<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,71,958,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Sep 11 2026 03:34:08 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260911T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="11092026-CBE-07" position.sequence="07" ex-ref="11092026-CBE-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame857755_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup858034_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup858035_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup858036_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup858037_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup858038_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup858039_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup858032_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">செளக்­கி­ய­மாய் இருக்­கி­றாயா என்று கேட்­க­லாம். ஆமாம், இருக்­கி­றேன் என்று சொல்­ல­லாம். அடிப்­பட்­டா­யாமே என்று நான் கேட்­ட­தற்கு அதை­யெல்­லாம் கேட்­கக்­கூ­டாது என்று என்­னி­டத்­தில் சொல்­லி­விட்டு, என் மக­னி­டத்­தில் அந்­தப் போலீஸ் அதி­காரி ஒரு பார்­வை­யைத் திருப்ப, அவன் கண்­கள் கலங்கி என்­னி­டத்­தில் சொன்ன அந்­தக் காட்­சி­யினை நான் மறந்­து­வி­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடி­ப­ட­வில்லை என்­று­தான் சொன்­னான். ஆனால், ஆம் அடி­பட்­டோம் என்று அவன் சொல்­லி­யி­ருப்­பா­னே­யா­னால் அன்று மாலையோ அல்­லது அடுத்த நாள் காலையோ அவன் மட்­டு­மல்ல, சிறைச்­சா­லை­யில் இருந்த அர­சி­யல் கைதி­கள் அனை­வ­ரும் அதே கோர நிலை­யைச் சந்­திக்க வேண்­டிய சூழ்­நிலை இருந்­தது என்­பதை நான் இந்த மாமன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எடுத்­துக்­காட்ட விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மு.க.ஸ்டாலின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சிட்­டி­பா­பு­வின் நாட்­கு­றிப்பு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சிட்­டி­பா­பு­வி­னு­டைய நாள்­கு­றிப்­புப் புத்­த­கம் பற்றி இங்கே பேசப்­பட்­டது. சிட்­டி­பாபு தான் மறை­வ­தற்கு முன்பு இப்­ப­டி­யொரு நிலை வரும் என்று எதிர்­பார்த்தா அந்த டைரியை எழு­தி­னான்? சிட்­டி­பா­புவை நமக்­கெல்­லாம் தெரி­யாதா? எங்­க­ளை­விட நெருங்­கிய நண்­பன் அல்­லவா சிட்­டி­பாபு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த சென்­னை­யில் மேய­ராக வீற்­றி­ருந்து அவன் ஆற்­றிய பணி­கள் மாற்­றா­ரும் புகழ்­கிற அள­விற்கு இருந்­தி­ட­வில்­லையா? நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நாடு மெச்­சு­கின்ற அள­வுக்கு, பேர­றி­ஞர் அண்ணா முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போது சிட்­டி­பாபு அவர்­க­ளின் போற்­று­த­லுக்­கும், பாராட்­டு­த­லுக்­கும் ஆளா­கின்ற அள­விற்கு பணி­களை ஆற்­றி­ட­வில்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவ­னு­டைய டைரி­யையா நாம் சந்­தே­கிக்­கி­றோம்? அவன் எழு­திய நாட்­கு­றிப்­பையா நாம் சந்­தே­கிக்­கி­றோம்? அவன் எழு­திய எழுத்­துக்­க­ளையா நாம் சந்­தே­கிக்­கி­றோம்? என்­பதை தயவு செய்து எண்­ணிப் பார்க்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்ப இஸ்­மா­யில் கமி­ஷன் வரும் என்று சிட்­டி­பாபு டைரி எழு­திய நேரத்­தில் எண்­ணி­யி­ருக்க முடி­யாது. அந்த விசா­ர­ணைக்கு இந்த டைரி சாட்­சி­யா­கச் செல்­லும் என்று கூட சிட்­டி­பாபு எண்­ணி­யி­ருக்க முடி­யாது. நடந்­த­வை­களை நடந்­த­வை­க­ளாக எழு­திக் கொண்டு வந்த டைரி­தான் சிட்­டி­பாபு எழு­திய அந்த நாள்­கு­றிப்­புப் புத்­த­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீதி­பதி இஸ்­மா­யில் அவர்­க­ளுக்கு கிடைத்த வலு­வான சாட்­சி­யங்­க­ளில் ஒன்­றாக அது இருந்­த­தால் அந்த அடிப்­ப­டை­யி­லும் வேறு பல சாட்­சி­யங்­க­ளின் அடிப்­ப­டை­யி­லும் தன்­னு­டைய அறிக்­கையை நமக்­குத் தந்­தி­ருக்­கி­றார். சிட்­டி­பா­பு­வின் நாட்­கு­றிப்­பின் பல்­வேறு பகு­தி­களை இந்த அறிக்­கை­யிலே இஸ்­மா­யில் அவர்­கள் சுட்­டிக்­காட்டி இருப்­பதை ஒரு­முறை இங்கே படிப்­ப­தின் வாயி­லாக இந்த அவை­யின் நட­வ­டிக்­கைக் குறிப்­பில் அது பதி­வா­கு­மே­யா­னால் சிட்­டி­பா­பு­வுக்கு நான் செய்த கடமை அதை­விட வேறு ஒன்­றும் இருக்க முடி­யாது என்று நான் கரு­து­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்த வீர­ம­ற­வ­னுக்கு என்­னு­டைய நண்­பர்,  உறுப்­பி­னர் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யைச் சேர்ந்த கோவிந்­த­ரா­சன் அவர்­கள் பேசும்­போது சிட்­டி­பா­பு­வி­னு­டைய குடும்­பத்­திற்கு ஐந்து லட்­சம் ரூபாய் நிதி தர­வேண்­டு­மென்று சொன்­னார்­கள். அது­கூ­டத் தேவை­யில்லை. ஆனால், அவன் எழு­திய டைரி இந்த அவைக் குறிப்­பில் ஏறு­வது இருக்­கி­றதே அது அந்த மாவீ­ர­னுக்கு நாம் காட்­டு­கிற மரி­யாதை என்று சொன்­னால் அது மிகை­யா­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அவன் எழு­து­கி­றான்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“மாலை 5 மணி மீண்­டும் உணவு களி­யு­டன்­கூ­டிய தட்டு, யாரோ பயன்­ப­டுத்­திய தட்­டுக்­கள், யாரோ பயன்­ப­டுத்­திய சிறு­நீர் பானை­கள், யாரி­டம் கேட்­பது, கேட்­டால் பதில் யார் சொல்­வது. இரவு 7.30 மணி. அறைக்­குள்ளே இருட்­டுத்­தான். ஆயி­னும் வெளி­வா­ச­லில் ஓரிரு விளக்­கு­கள். மங்­க­லான ஒளி­யில் எட்டு மணி­ய­ள­வில் சில உரு­வங்­கள் வரு­வ­தைக் காண முடிந்­தது. கார­ணம் நான் இருந்த இடம் வரு­வோ­ரைப் போவோ­ரைப் பார்க்­கும் வகை­யில் அமைந்­தி­ருந்­தது. காக்கி உடை­கள், வெள்ளை உடை­கள், சற்­றே­றக்­கு­றைய இரு­ப­துக்­கும் மேற்­பட்­டோர். சிறை அதி­கா­ரி­கள் இரு­வர். கயூம் – அ­ழ­கான பெயர். அன்பு என்ற சொல்­லுக்கு அளித்­திட்ட உருது சொல்­தான் கயூம். ஆமாம், அந்த அன்­பு­தான் அந்த அர­சி­யல் கைதி­களை அடித்­திட்ட ஆட்­க­ளு­டன் அங்கே நின்­றி­ருந்­தார்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“அவர் மட்­டு­மல்ல. அவர் கீழ் உள்ள அதி­கா­ரி­கள் உட்­பட அவ­ரது கைய­சை­வில் அத்­தனை பேரும் நாங்­கள் இருக்­கும் மண்­ட­பத்­திற்­குள் நுழைந்­த­னர். எப்­படி இரு கோடு­கள் தனித்­த­னியே படுக்க வைத்­தால் இருக்­குமோ அப்­ப­டிப்­பட்ட அமைப்­பில் அவர்­கள் நின்­றி­ருந்­த­னர். அவர்­க­ளது கையி­லி­ருந்த தடி­களை அவர்­கள் நீட்­டி­னால் ஏற்­ப­டும் அளவே இரு கோடு­க­ளுக்­கும் இடை­யே­யுள்ள இடை­வெளி. பட்­டா­ளத்­தின் வீரர்­க­ளைப்­போல் அவர்­கள் நின்­றி­ருந்­த­னர்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“திறக்­கப்­பட்ட கதவு பளீர் என்ற சத்­தத்­து­டன் திறந்து கொண்­டது. ஏதோ சினி­மா­வில் காணும் காட்சி போல் இருந்­தது. கொலை­கார கைதி­க­ளின் கைத்­த­டி­கள் அர­சி­யல்­வா­தி­க­ளின் உட­லைச் சுவைத்­துக் கொண்­டி­ருந்­தன. அல­றல், அழு­கு­ரல்­கள், ஐயோ, அப்பா, அம்மா என்­னும் அப­யக் குரல்­கள்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“ஓடு உள்ளே என்ற உத்­த­ரவு. சர்க்­கஸ் புலி, ஆட்­டுக்­குட்­டி­யின் தலை­யைத் தன் அகண்ட வாயில் வைத்­துச் சுவைக்­கா­மல் காண்­போ­ருக்கு வித்தை காட்­டு­வ­து­போல், கண­நேர அதிர்ச்சி. ஓடு என்­ற­
வு­டன் தீ வளை­யத்­தைத் தாண்­டிச் செல்­லும் சிங்­கம் போல் கூண்­டுக்­குள் அடங்­கி­யது.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“அறை நான்கு முடிந்து பூட்­டும் போடப்­ப­டு­கி­றது. அடுத்து நாம்­தான். பூட்டு திறக்­கப்­ப­டும் சப்­தம் 
கேட்­டது. கத­வைத் தள்­ளி­னார்­கள். ‘வாங்­கடா’ என்ற குரல்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“கதவு திறந்­த­தும் யார் முன்னே வெளி­யில் செல்­வது என்ற காலம் கத­வு­களை மூடப்­போ­வ­தில்லை. அர்ச்­ச­னைக்கு கொண்டு வந்த அர­சி­யல் மலர்­கள் அல்­லவா நாங்­கள். எனவே, திரும்­பிப் பார்த்­தேன். தீர்­மா­ன­மா­கவே முத­லில் வெளி­யில் வந்­தேன். பெயர் சொல்லி அழைத்­த­னர். எதிர்­பார்த்த ஆள் அல்­லவா நான். எனவே, ஓர் அடி எடுத்து வைப்­ப­தற்­குள் கன்­னத்­தில் வீழ்ந்த அறை­கள் அடடா… நிலைக்­கண்­ணாடி கல் பட்டு உடைந்து விழுந்­த­து­போல் எனக்­குத் தோன்­றி­யது.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“கண்­கள் கண­நே­ரம் காண்­பது எல்­லாம் காரி­ருள்­போல் இருந்­தது. இரு கோடு­க­ளுக்கு இடை­யில் தள்­ளப்­பட்ட எலி. ஆம் அவர்­கள் அடித்­த­தும் அப்­ப­டித்­தான். அவர்­கள் நினைத்­த­னர் இது எலி அல்ல, புலி என்று. கார­ணம் அத்­தனை அடிக்­கும் என் உடல் தரை நோக்கி விழ­வில்லை. தள்­ளி­னார்­கள் மதில் சுவர்­மீது. சட்­டென்று திரும்­பிக் கொண்­டேன். 
வயிற்­றில் எட்டி உதைத்து விட்­டான்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“வீரா­சாமி நெடு­ம­ர­மாக கீழே சாய்ந்து கிடந்­தார். வெறிக்­கூட்­டம் முரசு பறை அறை­வ­து­போல் இரு கைக­ளால் அடி கொடுத்­துக் கொண்­டி­ருந்­தது. ஒரு­பு­றத்­தில் இக்­காட்சி. பள்­ளிக்­கூட மாண­வன் பெஞ்சு மீது ஏறி நிற்­ப­து­போல் இரும்பு ஏணி அரு­கில் கன்­னத்­தில் கை வைத்­துக்­கொண்டு கத­றும் வி.எஸ். கோவிந்­த­ரா­சன். ஒரே குத்­துத்­தான் நீல­நா­ரா­ய­ண­னுக்கு. குள்ள உரு­வம் அவ­ருக்கு. மேலே நிமிர்ந்து பார்த்­திட, மார்­ப­கத்­தில் மற்­றொரு குத்து. முது­கில் இரண்டு தடி அடி. அவ்­வ­ள­வு­தான். குலை நோயில் கேவிக்­கொண்டு கீழே விழும் நோயா­ளி­போல் சுருண்டு விழு­வ­தைக் கண்­டேன்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“அருகே என் அன்­புத் தம்பி. ஆமாம் ஸ்டாலின்­தான். தமி­ழ­கத்து முன்­னாள் முத­ல­மைச்­ச­ரின் மகன் என்று நேற்­று­வரை அறிந்த அந்த சுரு­ளி­ரா­ஜன், தன் கால் பூட்­சால் அவன் அழ­கிய முகத்­தைச்சுவை­பார்க்க உதைத்­தான். அடுத்து கொலை­கா­ரன் ஒரு­வன் ஓங்­கிய கோல் அவ­னது தோள்­பட்­டை­யில். காக்கி உடை அணிந்த 
வார்­டர் ஒரு­வன் கன்­னத்­தில் கை நீட்­டி­னான்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“கண்­டேன் காட்­சியை. இவர்­கள் அவனை அடித்தே கொன்று விடு­வர் என்ற உணர்வு எனக்கு ஏற்­பட்­டது. மற்­ற­வர்­கள்­தான் மண்­ணு­டன் சாய்ந்து கிடப்­ப­வர்­க­ளாக இருக்­கின்­ற­னர். உத­விக்கு எழ அவர்­கள் முடி­யா­த­படி அரு­கில் எம­தூ­தர்­கள். என்ன செய்­வது? எனக்­கென்று ஓர் துணிவு. திடீ­ரென்று குறுக்கே பாய்ந்­தேன். தம்­பி­யைத் தள்­ளிக்­கொண்டே தடி­கள் கழுத்­தில். அவை­கள் அடி­கள் அல்ல. உலைக்­க­ளத்­தில் பழுக்­கக் காய்ச்­சிய இரும்­பைத் 
தட்­டிப் பதப்­ப­டுத்­தும் உளி­யாக மாறி விழும் சம்­மட்டி அடி­க­ளாக எனக்கு அமைந்­தது. கழுத்­தில் அத்­த­னை­யை­யும் தாங்­கிக் கொண்­டேன். அன்­புத் தம்பி அறைக்­குள்ளே ஓடி­விட வழி கிடைத்­தது.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஆர்க்­காடு வீரா­சாமி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“வீரா­சா­மி­யைத் தூக்கி நிறுத்தி ஒரு குத்­து­விட்டு உள்ளே தள்­ளி­னர். நீல­நா­ரா­ய­ணன் மூச்­சுத் திணற, வி.எஸ். கோவிந்­த­ரா­ச­னைத் தாங்­கிப் பிடித்து அழைத்­துச் சென்­றார். தம்­பியோ தான் பட்ட அடியை மறந்து, தன் உடன்­பி­றப்­புக்­களை அழைத்­துச் செல்­லும் காட்சி கண்­டேன். அவர்­க­ளைப் படுக்க வைக்க, தன் தோள்­துண்டை தரை­யில் போட்டு, தாக்­கப்­பட்­ட­வர்­க­ளைத் தாங்­கிப் படுக்­க­வைத்த காட்சி கண்­டேன்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“கொடிய காற்­றில் நெடிய மரம் சாய்ந்து விழு­வ­து­போல் அறை­யில் நான் வீழ்ந்­தேன். இல்லை, தள்­ளப்­பட்­டேன். அறை முழு­வ­தும் இருள் அல்­லவா? நினைவு வேறு எனக்­குப் பாதி­யா­கத்­தானே இருக்­கி­றது. பூட்டு பூட்­டப்­பட்­டது. உள்ளே அழு­கு­ரல், முன­கல், அப்பா, அம்மா என்ற ஒலி.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“அன்­புத் தம்­பியோ அரு­கில் வந்­தான். அண்­ணன் நீலத்­தை­யும், கோவிந்­த­ரா­ச­னை­யும் மார்­பில் சாய்த்­து­விட்டு, அவன் தன் பிஞ்­சுக் கரங்­க­ளால் என் முகத்­தைத் தட­விக் ­கொண்டே கேட்­டான்: ‘அண்ணே, இன்­னும் உயி­ரு­டன் இருக்­கி­றாயா?’ ஆமாம். அவன் கேட்­ட­தில் நியா­யம் இருக்­கி­றது. அடிக்க வந்­த­வர்­கள் அல்­லவே அவர்­கள். கொலை­வெ­றித் தாக்­கு­தல் அல்­லவா நடத்­தி­னார்­கள்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“‘அடி பலமா உனக்கு?’ என்­றேன். ‘அதெல்­லாம் இல்லை அண்ணே’ என்று பெற்­ற­வ­னைப்­போல் பேசி­னான், தெம்பு குறை­யக்­கூ­டாது என்­ப­தற்­காக. ‘தம்பி, உன்­னை­யும் அடித்­தார்­களா பாவி­கள்?’ என்­றேன். ‘இருக்­கட்­டும் அண்ணே’ என்று சொல்லி அவன் என்­னைத் தன் கரங்­க­ளால் அடி­பட்ட இடங்­க­ளைத் தட­விக் கொடுத்­துக்­கொண்டே, என் கிழிந்த சட்­டை­யைக் கழற்­றிட உத­வி­பு­ரிந்­தான்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“முகத்­தைத் துடைத்­துக்­கொண்டே, ‘தம்பி தண்­ணீர் தேவை’ என்­றேன். பாவம் அவன் என்ன செய்­வான்? அறை­யில் இருந்­தால்­தானே தர. அதற்­குள் அதட்­டல் குரல்: ‘யார்டா சிட்­டி­பாபு, வீரா­சாமி, நீல­நா­ரா­ய­ணன்; வாங்­கடா வெளியே.’”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“பூட்டு திறக்­கப்­பட்­டது. தம்­பி­யைப் பார்த்­தேன். அவன் போலும். பாவம் தண்­ணீர் கேட்­ட­தற்கு அவன் அப்­பொ­ழுது கண்­ணீர் விட்­டான். அந்­தக் காட்­சி­கள் இதய இணை­வு­கள் அல்­லவா?”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“அதி­கா­ரி­போல் வந்­த­வர்­கள் என்னை வீர­மணி இருந்த அறை எண் எட்­டில் தள்­ளி­னார்­கள். அது­போல் நண்­பர்­கள் வீரா­சா­மி­யை­யும், நீல­நா­ரா­ய­ண­னை­யும் தனித்­த­னியே பூட்­டி­ய­தைப்­போல், ஸ்டாலி­னை­யும் தனி­யாக்­கி­னர். அது பிரி­வின் முதற்­கட்­டம்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“அறை எட்டு. ஏற்­க­னவே அங்கு ஏழு பேர்; அத்­தோடு நானும். அடி­பட்ட வேகத்­தில் விடு­தலை ஆசி­ரி­யர் வீர­
ம­ணிக்கு முகம் வீங்­கி­விட்­டது. ஏற்­க­னவே அறுவை சிகிச்­சைக்கு ஆட்­பட்ட விடு­தலை சம்­பந்­தம் அடி­பட்­ட­போது, அவ­ரது அறுவை சிகிச்­சை­யில் மீண்­டும் அவதி. இதய நோயு­டன் வேத­னைப்­ப­டும் தியா­க­ரா­ஜன். இவர்­க­ளு­டன் நீதி­ப­தி­யின் மகன் சத்­தி­யேந்­தி­ரன். அன்­றி­யில் மேலும் மூவர். என்­னு­டன் சேர்த்து ஆக எட்டு. அறை­யும் எட்டு என்ற இலக்­கத்­தில்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“‘அடி பலமா?’ என்று ஆசி­ரி­யர் வீர­மணி கேட்­டார். அழு­வ­தைத் தவிர அவ­ருக்கு என்ன பதில் என்­னால் அப்­போது தர முடி­யும்?”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“கழுத்து, வயிறு, தோள், கை, கால் இவை­கள் போதாது என்று வீங்­கிய உத­டு­கள். இத்­த­னை­யும் பார்த்தே அவர்­கள் ‘எப்­ப­டித் தாங்­கி­னாய்?’ என்­ற­னர். என்ன செய்­வது? என்­னால் படுக்க, ஏன் நிற்க, நீட்டி உட்­கார முடி­யா­த­தால் சத்­தி­யேந்­தி­ரன் தாங்­கிப் பிடித்து சுவ­ரில் சாய்த்து உட்­கார வைத்­தார். வழக்­க­றி­ஞர் அவர். அவ­ரும் அடி­பட்­ட­வர்­தானே.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“சிறு­நீர் கழிக்க வேண்­டும் என்று எண்­ணி­னேன். நகர்ந்தே கம்பி அரு­கில் வந்­தேன். சிறு­நீர் வந்­தால்­தானே? வயிறு வெடித்­தி­டும் போன்ற பிரமை. அப்பா, அம்மா என்ற முன­கல்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது சிட்­டி­பா­பு­வின் டைரி. இறு­தி­யாக சில மாதங்­க­ளில் சிட்­டி­பா­பு­வுக்கு நீண்ட அமை­தியே வந்­து­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மிசா கைதி­யாக இருந்­த­வர்­கள் இந்­தச் சட்­ட­மன்­றத்­தில் உறுப்­பி­னர்­க­ளாக இருந்­தி­ருக்­கி­றார்­கள்; இப்­போ­தும் இருக்­கி­றார்­கள். நாடா­ளு­மன்­றத்­தில் உறுப்­பி­ன­ராக இருந்­தி­ருக்
­கி­றார்­கள்; இப்­போ­தும் இருக்­கி­றார்­கள். மேல­வை­யின் உறுப்­பி­ன­ராக இருந்­தி­ருக்­கி­றார்­கள்; இப்­போ­தும் இருக்­கி­றார்­கள். ஆனால் அவர்­கள் எல்­லாம் எந்த வகை­யில் நடத்­தப்­பட்­டார்­கள்? எப்­ப­டிப்­பட்ட கொடு­மைக்கு ஆளாக்­கப் 
பட்­டார்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வ­ள­வுக்­கும் யாரோ தனிப்­பட்ட ஒரு­வர்­தான் கார­ணம் என்று நான் கூறிட மாட்­டேன். இங்கே பேசிய பல நண்­பர்­கள் எடுத்­துக்­காட்­டி­யது போல் ஒன்­றைச் செய்­தார்­கள். அத­னு­டைய பல்­வேறு விளை­வு­கள் இந்த அள­வுக்­குக் கொண்டு வந்து விட்­டன என்­பதை யாரும் மறுத்­து­விட முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நெருக்­கடி நிலை என்ற அந்­தக் கோரப் பிசாசு அவிழ்த்­து­வி­டப்­பட்ட கார­ணத்­தால் இப்­ப­டிப்­பட்ட கொடு­மை­யான நிகழ்ச்­சி­கள் நாடு முழு­வ­தும் நடக்­கக் கார­ண­மாய் 
இருந்­தது என்­பதை யாரும் மறுத்­திட முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சாதி, மதம் கடந்த நிலை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அரசு நெருக்­கடி நிலை என்ற நிலையை வகுத்­தது. அதைத் தொடர்ந்து தி.மு.க. மற்­றும் உள்ள கட்­சி­கள் நெருக்­கடி நிலை கூடாது என்ற நிலையை எடுத்­தது. இது கொள்கை வேறு­பாடு. கொள்கை மாறு­பாடு அல்­லது கொள்கை முரண்­பாடு என்ற அள­வில் முடிந்­தி­ருக்க வேண்­டிய ஒன்றே 
அல்­லா­மல், சென்னை சிறைச்­சா­லையை மற்ற சிறைச்­சா­லை­ க­ளுக்­கெல்­லாம் பூச்­சாண்டி காட்­டு­கிற இட­மாக, தமிழ்­நாட்­டில் இருக்­கும் மக்­களை எல்­லாம் பீதி கொள்­ளச் செய்­கிற ஒரு நிலை­ய­மாக ஆக்­கிக் கொள்­ள­வும், எங்­கள் மீது போடப்­பட்­டி­ருக்­கும் சர்க்­கா­ரியா கமி­ஷ­னுக்­குக்­கூட சாட்­சி­க­ளைக் கட்­டா­யப்­ப­டுத்தி தயா­ரிக்­கின்ற இட­மா­க­வும் ஆக்­கிக் கொண்­டார்­கள் என்­றால், அந்த அதி­கா­ரி­கள் யாராக இருந்­தால் என்ன, எந்த மதத்­தைச் சேர்ந்­த­வர், எந்த வகுப்­பைச் சேர்ந்­த­வர், எந்த சாதி­யைச் சேர்ந்­த­வர், யாருக்கு வேண்­டி­ய­வர்­கள் என்­ப­தல்ல முக்­கி­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதி­கா­ரி­கள் எந்த வகுப்பு, எந்த மதம், எந்த சாதி, யாருக்கு வேண்­டி­ய­வர் என்று பார்த்­தால் மாத்­தி­ரம் போதுமா? அடிப்­பட்­ட­வர்­கள் யார்? அதி­கா­ரி­யிலே ஒரு­வர் இன்ன இனத்­தைச் சேர்ந்­த­வர் என்­றால், அடிப்­பட்ட சத்­தி­யேந்­தி­ரன் எந்த இனத்­தைச் சேர்ந்­த­வர்? அடிப்­பட்ட முத்­து­ரா­ம­லிங்­கம் எந்த இனத்­தைச் சேர்ந்­த­வர்? மறந்­து­விட முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கயூம் என்ற அதி­காரி தவறு செய்­தார் என்று இஸ்­மா­யில் என்ற நீதி­பதி தீர்ப்­ப­ளிக்­க­வில்­லையா? அறிக்கை தர­
வில்­லையா? அப்­ப­டிப்­பட்ட முடிவு எழு­த­வில்­லையா? இதிலே சாதி­கள், மதங்­கள், வகுப்­பு­கள் அனைத்­தை­யும் கடந்த ஒரு நிலை­மை­யைத்­தான் நாம் எடுக்க வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பாளை­யங்­கோட்டை சண்­மு­கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பாளை­யங்­கோட்டை சண்­மு­கத்­தைப் பற்றி இங்கே நண்­பர் கந்­த­சாமி பேசி­னார். இஸ்­மா­யில் கமி­ஷன் அறிக்கை மீது எடுத்­துக்­கொண்ட நேரத்­தை­விட பாளை­யங்­கோட்டை சண்­மு­கத்­தின் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென்­ப­தற்கு அவர் எடுத்­துக்­கொண்ட நேரம் அதி­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பத்து ஆண்­டு­கா­லத்­திற்கு முன்பு, பாளை­யங்­கோட்டை சண்­மு­கம் கொண்­டி­ருந்த கொள்­கைக்­கும், இன்­றைக்கு உள்ள கொள்­கைக்­கும் உள்ள மாறு­பாட்­டைச் சொன்­னார்­கள். அர­சி­ய­லில் நேற்­றைக்கு ஒரு கொள்கை, இன்­றைக்கு ஒரு கொள்கை என்று வெகு காலத்­தில் கொள்­கை­கள் மாறிக் கொண்­டி­ருக்­கும் இந்­தக் காலத்­தில், 10 ஆண்டு காலத்­தில் ஒரு கொள்கை மாற்­றம் பாளை­யங்­கோட்டை சண்­மு­கம் அவர்­க­ளுக்கு ஏற்­பட்­டது என்­ப­தை—­அ­து­வும் கந்­த­சாமி அவர்­கள் சொல்­லு­கிற நேரத்­தில் எனக்கு மிக மிக ஆச்­ச­ரி­ய­மாக இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனவே, கொள்கை மாற்­றங்­கள் அல்ல நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யது இஸ்­மா­யில் கமி­ஷ­னின் அறிக்­கைப்­பார் யார் மீது என்று நாம் எண்­ணிக் கொண்­டி­ருக்­கும் நேரத்­தில், அவர் மக்­க­ளைத் தூண்­டி­வி­டு­கி­றார் என்­றால், “மக்­கள் நட­வ­டிக்கை எடுப்­பார்­கள்” என்று சொல்­லு­கி­றார் என்­றால், அரசு எவ்­வ­ழியோ; குடி­கள் அவ்­வழி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“மக்­கள் பார்த்­துக்­கொள்­வார்­கள்” என்­ப­தற்கு என்ன நியா­யம் கற்­பிக்­கப்­ப­டு­கி­றதோ, அதே நியா­யந்­தான் பாளை­யங்­கோட்டை சண்­மு­கம் சொல்­கிற “மக்­கள் நட­வ­டிக்கை எடுப்­பார்­கள்” என்­ப­தற்­கும் நியா­யம் கற்­பிக்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆகவே, “மக்­கள் நட­வ­டிக்கை எடுப்­பார்­கள்” என்­றால், ஜன­நா­ய­கத்­திற்கு விரோ­த­மான முறை­யில் அல்ல; வன்­மு­றை­யில் அல்ல, அற முறை­யில், அன்பு முறை­யில், அர­சுக்கு எடுத்­துச் சொல்­லக்­கூ­டிய முறை­யில் எடுக்­கக்­கூ­டிய நட­வ­டிக்­கை­களை “மக்­கள் எடுப்­பார்­கள்” என்­று­தான் குறிப்­பிட்­டி­ருக்
­கிறார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பாளை­யங்­கோட்டை சண்­மு­கத்­திற்கு ஏதோ ஒரு வகுப்­பார் மீது துவே­ஷம் என்­றெல்­லாம் வெளியே பேசப்­ப­டு­கி­றது, பத்­தி­ரி­கை­யில் செய்தி போடப்­ப­டு­கி­றது. துண்டு அறிக்கை வெளி­யி­டப்­ப­டு­கி­றது. அவரே கூட்­டங்­க­ளில் பேசி­யி­ருக்­கி­றார்; பேசு­கி­றார். செந்­தா­மரை என்ற அந்த அதி­கா­ரி­யும் நீக்­கப்­பட வேண்­டு­மென்று பேசு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">செந்­தா­ம­ரைக்­கும், பாளை­யங்­கோட்டை சண்­மு­கத்­திற்­கும் என்ன உறவு என்­ப­தும், அவர்­கள் இரு­வ­ரும் எந்த வகுப்­பைச் சேர்ந்­த­வர்­கள் என்­ப­தும் நிதி­ய­மைச்­சர் அவர்­க­ளுக்­குத் தெரி­யும். இதிலே வகுப்பு பேதம் இல்லை. சாதி பேதம், மத பேதம் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">குற்­றம்­சாட்­டப்­பட்ட அதி­கா­ரி­கள் மீது 
உட­னடி நட­வ­டிக்கை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மனி­தனை மனி­த­னாக எண்­ணா­மல், மிரு­கங்­க­ளைப் போல் நடத்தி, மாக்­க­ளைப்­போல் நடத்தி, மிருக ஆட்­சி­யைச் சிறைச்­சா­லை­யில் புரிந்த, அதற்­குத் துணை நின்­ற­வர்­கள்­மீது எடுக்­கப்­பட வேண்­டிய நட­வ­டிக்­கை­கள் பற்றி நடை­பெ­று­கிற விவா­தம். அதிலே திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தன்­னு­டைய கருத்தை எடுத்து வைத்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆகவே, இனி­யும் கால­தா­ம­தம் செய்­யா­மல், யார் யார், எந்த எந்த அதி­கா­ரி­கள் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு ஆளாக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­களோ, அவர்­கள் மீது இந்த அரசு உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்; அதைத்­தான் மக்­கள் எதிர்­பார்க்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த அரசு சிறைச்­சா­லைச் சம்­ப­வங்­க­ளுக்­குப் பொறுப்பு அல்ல என்­றா­லும், நடை­பெற்­று­விட்ட சம்­ப­வங்­க­ளுக்கு விசா­ரணை நடத்தி, அறிக்கை வைத்த பிறகு, அதன்­மீது உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கா­மல் இருந்­தால், அந்­தப் பொறுப்­பும், பழி­யும் இந்த அர­சின்­மீது ஏற்­பட்டு விடக்­கூ­டும் என்­பதை நான் எச்­ச­ரித்து, உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென்று   முத­ல­மைச்­சர் அவர்­க­ளை­யும், தமி­ழக அர­சை­யும் கேட்­டுக்­கொண்டு என் உரையை முடிக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு கலை­ஞர் பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>