<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="12/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,32,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Sep 12 2026 00:09:25 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260912T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="12092026-VLR-04" position.sequence="04" ex-ref="12092026-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">12.09.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="36">த.வெ.க. ஆட்சியில்</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="36"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="84">ஆணவக் கொலைகள் அதிகரிப்பு! சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிப்பு! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="33">சட்டப்பேரவையில் - சீர்காழி செந்தில் செல்வன்  பேச்சு!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup637302_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup626431_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup626360_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="Senthamilselva_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சென்னை, செப். 12–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சட்டப் பேரவையில் ‘‘சமூக நீதித்துறை“ மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கழகத்தின் சார்பில் கலந்துகொண்டு பேசிய சீர்காழி தொகுதி உறுப்பினர் – வழக்கறிஞர் செந்தில் செல்வன், ‘‘தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சியில் ஆணவக் கொலைகள் அதிகரித் துள்ளது. சட்டம் – ஒழுங்கோ சந்தி சிரிக்கிறது’’ என்று குறிப்பிட்டார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அவர் பேசியதாவது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கும், முதலமைச்சர்,அமைச்சர் பெருமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் களுக்கு வணக்கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அறிவுலகத்தின் திறவுகோல் சாக்ரடீஸ் சமன்மை, சமத்துவம், சமநீதியை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் யாத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர், மானமும், அறிவும் மனிதர்க்கழகு என்ற பகுத்தறிவு கொள்கைகளை எம் நேஞ்சிலே பதியம்போட்ட தொண்டு செய்து பழுத்தப்பழம் தந்தை பெரியார், தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா, ஒற்றையடி பாதையென வகுடெடுத்து ஒளிர்கின்ற முழு நிலவை தலையில் சூடி, வெற்றி மகள் வருகிறாள் அண்ணன் இல்லா வெற்றிடத்தை நிரப்புவதற்கு என்று அரசவைக் கவிஞரின் கவிதை வரிகளால் அலங்கரிக் கப்பட்ட முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், (மேசையைத் தட்டும் ஒலி) என்னைப் பெற்றெடுத்து அகரம் கற்பித்து தாயாய், தந்தையாய், குருவாய் எனக்கு வாய்த்திட்ட என் பெற்றோர்கள், ஆசிரியர் திரு. பழனி ராஜாங்கம், ஆசிரியை திருமதி சுகந்த புஷ்பம் ஆகியோரை வணங்கி மகிழ்கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">வரலாற்றுச் சிறப்புமிக்க பலநூறு விழுமியங்களை தன்னகத்தே கொண்டு, சரித்திரத்தில் தனக்கென்று ஓர் இடத்தைத் தக்க வைத்திருக்கின்ற சீர்மிகு சீர்காழி யிலிருந்து இந்த அவைக்கு நான் அனுப்பப்பட்டி ருக்கிறேன். எளியவன் என் தோள்களிலே பட்டாடைகள், பயனாடைகளைப் போர்த்தி, மலர்மாலைகளை என் கழுத்திலே சூட்டி, பட்டாசுகளை வெடித்து ஆரவாரப் படுத்திய தோழர்கள், சுட்டெரிக்கும் வெயிலிலே வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த கொள்கை உறவுகள், ஊனின்றி, உறக்கமின்றி தேர்தல் பணியாற்றிய நட்புகள், நெற்றியிலே வெற்றித் திலகமிட்ட சகோதரிகள், ஆரத்தி எடுத்து வாழ்த்திய பெற்றெடுத்தத் தாய்மார்கள், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கட்சித் தோழர்கள் என 71 ஆயிரத்து 440 வாக்குகளை எனக்கு அளித்து, என்னை வெற்றிப் பெற செய்த சீர்காழி சட்டமன்றத் தொகுதியின் பொதுமக்கள் இருக்கும் திசை நோக்கி தொழுது என் உரையை துவங்குகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) என்னுடைய முதற்பேச்சை துவங்குகிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">பேரறிஞர் அண்ணா அவர்களால் அறிவிக்கப்பட்டு 1967–ல் நாடாளுமன்றத்திற்குச் சென்று, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1971–ல் நாடாளுமன்றத்திற்குச் சென்று, 1977–ல் இதே சட்ட மன்றத்திற்கு வருகை தந்து செயலாற்றிய காலஞ்சென்ற திரு. க. சுப்பவேலு அவர்களும், நானும் ஒரே குடும்பத்து உறுப்பினர்கள் என்பதை இந்த அவையில் பதிவு செய்வதில் நான் பெருமிதமடைகிறேன். கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டால் ஈர்க்கப்பட்டு, அரசியல் உலகத்திற்கு 1980–களில் அடியெடுத்து வந்தவன் நான். 1994 ஆம் ஆண்டு முதல் சென்னை உயர் நீதி மன்றத்தில், இந்திய நீதிமன்றங்களில், தீர்ப்பாயங்களில் வழக்கறிஞராக குரல் எழுப்பி வந்தேன். சட்டம் சார்ந்த, தேர்தல் ஆணையம் சார்ந்த பணிகளில் என்னை ஈடுபடுத்தி, சட்டத் துறை, தேர்தல் பணி, ஒழுங்கு நடவடிக்கை, அரசியல் ஆய்வு மையம், தணிக்கைக் குழு என்கிற நிலையில் இருந்த என்னை திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிச் சின்னமான உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கி யமைக்கு என் நன்றிகள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தேர்தலில் நான் வெற்றி பெற்று, இந்த அவைக்கு நான் வரவேண்டுமென்பதற்காக, அந்த இனிய நாளில், ஆம், என் வாழ்நாளில் கிடைத்திராத பாக்கியம் பெற்ற அந்த இனிய நாளில் தமிழ்நாட்டில் முதலமைச்சராக மகுடம் தரித்து, திராவிட மாடல் அரசை நிறுவி, ஏழையெளிய மக்கள், விளிம்பு நிலை மக்கள், பெண்கள், மாணவ, மாணவிகள் நலன் காத்த மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற அந்த மகத்தான மனித புனிதர் சீர்காழி நகர வீதிகளில் ஒன்றரை மணி நேரம் நடந்து, சாலையோரத்து வியாபாரிகள், சாமானிய மக்கள், பேருந்துகளில் பயணித்தவர்கள், உழவர் சந்தை வியாபாரிகள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி சென்ற மாணவர்கள் என பொது மக்கள் அனைவரிடத்திலும் வாக்கு சேகரித்த நாள், என் வெற்றிக்கான விதை, விதைக்கப்பட்ட நாள். (மேசையைத் தட்டும் ஒலி) அப்படிப்பட்ட பொழுதை எனக்காக செலவிட்ட வரலாற்று சிறப்புமிக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், என்னை வழிநடத்தும், நெஞ்சுரம் மிக்கத் தலைவர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை காணிக்கையாக்கிக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">உலவுகின்ற சரித்தரமாக, உள்ளங்கையில் இளைஞர்களின் ஆயுள் ரேகை கொண்டிருக்கும் எங்களின் எதிர்க்கட்சித் தலைவர், விட்டில் பூச்சிகளால், விடியலைத் தரும் சூரியனை நெருங்க முடியாதுஎன்பதை சென்னை முதல் செங்கிப்பட்டி வரை நிரூபித்துக்காட்டிய உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">எனது வெற்றிக்காக, சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்கு அகவை 92–ல் நேரடியாக வந்து பிரச்சாரம் செய்த ஈரோட்டு பூகம்பம் தந்தை பெரியாரின் பெரும் சீடர், மூத்த பகுத்தறிவாளர் திராவிடர் கழகத்தினுடைய தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய தலைவர் எழுச்சி தமிழர்,நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் தொல். திருமாவளவன்அவர்களுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநிலச் செயலாளர் வாஞ்சைமிக்க தோழர் வீரபாண்டியன் அவர்களுக்கும், மே 17 இயக்கத்தினுடைய நிறுவனர், ஒருங்கிணைப்பாளர், தோழர் திருமுருகன் காந்தி அவர்களுக்கும் என் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அலைகள் தாலாட்டும், சீர்காழி தொகுதியினுடைய கடற்கரை பகுதிகளில். இரண்டு நாட்கள் நடந்தே சென்று வாக்கு சேகரித்த தமிழர் வாழ்வியலைத் தூக்கி பிடிக்கும் முதன்மை பெருமாட்டி அன்பு சகோதரி எங்கள் மண்ணினுடைய சீதகாதி அக்கா திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்களுக்கும், எதிர்க்கட்சியினுடைய கொறடா, துணை கொறடா, மாவட்டச் செயலாளர் திரு. நிவேதா எம். முருகன், என் அருமை நண்பர் வழக்கறிஞர் முரளி, என் அருமை சகோதரர் நன்மதி செல்வன், என்னுடைய சகோதரிகள் முத்தமிழ் செல்வி, குண செல்வி, தணிகை செல்வி, எனது துணைவியார் ரமாமணி உள்ளிட்ட என் குடும்பத்தாருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்.கொள்கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சித்தாந்தம் என்பதுவும், விசுவாகம் என்பதுவும் அதிகாரம் கிட்டும் வரை மேற்கொள்ளும் பயணம்அல்ல. நெருக்கடிகளை சந்தித்த பிறகும், நிர்பந்தங்களைஎதிர்கொண்ட பிறகும், நிலை நாட்டப்படுவதுதான் விசுவாசம், சித்தாந்தம். அதுதான் தமிழரின் வாழ்வியல்.ஒரு சிறைச்சாலை ஒரு சித்தாந்தைத்தை சிதைக்க முடியாதுஎன்பதை அடிமைத் துளையை உடைத்தெறிந்த ஆப்ரஹாம்லிங்கனின் சமரசமற்ற வாழ்வும், நெல்சன் மண்டேலாவின்மன உறுதியும், சாக்ரடீஸின் கொள்கை திடமும், தேசப்பிதாவின் வாழ்க்கையும் இந்த உலகிற்கு கற்பித்துத் தந்திருக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மனிதனை உயர்த்துவது பதவியல்ல, பண்புகளே!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">நம் சங்க இலக்கியங்கள் கூறுகிற வாழ்க்கை நெறியாகவும் இதுதான் இருக்கிறது. இளவரசர் உல்லாசமாகத் தேர் ஓட்டி வருகிறார்; பயமறியாத பச்சிளம் கன்று சாலையில் துள்ளி ஓடுகிறது. தேர் காலில் சிக்கி மரணம் சம்பவிக்கிறது. அந்தப்புரத்தில் மன்னவன், ஆராய்ச்சி மணியை அசைத்தது தாய் பசு; நீதிமன்றம் கூடியது; ஒரு புறத்தில் குற்றவாளி கூண்டில் இளவரசன்; மறுபுரத்தில் நீதி கேட்டு, கண்ணீரோடு பசு. நீதிதான் உயர்ந்தது என்று தீர்ப்பளித்தார் மன்னர். அந்த சோழ மன்னனுடைய நீதி பரிபாலன பெருமை யுடையது நம் தமிழரின் வாழ்வு; வியப்பு அதுமட்டுமல்ல, ஒரு புறா ஒன்று, குறுநடை போட்டு நடந்து கொண்டி ருந்தது. கொடிய பருந்து ஒன்று, அந்தப் புறாவை இறையாக்கிக்கொள்ள துடித்தது. புறா தப்பித்துப்போய் சிபி அரசன் அரசவைக்குள்ளே புகுந்து கொண்டது. புறாவை கையில் எடுத்து, வெளியில் வந்து, பறக்க விட பார்த்தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">புறாவுக்காக கூரிய நகமுடைய பருந்து, கொத்திக் கிழிக்கும் அலகுடைய பருந்து வானத்திலே வட்ட மிடுவதைக் கண்டார். புறாவைக் காப்பற்ற வேண்டு மென்று தீர்மானித்தார் சிபி. அடைக்கலமாக வந்த புறாவை ஆற்றுப்படுத்தி, அரவணைத்து, அன்பு செலுத்தி காப்பாற்றிய மன்னன் சிபி சக்கரவர்த்தி. அந்த சிபியினுடைய இளகிய மனதின் பெருமை யுடையது நம் தமிழர் வாழ்வு. மனிதனை உயர்த்துவதுபதவிகள் அல்ல. மனிதனின் பண்புகள்தான். பண்புதான்பதவிக்கு மதிப்பு தருகிறது. பதவி நம்மைச் சுற்றியிருக்கும் கூட்டத்தை உருவாக்கலாம். ஆனால், பண்புதான்நம்மை ஒருபோதும் விட்டுப்பிரியாத மனிதர்களை உருவாக்கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தமிழ்நாட்டிலே ஒரு புதிய அரசு அமைந்திருக்கிறது. ஆளுநர் உரை வாசிக்கப்பட்டிருக்கிறது, நிதிநிலை அறிக்கையும் தாக்கலாகியிருக்கிறது. மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 57 மானியக் கோரிக்கைகளை 15 நாட்களில் அவசர அவசரமாக விவாதிக்கிறோம். மக்களாட்சி என்பது விவாதம் செய்வது. Democracy means discussion, விரிவான விவாதம் வேண்டும். Our demand is detailed deliberation. அரசின் திட்டங்களை திட்டவட்ட மாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆவாது என்பார்களே. அதைப்போலத்தான் ஆளுநர் உரையும், பட்ஜெட் உரையும், அரசின் கொள்கை விளக்கக் குறிப்பும் இருக்கிறது என்பதை நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.   (பேரவைத் தலைவர் குறுக்கீடு)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தமிழ்நாட்டின் முதலமைச்சர்   விஜய் அவர்களுடைய தமிழக வெற்றிக் கழகத்தினுடைய தேர்தல் வாக்குறுதி களில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு எதிரான கொடுமைகள் முற்றிலுமாக தடுக்கப்படும். ஒவ்வொரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலே இதற்கென்று தனி காவல் பிரிவு அமைக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், மே 10 முதல் இன்றுவரை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கோவில்பட்டி அருகே கரடிகுளத்தைச் சேர்ந்த 19 வயது சஞ்சய், தாக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்து மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ராமலட்சுமி, ஒரு ஆணுடன் தொலைபேசியில் பேசிய தற்காக தனது சகோதரன் முத்துகிருஷ்ணனால் அருவாளால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்தி ருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு 	அருகே தெற்கு மயிலோடை பகுதியைச் சேர்ந்த 18 வயது அபிசெல்வியின் மரணம் முதலில் தற்கொலை யாக பதிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு அது கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்திருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம் பாடியைச் சேர்ந்த 19 வயது பட்டியலின இளைஞன் பார்த்திபன், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த 17 வயது சிறுமி இருவரும் உயிரிழந்த நிலையிலே கண்டெடுக்கப்பட்டிருக்கிறார்கள். சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரிமாணவரும், 18 வயது மாணவியும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்து பின்னர் காவல் துறையில் பாதுகாப்பு கோரப்பட்டு, அந்தப் பெண் காப்பகத்திற்கு அனுப்ப பட்ட நிலையில் இளைஞர் தூக்கிட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆக, தவெக ஆட்சியிலே ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற தைரியத்தில்தான் இந்தக் கொலைகள் நடைபெறுகிறது. இதற்கு இந்த அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்று நான் கேட்கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தி.மு.க. ஆட்சியிலும் சாதிரீதியான வன்முறைகள் நடந்தன. திராவிட அரசியலுக்கு மாற்று அரசியல் என்று கூறுகிற த.வெ.க. தந்த மாற்றம் என்ன என்பதுதான் என் கேள்வி? (குறுக்கீடுகள்)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தென்காசியில் மே மாதத்தில் 6 இளைஞர்கள்மீது கொலைவெறித் தாக்குதல் நடந்திருக்கிறது. (குறுக்கீடுகள்) இருக்கிறது. Sir. நடந்திருக்கிறது. உண்மையைத்தான் சொல்கிறேன். விழுப்புரம் கோட்டக்குப்பத்திற்கு அருகே இடுகாடு கொடுத்து நடந்த பிரச்சினையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் தாக்கப்பட்டிருக்கிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல், நீங்கள் இருக்கிறீர்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கெடுப்பா ரிலானுங் கெடும்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">என்று வள்ளுவம் சொல்லி இருக்கிறது. எதிர்க்கட்சியிலிருந்து வந்திருக்கிறோம். நாங்கள் சில கருத்துகளை சொல்ல வேண்டிய கடமைகள் எங்களுக்கு இருக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அரசியலமைப்புச் சட்டம் 46 இந்த சமூக மக்களை பேணிப் பார்க்க வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்திற்கு இருக்கிறது என்று சொல்லிஇருக்கிறார்கள். அந்த அடிப்படையில்தான் என்னுடையகுரலை நான் கொடுக்கிறேன். நான் என்ன சொல்ல வந்தேன். 6 பேரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டுமென்று சொன்னதும் எல்லோரும் எழுந்து நிற்கிறார்கள். அடுத்த வரி எழுதிவைத்திருக்கிறார்கள் 8 பேரை கைது செய்துவிட்டார்கள் என்று. அதை சொல்ல அனுமதிக்கவே இல்லையே. வாய்ப்புக் கொடுத்தால்தானே சொல்ல முடியும். இந்த நேரம் பாருங்கள். என்னுடைய நேரம் எல்லாம் சென்று கொண்டிருக்கிறது. இருப்பதே குறைவான நேரம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">‘சமூக நீதித் துறை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. திட்டங்கள் எல்லாம் திராவிட மாடல் ஆட்சியில் துவக்கப்பட்ட திட்டங்கள்தான் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. (மேசையைத் தட்டும் ஒலி) அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித் திட்டம், தொடர்கிறது. இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு இந்த அரசு உயர்த்திருக்கிறது. அதற்கு நன்றி. முதலமைச்சர் சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், வெற்றி தொழில் முனைவோர் திட்டம் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. அண்ணல் அம்பேத்கருடைய தொழில் முனைவோர் திட்டம், சமூக நீதித் துறையின்கீழ் இப்போது வந்திருக்கிறது. நன்னிலம் திட்டம் இப்போது மண்ணின் மகள் திட்டமாக மாறியிருக்கிறது. அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் தொடர்கிறது. தொல்குடி திட்டம், ஆன்றோர் மேம்பாட்டுத் திட்டமாக மாறியிருக்கிறது. இதெல்லாம் எதுவும் புதுமையான திட்டங்கள் அல்ல. இவை எல்லாமே திராவிட மாடல் ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்கள் என்றுதான் சொல்ல வந்தேன். (மேசையைத் தட்டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">திட்டங்களின் பெயர் மாற்றம் என்பது மாற்றமல்ல!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சமூக நீதித் துறையில் பெயர் மாற்றி இருக்கிறார்கள். சமூக நீதித் துறை சம்பந்தமாக கொடுக்கப்பட்டிருக்கிற அரசினுடைய கொள்கை விளக்கக் குறிப்புப் புத்தகம் 150 பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார்கள். அதில் 50 பக்கங்கள் பட்டியலினத்தைப் பற்றியும், 100 பக்கங்கள் பட்டியலின பழங்குடியினர்களைப் பற்றியும் இருக்கிறது. சமூக நீதித் துறை என்று இலாகாவுக்கு பெயர் மாற்றப்பட்டுவிட்டது. ஆனால், இந்த கொள்கை விளக்கக் குறிப்பில் 130 இடங்களில் ஆதி திராவிடர் நலத் துறை என்றுதான் இருக்கிறது. (மேசையைத் தட்டும் ஒலி) கொள்கை விளக்கக் குறிப்பில் மட்டுமல்ல, அறிவிக்கப்பட்டிருக்கிற அறிவிப்பில் 86 இடங்களில் ஆதி திராவிடர் நலத் துறை என்றிருக்கிறது. நீங்கள் சமூக நீதித் துறை என்று மாற்றிவிட்டீர்கள். பழங்குடியி னர்களைப் பற்றி செய்திகளைக் குறிப்பிடும்போது 194 இடங்களில் அரசினுடைய கொள்கை விளக்கக் குறிப்பில் பழங்குடியினர் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். 113 இடங்களில் அறிவிப்புகளில் பழங்குடியினர் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அப்புறம் சமூக நீதி என்று பெயர் மாற்றியதனுடைய பொருள்என்னவாக இருக்கிறது? இதைத்தான் கேட்க வந்தேன்.8 பேர் மந்திரி, 8 பேர் நமக்கு தலித் அமைச்சர்கள் இருக்கிறீர்கள் என்று சொல்வதில் மகிழ்ச்சி. ஆனால், இப்படிப்பட்ட பிரச்சினைகளும் இருக்கிறதே என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியது என்னுடைய கடமை என்று நான் வந்தேன். (குறுக்கீடு)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை 2025–26–னுடைய கொள்கை விளக்கக் குறிப்பும், த.வெ.க. அரசினுடைய சமூக நீதித் துறையினுடைய 2026–27 கொள்கை விளக்கக் குறிப்பும் ஒருசில வித்தியா சங்களைக் காட்ட வேண்டுமென்று நான் நினைக் 
கிறேன். 2025–26 ஆம் ஆண்டு  ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு 3,924.12 கோடி ரூபாய் நிதி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. த.வெ.க. ஆட்சியில் முந்தைய ஆண்டில் உருவாக்கப்பட்ட நிதியினுடைய அடித்தளம் மற்றும் அதனுடைய வளர்ச்சியை ஒப்பீட்டு, எந்த புள்ளிவிவரமும் முன்னிலைப்படுத்தப்படவில்லை. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நிதி ஒதுக்கீட்டில் மக்கள்தொகை விகிதத்துடன் இணைத்து செயல்படுத்தி யதை திராவிட முன்னேற்றக் கழக அரசு தன்னுடைய கொள்கை விளக்கக் குறிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த திட்டங்களுக்கு பின்னால் இருந்த மக்கள்தொகை விகிதாச்சாரம் அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டை அந்த தத்துவத்தை இன்றைக்கு குறிப்பிட்டிருக்கிற அறிக்கையில் இல்லை. அதுமட்டுமல்ல, முழுநேர முனைவர் பட்ட ஆராய்ச்சி ஊக்கத் தொகை, post–matric scholarship, மற்றும் 9 ஆம், 10 ஆம் வகுப்பு மாணவர்களுடைய pre–matric scholarship, தூய்மைப் பணியாளர்கள் குழந்தை களுக்கான pre–matric scholarship.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">வரலாற்றை மாற்ற முடியாது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மாநில அரசின் சிறப்பு Post Matric உதவித் தொகை போன்றவை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டன. இத்திட்டத்தின் தொடர்ச்சியாக, த.வெ.க. தொடரும்.பொழுது ஏற்கெனவே பெற்ற பயனாளிகள் மற்றும் செலவினங்கள் குறித்த விவரங்கள் அரசின் கொள்கை விளக்கக் குறிப்புப் புத்தகத்தில் இடம்பெறவில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">துறையின் பெயர்களை மாற்றலாம்; ஆனால், வரலாற்றை மாற்ற முடியாது. திட்டங்களின் பெயர்களை மாற்றலாம்; ஆனால், அதை உருவாக்கிய அரசினுடைய பங்களிப்பை மாற்ற முடியாது என்பதைத்தான் நான்சொல்ல வந்தேன். தி.மு.க. அரசு அடித்தளம் அமைத்தது;நிதி ஒதுக்கியது; சட்டம் இயற்றியது; திட்டங்களில் இலட்சக்கணக்கான பயனாளிகளை உருவாக்கியது. அந்த அடித்தளத்தின்மீது இந்த அரசு தொடரும் பணிகளைத் தொடரும் சாதனையாகத்தான் நாங்கள் கருத முடியும்  என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">என் தொகுதியின் கோரிக்கை. ஆளுநர் உரையில்,717 சில்லறை மதுபானக் கடைகளை மூடப்பட்டன என்றுகுறிப்பிட்டீர்கள். ஆனால், நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடும்போது, முதற்கட்டமாக என்கிற வார்த்தை நீக்கப்பட்டு, 717 சில்லறை மதுபானக் கடைகள் மட்டும் நீக்கப்பட்டன என்றதன் அடிப்படையில், சில்லறை மதுபானக் கடைகளை படிப்படியாகக் குறைக்கும் திட்டம் இந்த அரசுக்கு இல்லையா என்ற கேள்வி எழும்பியி ருக்கிறது. 717 கடைகளில் என்னுடைய மதுரை மாவட்டம், சீர்காழி தாலுகாவின் 18 கடைகளில் 1 கடைகூட குறைக்கப்படவில்லை. 18 கடைகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தமிழ்நாட்டு மக்களுடைய தாய் மாமன், தமிழ்நாடு முதலமைச்சர் என்று தெரிவித்திருக்கிறீர்கள்.  அரசு மருத்துவமனைகளில் பிறக்கிற குழந்தைகளுக்கு மட்டும் 1 கிராம் தங்க மோதிரம் திட்டத்தை அரசு மருத்துவமனைகள் அல்லாத.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">பிற மருத்துவமனைகளில் பிறப்பின்ற 47 சதவிகித குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் கிடையாதா என்ற கேள்வி, பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களிடத்தில் உருவாகியிருக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">100 நாள் திட்டப் பயனாளிகள் குறித்து, ஏற்கெனவே 100 நாள் திட்டத்தை சமீபகாலமாக இழந்துவிட்டதாக நினைக்கிறார்கள். நிதிநிலை அறிக்கையில், 125 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தை நிறைவேற்றுவதில் நலிவுற்ற மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்குக் கூடுதலாக 25 நாட்கள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டி ருக்கிறீர்கள். தற்போது நிபந்தனை விதித்ததால், 150 திட்டம் அனைவருக்கும் கிடையாதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.  125 நாட்கள் பணிகள் முடித்திருந்த போதிலும், அரசு நலிவுற்ற மற்றும் ஏழைக் குடும்பம் என்று வகைபடுத்தினால்தான் கிடைக்குமா. . .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தமிழ்நாட்டிற்குக் கிடைத்திருக்கிற சர்வ ரோக நிவாரணி. திராவிட சித்தாந்தம் என்பது, சஞ்ஜீவி மந்திரம், திராவிட சித்தாந்தம் என்பது, phoenix பறவை. நன்றி, வணக்கம். (மேசையைத் தட்டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">தொகுதிக் கோரிக்கைகள்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஊரக வளர்ச்சித் துறையின்மூலம், பழுதடைந்த கூரை வீடுகளை இடித்துவிட்டு காத்திருப்போருக்கும், தீ விபத்தினால் வீடுகளை இழந்தோருக்கும் மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்தோருக்கும் அரசு வீடுகட்டும் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">பழங்குடி மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவதில் உள்ள வரையறைகள் எளிமைபடுத்தப்பட வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழி தொகுதிக்குட்பட்ட, கடைக்காடு, மடத்துக்குப்பம், நாயக்கர்க்குப்பம், சாவடிக்குப்பம், கீழமூவர்கரை,மேலமூவர்கரை, திருமுல்லைவாசல், தொடுவாய், கூழையார், கொட்டாயமேடு, மடவமேடு, பழையார் வரை நேர்கல் சுவர் (கிரையான்ஸ்) உருவாக்கப்பட வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழி தொகுதி, பழையார் திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்த வேண்டும். மானிய விலை டீசலை பழையாரில் விநியோகம் செய்ய வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழி தொகுதி, பேரிடர் மேலாண்மை குறித்த அரசின் அறிவிப்பு 21–ல் வெள்ள அபாய எச்சரிக்கையில் மயிலாடுதுறையும் கடலோர மாவட்டம் என அறிவிக்க வேண்டும். சீர்காழி தொகுதி, திருமுல்லைவாசல் ஊராட்சியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழி தாலுகாவை இரண்டாகப் பிரித்து கொள்ளிடம் பகுதியை தனி தாலுகாவாக உருவாக்க வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழி தொகுதி, தீயணைப்பு நிலையத்திற்கு இரண்டாவது தீயணைப்பு வாகனம் வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழி தொகுதி, கொள்ளிடத்தில் தீயணைப்பு நிலையம் அமைத்துத் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழி தொகுதி, திருமுல்லைவாசலில் புதிய காவல் நிலையத்தை அமைத்துத் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழி தொகுதி, கொள்ளிடம் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து கொள்ளிடம் ஒன்றியம் மற்றும் திருமுல்லைவாசல் ஒன்றியம் உருவாக்க வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழி தொகுதி, சீர்காழி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து வைத்தீஸ்வரன்கோவில் ஒன்றியம் மற்றும் திருவெண்காடு ஒன்றியம் உருவாக்க வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழி தொகுதி, கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் பனங்காட்டங்குடி முதல் காட்டூர் வரை சாலை வசதி உருவாக்கித் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">Generally sponsored scheme மூலமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்குரிய மருத்துவக் கல்லூரியை, சீர்காழி தொகுதியில் அமைத்துத் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழி தொகுதி, பாடசாலை கொண்டத்தூர் நத்தம் ஆலவெளி சேமங்கலம் ஆகிய ஊராட்சிகளை சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் இணைக்க வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழி தொகுதி, நடிப்பிசை புலவர் கே ஆர் ராமசாமி  நினைவு சர்க்கரை ஆலையை புனரமைத்து மீண்டும் உருவாக்கித் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழி தொகுதி, எருக்கூர், புகைப் போக்கியிலிருந்து வரும் கரி நுண்துகள்கள் காற்றில் கலந்து நகரம் முழுவதும் காற்று மாசுபடுவதைத் தடுக்க வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழி தொகுதியில் உணவு பதனிடும் தொழிற்பேட்டைஅமைத்து உணவு தானியங்கள் பதனிடும் மற்றும் மதிப்புக் கூட்டல் செய்துதர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கடல் உணவுகளை பதனிட்டு, மதிப்புக் கூட்டல் செய்து, பதனிடும் தொழிற்பேட்டை உருவாக்கித் தர வேண்டும். சீர்காழி நகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்தை உருவாக்கித் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழி நகரில் நவீன வசதியுடன் பல்நோக்கு அரங்கு அமைத்துத் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழி நகராட்சி சாலைகளை அகலப்படுத்தி விரிவுப்படுத்தித் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழி தொகுதி, இசைமேதை சீர்காழி கோவிந்த ராஜன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்தும், நகரின் கச்சேரி சாலைக்கு அவரது பெயரை அறிவிக்க அரசாணை வெளியிட வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. முத்தையா பிள்ளை, திரு. கே.பி.எஸ் மணி, திரு. கா. சுப்பரவேலு, திரு. தங்கவேலு ஆகியோர் நினைவாக சீர்காழி நகர சாலைகளுக்கு அவர்கள் பெயர் சூட்ட வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழி தொகுதிக்குட்பட்ட பெருந்தோட்டம் மற்றும் திருவாலி ஏரிகளில் படகு குழாம் அமைத்துத் சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழி தொகுதியில் அரசு சட்டக் கல்லூரி அமைத்துத் தர வேண்டும். சீர்காழி தொகுதி, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலுரான் படுகை கிராமத்திற்கும் கிழக்கே மற்றும் அளக்குடி கிராமத்திற்கு மேற்கே தரைக்கு நெறி சுவர் அமைத்துத் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழி தொகுதி, கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரிவாக்கம் செய்து கடல் நீரை குடிநீர் திட்ட மாக செயல்படுத்த வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழி தொகுதிக்குட்பட்ட கிராம அரசு பள்ளிகளில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழி தொகுதி, நிலத்தடி நீரை செறிவூட்ட ஊராட்சிகள்தோறும் பாரம்பரியமான கிணறு அமைக்கும் திட்டத்தை உருவாக்கிட வேண்டும்.  சீர்காழி தொகுதி, பெருந்தோட்டம் சிலனார் முகத்துவாரத்தை தூர்வாரி புனரமைக்க வேண்டும். சீர்காழி தொகுதி, பழையார் மீன்பிடி துறைமுகத்தை மேன்மைப்படுத்திட வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மயிலாடுதுறை மாவட்ட ஊராட்சி அமைத்துத் தர வேண்டும். சீர்காழி தொகுதியில், தற்பொழுதுள்ள அரசு பள்ளிகளான சுதந்திரத்துக்கு முன்பு கல்வி போதிக்கும் சமூக இயக்கங்களாக துவக்கப்பட்ட பள்ளிகளில் அந்த பள்ளியை உருவாக்கிய மாமனிதர்களின் புகைப் படத்தை அல்லது அவர்கள் பெயரை வைக்கும் திட்டம் செயல்படுத்த வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">பூம்புகார் கடல் ஆய்வை தீவிரப்படுத்தித் தமிழர்களின்தொன்மை நாகரிகத்தை வெளிக்கொணர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழி தொகுதி, கூழையாற்றில் அமைக்கப் பட்டுள்ள சுற்றுலாத் தலத்தை விரிவாக்கித் தர வேண்டும். சீர்காழி தொகுதிக்குட்பட்ட புத்தூரில் உள்ள புரட்சித்ததலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் முதுநிலை படிப்புகளை துவக்கித் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழி தொகுதியில் செவிலியர் கல்லூரி துவங்கிட வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழி தொகுதி, பெருந்தோட்டம் மரக்காணம் இடையே உள்ள பக்கிங்காம் கால்வாயை புனரமைத்து நீர் வழித்தடம் அமைக்க வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழி தொகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை விரிவாக்கம் செய்ய வேண்டும். வைத்தீஸ்வரன் கோவில் அரசு மருத்துவ மனையை முழு நேர மருத்துவமனையாக தரம் உயர்த்தி தர வேண்டும். சீர்காழி தொகுதிக்குட்பட்ட பெருந்தோட்டம் ஏரியைப் பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தமிழகம் எங்கும் உள்ள 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள்ஓய்வெடுக்க ஓய்வறைகள் அமைத்துத்தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழி நகரத்தில் ஒரு சுற்று வட்ட சாலை அமைத்துத்தரவேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">நகர கட்டமைப்புக்கு கொடுக்கும் அதே முன்னுரிமையைகிராமப்புற கட்டமைப்புக்கும் கொடுக்கப்பட வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சீர்காழி தொகுதி, கோவில் நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் குடிசைவாசிகளுக்கு அரசின் வீடு கட்டும் திட்டங்களை செயல்படுத்த வழிவகை வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இவ்வாறு – கழக உறுப்பினர் செந்தில் செல்வன்பேசினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>