணைத்­துச் சொல்­கி­றேன். பொதுப் பணித் துறை அமைச்­சர் அவர்­கள் சொல்­வதை நான் புரிந்­து­கொள்­கி­றேன். ஆனால், 2014–ல், 6,000 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் இந்­தத் திட்­டம் நிறை­வேற்­றப்­ப­டும் என்று அரசு அறி­வித்­துள்­ளது. அத்­திட்­டத்­திற்கு ஏறக்­கு­றைய 800 கோடி ரூபாய்க்­கு­மேல் நிதி வழங்­கப்­பட்டு, 550 கோடி ரூபா­யில் நில எடுப்­பும் செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில், நீங்­கள் உங்­கள் நிதி­நிலை அறிக்கை, பக்­கம் 88–ல் புதி­தாக இந்­தத் திட்­டத்தை செயல்­ப­டுத்­தப் போகி­றோம் என்று சொல்­வ­தைத்­தான் நான் கோடிட்­டுக் காட்­டு­கி­றேனே தவிர, வேறொன்­று­மில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆகவே, வாச­கங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­போது, நதி­களை இணைப்­பது நாளையே சாத்­தி­யம் இல்லை. 40 ஆண்­டு­க­ளுக்கு முன்பு ஐயா குமரி அனந்­தன் அவர்­கள் ‘கங்கை இங்கே வர வேண்­டும், கும­ரிக் கட­லைத் தொட வேண்­டும்’ என்­றார். வாய்ப்­பில்லை. முத­ல­மைச்­சர் அவர்­கள் கோதா­வ­ரி–­கா­வி­ரி–­வைகை  இணைப்பு வேண்­டும் என்­கி­றார்­கள். திரா­விட மண்­ட­லத்­திற்­குட்­பட்ட நதி­கள் இணைக்­கப்­பட வேண்­டு­மென்­பது சரி­தான். அதை நாங்­கள் ஒப்­புக்­கொள்­கின்­றோம். ஆனால், நமது சொந்த நாட்­டில் இருக்­கின்ற நதி­கள் நமது கன்­னி­யா­கு­ம­ரி­யைச் சேர்ந்த சகோ­தரி அவர்­கள் தெரி­வித்­த­து­போன்று, நமது சொந்த நாட்­டில் உள்ள நதி­கள் இணைப்­புக்­கான முயற்­சி­க­ளில், முதல் முயற்­சியே கலை­ஞர் அரசு செய்­தது. தலை­வர் ஸ்டாலின் அரசு அதை நிறை­வேற்­றி­யது என்­பதை நான் பதிவு செய்­கின்­றேன். அவ்­வ­ள­வு­தான். ஐயா, நீங்­கள் நன்­றா­கப் பாட்­டுப் பாடி­னீர்­கள். இரண்டு நிமி­டத்­தில் என் உரையை முடித்­துக்­கொள்­கி­றேன். எங்­கள் தென்­காசி மாவட்­டத்­தில். . .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கடை­ய­நல்­லூர் தொகு­தி­யைப் பொறுத்­த­மட்­டில் மேற்­குத் தொடர்ச்சி மலை அடி­வா­ரத்­தில் இருக்­கின்ற தொகுதி. கடை­ய­நல்­லூர், சாம்­ப­வர் வட­கரை மற்­றும் ஆய்­குடி ஆகிய பகு­தி­க­ளுக்கு குடி­தண்­ணீர் திட்­டம். . .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கடை­ய­நல்­லூர் தொகு­தி­யில், கடை­ய­நல்­லூர் சாம்­ப­வர் வட­கரை, சுரண்டை, ஆய்க்­குடி கூட்­டுக் குடி­நீர்த் திட்­டத்தை நிறை­வேற்ற வேண்­டும். பாப்­பான் கால்­வாய் சீர­மைப்பு, சீவ­லங்­காய் சீர­மைப்பை செய்து தர வேண்­டும். செங்­கோட்டை நக­ராட்சி குடி­நீர் விநி­யோ­கம் சீர­மைப்பு செய்து தர வேண்­டும். மிக முக்­கி­ய­மாக முத­ல­மைச்­சர் அவர்­க­ளு­டைய துறை­யில் AMRUT திட்­டத்­தில் வேலைத் தொடங்­கப்­பட்டு, அந்த வேலை நிறைவு பெறா­மல் இருக்­கி­றது. வட­கரை, அச்­சன்­பு­தூர், பண்­பொழி, S.புதூர் பேரூ­ராட்­சி­க­ளில் அந்­தத் திட்­டத்தை நிறை­வேற்­றித் தர வேண்­டும். மிகப் பெரிய முக்­கி­ய­மான செய்தி, ஐயா அவர்­க­ளுக்­கும் சேர்த்­துச் சொல்­கி­றேன். சிறு­பான்­மை ­யி­ன­ருக்கு மைய­வாடி என்று சொல்­கிற, அம­ரர்­களை அடக்­கம் செய்­கிற பகுதி பெரு­ம­ளவு நெருக்­க­டி­யைச் சந்­திக்­கி­றது. நம்­மு­டைய சிறு­பான்­மை­ யி­னர் நலத் துறை அமைச்­சர் அவர்­கள் இதில் தனிக் கவ­னம் செலுத்தி, முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் முயற்­சி­யோடு, அர­சின் முயற்­சி­யோடு மைய­வா­டிக்கு போதிய இடம் ஒதுக்­கித் தந்து கடை­ய­நல்­லூ­ரில் இந்­தப் பிரச்­சி­னை­யைத் தீர்க்க வேண்­டும். தமிழ்­நாடு முழு­வ­தும் இருக்­கின்ற அந்­தப் பிரச்­சி­னைக்கு முற்­றுப்­புள்ளி வைக்க வேண்­டும். பண்­பொழி திரு­மலை குமா­ர­சு­வாமி திருக்­கோ­யில், பிர­சித்தி பெற்­றக் கோவில்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கன்­னி­யா­கு­மரி மாவட்ட உறுப்­பி­னர் அவர்­கள் கூறி­னார்­கள், நாங்­கள் பேசி­விட்­டால் தொகு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள் நாங்­கள் பேசி­விட்­டோம் என்று நினைப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">அணை­களை தூர்­வார</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">வேண்­டும்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குண்­டாறு, அட­வி­ந­யி­னார், கருப்பா நதி அணை­க­ளைத் தூர்­வார வேண்­டும். எங்­கள் தென்­காசி மாவட்­டம், மாவட்­ட­மாக அறி­விக்­கப்­பட்டு 6 வரு­டங்­கள்­தான் ஆகின்­றன. அந்த ஆறு வயது குழந்­தையை கண்­ணைப் போல் காப்­ப­தற்கு இந்த அரசு முன் வர வேண்­டும். நம்­மு­டைய சுற்­றுச்­சூ­ழல் துறை அமைச்­சர் அவர்­கள் அங்கு பொறுப்பு அமைச்­ச­ராக இருக்­கி­றார். தென்­காசி மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கம் விரை­வில் திறக்­க­வும், செண்­ப­க­வல்லி அணை சீர­மைப்பு மற்­றும் நெய்­யாறு இட­து­க­ரைக் கால்­வாய் குறித்­துச் சொன்­னார்­கள் குமரி மாவட்­டத்­தி­னர். இந்த இரண்­டிற்­கும் நம்­மு­டைய சுற்­று­லாத் துறை அமைச்­சர் அவர்­கள் தலை­மை­யில் ஒரு குழுவை கேர­ளா­விற்கு அனுப்­புங்­கள். இவர்­கள் கட்­சி­யும் அங்கு உள்ள கட்­சி­யும் ஒரே கட்சி என்­ப­தால் அதைப் பெற்­றுத் தரு­வ­தற்கு ஒரு வாய்ப்­பாக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">செண்­ப­க­வல்லி அணை சீர­டைந்­தால், தமிழ்­நாட்­டில் மோச­மான வறட்சி பாதிக்­கின்ற எங்­கள் பகு­தி­க­ளான, சங்­க­ரன்­கோ­வில், சிவ­கிரி, வெம்­பக்­கோட்டை, கோவில்­பட்டி, விளாத்­தி­கு­ளம் பகுதி வளம் பெறும். அதே­போன்று தாமி­ர­ப­ரணி ஆற்­றில் எஞ்­சி­யி­ருக்­கின்ற வெள்ள நீரை pumping மூலம் எவ்­வாறு அவி­நா­சி–­அத்­திக்­க­டவு திட்­டம் நிறை­வேற்­றப்­பட்­டதோ, எடப்­பா­டி­யில் எவ்­வாறு அந்­தத் திட்­டம் செயல்­பாட்­டில் இருக்­கி­றதோ, அதே­போன்று தாமி­ர­ப­ரணி ஆற்­றி­லி­ருந்து மானூர், மேல­நீ­லி­த­நல்­லூர், குரு­விக்­கு­ளம் ஒன்­றி­யப் பகு­தி­க­ளுக்கு ஒரு pumping மூலம் தாமி­ர­ப­ர­ணி­யின் எஞ்­சிய வெள்ள நீரை பயன்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­டம் வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஊத்­து­ம­லை–­இ­ரட்­டைக்­கு­ளம் கால்­வாய்த் திட்­டம் செய்து தர வேண்­டும். வன விலங்­கு­ க­ளின் தொல்­லை­யி­லி­ருந்து எங்­கள் மாவட்­டத்தை மட்­டும் அல்ல, தமிழ்­நாட்­டை­யும் காப்­ப­தற்கு தனித் திட்­டத்தை உரு­வாக்­கித் தாருங்­கள் என்று கேட்டு, எவ­ரு­டைய மன­தை­யும் புண்­ப­டுத்­து­கிற இயல்போ, நோக்­கமோ இல்லை. அனைத்­தை­யும் சுட்­டிக்­காட்­டு ­வ­தைத்­தான் எனது கட­மை­யா­கக் கருதி சுட்­டிக் காட்­டி­யி­ருக்­கி­றேன் என்று சொல்லி, எனது கன்­னிப் பேச்சை நிகழ்த்­து­வ­தற்கு பெருந்­து­ணை­யாக இருந்த அவைத் தலை­வர் அவர்­க­ளுக்­கும், அவைக்­கும் நன்றி கூறி விடை­பெ­று­கி­றேன்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு கடை­ய­நல்­லூர் தி.மு. இரா­ஜேந்­தி­ரன்பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>