<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="14/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,66,957,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Sep 14 2026 03:32:49 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260914T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="14092026-CBE-03" position.sequence="03" ex-ref="14092026-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">சமூக வலைதளத்தில் வலம் வருகிறது!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">யோக்கியத்தனத்தின் உச்ச அரசியல் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்த இரு நாட்கள் முன்பாக ஆரம்பித்த "ஸ்டாலின் - மிசா - கைது'' இவைகளே முக்கிய பேசுபொருளாகவும் விவாத பொருளாகவும் இருக்கின்றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இதுவா இப்போது பேசு பொருள்? மின் கட்டணம் திருட்டுத்தனமாக நான்கு மடங்கு உயர்ந்து விட்டதை விவாதிக்க ஆள் இல்லை. குறுவை சாகுபடி இல்லாமல் போயாச்சு. பேச நாதியில்லை. சம்பாவுக்கு தண்ணீர் திறக்கும் ரீல்ஸ் போட ரூ.6 கோடி செலவு. அது இன்னும் கடைமடைக்கு வந்தபாடில்லை. கடுமையான விலையேற்றம். அதை பேச துப்பில்லை. பரந்தூர் விமானநிலையம் ரத்து. அதை பேச யாருக்கும் திராணி இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால் ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை என ஒரு விஷயம் எல்லாவற்றையும் தூக்கி முழுங்கி வருகின்றது. இது யார் பாணி அரசியல்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இதே விஷயத்தை ஆர்.எஸ்.எஸ். மாஃபா பாண்டியராஜன் ஆரம்பித்து வைத்த பொய் இது. அப்போது அவர் அ.தி.மு.க. இப்போது எந்த கட்சி என தெரியவில்லை?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்போது நான் ஒரு சினிமா உதாரணத்தை சொல்லி விடுகின்றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">L.K.G என்று ஒரு திரைப்படம். ஆர்.ஜே.பாலாஜி நடித்த படம். அதிலே அவன் ஒரு கவுன்சிலர்தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த ஆர்.ஜே.பாலாஜிக்கு எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்கிற ஆசை வருகின்றது. அவன் அப்படியொன்றும் யோக்கியமான அரசியல்வாதி அல்ல. ஆனால் ஆசை யாரை விட்டது.  அந்த ஊரில் ஒரு யோக்கியமான அரசியல்வாதி ஜே.கே.ரித்தீஷ். அவனுக்கும் கணிசமான வாக்கு வங்கியும், மக்கள் செல்வாக்கும் உண்டு. அங்கே அந்தக் கட்சியின் தலைவர் இறந்தமையால் இடைத்தேர்தல் வருகின்றது. ரித்தீஷ் புதிய தலைவர் ராம்குமார் சிவாஜிக்கு எதிரணி. அதனால் இந்த டுபாக்கூர் ஆர்.ஜே.பாலாஜிக்கு சீட் கிடைக்கின்றது. ரித்தீஷ் தன் சுய செல்வாக்கு காரணமாக சுயேச்சையாக நிற்கின்றான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த நிலையில் ஆர்.ஜே.பாலாஜி ஒரு தேர்தல் வியூக கம்பெனியுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு தேர்தலை சந்திக்கின்றான். அந்த கம்பெனி முதலில் ஜே.கே.ரித்தீஷின் இமேஜை பொதுமக்களிடமிருந்து காலி செய்ய திட்டம் தீட்டுகின்றது. ரித்தீஷுக்கு தேசியகீதம் பாடத் தெரியவில்லை போன்ற பல்வேறு  விஷயங்களை ரீல்ஸ் போட்டு மக்களிடம் ரித்தீஷ் இமேஜை உடைக்கின்றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ரித்தீஷ் அதிகபட்ச பதட்டத்தால் தேர்தல் வேலையை கவனிக்க இயலாமல் தோற்றுப்போகின்றான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நிற்க.... இப்போ மேட்டருக்கு வருவோம். இந்த படம் வெளிவந்த பின்னர் தான் ஆர்.எஸ்.எஸ் அதே ஆயுதத்தை தமிழ்நாட்டில் கையிலெடுத்து தி.மு.க. மீது வீச முடிவு செய்கின்றது. அதை தன் நேரடி ஆர்.எஸ்.எஸ்.காரனை கொண்டு பரப்பாமல் தன் ஏஜண்டுகளை எல்லா கட்சியிலும் வைத்துள்ளதே அவனுங்களை கொண்டு பரப்ப முடிவு செய்கின்றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சரி அப்படிப்பார்த்தால் தி.மு.க. மீது என்ன சொல்லலாம்? நேரிடையாக அதன் தலைவர் ஸ்டாலினையே தாக்கி விடலாம் என நாக்பூர் முடிவெடுக்கின்றனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சரி... ஸ்டாலினின் பலம் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மிசாவில் உள்ளே போனது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதையே எடுத்துக்கொண்டனர். ஸ்டாலின் மிசாவில் எப்படி கைதானார்? எத்தனை வயதில்? எல்லாமே இணையம் முழுக்க கொட்டிக்கிடந்தன. அதையே உடைக்கும் அளவு அ.தி.மு.க.வில் இருந்த தங்கள் ஏஜெண்ட் மாஃபா பாண்டியராஜனை விட்டு  ஸ்டாலின் ஜெயிலுக்கு போனது உண்மை. ஆனா மிசாவில் போகலை. பொம்பள விவகாரத்திலே உள்ளே போனார் என போகிற போக்கில் அடிச்சு விட்டுட்டு போய்விட்டான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அது ஒரு ரிலே ரேஸ் போலத்தான். மாஃபா கிட்டேயிருந்து அந்த குச்சி அண்ணாமலை வசம் செல்கின்றது... அடுத்தடுத்து செல்கின்றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க.வினருக்கு அதிர்ச்சி அல்ல பதட்டம் வருகின்றது. ஸ்டாலின் மிசாவில் உள்ளே போன டாக்குமெண்ட்ஸ் எல்லாவற்றையும் எம்.எம்.அப்துல்லா வெளியிடுகின்றார். பின்னர் ஒவ்வொறு தி.மு.க.வினரும் அப்துல்லா விடமிருந்து அந்த குச்சியை பிடுங்கிக்கொண்டு ரிலே ரேஸ் ஓடுகின்றனர். கிட்டத்தட்ட ஒன்னரை வருஷம் ஸ்டாலின் மிசாவில் தான் உள்ளே போனார் என நிரூபித்தனர். இதனிடையே பல கிளைக்கதைகளை அந்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் உருவாக்கின. ஜெயில் ஐ.ஜி வித்யாசாகரின் மகளை இவர் கெடுத்துட்டார் என்றனர். (அடேய்... சிறைத்துறைக்கு ஏதுடா ஐஜி போஸ்ட்) உடனே தி.மு.க.வினர் வித்யாசாகருக்கு பெண்ணே கிடையாது என நிரூபிக்க ஓடினர். உடனே அவர்கள் உறவுக்கார பெண் என்றார்கள். ஒரு வழியாக தி.மு.க.வினர் வித்யாசாகர் ஏன் ஜெயிலில் தி.மு.க.வினர் மீது கொலைவெறியில் இருந்தான் என கண்டுபிடித்தனர். அதாவது பச்சையப்பன் அறக்கட்டளை தேர்தலில் வித்யாசாகரின் அப்பனை தி.மு.க.வின் வெப்பன் என்.வி.என். சோமு தோற்கடித்தமையால் அதற்கு பழிவாங்கவே வித்யாசாகர் இப்படி சைக்கோவாய் மாறிவிட்டார் என கண்டுபிடித்து சொன்னார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆக முழுமையாய் ஒன்னரை ஆண்டுகாலம் தி.மு.க.வினர் இதிலேயே கிடந்தனர். அந்த கேப்பிலாவது தாமரை மலர்ந்ததாயெனில் அப்பவும் தாமரை மலராது என்பதை புரிந்து கொண்டனர். தி.மு.க.வுக்கு அந்த ஒன்னரை ஆண்டுகாலம் உழைத்த பலன் என்ன தெரியுமா? அண்ணாமலை என்னும் பையன் ஒரு பொய்யன் என்பதை தி.மு.க. மக்களிடம் கொண்டு சேர்த்தது. இது தான் தி.மு.க. கண்ட பலன். எல்லாம் முடிந்தது. இதல்லாம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆன பின்னே  இப்போது அதே பொய்யை உசுப்பிவிட்டது யார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே ஆர்.எஸ்.எஸ்.தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கின்றோம் அந்த தலைமை தற்குறியான் விஜய் நடித்துக்காட்டிய உரையை தயாரித்தது எத்தியோப்பியா மண்டையன் ஆதவ் அர்ஜுனா என்று! இல்லை நாக்பூர் வழிகாட்டுதலின் படி அதை தயாரித்தது பிறவி ஆர்.எஸ்.எஸ். காரன் நிர்மல்குமார் தான். ஆதவ் தயாரித்திருந்தால் தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மருமகள் ஒரு வேலைக்காரப்பெண்ணை சித்திரவதை செய்ததை அந்த உரையில் எழுதியிருக்க மாட்டான். ஏனெனில் அந்த மருமகள் ஆதவின் மாமியார் லீமாரோசின் அண்ணன் மகள். ஆகவே அந்த உரையை தயாரித்தது ஆர்.எஸ்.எஸ். கும்பல். அதை தற்குறியானுக்கு டைரக்ஷன் செய்தது ஆர்.எஸ்.எஸ். காரன்  நிர்மல்குமார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த உரையில் தான் ஸ்டாலின் அவர்கள் மீது 3 ஆண்டுகள் முன்பாக ஆர்.எஸ்.எஸ் பரப்பிய அந்த தோற்றுப்போன பொய்யை மீண்டும் திணிக்கின்றான் நிர்மல் குமார். ஸ்டாலின் மிசாவில் சிறைக்கு போகவில்லை பொம்பளை மேட்டரில் உள்ளே போனார் என எழுதித்தருகின்றான் அந்த ஆர்.எஸ்.எஸ்காரன் நிர்மல்குமார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தற்குறி விஜய் பயப்படுகின்றான் அதைப்படிக்க. ஆனாலும் கட்டாயப்படுத்தப்படுகின்றான் நாக்பூர் கும்பலால்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனாலும் தற்குறி அதை படிக்கும் போது "மிசாவில் நீங்க உள்ளே போன ஹுஸ்டரி தெரியும்'' என பூசி மொழுகுகின்றான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஐந்து வயது பையனை "தீ மிதிப்பதாக'' அப்பன் வேண்டிக்கொள்வான். பையனும் கட்டாயத்தின் பேரில் மஞ்சள் உடையெல்லாம் போட்டுக்கொண்டு கையில் வேப்பிலை எடுத்துக்கொண்டு அப்பன் கையை பிடிச்சுகிட்டு வருவான். நெருப்பு கிட்டே வந்ததும் பயந்து அழுவான் அந்த பையன். ஆனால் அப்பன்காரன் ""சாமி தண்டிச்சுடும்'' என பயந்து தானே அந்த சிறுவனை தூக்கிக்கொண்டு தீமிதிப்பான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அது போலவே முதல் நாள் தற்குறி பயந்து போய் பூசி மொழுகிய மிசா ஹிஸ்டரி விஷயத்தை அடுத்த நாள் நிர்மல்குமார் சட்டசபையில் அப்பட்டமாக ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை என சொல்லி பதிய வைக்கின்றான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உடனே தி.மு.க.வினர் டிடென்ஷன் ஆர்டரையும், ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆன டிஸ்சார்ஜ் ஆர்டரையும், ராஜ்யசபா பேச்சுகள், ஓய்வு பெற்ற ஜெயில் அதிகாரிகளின் பேட்டிகள் என போராடுகின்றனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால் தற்குறி கும்பலும் டிடென்ஷன் ஆர்டரில் ஒரு பாரா சேர்த்து AI வழியாக தயார் செய்து மல்லுக்கு நிற்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் நிர்மல்குமார் புன்னகைக்கின்றான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தன் ஒரிஜினல் கட்சியால் முடியாததை இந்த அடிமை ஏவல் நாய்கள் கொண்டு நிறைவேற்றுவதில் தான் வெற்றி பெற்றதாக ஆர்.எஸ்.எஸ் கும்பல் மகிழ்கின்றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மதியம் 1.30 க்கு சட்டசபை முடிகின்றது. மாலை 4.00 மணிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வருகின்றது. ஆக இந்த 1 மாதகாலத்துக்கு தி.மு.க.வினரை இடைத்தேர்தல் வேலை செய்யவிடாமல் மிசா விஷயத்தில் கட்டிப்போடவே இந்த முழு நாடகமும் நடக்கின்றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதற்கெல்லாம் ஒரு முடிவே வராதா? இந்த மிசா விஷயம் மட்டும் தானா? இன்னும் பல விஷயங்கள் அப்பட்டமான பொய் பரப்புரையில் ஆர்.எஸ்.எஸ் இறங்கும். தி.மு.க.காரன் கண்ணில் ரத்தம் வர அழும் அளவுக்கு அவதூறு பரப்பும் அந்த ஆர்.எஸ்.எஸ். முன்பு அது அண்ணாமலை குரூப்பால் தன் பி.ஜே.பி. வழியாய் செய்ய நினைத்தது. ஆனால் பி.ஜே.பி. என்றாலே பொய் தான் என்கிற நேரேட்டிவில் தி.மு.க. ஜெயித்து விட்டது. அதனால் அது எடுபடாது. அதனால் இனி தற்குறியான் கட்சி வழியாக அதை ஆர்.எஸ்.எஸ் செய்யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதை தி.மு.க. எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதே மில்லியன் டாலர் கேள்வி. இதோ போராட்டம் வைத்துள்ளது தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தற்குறியான் ஆட்சி வந்ததும் போதை பவுடர் அமைச்சரை நீக்கச்சொல்லி தி.மு.க. சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்தது. சிறைக்கும் போனோம். ரிசல்ட் என்ன? அது போலத்தான் ஆகும் நாளைய போராட்டமும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதற்கு என்ன தான் முடிவு?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க. தலைவர் அண்ணன் ஸ்டாலின் அவர்களே உயர்நீதிமன்றத்தை நாடி "court direction'' கேட்க வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">"நான் இந்த தேதியில் மிசாவில் சிறைக்கு சென்றேன். அதற்கான சப்போர்டிங் டாக்குமெண்ட்ஸ் இணைத்துள்ளேன். என் மீது அவதூறாக சட்டசபையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ஒருவரே பேசி பதியவைக்கின்றார். அதில் கோர்ட் தலையிட இயலாது என்றாலும் அந்த முதலமைச்சர் மற்றும் அமைச்சரின் அந்த பேச்சுகளால் அந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி சேர்ந்த சிலர் மற்றும் பலர் அமைச்சர்களின் அந்த பேச்சை நம்பி என்னை சமூகவலைதளங்களில் அவதூறு செய்கின்றனர். நான் இதற்கு அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடுப்பதா, மானநஷ்ட வழக்கு தொடுப்பதா என்பது குறித்து ஒரு நீதிமன்ற ஆலோசனை தர வேண்டுகிறேன்'' என மனுதாக்கல் செய்ய வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">உயர்நீதி மன்றம் அரசு ஆவணங்கள் சிறைத்துறை மற்றும் காவல்துறைக்கு சம்மன் அனுப்பி இவர் மிசாவில் சிறை சென்றதை உறுதி செய்த பின்னர் "நீங்கள்  தனி மனுவாக போட்டு அவதூறு வழக்கு தொடுக்கலாம்'' என டைரக்சன் கொடுப்பார்கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதன் பின்னர் மற்றதை பார்த்துக்கொள்ள இயலும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது ஒன்றுதான் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருக்கும் ஒரே ஆப்ஷன்!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>