<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="14/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,32,958,1070" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Sep 14 2026 03:49:18 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260914T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="14092026-MDU-08" position.sequence="08" ex-ref="14092026-MDU-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">மதுரை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">14.09.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="33">மிசா சட்டம் போன்று ஒரு நெருக்கடி வந்தால்,</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="33">  </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="63">முதலமைச்சர் விஜய் கட்சியை கலைத்து விட்டு ஓடி விடுவார்! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="41">சென்னை  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup865282_08_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup865226_08_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup865155_08_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="R.S.Bharathi_08_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சென்னை, செப்.14 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் முன்­னாள் முத­ல­மைச்­ச­ரும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­வ­ரு­மான மு.க.ஸ்டாலின் அவர்­கள் குறித்து அவ­தூ­றா­க­வும் தரம் கெட்ட வகை­யி­லும் பேசிய முத­ல­மைச்­சர் விஜ­யைக் கண்­டித்து சென்னை கிழக்கு மற்­றும் வடக்கு, வட­கி­ழக்கு ஆகிய மாவட்ட தி.மு.க. சார்­பில் மாபெ­ரும் கண்­டன ஆர்ப்­பாட்­டம் சென்னை மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கம் அருகே  நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த கண்­டன ஆர்ப்­பாட்­டத்­திற்கு சென்னை கிழக்கு மாவட்­டச் செய­லா­ளர்  
பி.கே.சேகர் பாபு எம்.எல்.ஏ. தலைமை தாங்­கி­னார்.  சென்னை வடக்கு மாவட்­டப் பொறுப்­பா­ளர் ஆர்.டி,சேகர், வட­கி­ழக்கு மாவட்­டச் செய­லா­ளர் மாத­வ­ரம்  எஸ். சுதர்­ச­னம், மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர் இரா. கிரி­ரா­ஜன் ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த ஆர்ப்­பாட்­டத்­தில் தி.மு.க. அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி பங்­கேற்று கண்­டன உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவர் பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் சபை மாண்­பு­களை மறந்து,  சபை விதி­களை மீறி தரம் கெட்ட வகை­யில் உரை­யாற்­றிய தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் விஜய்­யின் செய­லைக் கண்­டித்து இந்த ஆர்ப்­பாட்­டம் நடை­பெ­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">விஜ­யின் அநா­க­ரி­கப் பேச்சு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">கழ­கத் தொண்­டன் ஏற்க மாட்­டான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாயை குளிப்­பாட்டி நடு­வீட்­டில் வைத்­தா­லும் , அது வாலை ஆட்­டிக்­கொண்டு எதையோ தின்­ப­தற்­கு­தான் வெளியே ஓடு­மாம் என்­கிற பழ­மொழி போல், விஜ­யின் நட­வ­டிக்கை உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­ல­மைச்­சர் விஜய் தனது பழைய புத்­தியை காட்­டும் வகை­யில் சட்­ட­மன்­றத்­தில் செயல்­பட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இங்கே பேசிய மாவட்­டச் செய­லா­ளர்  
பி.கே.சேகர்­பாபு மிக­வும் ஆவே­சப்­பட்டு பேசி­னார். அவர் மட்­டு­மல்ல எங்­கள் கழ­கத் தலை­வரை மரி­யாதை குறை­வாக பேசி­னால் கடைசி கட்ட தி.மு.க. தொண்­டன் 
கூட அதனை ஏற்க மாட்­டான், கொதித்­தெ­ழு­வான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­ல­மைச்­சர் விஜ­யின் தரங்­கெட்ட பேச்சு தி.மு.க. காரர்­கள் மத்­தி­யில் மட்­டு­மல்­லா­மல் நடு­நி­லை­யா­ளர்­கள், படித்­த­வர்­கள், அர­சி­யல் பண்­புள்­ள­வர்­கள் அனை­வர் மத்­தி­யி­லும் பெரிய அள­வில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.  எவ­ருமே முத­ல­மைச்­சர் விஜ­யின் பேச்சை ஏற்­க­வில்லை. இளை­ஞர்­கள் முதல் பெரி­ய­வர்­கள் வரை மு.க. ஸ்டாலின் அவர்­க­ளின் தியா­கத்தை அவ­மா­னப்­ப­டுத்­திய விஜய் அவர்­க­ளின் அநா­க­ரிக பேச்சை  கண்­டித்­துள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">பழைய வர­லாறை பேசி­னால் 
தாங்க மாட்­டாய்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­ல­மைச்­ச­ருக்கு ஒன்றை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்,  தி.மு.க.காரனை பேச 
விட்­டால் உங்­க­ளது பழைய கால வாழ்க்கை வர­லாற்­று­களை நாங்­கள் எடுத்து விட்­டால் நீங்­கள் தாங்க மாட்­டீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நேற்று பெய்த மழை­யில் இன்று முளைத்த காளான் போல் திடீ­ரென முத­ல­மைச்­ச­ரான விஜய்க்கு மிசா பற்றி பேசும் யோக்­கி­யதை கொஞ்­சம் கூட கிடை­யாது. மிசா கால­கட்­டத்­தில் நடை­பெற்ற கொடு­மை­கள் போல் தற்­பொ­ழுது நடை­பெற்­றால் நடி­கர் விஜய்  கட்­சியை கலைத்து விட்டு ஓடி விடு­வார்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மிசா காலத்­தில் நடந்த கொடு­மை­யான நிகழ்­வு­கள் இன்­றைக்கு உள்ள இளை­ஞர்­க­ளுக்கு தெரி­யாது.  தள­பதி மு.க.ஸ்டாலின் அவர்­கள் மிசா சட்­டத்­தில் கைது செய்­யப்­பட்டு அவர் அனு­ப­வித்த கொடு­மை­க­ளுக்கு நானே சாட்சி.  கடந்த 50 ஆண்­டு­க­ளுக்கு முன்பு மிசா சட்­டம் பிர­க­டன ப்படுத்­தப்­ப­டு­வ­தற்கு முன் 1.2.1976 அன்று முத­ல­மைச்­ச­ராக இருந்த முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் ஒரு அறி­விப்பை வெளி­யி­டு­கி­றார்.  தி.மு.க. ஆட்சி பொறுப்­பேற்று ஒன்­பது ஆண்டு காலம் நிறை­வுற்­றதை தொடர்ந்து ஒளி­மிகு ஒன்­பது ஆண்டு ஆட்சி என்ற தலைப்­பில் கழக ஆட்­சி­யின் சாத­னை­களை நாடு முழு­வ­தும் விளக்கி கூட்­டம் நடத்­து­மாறு தலை­மைக் கழ­கம் சார்­பில் அறி­விக்­கப்­பட்­டது.  அப்­போது கொள்கை பரப்பு செய­லா­ள­ராக இருந்த சிட்­டி­பா­பு­வும் நானும் காரைக்­கு­டி­யில் பேசு­வ­தாக அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டது. 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">வாரண்ட்­டு­டன் வந்த காவல் அதி­காரி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதற்கு முன்பு நானும், சிட்­டி­பாபு அவர்­க­ளும், தாம்­ப­ரத்­தில் ஒரு பொதுக்­கூட்­டத்­தில் பேசி­னோம்.  நான் பேசி­விட்டு திரு­வொற்­றி­ யூர் ராஜா கடை­யில் நடை­பெற்ற ஒரு பொதுக்­கூட்­டத்­தில் பங்­கேற்­ப­தற்­காக  வந்து விட்­டேன்.  ராஜா கடை பொதுக்­கூட்­டத்­தில் நான் பேசிக் கொண்­டி­ருக்­கும் பொழுதே தி.மு.க. ஆட்சி கலைக்­கப்­பட்­ட­தாக செய்தி வந்­தது.  உட­ன­டி­யாக நானும் கழ­கத் தோழர்­க­ளும் கோபா­ல­பு­ரம் சென்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தலை­வர் இல்­லத்­தில் கலை­ஞர் அவர்­க­ளும் நானும் இருந்­த­போது,  1967 முதல் முத­ல­மைச்­ச­ருக்கு செக்­யூ­ரிட்­டி­யாக இருந்த ஒரு  காவல் அதி­காரி மு.க.ஸ்டாலின் அவர்­களை கைது செய்ய ஒரு வாரண்டை எடுத்து வரு­கி­றார். நேராக வந்து கலை­ஞர் அவர்­க­ளி­டம் மு.க.ஸ்டாலினை கைது செய்ய வேண்­டும் என்று கூறி­ய­வு­டன், உடனே கலை­ஞர் அவர்­கள் ஸ்டாலின் மது­ராந்­த­கத்­தில் கட்சி தொடர்­பான நாட­கத்­தில் நடித்­துக் கொண்­டுள்­ளார்.  காலை­யில் வந்து கைது செய்து கொள்­ளுங்­கள் என்று கூறு­கி­றார்.  அதே­போல் கழ­கத் தலை­வர் ஸ்டாலின் அவர்­கள் மது­ராந்­த­கத்­தி­லி­ருந்து கோபா­ல­பு­ரம் வந்­த­தும் கலை­ஞர் அவர்­கள் ஸ்டாலினை போலீ­சா­ரி­டம் ஒப்­ப­டைக்­கி­றார்.   போலீ­சார் அவரை மிசா சட்­டத்­தின் கீழ் கைது செய்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">ஓடி ஒளி­யும் கூட்­டம் அல்ல!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது­தான் தி.மு.க.வின் மிசா வர­லாறு. போலீஸ் கைது செய்­யப் போகி­றது என்­ற­வு­டன்   உங்­க­ளைப் போல் ஓடு ஓடு என்று ஓடி ஒளி­யும் கூட்­டம் அல்ல தி.மு.க. கூட்­டம்.  தி.மு.க.வினர் மக்­களை பாது­காக்க,  சுய­மரி­ யாதை, இன­மா­னம்,  ஆகி­ய­வற்றை பாது­காக்க நெஞ்சை நிமிர்த்தி போரா­டக் கூடிய தைரி­யம் உள்­ள­வர்­கள். உங்­க­ளைப்­போல் ரீல்ஸ் போட்டு மக்­களை ஏமாற்ற மாட்­டோம்,  கரூ­ரில் 41 பேர் இறந்­த­போது நீங்­கள் ஓடிய ஓட்­டத்­தின் மர்­மம் என்ன என்று இன்­றும் மக்­கள் கேட்­டுக் கொண்­டு­தான் இருக்­கி­றார்­கள்.  நேற்று கூட திரு­மா­வ­ள­வன் அவர்­கள் ஒரு அறிக்­கை­யில்,  அப்­பொ­ழுதே  விஜய் அவர்­க­ளின் மீது ஏன்  எஃப்.ஐ.ஆர். போட­வில்லை என்று கேட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கரூ­ரில் அத்­தனை பேர் இறந்­தும் விஜய் அவர்­க­ளுக்கு மன­சாட்சி என்று ஒன்று உள்­ளதா இல்­லையா என்று தெரி­ய­வில்லை.  தனது கட்சி கூட்­டிய கூட்­டத்­தில் 41 பேர் இறந்­ததை பற்றி எந்த கவ­லை­யும் படா­மல் ஒரு மாதம் வீட்­டில் ஒளிந்து கொண்­ட­வர்­தான் விஜய் அவர்­கள்.  ஆனால் அன்­றைக்கு முத­ல­மைச்­ச­ராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்­கள் இர­வோடு இர­வாக கரூ­ருக்கு சென்று அங்கு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உரிய சிகிச்­சை­களை அளிக்க, பொது­மக்­க­ளின் உயிர்­களை காப்­பாற்ற உட­னடி நட­வ­டிக்கை எடுத்­தார்.  ஏனென்­றால் அவர் மக்­களை மதிக்க தெரிந்­த­வர்,  மனைவி மக்­க­ளோடு வாழக் கூடி­ய­வர்,  மக்­க­ளின் உணர்­வு­களை மதிக்­கத் தெரிந்­த­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அப்­பொ­ழுது முத­ல­மைச்­சர் ஸ்டாலின் அவர்­கள் எடுத்த துரித நட­வ­டிக்­கை­யால் பல உயிர்­கள் காப்­பாற்­றப்­பட்­டன என்­பது அனை­வ­ரும் அறிந்த ஒன்­று­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">நாடக மன்­ற­மாக ஆக்கி விட்­ட­னர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைக்கு தமிழ்­நாடு சட்­ட­மன்­றம் ஒரு நாடக மன்­றம் போல் ஆகி­விட்­டது,  எதிர்க்­கட்­சி­கள் கேட்­கிற கேள்­வி­க­ளுக்கு உரிய பதில்­களை தரு­வ­தற்கு முத­ல­மைச்­சர் உள்­ளிட்ட அமைச்­சர்­கள்  யாருக்­கும் தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எங்­க­ளது இளந்­த­லை­வர்,  சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி கேட்­கும் கேள்­வி­களை பார்க்­கும் பொழுது அந்த காலத்­தில் முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் அவர்­களை நினை­வு­ப­டுத்­து­கி­றது.  கலை­ஞர் அவர்­கள் சட்­ட­மன்­றத்­தில் பேசும்­போது புள்ளி விப­ரங்­க­ளோடு பேசு­வார்.  அவ­ரது வாரி­சாக தான் இன்று உத­ய­நிதி அவர்­க­ளும் இந்த 100 நாள் ஆட்­சி­யில் நடை­பெற்ற கொலை­கள், கொள்­ளை­கள் லாக்­கப் மர­ணங்­கள் ஆகி­யவை குறித்து ஆதா­ரங்­க­ளோடு எடுத்­துப் பேசும் பொழுது, அதற்கு உரிய பதிலை தர முத­ல­மைச்­ச­ரால் முடி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">பதி­ல­ளிக்­கா­மல் திசை திருப்­பும் முதல்­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கேட்ட கேள்­வி­க­ளுக்கு பதில் சொல்ல முடி­யா­மல்,  எடுத்­துக்­கொண்ட மூன்று நாள் அவ­கா­சத்­தில் தேடி தேடி­யும் எது­வும் கிடைக்­கா­த­தால் சட்­ட­மன்­றத்­தில் திசை திருப்­பும் போக்­கில் தேவை­யற்ற பேச்­சுக்­களை முத­ல­மைச்­சர் பேசு­கி­றார். சுக­போக வாழ்க்கை வாழும் முத­ல­மைச்­ச­ருக்கு  மிசா சட்­டத்­தின் கொடு­மை­கள் பற்றி தெரிய வாய்ப்­பில்லை தான்.  தள­பதி ஸ்டாலின் அவர்­க­ளோடு சிறை­யில் இருந்து ஸ்டாலின் அவர்­களை தாக்­கி­ய­போது அவர் மீது படுத்து அவ­ருக்கு விழும் அடி­களை தான் தாங்­கிக்­கொண்டு , அத­னால் ஏற்­பட்ட படு­கா­யங்­க­ளால் உயி­ரைத் துறந்­தார் சிட்­டி­பாபு. சிட்­டி­பாபு மட்­டும் அன்­றைக்கு ஸ்டாலின் அவர்­களை காப்­பாற்­ற­வில்லை என்­றால் போலீ­சா­ரின் கொடு­மை­யான தாக்­கு­த­லுக்கு ஸ்டாலின் அவர்­கள் அன்றே இறை­யாகி இருப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அன்­றைய கால­கட்­டத்­தில்  சிறைச்­சாலை­ யில் ஸ்டாலின் அவர்­களை கலை­ஞர் அவர்­க­ளு­டன் நானும் சென்று பார்க்­கும் வாய்ப்பு கிடைத்­தது. அப்­பொ­ழுது ஸ்டாலின் அவர்­கள் எப்­பொ­ழு­தும் போல் போடும் அரைக்கை சட்­டை­யோடு  இல்­லா­மல் முழு கை சட்டை அணிந்து வந்­தார், அதன் பின்­னர் விசா­ரித்­த­போது,  சிறை­யில் காவ­லர்­கள் தாக்­கி­ய­தில் உடம்பு மற்­றும் கைக­ளில் எல்­லாம் காயத் தழும்­பு­கள் ரத்­தக் கரை­கள் இருந்­த­தால்,  கலை­ஞ­ருக்கு அது தெரி­யக்­கூ­டாது என்ற எண்­ணத்­தில் முழு கை சட்டை அணிந்து வந்­தது தெரிய வந்­தது. இவை­யெல்­லாம் நடந்த வர­லாறு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">மிசா­வில் பல்­வேறு கொடு­மை­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சிட்டி பாபு­வின் டைரி என்ற புத்­த­கத்­தில் மிசா காலத்­தில் சிறை­யில் நடந்த கொடு­மை­களை எழு­தி­யுள்­ளார். இன்­றைய தலை­மு­றை­யி­னர் அதை­யெல்­லாம் படிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரே சிறிய அறை­யில் 10 பேரை அடைத்து வைப்­பார்­கள். ஜெயி­லுக்­குள் செல்­லும் பொழுதே, சிறை அதி­கா­ரி­கள் எட்டி உதைப்­பார்­கள்.  பின்­னர் ஆடை­களை முழு­வ­தும் அகற்றி நிர்­வா­ண­மாக்கி,  அரை­ஞாண் கயிறை அறுத்து,  அங்க- மச்ச அடை­யா­ளத்தை குறித்­துக் கொள்­வார்­கள். இது­போன்று கழ­கத் தலை­வர் ஸ்டாலின் அவர்­க­ளும் அப்­போது மிசா சட்­டத்­தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளும் பல்­வேறு கொடு­மை­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­ப­டிப்­பட்ட தியா­கத்தை,  மிசா கொடு­மை­க­ளின் சித்­தி­ர­வ­தை­களை அனு­ப­வித்த எங்­கள் தலை­வரைமுத­ல­மைச்­சர் விஜய் கொச்­சைப்­ப­டுத்தி பேசி­யி­ருப்­பது மிக­வும் கண்­ட­னத்­திற்­கு­ரி­யது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">வர­லாறு தெரி­யாது; 
புரிந்து கொள்­ள­வும் முடி­யாது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­ல­மைச்­சர் விஜய் அவர்­களே யாரோ எழு­திக் கொடுத்­ததை சட்­ட­மன்­றத்­தில் பேசு­கி­றீர்­கள்.  உங்­க­ளுக்கு வர­லா­றும் தெரி­யாது,  வர­லாற்றை  புரிந்து கொள்­ள­வும் முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உங்­க­ளது கட்சி சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளையே உங்­க­ளுக்கு அடை­யா­ளம் தெரி­யாது. யார் யார் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் என்று பெயர் கூட உங்­க­ளுக்கு தெரி­யாது.  இப்­ப­டிப்­பட்ட நீங்­கள் தி.மு.க. பற்­றி­யும், தி.மு.க.வின் தலை­வரை பற்­றி­யும் பேச கொஞ்­சம் கூட உங்­க­ளுக்கு தகுதி கிடை­யாது. தி.மு.க. தலை­வரை முத­ல­மைச்­சர் தரம் தாழ்த்தி பேசி­யதை அனைத்து கட்சி தலை­வர்­க­ளும் கண்­டித்­துள்­ளார்­கள்.  ஆனால் நம்­மால் ஆதா­யம் பெற்று வெற்றி பெற்ற,  தற்­பொ­ழுது சுக-­­போக வாழ்க்கை அனு­ப­விக்­கிற காங்­கி­ர­ஸார் மட்­டும் வாயை திறக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காங்­கி­ர­சில் இரண்டு வகை உண்டு.  ஒன்று பக்கா காங்­கி­ரஸ், இன்­னும் ஒன்னு சொக்கா காங்­கி­ரஸ்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த காலத்­தில் கொள்­கையை அடிப்­ப­டை­யாக வைத்­தி­ருந்­த­வர்­கள் பக்கா காங்­கி­ரஸ்.  இப்­பொ­ழுது கொள்­கையை விட்­டு­விட்டு பதவி சுகத்தை அனு­ப­விப்­ப­வர்­கள் சொக்கா காங்­கி­ரஸ்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இறு­தி­யாக இந்த கண்­டன ஆர்ப்­பாட்­டத்­தில்ஒன்றை மட்­டும் முத­ல­மைச்­சரை விஜய் அவர்­க­ளுக்கு தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.  தி.மு.க.வை பழித்­த­வர்­கள் யாரும் வாழ்ந்­த­தாக சரித்­தி­ரம் கிடை­யாது.  விஜய்   நீங்­கள்  பேசிய தரங்­கெட்ட பேச்­சி­னால் மக்­கள் கொதித்து எழுந்­துள்­ள­னர்.  நிச்­ச­யம்  விஜய் அவர்­கள் விரை­வில் கட்­சியை கலைத்து விட்டு  ஓடும் நிலை ஏற்­ப­டும்  என்­பதை இங்கு தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு அவர் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த ஆர்ப்­பாட்­டத்­தில் துணை அமைப்பு செய­லா­ளர் ப.தாய­கம் கவி,  முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், மாநில நிர்­வா­கி­கள்,  மாவட்ட நிர்­வா­கி­கள், பகுதி செய­லா­ளர்­கள்,  கழக நிர்­வா­கி­கள்,  தோழமை கட்சி நிர்­வா­கி­கள்  உள்­ளிட்ட 2000 க்கும் மேற்­பட்­டோர் பங்­கேற்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கண்­டன ஆர்ப்­பாட்­டத்­தின் நிறை­வாக மாந­கர மேயர் பிரியா ராஜன் நன்றி கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த ஆர்ப்­பாட்­டத்­தில் முத­ல­மைச்­சர் விஜ­யைக் கண்­டித்­தும்,  அமைச்­சர் நிர்­மல் குமார் மற்­றும் த.வெ.க. ஆட்­சி­யின் சட்­டம் ஒழுங்கை கண்­டித்­தும் முழக்­கங்­கள் எழுப்­பப்­பட்­டன.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>