<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,66,957,1192" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Sep 10 2026 03:57:31 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260910T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="10092026-VLR-03" position.sequence="03" ex-ref="10092026-VLR-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="77">நேரலை நாடகங்கள்: நடுநிலை காத்தாரா சபாநாயகர்?</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup855781_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நிதி­நிலை அறிக்கை மற்­றும் மானி­யக் கோரிக்­கை­கள் மீதான சட்­ட­மன்­றக் கூட்­டத்­தொ­டர் ஒரு மெகா சீரி­ய­லைப் போல நடந்து முடிந்­தி­ருக்­கி­றது. மெகா 
சீரி­யல்­க­ளில் சண்டை இருக்­கும்; சென்­டி­மென்ட் இருக்­கும்; லாஜிக் மட்­டும் இருக்­காது. அத்­த­கை­ய­தொரு சீரி­ய­லைத்­தான் ஆளுங்­கட்­சி­யின் ஆத­ர­வோடு சபா­நா­ய­கர் நடத்­திக் காட்­டி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சட்­ட­மன்ற நிகழ்­வு­களை நேரலை செய்து ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டி­ 
விட்­ட­தா­கத் த.வெ.க.வினர் மார்­தட்­டிக்­கொண்­டார்­கள். ஆனால், சட்­டப்­பே­ர­வையை அவ­தூறு மன்­ற­மாக்கி, பொய்­­களைப் படம்­பி­டித்­துப் பரப்­பும் ஒரு ‘ரீல்ஸ்’ மேடை­யா­கப் பயன்­ப­டுத்­தவே இந்த நேரலை உதவி இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தான் நடு­நி­லை­யா­கச் சபையை நடத்­து­வ­தாக ஒரு பிம்­பத்தை உரு­வாக்­கச் சபா­நா­ய­கர் படா­த­பா­டு­பட்­டார். சில ஊட­க­வி­ய­லா­ளர்­கள்­கூட அந்­தப் பிம்­பத்தை நம்பி 
வான­ளா­விய அதி­கா­ரம் கொண்­ட­வ­ருக்கு வான்­பு­கழ் பாடி­னர். ஆனால், அந்த நடு­நிலை முக­மூடி கூட்­டத்­தொ­டரின் கடைசி இரண்டு நாட்­க­ளி­லும் முழு­மை­யா­கக் கழன்று விழுந்­தது. த.வெ.க. என்­னும் நாட­கக் கம்­பெ­னி­யின் இயக்­கு­ந­ரா­கவே அவர் செயல்­பட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">‘இழி சைகை’க்கு அனு­மதி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">“சட்­ட­மன்­றத்­தில் யாரும் சைகை மொழி­க­ளை­யும் முக­பா­வ­னை­க­ளை­யும் காட்­டக் கூடாது” என ஜூன் 22-ஆம் தேதி கண்­டிப்­பு­டன் கூறிய சபா­நா­ய­கர், ஜூன் 23-ஆம் தேதி சட்­ட­ச­பை­யில் தி.மு.க. 
தலை­வர் குறித்து இழி சைகை செய்­த­போது ஏன் அதைக் கண்­டிக்­க­வில்லை?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">“மற்ற உறுப்­பி­னர்­க­ளும் அவ்­வாறு சைகை செய்­ய­லாமா?” என்று பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் கேட்­ட­போது, “முதல்­வர் விஜய் சைகை காட்­டி­ய­தில் எந்­தத் தவ­றும் இல்லை; அது விதி­க­ளுக்கு உட்­பட்­டுத்­தான் நடந்­தி­ருக்­கி­றது. எதிர்க்­கட்சி உறுப்­­பினர்­கள் என்ன சைகை காட்­டப் போகி­றார்­கள் என்று எனக்கு முன்­கூட்­டியே தெரிந்­தி­ருந்­தால், அதை அனு­ம­திப்­பதா வேண்­டாமா என்று நான் முடி­வெ­டுப்­பேன்” என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">“முதல்­வர் விஜய் உங்­க­ளி­டம் முன்­கூட்­டியே என்ன சைகை காட்­டப்­போ­கி­றேன் என்று கூறி­னாரா?” என்று செய்­தி­யா­ளர்­கள் கேட்­ட­தற்கு, “முதல்­வ­ரின் கை அசை­வைப் பார்த்து, அவர் என்ன செய்­யப்­போ­கி­றார் என்று புரிந்­து­கொண்டு அனு­மதி அளித்­தேன்” என்­றார் சபா­நா­ய­கர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சபா­நா­ய­கர் ஆரம்­பம் முதலே முதல்­வர் விஜய்க்கு அடி­ப­ணிந்­தும், அவ­ருக்­குச் சட்­ட­மன்­றத்­தில் எந்த நெருக்­க­டி­யும் வந்­து­வி­டக் கூடாது எனத் திட்­ட­மிட்­டும் முரண்­பா­டான நிலைப்­பா­டு­களை எடுத்­து­வந்­தார் என்­ப­தற்கு இதுவே முதல் சாட்­சி­யம். இதன் தொடர்ச்­சி­யா­கவே தி.மு.க. தலை­வர் குறித்த இழி சைகை ஒன்றை மீண்­டும் முதல்­வர் விஜய் சட்­ட­ச­பை­யில் செய்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அன்று கலை­ஞர் சக்­கர நாற்­கா­லி­யில் வரு­வ­தைக் குறிப்­பிட்­டுத் ‘தள்­ளு­வண்டி’ எனக் கேலி செய்த விஜ­ய­பாஸ்­க­ருக்கு, அடுத்த நாளே அமைச்­சர் பதவி கொடுத்து அழகு பார்த்­தார் ஜெய­ல­லிதா. இன்று 
மிசா­வின் போது தி.மு.க. தலை­வர் மு.க. ஸ்டாலின் தாக்­கப்­பட்­ட­தைக் கேலி செய்து, தாடை­யைக் கோணி இழி சைகை காட்­டு ­கி­றார் முதல்­வர் விஜய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அர­சி­ய­லில் அறம் பிழைத்­தோர்க்­குக் காலம் வழங்­கும் நீதி மிக­வும் கடு­மை­யாக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">‘நீக்­கம்’ என்ற நாட­கம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஒரு பேச்சு அவைக்­கு­றிப்­பி­லி­ருந்து  
நீக்­கப்­ப­டு­வது என்­பது, அந்­தப் பேச்சு அவை­யின் மாண்­பு­க­ளுக்­கும் மர­பு­க­ளுக்­கும் ஒவ்­வா­தது என்றோ, உண்­மைக்­குப் புறம்­பாக இருக்­கி­றது என்றோ சபா­நா­ய­கர் கரு­தி­னால் மட்­டுமே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அவைக்­கு­றிப்பு என்­பது சட்­ட­சபை நிகழ்­வு­கள் குறித்த அதி­கா­ர­பூர்வ ஆவ­ணம். தவ­றான சொற்­களோ கருத்­து­களோ அவைக்கு வெளியே செல்­லக் கூடாது 
என்­ப­தற்­கா­கவே அவைக்­கு­றிப்­பி­லி­ருந்து 
நீக்­கும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­ 
கி­றது. ஊட­கங்­கள் அந்­தச் செய்­தியை வெளிப்­ப­டுத்­தாது. இது­தான் மரபு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆனால், சட்­ட­சபை நிகழ்­வு­கள் முழு­மை­யாக நேரலை செய்­யப்­ப­டும்­போது, ‘அவைக்­கு­றிப்­பி­லி­ருந்து நீக்­கு­தல்’ என்­பதே அர்த்­த­மற்­ற­தா­கி­வி­டு­கி­றது. இதை முதல்­வர் விஜய்­யும் த.வெ.க.வின­ரும் தங்­க­ளுக்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக் கொண்­ட­னர். சட்­ட­சபை நேரலை 
மூல­மா­கப் பொய்­க­ளும் அவ­தூ­று­க­ளும் பரப்­பப்­பட்டு, அவை ‘ரீல்ஸ்’­க­ளாக மாறி இணை­யத்­தில் பெரு­கிய பிறகு, ‘அவைக்­கு­றிப்­பி­லி­ருந்து நீக்­கு­கி­றேன்’ என்ற சடங்கை சபா­நா­ய­கர் மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">நேரலை ஒளி­ப­ரப்­பைச் சில நொடி­கள் தாம­தித்து வழங்­கு­வ­தன் மூலம் (Delay Broadcast), அவைக்­கு­றிப்­பி­லி­ருந்து நீக்­கப்­பட்ட பகு­தி­களை நேர­லை­யி­லும் நீக்­கு­வது இன்­றைய தொழில்­நுட்ப யுகத்­தில் மிக­வும் எளிது. ஆனால்,சபா­நா­ய­கர் இந்­தக் கோரிக்­கை­யைக் கண்­டு­கொள்­ளவே இல்லை. நோக்­கம் வேறாக இருக்­கும்­போது எப்­ப­டிக் கண்­டு­கொள்­வார்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">கார்ட்­டூன் டப்­பிங் குரல்­கள்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சட்­ட­ச­பை­யில் முதல்­வர் பேசும் நாட்­க­ளில் எல்­லாம் யாரும் எந்­தக் கேள்­வி­யும் கேட்­டு­வி­டக் கூடாது என்­ப­தற்­கா­கக் கேள்வி நேரம் நீக்­கப்­பட்­டது. யாரும் குறுக்­கிட்­டுப் பேச முடி­யா­த­படி 110-வது விதி­யின் கீழ்­தான் முதல்­வர் பேசு­வார். ஆனால், எதிர்க்­கட்­சித் தலை­வரோ மற்ற தி.மு.க. உறுப்­பி­னர்­களோ பேசும்­போது ஆதவ் அர்­ஜு­னா­வும், நிர்­மல் குமா­ரும், ராஜ்­மோ­க­னும் குறுக்­கிட்­டுப் பேசித் திசை­ தி­ருப்­பு­வ­தற்­குக் சபா­நா­ய­கர் தொடர்ந்து அனு­ம­தி­ய­ளித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">எந்த அமைச்­ச­ரின் துறை சார்ந்த கேள்வி கேட்­கப்­பட்­டா­லும் இவர்­கள் மூவ­ரும்­தான் பதி­ல­ளிப்­பார்­கள். கார்ட்­டூன் படங்­க­ளில் பல்­வேறு கதா­பாத்­தி­ரங்­க­ளுக்­கும் ஒரு சிலரே டப்­பிங் குரல் கொடுப்­ப­தைப் போல இது இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இது சுட்­டிக்­காட்­டப்­பட்­ட­போது, “இனி துறை சார்ந்த அமைச்­சர்­கள்­தான் பதி­ல­ளிக்க வேண்­டும்; ஒரு­வர் பேசி முடிக்­கும் வரை யாரும் குறுக்­கி­டக் கூடாது” என்று அவ்­வப்­போது அறி­வு­றுத்­து­வார் சபா­நா­ய­கர். ஆனால், அதை அவர் ஒரு­நா­ளும் நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">குழப்­பம் விளை­வித்­தது யார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தி.மு.க.வினர்­தான் கூச்­சல் குழப்­பம் 
ஏற்­ப­டுத்­து­கி­றார்­கள் என்ற பிம்­பத்­தைச் சபா­நா­ய­கர் திரும்­பத் திரும்ப ஏற்­ப­டுத்­தி­னார். கூட்­டத்­தொ­ட­ரின் கடைசி இரண்டு நாட்­­களும் சபா­நா­ய­கர் இதை முழு­மூச்­சா­கச் செய்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">காவல்­துறை மானி­யக் கோரிக்­கை­யில், எதிர்க்­கட்­சித் தலை­வர் கேட்ட எந்­தக் 
கேள்­விக்­கும் பதில் சொல்­லா­மல்—­மி­சா­வில் தி.மு.க. தலை­வர் கைது செய்­யப்­பட்­டது தொடர்­பான பொய், அம­லாக்­கத்­துறை அறிக்­கையை ஏதோ உண்மை ஆவ­ணம் போல வாசித்­தது, சர்க்­கா­ரியா கமி­ஷன் தொடர்­பான பொய், முர­சொலி மாறன் மீதான அவ­தூறு எனச் சம்­பந்­தமே இல்­லா­மல் விஜய் வன்­மத்­தைக் கக்­கிக்­கொண்­டி­ருந்­தார். தி.மு.க.வினர் இதற்­குப் பதி­ல­ளிக்­கவோ விளக்­கம் அளிக்­கவோ சபா­நா­ய­கர் அனு­ம­தி­ய­ளிக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முதல்­வ­ரின் இந்­தத் தாக்­கு­த­லுக்கு எதிர்­வி­னை­யாற்­றத் தி.மு.க. உறுப்­பி­னர்­கள் முயன்­றால், அது சட்­ட­மன்ற நிகழ்­வு­க­ளைச் சீர்­கு­லைக்­கும் முயற்­சியா? முதல்­வர் பொய் சொல்­ல­லாம், ஆனால் அந்­தப் பொய்க்கு யாரும் மறுப்­புத் தெரி­விக்­கக் கூடாது என்­றால், சபா­நா­ய­கர் என்ற பத­விக்கு ஜே.சி.டி. பிர­பா­கர் என்ன நியா­யம் செய்­தி­ருக்­கி­றார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">மாண்பு மீறல்­கள் - மரபு மீறல்­கள்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கூட்­டத்­தொ­ட­ரின் கடைசி நாளில், முந்­தைய தினம் முதல்­வர் சொன்ன பொய்­­களுக்கு எதி­ராக எ.வ. வேலு பேச முற்­ப­டு­கி­றார். உடனே, “அது­சம்­பந்­த­மான விவ­ரங்­க­ளுக்­குள் போகா­தீர்­கள்” எனச் சபா­நா­ய­கர் பதற்­ற­மா­கத் தடுக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தி.மு.க. வைத்த கோரிக்கை ஒன்றே ஒன்­று­தான்: “நீதி­மன்ற விசா­ர­ணை­யில் இருக்­கும் அம­லாக்­கத்­துறை வழக்கு 
விவ­ரங்­களை முதல்­வர் சட்­ட­ச­பை­யில் வாசிப்­பது அவை மர­புக்கு எதி­ரா­னது. அதே­போல மிசா­வில் தி.மு.க. தலை­வர் கைது செய்­யப்­பட்­டது குறித்­தும், சர்க்­கா­ரியா கமி­ஷன் தொடர்­பா­க­வும் முதல்­வ­ரும் அவ­ரது அமைச்­சர்­க­ளும் பேசி­யவை ஆதா­ர­மற்ற அவ­தூ­று­கள். எனவே, அவற்றை அவைக்­கு­றிப்­பி­லி­ருந்து நீக்க வேண்­டும்” என்­ப­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆனால், “முதல்­வர் பேசி­ய­தெல்­லாம் பொது­வெ­ளி­யில் இருப்­பவை; அதைப் பேசு­வ­தில் தவ­றில்லை, எனவே நீக்க 
முடி­யாது” என்று சபா­நா­ய­கர் உறு­தி­யா­கக் கூறி­விட்­டார். த.வெ.க. அமைச்­சர்­கள் கூறிய சில அவ­தூ­று­களை அவ்­வப்­போது அவைக்­கு­றிப்­பி­லி­ருந்து நீக்­கித் தன்னை ஜன­நா­ய­க­வா­தி­யா­கக் காட்­டிக்­கொண்ட சபா­நா­ய­கர், முதல்­வ­ரின் பேச்­சி­லி­ருந்த வன்­மம் நிறைந்த பச்­சைப் பொய்­க­ளை­யும் அவை­ம­ரபு மீறிய பேச்­சு­க­ளை­யும் “பொது­வெ­ளி­யில் இருப்­ப­வை­தானே?” எனக் கடந்து செல்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">பொது­வெ­ளி­யில் இருப்­ப­வை­யெல்­லாம் சட்­ட­ச­பை­யில் பேச­லாம் என்­றால், முதல்­வர் விஜய் குறித்­தும், அவ­ரது கடந்த காலம் குறித்­தும், கோட­நாடு எஸ்­டேட்­டில் கைகட்டி நின்­றது குறித்­தும் பொது­வெ­ளி­யில் இருக்­கும் எத்­த­னையோ விஷ­யங்­­களைச் சட்­ட­ச­பை­யில் பேச சபா­நா­ய­கர் அனு­ம­திப்­பாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">அவ­தூறு செய்ய முத­லமைச்­ச­ருக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">தனி உரி­மையா? :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆதவ் அர்­ஜுனா ஏதே­னும் ஓர் அவ­ தூ­றைச் சொல்­வார்; உடனே எதிர்ப்­புத் தெரி­வித்­துத் தி.மு.க.வினர் எழுந்து நிற்­பார்­கள் அல்­லது குரல் கொடுப்­பார்­கள். உடனே அவர், “நாங்­கள் எழுந்து நின்­றால் என்­னா­கும் தெரி­யுமா? நாங்­கள் குரல் எழுப்­பி­னால் என்­னா­கும் தெரி­யுமா?” என்று தன் பின்­னால் இருக்­கும் த.வெ.க. உறுப்­பி­னர்­க­ளைக் காட்டி மிரட்ட முயல்­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">உடனே சபா­நா­ய­கர், “வேண்­டாம்... வேண்­டாம்...” எனச் சமா­தா­னப்­ப­டுத்­து­வார். த.வெ.க. உறுப்­பி­னர்­கள் அமை­தி­யாக உட்­கார்ந்­தி­ருப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இதன் பின்­ன­ணி­யில் உள்ள ‘திரைக்­கதை’ என்­ன­வென்­றால்  த.வெ.க. அமைச்­சர்­க­ளைத் தனி­ந­பர் தாக்­கு­தல் செய்­ய­வும் அவ­தூறு பரப்­ப­வும் தொடர்ந்து அனு­ம­திப்­பது; அதைத் தி.மு.க. உறுப்­பி­னர்­கள் எதிர்க்க முயன்­றால் உடனே, “அடிக்க வரு­கி­றார்­கள்; எங்­க­ளைப் பேச­வி­டா­மல் செய்­கி­றார்­கள்; நாங்­கள் பாருங்­கள் எவ்­வ­ளவுஅமை­தி­யாக இருக்­கி­றோம்” என 
த.வெ.க. அமைச்­சர்­களை நடிக்­க­விட்டு தி.மு.க.வி­னர் வன்­மு­றை­யா­ளர்­கள்­போல  ஒரு  பொய்த் தோற்­றத்தை 
உரு­வாக்­கு­வது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இந்த நாட­கத்­தின் உச்­சக்­கட்­டம்­தான் கூட்­டத்­தொ­ட­ரின் இறுதி நாளில் நிகழ்ந்­தது. முதல்­வர் விஜய்­யின் ஆதா­ர­மற்ற அவ­ தூ­றுப் பேச்சை அவைக்­கு­றிப்­பி­லி­ருந்து நீக்க வலி­யு­றுத்­திய தி.மு.க. உறுப்­பி­னர்­கள் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்­ட­னர். கூட்­ட­தொ­டர் முழுக்க அவ்­வப்­போது த.வெ.க. அமைச்­சர்­க­ளின் அவ­தூ­றுப் பேச்­சு­களை அவைக்­கு­றிப்­பி­லி­ருந்து நீக்­கிய சபா­நா­ய­கர் அந்­தப் பேச்­சு­க­ளை­விட பல மடங்கு மோச­மான முதல்­வர் விஜய்­யின் பேச்சை அப்­ப­டியே ஏற்­கி­றார் எனில் அவையை நடத்­து­வ­தில் இவ­ரது அள­வு­கோல்­தான் என்ன? அவ­தூறு செய்­வ­தில் முத­ல­மைச்­ச­ருக்கு 
மட்­டும் ஏதே­னும் தனி­யு­ரிமை இருக்­கி­றதா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">திரைப்­ப­டங்­க­ளில் குற்­றத்தை விசா­ரிக்­கும் போலீஸ் அதி­கா­ரியே கடை­சி­யில் வில்­ல­னாக வெளிப்­ப­டும் திரைக்­க­தையை எத்­த­னையோ முறை பார்த்­தி­ருக்­கி­றோம். இப்­போது அதைச் சட்­ட­மன்­றத்­தி­லும் 
பார்க்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">வர­லாற்றை அழிப்­ப­வர்­க­ளின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">வழி­முறை:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">‘தி.மு.க. தலை­வர் மு.க. ஸ்டாலின் மிசா­வில் கைது செய்­யப்­ப­ட­வில்லை’ என்ற பொய், ஒரு­கா­லத்­தில் பா.ஜ.க.விற்­காக ஊழி­யம் செய்து, 
இப்­போது தலை­ம­றை­வாக இருக்­கும் ஒரு ‘பிளாக்­மெ­யில்’ ஊட­க­வி­ய­லா­ளர் பரப்­பிய கட்­டுக்­கதை. பின்­னர் அ.தி.மு.க.வில் அமைச்­ச­ராக இருந்த மா.ஃபா. பாண்­டி­ய­ரா­ஜன் அந்­தப் பொய்யை வழி­மொ­ழிந்து பேசி­னார். தி.மு.க. அதை அப்­போதே எதிர்த்து அம்­ப­லப்­ப­டுத்­தி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">பா.ஜ.க.வின் வழி­யில் ஆட்சி செய்­து­வ­ரும் முத­ல­மைச்­சர் விஜய்­யும், அதே பா.ஜ.க. வழி­யில் வந்த அமைச்­சர் நிர்­மல் குமா­ரும் அந்­தப் பச்­சைப் பொய்யை மீண்­டும் சட்­ட­மன்­றத்­தி­லேயே கூறி­யி­ருப்­பது இந்­தக் கட்­டுக்­க­தை­யின் தொடர்ச்­சியே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இந்­தப் பொய்யை மறுத்து, மேனாள் நீதி­ய­ர­சர் கே.சந்­துரு அவர்­கள், தி.மு.க. தலை­வர் மு.க. ஸ்டாலின் மிசா கொடு­மை­களை அனு­ப­வித்­ததை ‘இஸ்­மா­யில் கமி­ஷன்’ அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் உறு­தி­ப­டச் சான்­ற­ளித்­தி­ருக்­கி­றார். தி.மு.க. தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் எமர்­ஜென்சி எதிர்ப்­புப் போராட்ட வர­லாற்றை (Legacy) மறைக்க வேண்­டும் என்ற தொடர் சதி­யின் ஒரு அங்­கம்­தான் விஜய்­யின் பேச்­சும் 
அவ­ரது அமைச்­சர்­க­ளின் பேச்­சும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தனக்­கென வர­லாறு எது­வும் இல்­லா­த­வர்­கள் பிற­ரது வர­லா­று­க­ளைத் திரிப்­பார்­கள்; அல்­லது இழி­வு­ப­டுத்­து­வார்­கள். அதை அழிக்க முயற்­சிப்­பார்­கள். ஜவ­ஹர்­லால் நேரு­வின் வர­லாற்றை மோடி எப்­படி அழிக்க விரும்­பு­கி­றாரோ, அதே­ 
போ­லத்­தான் கலை­ஞ­ரின் வர­லாற்­றை­யும் தி.மு.க. தலை­வ­ரின் வர­லாற்­றை­யும் விஜய் அழிக்க ஆசைப்­ப­டு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">காக்­கை­கள் குறுக்கே பறப்­ப­தால் 
சூரி­ய­னின் ஒளி மறைந்­து­வி­டு­வ­தில்லை!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>