<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="12/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,66,957,958" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Sep 12 2026 00:16:28 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260912T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="12092026-VLR-07" position.sequence="07" ex-ref="12092026-VLR-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="20">நேற்றைய தொடர்ச்சி</lang>
	</hl2>
<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="63">தி.மு.க.வில் காலந்தோறும் நிகழ்ந்த மறுசீரமைப்புகள்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame858711_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup858675_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">1969 ஜூலை­யில் கழக சட்­டத்­திட்­டப்­படி ‘தலை­வர்’ பொறுப்பு நடை­மு­றைக்கு வந்­தது. தலை­மைக்­க­ழக நிர்­வா­கி­க­ளில் மட்­டுமே தலை­வர் இடம்  பெற்­றார். மாவட்­டக் கழ­கம் முதல் கிளைக் கழ­கம் வரை ‘அவைத் தலை­வர்’ பொறுப்பே இருந்து வரு­கி­றது. இந்­தக் கட்­டு­ரை­யா­ளர் இந்த முரண்­பாட்டை விளக்­கு­கிற கடி­தம் ஒன்றை எழுதி அப்­போ­தைய பொதுக்­குழு உறுப்­பி­னர் மயிலை எஸ்.வி.வேலு அவர்­க­ளி­டம் தலை­மை­யி­டம் கொடுக்­கு­மாறு கேட்­டுக் கொண்­டார். கடி­தத்­தைப் படித்­துப் பார்த்த தலை­வர், புன்­னகை ஒன்­றையே பதி­லா­கத் தந்­தார் என்று எஸ்.பி.வேலு என்­னி­டம் தெரி­வித்­தார். இக்  கடி­தம் சிதம்­ப­ரம் பொதுக்­கு­ழு­வில் தலை­வ­ரி­டம் சேர்­பிக்­கப்­பட்­டது. என் விழைவு தலைமை முதல் கிளைக் கழ­கம் வரை ‘தலை­வர்’ பொறுப்பு அமை­தல் வேண்­டும் என்­பதே. இக்­க­ருத்­து­தான் அக்கடி­தத்­தில் இடம் பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அறி­ஞர் அண்­ணா­வின் மர­ணத்­திற்­குப் பிறகு மாநில சுயாட்­சிக் கொள்கை விதி 3 இல் கோட்­பாடு எனும் தலைப்­பின் கீழ் இணைக்­கப் பட்­டுள்­ளது. விதி 2 நோக்­கம் எனும் தலைப்­பின் கீழ், அண்­ணா­வின் திருத்­தத்­தோடு அப்­ப­டியே இடம் பெற்று இருக்­கி­றது. விதி2,3 இல் அறி­ஞர்­அண்­ணா­வின் செயற்­கு­றிப்பு நினைவு கூரப்­பட்­டுள்­ளது. அது இன்று வரை­யும் தொட­ரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">புரட்சி நடி­கர் எம்.ஜி.ஆர். மீது கழ­கம் ஒழுங்கு நட­வ­டிக்கை எடுத்த கால­கட்­டத்­தில் கழ­கப் பொதுக்­கு­ழு­வில் 310 உறுப்­பி­னர்­கள் இடம் பெற்று இருந்­த­னர். அப்­போது செயற்­குழு உறுப்­பி­னர்­கள் 26பேர். 1972 அக்­டோ­பர் மாத நிலைமை இது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">1977 ஏப்­ர­லில் கழ­கத்­தின் தலை­வர் மற்­றும் பொதுச்­செ­ய­லா­ளர் தம் பொறுப்­பு­க­ளி­லி­ருந்து வில­கி­னர். தலை­வர் கலை­ஞர்; பொதுச்­செ­ய­லா­ளர் நாவ­லர், கழக முன்­ன­ணி­யி­ன­ரால்–­­பே­ரா­சி­ரி­யர் க.அன்­ப­ழ­கன் போன்­ற­வர் களால் இரு­வ­ருக்­கு­மி­டையே சம­ர­சம்  மேற்­கொள்­ளப்­பட்­டது. சம­ர­சம் 4 நாள்­களே நீடித்­தது. நாவ­லர் தலை­மை­யில் தனி அணி ஒன்று பிரிந்­தது. தி.மு.கழ­கத்­தில் நாவ­லர் இருந்த பொதுச்­செ­ய­லா­ளர் இடத்­திற்கு பேரா­சி­ரி­யர் வந்­தார். எஸ்.ஜே.சாதிக் பாட்சா  பொரு­ளா­ளர் ஆனார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இக்­கட்­டத்­தில் 566 பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் இருந்­த­னர். பெரும்­பா­லும் பொதுக்­குழு கூடு­கி­ற­ போது, சிறப்பு அழைப்­பா­ளர்­கள் இடம் பெறு­வது உண்டு. பொதுச் செய­லா­ள­ருக்கு நிய­ம­ன­ பொ­துக்­குழு உறுப்­பி­னர்­க­ளை­யும் செயற்­குழு உறுப்­பி­னர்­க­ளை­யும் நிய­மிக்­கிற அதி­கா­ரம் உண்டு. தஞ்­சை­யில் 24.07.1977இல் கூடிய பொதுக்­குழு தலை­வர், பொதுச்­செ­ய­லா­ளர் குறித்து ஒரு சட்­டத் திருத்­த­தைக் கொண்டு வந்­தது. தலை­வரோ, பொதுச் செய­லா­ளரோ பொறுப்­பி­லி­ருந்து விலகி விட்­டால் பொதுக்­கு­ழு­வின் பொறுப்பு என்ன என்­பதை அறு­தி­யிட்டு கூறு­கிற வகை­யில் கழ­கச் சட்­டத் திட்­டத்­தில் திருத்­தங்­கள் செய்­யப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மு.க.ஸ்டாலின் பொரு­ளா­ள­ராக இருந்த போதே 2017 ஆம் ஆண்டு ‘செயல் தலை­வர்’ எனும் பொறுப்பு உரு­வாக்­கப்­பட்டு செயல்­பட்டு வந்­தார். இதற்கு முன்பு ‘செயல் தலை­வர்’ எனும் பொறுப்பு தி.மு.கழ­கத்­தில் இருந்­தது இல்லை. தலை­வர் கலை­ஞர் உடல் நலம் குன்­றிய நிலை­யில் கழக நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­ட­மு­டி­ய­வில்லை. அத­னால் ஸ்டாலின்  ‘செயல் தலை­வர்’ ஆனார்.  அதற்­காக விதி­கள் திருத்­தப்­பட்­டன. 2018இல் தலை­வர் கலை­ஞர் மறை­வெய்­தி­ய­தற்­குப் பின்­னர் ஸ்டாலின் பொதுக்­கு­ழு­வால் முறைப்­ப­டி­க­ழ­கத் தலை­வ­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார். இந்­நி­கழ்­வுக்கு முன்­னரே ‘செயல் தலை­வர்’ பொறுப்பு பொதுக்­கு­ழு­வில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­தின் மூலம்  ரத்து செய்­யப்­பட்­டு­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இப்­போது தலை­மைக் கழ­கத்­தில் தலை­வர், பொதுச்­செ­ய­லா­ளர், பொரு­ளா­ளர், முதன்­மைச் செய­லா­ளர், துணைப்­பொ­துச்­செ­ய­லா­ளர்­கள்–7, அமைப்­புச்­செ­ய­லா­ளர்–1, துணை அமைப்­புச் செய­லா­ளர்­கள்–2, உயர்­நிலை செயல்­திட்­டக் குழு­வி­னர்–29, நிர்­வா­கக்­குழு மற்­றும் செயற்­குழு உறுப்­பி­னர்­கள் தேர்வு 258, பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் (தேர்வு)–547, கழ­கச் சார்பு அணி­கள் மற்­றும் அணிச் செய­லா­ளர்­கள்–25, (2020ஆம் ஆண்டு) சட்­டத்­திட்­டப் புத்­த­கத்­தில்   18 அணி­கள் இருக்­கின்­றன. மாவட்­டக் கழ­கங்­கள் முதல் கிளைக் கழ­கங்­கள் வரை அதற்­கு­ரிய எண்­ணிக்­கை­க­ளின் அடிப்­ப­டை­யில் தலைமை இயங்­கு­வ­தைப் போலவே இயங்­கு­கின்­றன. தலைமை நிர்வாகக் குழுவும் சட்டத் திட்டத்தில் இடம்பெற்றிருக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அண்­மை­யில் நடந்த(2026 ஏப்­ரல்) தமி­ழ­கச் சட்­ட­மன்­றத் தேர்­தல் தி.மு.க. தனது வாக்கு வங்­கி­யில் 13.5சத­வி­கி­தத்தை இழந்­தது. ஸ்டாலின் தலை­மை­யில் பல­சா­த­னை­களை மக்­கள் நலத்­திட்­டங்­களை நிறை­வேற்­றிய கழக அரசு ஆட்சி அதி­கா­ரத்தை இழந்­தது. அது­வும் எந்­த­வித அர­சி­யல் பின்­ன­ணி­யும் அமைப்பு பலம் இல்­லாத ஒரு தனி மனி­தனை நம்பி தமி­ழக மக்­கள்­வாக்­கு­களை அளித்­த­னர். இது அர­சி­யல் உணர்ந்த, அறிந்த எல்­லாத் தரப்­பி­ன­ரிட­மும் அதிர்ச்­சியை உரு­வாக்­கி­யது. இத­னால் தி.மு.க. அமைப்பு  ரீதி­யாக மாறு­தல்­க­ளைச் செய்ய கழக மறு­சீ­ர­மைப்பு ஆலோ­ச­னைக் குழுவை நிய­மித்­தது. ஏரா­­ள­மான கருத்­து­ரை­க­ளைத் தி.மு.க. அதன் தேர்­தல்­சம்­பந்­த­மாக மக்­க­ளி­ட­மி­ருந்து வரப்­பெற்­றது. ஆலோ­ச­னைக் குழு­வி­ன­ரும் அதன் முதல் கட்ட அறிக்­கையை வழங்கி விட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அதன் அடிப்­ப­டையில் 22.08.2026 ஆம் தேதி­யன்று அண்ணா அறி­வா­ல­யத்­தில் கழ­கச் செயற்­கு­ழுக் கூட்­டம் நடை­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­தில் 9 தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன. முக்­கி­ய­மாக 16–ஆவது கழ­கத் தேர்­தலை அந்­தச் செயற்­குழு அறி­வித்­தது. கழ­கத் தோழர் ஒரு­வர் கழ­கப் பொறுப்பு எத்­தனை முறை வகிக்­க­லாம் என்­பதை  நிர்­ண­யம்  செய்­தும் அதற்­கான வயது வரம்­பு­களை நிர்­ண­ 
யித்­தும் தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன. அவற்­றைச் செயல்­ப­டுத்­தும் வித­மாக முதல்கட்­ட­மாக 110 மாவட்­டங்­க­ளைக் கழ­கத்­தின் நிர்­வாக வச­திக்­காக அமைக்­கப்­பட்டு அதற்­கான தலை­மைக் கழக பிர­தி­நி­தி­க­ளும் அறி­விக்­கப்­பட்­டு­விட்­ட­னர். பணி­க­ளும் தொடங்­கப்­பட்டு விட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இது­வரை கழ­கத்­தில் எந்­தக் காலக்­கட்­டத்­தி­லும் மேற்­கொள்­ளப்­ப­டாத மறு சீர­மைப்­புப் பணி­கள் கழ­கத்­தில் தொடங்­கி­விட்­டன. இத­னைக் கிளைக் கழகம் முதல் தலை­மைக் கழ­கம் வரை நிறை­வேற்றி ஒரு புதிய பாய்ச்­ச­லைக் கழ­கம் ஏற்­ப­டுத்­தத் தொடங்­கி­விட்­டது. இதன் மூலம் கழ­கம் மேலும் முன் செல்­ல–­­படை நடை நடத்த தலை­மைக் கழக ஆணை­யைச் செயல்­ப­டுத்த முன்­னணி வீரர்­­கள் களப்­ப­ணி­யில் இறங்­கி­விட்­ட­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இக்­கட்­டு­ரை­யில் நான் எடுத்­துக் காட்­டி­யுள்ள சீர­மைப்­புப் பணி­கள் அந்­தந்­தக் காலத்­திற்கு ஏற்ப சீர­மைப்­பு­க­ளைக் கழ­கம் செய்து கொண்டே வந்­தது. இப்­போ­தைய சீர­மைப்­புப் பணி­கள் இன்­றைய தேவை­க­ளாக இருக்­கின்­றன. அவ­சி­யங்­க­ளா­கப் படு­கின்­றன. இது தலை­மை­யின் விருப்­பம் இல்லை. காலத்த்ன் கட்­டா­ய­மாக ஆகி­விட்­டி­ருக்­கி­றது. ஆக­வே­தான் மறு­சீ­ர­மைப்பு மேற்­கெள்­ளப்­ப­டு­கி­றது. ஓர் ஆய்­வா­ளர் என்­னி­டம், இந்த மறு­சீ­ர­மைப்பு  தேர்­த­லை­மட்­டும் நோக்­க­மா­கக் கொண்டு அறி­விக்­கப்­ப­டு­கி­றதே, இது சரியா?” என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நான் ­அ­தற்கு விடை சொன்­னேன். தி.மு.க. பார்­வைக்கு ஓர்­அ­ர­சி­யல் கட்­சி­யாய் தோற்­ற­ம­ளிக்­கி­றது. தி.மு.க.வின் அர­சி­யல் கோட்­பா­டு­கள் தேல்­தலை மட்­டுமே குறிக்­கோ­ளா­கக் கொண்­டவை இல்லை. அது­அ­ர­சி­யல் கட்சி மட்­டு­மில்லை. அது ஒரு சமூக, பண்­பாட்டு, கலாச்­சார இயக்­க­மா­கும். அதனை அர­சி­யல் அதி­கா­ரத்­தின் மூலம் சாதித்­துக் கொள்­ளவே தமி­ழக மக்­க­ளுக்­குப் பணி­யாற்­றாவே தேர்­த­லின் மூலம் அர­சி­யல் அதி­கா­ரத்தை விழை­கி­றது. கடந்த 70ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக அந்­தப் பணி­யைச் செய்து கொண்டு  கழகம் முன்­னே­றிக் கொண்டே இருக்­கி­றது. தி.மு.க.வுக்கு அதன் கொள்கை குறி க்­கோள்–­­கோட்­பா­டு­களை நிறை­வேற்ற தேர்­தலை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட அர­சி­யல் அதி­கா­ரம் இதற்­கா­கத்­தான் தேவைப்­ப­டு­கி­றது. அதன்­வழி கழக அமைப்­பு­கள் இயங்­கு­வ­தும் அமைப்­புப் பணி­களை மேற்­கொள்­வ­தும் இயல்­பா­ன­ஒன்றே. எனவே தேர்­தலை மட்­டுமே நோக்­க­மா­கக் கொண்ட கட்சி தி.மு.கழ­க­மன்று”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அறி­ஞர் அண்ணா, ஜன­நா­ய­கத்தை அது ஓர் அர­சி­யல் அமைப்­பு­முறை மட்­டு­மல்ல, அது ஒரு வாழ்க்கைநெறி என்று கூறிச் சென்று இருக்­கி­றார். அந்­தத் தேர்­தல் ஜன­நா­யக நெறி முறை­க­ளையே தி.மு.க. செழு­மை­யாக்கி அர­சி­ய­லில் படை நடையை நடத்­து­கி­றது. மேலும் இன்­றைய ஜென்சி, செயற்கை நுண்­ண­றிவு, இன்ஸ்டா கிராம், தக­வல் தொழில்­நுட்ப அர­சி­யல் ஆகி­ய­வற்­றி­னுக்கு அறை­கூ­வல் விடுத்து வரு­கி­றது. தி.மு.கழ­கத்­தின அமைப்பு மேலும் காலத்­திற்­கேற்­ற­படி பலப்­ப­டுத்த மறுசீ­ர­மைப்­புப் பணி­யைக் கணக்­கில் எடுத்­துக் கொண்டு களத்­தில் வாளை­யும் கேட­யத்­தை­யும் சுழற்­றிக் கொண்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தி.மு.கழ­கத்­தில் இன்­றைய தோற்­றத்­தின் பின்னே திரா­வி­டர்­சங்­கம், நீதிக்­கட்சி, சுய­ம­ரி­யாதை இயக்­கம், திரா­வி­டர் கழ­கம் ஆகிய அமைப்­பு­க­ளின் கெள்கை சாய்க்­கால்­கள் இருக்­கின்­றன. இந்­தி­யா­வில் இப்­ப­டி­யொரு அர­சி­யல் கட்­சி­யை–­­பி­றி­ தொன்­றை­ யா­ரும் சுட்­டிக்காட்ட முடி­யாது. விவ­ரம்­தெ­ரியா ­தர்­கள் விசா­ரித்­துப் பார்க்க வேண்­டிய நபர்­கள் தற்­கா­லிக கொக்­க­ரிப்­பால் தி.மு.க.வை அழித்­து­விட முடி­யாது. அதன் வேர் ஆழ­மா­னது; விழு­து­கள் உறு­தி­யா­னவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தமி­ழ­கம் முழு­மை­யும் உள்ள மூத்­த­க­ழக முன்­னோ­டி­கள் செயற்­க­ரிய செய்ய வல்­ல­வர்­கள். அமைப்­பின் சீர­மைப்­புப் பணி­யினை முன்­னின்று ஆற்­று­கிற பக்­கு­வம் உள்­ள­வர்­கள். இந்த அமைப்பு – தி.மு.க. வலு­வாக இருக்க வேண்­டும் என்­ப­தில்­பே­ரார்­வம் உள்­ள­வர்­கள். இது­ஆ­யி­ரம்­கா­லத்து பயிர் என்­ப­தைப் பயின்று அர­சி­ய­லுக்கு வந்­த­வர்­கள். அவர்­க­ளின் உறு­துணை முமு­மை­யாக மறு­சீ­ர­மைப்­புப் பணி­க­ளுக்கு அமை­யும். ஆகவே நமக்கு ‘ஜய­முண்டு; பய­மில்லை!’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தி.மு.க. அழிக்­கப்­பட்­டு­வி­டும்–­­அ­ழி­யும் என்று அணு­குண்டு அய்­யாவு காலத்­தி­லி­ருந்து சொல்­லிக் கொண்டு திரி­ப­வர்­கள் இன்­ன­மும் இருக்­கி­றார்­கள். இன்­றும் ஆரூ­டம் பார்த்­துக் கொண்டு இருக்­கி­றார்­கள். அறி­ஞர் அண்ணா ஒரு முறை, ‘தி.மு.கழ­கம் கண்­ணீ­ரோடு பிறந்­தது, அது­சா­கும் போது சிரித்­துக் கொண்டே சாகும்’! என்று கூறிச் சென்று இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அவரின் அந்தமொழி உள்­ளீடு நிறைந்­தது. காலம் தீர்­மா­னிக்க வேண்­டிய நிகழ்­வு­அது. கத்­துக்­குட்­டி­கள் அல்ல. இருப்­பி­னும் ஒன்­றைச் சூத்­தி­ர­ 
மாக்­கச் சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">என்று வைதீ­கம் வீழ்கி­றதோ</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">என்று வர்­ணா­சி­ர­மம் வீழ்­கி­றதோ</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அன்று தி.மு.கழ­கம் இருக்­காது. அது­வரை அதன் பணி தொடர்ந்து கொண்­டே­இ­ருக்­கும். அதனை அழிக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பகல் என்­றும் இரவு என்­றும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பகுக்­கும் கால யந்­தி­ரத்­தைக்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கையில் வைத்­தி­ருக்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">வானத்தை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">யார் கையில் இருந்­தா­லும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">குடை­யால் அகற்ற முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">நிசத்­தைக் காட்­டா­மல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">நிழ­லைக் காட்­டும் குடையா</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">நிசங்­க­ளின் தேச­மான ஆகா­யத்தை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">நிர்­மூ­லம் செய்ய நினைப்­பது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="12.5">–ஈரோடு தமி­ழன்­பன்</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>