<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="13/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,63,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Sep 13 2026 03:43:51 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260913T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="13092026-MDU-08" position.sequence="08" ex-ref="13092026-MDU-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="92">தற்குறிகளே! விவாதிக்கலாமா? அறையிலா? அம்பலத்திலா?</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup862158_08_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Arial Rounded MT Bold" fontStyle="Bold" size="10.2">“....Vijay, a film actor a demagogue with nothing in his head how to solve the massive socio- economic pro blems of Tamil Nadu, is going to be the next of Tamil Nadu. Tamilans will soon be disillusioned with this idiot”.....</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.2">என்று முன்­னாள் உச்ச நீதி­மன்ற நீதி­பதி மார்க்­கண்டே கட்ஜு தனது எக்ஸ் வலை­த­ளத்­தில் விமர்­ச­னம் செய்­தி­ருந்­தார். “மூளை­யில் எது­வும் இல்­லாத சினிமா நடி­கர் ஜோசப் விஜய் எனும் முட்­டா­ளால் தமி­ழர்­கள் விரை­வில் ஏமாற்­றம் அடை­யப் போகி­றார்­கள்; அவர் ஒரு “முட்­டாள்” என்­றும் “கோமாளி” என்­றும் பதி­விட்ட அவர்; “தமிழ்­நாட்­டின் பெரிய சமூக, பொரு­ளா­தா­ரப் பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­ப­தற்­கான எந்த வித ஓர் அறிவோ, புரி­தலோ, திட்­டமோ இல்­லாத ஒரு முட்­டாள்” என்­றும் ஜோசப் விஜய் பற்­றிக் குறிப்­பிட்டு அடை­யா­ளப்­ப­டுத்தி இருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.2">மேலும், “அவர் ஒரு ஏமாற்­றுக்­கா­ரர்; மோசடி பேர்­வழி என்­றும்; வெளிப்­ப­டை­யா­கவே குற்­றம் சாட்­டி­னார். அத்­து­டன்,  “விஜய் மீதும், அவ­ரது கவர்ச்சி அர­சி­யல் மீதும் தமிழ்­நாடு மக்­கள் வைத்­துள்ள மாயை நம்­பிக்கை விரை­வில் உடைந்து மக்­கள் பெரும் ஏமாற்­றம் அடை­யப் போகி­றார்­கள்” என்று தனது சமூக வலைத்­த­ளத்­தில் பதிவு செய்­த­து­டன்,” விஜய் ஒரு போலி வாக்­கு­றுதி அளிக்­கும் ‘ஹாமி­லினி’ குழல் ஊதி போன்­ற­வர்; மக்­க­ளைப் பேர­ழி­விற்கு அழைத்­துச் செல்­வார்” என்று கடு­மை­யா­கவே  தனது கருத்­தா­கப் பதி­வில் சாடி­யி­ருந்­தார். நீதி­பதி மார்க்­கண்­டேய கட்ஜூ தந்த வாச­கங்­கள்  இப்­பொ­ழுது உண்­மை­யாய் இருக்­கின்­றன!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.2">கடந்த செப்­டம்­பர் 3, வியா­ழக்­கி­ழமை அன்று நடந்த சட்­ட­மன்ற விவா­தத்­தில் காவல்­துறை மானி­யத்­தின் போது, ஜோசப் விஜய்­யின் தலை­மை­யி­லான த.வெ.க. ஆட்­சி­யில் நடை­பெற்­றுள்ள சட்ட ஒழுங்­குச் சீர்­கே­டு­கள் பற்றி  அடுக்­க­டுக்­காக 15 கேள்­வி­கள் எழுப்பி எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் எடுத்து வைத்­தார். அக் கேள்­வி­க­ளுக்­கும் உரி­ய­மு­றை­யில் நேர­டி­யா­கப் பதில் சொல்­லா­மல்;  ஜோசப் விஜய் தனிப்­பட்ட முறை­யில், தான் ஒரு ஜமுக்­கா­லத்­தில்  வடி­கட்­டிய  முட்­டாள் எனும்  தற்­குறி என்­பதை நிரூ­பிக்­கும் வகை­யில்  அவை களத்­தில் இல்­லாத தலை­வர்­களை முன்­னாள் முதல்­வர்­க­ளான  கலை­ஞர், மு.க.ஸ்டாலின் மற்­றும் முர­சொலி மாறன் போன்­றோர் மீது உண்­மைக்கு மாறான, பொய்­யான குற்­றச்­சாட்­டு­க­ளைச் சுமத்­திப் பேசி­யுள்­ளார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">சட்­டப்­பே­ரவை விதி 42  உட்­பி­ரி­வு­கள் 6,7,8,9  ஆகி­ய­வற்­றுக்கு எதி­ரான கருத்­துக்­க­ளைப் பேசி உள்­ளார். (42. In order that a. question may be atmissibl, it must  satisfy the following conditions ....) பல்­லா­வ­ரம் தொகுதி திமுக முன்­னாள்  சட்­ட­மன்ற உறுப்­பி­னர் இ. கரு­ணா­நிதி குடும்ப விவ­கா­ரம்  நீதி­மன்ற விசா­ரணை நிலு­வை­யில் இருக்­கும் போது; அது பற்­றி­யும்  சட்­ட­மன்ற விதி மீறிப் பேசி உள்­ளார். (தமிழ்­நாடு 
சட்­டப்­பே­ரவை விதி 92 (i) (ii) எதி­ரா­னது, இப்­ப­டிப் பேசிய  முதல்­வர் ஜோசப் விஜய்  மீது உரிமை மீறல் பிரச்­சி­னையே கொண்டு வர முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">தமிழ்­நாடு சட்­டப்­பே­ரவை விதி எண் 92: (i) நீதி­மன்ற விசா­ர­ணை­யில் இருக்­கும் எப்­பொ­ரு­ளின் மீதும் தம் கருத்­தைச் சொல்­லவோ, அப்­பொ­ருள் பற்­றிக் குறிப்­பி­ட­வும் கூடாது. (ii) உறுப்­பி­னர் எவ­ரை­யும் தனிப்­பட்ட முறை­யில் தாக்­கக் கூடாது (A member while speaking must not:- (i) give his opinion about or refer to any matter on which a judicial decision is pending; (ii) make a personal charge against a member....). விதி­கள் இப்­ப­டிச் சொல்­லும் போதும், அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் உறுப்பு 211 - கூறும் விதியை மீறி­யும், எப்­படி தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் ஜோசப் விஜய், அவை­யில் இல்­லாத தனி நபர்­க­ளைப் பற்றி விமர்­சித்­தும், நீதி­மன்­றப் பொருள் குறித்­தும் பேசி­னார்? இதற்கு அவைத் தலை­வர் எப்­படி அனு­மதி அளித்­தார்? என்­பது குறித்­துச் சட்­டக் கேள்­வி­கள் எழு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">தேர்­தல் பிரச்­சா­ரப் பொது மேடை­க­ளில் பேசு­வது போல, அவ­ரது பேச்சு சட்­ட­மன்­றத்­தில் இடம் பெற்­றது. போலீஸ் மானிய கோரிக்­கை­யில் எதிர்க்­கட்­சித் தலை­வர் மற்­றும் எதிர்க்­கட்­சி­கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு உரிய எந்த விதப் பதில் அளிக்­க­வில்லை. மாறாக  தனி­ம­னித தாக்­கு­தலை நடத்­தி­னார். அவர் இன்­னும் சினிமா நடி­க­ரா­கவே வச­னம் பேசி எழு­திக் கொடுத்­த­தைப் படித்­துள்­ளார். “மிசா” சட்­டத்­தில் கைதா­கிச் சிறை­யில் இருந்த மு.க. ஸ்டாலின் பற்றி முதல்­வர் ஜோசப் விஜய், உரு­வக்­கேலி செய்து ஆவே­ச­மாக பேசி­னார். இது­கு­றித்து, விஜய்­யின் அமைச்­ச­ர­வைக்கு ஆத­ரவு தந்து கொண்­டி­ருக்­கிற  மார்க்­சிஸ்ட்  கம்­யூ­னிஸ்ட் கட்­சிச் செய­லா­ளர் சண்­மு­கம், இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்சி மாநி­லக் செய­லா­ளர் வீர­பாண்­டி­யன், மூத்த தலை­வர் பால­கி­ருஷ்­ணன், திருப்­பூர் எம்.பி. சுப்­ப­ரா­யன் வி.சி.க. பொதுச் செய­லா­ளர் சிந்­த­னைச் செல்­வன் போன்­றோர் அனை­வ­ரின் எதிர்ப்­பும் விஜய்­யின் பேச்­சால் கடு­மை­யான கண்­ட­னத்­திற்­கு­ரி­ய­தாக அமைந்­துள்­ளன. முதல்­வர் என்­ப­வர் பிற­ருக்கு முன் மாதி­ரி­யா­கத் திகழ வேண்­டும்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">இவரோ அதற்கு மாறா­கத் தனது விசில் அடிச்­சான் குஞ்­சு­களை, தற்­கு­றி­க­ளைத் திருப்­திப்­ப­டுத்த எழு­திக் கொடுத்­த­தைத் தனது படத்­தின்  ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி போன்று  பேசி­யி­ருக்­கி­றார். இதை எல்­லாம் எதிர்த்­துக் கேள்வி எழுப்­பிய திமுக சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளைக் குண்­டுக் கட்­டா­கத் தூக்கி வெளி­யே­று­மாறு அவை காவ­லர்­க­ளுக்கு அவைத்­த­லை­வர் 
உத்­த­ர­விட்­டுள்­ளார். மக்­க­ளின் நலன் சார்ந்த சட்­டங்­கள், திட்­டங்­கள் நிறை­வேற்ற வேண்­டிய ஜன­நா­யக மாளி­கை­யான பேர­வை­யில் இப்­படி இழி­த­கை­யான பேச்­சு­க­ளால் சட்­ட­மன்ற மாண்­பு­க­ளை­யும் கெடுத்­துப் புதைக்­கு­ழிக்­குள் அனுப்பி வைத்து இருக்­கி­றார். தவ­றான தக­வல்­களை வீண் கருத்­து­க­ளைப் பேசிச் சட்­டப்­பே­ர­வை­யைச் சண்­டை­மன்­ற­மா­கவே மாற்றி விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">இந்­தி­யப் பிர­த­ம­ராக இருந்த இந்­திரா காந்தி தனக்கு இருந்த அர­சி­யல் நெருக்­க­டி­யால் நாட்­டில்  நெருக்­கடி நிலை­யைத்  திணித்­தார். அத­னால் மிசா சட்­டம் என்ற பெய­ரில் சிறைக் கொட்­ட­டிக்­குள் மு.க. ஸ்டாலின் உள்­ளிட்­டோர் பல­ரும்  அடைக்­கப்­பட்­டுச் சிறை அதி­கா­ரி­கள் வித்­யா­சா­கர், ‘கையும்’ போன்­றோ­ரின் அத்­து­மீ­றல்­க­ளால் உயிர் போக்­கும்  கடு­மை­யான தாக்­கு­தல்­கள் நிறைந்த இரத்­தம் சிந்­திய காயங்­க­ளு­டன்  சித்­தி­ர­ வ­தைக்கு உள்­ளா­கி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">இது குறித்­துச் சிட்­டி­பா­பு­வின் சிறை டைரி, நீதி­பதி இஸ்­மா­யில் விசா­ர­ணைக்­குழு அறிக்கை, கேரளா கம்­யூ­னிஸ்ட் தலை­வர்  நம்­பூ­திரி பாட் அறிக்­கை­கள், ஜெய­பி­ர­காஷ் நாரா­ய­ணன் பதி­வு­கள், பெருந்­த­லை­வர் காம­ராஜ் அவர்­க­ளின் அறிக்­கை­கள் பேட்­டி­கள், ஏ.கே. கோபா­லன் எழு­திய நெருக்­கடி காலக் கொடு­மை­கள், ஜனதா கட்­சித் தலை­வர் ஜார்ஜ் பெர்­னாண்­டஸ் தரும்  தக­வல்­கள், நீதி­ய­ர­சர் சந்­து­ரு­வின் பேட்டி, தோழர் தியா­கு­வின் கம்­பிக்­குள் வெளிச்­சங்­கள், இலட்­சு­ம­ணன் எம்.பி.யின் பாரா­ளு­மன்­றப் பேச்சு, தலை­வர் கலை­ஞ­ரின் நெருக்­க­டிக் கால நெருப்­பாறு, முர­சொலி செல்­வம் நெருக்­கடி காலப் பதி­வு­கள் மற்­றும் சர்க்­கா­ரியா விசா­ர­ணைக்­குழு அறிக்கை. இப்­ப­டி­யான ஆவ­ணங்­கள் நெருக்­கடி காலத்­தைப் பற்­றி­யும் தள­பதி ஸ்டாலி­னின் வலி பற்­றி­யும் வர­லாற்­றுப் பதி­வு­க­ளாக மண்­டிக் கிடக்­கின்­றன. ஆனால், பல கட்­சி­க­ளில் பாய் விரித்­துப் படுத்­துப் பய­ன­டைந்த நிர்­மல் குமார்­கள் போன்ற வழிப் போக்­கன்­க­ளின் உள­றல் மொழி­கள் கேட்­டுச் சந்தி சிரிக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">1975–-77 கால அவ­ச­ரக் காலப் பிர­க­ட­னத்­தின் போது, எதிர்க்­கட்­சித் தலை­வர்­கள் மற்­றும் அவர்­க­ளது குடும்­பத்­தி­னர் மீதான ஒன்­றிய அர­சின் அடக்­கு­மு­றை­க­ளைச் சுட்­டிக் காட்­டும் வித­மாக, முன்­னாள் குஜ­ராத் மாநி­லத்­தில் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­வ­ரும், இந்­நாள் பிர­த­ம­ரு­மான நரேந்­திர மோடி 2013ஆம் ஆண்டு ஜூன் 25 அன்று டுவிட்­ட­ரில் பதி­விட்டு இருந்­தார் என்­ப­தைக் கோய­பல்ஸ் கூட்­டச் சங்­கி­கள் அறி­வார்­களா?  “During the dark days  of emergency even families of opposition leaders were not spared. M.K. Stalin was jailed under draconian MISA just because his father Karunanidhi  then CM of Tamil Nadu did not to fall in line”.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">“நெருக்­கடி நிலை­யின் போது அன்­றைய பிர­த­மர் இந்­திரா காந்தி தலை­மை­யி­லான மத்­திய அரசு கொண்டு வந்த (Maintenance of Internal Security Act (MISA) என்ற கடு­மை­யான சட்­டத்­தின்­கீழ் தி.மு.க. தலை­வர் மு.க. ஸ்டாலின் சென்னை மத்­திய சிறைச்­சா­லை­யில் அடைக்­கப்­பட்­டார். அப்­போ­தைய தமிழ்­நாடு மாநில முத­ல­மைச்­ச­ராக இருந்த கலை­ஞர் அவர்­கள் அவ­ச­ர­நி­லை­யைக் கடு­மை­யாக எதிர்த்­தார். மத்­திய அர­சுக்கு இணங்­கிப் போக மறுத்த கார­ணத்­தி­னால் தான்; அவ­ரது மகன் மு.க. ஸ்டாலின் சிறை­யில் அடைக்­கப்­பட்­டுச் சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளா­னார்” என்­பது தான்..’’ அவ­ரது பதிவு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">நெருக்­கடி காலக் கொடு­மை­களை  எதிர்த்­துக் குரல் கொடுத்­த­வர்; வேட்டி கட்­டிய ஒரே மாம­னி­தர்; அது­வும் முதல்­வ­ராக இருந்த கலை­ஞர் ஒரு­வர் தாம்! அத­னால் தான் அவ­ருக்கு எதி­ராக அர­சி­யல் பழி­வாங்­கும் நோக்­கில் திமுக ஆட்சி கலைக்­கப்­பட்­டது. அத்­து­டன் உச்­ச­நீ­தி­மன்ற முன்­னாள் நீதி­பதி இரஞ்­சித் சிங் சர்க்­கா­ரியா கமி­ஷன் போடப்­பட்­டது என்­ப­தைத் தவிர, வேறு என்ன நீதி அதில் இருந்­தது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">தமி­ழ­கத்­தில் பேர­றி­ஞர் அண்­ணா­வால் உரு­வாக்­கப்­பட்டு, கலை­ஞ­ரால் பாது­காக்­கப்­பட்டு வந்த இயக்­கம் தி.மு.க. வலு­வான மாநில கட்­சி­யான தி.மு.க.வை உடைப்­ப­தற்கு பிர­த­மர் இந்­திரா காந்தி செய்த சூட்­சி­யின் கார­ண­மாக, கழ­கப் பொரு­ளா­ள­ராக இருந்த எம்.ஜி.ஆர். மீது வரு­மா­ன­வ­ரித்­துறை மூலம் மறை­மு­க­மான நெருக்­கடி சூழ்ச்­சி­கள் எடுக்­கப்­பட்­டன. அதன் விளை­வாக எம்.ஜி.ஆர். பொது­வெ­ளி­யில் தி.மு.க. வுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டு­களை எழுப்பி வெளி­யே­றக் கார­ண­மா­னார். அவர் வில­கிய 17-வது நாளி­லேயே முத­ல­மைச்­சர் கலை­ஞர் மீதும், அவ­ரது அமைச்­ச­ரவை சகாக்­க­ளான இரா. நெடுஞ்­செ­ழி­யன், செ.மாத­வன், ப.உ. சண்­மு­கம், அன்­பில் தர்­ம­லிங்­கம், சாதிக் பாட்சா, ஓ.பி.ராமன், ஆதித்­த­னார் 
உள்­ளிட்­டோர் மீதும், அவர்­கள் குடும்­பங்­கள் மீதும் 
அதி­கார அத்­து­மீ­றல்­கள், ஊழல்­கள், சொத்து சேர்த்­தல் என்று மொட்­டை­யாக ஆதா­ர­மற்ற, ஆவ­ணங்­கள் இல்­லாத உண்­மைக்கு மாறான பல்­வேறு தலைப்­பு­க­ளில் ஊழல் புகார்­க­ளைச் தயார் செய்து மாநில ஆளு­நர் கே.கே. ஷா இடத்­தி­லும், இந்­திய குடி­ய­ர­சுத் தலை­வர் வி.வி. கிரி­யி­டத்­தி­லும் கொடுக்­கப்­பட்­டன. எம்.ஜி.ஆருக்கு ஒத்­து­ழைப்­பாக இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யைச் சேர்ந்த எம். கல்­யா­ண­சுந்­த­ரம், விஸ்­வ­நா­தன் போன்­றோ­ரும் புகார் மனுக்­க­ளைக் கொடுத்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">எம்.ஜி.ஆரும், எம்.கல்­யா­ண­சுந்­த­ர­மும் குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்­குக் கொடுத்த புகார்­க­ளுக்கு மறுப்­ப­ளிக்­கும் வகை­யில், கலை­ஞர் அவர்­கள் அவற்­றுக்­குப் பதி­லாக அனைத்­தை­யும் ‘நம்­பிக்கை வாக்கு’ எனும் புத்­த­க­மாக்கி வெளி­யிட்­ட­து­டன், சட்­ட­ச­பை­யில் 12.12.1972 அன்று குற்­றச்­சாட்­டு­க­ளுக்­கான பதி­லை­யும் கூறி­னார். தி.மு.க. அர­சுக்கு நம்­பிக்­கைக் தீர்­மான வாக்­கெ­டுப்­புக்கு 172 வாக்­கு­களை பெற்று நிரூ­பித்­துக் காட்­டி­னார் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">கலை­ஞர் ஆட்­சி­யி­லி­ருந்­த­போது 1976 ஆம் ஆண்டு வரை, அமைச்­ச­ர­வை­யில் இருந்து பதவி அனு­ப­வித்து வந்த பல­ரும், பின்­னர் எம்.ஜி.ஆர். கட்­சி­யில் போய் சேர்ந்­த­னர். எந்த எம்.ஜி.ஆர். கலை­ஞ­ரு­டைய அமைச்­ச­ர­வை­யில் இருந்­த­வர்­கள் மீது ஊழல் புரிந்­த­வர்­கள் எனப் புகார் அளித்­தி­ருந்­தாரோ, அவர்­க­ளில் பலர் எம்.ஜி.ஆர். கட்­சி­யான அதி­மு­க­வில் இணைந்­த­னர். குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளாக்­கப்­பட்ட அவர்­களை கட்­சி­யி­லும், ஆட்­சி­யி­லும் சேர்த்து எம்.ஜி.ஆர்.  பதவி அளித்­தார். நாவ­லர் நெடுஞ்­செ­ழி­யன், ப.உ.சண்­மு­கம், க.இரா­ஜா­ராம், சத்­தி­ய­வாணி முத்து, செ.மாத­வன் போன்­றோர் பதவி பெற்­ற­தில் அடக்­கம் என்­பது பின்­னர் நடந்த வர­லா­றா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">“நெருக்­கடி நிலைக்கு எதி­ராக, தி.மு.க. போட்ட தீர்­மா­னங்­களை வாபஸ் பெறுங்­கள்; தி.மு.க. ஆட்­சி­யின் பத­விக் காலத்தை ஓராண்டு காலம் நீட்­டித்து தரு­கி­றோம்”... என்று ஒன்­றிய அமைச்­சர் ஓம்.மேத்­தாவை தமி­ழ­கத்­திற்கு அனுப்­பிய பிர­த­மர் இந்­திரா, கலை­ஞ­ரி­டம் வாக்­கு­று­தி­கள் கேட்­டி­ருந்­தார். ஆனால், அவற்றை நிரா­க­ரித்த கலை­ஞர், “இந்­திய ஜன­நா­ய­கமே முக்­கி­யம்; எழுத்­து­ரிமை, பேச்­சு­ரிமை பறிக்­கப்­ப­டக்­கூ­டாது; அர­சி­யல் சட்­டத்தை பாது­காக்க வேண்­டிப் போரா­டி­வ­ரும்  தலை­வர்­க­ளைக் கைது செய்­யக் கூடாது” என்ற ஒற்­றைக் கோரிக்­கை­யில் உறு­தி­யாக நின்­றார். அத­னால் கோபம் அடைந்த இந்­திரா காந்­தி­யால் 1976 ஆம் ஆண்டு ஜன­வரி 31 கலை­ஞர் தலை­மை­யி­லான  தி.மு.க. ஆட்சி கலைக்­கப்­பட்­டது. அதன் தொடர்ச்­சி­யாக எம்.ஜி.ஆர். (4-.11.-1972) எம்.கல்­யா­ண­சுந்­த­ரம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">(20-.9.-1972), நாஞ்­சில் மனோ­க­ரன், ஜி.விஸ்­வ­நா­தன்  (01.-12.-1975) தேதி­க­ளில் ஆகி­யோர் கொடுத்த புகார் மனுக்­களை உயிர் கொடுத்து ஓய்வு பெற்ற 
உச்­ச­நீ­தி­மன்ற முன்­னாள் நீதி­பதி  இரஞ்­சித் சிங் சர்க்­கா­ரியா என்­ப­வர் தலை­மை­யில் விசா­ரணை குழுவை (03-.02.-1976)  ஒன்­றிய அரசு அமைத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">அதற்­கான ஒன்­றிய, மாநில புல­னாய்­வுக் குழுக்­கள் விசா­ர­ணைக்­குழு அமைக்­கப்­பட்டு, ஒன்­றிய புல­னாய்­வுக் குழு­வின் தலை­வ­ராக இரா­ஜ­கோ­பா­ல­னும் அவ­ருக்கு கீழ் 5 அதி­கா­ரி­கள் நிய­மிக்­கப்­பட்­ட­னர். எதிர்­வி­னை­யாற்­றி­னார் கலை­ஞர். “அத்­த­னை­யும் பழைய புகார்­கள். அவற்­றுக்­கான பதில்­க­ளைச் சட்­ட­மன்­றத்­தி­லேயே அச்­ச­டித்து கொடுத்து விட்­டோம். இப்­போது விசா­ரணை கமி­ஷ­னி­டம் விளக்­கம் அளிக்க ஒரு வாய்ப்பு கிடைத்­துள்­ளது. ஆகவே, விசா­ரணை ஆணை­யத்தை வர­வேற்­கி­றேன்” என்று நெஞ்சு நிமிர்த்­திச் சொன்­ன­வர் தான் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">கலை­ஞர் மீது கொடுக்­கப்­பட்­டது பொய் புகார் என்­ப­தற்­குச் சாட்­சி­யாக, ஒன்­றிய அரசு நிய­மித்த காவல்­துறை அதி­கா­ரி­யான இரா­ஜ­கோ­பா­லன் தன்­னு­டைய பணி கால அனு­ப­வங்­கள் பற்றி எழு­திய புத்­த­கம் “என் காலச்­சு­வ­டு­கள்” எனும் நூலில் கீழ்க்­கண்­ட­வாறு  உண்­மைச் செய்­தி­க­ளைப் பதிவு செய்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.2">“கலைஞர் மீதான புகார் பட்­டி­யல் மிக­வும் நீள­மா­னது; பல பக்­கங்­கள் இருந்­தன; ஆனால், அவற்­றில் பல புகார்­கள் மேலெ­ழுந்த வாரி­யாக அமைந்­தி­ருந்­தன; கேள்­விப்­பட்­டதை வைத்தே புகார்­கள் தரப்­பட்­டி­ருந்­தன; புகார்ப் பட்­டி­ய­லில் தான் என்ன எழுதி இருக்­கி­றோம் என்­பது பற்­றிய செயல்­முறை நுட்­பங்­கள் ஏதும் எம்.ஜி.ஆர்க்கு இருக்­க­வில்லை; அவ­ரது நம்­பிக்­கைக்­கு­ரிய சிலர் தொகுத்­துத் தந்த புகார் பட்­டி­ய­லில் அவர் கையெ­ழுத்து மட்­டுமே போட்டு அனுப்பி இருக்­கி­றார் என்று தான் யூகிக்க முடி­கி­றது...”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">என்று மிகத் தெளி­வாக பொய் குற்­றச்­சாட்­டு­களை அம்­ப­லப்­ப­டுத்தி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">சிலர் மேடை­க­ளி­லும், வெளி­யி­லும் விஞ்­ஞான 
பூர்­வ­மான ஊழல் என்று சர்க்­கா­ரியா சொன்­ன­தாக, பொத்­தாம் பொது­வாக சொல்­கி­றார்ளே ஒழிய; எந்த இடத்­தி­லும் அப்­ப­டிப்­பட்ட வார்த்­தை­களை, வரி­களை தனது அறிக்­கை­யில் அவர் பயன்­ப­டுத்­த­வில்லை. தனிப்­பட்ட முறை­யில் எம்.ஜி.ஆரின் ஆத­ர­வா­ள­ராக  இருந்த; கலை­ஞ­ருக்கு எதி­ராக ‘மக்­கள் குரல்’ ஆசி­ரி­யர் டி.ஆர். எனும் டி. இரா­ம­சாமி என்­ப­வர் தான் எழு­திய வார்த்­தை­க­ளைப் பயன்­ப­டுத்தி வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">1977 ஆம் ஆண்டு மத்­தி­யில் ஆட்­சி­யும், காட்­சி­யும் மாறின. தேர்­த­லுக்கு முன்­னர் கலை­ஞர் மீது பொய் வழக்கு போட்­டார்­கள் விசா­ரணை கமி­ஷன் அமைத்­தது சட்­ட­மீ­ற­லா­னது என்­றெல்­லாம் பேசி வந்த தலை­வர்­கள் ஒன்­றி­யத்­தில் மொரார்ஜி தேசாய் தலை­மை­யில் கூட்­டணி ஜனதா கூட்­டணி அரசு அமைந்­த­வு­டன் இரண்டு ஆண்­டு­கள் கழிந்து சரண் சிங் பிர­த­மர் ஆன­போ­தும் இவர்­கள் இரு­வர் ஆட்­சி­யி­லும், கலை­ஞர் மீது போடப்­பட்ட சர்க்­கா­ரியா கமி­ஷன் விசா­ர­ணை­யைப் பற்றி என்ன என்று மூச்சு விட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">சர்க்­கா­ரியா கமி­ஷ­னில் குறுக்கு விசா­ரணை நேரில் ஆஜ­ரா­கா­மல் தவிர்த்­த­தற்­கும், சேலம் கண்­ணன் குறித்து எம்.ஜி.ஆர். அளித்த வாக்­கு­மூ­லம் பின்­னணி வர­லாற்­றுக் கார­ணங்­கள் என்ன? விசா­ர­ணைக் கமி­ஷன் நிய­மிக்­கப்­பட்ட போதி­லும், கலை­ஞர் வாளா­வி­ருந்து விட­வில்லை. தி.மு.க. சார்­பில் உச்­ச­நீ­தி­மன்ற  மூத்த வழக்­க­றி­ஞர் சாந்தி பூசன் உள்­ளிட்­டோர் புகார்­தா­ர­ரான எம்.ஜி.ஆரை நேரில் அழைத்து குறுக்கு விசா­ரணை (Cross Examination) செய்ய வேண்­டும் என வலு­வா­கக் கூறி­னார்­கள். ஆனால், ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­க­ளில்,” புகார் தாரர்­க­ளையோ, அல்­லது சி.பி.ஐ. சமர்ப்­பித்த சாட்­சி­யங்­க­ளையோ நேர­டி­யா­கத் தங்­க­ளுக்கு சாத­க­மாக குறுக்கு விசா­ரணை செய்ய போதிய உரி­மையோ அல்­லது உரிய சூழ்­நி­லையோ கமி­ஷன் தரப்­பில் வழங்­கப்­ப­ட­வில்லை” எனக் கூறித் திமுக தரப்பு சாந்தி பூசன் தலை­மை­யி­லான  வழக்­க­றி­ஞர்­கள் விசா­ர­ணை­யைப் புறக்­க­ணித்து வெளி­யே­றி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">கமி­ஷன் விசா­ரணை போது எழுத்­துப்­பூர்­வ­மான பிர­மாண பத்­தி­ரங்­கள் (Affidavits) ஆவ­ணங்­க­ளின் அடிப்­ப­டை­யிலோ முக்­கிய விசா­ரணை நகர்ந்­த­தால், எம்.ஜி.ஆர். நேரில் கூண்­டில் ஏறிக் குறுக்கு விசா­ரணை செய்­யப்­ப­டு­வ­தில் இருந்து விலக்கு அல்­லது வாய்ப்பு இல்­லாத நிலை உரு­வாக்­கி­னர். மேலும், திமுக தரப்பு இந்த கமி­ஷ­னின் சட்­ட­பூர்­வ­மான தன்­மையை எதிர்த்து சென்னை உயர்­நீ­தி­மன்­றத்­தில் நாடி­ய­போது இதில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.2">சேலம் கண்­ண­னைப்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">பற்றி எம்­ஜி­ஆர் என்ன கூறி­னார் தெரி­யுமா?   திமுக அரசு மீது ஊழல் புகார் ஆளு­ந­ரி­ட­மும், குடி­ய­ர­சுத் தலை­வ­ரி­ட­மும் புகார் மனு அளித்­த­வர் எம்­ஜி­ஆர். ஆனால், இந்­தப் புகார்­கள் குறித்த சட்­டப்­பூர்வ மற்­றும் நீதி­மன்ற விசா­ர­ணை க­ளின் போது எம்­ஜி­ஆர் அளித்த விளக்­கம் அர­சி­யல் வட்­டா­ரத்­தில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது என்­பதை மறந்து விட முடி­யாது. “எனக்கு தனிப்­பட்ட முறை­யில் எது­வும் தெரி­யாது; நீதி­மன்­றம் அல்­லது கமி­ஷன் ஆவ­ணங்­க­ளின் படி திமுக அமைச்­சர்­கள் மற்­றும் கலை­ஞர் கரு­ணா­நிதி மீதான ஊழல் புகார்­கள் குறித்த தனக்­குத் தனிப்­பட்ட முறை­யில் நேரடி ஆதா­ரங்­களோ அல்­லது விவ­ரங்­களோ எது­வும் எனக்­குத் தெரி­யாது” என்று எம்.ஜி.ஆர். கூறித் 
தப்­பித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.2">“எனக்கு இந்த விஷ­யங்­கள் விவ­ரங்­கள் அனைத்­தை­யும் சேலம் கண்­ணன் என்ற வழக்­க­றி­ஞர் தான் கொடுத்­தார்; அவர் கொடுத்த புகா­ரின் அடிப்­ப­டை­யில் அவர் கூறி­யதை நம்­பித்­தான் அந்­தப் புகார் மனு­வில் அதைக் குறிப்­பிட்­டுக் கையெ­ழுத்து போட்­டேன்”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">என்று எம்­ஜி­ஆர் விளக்­கம் அளித்­தார்! இத­னால், புகாரை எழுப்­பிய முக்­கிய தலை­வ­ரான எம்.ஜி.ஆரே  தனக்கு நேர­டி­யாக எது­வும் தெரி­யாது; வழக்­க­றி­ஞர் சேலம் கண்­ணன் சொன்­ன­தைத்­தான் மனு­வாக அளித்­தேன் எனக் கூறி­ய­தி­லி­ருந்தே இது  அர­சி­யல் உள்­நோக்­கம் கொண்ட பழி­வாங்­கல் நட­வ­டிக்கை என்று அவ் வாச­கங்­களை அடிக்­கோ­டிட்டு, கலை­ஞர் அமல்­ப­டுத்­தி­னார். எம்­ஜி­ஆர் போன்ற எதி­ரி­க­ளின் பொய் முக­மூ­டி­களை கழட்டி எறிந்து விமர்­சிக்­கும் வகை­யில் எடுத்­துக்­காட்­டிட முக்­கி­யக் கார­ண­மாக கலை­ஞர் அர­சி­யல் உல­கில் தலை­நி­மிர்ந்து நின்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">எம்­ஜி­ஆர் வகை­ய­றாக்­கள் கொடுத்த 54 புகார்­க­ளில் 27 புகார்­கள் எடுத்து விசா­ரிக்­கப்­பட்­டன. அதி­லும் இரண்டு மட்­டும்  ஒன்­றிய அரசு சிபிஐ விசா­ர­ணை­யில் புல­னாய்­வுத் துறை­யின் வழக்கை வழக்­க­றி­ஞர் நம்­பீ­சன் நடத்தி வந்த போது, அவரே நீதி­மன்­றத்­தில் ஆஜ­ராகி “கரு­ணா­நிதி மீது தொடுக்­கப்­பட்ட இரண்டு வழக்­கு­க­ளை­யும் தன்­னால் தொடர்ந்து நடத்த முடி­யாது; கார­ணம், அவற்­றுக்­கான தகுந்த ஆவ­ணங்­கள், ஆதா­ரங்­கள் ஏதும் இல்லை” என்று மனுத் தாக்­கல் செய்­தார்.  எனி­னும், தமி­ழக அரசு எம்­ஜி­ஆர் சார்­பில், மனுக்­களை வாபஸ் பெறக்­கூ­டாது என்று எதிர் தரப்பு மனு தாக்­கல் செய்து இரண்டு வழக்­க­றி­ஞர்­கள் வாதிட்­ட­னர். விசா­ர­ணை­யின் முடி­வில் 16 மே 1981 அன்று கலை­ஞர் மீது மத்­திய புல­னாய்­வுத் ­துறை தொடுத்த வழக்­கு­கள் தள்­ளு­படி செய்­யப்­ப­டு­கின்­றன என்று நீதி­மன்­றத்­தால் அறி­விக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">“எந்த இந்­திரா காந்தி 1977இல் இந்த வழக்­கு­க­ளால் திமு­கவை பூண்­டோடு அழித்­து­வி­ட­லாம் என்று திட்­ட­மிட்­டுச் செயல்­பட்­டாரோ, அதே இந்­திரா காந்தி 1980 இல் திமு­க­வின் ஆத­ர­வைப் பெற்று பிர­த­ம­ரா­கப் பொறுப்­பேற்ற பின்­னர், அவர் செலுத்­திய விஷத்தை அவரே திரும்ப எடுத்­துக் கொண்­டார்”..... என்று கலை­ஞர் அவர்­கள் உண்மை விளக்­கத்தை உரக்­கச் சொல்லி அர­சி­யல் உல­கத்­திற்கு அறி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">இந்­தி­யா­வில் நிலை­யான ஒன்­றிய அர­சாங்­கம் உரு­வாக்­கப்­பட1979 ஆம் ஆண்டு திமு­க­வு­டன் காங்­கி­ரஸ் தேர்­தல் உடன்­பாடு வைக்க இந்­திரா உறு­திப் பூண்­டார். அதற்­கா­கச் சென்னை வந்­தி­ருந்­தால் இந்­திரா. கடற்­கரை கூட்­டத்­தில் பேசு­வ­தற்கு முன்பு 30 செப்­டம்­பர் 1979 அன்று செய்­தி­யா­ளர்­கள் இந்­தி­ரா­வைச் சூழ்ந்து கொண்டு கேள்­வி­கள் எழுப்­பி­னார்­கள். சர்க்­கா­ரியா கமி­ஷன் பற்றி அதில் ஒன்று அமைந்­தி­ருந்­தது. “கரு­ணா­நிதி மீதும், திமுக அமைச்­சர்­கள் மீதும் ஊழல் செய்­தார்­கள் என்று நீங்­கள் தானே சர்க்­கா­ரியா கமி­ஷன் போட்­டீர்­கள்?. அந்­தக் கட்­சி­யு­டன் கூட்­ட­ணியா?....” என்று கேட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">அதற்­குப் பதி­ல­ளித்த இந்­திரா காந்தி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.2">“இந்­திய கம்­யூ­னிஸ்ட், அதி­முக கட்­சி­கள் கொடுத்த நச்­ச­ரிப்­புக் கார­ண­மா­கத்­தான் என்­னால் சர்க்­கா­ரியா கமி­ஷன் போட வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டது...”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">என்று இந்­திரா காந்தி நீண்ட விளக்­கம் கொடுத்­தார். மேலும் அவர் கூறும்­போது,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.2">“கமி­ஷன்­கள் என்­பவை வேடிக்­கை­யா­னவை!கமி­ஷன் நடத்­தும் விசா­ர­ணை­க­ளைச் சினிமா பட­மாக எடுத்­துத் திரை­யிட்­டுக் காட்­டி­னால், மக்­க­ளுக்கு மிக­வும் பொழு­து­போக்­காக இருக்­கும்!”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">என்று ‘நச்’ என்று இந்­திரா காந்தி விளக்­கம் சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">அன்று கடற்­கரை மாநாட்­டில்  கலை­ஞரை வைத்­துக்­கொண்டு பேசும் பொழுது, “என்னை எதிர்ப்­ப­தாக இருந்­தா­லும், ஆத­ரிப்­ப­தாக இருந்­தா­லும் கரு­ணா­நிதி எப்­போ­தும்  துணிச்­ச­லாக உறு­தி­யாக செயல்­ப­டக் கூடி­ய­வர்; என் ஆட்­சி­யில் தவறு நடந்து விட்­டது; அதி­கா­ரி­க­ளால் அது போன்ற தவ­று­கள் நடந்து விட்­டன; நாங்­கள் தவறு செய்­தி­ருக்­கி­றோம்; அதை உணர்ந்து நாங்­கள் செய்த தவ­று­களை ஏற்­றுக்­கொண்டு, அந்­தத் தவ­று­க­ளால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளி­டம் நாங்­கள் மன்­னிப்பு கேட்­டுக் கொள்­கி­றோம்; நான் செய்த குற்­றங்­கள் மீண்­டும் நடை­பெ­றாது; ஆகவே, அதற்­காக நான் வருத்­தம் தெரி­விக்­கி­றேன்...” என்று மேலும் இந்­திரா காந்தி  பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">உச்ச நீதி­மன்­றத்­தின் மூத்த வழக்­க­றி­ஞர் சாந்தி பூசன் தலை­மை­யில் கழ­கத்­திற்­காக வாதா­டிய வழக்­க­றி­ஞர்­கள் குழு­வின் குறுக்கு விசா­ர­ணையை ஏற்­றுக் கொள்­ளாத சட்ட நீதி­யற்ற நிலை­யில் தான்; சர்க்­கா­ரியா கமி­ஷனை அன்­றைக்­குப் புறக்­க­ணித்து வெளி­யே­றி­யது. அதன் பின்­னர் சர்க்­கா­ரியா கமி­ஷ­னு­டைய முடி­வு­கள் மீது என்ன நட­வ­டிக்கை எடுக்­க­லாம்? என்­பது பற்­றித் தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்­க­ளு­டைய அதி­முக ஆட்­சி­யி­லேயே ஆராய்ந்து அதன்­படி முடிவு எடுக்­கப்­பட்டு; வீரா­ணம் போன்ற பெரிய புகார்­களை, அதிலே பண வரவு, செலவு நடை­பெற்­ற­தா­கக் கூறப்­பட்ட புகா­ரைச் சர்க்­கா­ரியா கமி­ஷனே ஏற்­றுக்­கொள்­ளாத அந்­தச் சூழ­லில்; அந்­தப் புகார்­கள் குறித்த நட­வ­டிக்கை எடுக்க அன்­றைய முத­ல­மைச்­சர் எம்.ஜி.ஆர், அப்­போது 
அட்­வ­கேட் ஜென­ர­லாக இருந்த வி.பி. இரா­மன் அவர்­க­ளி­டம் எழுத்­துப்­பூர்­வ­மாக ஆலோ­சனை கேட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">அதற்கு அரசு தலைமை வழக்­க­றி­ஞர் வி.பி. இரா­மன் முதல்­வர் எம்.ஜி.ஆர்.க்கு எழு­திய கடி­தத்­தில், தமது சட்­டக் கருத்தை எழு­திப் பதிவு செய்­தி­ருந்­தார். Thiru. V.P. Raman the then Advocate General had offered opinion that it was neither advisable or possible to launch prosecution successfully on anybody for mere improperiety irregularity (அன்­றைய அட்­வ­கேட் ஜென­ரல் வி.பி. இரா­மன் இது குறித்து சட்ட ஆலோ­சனை வழங்­கும் போது, யார் மீதும் அதி­கார ஒழுங்­கீ­னத்­திற்­கா­கவோ, அதி­கார துஷ்­பி­ர­யோ­கக் குற்­றத்­திற்­கா­கவோ வழக்கு  தொடர்­வ­தற்கு இய­லாது என்­ப­தோடு, அதற்­குச் சாத்­தி­யக்­கூ­று­க­ளும் இல்லை என்று 15-.11.-1977 அன்று தன்­னு­டைய கருத்தை எம்.ஜி.ஆர். அர­சுக்­குக் கூறி­யி­ருந்­தார்) என்­பது நினைவு கூரப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">அதற்­குப் பின்­னர் மீண்­டும் ஒரு­முறை 1979 ஆம் ஆண்டு முத­ல­மைச்­சர் எம்­ஜி­ஆர் அட்­வ­கேட் ஜென­ரல் வி.பி.இரா­ம­னி­டம், அதன் மீது வழக்கு தொட­ர­லாமா? என்­ப­தற்கு உரிய கருத்­துரை வழங்­கு­மாறு மீண்­டும் கேட்­டார். அப்­போ­தும் அர­சுத் தலைமை வழக்­க­றி­ஞர்  வி.பி இரா­மன், 24.10.1979 அன்று தெரி­வித்த கருத்­து­ரை­யில் ....”With the exception of allegation No. 11 (b) which related to Aerial spraying none of the Other allegations enquired into by the Sarkaria commission could be successfully pursued further In a criminal prosecution” (ஏரி­யல் ஸ்ப்ரேயிங் சம்­பந்­தப்­பட்ட 11 (பி) குற்­றச்­சாட்­டி­னைத் தவிர, சர்க்­கா­ரியா கமி­ஷ­னால் விசா­ரிக்­கப்­பட்ட வேறு எந்­தத் குற்­றச்­சாட்டு சம்­பந்­த­மா­க­வும்,குற்ற வழக்கு தொடர்ந்து வெற்றி பெற இய­லாது”) என்று தனது கருத்தைஇரண்­டா­வது முறை­யா­க­வும் அர­சுத் தலைமை வழக்­க­றி­ஞர் தெரி­வித்­து­ விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">ஏரி­யல் ஸ்ப்ரேயிங் வழக்கை பொறுத்­த­வ­ரை­யில் ஒன்­றி­யக் குற்­றப் புல­னாய்­வுத் துறை­யி­ன­ரால் (CBI) விசா­ரிக்­கப்­பட்டு வந்த ஏரி­யல் ஸ்ப்ரேயிங் வழக்­குச் சாட்­சி­யங்­கள், சான்­று­கள், ஆவ­ணங்­கள் இல்­லா­த­தால் மத்­திய அர­சி­னா­லேயே அவ்­வ­ழக்­கும்  திரும்­பப் பெறப்­பட்டு விட்­டது. இது­தான் சர்க்­கா­ரியா கமி­ஷன் மீதான சூழ்­நிலை. இதிலே 1988 ஆம் ஆண்டு வரை எனப் பல ஆண்­டு­க­ளாக எம்­ஜி­ஆர் ஆட்சி நடந்த வந்த போதும், சர்க்­கா­ரியா கமி­ஷன் சம்­பந்­தப்­பட்ட கோப்­பிலே எந்த முடி­வும் எடுக்­கப்­ப­டா­மல் இருந்­தது. அதற்கு கார­ணம் அர­சுத் தலைமை வழக்­க­றி­ஞர் இந்த வழக்­கில் நிரு­பிக்­கத் தகுந்த போது­மான சாட்­சி­யங்­கள், சான்­று­கள்,  ஆவ­ணங்­கள்  எது­வும் இல்லை என்று அளித்த சட்­டக் கருத்து அடிப்­ப­டை­யிலே சர்க்­கா­ரியா கமி­ஷன் சம்­பந்­தப்­பட்ட கோப்­பிலே எந்த முடி­வும் எடுக்­கப்­ப­டா­மல் விடப்­பட்­டது. கலை­ஞர் 1989இல் ஆட்­சிக்கு வந்த பிறகு இவற்­றை­யெல்­லாம் பதிவு செய்து அர­சின் கோப்பை வழக்­க­றி­ஞர்­கள் சட்­டக் கருத்தை வைத்து  முடி­வுக்­குக் கொண்டு வந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">DMK ministry which came to power the state in January 1989 dropped further action on this subject on 23.-11.-1989 the basis on the opinion offered by the then Advocate General on 15-.11. 1977 and 23-.10.-1979 and as the previous election Government had not closed the case but kept them pending without a decision for a number of years ... (1989 ஜன­வரி மாதம் இந்த மாநி­லத்­தில் ஆட்­சிக்கு வந்த திமுக அமைச்­ச­ரவை அதற்கு முன்­பி­ருந்த தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அர­சால் எந்த முடி­வும் எடுக்­கப்­ப­டா­மல் பல ஆண்டு காலத்­திற்கு கிடப்­பிலே போட்டு வைத்­தி­ருந்த கோப்­பில் ஏற்­கெ­னவே இருந்த அரசு அட்­வ­கேட் ஜென­ரல் அவர்­கள் 15-.11.-1977 அன்­றும், 23-.10.-1979 அன்­றும் தெரி­வித்­தி­ருந்த சட்­டக் கருத்­துக்­களை அடிப்­ப­டை­யாக வைத்து தொடர் நட­வ­டிக்­கைக்கு எது­வும் எடுக்­கத் தேவை­யில்லை என்று முடிவு எடுக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">இது பற்­றி­யெல்­லாம் அர­சி­ய­லில் எந்­தக் கொள்­கை­யும் கோட்­பா­டும் இல்­லாத கோமா­ளி­யாக கோட்­டை­யில் ஏறி இருக்­கும் ஜோசப் விஜய், அர­சி­யல் அரிச்­சு­வடி அறி­யாத நிழல் தேடி ஒதுங்­கிய கோய­பல்ஸ்­க­ளான நிர்­மல் குமார்­கள், ஆதவ் அர்­ஜு­னாக்­கள் அறி­வார்­களா? சட்ட மன்­றத்­தைச் சண்டை மன்­ற­மாக மாற்றி வரும் இவர்­கள் ஆதா­ரம் அற்ற, ஆவ­ண­மற்ற குற்­றச்­சாட்­டு­க­ளைத் கூறி சட்­ட­மன்­றத்தை மாண்பை கெடுத்து வரு­வ­தோடு, மக்­கள் மன்­றம் பிரச்­சி­னை­கள் பேசா­மல் சட்­ட­மன்­றத்தை சாக்­க­டை­யாக ஆக்கி வரு­கி­றார்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.2">“சரக்கு இருந்­தால் அவிழ்த்து விடு! இல்லை என்­றால், சலாம் போட்டு ஓடி­விடு!”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">என்று தற்­குறி ஜோசப் விஜய் தலை­மை­யி­லான அமைச்­சர்­க­ளுக்­குத் திமுக அறை­கூ­வல் விடு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">முர­சொலி மாற­னைப் பற்றி பேசு­வ­தற்கு என்ன யோக்­கி­யதை இருக்­கி­றது ஜோசப் விஜய்க்கு? முர­சொலி மாறன் தமிழ் மொழி காக்க  இந்­தித் திணிப்பை எதிர்த்­துச் சிறை சென்ற மாண­வர் பட்­டா­ளத்­தில் ஒரு­வர். ‘மாநில சுயாட்சி’ ‘திரா­விட இயக்க வர­லாறு’ ‘ஏன் வேண்­டும் இன்­பத் திரா­வி­டம்?, ‘அபாய விளக்கு’ ‘நாளை நமதே’ என்­பன போன்ற பல அர­சி­யல் நூல்­கள் சமு­தா­யக் கட்­டு­ரை­கள் எழுதி அறி­வுச் செல்­வங்­களை வெளி­யிட்­ட­வர். அண்ணா அவர்­க­ளால் பாராட்­டப்­பட்­ட­வர், தான் நின்ற தென் சென்­னைப் பாரா­ளு­ மன்ற உறுப்­பி­னர் பத­வியை விட்டு விலகி முர­சொலி மாறன் நிற்­ப­தற்கு முன்­மொ­ழிந்­த­வர் பேர­றி­ஞர் அண்ணா!. நெருக்­கடி நிலை­யின் போது சென்னை சிறைச்­சா­லை­யில் அடைக்­கப்­பட்­டுச் சிறை அதி­கா­ரி­க­ளால் தாக்­கப்­பட்ட போது, அவ­ரின் முது­கெ­லும்பு முறிக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">அவர் உடைந்த முது­கெ­லும்­பு­வு­டன் தான் கடை­சி­வரை மேல் கோட்டு உடை உடுத்தி நட­மா­டிக் கொண்­டி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">ஒன்­றிய அமைச்­சர் பொறுப்­பேற்று தோஹா மாநாட்­டில் பின் தங்­கிய  வள­ரும் (Developing countries) ஏழை நாடு­க­ளுக்­கான  கல்வி, சமூக, பொரு­ளா­தார  மேம்­பாட்­டுக்­காக ஓங்­கிக் குரல் கொடுத்­த­வர். அமெ­ரிக்கா, பிரிட்­டன், பிரான்ஸ், சீனா, ரஷ்ய, ஜப்­பான் போன்ற வளர்ந்த நாடு­க­ளி­ட­மி­ருந்து வள­ரும் நாடு­களை  காப்­பாற்­றி­ய­வர். அந்த முர­சொலி மாறன் மீது ஆதா­ரம் அற்ற  குற்­றம் சுமத்தி ஜோசப் விஜய் மற்­றும் அவ­ரு­டைய சகாக்­கள் பேசு­வது எந்த விதத்­தில் நியா­யம் இருக்­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">முர­சொலி மாறன் ஊழல் செய்­தார் என்­றால், அவ­ரு­டைய மகன்­கள் கலா­நிதி மாறன் , தயா­நிதி மாறன் தயா­ரித்த சன் பிக்­சர்ஸ் (Sun Pictures) தயா­ரிப்­பில், “’சர்க்­கார்’,  ‘பீஸ்ட்’ என்ற படங்­க­ளில் நடித்து அதற்­கான தொகையை வாங்­கித் தன்னை ஸ்டாராக உயர்த்­திக் கொண்­டது எப்­படி? ஊழல்­வா­தி­யின் குடும்­பப் பணம் என்று நினைக்­க­வில்­லையே ஏன்? எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலி­னின் ‘ரேட் ஜெயிண்ட் மூவிஸ்’ (Red Giant Movies) தயா­ரித்த ‘குருவி’ என்ற படத்­தில் தன்னை உயர்த்தி ஸ்டாராக்கி கொண்­டது எப்­படி மூடர்­களே... முட்­டாள்­களே...? இதற்கு பதில் சொல்ல தயாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">கலை­ஞ­ரைப் பற்றி ஒரு­மை­யில் பேசும் ஜோசப் விஜய் சர்க்­கா­ரியா குற்­ற­வாளி கலை­ஞர்(?) என்று சொன்­னால் கலை­ஞர் எழு­திய ‘நீதிக்­குத் தண்­டனை’ (1987), ‘சட்­டம் ஒரு விளை­யாட்டு’, (1987), ‘சட்­டப்­படி குற்­றம்’ (2011) என்­பன போன்ற  படங்­க­ளுக்கு உன் தந்தை பெரு­மைக்­கு­ரிய எஸ்.ஏ. சந்­தி­ர­சே­கர் இயக்­கு­ந­ராக இருந்து செயல்­பட்­டது ஏன்? அவை எல்­லாம் சர்க்­கா­ரியா கமி­ஷன் குற்­ற­வாளி எழு­திய கதை வச­னம், படம் என்று தெரி­ய­வில்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">ஆயி­ரம், ஆயி­ரம் மக்­கள் பிரச்­சி­னை­கள் மண்டி கிடக்­கும் போது; மக்­கள் அறி­யா­மல் தங்­கள் வாக்­கு­களை அளித்­த­தன் கார­ண­மாக கோட்­டை­யில் கோமா­ளி­யாக உட்­கார்ந்து கொண்டு; அது தீர்க்க வக்­கில்­லாத- தெம்பு இல்­லாத தற்­கு­றிக்­க­ளுக்கு எல்­லாம் வாய்­ஜா­லம் ஏன்? வம்பு, வழக்­கு­கள் ஏன்? வர­லாறு தெரி­யா­மல் கலை­ஞர், அவ­ரது குடும்­பம், தி.மு. கழ­கம் இவற்­றின் மேல் புழுதி வாரித் தூற்­றி­னால் தி.மு.க. தொண்­டன் எவ­னும் பொறுத்­துக் கொண்டு புழுப்­போல் இருக்க மாட்­டான்; புதர் விட்டு வெளி கிளம்­பிய பொங்­கும் புலி­யாக மாறு­வான்! பூகம்­பம் போல் பிர­ள­யத்தை ஏற்­ப­டுத்­து­வான். எந்­தப் பூச்­சாண்­டி­க­ளுக்­கும் அஞ்ச மாட்­டான்!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>