<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="43,73,951,1047" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Sep 11 2026 03:58:51 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260911T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="11092026-VLR-05" position.sequence="05" ex-ref="11092026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="102">நாதஸ்வர இசையும்!! நையாண்டி மேளமும்!!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ந்­திய ஒன்­றி­யப் பகு­தி­யில் விடு­த­லைக்­குப் பின்­னர், வடி­வ­மைக்­கப்­பட்ட அர­சி­யல் சட்­டத்­தின்­படி இன்­று­வரை முதல் பொதுத் தேர்­த­லான 1952 ஆம் ஆண்டு தொடங்கி நடை­பெற்ற நாடா­ளு­மன்ற - சட்­ட­மன்­றங்­க­ளின் தேர்­தல்­க­ளில் வெற்­றி­பெற்று முறையே ஒன்­றி­யத்­தி­லும், மாநி­லங்­க­ளி­லும் ஆட்­சி­ய­மைத்த அர­சி­யல் கட்­சி­க­ளின் மக்­கள் பிர­தி­நி­தி­க­ளும், மாநி­லங்­க­ளில் ஆட்­சி­ய­மைத்த அர­சி­யல் கட்­சி­க­ளும், வெற்றி வாய்ப்பை இழந்த எதிர்­க் கட்­சி­க­ளின் பிர­தி­நிதி­ களும் நாடா­ளு­மன்ற - சட்­ட­மன்­றங்­க­ளின் கூட்­டத் தொடர்­க­ளில் கலந்து­ கொண்ட விவா­தங்­க­ளில் ஜன­நா­ய­கத்­தின் மாண்­பு­க­ளை­யும், மர­பு­க­ளை­யும், அடிப்­ப­டைப் பண்­பு­க­ளை­யும் பேணிப் பாது­காப்­ப­தி­லும், போற்­றி­வ­ரு­வ­தி­லும் எந்த அள­விற்கு அக்­க­றை­யும் கவ­ன­மும் எடுத்­துக் கொண்­டார்­கள் என்­பதை கடந்­த­கால நாடா­ளு­மன்ற சட்­ட­மன்­றங்­க­ளின் நட­வ­டிக்­கைக் குறிப்­பு­ க­ளைத் திருப்­பிப் பார்த்­தால் அவை­கள் கலங்­கரை விளக்­க­மா­க­வும் குன்­றின் மேலிட்ட விளக்­கா­க­வும் ஒளி­ப­ரப்­பிக்­கொண்­டி­ருப்­பதை இன்­றைக்­கும் வர­லாற்­றின் பக்­கங்­க­ளில் பார்க்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Maragadam" fontStyle="Regular" size="13">இதைத்­தான் அறி­ஞர் பெருந்­தகை அண்ணா அவர்­கள் தம்பி வெற்றி பெறு­கிற போது வெறி­யாட்­டம் போடா­ம­லும் தோல்வி அடை­கிற போது துவண்டு விடா­ம­லும் கட­மை­யாற்­று­வ­தில் ஒரு களிப்பு இருக்­கி­றது  என்று தம்­பி­க­ளுக்கு அன்று எழு­திய கடி­தங்­க­ளில் அடி­நா­த­மாக மக்­க­ளாட்சி மாண்­பு­களை படம்­பி­டித்­துக் காட்­டி­யி­ருப்­பார். 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அதி­லும் குறிப்­பாக, தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தி­னு­டைய கடந்­த­கால நிகழ்ச்­சி­கள் ஜன­நா­யக அமைப்­பு­க­ளுக்­கும் மக்­க­ளாட்சி நடை­மு­றைக்­கும் வழி­காட்­டும் வகை­யில் அமைந்­தி­ருந்­தது என்­ப­தற்கு எத்­த­னையோ சான்­று­களை சொல்­லிக்­கொண்டே போக­லாம். ஆம்! 1967ஆம் ஆண்டு அறி­ஞர் அண்ணா அவர்­கள் அன்னை தமிழ்­நாட்­டின் முதல்­வ­ராக பொறுப்­பேற்­றுக் கொண்­ட­தற்­குப்­பி­றகு, ஒரு விவா­தத்­தின்­பொ­ழுது அன்­றைய எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருந்த காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த கருத்­தி­ரு­மன் ஆளுங்­கட்­சி­யான தி.மு.க-வை பார்த்து “நாடோ­டி­க­ளெல்­லாம் நாடாள வந்­தி­ருக்­கி­றார்­கள்” என்று ஏள­ன­மாக பேசி­னார். அதற்கு எளி­மை­யின் எடுத்­துக்­காட்­டான அடக்­கத்­தின் அணி­க­ல­னாக அமர்ந்­தி­ருந்த முத­ல­மைச்­சர் அண்ணா அவர்­கள் எழுந்து சொன்­னார், “நாடாண்­ட­வர்­க­ளெல்­லாம் நாடோ­டி­க­ளா­கி­விட்­ட­தால், நாடோ­டி­க­ளா­கி­யி­ருந்த நாங்­கள் நாடாள வந்­தி­ருக்­கி­றோம்” என்று நகைச்­சு­வை­யாக குறிப்­பிட்­டார்! அப்­போது சபை­யில் எழுந்த சிரிப்­பொலி பல நிமி­டங்­கள் நீடித்­தது என்று நான் கேள்­விப்­பட்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இப்­படி அறி­வா­சான் அண்­ணா­வின் மறை­விற்­குப் பிறகு முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் காலத்­தில் ஒரு­முறை சட்­ட­மன்­றத்­தில் சட்­டப்­பே­ரவை உறுப்­பி­னர் ஹண்டே அவர்­கள் திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சியை, “மூன்­றாம்­தர ஆட்சி” என்று குறிப்­பிட் ­டார். அதற்கு அன்­றைய   முதல்­வ­ராக இருந்த முத்­த­மி­ழறி­ ஞர் கலை­ஞர் அவர்­கள் பதற்­றப்­ப­டா­மல் ஹண்டே அவர்­க­ளின் விமர்­ச­னத்­திற்கு பதி­ல­ளிக்­கும் முறை­யில் மாண்­பு­மிகு உறுப்­பி­னர் ஹண்டே அவர்­க­ளே“­­இந்த ஆட்சி மூன்­றாம்­தர ஆட்சி அல்ல” மாறாக, நான்­காம்­தர (சூத்­தி­ரர்­கள்) மக்­க­ளால் நடத்­தப்­ப­டு­கின்ற ஆட்சி என்று அறி­வு­பூர்­வ­மாக பதி­ல­ளித்து சட்­ட­மன்­றத்தை ஆச்­ச­ரி­யத்­தில் ஆழ்த்­தி­னார் என்­பது வர­லாறு. இத்­த­கைய அறி­வு­பூர்­வ­மான விவா­தங்­களை தமி­ழக சட்­ட­மன்­றத்­திலே நடத்தி வர­லாறு படைத்த இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆனால், நடந்­து­மு­டிந்த சட்­ட­மன்ற தொட­ரில் மறைந்த முன்­னாள் முத­ல­மைச்­சர் செல்வி.ஜெய­ல­லிதா அவர்­களை முன்பு அவ­மா­னப்­ப­டுத்­தி­விட்­ட­தாக தமி­ழக வெற்­றிக் கழக உறுப்­பி­னர்­கள் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின்­மீது குற்­றம் சாட்­டி­ னார்­கள். அன்­றை­ய­தி­னம் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அமைச்­ச­ர­வை­யில், நானும் அமைச்­ச­ராக இருந்­த­வன் என்ற முறை­யி­லும் சம்­ப­வங்­களை நேர­டி­யா­கப் பார்த்­த­வன் என்ற நிலை­யி­லும் அங்கு நிகழ்ந்த அசம்­பா­வித சம்­ப­வங்­க­ளுக்­கும், விரும்­பத்­த­காத நிகழ்­வு­க­ளுக்­கும் யார் கார­ணம் என்­ப­தை­யும், யார் அந்த விரும்­பத்­த­காத நிகழ்ச்­சி­யைத் தொடங்கி வைத்­த­வர் என்­ப­தை­யும் அவ­ரது கட்­சி­யான அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தில் முன்பு அமைச்­ச­ராக இருந்த எஸ்.திரு­நா­வுக்­க­ரசு மிகத் தெளி­வாக பத்­தி­ரிக்கை மற்­றும் ஊட­கங்­கள்­மூ­லம் பொது­வெ­ளி­யில் விளக்­கம் அளித்­ததை நாடும் ஏடும் நன்கு அறி­யும். செல்வி.ஜெய­ல­லி­தா­தான் அன்­றைய நிகழ்­வு­ க­ளுக்கு கார­ண­மா­ன­வர் என்­பதை அவர் தெளி­வா­க­வும், திட்­ட­வட்­ட­மா­க­வும் கூறி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இந்த விவ­ரங்­களை அறி­யாத தமி­ழக வெற்­றிக்­க­ழக அமைச்­சர்­க­ளும், உறுப்­பி­னர்­க­ளும் அந்த விளக்­கத்தை ஒரு­முறை பார்த்து படித்­து­விட்டு விளக்­கம் பெற்­றுக்­கொள்ள வேண்­டும் என்­பதே எங்­க­ளின் விருப்­ப­மா­கும். எனவே, அது­கு­றித்து தமி­ழக வெற்­றிக்­க­ழக அமைச்­சர்­க­ளும், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் அன்­றைய நிகழ்­விற்கு யார் கார­ணம் என்­பதை தெளி­வாக உணர்ந்து கொள்­வார்­கள் என்று நம்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தமிழ்­நாட்­டில் சமீ­பத்­தில் நடந்த 2026 பொதுத்­தேர்­த­லில் தமி­ழக வெற்­றிக் கழ­கம் தனித்து ஆட்­சி­ய­மைக்­கும் தனிப்­பெ­ரும்­பான்மை என்ற எண்­ணிக்­கை­ப­லம் இல்­லா­விட்­டா­லும், தி.மு.க தலை­மை­யி­லான கூட்­டணி­ யில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்ற கட்­சி­க­ளான காங்­கி­ரஸ் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி, இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்சி, விடு­தலை சிறுத்­தை­கள், அகில இந்­திய முஸ்­லிம் லீக் கட்சி ஆகிய ஐந்து கட்­சி­க­ளின் துணை­யோடு பொய்க்­கால் குதி­ரை­யா­க­வும், வைக்­கோல் கன்­று­குட்­டி­யைக் காட்டி பசு­வி­டம் பால் கரப்­பதை போல, தமி­ழக வெற்­றிக் கழ­கத்­தின் தலை­வர் ஜோசப் விஜய் ஆட்சி அமைக்­கும் வாய்ப்­பி­னைப் பெற்று முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்று நிதி­நிலை அறிக்­கையை தாக்­கல் செய்து அதன்­மீ­தான வாதப்­பி­ர­தி­வா­தங்­களை தொடங்கி வைத்­தி­ருக்­கி­றார். அதன்­பி­றகு துறை­சார்ந்த மானி­யக் கோரிக்­கை­கள்­மீது விவா­தங்­கள் நடை­பெற்­ற­தை­யும், அவற்றை நேர­டி­யாக ஒளி­ப­ரப்பு செய்­த­தை­யும் கூர்ந்து கவ­னித்­தால், அவை­கள்  முறை­யா­க­வும், நடு­நி­லை­யோ­டும் நடை­பெற்­ற­தா­கத் தெரி­ய­வில்லை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சட்­ட­மன்ற நிகழ்ச்­சி­களை ஒளி­ப­ரப்­பி­ய­வி­தம் 
பிர­தான எதிர்க்­கட்­சி­யான திரா­விட முன்­னேற்­றக் கழக உறுப்­பி­னர்­கள் என்ன பேசு­கி­றார்­கள்? எப்­படி நடந்து கொண்­டார்­கள்? என்­பதை மட்­டும் மக்­க­ளுக்கு ஒளி­ப­ரப்­பி­னார்­களே அல்­லா­மல் ஆளுங்­கட்­சி­யிலே உள்ள அமைச்­சர்­க­ளும் மற்­றைய சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் எப்­படி நடந்து கொள்­கி­ றார்­கள்? என்­பதை திட்­ட­மிட்டு ஒளி­ப­ரப்­ப­வில்லை. இதன்­மூ­லம், பிர­தான எதிர்க்­கட்­சி­யான திரா­விட முன்­னேற் ­றக் கழ­கத்­தின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் தேவை­யில்­லா­மல் அத்­து­மீ­றிய நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்­டி­ருக்­கி­றார்­கள் என்ற தோற்­றத்தை மக்­கள் மத்­தி­யில் உரு­வாக்­கு­வ­தற்­கா­கத்­தான் இத்­த­கைய போக்கை திட்­ட­மிட்டு செய்­தி­ருக்­கி­றார்­கள் 
என்­பது உள்­ளங்கை நெல்­லிக்­கனி என தெளி­வா­கி­றது. 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளின் கேள்­வி­க­ளுக்­கும், ஐயப்­பாட்­டிற்­கும் அமைச்­சர் பெரு­மக்­கள் விளக்­க­ம­ளிக்க வேண்­டிய ஜன­நா­ய­கக் கட­மையை சரி­வ­ரச் செய்­ய­வில்லை என்­ப­தோடு, முத­ல­மைச்­சர் ஜோசப் விஜய் அவர்­கள் (07.09.2026) திங்­கட்­கி­ழமை பதி­ல­ளித்­தார். தன்­னு­டைய பதி­லுரை எப்­படி இருக்­கும் என்­ப­தற்கு மூன்று நாட்­க­ளுக்கு முன்பே, முத­ல­மைச்­சர் கட்­டி­யம் கூறும் வகை­யில் தான் திங்­கள்­கி­ழமை எதிர்க்­கட்­சி­க­ளின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்க போவ­தா­க­வும், தற்­போது எதிர்க்­கட்­சி­க­ளில் உள்ள உறுப்­பி­னர்­கள் யாரும் ஓடி­விட வேண்­டாம் என்று உடல்­மொ­ழி­யு­டன்­கூ­டிய கட்­டி­யம் கூறி­னார் என்­ப­தோடு அது ஒரு முத­ல­மைச்­சர் செய்­வ­தற்­கு­ரிய காரி­யங்­கள் அல்ல என்­ப­து­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இத­னைத் தொடர்ந்­தும்  எதிர்க்­கட்­சி­க­ளின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்த முத­ல­மைச்­சர்  ஜோசப் விஜய் உரி­ய­வ­கை­யில் பதில்­களை அவை­யில் முன்வை க்காமல், எந்த வகை­யி­லும் தொடர்­பில்­லாத முடிந்­து­போன சர்க்­கா­ரியா கமி­ஷன் அறிக்­கைப்­பற்றி விளா­வா­ரி­யாக பேசி­யுள்­ளார். ஆனால், சர்க்­கா­ரியா கமி­ஷன் அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் எந்­தக் குற்ற நட­வ­டிக்­கை­யும் எடுக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்று அன்­றைய தமி­ழக அர­சின் தலைமை வழக்­க­றி­ஞ­ரான வி.பி.ராமன் அவர்­க­ளும் ஏனைய சட்­ட­வல்­லு­நர்­க­ளும் சொன்ன கருத்­துக்­க­ளின்­படி, அந்­தக் கோப்பு மேல்­ந­ட­வ­டிக்­கைக்கு உகந்­த­தல்ல என்று கிடப்­பில் போடப்­பட்­டதை 
உல­கம் அறி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சர்க்­கா­ரியா கமி­ஷன் அறிக்­கைப்­பற்றி முத்­த­மி­ழறி ஞர் கலை­ஞர் அவர்­கள் என்ன விமர்­ச­னம் சொன்­னார் என்­பதை இங்கு சுட்­டிக்­காட்­டு­வது சாலப் பொருத்­தம் மட்­டு­மல்ல, காலப் பொருத்­த­மா­க­வும் இருக்­கும் என்று கரு­து­கி­றேன். சர்க்­கா­ரியா கமி­ஷன் அறிக்­கை­யைப் படித்து ஆய்­வு­செய்த கலை­ஞர் சர்க்­கா­ரியா கமி­ஷன் அறிக்­கைப்­பற்றி பொது­வெ­ளி­யில் கூறும்­பொ­ழுது “பார்த்­தேன்! படித்­தேன்! ரசித்­தேன்! என்று முத்­தாய்ப்­பாய்க் கூறி­னார்”. முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் சொன்ன இந்­தக் கருத்து சர்க்­கா­ரியா கமி­ஷன் அறிக்­கைக்கு அடித்த சாவு மணி­யா­கும் என்­பதே சரி­யான விமர்­ச­ன­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">எனவே, முடிந்­து­போன காலங்­க­டந்த சர்க்­கா­ரியா கமி­ஷன் பற்­றிய சங்­க­தி­களை தமி­ழக சட்­ட­மன்­றத்­தில் முத­ல­மைச்­சர் ஜோசப்­வி­ஜய் அவர்­கள் விளக்­க­ம­ளிப்­ப­தும், விமர்­ச­னம் செய்­தி­ருப்­ப­தும் “பட்­டுக்­கோட்­டைக்கு வழி கேட்­டால் கொட்­டைப்­பாக்­குக்கு விலை சொல்­வ­தைப் போல்” உள்­ளது. உண்­மை­யில் சட்­ட­மன்­றத்­தில் ஆளுங்­கட்­சிக்­கும், எதிர்க்­கட்­சிக்­கும் உள்ள உற­வு­கள் மற்­றும் விவா­தங்­க­ளைப்­பற்றி அறி­ஞர் அண்ணா அவர்­கள் குறிப்­பி­டும்­போது(It is not a question of Majority or Minority, It is question of Justice and Equality)என்று அழ­காக சொல்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆம்! சட்­ட­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சி­க­ளின் எண்­ணிக்­கை­க­ளைப் பார்க்­கா­மல், எண்­ணங்­க­ளைப் பார்த்து பதி­ல­ளிக்க வேண்­டிய முத­ல­மைச்­சர் சின்­னத்­திரை மற்­றும் வண்­ணத்­திரை நடி­க­ரைப்­போல் உடல்­மொ­ழி­யோடு பதி­ல­ளித்­தி­ருப்­பது தமி­ழக சட்­ட­ச­பை­யின் சரித்­தி­ரத்­தில் மாறாத வடு­வாகி இருக்­கி­றது என்­பதை யாரா­லும் மறுக்க முடி­யாது. எனவே, இனி­வ­ரும் சட்­ட­மன்ற கூட்­டத் தொடர்­க­ளி­லா­வது முத­ல­ மைச்­ச­ரும், அமைச்­சர்­க­ளும் திசை­ தி­ருப்­பும் வேலை­களை விட்­டு ­விட்டு, தொடர்­பில்­லாத சங்­க­தி­களை “மொட்­டைத் தலைக்­கும் முழங்கா­ லுக்­கும் முடிச்சு போடு­வ­தைப் போல” எடுத்­துக்­காட்டி, பேசி மக்­க­ளாட்­சி­யின் மாண்­பு­களை காயப்­ப­டுத்­து­வதை விட்­டு­விட்டு சட்­ட­மன்ற மர­பு­களை கடைப்­பி­டித்து காப்­பாற்­றும் வகை­யில் உரி­ய­மு­றை­யில் பதி­ல­ளிக்க கற்­றுக்­கொண்டு, நல்ல நடைமு­றை­ களை பின்­பற்ற வேண்­டும் என்று சட்­ட­சபை நிகழ்­வு­களை நேரடி ஒளி­ப­ரப்­பில் பார்த்த மக்­கள் ஆவ­லோடு எதிர்­பார்க்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">நாதஸ்­வர இசை­யை­யும் ரசிக்க முடி­யும்! நையாண்டி மேள இசை­யை­யும் ரசிக்க முடி­யும்!  இந்த இரண்­டும் இசைக்­கப்­பட வேண்­டிய இடங்­கள் வேறு­வேறு ஆகும். மாறாக, இடம்­மாற்றி இசைக்­கப்­ப­டு­மே­யா­னால், ராகங்­கள் தடம்­மா­றி­போ­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">எனவே, இனி­வ­ரும் காலங்­க­ளி­லா­வது ஆளுங்­கட்­சி­யைச் சார்ந்த  முத­ல­மைச்­சர் ஜோசப் விஜய் அவர்­க­ளும், அமைச்­சர் பெரு­மக்­க­ளும், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் சட்­ட­சபை சரித்­தி­ரங்­க­ளை­யும், பழைய சம்­ப­வங்­க­ளின் குறிப்­பு­க­ளை­யும் தெரிந்­து­கொண்டு சபை­யில் பேச வேண்­டும். அது­தான் அவர்­க­ளுக்­கும், வாக்­க­ளித்த மக்­க­ளுக்­கும் பெருமை சேர்ப்­ப­தாக இருக்­கும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>