<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,376,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Sep 11 2026 03:30:42 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260911T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="11092026-CBE-02" position.sequence="02" ex-ref="11092026-CBE-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#0000ff" boxBorderWeight="1.99193248209899">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup845611_02_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">வி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஜய்­யின் அசிங்­க­மான, கீழ்த்­த­ர­மான, நாற்­ற­ம­டிக்­கும் அர­சி­யல் தமிழ்­நாட்­டையே மிக­மிக மோச­மான நிலை­மைக்­குத் தள்ளி வரு­கி­றது. முத­ல­மைச்­சர் நாற்­கா­லி­யில் அமர்ந்து கொண்டு நாட்டு மக்­க­ளுக்கு ஒரு நன்­மை­யும் செய்­யத் துப்பு இல்­லாத விஜய், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத் தலை­வர் – திரா­விட நாய­கன் – தியா­கத்­தின் அடை­யா­ள­மான மு.க.ஸ்டாலினை 
அசிங்­கப்­ப­டுத்­து­வ­து­தான் தனது ஒரே வேலை எனச் செய்து வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மிசா­வில் கைது செய்­யப்­பட்டு ஓராண்டு காலம் சிறை­யில் இருந்­ததை கொச்­சைப்­ப­டுத்தி விஜய் காட்­டிய சைகை­யும், அது தொடர்­பாக அமைச்­சர் 
நிர்­மல்­கு­மா­ரின்  பொய் மூட்­டை­க­ளும்  சட்­ட­மன்­றத்­தில் அரங்­கேறி சட்­ட­ 
மன்­றத்­தையே அசிங்­கம் ஆக்­கி­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஓராண்டு காலம் அல்ல, ஒரு நாள் கூட ஜெயி­லுக்­குள் தாங்க 
மாட்­டார் விஜய். சினி­மா­வில் சிறை­யில் இருக்­க­லாம். அடி­வாங்­கு­ வ­தைப் போல நடிக்­க­லாம். ஆனால் உண்­மை­யான சிறை, அது­வும் மிசா சிறை என்­பது அனு­ப­வித்­துப் பார்த்­த­வர்­க­ளுக்­குத் தான் அந்த வேதனை தெரி­யும். அதைக் கொச்­சைப்­ப­டுத்­தும் போது நாம் அடை­யும் வேதனை அள­வுக்கு அதி­க­மா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">“முன்­னாள் முத­ல­மைச்­சர் மு.கரு­ணா­நி­தி­யின் மக­னா­கிய மு.க.ஸ்டாலின் (வயது 23) சட்­டத்தை தன் கையில் எடுத்­துக்­கொண்டு மாநி­லத்­தில் சட்­ட­ ­விரோ­தத் தாக்­கு­தல்­க­ளில் ஈடு­பட்டு வரு­கி­றார். இவர் கட்­சி­யால் நடத்­தப்­­படும் பல்­வேறு பொதுக்­கூட்­டங்­க­ளில் பங்­கேற்று, பிரி­வி­னை­வாத மற்­றும் அவ­ச­ர­நி­லைக்கு எதி­ரான கட்­சி­யின் கொள்­கை­க­ளைப் பரப்பி வரு­கி­றார். மாநில அர­சின் சொந்­தத் தவ­று­க­ளுக்­கும் தோல்­வி­க­ளுக்­கும் மத்­திய அரசே கார­ணம் என்று கூறி, மத்­திய 
அர­சுக்கு எதி­ராக மக்­க­ளைத் தூண்­டி­விட்டு வரு­கி­றார். மாநி­லச் சட்­ட­மன்­றத்­தின் பத­விக்­கா­லம் நீட்­டிக்­கப்­ப­டா­விட்­டால் தமிழ்­நாட்­டில் புரட்சி வெடிக்­கும் என்று மிரட்­டும் அள­விற்கு இவர் சென்­றுள்­ளார். இவர் தேச விரோத, அவ­ச­ர­நிலை எதிர்ப்பு மற்­றும் தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கு 
எதி­ரான வலு­வான கருத்­துக்­க­ளைக் கொண்­ட­வர். இவர் தொடர்ந்து சுதந்­தி­ர­மாக நட­மா­டு­வது தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்­கும் பொது அமை­தி­யைப் பரா­ம­ரிப்­ப­தற்­கும் கேடு விளை­விப்­ப­தாக அமை­யும். எனவே, 
‘உள்­நாட்­டுப் பாது­காப்­புப் பரா­ம­ரிப்­புச் சட்­டம், 1971’–இன் பிரிவு 
3(1)(a)(ii) மற்­றும் பிரிவு 3(1)(e) ஆகி­ய­வற்­றின் கீழ் இவ­ரைக் காவ­லில் வைப்­பது அவ­சி­ய­மா­கும்” என்று 1–3–1976 அன்று கூடு­தல் காவல் துறைத் தலை­வர் மற்­றும் காவல் ஆணை­யர் உத்­த­ர­விட்டு கைது 
செய்­யப்­பட்­டார் தலை­வர் மு.க.ஸ்டாலின். நிர்­மல்­கு­மா­ருக்கு தமிழ் வாசிக்­கத் தெரி­யு­மா­னால் இதைப் படிக்க வேண்­டும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மிசா­வில் கைதான போது – அன்­றைய இரவு எப்­படி இருந்­தது என்­பதை சிட்­டி­பாபு தனது சிறை டைரி­யில் எழுதி இருப்­பார்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">“அன்­றி­ரவு ஒரு மணி இருக்­கும். என் தம்பி ஸ்டாலின் சிறைக்கு அழைத்து வரப்­பட்­டான். பாவம் புது திரு­ம­ணப் பிள்ளை. முழு வாழ்வை அவன் பெறு­வ­தற்கு முன்­னால் அவ­னுக்கு முள்­வேலி.  சிறை உணவை தம்பி (ஸ்டாலின்) சுவைத்­தான். பசியோ என்­று­கூட எண்­ணி­னேன். இல்லை பழக்­கப்­ப­டுத்­திக் கொள்­ளவே  என்­றான். இது­தானே இனி­மேல் உணவு நமக்கு என்று என்­னைக் கேட்­டான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முத­லில் நான் தாக்­கப்­பட்­டேன். பின்­னர் தம்பி தாக்­கப்­பட்­டான். 
தமி­ழ­கத்­தின் முதல் அமைச்­ச­ரின் மகன் என்று நேற்­று­வரை அறிந்த அந்த ஆசி­ரி­யன் (சுரு­ளி­ரா­ஜன்) தன் கால் பூட்­ஸால் அவன் அழ­கிய முகத்­தைச் சுவை பார்க்க உதைத்­தான். அடுத்து கொலை­கா­ரன் 
ஒரு­வன் ஓங்­கிய கோல் அவ­னது தோள்­பட்­டை­யில்! காக்கி உடை அணிந்த வார்­டர் ஒரு­வன் ஸ்டாலின் கன்­னத்­தில் அறைந்­தான். கொலை வெறி­யர்­கள் தடி­க­ளால் தாக்­கி­னார்­கள். கண்­டேன் காட்­சியை! இவர்­கள் இவனை அடித்தே கொன்று விடு­வார்­கள் என்ற உணர்வு ஏற்­பட்­டது! மற்­ற­வர்­கள்­தான் மண்­ணு­டன் சாய்ந்து கிடப்­ப­வர்­க­ளாக இருக்­கின்­ற­னர்! உத­விக்கு எழ அவர்­கள் முடி­யா­த­படி அரு­கில் எம­தூ­தர்­கள்! என்ன செய்­வது;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">எனக்­கென்று ஓர் துணிவு! திடீ­ரென்று குறுக்கே பாய்ந்­தேன்! 
தம்­பியை தள்­ளிக் கொண்டே தடி­கள் கழுத்­தில்! அவை­கள் அடி­கள் அல்ல! உலைக்­க­ளத்­தில் பழுத்­துக் காய்ச்­சிய இரும்பை தட்­டிப் பதப்­ப­டுத்­தும் உளி­யாக மாற்­றி­வி­டும் சம்­மட்டி அடி­க­ளாக எனக்கு அமைந்­தது! கழுத்­தில் அத்­த­னை­யும் தாங்­கிக் கொண்­டேன். அன்­புத்­தம்பி ஸ்டாலின் அறைக்­குள்ளே ஓடி­விட வழி கிடைத்­தது. வீரா­சா­மியை தூக்கி 
நிறுத்தி ஒரு குத்­து­விட்டு உள்ளே தள்­ளி­னர். நீலம் மூச்­சுத் திணற 
வி.எஸ்.ஜி.யை தாங்­கிப் பிடித்து அழைத்­துச் சென்­றார்! தம்பி ஸ்டாலினோ தான் பட்ட அடி­ ம­றந்து, தன் உடன்­பி­றப்­பு­களை உள்ளே அழைத்­துச் செல்­லும் காட்சி கண்­டேன். அவர்­க­ளைப் படுக்க வைக்க தன் தோள் துண்டை தரை­யில் போட்டு, தாக்­கப்­பட்­ட­வர்­க­ளைத் தாங்கி படுக்க வைத்த காட்சி கண்­டேன். என்னை ஒரு­வன் வாடா தம்பி, 
வா என்று வாயில் ஓர் குத்­து­விட்டு உள்ளே தள்­ளி­னான். சர்­வா­தி­கா­ரத்­தின் நச்சு நாக்கு கொடிய காற்­றில் நெடிய மரம் சாய்ந்து விழு­வது போல் அறை­யில் நான் வீழ்ந்­தேன்! இல்லை தள்­ளப்­பட்­டேன். அறை 
முழு­வ­தும் இருள் அல்­லவா? நினைவு வேறு எனக்­குப் பாதி­யா­கத்­தான் இருக்­கி­றது! பூட்டு பூட்­டப்­பட்­டது! .....’’ இது­தான் சிட்­டி­பா­பு­வின் சிறை டைரி ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சிறைச்­சாலை சித்­தி­ர­வ­தை­கள் தொடர்­பாக நீதி­ய­ர­சர் எம்.எம்.இஸ்­மா­யில் தலை­மை­யில் ஆணை­யம் அமைத்­தார் அன்­றைய முத­ல­மைச்­சர் 
எம்.ஜி.ஆர். அந்த ஆணை­யத்­தில் வைக்­கப்­பட்ட மிக முக்­கி­ய­மான  
ஆவ­ணம் இந்த டைரி தான். தியாக மற­வன் சிட்­டி­பாபு 5.1.1977 அன்று உயிர் நீத்­தார் என்­ப­தும் தியாக வர­லாற்­றின் கண்­ணீர் பக்­கம் ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">வரு­மான வரி ரெய்­டில்  சிக்­கி­ய­போது முகத்தை மூடிக்­கொண்டு  ஓடிப்­போன விஜய் – தனது படம் ரிலீ­ஸுக்கு பிரச்­சினை என்­ற­தும் அன்­றைய முத­ல­மைச்­சர் ஜெய­ல­லி­தா­வைப் பார்க்க கொட­நாடு பங்­க­ளா­வில் காவ­லா­ளிக்­குப் பக்­கத்­தில் காத்­தி­ருந்த விஜய் –  கையைக் கட்டி வீடியோ போட்டு கத­றிய விஜய் – கரூ­ரில் 41 பேரை பலி­யும் பழி­யும் வாங்­கி­விட்டு ஓடிப்­போன விஜய் – சினி­மா­வில் கூட இப்­படி ஒரு காட்சி வைத்­தால் நடிக்­கக் கூட முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆனால் ஓராண்டு காலம் சிறைச்­சாலை சித்­தி­ர­வ­தையை  அனு­ப­வித்து வாழ்ந்­த­வர் தியா­கத்­தின் திரு­வு­ரு­வம் திரா­விட நாய­கன் மு.க.ஸ்டாலின். 
அவ­ரி­டம் விஜய், பகி­ரங்­க­மாக மன்­னிப்­புக் கேட்க வேண்­டும். இது­தொ­டர்­பாக  சட்­ட­ச­பை­யில்  தான் பேசி­யது அனைத்­தை­யும் திரும்­பப் பெற வேண்­டும். இவை அனைத்­தும் சட்­ட­ச­பைக் குறிப்­பு­க­ளில்  இருந்து நீக்­கப்­பட  வேண்­டும். இது எதை­யும் செய்­யா­மல், ‘எனது உடல்­மொழி தவ­றாக இருந்­தால்... புண்­பட்டு இருந்­தால்...’ என்­றெல்­லாம் நடிக்­கக் கூடாது. நடிக்­காதே நய­வஞ்­சகா!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>