<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="12/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,957,1234" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Sep 12 2026 00:12:28 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260912T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="12092026-MDU-05" position.sequence="05" ex-ref="12092026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="71">இரண்டு தொகுதி இடைத்தேர்தல்: த.வெ.க-.வும் அ.தி.மு.க.-வும் ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup859000_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="16">அ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ர­சி­ய­லில் துரோ­கங்­கள் புதி­தல்ல. ஆனால், வர­லாறு காணாத பெரும் பச்­சைத் துரோ­கங்­கள் மீது­தான் இப்­போது மது­ராந்­த­கம் – தாரா­பு­ரம் தொகு­தி­க­ளுக்­கான இடைத்­தேர்­தல் நடை­பெ­ற­வி­ருக்­கி­றது. அர­சி­யல் கீழ்­மை­கள், நம்­பிக்­கைத் துரோ­கம், சுய­லா­பம் ஒன்­றையே அடிப்­ப­டை­யா­கக் கொண்ட கய­மை­க­ளின் நாட­க­மாக இந்­தத் தேர்­தல் மக்­கள் மீது திணிக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">யாருக்­கெல்­லாம் என்­னென்ன துரோ­கங்­கள் இந்­தத் தேர்­த­லில் இழைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்­ப­தைப் பார்த்­தாலே, த.வெ.க. ஜன­நா­ய­கத்­திற்கு எவ்­வ­ளவு பெரிய தீய­சக்தி என்­பது தெளி­வா­கப் புரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">பா.ஜ.க. காட்­டிய மோச­மான வழி­மு­றை­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு கட்­சி­யின் சார்­பில் போட்­டி­யிட்டு மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பிறகு, அந்த மக்­கள் பிர­தி­நி­தி­கள் மாற்­றுக் கட்­சிக்கு ஆத­ர­வா­கச் செயல்­பட்­டால், ‘கட்­சித் தாவல் தடைச் சட்­டம்’ (Anti–Defection Law) பாய்ந்து அவர்­க­ளின் பதவி பறி­போ­கும். ஆனால், மொத்த உறுப்­பி­னர்­க­ளில் மூன்­றில் இரண்டு பங்­கி­னர் ஒரே நேரத்­தில் மாற்­றுக் கட்­சிக்­குச் சென்­றால், இச்­சட்­டம் செல்­லு­ப­டி­யா­காது. தனிப்­பட்ட நப­ரா­கவோ அல்­லது ஒரு சில உறுப்­பி­னர்­க­ளா­கவோ பிரிந்து சென்­றால் மட்­டுமே பதவி பறி­போ­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தக் கட்­சித் தாவல் தடைச் சட்­டத்தை ஏமாற்ற பா.ஜ.க. கண்­டு­பி­டித்த ஒரு வழி­தான், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளை­யும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளை­யும் பதவி) விலக வைத்து, செயற்­கை­யாக இடைத்­தேர்­தல்­க­ளைக் கொண்­டு­வந்து தனக்­குத் தேவை­யான உறுப்­பி­னர்­க­ளைப் பெறும் உத்தி. குதி­ரை­பே­ரத்தை (Horse–trading) ஒழிப்­ப­தற்­கா­கக் கொண்­டு­வ­ரப்­பட்ட இந்­தச் சட்­டத்தை, நாடு முழு­வ­தும் பா.ஜ.க. இவ்­வாறு நீர்த்­துப்­போ­கச் செய்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">சில முக்­கிய உதா­ர­ணங்­கள்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="17">•கர்­நா­டகா: 2018 தேர்­த­லில் இங்கு காங்­கி­ரஸ் – மதச்­சார்­பற்ற ஜனதா தளம் (JD–S) கூட்­டணி ஆட்சி அமைத்­தது. ஆனால் 2019–இல், இக்­கூட்­ட­ணி­யைச் சேர்ந்த 16 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் தங்­க­ளது பத­வியை ராஜி­னாமா செய்­த­னர். இத­னால் கூட்­டணி அரசு பெரும்­பான்­மையை இழந்து கவிழ்ந்­தது. பின்­னர், ராஜி­னாமா செய்த உறுப்­பி­னர்­கள் பா.ஜ.க–வில் இணைந்து இடைத்­தேர்­த­லில் போட்­டி­யிட்டு வென்­ற­னர். பா.ஜ.க. அங்கு ஆட்சி அமைத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="17">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">மத்­தி­யப் பிர­தே­சம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2022–இல் ஜோதி­ரா­தித்யா சிந்­தியா தலை­மை­யில் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த 22 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் தங்­க­ளது பத­வி­களை ராஜி­னாமா செய்­த­னர். கமல்­நாத் தலை­மை­யி­லான காங்­கி­ரஸ் அரசு பெரும்­பான்­மையை இழந்து கவிழ்ந்­தது. அதன்­பின், பா.ஜ.க–வின் சிவ­ராஜ் சிங் சவு­கான் மீண்­டும் முத­ல­மைச்­ச­ரா­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="17">•	</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">கோவா :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2019–இல் காங்­கி­ர­ஸின் 15 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளில் 10 பேர் பா.ஜ.க–வில் இணைந்­த­னர். மூன்­றில் இரண்டு பங்கு என்­ப­தால் தகு­தி­நீக்­கம் வர­வில்லை. மீண்­டும் 2022 தேர்­த­லுக்­குப் பிறகு, காங்­கி­ர­ஸின் 11 உறுப்­பி­னர்­க­ளில் 8 பேர் பா.ஜ.க–வில் இணைந்­த­னர். இதன்­மூ­லம் பா.ஜ.க. தனது பலத்­தைச் சட்­ட­மன்­றத்­தில் கணி­ச­மாக உயர்த்­திக் கொண்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="17">•	</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">பிற மாநி­லங்­கள்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">புதுச்­சேரி (Puducherry – 2021), அரு­ணாச்­ச­லப் பிர­தே­சம் (Arunachal Pradesh – 2016) மற்­றும் மணிப்­பூர் (Manipur), மேகா­லயா (Meghalaya) போன்ற வட­கி­ழக்கு மாநி­லங்­க­ளி­லும் வெவ்­வேறு கால­கட்­டங்­க­ளில் இதே உத்­தி­யைப் பயன்­ப­டுத்தி, எதிர்க்­கட்சி ஆட்­சி­களை – முக்­கி­ய­மா­கக் காங்­கி­ரஸ் ஆட்­சி­களை – பா.ஜ.க. வீழ்த்­தி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதே பாணி­யில் இப்­போது அ.தி.மு.க. சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளைக் குதி­ரை­பே­ரத்­தின் மூலம் த.வெ.க. விலைக்கு வாங்­கி­யுள்­ளது. கட்­சித் தாவல் தடைச் சட்­டத்­தி­லி­ருந்து தப்­பிக்க அவர்­களை ராஜி­னாமா செய்ய வைத்து, அவர்­க­ளையே தன் கட்­சி­யின் சார்­பில் இந்த இடைத்­தேர்­த­லில் போட்­டி­யி­ட­வும் வைத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பா.ஜ.க–வின் குதி­ரை­பே­ரத்­தி­னால் பல மாநி­லங்­க­ளில் தங்­கள் சட்­ட­மன்ற, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை இழந்­த­போது கூக்­கு­ர­லிட்ட காங்­கி­ரஸ் இப்­போது அதே த.வெ.க–வு­டன் கைகோர்த்து நின்று அந்த ஜன­நா­யக விரோ­தச் செய­லுக்­குத் துணை­போ­கி­றது. ஓர் எதிர்க்­கட்­சி­யைப் பல­வீ­னப்­ப­டுத்தி, மக்­கள் தீர்ப்­பைக் காலில் போட்டு மிதிக்­கும் செயல் இனி காங்­கி­ர­சிற்கு  எதி­ராக எங்கு நடந்­தா­லும், அதைக் கண்­டிக்­கும் தார்­மீக உரி­மையை ராகுல் காந்தி இழந்­து­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">சொந்­தக் கட்­சிக்­குச் செய்த துரோ­கம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மது­ராந்­த­கம், தாரா­பு­ரம் ஆகிய தொகு­தி­க­ளில் நான்கு மாதங்­க­ளுக்கு முன்பு நடை­பெற்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் அ.தி.மு.க. சார்­பில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்ற இரண்டு வேட்­பா­ளர்­க­ளும், தேர்­தல் முடி­வு­கள் வந்த பத்தே நாட்­க­ளில் பத­வியை ராஜி­னாமா செய்­து­விட்டு த.வெ.க. பக்­கம் போயி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கட்­சி­யோடு எந்த முரண்­பா­டும் இல்லை; கட்­சித் தலை­மை­யோடு எந்த முரண்­பா­டும் இல்லை. வெறும் பேரத்­தின் அடிப்­ப­டை­யில் தங்­கள் அர­சி­ய­லைத் த.வெ.க–விற்கு விற்று, இடைத்­தேர்­தலை வர­வ­ழைத்­துள்­ளார்­கள். இரட்டை இலைச் சின்­னத்­தில் நின்று வாக்கு கேட்­ட­வர்­கள், இப்­போது ‘விசில்’ சின்­னத்தை எடுத்து ஊதிக்­கொண்டு ஓட்­டுக்­கேட்க வரப்­போ­கி­றார்­கள். நான்கு மாதங்­க­ளுக்கு முன்பு எம்.ஜி.ஆர்., ஜெய­ல­லிதா, எடப்­பாடி பழ­னி­சாமி ஆகி­யோ­ரைக் காட்டி ஓட்­டுக்­கேட்­ட­வர்­கள், இப்­போது விஜய்­யைக் காட்டி ஓட்­டுக்­கேட்­கப்­போ­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு கட்­சி­யின் தொண்­டர்­கள் ஒரு வேட்­பா­ள­ரின் வெற்­றிக்­கா­கக் கடு­மை­யாக உழைக்­கி­றார்­கள். கட்­சிக்­கா­கப் பணி­பு­ரிந்த பல­ருக்­கும் வாய்ப்பு மறுக்­கப்­பட்டே ஒரு­வர் வேட்­பா­ள­ரா­கத் தேர்வு பெறு­கி­றார். அவ­ரின் வெற்­றிக்­காக அந்­தச் சொந்­தக் கட்சி பெரு­ம­ளவு பணத்­தைச் செல­வ­ழிக்­கி­றது. ஆனால், “கட்­சி­யா­வது... புட­லங்­கா­யா­வது...” என்று, வெற்றி பெற்­ற­வு­ட­னேயே, எந்­தக் கட்­சியை எதிர்த்து நின்­றார்­களோ அதே கட்­சிக்­குத் தாவு­கிற இவர்­கள், எந்­தக் கூச்­ச­மும் இன்றி மீண்­டும் ஓட்­டுக்­கேட்க வரு­கி­றார்­கள். இவ்­வ­ளவு கேவ­ல­மான அர­சி­யல் கய­மைத்­த­னத்தை இது­வரை தமி­ழ­கம் கண்­ட­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவர்­க­ளுக்கு வாக்­க­ளிக்­க­லாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">வாக்­க­ளித்த மக்­க­ளுக்­குச் செய்த துரோ­கம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு வேட்­பா­ளரை மக்­கள் தேர்வு செய்­யும்­போது, தாங்­கள் ஆத­ரிக்­கும் கட்­சியை அவர் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கி­றார் என்று நம்­பி­யும், அடுத்த ஐந்­தாண்­டு­க­ளுக்­குத் தங்­கள் பிர­தி­நி­தி­யா­கத் தொகு­தி­யின் நலன்­க­ளைப் பாது­காப்­பார் என்று நம்­பி­யுமே வாக்­க­ளிக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், யாரி­ட­மி­ருந்தோ கிடைக்­கும் சுய­லா­பத்­திற்­காக அந்த நம்­பிக்­கையை, அந்த வாக்­கு­களை, அந்த வாக்­கா­ளர்­களை விலை­பேசி விற்­று­விட்டு, இப்­போது மீண்­டும் அந்த மக்­க­ளி­டமே வந்து வாக்­குக் கேட்­கி­றார்­கள் என்­றால், எந்த அள­வுக்கு அந்த மக்­களை ஆட்டு மந்­தை­யாக இவர்­கள் நினைக்­கி­றார்­கள் என்­ப­தைப் புரிந்­து­கொள்ள வேண்­டும். இது அவர்­க­ளுக்கு வாக்­க­ளித்த மக்­கள் மீது செய்த மிகப்­பெ­ரிய நம்­பிக்கை மோசடி அல்­லவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவர்­க­ளுக்கா அந்­தத் தொகுதி மக்­கள் மீண்­டும் வாக்­க­ளிக்க வேண்­டும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் துரோ­கம்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்று த.வெ.க. கூட்­ட­ணி­யில் இருக்­கும் காங்­கி­ரஸ், பல மாநி­லங்­க­ளில் குதி­ரை­பே­ரத்­தால் தாங்­கள் ஆட்­சி­யி­ழந்து பாதிக்­கப்­பட்­ட­போது கூச்­சல் போட்­டு­விட்டு, இப்­போது பதவி சுகத்­திற்­கா­கத் த.வெ.க–விற்கு வெண்­சா­ம­ரம் வீசு­கி­றது என்­பதை மேலே குறிப்­பிட்­டேன். “விஜய்­தான் பிர­த­மர் வேட்­பா­ளர்” எனத் த.வெ.க. அமைச்­சர்­க­ளும் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் பேசித்­தி­ரிந்து, காங்­கி­ர­ஸின் பிர­த­மர் வேட்­பா­ள­ரான ராகுல் காந்­திக்­குத் துரோ­கம் செய்­த­போ­தும், காங்­கி­ர­ஸுக்கு அதைப் பற்றி எந்த உறுத்­த­லும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த இடைத்­தேர்­த­லில் த.வெ.க. வேட்­பா­ளர்­களை ஆத­ரித்­துப் பிரச்­சா­ரம் செய்­யப்­போ­கும் அதன் கூட்­ட­ணிக் கட்­சி­கள், நான்கு மாதங்­க­ளுக்கு முன்பு தி.மு.க. கூட்­ட­ணி­யில் நின்­றவை. இப்­போது த.வெ.க. சார்­பில் இடைத்­தேர்­த­லில் நிறுத்­தப்­பட்­டி­ருக்­கும் இதே வேட்­பா­ளர்­கள் அன்று அ.தி.மு.க. வேட்­பா­ளர்­க­ளாக இருந்­த­போது, அவர்­களை எதிர்த்­துப் பிரச்­சா­ரம் செய்­தார்­கள்; த.வெ.க–வை­யும் விஜய்­யை­யும் கடு­மை­யாக எதிர்த்­துப் பிரச்­சா­ரம் செய்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அந்­தச் சுவ­டு­கூட இன்­னும் காய­வில்லை. அதற்­குள் மேடை­கள் மாறி­விட்­டன; சின்­னங்­கள் மாறி­விட்­டன. அ.தி.மு.க–வுக்­குத் துரோ­கம் செய்த அதன் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் கய­மைத்­த­னத்­தைக் காட்­டி­லும் மிகப்­பெ­ரி­யது, இப்­போது த.வெ.க–வின் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் கய­மைத்­த­னம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">எந்த நம்­ப­கத்­தன்­மை­யு­மற்ற இந்­தக் கட்­சி­கள் ஆத­ரிக்­கும் வேட்­பா­ளர்­க­ளுக்கா மக்­கள் வாக்­க­ளிக்க வேண்­டும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விஜய் அரசு தமி­ழ­கத்­திற்­குச் செய்­யும் துரோ­கம்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விஜய்­யின் நான்கு மாத கால ஆட்சி தமி­ழக 
மக்­க­ளுக்­குச் செய்­தது என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="17">•அர­சின் உயர் பத­வி­கள் தகு­தி­யற்ற நபர்­க­ளுக்­குத் தனிப்­பட்ட கார­ணங்­க­ளுக்­கா­கத் தாரை வார்க்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="17">•எதிர்க்­கட்­சி­யான தி.மு.க.மீது பொய்­யான குற்­றச்­சாட்­டு­க­ளும் அவ­தூ­று­க­ளும் பரப்­பப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="17">•குதி­ரை­பேர அர­சி­யல் மூலம் ஜன­நா­ய­கம் கேலிக்­கூத்­தாக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="17">•பொரு­ளா­தார முக்­கி­யத்­து­வம் வாய்ந்த பரந்­தூர் விமான நிலை­யம், விளை­யாட்டு நக­ரத் திட்­டங்­கள் போன்­றவை கைவி­டப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="17">•தமி­ழ­கத்­திற்கு வர வேண்­டிய தொழில் முத­லீ­டு­கள், (அண்டை மாநி­லங்­க­ளுக்­குத் தாரை வார்க்­கப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="17">•முக்­கி­ய­மான தேர்­தல் வாக்­கு­று­தி­கள் எது­வும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="17">•அரை­கு­றை­யாக நிறை­வேற்­றப்­பட்ட வாக்­கு­று­தி­க­ளி­லும் பய­னா­ளி­க­ளுக்­குப் பல்­வேறு கடு­மை­யான நிபந்­த­னை­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="17">•சட்­ட­மன்­றத்­தைச் சண்டை மன்­ற­மாக மாற்றி நடத்­திய நாட­கங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="17">•அறி­விக்­கப்­ப­டாத மின்­வெட்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="17">•அறி­விக்­கப்­ப­டாத மின் கட்­டண உயர்வு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="17">•அறி­விக்­கப்­ப­டாத சொத்­து­வரி உயர்வு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="17">•பழ­னி­யாண்­ட­வர் கோவில் ரூ.100 கோடி நில மோசடி, அரசு வழக்­க­றி­ஞர் பத­விக்கு லஞ்­சம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="17">•போதைப் பொருள் பெருக்­கம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="17">•கஜானா காலி எனச் சொல்­லிக்­கொண்டே முத­ல­மைச்­சர் அறையை மாற்­று­வது, ரூ.1200 கோடி செல­வில் முத­ல­மைச்­சர் வீட்­ட­ருகே புதிய சட்­ட­ 
மன்­றக் கட்­டட அறி­விப்பு என வீண் விரை­யங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="17">•கொலை, கொள்ளை, பாலி­யல் குற்­றங்­கள் 
அதி­க­ரிப்பு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="17">•காவல்­து­றை­யின் காட்­டுத் தர்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="17">•எதிர்க்­கட்­சி­கள், மாண­வர் அமைப்­பு­கள் மீது பொய் வழக்­கு­கள் மற்­றும் கடும் ஒடுக்­கு­மு­றை­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="17">•இளை­ஞர்­க­ளின் வேலை­வாய்ப்­பைப் பெருக்­கும் எந்­தத் திட்­ட­மும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="17">•ஒன்­றிய அர­சின்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="Arial" fontStyle="Regular" size="9.5">(Central Government)</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மாநில உரி­மை­க­ளைப் பறிக்­கும் அனைத்­துச் செயல்­பா­டு­க­ளுக்­கும் நேர­டி­யா­கவோ மறை­மு­க­மா­கவோ துணை போவது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="17">•கடும் விலை­வாசி உயர்வு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="17">•இடைத்­தேர்­தல் நடக்­கும் மது­ராந்­த­கம் தொகு­தி­யில் கடும் மின்­வெட்டு மற்­றும் குடி­நீர்ப் பிரச்­சினை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">துய­ரங்­க­ளின் கூடா­ர­மா­கத் தமிழ்­நாட்டை மாற்­றி­யி­ருக்­கும் இந்த அர­சின் வேட்­பா­ளர்­க­ளுக்கா 
மக்­கள் வாக்­க­ளிக்க வேண்­டும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">அ.தி.மு.க. களத்­தில் இருக்­கி­றதா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ம.தி.மு.க. தலை­வர் வைகோ தி.மு.க.கூட்­ட­ணியை விட்டு வெளி­யேறி த.வெ.க.விற்கு சேவ­கம் செய்­யச் சென்­ற­போ­தும், தி.மு.க. கூட்­ட­ணி­யில் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நின்று போட்­டி­யிட்டு வென்ற ம.தி.மு.க. உறுப்­பி­னர்­கள் இரு­வ­ரும் தி.மு.க. தலை­வ­ரின் தலைமை மீது கொண்ட நம்­பிக்­கை­யி­னால் தங்­க­ளி­டம் நடத்­தப்­பட்ட குதி­ரை­பே­ரத்தை நிரா­க­ரித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், எடப்­பாடி பழ­னி­சா­மி­யால் தன் சொந்­தக் கட்சி சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டம்­கூட எந்த ஆளு­மை­யை­யும் செலுத்த முடி­ய­வில்லை. அவர்­கள் ராஜி­னாமா செய்­து­விட்டு த.வெ.க–வில் போய் சேரு­வ­தைத் தடுக்க முடி­ய­வில்லை. எஸ்.பி. வேலு­மணி தலை­மை­யி­லான அதி­ருப்தி அ.தி.மு.க. சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், தனது உத்­த­ரவை மீறி நம்­பிக்கை கோரும் தீர்­மா­னத்­தில் த.வெ.க. அர­சுக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­போதே, கட்­சி­யில் எடப்­பாடி பழ­னி­சா­மிக்கு எந்­தக் கட்­டுப்­பா­டும் இல்லை என்­பது நிரூ­ப­ண­மா­கி ­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­ட­மன்­றத்­தில் த.வெ.க. அர­சுக்கு எதி­ராக அ.தி.மு.க. உறுப்­பி­னர்­களோ எடப்­பாடி பழ­னி­சா­மியோ எந்த அழுத்­தத்­தை­யும் ஏற்­ப­டுத்­த­வில்லை. தனக்­குத் துரோ­கம் செய்­து­விட்டு, கட்­சித் தாவல் தடைச் சட்­டம் கார­ண­மாக வேறு வழி­யின்­றித் தன் பின்­னால் அமர்ந்­தி­ருக்­கும் எஸ்.பி. வேலு­மணி கோஷ்­டியை வைத்­துக்­கொண்டு, எடப்­பாடி பழ­னி­சா­மி­யால் என்ன எதிர் அர­சி­யல் செய்ய முடி­யும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த இடைத்­தேர்­த­லில் போட்­டி­யி­டும் அ.தி.மு.க. வேட்­பா­ளர்­கள் வெற்றி பெற்­றால்­கூட, அவர்­கள் நாளை எங்கே போவார்­கள், யாரை ஆத­ரிப்­பார்­கள் என்ற எந்த நிச்­ச­ய­மும் இல்லை. அந்த அள­வுக்கு எடப்­பாடி பழ­னி­சாமி தன் கட்­சி­யைத் துரோ­கங்­க­ளுக்­குப் பழக்­கப்­ப­டுத்தி வைத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நேற்று பா.ஜ.க.–வாலும் இன்று த.வெ.க–.வாலும் சுக்­கல் சுக்­க­லாக உடைக்­கப்­பட்­டுக் கொண்­டி­ருக்­கும் அ.தி.மு.க. வேட்­பா­ளர்­க­ளுக்கு இந்த இடைத்­தேர்­த­லில் வாக்­க­ளிப்­ப­தில் ஏதே­னும் பயன் உண்டா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">இடைத்­தேர்­த­லில் தி.மு.க–வின் பலம்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேர்­தல் நடக்­கும் இரண்டு தொகு­தி­க­ளும் அ.தி.மு.க. கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் வென்ற தொகு­தி­கள் என்­ப­தால், அவை அ.தி.மு.க–வின் கோட்டை என்­பது போன்று சில ஊட­க­வி­ய­லா­ளர்­கள் சித்­த­ரிக்­கின்­ற­னர். ஆனால், இரண்டு தொகு­தி­க­ளி­லுமே அ.தி.மு.க. மற்­றும் தி.மு.க. வேட்­பா­ளர்­க­ளுக்கு இடையே கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் வாக்­குச் சத­வீ­தம் மிகக் குறை­வு­தான். மேலே குறிப்­பிட்ட பல கார­ணங்­க­ளால், தற்­போது தி.மு.க–வின் நம்­ப­கத்­தன்­மை­யும் வெற்றி வாய்ப்­பும் பெரு­ம­ளவு அதி­க­ரித் 
திருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தி.மு.க–வு­டன் இருந்த கூட்­ட­ணிக் கட்­சி­கள் இப்­போது த.வெ.க–வு­டன் இருப்­பதை தி.மு.க–வின் பல­வீ­ன­மா­கச் சிலர் சித்­த­ரிக்­கின்­ற­னர். அது தவ­றான பார்வை. தங்­கள் துரோக நடத்­தை­யால் இந்­தக் கட்­சி­க­ளின் வாக்­குச் சத­வீ­தம் பெரு­ம­ளவு குறைந்­தி­ருக்­கவே வாய்ப்­பி­ருக்­கி­றது. இவர்­கள் த.வெ.க–விற்­குச் சாத­க­மா­கவோ, தி.மு.க–விற்­குப் பாத­க­மா­கவோ எந்­தச் செல்­வாக்­கை­யும் செலுத்த முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க. என்­பது கடி­ன­மான காலங்­க­ளில் தீவி­ர­மாக எதிர்த்­துப் போராடி மீண்டு வரும் கட்சி. தி.மு.க.–விற்­குத் த.வெ.க. அரசு செய்­து­வ­ரும் தீங்­கு­க­ளும், தி.மு.க. தலை­வர்­கள் மீது செய்­யப்­ப­டும் அவ­தூ­று­க­ளும் இழி­செ­யல்­க­ளும் கழ­கத் தொண்­டர்­க­ளைக் கொதித்­தெ­ழச் செய்­துள்­ளன. அவர்­கள் இந்­தத் தேர்­த­லில் மிகக் கடு­மை­யான உழைப்­பைச் செலுத்­து­வார்­கள். மேலும், தி.மு.க. தலை­வர் மீது விஜய் காட்­டி­வ­ரும் அநா­க­ரி­க­மான வெறுப்­பு­ணர்ச்சி, மக்­க­ளி­டம் தி.மு.க. மீதுபெரும் பரிவை உண்­டாக்­கி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க., மக்­க­ளுக்­காக, மக்­க­ளின் பிரச்­சி­னை ­க­ளுக்­காக, ஜன­நா­ய­கத்­திற்­காக, தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்­கா­கக் களத்­தில் நின்று போரா­டிக்­கொண்­டி­ருக்­கி­றது. கடந்த தி.மு.க. ஆட்­சி­யின் சாத­னை­க­ளுக்­கா­க­வும், தி.மு.க. தலை­வ­ரின் மக்­கள் நலன் சார்ந்த அர­சி­யல் மாண்­பு­க­ளுக்­கா­க­வும், ஓர் விபத்­தைப் போல ஆட்­சிக்கு வந்து தமி­ழ­கத்­தைச் சூறை­யா­டிக் கொண்­டி­ருக்­கும் ஒரு தீய சக்­திக்­குப் பாடம் புகட்­ட­வும் இந்த இடைத்­தேர்­த­லில் தி.மு.க. வேட்­பா­ளர்­கள் வெல்­வது அவ­சி­ய­மா­கும். தமி­ழக மக்­கள் தாங்­கள் செய்த பெரும் தவ­றைச் சரி­செய்­து­கொள்­வ­தற்­கான முதல் படி­யாக இந்த இடைத்­தேர்­தல் இருக்­கும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>