<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,67,957,904" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Sep 10 2026 03:59:28 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260910T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="10092026-VLR-06" position.sequence="06" ex-ref="10092026-VLR-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="50">மாண்பு காத்த எதிர்க்கட்சித் தலைவர் </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="50">மாண்பைக் கெடுத்த முதலமைச்சர்! </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup853820_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="17">சு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தந்திர இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சி, அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியும் என்ற வரலாற்றைப் படைத்தது பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம். முதலமைச்சர் அண்ணா அவர்கள் காவல்துறை (உள்துறை)க்கும் பொறுப்பு வகித்தார். அதற்கு முன், காங்கிரஸ் முதலமைச்சரான காமராஜர் ஆட்சிக் 
காலத்தில் பக்தவத்சலம் போலீஸ் இலாகா அமைச்சராக இருந்தார். அதன்பிறகு, பக்தவத்சலம் ஆட்சிக் காலத்தில் போலீஸ் இலாகாவுக்கு கக்கன் அமைச்சராக இருந்தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர் அண்ணா அவர்களே காவல்துறையை ஏற்றுக் கொண்டது போல, அவரது மறைவுக்குப் பிறகு முதலமைச்சரான கலைஞரும் காவல்துறைக்குப் பொறுப்பு வகித்தார். அ.தி.மு.க. ஆட்சியிலும் யாரெல்லாம் முதலமைச்சர்களாக இருந்தார்களோ அவர்களே காவல் துறைக்குப் பொறுப்பு வகித்தனர். திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சரான கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காவல்துறைக்குப் பொறுப்பு வகித்தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, ஒவ்வொரு  துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும். அதில் ஆளுங்கட்சி–எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். அவர்கள் வைக்கின்ற கோரிக்கைகள், குற்றச்சாட்டுகள், எழுப்பு கின்ற கேள்விகள் ஆகியவற்றுக்கு காவல் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் பதிலுரை அளித்து, காவல்துறையினரின் நலனுக்கானப் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள். பேரறிஞர் அண்ணா காலம் முதல் கழகத் தலைவர் திராவிட நாயகர் ஆட்சிக்காலம் வரை இதுதான் நடைமுறை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெரும்பாலும், காவல்துறை மானியக் கோரிக்கைதான் அந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதிக்கட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படும். உறுப்பினர்களின் உரை, எதிர்க்கட்சித் தலைவர் உரை ஆகியவற்றுக்குப் பிறகு முதலமைச்சர் பதிலளிக்கும் நாளுடன் கூட்டத் தொடர் நிறைவடையும். முதல் நாள் எதிர்க்கட்சித் தலைவர் பேசினால், மறுநாள் முதலமைச்சர் பதிலளிப்பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">த.வெ.க ஆட்சியில் எல்லாமே தாறுமாறு தான். சட்டமன்றக் கூட்டத்தொடரில் சில துறைகளின் மானியக் கோரிக்கைகள் மிச்சமிருந்த நிலை யிலேயே, அவற்றுக்கு முன்னதாக காவல்துறை மானியக் கோரிக்கை இடம்பெற்றுவிட்டது. அதில் எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றிய பிறகு, 3 நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் தான் முதலமைச்சர் பதில் சொல்வது போல, பேரவை நிகழ்வுகள் திட்டமிடப் 
ப ட்டன. எதிர்க்கட்சித்  தலைவர்   உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செப்டம்பர் 3ஆம் நாள் காவல்துறை மானியக் கோரிக்கையின் மீது உரையாற்றினார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தமிழ்நாட்டில் கடந்த 100 நாட்களில் சட்டம்–ஒழுங்கு எந்தளவுக்கு சீர்குலைந் துள்ளது என்பதை ஆதாரங்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடுத்துரைத்தார். 
த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும், த.வெ.க. நிர்வாகிகள் மீதும் த.வெ.க.வைச்சேர்ந்தவர்களே பாலியல் குற்றச் 
சாட்டுகளைத்தெரிவித்திருப்பதை பேரவை யில் வெளிப்படுத்தினார். தமிழ்நாட்டில் நாள்தோறும் தொடர்ச்சியாக நடந்து வரும் கொலைகளை சுட்டிக்காட்டி, “கறிக்கடையில் கூட இந்த அளவுக்கு வெட்டுவதில்லை” என்றார். 116 நாட்களில் 200க்கும் அதிகமான கொலைகள் நடந்திருப்பதைப் பட்டியலிட்டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எதிர்க்கட்சித் தலைவர் பேசியது காவல்துறை மானியக் கோரிக்கையின் மீதுதான். ஆனால், அந்தத் துறைக்குப் பதிலளிக்கும் முதலமைச்சர் எதுவும் பேச வில்லை. பிற துறை அமைச்சர்கள் குறுக்கிட்டுப் பேசினார்கள். சத்தம் போட்டார்கள். எதிர்க்கட்சித் தலைவர் மிகவும் நிதானமாக, “தொலைக்காட்சித் தொடரில் இவருக்குப் பதில் அவர் என்று போடுவது போல பேசுகிறீர்கள். நான் பேசுவது காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில்தான்.  நீர்ப் பாசனத் துறை, பொதுப்பணித்துறை விவாதத்தில் அல்ல. முதலமைச்சருக்குப் பதிலளிக்க 3 நாட்கள் அவகாசம் உள்ளது. நன்றாகத் தயார் செய்து கொண்டு வந்த பதில் தரட்டும். குட்டிக்கதைகள், விதண்டா வாதங்கள் போன்ற திசைதிருப்பும் வேலைகள்வேண்டாம்” என்று தெளி வாகவே குறிப்பிட்டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முதலமைச்சர் விஜய் எழுந்து, “எல்லாக் கேள்விகளுக்கும்பதிலளிக்கிறேன். ஆனால் யாரும் அவையை விட்டு ஓடக்கூடாது என உத்தரவாதம் தர வேண்டும்” என்று பேரவைத் தலைவரிடம் சொல்லிவிட்டு, அடுத்த நொடியே அவர் அந்த அவையை விட்டு வெளியேறி விட்டார். அது முதலமைச்சரின்  அலுவல் சார்ந்த உரிமை என்றுகூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால்,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">யாரும் ஓடக்கூடாதுஎன்று உத்தரவாதம் கேட்ட முதலமைச்சர், தனது பதிலுரையில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய 15 கேள்விகளில் எதற்காவது பதில் கொடுத்தாரா? இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க. ஆட்சியில் முறைகேடுகள் நடந்ததாகச் சொல்லி, அது தொடர்பான கோப்புகள் தனது மேசையில் இருப்பதாக ஏற்கனவே சொல்லியிருந்த முதலமைச்சர், அந்த கோப்புகளின் விவரங்களை ‘ஓப்பன்’ செய்வதாக சொன்னார். ஆனால், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் உள்ள குற்றச்சாட்டுகளை மட்டுமே படித்தார். குற்றச்சாட்டுகளே தீர்ப்புகளாகி விடுமா? அதுவும் இணைய தளங் களிலேயே வெளியிடப்பட்ட விவரங்களை வெளியிடுவதுதான் கோப்புகளைத் திறக்கிற இலட்சணமா? இந்த அளவுக்குத் தான் விஜய்க்கு சட்ட நடைமுறை தெரிந்தி ருக்கிறதா? என சட்டமன்ற நிகழ்வுகளின் நேரலையைப் பார்த்த பொதுமக்களுக்கு சந்தேகம் வந்தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதற்கு மேல் தனக்கு எதுவும் தெரியாது என்பதை உறுதி செய்வது போல,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">காவல்துறைமானியக் கோரிக்கைக்கு தொடர்பே இல்லாத, 50 ஆண்டுகளுக்கு முந்தைய மிசாகைதுகள், சர்க்காரியா கமிஷன் விசாரணை பற்றி யாரோ எழுதிக் கொடுத்ததை அப்படியே வாந்தி எடுப்பதுபோல முதலமைச்சர் பேசத் தொடங்கிவிட்டார். வாந்தி எடுத்தால் சத்தம் அதிகமாகவும், சகிக்க முடியாததாகவும்  தான் இருக்கும். விஜய்யின் பேச்சும் அப்படித்தான் இருந்தது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க.வுக்கு எதிராக 50 ஆண்டுகளாக பரப்பப்படும் பொய்களையும் அவதூறு களையுமே விஜய்யும் சட்டமன்றத்தில் பேசினார். தனது பொதுவாழ்க்கையையே, எமர்ஜென்சி காலத்து மிசா சிறைவாச சித்திரவதைகளை எதிர்கொண்ட ஜனநாயகப் போராளியாகத் தொடங்கி,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தியாகத் தழும்பேறிய தலைவரான கழகத் தலைவர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களை உடல்ரீதியாக இழிவு செய்யும்விதத்தில் விஜய் செய்த சைகை, முதலமைச்சர்என்ற மதிப்புமிகுந்த பொறுப்பையே இழிவுபடுத்தும் விதத்தில்தான் இருந்தது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எத்தகைய மாண்புமிக்க தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இப்படியொரு முதலமைச்சரா என்று எல்லாருமே முகம் சுழிக்கும் வகையில் விஜய் நடந்து கொண்டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சர்க்காரியா கமிஷன் அறிக்கை பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமல் முத்தமிழறிஞர் கலைஞர், முரசொலி மாறன் ஆகியோர் மீதும் அவதூறு வாந்தி எடுத்தார் விஜய். காவல்துறை மானியக் கோரிக்கைக்கு சம்பந்தமில்லாமல்  முதலமைச்சர் பேசுவதையும், அவருடைய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை – வரலாற்றைத் திரிப்பவை என்பதை எடுத்துரைக்கும் வாய்ப்புக்காக தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் எழுந்து நின்றனர். தி.மு.க தரப்பில் பதிலளித்துப் பேசுவதற்கு வாய்ப்பை மறுத்து, ஜனநாயகத்தின் வாய்க்குப் பூட்டுப் போட்டுவிட்டார் பேரவைத் தலைவர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஜனநாயக உரிமை மறுக்கப்பட்ட பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் ஊடகத்தினரை சந்தித்துப் பேசினார். தி.மு.க. எழுப்பிய எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் விஜய் தன் போக்கில் பேசியதையும், எழுதிக் கொடுத்தவற்றை ஒப்புவித்து, ரீல்ஸ் போடுவதில் மட்டுமே கவனம்செலுத்தியதையும் வெளிப் 
படையாகஎடுத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர், 100 நாட்களிலேயே த.வெ.க. ஆட்சியில் ஊழலுக்கானஅடித்தளம் போடப் பட்டிருப்பதை பெயர்களைக் குறிப்பிட்டேகுற்றம் சாட்டினார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதுதான் தி.மு.க. கடைப்பிடிக்கும் சட்டமன்ற மாண்பு. அந்த மாண்பைக் கெடுக்கும் வகையிலேயே த.வெ.க. அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கலைஞர் ஆட்சிக்காலத்தில் காவல் 
துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரை என்றால் காவல்துறையில் பணியாற்றுவோர் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். ஊடகத்தினர் ஆர்வத்துடன் சட்டமன்ற செய்திகளை சேகரிப்பார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காவல்துறை என்பது நல்லவர்களுக்கு நண்பனாகவும், தீயவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும்  செயல்பட வேண்டும் என்பதையும், சட்டம்–ஒழுங்கைப் பராமரிப்பதில் அரசியல் தலையீடின்றி நடுநிலையாக செயல்பட வேண்டும் என்பதை முதலமைச்சர் கலைஞர் வலியுறுத்துவார். காவல் மரணங்களால் மனித உரிமைகள் பறிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச் சாட்டுகளுக்கு, உரிய முறையில் பொறுப்பேற்று பதிலளிப்பார்.  அதன்பிறகு காவல்துறைக்கான புதிய அறிவிப்புகளை வெளியிடுவார். முதன்முதலாக போலீஸ் கமிஷன், காவலர்களுக்கான வீட்டு வசதி வாரியம்,  காவலர் குறைத் தீர்ப்பு நடவடிக்கைகள் எனப் பலவும் கலைஞர் ஆட்சியின் காவல்துறை மானியக் கோரிக்கையின் மைல்கற்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கலைஞர் வழியில் திராவிட மாடல் நாயகரான கழகத் தலைவர் ஆட்சியிலும் காவல்துறை மானியக் கோரிக்கையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளைப் புறக்கணிக்காமல், அவற்றுக்கு உரிய விளக்கங்களையும், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் விரிவாகத் தெரிவித்து, காவலர்கள் நலனுக்கான அறிவிப்புகளை வெளியிடுவார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விஜய் ஆட்சியில் காவலர்கள் தங்கள் துறை தொடர்பான மானியக் கோரிக்கை களில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்ப்புடன் இருந்தனர். எதையெதையோ வாந்தி எடுத்து, சட்டமன்ற மாண்பினைக் கெடுத்த விஜய், காவலர்கள் நலனுக்காக பெரிதாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">வாக்களித்த மக்களைப் போலவே, காவல்துறையினரும் த.வெ.க. அரசிடம் எதிர்பார்த்து, ஏமாந்து நிற்கின்றனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>