<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,32,958,1496" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Sep 11 2026 04:02:40 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260911T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="11092026-VLR-08" position.sequence="08" ex-ref="11092026-VLR-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">11.09.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="29">‘திராவிட மாடல்’ ஆட்சியில் தமிழ்நாடு பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="74">மாமன்னன் பூலித்தேவர் மணிமண்டபத்தை அரசு சார்பில் பராமரிக்கவேண்டும்! </lang>
	<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="74"> </lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup860958_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup637302_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup626431_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup626360_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சென்னை, செப்.11 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சட்­டப்­பே­ர­வை­யில் மானி­யக் கோரிக்­கை­யின் மீதான விவா­தத்­தில் வாசு­தேவ நல்­லூர் ஈ.இராஜா பேசு­கை­யில்,  மாமன்­னன் பூலித்­தே­வன் மணி­மண்­ட­பத்தை அரசு சார்­பில் பரா­ம­ரிக்க வேண்­டும் என்று வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சட்­டப்­பே­ர­வை­யில்   மானி­யக் கோரிக்கை  விவா தத்­தில் வாசு­தே­வ­நல்­லூர் ஈ.ராஜா பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அடிப்­ப­டைக் கல்­வியே மறுக்­கப்­பட்ட, ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளின் சமூ­கத்­தில், அதே கல்­வியை ஆயு­த­மா­கக் கொண்டு, உல­கமே போற்­றும் உய­ரத்­தினை அடைந்த அண்­ணல் அம்­பேத்­கர் அவர்­களை வணங்­கு­கி­றேன். தமி­ழ­கம் முழு­வ­தும் சாதிய வேற்­று­மை­க­ளைக் களைந்து, சமூக நீதி­யை­யும், சுய­ம­ரி­யா­தை­யை­யும் நிலை­நாட்ட தன் வாழ்­நாள் முழு­வ­தும் உழைத்த தந்தை பெரி­யார் அவர்­களை வணங்கி, தந்தை பெரி­யா­ரின் சிந்­த­னை­க­ளை­யும், கொள்­கை­க­ளை­யும் ஆட்­சி­யின் சட்­டங்­க­ளா­க­வும், திட்­டங்­க­ளா­க­வும் வடி­வ­மைத்து, தமிழ்­நாட்­டின் சமூக நீதிக்­கான அர­சி­யல் பாதையை உரு­வாக்­கிய பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளை­யும் வணங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் கண்ட சமத்­து­வத் தமிழ்­நாட்டை உரு­வாக்­கிட தன் வாழ்­நாள் முழு­வ­தும் உழைத்த, நீ, நான் என்­றால் உத­டு­கள் ஒட்­டாது, நாம் என்­றால்­தான் உத­டு­கள் கூட ஒட்­டும் என்ற எளி­மை­யான வரி­க­ளில்­கூட சமூக ஒற்­று­மை­யின் ஆழ­மான தத்­து­வத்­தைச் சொன்ன வர­லாற்­றுச் சிறப்பு மிக்க தலை­வர், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­களை வணங்­கு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வாசு­தே­வ­நல்­லூர் சட்­ட­மன்ற தொகு­தி­யில் நான் போட்­டி­யிட வாய்ப்­ப­ளித்த சமூக நீதி, சமத்­து­வம், பொரு ளாதார முன்­னேற்­றம் மற்­றும் கல்வி வளர்ச்­சிக்­காக எண்­ணற்ற திட்­டங்­க­ளைத் தீட்டி, செயல்­ப­டுத்­திய திரா­விட இயக்­கத்­தின் தலை­வ­ரும்,  முன்­னாள் முத­ல­மைச்­ச­ரு­மான தள­ப­தி­யார் அவர்­க­ளுக்கு எனது நெஞ்­சார்ந்த நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வர­லாற்று சிறப்­பு­மிக்க இந்த சட்­ட­மன்ற கூட்­டத் தொட­ரில் எங்­க­ளை­யெல்­லாம் வழி­ந­டத்­தும் எதிர்க்
­கட்­சித் தலை­வர், அண்­ணன் உத­ய­நிதி ஸ்டாலின் அவர் ­களை வணங்­கு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எனது வெற்­றிக்­காக, பிரச்­சா­ரம் மட்­டும் மேற்­கொள்­ள­ா­மல், வியூ­கங்­கள் வகுத்­துத் தந்த, கழக துணைப் பொதுச் செய­லா­ளர், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர் பாச­மிகு அக்கா, திரு­மதி கனி­மொழி கரு­ணா­நிதி அவர்­க­ளை­யும் வணங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பேர­வைத் தலை­வர் அவர்­க­ளுக்­கும், சட்­ட­மன்­றப் பேர­வை­யின் எதிர்க்­கட்­சித் துணைத் தலை­வர்  அண்­ணன், கே.என். நேரு அவர்­க­ளுக்­கும், எதிர்க்­கட்­சிக் கொறடா அண்­ணன் எ.வ. வேலு அவர்­க­ளுக்­கும், துணைக் கொறடா மற்­றும் பொரு­ளா­ளர் உள்­ளிட்ட அனைத்து சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் என்­னு­டைய நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்­தய சுதந்­தி­ரப் போராட்­டத்­தின் அன்­னிய ஏகா­தி­பத்­தி­யத்­திற்கு எதி­ரான விடு­த­லைக் குர­லைக் கர்­ஜித்த மாமன்­னன், பூலித்­தே­வன் பிறந்த மண், வெள்­ளேய பரங்­கி­யர் படை­யின் கொலை­வெ­றித் தாக்­கு­தலை எதிர்த்து இந்த மண்­ணின் மானம் காக்க சமர்­க­ளத்­தில் உயிர்­நீத்த தள­பதி மாவீ­ரன் வெள்­ளிக் காலடி மாவீ­ரன் ஒண்­டி­வீ­ரன் பிறந்த மண், எங்­கள் மண். தமி­ழ­ரின் தொன்­மை­க­ளை­யும், தனித் தன்­மை­யை­யும் உல­க­றி­யச் செய்த மொழி ஞாயிறு, தேவ­நேய பாவா­ணர் பிறந்த மண்; தமிழ் இசைக்­கும் தமிழ் இசைப் பாடல் மர­புக்­கும் தனிச் சிறப்­பைச் சேர்த்த காவடி சிந்­தின் புகழை உல­க­றி­யச் செய்த சென்­னி­கு­ளம் அண்­ணா­மலை ரெட்­டி­யார் பிறந்த மண்; வடக்கே உள்ள காசிக்கு நிக­ரா­கப் போற்­றப்­ப­டும் தென்­கா­சி­யின் கரி­வ­ளம் நிட்­சேப நிதி என காந்­தி­ய­டி­கள் அஸ்தி கரைக்­கப்­பட்ட மண்; என்று பல்­வேறு வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க தடங்­க­ளைத் தன்­ன­கத்தே கொண்ட வாசு­தே­வ­நல்­லூர் சட்­ட­மன்ற தொகு­தி­யில் எனக்கு வெற்றி வாய்ப்பை வழங்­கிய வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளுக்­கும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்த வெற்­றிக்­காக அய­ராது உழைத்த கழக நிர்­வா­கி­க­ளுக்­கும், தோழ­மைக் கட்சி நிர்­வா­கி­க­ளுக்­கும், தொண்­டர்­க­ளுக்­கும், நண்­பர்­க­ளுக்­கும், வழக்­கறி ஞர்­க­ளுக்­கும், என்­னு­டைய குடும்­பத்­தி­னர் என அனை­வ­ருக்­கும் எனது நெஞ்­சார்ந்த நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இரண்­டா­வது முறை­யாக சட்­ட­மன்ற உறுப்பி னரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு, இந்த மாமன்­றத்­தில் எனது முதல் உரை­யைத் தொடங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சில தினங்­க­ளுக்கு முன்பு  சமூக நீதித் துறை அமைச்­சர் அவர்­கள் ஆதி திரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யின மக்­க­ளுக்கு திரா­வி­டர் முன்­னேற்­றக் கழக அரசு என்ன செய்­தது என்ற ஒரு கேள்­வியை எழுப்­பி­யி­ருந்­தார்­கள்.  அமைச்­சர் அவர்­க­ளுக்கு வர­லாற்று உண்­மை­களை இந்த அவை­யின் வாயி­லாக நினை­வுப் 
­ப­டுத்த விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆதி திரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யின மக்­க­ளின் சமூக முன்­னேற்­றம், கல்வி முன்­னேற்­றம், பொரு ளாதார முன்­னேற்­றம், அர­சி­யல் பிர­தி­நி­தித்­து­வம் ஆகி­ய­வற்றை வெறும் தேர்­தல் வாக்­கு­று­தி­யா­கப் பார்க்­கா­மல், அர­சின் கொள்­கை­க­ளாக மாற்றி செயல்­ப­டுத்­திய இயக்­கம் திரா­வி­டர் முன்­னேற்­றக் கழ­கம். ஆதி திரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யின மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு வந்த கல்வி உத­வி­களை விரி­வுப்­ப­டுத்தி, கல்வி என்­பது பணம் இருப்­ப­வர்­க­ளுக்கு மட்­டு­மல்ல. சமூ­கத்­தில் விளிம்பு நிலை­யில் இருக்­கும் குழந்­தை­ க­ளுக்­கும் உரிமை என்ற நிலையை உரு­வாக்­கி­யது தி.மு.க. அரசு. வாடகை கட்­ட­டங்­க­ளில் இயங்கி வந்த ஆதி திரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யின மாண­வர்­க­ளுக்கு விடு­தி­க­ளுக்கு சொந்­தக் கட்­ட­டங்­கள் அமைக்க வேண்­டும் என்று முடி­வெ­டுத்து, 493 விடு­தி­க­ளுக்கு சொந்­தக் கட்­ட­டங்­கள் அமைத்­தது கலை­ஞர் அவர்­க­ளின் தலை­மை­யி­லான தி.மு.க. அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இல­வச கல்­வியை வழங்­கி­யது கலை­ஞர் அரசு!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்று விடு­தி­க­ளில் படித்து உயர் கல்வி பெற்ற ஆயி­ரக்­க­ணக்­கான மாண­வர்­க­ளின் முன்­னேற்­றத் திற்­குப் பின்­னால், அந்­தத் திட்­டத்­தின் பங்கு இருக்­கி­றது. 2001 ஆம் ஆண்டு ஆதி திரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யி­னத்­தைச் சேர்ந்த மாண­வி­க­ளுக்கு அர­சுக் கல்­லூ­ரி­க­ளில் முது­நி­லைப் படிப்பு வரை இல­வச கல்வி வழங்­கும் திட்­டத்தை அறி­வித்­தது கலை­ஞர் தலை­மை­யி­லான தி.மு.க. அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டின் 69 சத­வி­கித இட­ஒ­துக்­கீடு என்­பது வெறும் எண்­ணிக்கை அல்ல. அது பல தலை­மு­றை­க­ளாக ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளுக்­குக் கிடைத்த சமூக நீதிப் பாது­காப்பு கவ­சம். (மேசை­யைத் தட்­டும் ஒலி) அதில், ஆதி திரா­வி­டர் மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் 18 சத­வி­கித இட­ஒ­துக்­கீட்­டிற்­குள் சமூ­கத்­தில் மிக­வும் பின்­தங்­கிய அருந்­த­தி­யர் மக்­க­ளுக்கு 3 சத­வி­கித உள்­ஒ­துக்­கீட்­டினை வழங்­கு­வ­தற்­கான சட்­டத்­தி­னைக் கொண்­டு­வந்­தது தி.மு.க. அரசு. இது ஒரு சாதா­ரண அர­சாணை அல்ல. ஒரு சமூ­கத்­தின் வலி­யைப் புரிந்­து ­கொண்டு, அந்­தச் சமூ­கத்­திற்கு உரி­யப் பங்­கினை உறு­தி­செய்த சமூக நீதிப் போராட்­டத்­தின் வெற்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஆதி­தி­ரா­வி­டர் குடும்­பங்­க­ளுக்கு வீட்­டு­ம­னைப்­பட்டா!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சாதி­யின் பெய­ரால் மக்­கள் பிரிந்து வாழா­மல் பல்­வேறு சமூ­கத்­தைச் சேர்ந்த மக்­கள் ஒன்­றாக வாழ வேண்­டும் என்ற உயர்ந்த நோக்­கத்­து­டன் பெரி­யார் நினைவு சமத்­து­வ­பு­ரம் திட்­டத்தை கலை­ஞர் அவர்­கள் தொடங்கி வைத்­தார்­கள். இது­வரை சுமார் 247 சமத்­து­வ­பு­ரங்­கள் அமைக்­கப்­பட்­டன. இது­வும் தி.மு.க. ஆட்­சி­யில்­தான். தாட்­கோ­மூ­லம் ஆதி திரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யின மக்­க­ளுக்கு தொழில் தொடங்கு வதற்­கான கடன், மானி­யம், சுய­தொ­ழில் வாய்ப்பு, திறன்­ப­யிற்சி உள்­ளிட்ட பல்­வேறு பொரு­ளா­தார உத­வி­களை விரி­வுப்­ப­டுத்­தி­யது தி.மு.க. அர­சு­தான். வீடற்ற, நில­மற்ற, ஏழை ஆதி திரா­வி­டர் குடும்­பங்க ளுக்கு வீட்­டு­ம­னைப் பட்டா. குறிப்­பாக, ஆதி திரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யின பெண்­க­ளுக்கு சொத்­து­ரிமை மற்­றும் பொரு­ளா­தார வலி­மையை உரு­வாக்­கும் வகை­யில் நிலம் வாங்­கும் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட்­டது தி.மு.க ஆட்­சிக்­கா­லத்­தில்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மனித மாண்­பைக் காக்­கும்­வி­த­மாக மனி­தக் கழி­வு­களை மனி­தர்­களே அள்­ளும் அவ­லத்தை ஒழிப்­பது என்­பது ஒரு நிர்­வா­கப் பிரச்­சினை மட்­டு­மல்ல. அது மனித மாண்­பின் பிரச்­சினை. அந்­தத் தொழி­லில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு மாற்­றுத் தொழில், திறன் மேம்­பாடு, பொரு­ளா­தார உதவி மற்­றும் மறு­வாழ்வு வழங்­கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்­தது தி.மு.க. அர­சு­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அண்­ணல் அம்­பேத்­க­ருக்கு அளித்த மரி­யாதை என்­ன­வென்­றால், அண்­ணல் அம்­பேத்­கர் பெயரை வெறும் சிலை­யாக கட்சி அலு­வ­ல­கத்­தில் மட்­டும் வைக்­கா­மல், சட்­டக் கல்­வி­யின் அடை­யா­ள­மாக நிலை­நி­றுத்­தும் வகை­யில், தமிழ்­நாடு டாக்­டர் அம்­பேத்­கர் சட்­டப் பல்­க­லைக்­க­ழ­கம் 1997 ஆம் ஆண்டு தமிழ்­நாடு அர­சால் சட்­டத்­தின்­மூ­லம் உரு­வாக்­கி­ய­தன் பெரும்­பங்கு   கலை­ஞர் அவர்­க­ளை­யேச் சாரும். அண்­ணல் அம்­பேத்­கர் பெய­ரில் மேலை­நாடு ஆராய்ச்சி கல்வி மேற்­கொள்ள அண்­ணல் அம்­பேத்­கர் அய­லக உயர்­கல்­வித் திட்­டத்­தைத் தந்­தது தி.மு.க. அர­சு­தான். இது­தான் அண்­ணல் அம்­பேத்­க­ருக்கு 
தி.மு.க. அரசு கொடுத்த மரி­யாதை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆதி திரா­வி­டர் திருக்­கோ­யில் பரா­ம­ரிப்­புக்­காக இரண்­டரை இலட்­சம் ரூபாய் மானி­ய­மாக உயர்த்தி வழங்­கி­யது தி.மு.க.தான். ஆலய வழி­பாட்­டி­லும் சாதி அடிப்­ப­டை­யி­லான தடை­கள் இருக்­கக்­கூ­டாது. தகு­தி­பெற்ற அனை­வ­ரும் அர்ச்­ச­க­ரா­கும் வாய்ப்பு இருக்க வேண்­டும் என்று சமூக நீதிக் கொள்­கையை சட்ட வடி­வ­மாக்­கிய வர­லாற்று சாத­னை­யைப் புரிந்­த­வர் எங்­கள் தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள்­தான். (மேசை­யைத் தட்­டும் ஒலி) காலனி என்­றும், பச்­சேரி என்­றும் இருந்த பெயர்­களை நீக்­கிட ஆணைப் பிறப்­பித்­த­தும் தி.மு.க.தான்.  முத­ல­மைச்­சர் அவர்­கள் தலை­மை­யில் கடந்த ஆட்சி அமைந்த 100 நாட்­க­ளுக்­குள் பட்­டி­ய­லின் மக்­க­ளின் பிர­தி­நி­தி­களை அழைத்து நலக் குழுக் கூட்­டம் மற்­றும் கண்­கா­ணிப்­புக் குழுக் கூட்­டம் நடத்­தி­யது தி.மு.க. அர­சு­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆதி திரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யின மக்­க­ளுக்கு தி.மு.க. அரசு என்ன செய்­தது என்று கேட்­ப­தும் மிக­வும் நல்­லக் கேள்­வி­தான். ஆனால், அதற்­கான பதில் ஒரே வரி­யில் சொல்­லக்­கூ­டி­யது அல்ல. கல்­வியை வழங்­கி­னோம், விடு­தி­க­ளைக் கட்­டி­னோம். உதவி;j தொகை­களை விரி­வுப்­ப­டுத்­தி­னோம். பெண்­க­ளுக்கு இல­வ­லச கல்வி வழங்­கி­னோம். தொழில்­தொ­டங்க பொரு­ளா­தார உதவி வழங்­கி­னோம். நில உரி­மையை உரு­வாக்­கி­னோம். சமத்­து­வ­பு­ரங்­களை உரு­வாக்கி னோம். அருந்­த­தி­யர் மக்­க­ளுக்கு 3 சத­வி­கித உள்­ஒ­துக்­கீடு வழங்­கி­னோம். அண்­ணல் அம்­பேத்­கர் பெய­ரில் சட்­டப் பல்­க­லைக்­க­ழ­கத்தை உரு­வாக்கி னோம். மனித மாண்­பைக் காக்­கும் நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டோம். தூய்­மைப் பணி­யா­ளர்­க­ளுக்கு நல வாரி­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நரிக்­கு­ற­வர் சமு­தா­யத்­திற்கு நல­வா­ரி­யம்; புதிரை வண்­ணார் சமு­தா­யத்­திற்கு வாரி­யம் அமைத்­த­தும் திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யின்­போ­து­தான். இவை­யெல்­லாம் வெறும் தேர்­தல் வாக்­கு­று­தி­கள் அல்ல; பல தலை­மு­றை­க­ளாக ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளின் வாழ்க்­கை­யில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­திய கொள்­கை­கள்; ஆதி திரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யின மக்­க­ளின் சமூ­கக் கல்வி, பொரு­ளா­தார முன்­னேற்­றத் ­திற்­கா­கத் தொடர்ந்து குரல் கொடுத்­த­தும், ஆட்­சி­யில் அதை கொள்­கை­க­ளாக மாற்றி செயல்­ப­டுத்­தி­ய­தும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்­தான். அத­னால்­தான் சமூக நீதி இருக்­கும் வரை திரா­விட இயக்­கத்­தின் பணி தொட­ரும்; சமத்­து­வம் நிலைக்­கும் வரை தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் கொள்கை தொட­ரும்; (மேசை­யைத் தட்­டும் ஒலி) ஆதி திரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யின மக்­க­ளின் முன்­னேற்­றம் தொட­ரும் வரை திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் பய­ண­மும் தொட­ரும்; இந்­நி­லை­யில், 100 நாட்­க­ளான இந்த ஆட்­சி­யில் பல்­வேறு திட்­டங்­க­ளுக்கு இந்த அரசு பெயரை மட்­டும்­தான் மாற்­றி­யி­ருக்­கி­றது. ஆதி திரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யி­னர் நலத் துறை என்­பதை மாற்றி சமூக நீதித் துறை என்று பெயர் மாற்­றம் மட்­டுமே நிகழ்ந்­துள்­ளது. அத்­து­றை­யில் எவ்­வித மாற்­ற­மும் நிகழ்ந்­த­தா­கத் தெரி­ய­வில்லை. முத­ல­மைச்­சர் சமூக பொரு­ளா­தார மேம்­பாட்­டுத் திட்­டம் என்­பது வெற்றி தொழில் முனை­வோர் திட்­ட­மாக. . .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">திட்டங்களின் பெயர்கள் மாற்றம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­ச­ரின் சமூக பொரு­ளா­தார மேம்­பாட்­டுத் திட்­டம் என்­பது வெற்றி தொழில் முனை­வோர் திட்­ட­மாக மாறி­யுள்­ளது. நன்­னி­லம் திட்­டம் என்­பது மண்­ணின் மகள் திட்­ட­மாக மாற்­றப்­பட்­டுள்­ளது. தொல்­குடி திட்­டம் ஆன்­றோர் மேம்­பாட்­டுத் திட்­ட­மா­கப் பெயர் மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளது. ஆக்­கப்­பூர்­வ­மான செயல்­கள் எது­வும் இது­வரை தொடங்­கப்­ப­ட­வில்லை. எடுத்­துக்­காட்­டாக, அண்­ணல் அம்­பேத்­கர் அய­லக உயர் கல்­வித் திட்­டத்­தின்­கீழ் 2024-–2025 ஆம் ஆண்­டில் 124 மாண­வர்­க­ளுக்கு 60.33 கோடி ரூபாய் வழங்­கப்­பட்­டது. 2025-–2026 ஆம் ஆண்­டில் 65 கோடி ரூபாய் நிதி­யொ­துக்­கீடு செய்­யப்­பட்­டது. புதிய குறிப்­பில் உயர் கல்வி வாய்ப்­பு­கள் தொடர்ந்­தா­லும் முந்­தைய பய­னா­ளி­க­ளின் செல­வி­னம் மற்­றும் வளர்ச்சி வரிசை முழு­மை­யாக முன்­னி­லைப்­ப ­டுத்­தப்­பட வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மேலும், அண்­ணல் அம்­பேத்­கர் அய­லக உயர் கல்­வித் திட்­டத்­தின்­கீழ் விண்­ணப்­பித்த சுமார் 316 நபர்­க­ளுக்கு Visa புறக்­க­ணிப்பு செய்­யப்­பட்­டுள்­ள­தாக செய்­தி­கள் வரு­கின்­றன. அது­கு­றித்து இது­வரை எந்த முழு­மை­யான விளக்­க­மும் தரப்­ப­ட­வில்லை; அதற்கு மாற்று ஏற்­பா­டும் செய்­யப்­ப­ட­வில்லை. விண்­ணப்பி க்கும் மாண­வர்­கள் தங்­க­ளது விண்­ணப்­பங்­கள் எந்த நிலை­யில் உள்­ளன என்­பதை எளிய முறை­யில் அறிந்­து­கொள்­ள­வும், அவர்­க­ளுக்கு வழங்­கக்­கூ­டிய ஊக்­கத்­தொகை நிர்­ண­யம் என்ன என்­ப­தை­யும் வெளிப்­ப­டைத்­தன்­மை­யோடு இணை­ய­த­ளத்­தில் பதி­வேற்­றம் செய்ய வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கடந்த 100 நாட்­க­ளில் 10 ஆண­வக் கொலை­கள் நடந்­துள்­ளன; அது­கு­றித்து இது­வரை என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது? கடந்த ஆட்­சிக் காலத்­தில்  தள­ப­தி­யார் அவர்­க­ளால் அமைக்­கப்­பட்ட நீதி­ய­ர­சர் K.N. பாஷா தலை­மை­யி­லான ஆணை­யம் வழங்­கிய பரிந்­து­ரை­கள்­மீது என்ன நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன என்­பது குறித்து இங்கே கேட்­டுக்­கொள்ள நான் கட­மைப்­பட்­டுள்­ளேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அது­போல, பள்ளி மற்­றும் கல்­லூரி மாண­வர்­கள் தற்­போது மீண்­டும் கைக­ளில் வண்­ணக் கயி­று­மூ­லம் தங்­க­ளது ஜாதி அடை­யா­ளங்­களை வெளிக்­காட்­டும் வித­மாக, கட்­டும் பழக்­கம் மீண்­டும் தலை­தூக்­கி­யுள்­ளது. அனைத்­துக் கல்வி நிலை­யங்­க­ளி­லும் தீவி­ர­மா­கக் கண்­கா­ணிக்க அரசு உட­ன­டி­யாக ஆணை பிறப்­பிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வன்­கொ­டு­மை­யைத் தடுக்­க­வும், சமூக நல்­லி­ணக்­கத்தை வளர்க்­க­வும் தொடங்­கப்­பட்ட சமூக நீதி மற்­றும் மனித உரி­மை­கள் பிரி­வு­க­ளின்­கீழ் 13 Additional Commissioner மற்­றும் DSP பணி­யி­டங்­கள் காலி­யாக உள்­ளன. அதி­லும் முக்­கி­ய­மாக திரு நெல்­வேலி, தேனி, மதுரை போன்ற மாவட்­டங்­க­ளில் பணி­யி­டங்­கள் நிரப்­பப்­ப­டா­மல் உள்­ளன. Sensitive ஆன இந்­தப் பகு­தி­க­ளில் ஏன் பணி­யி­டங்­கள் நிர ப்­பப்­ப­டா­மல் உள்­ளன என்­ப­தைத் தங்­கள் வாயி­லாக கேட்­டுக்­கொள்­ளக் கட­மைப்­பட்­டுள்­ளேன். பிற்­ப­டுத்­தப் பட்ட இஸ்­லா­மிய மாண­வர்­க­ளின் கல்­விக் கன­வு­களை நன­வாக்­கு­வ­தற்கு 3.5 சத­வி­கி­தம் இட ஒதுக்­கீடு தந்­த­வர் முத்­த­மி­ழ­றி­ஞர்   கலை­ஞர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நேற்று நடை­பெற்ற மிலா­டி­நபி திரு­நா­ளுக்கு அரசு விடு­முறை தந்­த­வர் முத்­த­மி­ழ­றி­ஞர்  கலை­ஞர் அவர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி)  அதன்­பின் வந்த ஆட்­சி­யா­ளர்­கள் அதை ரத்து செய்­து­விட்­ட­னர். மீண்­டும் கழக ஆட்சி அமைந்­த­வு­டன் அதை நான்­கா­வது மிலாடி நபி தினத்தை அரசு விடு­முறை அறி­வித்­தது முத்­த­மி­ழ­றி­ஞர்  கலை­ஞர் அவர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">குடி­யு­ரி­மைத் திருத்தச் சட்­டங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">CAA, NRC போன்ற குடி­யு­ரி­மைத் திருத்­தச் சட்­டங்­கள் வந்­த­போது, இந்­திய ஒன்­றி­யத்­தில் முதல் எதிர்ப்­பினை பதிவு செய்த முத­ல­மைச்­சர் முன்­னாள் முத­ல­மைச்­சர் தள­பதி ஸ்டாலின் அவர்­கள்.  (மேசை­யைத் தட்­டும் ஒலி) அதே குடி­யு­ரி­மைச் சட்­டத்தை எதிர்த்து ஆளு­நர் மாளி­கை­யில் முற்­று­கைப் போராட்­டத்­தில் ஈடு­பட்டு கைது செய்­யப்­பட்­ட­வர் எங்­க­ளு­டைய எதிர்க்­கட்­சித் தலை­வர்  உத­ய­நிதி ஸ்டாலின் அண்­ணன் அவர்­கள்.  (மேசை­யைத் தட்­டும் ஒலி) வாழை­யடி வாழை­யாக, சிறு­பான்மை மக்­க­ளின் நல­னி­லும், அவர்­க­ளு­டைய பாது­காப்­பி­லும், உரி­மை­க­ளி­லும், உடன்­பி­றப்­பாய் உடன் இருப்­பது திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் மட்­டும்­தான்.  இரண்டு தினங்­க­ளுக்கு முன்­ன­தாக, இஸ்­லா­மி­யர்­களை தி.மு.க. அவ­தூ­றா­கப் பேசி­ய­தா­கக் கூறி, அந்த சட்­ட­மன்ற உறுப்­பி­னர் சகோ­த­ரர், –குடி­யு­ரிமை எதிர்ப்பு போராட்­டங்­கள் நடந்த காலத்­தில், ஒரு நப­ரைக் குறிப்­பிட்டு, அவர் அந்த இஸ்­லா­மிய சமூ­கத்­தில் என்­னென்ன தீங்கு செய்­தி­ருக்­கி­றார் என்று பல்­வேறு YouTube channel மூல­மாக பேட்டி யளித்­துள்­ளார்­கள்.  குறிப்­பாக, Beast படத்­தைத் தடை செய்ய வேண்­டு­மென்று அவர் தனி, பிரத்­யேக பேட்­டியே அளித்­தி­ருந்­தார். அதிலே இஸ்­லாமி யர்­க­ளுக்கு எதி­ராக இப்­போது முத­ல­மைச்­ச­ராக இருக்­கக்­கூ­டி­ய­வர் எவ்­வாறு செயல்­ப­டு­கி­றார் என்­ப­தைக்­கூட 40 நிமி­டங்­கள் அவர் பேட்­டி­ய­ளிப்­பது என்­பது பெரும் முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தது.  அதற்கு அவர் பதி­ல­ளிப்­பாரா என்­ப­து­தான் எங்­க­ளு­டைய கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் வளர்ச்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பொதுப் பணி மற்­றும் விளை­யாட்டு மேம்­பாட்­டுத் துறை அமைச்­சர் அவர்­கள் இங்கே பட்­டி­ய­லிட்­டார். ஆனால், அவர் ஒன்­றிய அர­சாங்­கத்­தோடு பட்­டி­ய­லி­ட­வேண்­டும். இந்­தத் தமிழ்­நாட்டை திரா­விட அரசு ஆளும்­போது, எந்­த­ள­விற்கு வளர்ச்சி அடைந்தி ருக்­கி­றது, எவ்­வ­ள­வு­பேர் பயன் பெற்­றி­ருக்­கி­றார்­கள் என்று. கடந்த ஆட்­சிக்­கா­லங்­க­ளில் காவல் துறையை எடுத்­துக்­கொண்­டா­லும் சரி, அதே­போன்று, அரசு அதி­கா­ரி­க­ளாக இருக்­கக்­கூ­டி­ய­வர்­கள் 50 சத­வி­கி­தம் நபர்­கள் ஆதி திரா­விட மக்­கள்­தான் இன்­றைக்கு அர­சுப் பணி­யில் இருக்­கி­றார்­கள். உயர் கல்­வியை எடுத்­தா­லும் ஆதி திரா­வி­டர் நலத் துறை கல்­வித் துறை­யி­லும் சிறந்து விளங்­கி­யி­ருக்­கி­றது. (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்று இந்­தி­யாவை ஒப்­பி­டும்­போது தமிழ்­நா­டு­தான் ஆதி திரா­விட நலத் துறை­யில் முத­லி­டத்­தில் வகித்­துக் கொண்­டி­ருக்­கி­றது என்­பதை நான் இந்த நேரத்­தில் தெளி­வு­ப­டுத்­த­வி­ரும்­பு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி) நம்­மு­டைய  பொதுப் பணித் துறை அமைச்­சர் அவர்­க­ளுக்கு ஒரே­யொரு இலக்­கு­தான். இந்த அரசை அவர்­கள் ஆளு­கி­றார்­கள் என்று நினைக்­க­வில்லை. நாங்­கள்­தான் ஆண்­டு­கொண்­டி­ருக்­கி­றோம் என்று எங்­களை குறை சொல்­ல­வேண்­டு­மென்ற அடிப்­படை யில்­தான் அவ­ரு­டைய செயல்­பா­டு­கள் இருக்­கி­றதே யொழிய, . . .  இந்த அவை­யில்  பேசிய  பள்­ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்­றும் விளம்­ப­ரத் துறை அமைச்­சர் அவர்­கள், கடந்த திரா­விட மாடல் ஆட்சி இரண்­டாண்டு காலம் முடி­வுற்­ற­போது, அவரே எங்­க­ளு­டைய முன்­னாள்  முதல்­வர் அவர்­க­ளைப் பாராட்டி, சீராட்டி இப்­ப­டி­யொரு ஆட்சி உல­கத்­திலே நடக்­காது என்று சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்று நம்­மு­டைய  சமூக நீதித் துறை அமைச்­சர் அவர்­கள் இங்கு எது­வுமே செய்­ய­வில்லை என்று பதி­விட்­டார். கடந்த ஆட்­சி­யில், அன்று உறுப்­பி­ன­ராக இருந்த, வி.சி.க. கட்சிஉறுப்­பி­னர் அண்­ணன் சிந்­தனைச் செல்­வன் அவர்­கள், எங்­கள் அர­சைப் புகழ்ந்து, புகழ்ந்து பேசு­வார். அப்­போ­தெல்­லாம் நாங்­கள் நினைத்­துக்  கொண்­டோம், நாம் இன்­றைக்கு சமு­தா­யத்­தில் உயர்ந்த இடத்­தில் இருக்­கி­றோம். அண்­ணன் அவர்­களே அதை தெளி­வு­ப­டுத்­து­விட்­டார் என்று மிக­வும் நம்­பிக்கை யோடு இருந்து, எங்­கள் திட்­டங்­கள் மேலும், மேலும் சிறப்­பாக செயல்­பட்டு கொண்­டி­ருந்­தோம். ஆனால், இன்­றைக்கு  அமைச்­சர் அவர்­கள், அவ­ருக்கு எதி­ராக, அவர் கட்­சிக்கு எதி­ரா­கவே செயல்­பட்டு கொண்­டி­ருக்­கி­றார். நாங்­க­ளும் 107 இடங்­க­ளில் வெற்­றி­பெற்­றி­ருந்து, எங்­க­ளுக்­கும் வி.சி.க.-வும், காங்­கி­ர­சும் ஆத­ரவு கொடுத்­தி­ருந்­தால், நாங்­க­ளும் அமைச்­ச­ர­வை­யில் கொடுக்­கத்­தான் செய்­தி­ருப்­போம். இது எல்லா பக்­க­மும் நியா­ய­மான விஷ­யம்­தான். (குறுக்­கீடு)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">முடி­விற்கு கொண்­டு­வந்த அண்­ணியார் அவர்­க­ளுக்கு நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். நம்­மு­டைய இஸ்­லா­மிய சொந்­தங்­களை south side-ல் எப்­படி சொல்­வோம் என்­றால் தாத்தா, பேரன் என்ற முறை உண்டு. மாமா என்று ஒரு பகு­தி­யில் உண்டு. திரு­நெல்­வேலி பக்­கத்­தில் தாத்தா, பேரன் என்ற முறை உண்டு. தொப்­புள்­கொடி உற­வாக, அவ்­வ­ளவு உரி­மை­யோடு இருக்­கக்­கூ­டி­ய­வர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">இஸ்­லா­மிய சொந்­தங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இஸ்­லா­மிய சொந்­தங்­கள் மற்­றும் அனைத்­துச் சமு­தாய மக்­கள் பல்­வேறு குற்­றச் செயல்­க­ளில் ஈடு­பட்டு, ஆயுள்­தண்­டனை கைதி­க­ளாக ஏறக்­கு­றைய 25 ஆண்டு காலம் சிறைச் சாலை­யில் இருந்­துள்­ள­னர். மேற்­கண்ட சிறை­வா­சி­களை இதற்கு முன்­னாள் இருந்த திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய தலை­வர் முத்­த­மி­ழ­றி­ஞர்   கலை­ஞர் அவர்­க­ளு­டைய ஆட்­சி­யில், 10 ஆண்­டு­க­ளுக்­கு­மேல் உள்ள சிறை­வாசி களை நன்­ன­டத்­தைச் சான்­றி­தழ் பெற்று, சிறை­யில் எவ்­வி­த­மான குற்­றச்­சாட்­டு­க­ளும் செய்­யாத சிறை­வாசி களை விடு­தலை செய்­தார்­கள். அது­போன்­று­தான்,  தமிழ்­நாடு முன்­னாள் முத­ல­மைச்­சர் தள­ப­தி­யார் அவர்­கள் ஆட்­சிக் காலத்­தி­லும் ஆளு­நர் அவர்­க­ளால் கழக அர­சி­னு­டைய செயல் திட்­டம் நிறுத்தி வைக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்த அரசை நான் கேட்­டுக்­கொள்­வது, தமி­ழ­கத்­தில் இருக்­கக்­கூ­டிய சிறை­வா­சி­களை நன்­ன­டத்­தை­யின் அடிப்­ப­டை­யில், சிறை­யில் தன்­னு­டைய குற்­றங்­களை உணர்ந்­துள்­ளோர்­க­ளைக் கண்­ட­றிந்து, அவர்­களை வெகு விரை­வில் இந்த அரசு விடு­தலை செய்ய வேண்­டு­கி­றேன். கிறித்­துவ திரு­ச­பை­க­ளில் இறந்­த­வர்­களை புதைக்­கும் மயான இடங்­களை அரசு சார்­பில் கண்­ட­றிந்து வழங்­கிட தொடர்ந்து கோரிக்கை வைக்­கப்­பட்டு வரு­கி­றது. எனவே, இது­கு­றித்து முழு­மை­யான ஆய்வு மேற்­கொண்டு அவர்­க­ளுக்­கான இடங்­களை ஒதுக்­கீடு செய்து தர வேண்­டு­மென்­றும் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தொகு­திக் கோரிக்­கை­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் தாமி­ர­ப­ரணி கூட்­டுக் குடி­நீர் தந்து 30 ஆண்­டு­க­ளுக்கு மேல் ஆகி­விட்­டது. அந்த நேரத்­தில் இருந்த மக்­கள் தொகை­யைக் கணக்­கெ­டுத்­து­தான் தாமி­ர­ப­ரணி கூட்­டுக் குடி­நீர்த் திட்­டம் கொடுத்­தார்­கள். ஆனால், தற்­போது மக்­கள் தொகைப் பெருக்­கத்­தால் கிரா­மப்­பு­றங்­க­ளில் மிகப் பெரிய சிர­மத்­திற்­கு­ரிய குடி­நீர் தட்­டுப்­பாடு நில­வு­கி­றது. ஆனால், எங்­க­ளு­டைய ஆட்­சி­யில் சங்­க­ரன்­கோ­வில் நக­ரப் பகு­திக்கு புதிய கூட்­டுக் குடி­நீர்த் திட்­டம் வழங்­கி­னோம். அதே­போல, இரா­ஜ­பா­ளை­யம், சிவ­கா­சிக்­கெல்­லாம் வழங்கி யிருந்­தோம். இப்­போது என்­ன­வென்­றால் already profile போடப்­பட்டு, குரு­விக்­கு­ளம் Union, மானூர் Union, மேல­நீ­லி­த­நல்­லூர், வாசு­தே­வ­நல்­லூர், சங்­க­ரன்­கோ­வி­லுக்கு உட்­பட 500 கோடி ரூபாய்க்கு மதிப்­பீடு போடப்­பட்­டி­ருக்­கி­றது.  அந்­தப் புதிய கூட்­டுக் குடி­நீர்த் திட்­டத்தை நிறை­வேற்­றித் தர வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­போல, அங்கே செங்­கல் சூளை, மிக, மிக பெரிய பிரச்­சி­னை­யாக இருக்­கி­றது. 100-க்கும் மேற்­பட்ட கைதி­கள் மூல­மாக அறுக்­கக்­கூ­டிய செங்­கல் சூளை­கள் மூடப்­பட்­டுள்­ளன.  ஆனால், மற்ற மாவட்­டங்­க­ளில் அரசு அனு­மதி கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். அதே­போல, நீங்­கள் அனு­மதி கொடுத்து, விதி­மு­றை­ க­ளுக்­குட்­பட்டு, அதை செயல்­ப­டுத்த வேண்­டு­மென்­ப­தை­யும் கேட்­டுக்­கொள்­கி­றேன். புளி­யங்­கு­டி­யைச் சுற்றி அதி­க­மான சிறு தொழில்­கள், நெச­வுத் தொழில் இயந்­தி­ரங்­கள் இருப்­ப­தால் அதை மைய­மா­கக் கொண்டு மின் வாரிய கோட்ட அலு­வ­ல­கம் அமைக்க வேண்­டு­மென்­ப­தை­யும் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அது­போல, புளி­யங்­குடி மருத்­து­வ­ம­னைக்கு வெளி­நோ­யா­ளி­யாக ஒரு நாளைக்கு 700-க்கும் மேற்­பட்­ட­வர்­கள் வரு­கி­றார்­கள். அங்கு போது­மான அள­விற்கு உட்­கட்­ட­மைப்பு வச­தி­யில்லை. கூடு­த­லாக மருத்­து­வக் கட்­ட­டங்­கள் அமைக்­கு­மா­றும், மருத்­து­வர்­கள், செவி­லி­யர்­களை பணி­ய­மர்த்த வேண்­டு­மென்­ப­தை­யும் கேட்­டுக்­கொள்­கி­றேன். புளி­யங்­குடி நக­ராட்­சியை முதல் நிலை நக­ராட்­சி­யா­கத் தரம் உயர்த்த வேண்­டு­மென்­ப­தை­யும் எங்­க­ளு­டைய கோரிக்­கை­யாக இந்த அவை­யில் வைக்­கக் கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­போல, வீர­சி­கா­மணி பகு­தி­யில் கால்­ந­டை­கள் அதி­க­மாக இருப்­ப­தால் அங்கு கால்­நடை மருத்­துவ மனை அமைக்க வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்கி றேன். தென்­ம­லை­யில், இப்­போது அறு­வடை சம­யத்­தில்­கூட பொட்­ட­லில்­தான் நெல் மூட்­டை­களை அடுக்கி வைத்­தி­ருந்­தார்­கள். அங்கு ஒரு நெல் சேமிப்பு கிடங்கு அமைத்­துத் தந்­தால், மிக­வும் ஏது­வாக இருக்­கும். அதை­யும் செய்து தர வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மாமன்­னன் பூலித்­தே­வர் அவர்­க­ளு­டைய 311-வது ஜெயந்தி விழா இன்­னும் நான்கு நாட்­க­ளில் வரு­கின்ற 1 ஆம் தேதி நடை­பெற இருக்­கி­றது. இன்­னும் அந்த சிலைக்குவர்­ணம் பூச­வில்லை. மணி­மண்­ட­பத்­திற்­கும் paint அடிக்­கா­மல் இருக்­கி­றது. அத­னால், Union control-ல் இருக்­கக்­கூ­டிய மாமன்­னன் பூலித்­தே­வர் அவர்­க­ளு­டைய மணி­மண்­ட­பத்தை செய்­தித் துறையோ அல்­லது சுற்­று­லாத் துறையோ பரா­ம­ரிப்­ப­தற்கு எடுத்­துக்­கொள்ள வேண்­டு­மென்­பதை யும் கேட்­டுக்­கொள்­கி­றேன். மாமன்­னன் பூலித்­தே­வர் அவர்­க­ளு­டைய முதன்மை படைத் தள­பதி வெண்­ணி­ கா­ல­டி­யான் அவர்­கள். அங்கு ஜெயந்தி விழா நடை­பெ­று­கி­றது. ஆனால், நீதி­மன்ற உத்­தர வுப்­படி, மற்ற நபர்­கள் யாரும் அந்த ஊருக்­குச் செல்ல முடி­யாத நிலை இருக்­கி­றது. அங்கு எல்­லோ­ரும் சென்று மரி­யாதை செலுத்­து­வ­தற்கு அரசு சார்­பில் அரசு விழா­வாக அறி­விக்க வேண்­டு­மென்­ப­தை­யும் கேட்­டுக்­கொள்­கி­றேன். (மணி­ய­டிக்­கப்­பெற்­றது) நான் subject-ல் இருக்­கி­றேன். இப்­போ­தும் time தர­வில்லை யென்­றால் நன்­றாக இருக்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இப்­போது முடிக்­கப் போகி­றேன். பாம்­புக்­கோ­வில் சந்­தை­யென்­பது வாசு­தேவ நல்­லூ­ரில் இருக்­கி­றது. ஒன்­றிய அர­சாங்­கத்­தில் பாம்­புக்­கோ­வில் சந்தை யென்று இருக்­கி­றது. ஆனால், மாநில அர­சாங்­கத்­தில் அது மடத்­துப்­பட்டி என்­கிற பெய­ரில் இருக்­கி­றது. இத­னால் நிர்­வா­கக் கோளாறு ஏற்­ப­டு­கி­றது. இதனை சரி­செய்து பாம்­புக்­கோ­வில் சந்தை என்று பெயர் வைக்க வேண்­டு­மென்­ப­தை­யும் கேட்­டுக்­கொள்­கி­றேன். வாசு­தே­வ­நல்­லூர் தொகு­திக்கு உட்­பட்ட கரி­வ­லம்­வந்­த­நல்­லூ­ரில் ஆரம்ப சுகா­தார நிலை­யத்­தில் முன்பு 108 வாக­னம் இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சட்­ட­மன்­றப் பேரவை உறுப்­பி­னர் விடுதி வளா­கத்­தி­னுள் அமைக்­கப்­பட்­டுள்ள மருத்­து­வ­ம­னை­யில் தண்­ணீர் இல்லை. அதை உட­ன­டி­யாக அமைத்­துக் கொடுக்க வேண்­டும். ஏனென்­றால், sugar patient போகும்­போது மயங்கி விழுந்­தால்­கூட தெளிப்­ப­தற்கு தண்­ணீர் இல்லை. அதை நீங்­கள் கனி­வோடு செய்து கொடுக்க வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கடந்த 24 ஆம் தேதி, அவை­யில் நாங்­கள் இருந்­தோம். நீங்­கள் மற்­றொரு உறுப்­பி­னரை, ஒரு­மை­யில் பேசா­தீர்­கள் என்று கண்­டிப்­பு­டன் சொன்­னீர்­கள். TV-ல்  முதல்­வர் அவர்­க­ளின் முகத்­தைத்­தான் காட்ட வேண்­டு­மென்று சொன்­னார்­கள். ஆனால், Polimer TV-ல் எங்­களை round போட்டு காட்­டி­யி­ருக்­கி­றார்­கள். மக்­கள் மத்­தி­யில் நீங்­கள் எங்­க­ளைச் சொல்­ல­வில்லை. ஆனால், என்னை காண்­பித்து, Polimer TV-ல் news-ஐ பரப்பி விடு­கி­றார்­கள். இத­னால் என்ன ஆகி­றது என்­றால், எங்­கள் தொகு­தி­யில் உள்­ள­வர்­கள் என்­னி­டம் ஏன் இப்­படி என்று கேட்­கி­றார்­கள். நாங்­கள் இங்கு தொகுதி மக்­க­ளின் பிரச்­சி­னை­யைப் பேசத்­தான் வந்­தி­ருக்­கி­றோம். இந்த மாதிரி ஒரு video போட்டு, கை தூக்­கு­வ­தை­யெல்­லாம் comment அடித்து, Polimer TV செய்­து­கொண்­டி­ருக்­கி­றார்­கள். அதை அவைத் தலை­வ­ராக தடுத்து நிறுத்த வேண்­டும். அதற்­கான அறி­வு­ரை­களை வழங்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">முதல் அறி­விப்பு படிக்­கப்­ப­டு­கி­றது</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­போல, அந்த அறி­விப்பு முத­லில் வாசிக்­கப்­ப­டு­கி­றது என்று இன்­றைக்கு ஓர் அறி­விப்பு கொடுத்­தி­ருக்­கி­றீர்­கள். நான் என்ன சொல்­கி­றேன் என்­றால், கொள்கை விளக்­கக் குறிப்­புப் புத்­த­கத்­தோடு சேர்த்­துக் கொடுத்­து­விட்­டீர்­க­ளென்­றால், நாங்­கள் அதை­யும் சேர்த்து prepare செய்­து­விட்டு வந்­து­வி­டு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அது கொஞ்­சம் சிறப்­பாக இருக்­கும். இறு­தி­யாக எங்­க­ளு­டைய திரா­விட இயக்க தீரர்­க­ளுக்கு என்­றென்­றும் அறி­வைத் தீட்­டு­கிற இடம்­தான் எங்­கள் அண்ணா அறி­வா­ல­யம். சட்­ட­மன்ற உறுப்­பி­னர் தொடங்கி சாமா­னி­யத் தொண்­டன் வரை கழ­கத்­தில் ஒவ்­வொரு உடன்­பி­றப்­பும் எளி­தில் அணு­கக்­கூ­டிய அனை­வ­ருக்­கும் சொந்­த­மான இடம் எங்­கள் அண்ணா அறி­வா­ல­யம். அது வாட­கைக்­கு­விட வேண்­டிய கட்­ட­டம் அல்ல. அதை புரிந்­து­கொள்ள வேண்­டும். திரா­விட இயக்­கத்­தின் வர­லாற்­றை­யும், இலட்சி யத்­தை­யும், உடன்­பி­றப்­பு­க­ளின் உணர்­வு­க­ளை­யும் தாங்கி நிற்­கும் பாச­மிகு இல்­லம். தமிழ்­நாடு மாண­வர்­க­ளுக்­காக சுமார் நூற்­றாண்டு கால போராட்­டம், கல்­வியை விரும்­பிய இடங்­க­ளில் மாண வர்­கள் படிக்க வேண்­டு­மென்­பது (மணி யடிக்­கப்­பெற்­றது) அதனை எப்­போ­தும் ஊக்­கு­வித்து வரும் திரா­விட அர­சி­ய­லி­லி­ருந்து அவ­ரது பழைய பிற்­போக்கு அர­சி­ய­லான குலத் தொழில் கல்­வியை ஊக்­கு­விக்­கும்  அமைச்­சர் அவர்­கள் தற்­போது தஞ்­சம் அடைந்­தி­ருக்­கும் இயக்­கத்­தின் தலைமை அலு­வ­ல­க­மென கூறப்­ப­டும். வார இறுதி நாட்­கள் மட்­டும் elite people...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மட்­டும் திறக்­கப்­ப­டும் இடங்­களை வாட­கைக்கு விட்டு வரு­வாய் தேடிக்­கொள்­ள­லாம். ஆனால், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் அண்ணா அறி­வா­ல­யம் என்­றென்­றும் கழக தொண்­டர்­க­ளுக்­கான இல்­ல­மாக வும், திரா­விட இயக்­கத்­தின் அடை­யா­ள­மா­க­வும் திக­ழும். அத்­த­கைய. . .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வளர்த்து, எங்­க­ளைப்­போன்ற சாமா­னி­யத் தொண்­டர்­க­ளுக்­கும் அர­சி­யல் களத்­தில் குரல் கொடுக்க வாய்ப்­ப­ளித்த திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்கு என்­னு­டைய நெஞ்­சார்ந்த நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொண்டு, அவை­யில் அமர்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தொகு­திக் கோரிக்­கை­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வாசு­தே­வ­நல்­லூர் தொகுதி, “சமர் அணை” அமைத்­துத் தர வேண்­டும். வாசு­தே­வ­நல்­லூர் தொகுதி, புளி­யங்­கு­டியை தலை­மை­யா­கக் கொண்டு புதிய தாலுகா அறி­வித்­திட வேண்­டும்.தென்­காசி மாவட்ட பகு­தி­யில் வாழும் இரு­ளர் சமு­தாய மக்­கள் மற்­றும் காட்­டு­நா­யக்­கர் சமு­தா­யம், வீரக்­கொடி வெள்­ளா­ளர் சமு­தா­யம், 24 மனை தெலுங்கு செட்­டி­யார் சமு­தா­யம், போன்றவர்­க­ளுக்கு சாதி சான்­றி­தழ்­கள் வழங்­கிட வேண்­டும். தென்­காசி மாவட்­டம், சங்­க­ரன்­கோ­வில் நக­ரப் பகு­தி­யில், விடு­பட்­டோ­ருக்கு பட்டாவழங்­கும் பணியை விரைந்து தொடங்­கிட வேண்­டும். வாசு­தே­வ­நல்­லூர் தொகுதி, பேரூர்  பகு­தி­யில் உள்ள ஆரம்ப சுகா­தார நிலை­யத்தை அரசு மருத்­து­வ­ம­னை­யாக தரம் உயர்த்த வேண்­டும்.வாசு­தே­வ­நல்­லூர் தொகுதி, சிவ­கிரி வட்­டார பகு­தி­யில் ஒரு அரசு கலைக்­கல்­லூரி அமைக்க வேண்­டும்.வாசு­தே­வ­நல்­லூர் தொகுதி, சிவ­கிரி அல்­லது புளி­யங்­குடி ஆகிய ஏதா­வ­தொரு பகு­தி­யில் உழ­வர் சந்தை அமைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வாசு­தே­வ­நல்­லூர் தொகுதி, சங்­க­ரன்­கோ­வில் வட்­டம், பெரும்­பத்­தூர் கிரா­மம், கண்­டி­கைப்­பேரி மற்­றும் புன்­னை­வ­னப்­பேரி கிரா­மத்­தில் அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்ள 30 நாட்­டுச்­செங்­கல் சூளை­க­ளுக்கு அனு­மதி வழங்­கிட வேண்­டும்.வாசு­தே­வ­நல்­லூர் தொகுதி, விவ­சாய மக்­க­ளி­டம் இருந்து பெறப்­பட்ட கரும்­பிற்கு வழங்­கப்­பட வேண்­டிய தொகை­யினை அரசு உட­ன­டி­யாக சர்க்­கரை ஆலை நிர்­வா­கத்­து­டன் பேச்­சு­வார்த்தை நடத்தி உட­ன­டி­யாக பெற்­றுத் தர வேண்­டும். வாசு­தே­வ­நல்­லூர் தொகுதி, புளி­யங்­குடி அரசு மருத்­து­வ­ம­னை­யில் கூடு­தல் மருத்­துவ கட்­ட­டங்­கள் அமைக்க வேண்­டும். கரி­வ­லம்­வந்த நல்­லூர் ஆரம்ப சுகா­தார நிலை­யத்­திற்கு கூடு­தல் படுக்கை வசதி கொண்ட மருத்­தவ கட்­ட­டம் கட்­டித்­தர வேண்­டும்.  சங்­க­ரன் கோவில் ஊராட்சி ஒன்­றி­யத்­தில், கரி­வ­லம்­வந்­த­நல்­லூரை மைய­மா­கக் கொண்டு மொழி­ஞா­யிறு தேவ­நே­ய­பா­வ­ாணர் பெய­ரில் ஒரு கல்­லூரி அமைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வாசு­தே­வ­நல்­லூர் தொகு­திக்­குட்­பட்ட வீர­சி­கா­மணி பகு­தி­யில் புதி­தாக கால்­நடை மருத்­து­வ­மனை அமைத்­துத்­தர வேண்­டும். வாசு­தே­வ­நல்­லூர் தொகுதி,புளி­யங்­குடி கால்­நடை மருத்­து­வ­மனை கட்­ட­டத்தை இடித்து. புதிய கட்­ட­டம் அமைத்து ஆய்­வக்க்­கூ­டம் கட்­டித்­தர வேண்­டும். வாசு­தே­வ­நல்­லூர் தொகு­தி­யில் உள்ள மடத்­துப்­பட்டி கிரா­மம் மற்­றும் பாம்­பு­ கோ­வில் சந்தை கிரா­மம் என பெயர் மாறி மாறி உள்ள கிரா­மப்­பெ­யரை, பாம்­பு­கோ­வில் சந்தை என்ற ஒரே பெய­ரோடு தமிழ்­நாடு அரசு கோப்­பு­க­ளில் பெயர்
­மாற்­றம் செய்ய வேண்­டும். வாசு­தே­வ­நல்­லூர் தொகுதி, 108 ஆம்­பு­லன்ஸ் வாக­னம் கரி­வ­லம் ஆரம்ப சுகா­தார நிலை­யத்­தி­லேயே நிறுத்தி வைக்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வாசு­தே­வ­நல்­லூர் தொகுதி, புளி­யங்­குடி நக­ராட்சி யில் உள்ள மேல்­நி­லைப்­பள்­ளி­யில் உள்­வி­ளை­யாட்டு  அரங்­கம் அமைத்­திட வேண்­டும்.வாசு­தே­வ­நல்­லூர் தொகுதி, தென்­ம­லையை மைய­மாக கொண்டு நெல் சேமிப்பு கிடங்கு அமைத்­துத்­தர வேண்­டும்.வாசுதே வநல்­லூர் தொகு­தி­யில் நிறு­வப்­பட்­டுள்ள பூலித்­தே­வர் திரு­வு­ரு­வச்­சி­லைக்கு நிழற்­குடை அமைத்­திட வேண்­டும்.வாசு­தே­வ­நல்­லூர் தொகுதி, புளி­யங்­குடி நக­ராட்­சிக்கு புதி­தாக தீய­ணைப்பு நிலை­யம் அமைத்­துத்­தர வேண்­டும். வாசு­தே­வ­நல்­லூர் தொகு­திக்­குட்­பட்ட சிவ­கி­ரி­யில் சார்பு நீதி­மன்­றம் அமைக்க வேண்­டும்.வாசு­தே­வ­நல்­லூர் தொகுதி, கடை­ய­நல்­லூர் தாலு­கா­வைப் பிரித்து புளி­யங்­கு­டி­யைத் தலை­மை­யி­ட­மா­கக் கொண்டு புதிய தாலுகா அமைத்­துத்­தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்வாறு வாசுதேவ நல்லூர் ஈ.ராஜா பேசினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>