<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,66,957,1229" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Sep 11 2026 04:01:22 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260911T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="11092026-VLR-09" position.sequence="09" ex-ref="11092026-VLR-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="63">தி.மு.க.வில் காலந்தோறும் நிகழ்ந்த மறுசீரமைப்புகள்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup855729_09_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup855700_09_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup855686_09_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="13">2026</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">–செப்.17 ஆம் தேதியோடு தி.மு.க. அறிஞர் அண்ணா அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு 77 ஆண்டுகள் முடிவடைகின்றன. 1949 செப்.17, 18 ஆம் தேதிகளில் தி.மு.க. தோற்றுவிக்கப்பட்ட போது அதன் தலைமை நிர்வாகிகள் துணைக்குழுக்கள் எல்லாம் நியமன மானவையே. தேர்ந்தெடுக்கப்பட்டவை அன்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கழகத்தின் அமைப்புக்குழு அறிஞர் அண்ணாவைப் பொதுச் செயலாளராக நியமித்தது. தி.மு.க.வுக்குத் ‘தலைவர்’ என்ற பொறுப்பை அப்போது ஏற்படுத்தவில்லை. கட்சிக்கு அனைத்து அதிகாரமுடையவராகப் பொதுச்செயலாளர்மட்டுமே இருந்தார். கம்யூனிஸ்டுக் கட்சியைப் போல தி.மு.க,வுக்குப் பொதுச்செயலாளர் மட்டுமே இருப்பதை தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமன் அந்தத் தருணத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தி.மு.க.வுக்குச் சட்டத்திட்டங்கள் முக்கியமானவை. அதில் குறிக்கோள், நோக்கம், இலட்சியம் பற்றி தொடக்கத்திலேயே விளக்கப்பட்டு இருக்கும்.   இந்தச் சட்டத் திட்டம் குறிக்கோள் பற்றிய ஆய்வு செய்து கழகம் அதன்படி இயங்கத் துணைக் குழுக்களில் ஒன்றாகச் சட்டத்திட்டக் குழு நியமிக்கப்பட்டது. கழகச் சட்டத்திட்டங்கள் ஏற்படுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகின. மதுரைப் பொதுக்குழு முதல் சட்டத் திட்டங்களை ஏற்பளிப்புச் செய்தது. முதல் தி.மு.க. மாநில மாநாட்டில் கழகச் சட்டத் திட்டங்கள் முன் வைக்கப்பட்டு ஏற்கப்பட்டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்படி ஏற்பளிப்புச் செய்யப்பட்ட கழகச் சட்டத்திட்டங்கள் 1952 ஆம் ஆண்டு சிறுபுத்தகமாக வெளியிடப்பட்டது. அதன் பிறகே நடைமுறைக்கு வந்தது. புத்தகத்தின் விலை 2 அணா (12 காசுகள்)  அதுவரை கழகம் நியமன  நிர்வாகிகளைக் கொண்டே இயங்கி வந்தது. இச்சட்டத் திட்டப்படி 1953–இல் கழகத் தேர்தல் நடந்தது. நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி கழக நிர்வாகத்தில் முதல் சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. முதல் செயற்குழு 13.07.1953 இல் கூடியது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முதற்கூட்டத்தில் மாவட்டச்செயலாளர்கள் தான் செயற்குழு உறுப்பினர்களாக இருந்தார்கள். பொதுச் 
செயலாளரால் நியமிக்கப்பட்டவர்கள் செயற்குழுவில் அங்கம் பெற்றனர். பொதுக்குழுத் தேர்ந்தெடுக்கப்பட்டு இயங்கியது. அப்போது எந்த அணிகளும் தோற்று விக்கப்பட வில்லை. ஆனால் இணை அமைப்பாகத் திராவிட மாணவர் முன்னேற்றக் கழகம் 8.11.1950 இல் தோற்று விக்கப்பட்டு அதே தேதியில் முதல் மாநாட்டை நடத்தி இருந்தது. 1956 முதலே மகளிர் அணி தி.மு.க.வில் மெல்ல இயங்கத் தொடங்கியது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">1949 முதல் 1960 வரை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தலைமைக் கழக நிர்வாகிகள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">செயற்குழு
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">(1949 முதல் 1952 டிசம்பர் வரை)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பொதுச்செயலாளர்: அறிஞர் அண்ணா, பிரச்சாரக் குழுச் செயலாளர்: இரா.நெடுஞ்செழியன், அமைப்புக் குழுச் செயலாளர் என்.வி. நடராசன், சட்டத் திட்டக்குழுச் செயலாளர் கே.ஏ. மதியழகன், நிதிக்குழுச் செயலாளர் காஞ்சி மணிமொழியார், செயற்குழு உறுப்பினர்கள், பெத்தாம்பாளையம் பழனிச்சாமி, டி.எம். பார்த்தசாரதி, சத்தியவாணிமுத்து, கே.எம்.கண்ணபிரான், ஈ.வி.ஏ. வள்ளிமுத்து, வி.எம்.ஜான், அன்பில் தர்மலிங்கம், பொன்மலை பராங்குசம், முல்லை வடிவேலு, சி.பி.சிற்றரசு, ஜி.பி.சோமசுந்தரம், சி.வி.எம்.அண்ணாமலை, இரா.சாம்பசிவம், மதுரை எஸ்.முத்து, எம்.எஸ்.சிவசாமி, குமார தணிகாசலம். தொடக்கத்தில் 16 செயற்குழு உறுப்பினர்கள்; 133 பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">இரண்டாம் செயற்குழு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">(1952 டிசம்பர் முதல் 1955 ஏப்ரல் வரை)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பொதுச்செயலாளர்: அறிஞர் அண்ணா, துணைச் செயலாளர்கள்: இரா.நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், பொருளாளர்: கே.கே.நீலமேகம். செயற்குழு உறுப்பினர்கள்: ஜி.பி.சோமசுந்தரம், ஈ.வெ.கி.சம்பத், என்.வி.நடராசன், மு.கருணாநிதி, ஏ.வி.பி.ஆசைத்தம்பி, சத்தியவாணி முத்து, சி.வி.எம்.அண்ணாமலை, மதுரை எஸ்.முத்து, ஏ.எல்.சி. கிருஷ்ணசாமி, எஸ்.வீரபாகு, பாலகுருசாமி, அன்பில் தர்மலிங்கம், வி.எம்.ஜான், ஆகமொத்தம் செயற்குழு உறுப்பினர்கள் 13.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">மூன்றாம் செயற்குழு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">(1955 ஏப்ரல் முதல் 1960 செப்டம்பர் வரை)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பொதுச்செயலாளர்: நாவலர் நெடுஞ்செழியன், துணைப் பொதுச்செயலாளர் என்.வி.நடராசன், செயற்குழு உறுப்பினர்கள்: அறிஞர் அண்ணா,  ஈ.வெ.கி.சம்பத், மு.கருணாநிதி, கே.ஏ.மதியழகன், சி.பி.சிற்றரசு, ஏ.வி.பி.ஆசைத்தம்பி, சத்தியவாணிமுத்து, கே.கே.நீலமேகம், ஜி.பி.சோமசுந்தரம், சி.வி.எம். அண்ணாமலை, அன்பில் தருமலிங்கம், மதுரை எஸ்.முத்து, கே.வி.கே.சாமி, இரா.சாம்பசிவம், வி.எம்.ஜான் ஆகமொத்த செயற்குழு உறுப்பினர்கள் 15.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">நான்காம் செயற்குழு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">(1960 செப்டம்பர் 25 முதல்)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவைத்தலைவர் ஈ.வெ.கி.சம்பத், பொதுச்செயலாளர் அறிஞர் அண்ணா, பொருளாளர் மு.கருணாநிதி, கொள்கை பரப்புச் செயலாளர் இரா.நெடுஞ்செழியன், அமைப்புச் செயலாளர் என்.வி.நடராசன், தலைமைநிலையச் செயலாளர் கே.ஏ.மதியழகன், தொழிலாளர் அணிச் 
செயலாளர் க.அன்பழகன், வெளியீட்டுச் செயலாளர் சி.பி.சிற்றரசு, செயற்குழு உறுப்பினர்கள் சத்தியவாணிமுத்து, ஏ.கோவிந்தசாமி, ப.உ.சண்முகம், எம்.பி.சுப்ரமணியம், டி.கே.சீனிவாசன், மதுரை எஸ்.முத்து, அன்பில் தர்மலிங்கம், சி.வி.எம்.அண்ணாமலை, எம்.எஸ்.சிவசாமி, தில்லை வில்லாளன், எஸ்.எஸ்.தென்னரசு, எஸ்.ஏ.இராசமாணிக்கம், எஸ்.ஜே.உசேன், ஆக மொத்த செயற்குழு உறுப்பினர்கள் 13.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">1960 செப்டம்பர் 24 வரை கழகத்தில் அவைத்தலைவர் என்கிற பொறுப்பு ஏற்படுத்தவில்லை. கழகத் தலைமையின் நிர்வாக அவசியம் காரணமாக 1960 செப்படம்பர் 25 இல் நடைபெற்ற தலைமைக்கழகத் தேர்தலில் அவைத்தலைவர் எனும் பொறுப்பு உருவாகியது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">1960 ஜூலையில் மயிலாடுதுறையில் நடைபெற்ற பொதுக்குழுவில் ‘பாராளுமன்றம், சட்டமன்றம், ஊராட்சி மன்றம் ஆகியவைகளில் உறுப்பினர்களாய் இருப்பவர்கள் பொதுச்செயலாளர் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நாள்களுக்குள் விலகிவிட வேண்டும்” என்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத் தீர்மானத்தைக் கழகத் தேர்தல் விதியில் இணைத்து அப்போதைய பொதுச்செயலாளர் இரா.நெடுஞ்செழியன்  09.07.1960 இல் அறிவிப்பு செய்தார். பிறகு இத் தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகே 25.09.1960 தலைமைக் கழகத் தேர்தல் நடைபெற்றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">1961 ஏப்ரலுக்குப் பிறகு கழகத்தின் அவைத் தலைவராக இரா.நெடுஞ்செழியன் இருந்தார். 1962 ஆம் ஆண்டு  பொதுத்தேர்தலுக்குப் பிறகு கழகத்தின் நடவடிக்கைகள் மிக வேகமாக இருந்தன. ஒரு பக்கம் ஆட்சிமொழி மசோதா சட்டமாக்க தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இன்னொரு பக்கம் தி.மு.கழகத்தை தடை செய்யும் விதமாக பிரிவினைத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அறிஞர் அண்ணா கழகச் சட்டத் திட்டங்களை மறுசீரமைப்பு செய்து கழகத்தை ஒன்றிய அரசு தடை செய்வதிலிருந்து காப்பாற்றினார். இதை நான் இங்கே மிக எளிதாக எழுதிவிடுகிறேன். அந்த நாள்கள் எவ்வளவு கடினமானவை; ஒரு ஒன்றிய அரசின் தடையை எதிர்கொண்டு தி.மு.கழகத்தைக் காப்பாற்றுவது கட்சியில் ஓர் அச்சம் கலந்த பயத்தையே உண்டாக்கி இருந்தது என்று சொல்வேன். இது மிகப்பெரிய நெடிய விஷயம்; இது கழகத்தில் நிகழ்ந்த மகத்தான சீரமைப்பாகும். அதனை இங்கே சுருக்கமாகச் கூறுகின்றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">1963 ஆம் ஆண்டு மக்களவையில் 16 ஆவது அரசியல் சட்டத் திருத்த மசோதா அதாவது பிரிவினைத் தடை மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம்  மே9 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் 1963 அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. மக்களவையில் மசோதா நிறைவேறியவுடன் அறிஞர் அண்ணா மே மாதம் கடைசியில் தமிழகம்  முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். 1963 ஜூன் 8,9,10 ஆம் தேதிகளில் கழகச் செயற்குழுவும் பொதுக்குழுவும் கூடியது.இந்தப் பொதுக்குழு அறிஞர் அண்ணா அவர்களுக்கு–அதாவது கழகப் பொதுச் செயலாளருக்கு நிலைமைகளுக்கு ஏற்ப முடிவு எடுத்துக் கொள்ளுமாறு அனைத்து அதிகாரங்களையும் வழங்கியது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்நிகழ்வுக்கு முன்பாக அறிஞர் அண்ணா வேறொரு செயலினை மேற்கொண்டார். ஒரு வேளை தி.மு.கழகம் தடை செய்யப்பட்டு விட்டால் உடனடிஅமைப்பு ஒன்று இருக்க வேண்டும் என்று கருதி சென்னை கோகலே ஹாலில் வழக்கறிஞர் கே.நாராயணசாமி முதலியார் – (அறிஞர் அண்ணாவின் நெருங்கிய நண்பர்–தி.மு.க.வின் தொடக்கக்காலங்களில் தி.மு.க. வழக்குகளுக்காக–தோழர்களுக்காக வாதாடியவர். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தவர்) தலைமையில் அறிஞர் அண்ணா ‘மக்கள் உரிமைக்கழகம்’ எனும் அமைப்பைத் தோற்றுவித்தார்.ஆனால் அறிஞர் அண்ணா தோற்றுவித்த இவ்வமைப்பு ஒரு பாதுகாப்பிற்காகத் தோற்றுவிக்கப்பட்டது அவ்வளவே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பிரிவினைத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் கழகத் தோழர்களுக்கு–முன்னணி வீரர்களுக்கு கழகத்தை எப்படிக் காப்பாற்றுவது  என்பது குறித்து அறிஞர் அண்ணா ஒரு நிரலைஅவரது கையெழுத்து வடிவத்தில் தயாரித்து வைத்திருந்தார். அந்த நிரலுக்கு அவர், ‘எண்ணித் துணிகக் கருமம்’ என்று தலைப்பிட்டிருந்திருந்தார். (இதை 2003 ஆண்டு  ஒரு புத்தகமாக  தி.மு.கழகம் கலைஞரின் முன்னுரையோடு வெளியிட்டு இருந்தது. இது பற்றி முரசொலியிலும் கலைஞர் மடல் தீட்டினார்) அண்ணாவின் அந்த நிரல் என்ன சொல்கிறது என்பதை நான் நான்கு புள்ளிகளில் சுருக்கமாகக் கூறிவிடுகின்றேன். அதுவும் அண்ணாவின் எழுத்துகளிலேயே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">(1) “சுருக்கமாகச் சொல்வதானால்,இந்தப் புதிய சட்டம்,திராவிட நாடு பிரிவினைப் பிரச்சாரத்தையும், இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தி.மு.கழகத்தையும் அழித்துவிட முனைகிறது”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">(2) காரணம், ஆயிரம் காட்டினாலும் ஜூலை கிளர்ச்சியின் போது, ஏற்பட்ட வெளிவரும் படலம் என் நம்பிக்கையை நாசமாக்கிவிட்டது. அந்தக் கசப்பான அனுபவம் என் மனத்தை விட்டு அகல மறுக்கிறது”(ஜூலை கிளர்ச்சி என்பது 1962 இல் கழகம் நடத்திய விலைவாசி போராட்டம். இதில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கில் சிறைச் சென்ற தோழர்கள் சிறை அதிகாரிகளின் மிரட்டலுக்கு பயந்து மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்துவிட்டு விடுலையாகினர். இதனைத்தான் ‘அண்ணா கசப்பான அனுபவம்’ என்கிறார்)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">(3) ‘தடைச் சட்டம் எனும் புதிய கருவியைக் களத்திலே காங்கிரஸ் ஏவுகிறதோ, அதுபோலவே தான் நாமும், தடைச் சட்டத்தைத் தகர்க்க, அதனுடன் மோதிக்கொள்ள ஒரு புதிய கருவியை –ஒரு போர்த்தந்திரத்தைக் கண்டாக வேண்டும்”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">(4) ஆகவே, நிலைமைக்கு எற்ப, முறைகளை வகுத்து செயல்பட, என் திறமையிலும் தூய்மையிலும் நம்பிக்கை உங்களுக்கு இருக்குமானால் எனக்கு அந்த உரிமையை வழங்க வேண்டுகிறேன்”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் பொதுவாகப் பேசி வருவதைக் கவனித்திருப்பீர்கள். எனது நோக்கம், கொள்கையையும் விடக்கூடாது–கழகம் எனும் அமைப்பும் கலையலாகாது.நம்மிலே எவரும் கோழைகளாகி விடுதல் ஆகாது என்பதாகும்”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எப்படி இவைகளைஒரு சேர வழிவகுப்பது என்பதுதான் எனக்கு இப்போதுள்ள சிக்கல் நிறைந்த சிந்தனை”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்படிப்பட்ட சிந்தனையில் இருந்த அறிஞர் அண்ணா கழகத்திடம் அதிகாரம் பெற்று அதனை எப்படிக் காப்பாற்றினார்? அதையும் சுருக்கமாகக் கூறுகின்றேன். தி.மு.கழகத்தின் சட்டத்திட்டப்புத்தகத்தில் 1951ஆம்  ஆண்டு, முதல் பதிப்பில் உள்ள</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">கொள்கைகளும் நோக்கங்களும்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனும் தலைப்பில்உள்ள விவரம்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">கழகத்தின் நோக்கம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி பேசும் மக்களடங்கிய தொடர்பான பிரதேசங்களைக் கொண்ட திராவிட நாடு அமைத்து அதில் சமதர்மக் குடியரசுக் கூட்டாட்சி நிறுவுவது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">கழகத்தின் நோக்கங்கள்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சாதி,மத,ஏற்ற தாழ்வற்ற சமுதாயத்தை ஏற்படுத்துவது, மனிதனை மனிதன் சுரண்டுவதை ஒழிப்பது, அரசியல்,பொருளாதார, சமூக, கலாச்சார துறைகளில் சம சந்தர்ப்பம், முழுப்பாதுகாப்பு, சுதந்திரம் இவை ஆடவர்,பெண்டிர் அனைவருக்கும் கிடைக்கப் போராடுவது”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த இரண்டு ‘பாராக்கள் 1951, 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தி.மு.கழகச் சட்டத்திட்டப் பதிப்புகளில் கொள்கைகளும் நோக்கங்களும்  எனும் ஒரே தலைப்பின் கீழ் இருந்தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த கழகச் சட்டத் திட்டப் புத்தகத்தில் மேலே  உள்ள இரண்டு ‘பாரா’க்கள் விதி2, விதி3 என்று குறிக்கப்பட்டுள்ளது. 1951, 1952ஆம் பதிப்புகளில் உள்ள திராவிட நாடு கொள்கை விளக்கத்திற்கும் 1959ஆம் ஆண்டு காணப்படும் பதிப்பில் காணப்படும் திராவிட நாடு கொள்கைக்கும் வித்தியாசம் இருப்பதைக் காணலாம். அதற்குக் காரணம் மொழிவழி மாநிலப் பிரிவினையே ஆகும். மேலும் நோக்கங்களில், ‘சமுதாயத்தில் பகுத்தறிவு அடிப்படையில் மறுமலர்ச்சி காண சீர்திருத்த பணிபுரிவது’ என்பது இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த வேறுபாடுகள் அரசியல் தேவையையும் அறிவியக்கப் பணியின் அவசியத்தையும் வற்புறுத்தவே விதிகளில் இணைக்கப்பட்டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">1963 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு பிரிவினைத்தடைச் சட்டத்தைக் கொண்டு வரும்போது, 1959 ஆம் ஆண்டு கழகச் சட்டத்திட்ட விதிகளே நடைமுறையில் இருந்தன. அதிலுள்ள விதி 2–ஐ அறிஞர் அண்ணா மாற்றி அமைத்தார். மாற்றி அமைத்த விதி 2, பின் வருமாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“தமிழகம், ஆந்திரா, கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு மொழி வழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத்தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகிய வற்றிற்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று நெருங்கிய திராவிட கூட்டமைப்பாக நிலவப்பாடு படுவது”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதன்படி 1959, 1962 கழகச் சட்டத் திட்டத்தில் உள்ள குறிக்கோள் 2இல் குறிப்பிட்டிருந்த பகுதி நீக்கப்பட்டு விடுகிறது. இந்தத் திருத்தத்தை அறிஞர் அண்ணா செய்தார். ஆனால் இது போதுமானதா? சட்டச் சிக்கலை ஏற்படுத்தக் கூடியதாக  இருக்குமா? என்றெல்லாம் அறிஞர் அண்ணா யோசித்தார். இதன் விளைவாக இந்தத் திருத்தத்தை ஒரு சிறந்த வழக்கறிஞர் பார்வைக்கு அனுப்பி கருத்தறிய விரும்பினார். அதற்காக அந்தத் திருத்தத்தை இரா.செழியன் மூலம் அனுப்பி எம்.கே.நம்பியாரிடம் கருத்தைக் கேட்டறிந்தார். எம்.கே.நம்பியார் திருத்தம் சரியாக இருக்கிறது என்கிற ஒப்புதலைத் தந்தார். இதற்கு அடுத்து சென்னையில் 1963 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி கூடிய கழகச் செயற்குழுவில் மாற்றம் செய்யப்பட்டு குறிக்கோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அறிஞர்அண்ணா மறுசீரமைப்புப் பணியைப் போர்த் தந்திரம் என்று உள்ளீடு நிறைந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். ஆக, தி.மு.கழகம் ஒன்றிய அரசின் தடையிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது. பிறகு இந்தி எதிர்ப்பு தொடர் போராட்டத்தைக் கழகம் நடத்தியது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">1969 பிப்ரவரியில் அறிஞர்அண்ணா தமிழ்நாட்டின் முதல்வராகவே மறைந்தார். அவரின் மறைவுக்குப் பிறகு தலைமைக் கழக பொறுப்புகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது ஒரு வகையான சீரமைப்பே ஆகும். அறிஞர் அண்ணா முதல்வராக இருந்த போது பல அனுபவங்களைப்  பெற்றார். ஒன்றிய அரசின் அதிகார குவிப்பால் மாநிலங்களுக்கான அதிகாரங்கள் எஜமான போக்கிலேயே இருந்தது. கூட்டாட்சி முறை பேணப்படவில்லை. ஆகவே மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் எனும் கோரிக்கையை அண்ணா காஞ்சி பொங்கல் மலரில் தம்பிக்கு எழுதிய கடிதத்தில் வற்புறுத்தி இருந்தார். இதனை அண்ணாவின் கடைசி விருப்பமாகவும் அறிகிறோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்நிலையில் கழகச் சட்டத்திட்ட விதிகளில் இரு மாபெரும் மாறுதல்கள் ஏற்பட்டன. ஏற்கனவே உள்ளபடி பொதுச்செயலாளர் ஆற்ற வேண்டிய பணிகள், பொறுப்புகள் குறித்து அதன் தொடர்பாக பல பிரிவுகளும் தனித்தனியாகப் பலபிரிவுகளும் இருந்தன. அந்தப் பிரிவுகளை அப்படியே வைத்துக் கொண்டு ‘அவைத் தலைவர்’ என்பதைத் ‘தலைவர்’ என்று மாற்ற வேண்டும். பொதுச்செயலாளர் நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்குத் தலைவரைக் கலந்து பேசி இருவரும் சேர்ந்து முடிவு மேற்கொண்ட பிறகு தான் அவற்றை நிறைவேற்ற வேண்டும்.” என்னும் இந்தக் கழகச் சட்டத்திருத்தம் அண்ணா மறைவுக்குப் பின் பழைய பொதுக்குழுவில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அதன்படி 27.07.1969 இல் நடைபெற்ற தலைமைக் கழகத் தேர்தலில் தலைவர் பதவிக்குக் கலைஞரும் பொதுச் 
செயலாளர் பதவிக்கு நாவலரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது முதல் தலைவர் பதவி என்று ஒன்று தி.மு.க.வில் அறிமுக மாயிற்று. இந்தப் புதிய பொதுக்குழுவில் மொத்தம் 326 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால் தலைமைக் கழகத் தேர்தலின் போது 320 பேர் வந்திருந்தனர். 1959ஆம் ஆண்டு வெளியான கழகச் சட்டத்திட்டப் புத்தகத்தில் ‘அவைத்தலைவர்’ என்று பேசப்பட்டு இருக்கிறது. அதன்படி அப்பொறுப்புக்கான பயன்பாடு 1960 செப்.25இல் நடைமுறையாயிற்று.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>