<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="15/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,63,959,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Sep 14 2026 22:10:59 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260915T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="15092026-CBE-07" position.sequence="07" ex-ref="15092026-CBE-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">உண்மையில் நடந்தது என்ன?</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">‘மிசா’ அடக்குமுறை: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கைதும் சர்ச்சைகளும்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">‘சன் நியூஸ்’ தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் – தோழர் தியாகு – விடுதலை ராஜேந்திரன் விளக்கம்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="SunNews1c_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="14">(நேற்­றைய தொடர்ச்சி)
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.8">சன் நியூஸ் தொலைக்­காட்­சி­யில்  மு.குண­சே­க­ரனைநெறி­யா­ள­ரா­கக் கொண்டு நடை­பெற்ற சிறப்பு விவாத நிகழ்ச்­சி­யின் விவ­ரம் வரு­மாறு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">ஒவ்­வொரு செல்­லை­யும் மூடிட்டு அவர்­களை பூட்டி வைச்­சுட்டு அடுத்த செல். இப்­படி ஒன்­ப­துல இருந்து ஆறில் இருந்து, 10இல் இருந்து ஆரம்­பிச்சு மூன்­றாம் எண் அறைக்கு வரு­கி­றார்­கள்.  மூன்று  எப்ப திறக்க போறாங்­கன்னு இருக்­கி­றாங்க, அதுல மூணுல இருக்­கி­றது ஸ்டாலின், சிட்­டி­பாபு, வி.எஸ். கோவிந்­த­ரா­ஜன், நீல­நா­ரா­ய­ ணன், ஆற்­காடு வீரா­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">சிறை­யில் ஒவ்­வொரு செல்­லி­லே­யும் அடித்து முடித்து அவர்­களை பூட்டி வைத்து விட்டு அடுத்த செல் என இப்­படி  10 இல் இருந்து ஆரம்­பித்து மூன்­றாம் எண் அறைக்கு வரு­கி­றார்­கள்.  மூன்று  எப்­போது திறக்க போறா­கி­றார்­கள் என்று இருக்­கி­றார்­கள், அதில் 3 வந்து அறை­யில் இருப்­ப­வர்­கள் மு.க.ஸ்டாலின், சிட்­டி­பாபு, வி.எஸ். கோவிந்­த­ரா­ஜன், நீல­நா­ரா­ய­ணன், ஆற்­காடு வீரா­சாமி ஆகி­யோர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">சிட்­டி­பாபு என்ன செய்­கி­றார் என்­றால்,  திறந்த உடனே முதல் ஆளாக அவர்  வெளி­யில் போகி­றார்.  முதல் ஆளாக சென்று  அடி­களை வாங்கி கொள்ள  முடி­யுமா என பார்க்­கி­றார்.  அந்த அடி­களை முழு­வ­தும் அவர் வாங்­கிக் கொண்டு, ஒரு சுவற்­றிலே போய் கையை வைத்து சாய்ந்து நிற்­கி­றார்.   அடுத்­த­வர்­களை அடித்­துக் கொண்டு இருக்­கி­றார்­கள். அடுத்து மு.க.ஸ்டாலின் அவர்­கள் மேல் அடி விழ ஆரம்­பிக்­கி­றது. அப்­போது  அந்த சுரு­ளி­ரா­ஜன் என்­கிற அதி­காரி பூட்ஸ் காலால் ஸ்டாலின் முகத்­தில் ஓங்கி  மிதித்து விட்­டான். அவ­ருக்கு அந்­தத் தாடை எலும்­பு­கள் உடைந்­தது. இப்­போது விஜய் சைகை­யால் கேலி செய்­த­தும் அதைத்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">அப்­போது சிட்­டி­பாபு குறுக்கே விழுந்து தடுக்­கி­றார்.  அவர் மீது  அந்த அடி­கள்  விழுந்­தன.  சிட்­டி­பாபு  ஏற்­க­னவே நோயாளி. இதய நோய், சிறு­நீர்ப் பிரச்­சினை என்று எல்லா நோய்­க­ளும் அவர் உடம்­பில்­குடி இருக்­கி­றது. அந்த அடி­தான் அவ­ருக்கு இறு­தி­யாக மர­ணத்தை நோக்கி  அவரை தள்ளி விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">இது  இரண்­டாம் தேதி  இரவு நடந்து முடிந்­தது.  அன்­றைக் குத்­தான் அந்த அடி கொடுமை எல்­லாம் நடக்­கி­றது. மாறன்   அது­வ­ரைக்­கும்  உள்ளே வர­வில்லை. அவர்  டெல்­லி­யில் இருக்­கி­றார். டெல்­லி­யில் ஜார்ஜ் பெர்­னாண்­டஸ் தலை­ம­றை­வாக இருந்து கொண்டு, அவ­சர  நிலைக்கு எதி­ராக இயக்­கம் நடத்­து­கி­றார், ஏன்­னென்­றால், பத்­தி­ரிகை  தணிக்கை எப்­ப­டிப்­பட்­டதா இருக்­கும் என்­றால், சி.ஜி. கே. ரெட்­டின்னு ‘தி இந்து’ பத்­தி­ரி­கை­யில்  ஒரு நிர்­வாக பொறுப்­பில் இருந்­த­வர், அவர்  பெர்­னாண்­டஸ் நண்­பர், இந்த அவ­ச­ர­நிலை எதிர்ப்பு இயக்­கத்­தில் அவர் இருக்­கி­றார்.  அவர்­தான் மாறன் அவர்­களை  ஒரு இடத்­துக்கு அழைத்­துக் கொண்டு போறேன் என்று டெல்­லிக்கு கூட்­டிக் கொண்டு போகி­றார். அங்கு ஒரு சாமி­யார் உட்­கார்ந்­தி­ருப்­பார்.  அந்த சாமி­யார்­தான் ஜார்ஜ் பெர்­னாண்­டஸ். நாம் விடக்­கூ­டாது. விடா­மல் இயக்­கம் நடத்­த­னும். தமிழ்­நாட்­டுக்கு நாங்­கள் வரு­கி­றோம். இயக்­கம் நடத்­த­னும் என்று இவ­ருக்கு  அறி­வுரை சொல்­கி­றார்­கள். இவர் எல்­லா­வற்­றை­யும் கேட்­டுக்­கொண்டு, சென்­னைக்கு வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">சென்­னைக்கு வந்­த­தும் கலை­ஞரை பார்த்­த­வு­டன், எல்லா வற்­றை­யும் சொல்ல    ஆரம்­பிக்­கி­றார். அதற்கு முன்பே, இந்த கைதுக்­கெல்­லாம்  முதல் நாளே  சிட்­டி­பாபு போன்­ற­வர்­கள் எல்­லாம், இதை சொல்­கி­றார்­கள். நாம் வந்து அவ­ச­ர­நி­லைக்கு  எதி­ராக இயக்­கம் நடத்­த­னும், பணிந்து விடக்­கூ­டாது என்று சொல்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">கலை­ஞர் அவர்­கள், எது­வாக இருந்­தா­லும் சட்­டத்­துக்கு உட்­பட்­டு­தான். நாம் ஒரு ஜன­நா­யக இயக்­கம். நம் கருத்தை மக்­கள்  இடம் கொண்டு போவோம். தேர்­த­லில்­தான்  நாம் போட்­டி­டு­வோம். வேறு  எது­வும் செய்ய முடி­யாது என்று கூறு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">மாற­னி­டம் கலை­ஞர் அவர்­கள் சொல்­கி­றார், இப்­போது  நீ நேராக ஜெயி­லுக்கு போ, ஜெயி­லில் இரு, அரசு விடு­தலை செய்­யும்­போது செய்­யட்­டும். இல்லை நாம் அதற்­கான முயற்­சி­களை சட்­டப்­படி என்ன செய்ய வேண்­டுமோ நாம் வழக்­க­றி­ஞர்­களை  வைத்து நம்ம செய்­வோம் என்று சொல்­லி­விட்டு அதே­போல ஸ்டாலினை அனுப்­பின மாதி­ரியே அவரே போன் செய்து காவல்­துறை தலைமை அதி­கா­ரிக்கு  மாறன் வந்­தாச்சு, வந்து கூட்­டிட்டு போங்­கள், அப்­ப­டித்­தான் மாறனை அனுப்பி வைத்­தார். அப்­படி மாறன் அங்கு வரு­கின்ற  காலத்­துக்கு எல்­லாம், சிறை­யில் அடிக்­கி­றது  நின்று போனது. ஒரு நாள் அடிக்­கி­றார்­கள்,  அதுக்­குப் பிறகு அடி இல்லை, மற்ற கொடு­மை­கள் தொடர்­கி­றது. அப்­போது மாற­னுக்கு  ஒரு நச்சு காய்ச்­சல் வந்து அவரை கொண்டு போய் வெளி மருத்­து­வ­ம­னை­யில் வைக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">மருத்­து­வ­ம­னை­யில் இருந்து சில நாள் கழித்து திரும்பி வரு­கி­றார். வரும்­போது அவ­ருக்கு எதிர்­பா­ரா­மல் இந்த முது­குத் தண்டு  டிஸ்க் சிலிப் ஆகி­வி­டு­கி­றது. அதுக்­காக சக்­கர  நாற்­கா­லி­யில்  இருக்­கி­றார்.  இவர் சக்­கர நாற்­கா­லி­யில் நகர்­வதை பார்த்து என்ன சொன்­னார்­கள் என்­றால், இவரை அடித்து முதுகு தண்டை உடைத்து விட்­டார்­கள்,  மாறனே என்­னி­டம் சொல்லி சிரிச்­சார். என்னை அடிக்­கவே இல்லை, கலை­ஞரே என்னை அடித்­ததா சொல்­றாரு. ஸ்டாலி­னும்  என்னை அடித்­ததா சொல்­றாரு.  ஆனால் நான் அடி வாங்­க­வில்லை. ஏன் என்­றால்  நான் லேட்­டாக வந்­தேன். முத­லில் வந்­தி­ருந்­தால் அடித்­தி­ருப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">அதில் மாறன்­தான் அங்கே இருந்து கொண்டு, அவர் சொன்ன ஒரே வார்த்தை, அதற்கு முன்­னால்  அங்கு இருக்­கி­ற­வர்­கள், ஹரி­பெட், சிவாஜி, திரு­வேங்­க­டம், சி.பி.எம். தோழர்­கள்  எல்­லாம்  இதை எதிர்த்து இயக்­கம் நடத்­த­னும், இதை  விட்­டு­வி­டக்  கூடாது என்று சொல்லி பேசு­கி­றார்­கள். அவர்­க­ளுக்கு துணை நிற்­கி­றார் சிட்­டி­பாபு.   மாறன் சொல்­கி­றார்,  இதை எதிர்த்து நாம் நிற்க தவ­றி­னோம் என்­றால் உள்­ளேயே நம்மை அழித்து விடு­வார்­கள். எனவே இதற்கு எதி­ராக என்­னென்ன செய்­ய­ணுமோ அதை­யெல்­லாம் செய்­வோம் என்று கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">நெருக்­கடி நிலைக்கு எதி­ராக ஒரு இயக்­கம் நடத்து வதற்கே தயக்­கம் இருந்­தது, மற்­ற­வர்­க­ளுக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">தோழர் தியாகு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">ஆமாம்,  என்ன தயக்­கம் இருந்­தது என்­றால், என்­னங்க அடிக்­கி­றான், முகத்­துல குத்­து­றான், வேப்­பெண்­ணெய்யை  சோத்­துல கலந்து கொடுக்­கி­றான், சாதா­ரண அடக்கு முறையா அது? ஏன்னா நான் கூட  என்­னு­டைய கட்­டு­ரை­யிலே  எழுதி இருக்­கி­றேன்.  சிறை கைதி­க­ளின் மனித உரி­மைக்­கான போராட்­டம் மிசா சிறை­யில் இருந்து தொடங்­கப்­ப­டும் என்­பது  பெரு­மைக்­கு­ரிய செய்தி என எழு­தி­யி­ருப்­பேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">எனக்கு மாறன் மேல்  பெரிய மதிப்பு. நான் அவரை பார்த்­தேன், அவர் என்­னி­டம்,  இந்த விவ­ரம் பூரா­வுமே  சொன்­னார்.  அவர் உறு­தி­யாக நின்­றார். உங்­க­ளுக்கு அதே­போல கே.எம். ஹரி­பட், ஏற்­க­னவே இதே திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில், நான்கு தொழிற் சங்க தலை­வர்­கள் மிசா­வில் கைது செய்­யப்­பட்­ட­போது திருச்சி சிறை­யில் எங்­க­ளோடு இருந்­த­வர் அவர் ஹரி­பட்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">இவர்­கள் ஒரு மனு எழு­து­கி­றார்­கள், ஐ.நா. மனித உரிமை பேர­வைக்கே மனு எழு­து­கி­றார்­கள், அந்த மனு எட்டு காப்­பி­யில் ஒரு ஏழு காப்பி வெளியே போயி­டுச்சு, ஒரு காப்பி மாட்­டிக் கொண்­டது. அதை  அந்த சூப்­பி­ரெண்டு தேடி எடுத்­து­வி­டு­கி­றான். டேய் சிவாஜி, மேல வா என்று சொல்­லி­விட்டு போறான். ஹரி­பெட் நானும் வரேன் என்று நேராக போய் சூப்­பி­ரெண்ட்­டி­டம் நிக்­கி­றார்­கள்.  நீங்­கள் என்ன செய்­தா­லும் எங்­க­ளுக்கு கவலை கிடை­யாது. இது ஹரி­பட்­டி­டம் சொன்­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">தர்­ம­பு­ரி­யிலே,   சி.பி.எம். அலு­வ­ல­கத்­தில் கடைசி நாட்­க­ளில் முழு­நேர மாவட்­டச் செய­லா­ள­ராக அவர்­தான் இருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">தோழர் தியாகு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">ஆமாம், ஹரி­பட், குசே­லர், வி.பி. சிந்­தன், பி.ஆர். பர­மேஸ்­வ­ரன் நாலு பேர்­தான் முத­லில் தொழிற்­சங்க தலை­வர்­க­ளாக கைதாகி சிறைக்கு போய் நான்கு   சிறை­க­ளில் அடைக்­கப்­பட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">நீதி­மன்­றம் தலை­யிட்­டு­தான் அப்­பு­றம் விடு­தலைகிடைத்­தது. அது மாதிரி, அந்­தப் போராட்­டத்தை அங்­கேயே தொடங்­கி­னார்­கள். அதில் ரொம்ப முக்­கி­ய­மா­னதை நான் அடுத்த கட்­டத்­தில் சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">உள்­துறை செய­லா­ள­ராக இருந்த சுப்­பி­ர­மணி தான்  இதில் பெரிய பங்கு ஆற்­றி­ய­வர். அவர் மாற­னுக்கு நண்­பர் மட்­டு­மல்ல, ஒரு நீதி நியாய உணர்வு படைத்த ஒரு அதி­காரி. அவ­ரு­டைய பங்கு என்­பது முக்­கி­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">விடு­தலை இரா­ஜேந்­தி­ரன்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">: ஜெய்­சங்­கர் அவ­ரு­டைய  பாதர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">தோழர் தியாகு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">ஓ ஜெய்­சங்­கர் பாதர்­தான் சுப்­பி­ர­ம­ணியா,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">நாம் சிறை கொடுமை என்­பது   ஒரு பார்ட். இன்­னொன்று சிறைக்கு போயிட்டு வந்­தது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">தோழர் தியாகு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">ஒன்னே ஒன்னு சொல்­லி­வி­டு­கி­றேன்  சிறை கொடு­மை­யில்,  அவர்­க­ளு­டைய  சாடிஸ்ட்­டுக்கு ஒரு சான்று மட்­டும் சொல்­லி­வி­டு­கி­றேன்.  நிறைய சான்று இருக்­கி­றது, ஒன்று மட்­டும்  சொல்லி விடு­கி­றேன். சிட்­டி­பா­பு­வைப் பொறுத்­த­வ­ரைக்­கும், அடித்து காயங்­கள் ஆறிக் கொண்­டி­ருக்­கி­றது, ஒரு நாள் என்ன செய்­கி­றான், சிட்­டி­பாபு பையைத் திறந்து, அவ­ரு­டைய சட்டை எல்­லாம் இரத்­தக் கைறை­யோட இருக்கு, போய் துவைச்­சிட்டு வாடாங்­கி­றான். இவர் போய், தானே அந்த துணி­களை, ஏன்னா அந்­தச் சான்­று­களை அழிக்­கி­றார்­கள், இவர்­களை அடித்­த­துக்­கான சான்­று­களை அழிக்­கி­றார்­கள்.   அத­னால் அந்த துணி­யைத் துவைக்க சொல்­கி­றார்­கள், துவைக்­கும் போது கறை போக­வில்லை யென்­றால்,  திரும்ப போய் துவைச்­சிட்டு வாடா, கறை போகுற வரைக்­கும் நீ துவைக்­க­ணும் என்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">இது சிட்­டி­பா­புக்கு அவர்­கள் கொடுக்­கிற தண்­டனை, அவர் சொல்­கி­றார், நான் 12 லட்­சம் மக்­க­ளின் பிர­தி­நிதி, இப்­போ­தும் அப்­ப­டித்­தான் இருக்­கி­றேன், இந்­திரா காந்­திக்கு கடி­தம் எழு­து­கி­றார் ஜெயில்லே இருந்து. 12 லட்­சம் மக்­க­ளு­டைய பிர­தி­நிதி, மேய­ராக இருந்­த­வன், நான் துணி­களை துவைக்­கி­ற­தைப்  பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் எனக்கு நிகழ்ந்த கொடு­மை­க­ளுக்­கான தடை­யங்­களை நானே அழிக்­கு­மாறு கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்­டேன் என எழு­து­கி­றார். அந்தமாதிரி ஒரு சாடி­சம், அங்கு நிகழ்ந்த கொடு­மை­கள்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">சரி. காங்­கி­ரஸ்க்கு எப்­படி சாடி­சம் இருந்­தது?  காங்­கி­ரஸ் ஆட்சி காலத்­தில், இந்­திரா காந்­தியை விமர்­சித்­த­வர்­களை  எல்­லாம் உடனே கைது செய்­யப்­பட்­டார்­கள், இந்­திரா காந்­திக்கு   அர­சி­யல் எதிர்ப்­பா­ளர்­கள், அந்த அடக்கு முறைக்­கும் ஒடுக்கு முறைக்­கும் ஆளா­னார்­கள், அது சாடி­சம் அப்­ப­டின்னு தோழர் தியாகு சொல்­கி­றார். இப்­போது அதை பகடி செய்­யக்­கூ­டிய ஒரு கட்­டத்­துக்கு தமிழ்­நாடு வந்­தி­ருக்கே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">விடுதலை இரா­ஜேந்­தி­ரன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">இது வந்து என்ன வார்த்தை. புதுசா  தான் அக­ரா­தில் தேட­னும். ஏன்னா தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் நடக்­கிற அத்­தனை நிகழ்­வு­க­ளுக்­கும், ஒரு புதிய அக­ரா­தி­தான் ஒன்று உரு­வாக்க வேண்­டும்.  ஏன் என்­றால், ஏற்­க­னவே இருக்­கின்ற சொற்­றொ­டர், இதுக்கு வந்து எதுக்­கும் பொருந்தி வர­மாட்­டேன்­என்ற நிலை­யில் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">இன்­னும் கடி­ன­மான சொல்லை தேடு­கி­றீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">விடு­தலை இரா­ஜேந்­தி­ரன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">ஆமாம், இந்த கேள்­விக்கு நான் என்ன பதில் சொல்­வது.  அதா­வது ஒரு அடிப்­ப­டை­யும் இல்­லா­மல், ஒரு சிந்­த­னை­யும் இல்­லா­மல், பெண்­கள் விஷ­யத்­தில் தான் வந்து ஸ்டாலின் கைது செய்­தார்­கள் என்று ஒரு ஆளு- ஒரு அமைச்­சர் பேசு­றார் என்­றால், என்ன இது­வுக்கு அவர் பொறுப்­புள்ள ஒரு அமைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">தடித்­த­னம்­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">விடு­தலை இரா­ஜேந்­தி­ரன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">தடித்­த­னமா? அது வந்து. என்ன சொல்­வது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">நம்ம  சட்­ட­மன்­றத்­தில் பேசினா, வெளி­யில் வழக்கு போட முடி­யாது. மான நஷ்­டம் வழக்கு போட முடி­யாது, அவ­தூறு வழக்கு போட முடி­யாது, சட்­ட­மன்­றத்­துக்­குள்ள என்ன வேண்­டு­மா­னா­லும் பேசிக் கொள்­ள­லாம் அது சபா­நா­ய­கர் தான் இறுதி முடிவு அது கொடுக்­கற ஒரு இம்­பி­னிட்டி இருக்­கி­றது இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">விடு­தலை இரா­ஜேந்­தி­ரன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">ஆமாம்,  சபா­நா­ய­கர் என்ன  சொல்­கி­றார் என்­றால், முத­ல­மைச்­சர் ஆற்­றிய   உரை அப்­படி என்று சொல்­கி­றார். அதுவே வந்து ரொம்ப தவறு. அது எப்­படி முத­ல­மைச்­சர்  உரை என்று சொல்ல முடி­யும். அது ஒரு மோச­மான ஒரு அவ­தூ­று­தான்.  அந்த உரைக்­குப் பின்­னால்  யாருமே வந்து பதில் சொல்­வ­தற்கு அனு­மதி இல்லை,   அந்த உரைக்கு பின்­னாடி யாருக்­கும் பதில் சொல்­ற­துக்கு அனு­மதி இல்­லைன்னு சொல்­லிட்­டார். அதுக்­குப் பிறகு  இரண்­டா­வது நாள் சட்­ட­ச­பை­யில் அவர் பேசும்­போது, அனு­மதி இல்லை,  அனு­மதி இல்­லைன்னு சொன்­னாரு, அப்­பு­றம் முத­ல­மைச்­சர் வந்து அனு­ம­திங்க என சொன்­ன­துக்கு அப்­பு­றம் அனு­ம­திக்­கி­றேன்னு சொன்­னாரு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">தோழர் தியாகு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">அவர் என்ன சொல்­றா­ருன்னா? நீங்க சத்­தம் போடாம  உரையை கேட்­டி­ருந்தா. நான் வாய்ப்பு கொடுத்­தி­ருப்­பேன், அதுவே  தவறு என்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">ஸ்பீக்­கர் பார்த்து கொடுக்­கின்ற சலுகை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">விடு­தலை இரா­ஜேந்­தி­ரன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">நீங்­கள் நல்ல பிள்­ளையா  இருந்து  கேட்­டுட்டு இருந்­தீர்­கள் என்­றால், நான்   வெளியே அனுப்­பா­மல் இருந்­தி­ருப்­பேன், அப்­ப­டி­யென்­கிற மாதிரி ஒரு விஷ­யமா ஆகி­யி­ருக்கு. அவர் பேசு­ன­து­தான் எல்­லா­ருக்­குமே கேக்­குதே, மக்­கள் பார்த்­துட்­டு­தான் இருக்­கார்­கள்.  தொலைக்­காட்­சி­யில், சட்­ட­ச­பை­யில் சத்­தம் போடு­றார்­கள் என்­பது தெரி­யாது யாருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">அந்­தப் பக்­கம் கேம­ராவே போகல. இவரு பேசு­ற­வ­ரைக்­கும் கேமரா  முத­ல­மைச்­சர் பக்­கம்­தான் நிக்­குது. அவர் பேச்சை  எல்­லோ­ரும் கேட்­டுட்டு இருக்­காங்க. அவரு போடு­கிற சத்­தம் வந்து,  எதிர்க்­கட்சி எம்.எல்.ஏ.க்கள் போடு­கிற சத்­தத்­தை­விட அதி­கமா சத்­தத்­துல பேசிட்டு இருக்­கி­றாரு விஜய். இதுல வந்து ஒரு  காட்டு கூச்­சல் அது. ஒரு ஒலி­பெ­ருக்­கின்னு ஒன்னு இருக்கா, எதுக்கு ஒலி­பெ­ருக்­கின்னு ஒன்னு வச்­சி­ருக்­கி­றாங்க, அப்­ப­டி­யிங்­கி­றதே தெரி­யா­மல் மூச்சு முட்­டிக்­கிட்டு எந்­த­வி­த­மான கேப் இல்­லாம ஒரு கூச்­சல்.  இந்த பேச்­சுக்­கள் எல்­லாம் நீங்­கள் கேட்­டுக்­கொண்டு இருந்­தீங்­கள் என்­றால்  அமை­தியா, நான் உங்­களை பேசு­ற­துக்கு அனு­ம­திச்­சி­ருப்­பேன், அப்­ப­டின்னு சொல்லி ஒரு பெரிய ஜோக்கை சொல்­கி­றார். வேறு எது­வுமே இருக்­காது. நீங்க சாட்­டையை திருப்பி திருப்பி  சுழட்டி அடிச்­சிட்­கிட்டே இருப்­பீர்­கள் ஒருத்­தன் மேலே,  சுரணை இல்­லா­மல் ஒருத்­தன் உட்­கார்ந்­துட்டு இருப்­பானா? நீ எது வேணா­லும் அடிப்பே. அத கையைக் கட்­டிட்டு உட்­காந்­துட்டு இருப்­பானா.  நீ உட்­காந்து கேட்­டுக்­கிட்டு இருந்தா நான் பேச அனு­ம­திச்சு இருப்­பேன்னு ஒரு சபா­நா­ய­கர் சொல்­கி­றார் என்­றால்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">நடு­நி­லை­யா­ன­வரு,  பெருந்­தன்­மை­யா­ன­வரு, அப்­படி சொல்­லி­ருக்­கி­றார்­களே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">விடு­தலை இரா­ஜேந்­தி­ரன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">அப்­படி ஒரு இமேஜ் இருந்­தது, ஆனால் அந்த கடைசி நாளில்,  ஒரு கருப்பு புள்ளி, கடு­மை­யான கருப்பு புள்ளி அவர் மேல விழுந்­து­விட்­டது, அதுக்கு மேலே சொல்ல முடி­யாது. ஏன்­னென்­றால் முத­ல­மைச்­சர் அப்­பா­யின்ட்­மெண்ட் தானே   அவரு.   முத­ல­மைச்­சரை எதிர்த்­துக்­கொண்டு என்ன செய்ய முடி­யும். அப்­பு­றம் சபா­நா­ய­கரை விட்­டுட்டு  வெளியே போக வேண்­டி­வ­ரும்.  அத­னால அவர் பொசி­ஷன்­தான் பார்க்க வேண்டி இருக்­கி­றது, இருந்­தா­லும் கூட இந்த மாதிரி எல்­லாம் சொல்லி இருக்க வேண்­டி­ய­தில்லை சபா­நா­ய­கர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">இந்த அவ­சர நிலை காலத்­துல வந்து, கிட்­டத்­தட்ட  75 ஜூன் 26 முதல் ஜன­வரி 31 வரை கலை­ஞர் ஆட்சி இருக்­கி­றது.  இப்ப இந்த பீரி­யட்டை  கலை­ஞர்  எப்­படி கையாண்­டார்? அப்­ப­டி­யென்­பதை ஒரு முக்­கி­ய­மான விஷ­யமா பார்க்­க­ணும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">ஒரு பாயிண்ட் இருக்கு இல்­லையா சார், நெருக்­கடி நிலையை எதிர்க்­கா­மல் இருந்­தால் இந்­திரா காந்­தி­யோடு சம­ர­ச­மாக போயி­ருந்­தால், காம­ரா­ஜர் இந்­திரா காந்­தி­யோடு முரண்­பட்­டுட்­டாரு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">எதிர்க்­கா­மல் போயி­ருந்­தால், ஆட்­சி­யும் காப்­பாற்­றப்­பட்­டி­ருக்­கும், யாரும்  கைதாகி இருக்­கத் தேவை­யில்லை, அடக்கு முறையே இருந்­தி­ருக்­காது, இந்­திரா காந்தி கொண்­டா­டி­யி­ருப்­பார்­கள், அப்­படி இருக்­கும்­போது, அந்த முடிவை  கலை­ஞர் ஏன் தேர்ந்­தெ­டுத்­தார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">விடு­தலை இரா­ஜேந்­தி­ரன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">அது­தான் அந்த இடத்­து­ல­தான் தி.மு.க. ஒரு கட்­சிங்­கி­றது  நிற்­கி­றது. அதற்­கான ஒரு கொள்கை அடித்­த­ளம் ஒன்று இருக்­கி­றது. அதற்கு ஒரு அடை­யா­ளம் இருக்­கி­றது. தமிழ்­நாட்­டில்  காங்­கி­ரஸ்  ரெண்டா பிரிஞ்­சது இல்­லையா, ஒன்னு வந்து இந்­திரா காங்­கி­ரஸ் தலை­மை­யில் இருந்­துச்சு, இன்­னொன்னு ஸ்தாபன காங்­கி­ரஸ் தலை­மை­யில் ரெண்டா பிரிஞ்ச காலத்­தில், கலை­ஞர் வந்து 71 தேர்­த­லில் தமிழ்­நாட்­டில் வலி­மையே இல்­லாத, அந்த இந்­திரா காங்­கி­ர­ஸோடு  கூட்­டணி வச்­சு­தான் தேர்­த­லில்  போட்­டி­யிட்­டார், தேர்­த­லில் சீட்டை கொடுத்­தார்,  இன்­னொரு செய்­தியை நான்  இதில் சொல்­ல­ணும் அதில் தமிழ்­நாட்­டில்  இன்­றைக்கு  மரி­யா­தைக்­கு­ரிய ப.சிதம்­ப­ரம் அவர்­கள் தமிழ்­நாட்­டில்  காம­ரா­ஜர் காங்­கி­ரஸ், இந்­திரா காங்­கி­ரஸ்  என்று இருந்­தப்­போது, காம­ரா­ஜ­ரு­டைய எதிர்ப்­பு­அ­ணி­யில் தான் ப.சிதம்­ப­ரமே இருந்­தார். அவர் காம­ரா­ஜரை ஆத­ரிக்­க­வில்லை.  அப்­போது அந்த அணி­யோடு  இருந்த நட்­போடு தான் இருந்­தார். பாரா­ளு­மன்­றத் தேர்­தலை சந்­திச்­சாரு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">அப்­படி சந்­தித்­து­விட்டு இருந்த நேரத்­தில், இப்­படி ஒரு அடக்கு முறை ஒன்று சர்­வ­தேச, பல்­வேறு சூழ்­நி­லை­யில் வரு­கி­ற­போது தான் ஏற்­க­னவே கூட்­டணி வைத்­தி­ருந்த அந்த இந்­திரா காங்­கி­ரஸ்  கூட்­ட­ணியை  விட்­டுட்டு, ஒரு கொள்­கைக்­காக இந்த அடக்கு முறையை சந்­திக்­க­ணும் என்ற  ஒரு கருத்­துக்கு  ஒரு கொள்­கைக்­கா­க­தான் வரு­கி­றார் அவர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">ஜன­நா­யக ரீதி­யான ஒரு கொள்­கைக்­கா­கத் தான் வரு­கி­றார். அப்­படி அந்த காலக்­கட்­டத்­தில்,  தோழர் தியாகு சொன்ன மாதிரி குஜ­ராத் ஒன்று, தமிழ்­நாடு ஒன்று என்­கி­ற­போது, தமிழ்­நாடு மட்­டும்­தான் வந்து இந்த அவ­சர நிலை காலம்ங்­கி­றது என்­னென்று தெரி­யாத ஒரு காலமா? அவ­சர நிலை காலம் இந்­தியா முழு­தும் இருந்த காலக்­கட்­டத்­தில்  கலை­ஞர் முத­ல­மைச்­ச­ராக  இருந்த காலத்­தில்,   அதற்­கான டெமாக்­ரட்­டிக் ஸ்பேஸை  இங்கே முழு­மை­யாக கொடுத்து  வச்­சி­ருந்­தார்.  அவர் சொல்­லும்­போது இன்­னொரு தக­வல் ஒன்று இந்த கடைசி கூட்­டத்­தில் பேசிட்டு வந்து, இது­தான் நான் கடை­சி­யாக முத­ல­மைச்­ச­ராக பேசி­னது அப்­ப­டின்னு வந்து சொல்­லிட்டு வரும்­போது அவ­ரு­டைய வர­லாறு எழு­தி­ருக்­கிற ஏ.எஸ்.பன்­னீர்­செல்­வம்  இன்­னொரு குறிப்­பைச் சொல்­கி­றார், அந்த கலை­ஞர் வர­லாற்றை எழு­தும் போது.  உடனே வந்து நம்மை நம்பி இங்கே அடைக்­க­லம் கொடுத்து இருக்­கி­ற­வர்­கள் எல்­லோ­ருமே அவ­ச­ரமா வந்து இங்கே இருந்து வெளி­யே­ற­துக்கு, பாது­காப்­புக்­கான ஏற்­பா­டாக இங்கே இருந்து அனுப்­புங்­கள். இதுக்கு அவர்­க­ளு­டைய பாது­காப்பை தேடி போங்­கன்னு சொல்­லி­டு­றாரு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">வெளி மாநி­லத்­தில் இருந்து வந்த தேசிய தலை­வர்­கள் ஜார்ஜ் பெர்­னாண்­டஸ் மாதிரி என்று சொல்­லி­வி­டு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">விடு­தலை இரா­ஜேந்­தி­ரன் :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">ஜார்ஜ் பெர்­னாண்­டஸ்  போன­துக்கு அப்­பு­றம்­தான் மேற்கு வங்­கத்­தில் அடுத்து அங்கே போய் தான் கைது செய்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">ஜார்ஜ் பெர்­னாண்­டஸ் அவ­ருக்கு பாது­காப்பு, அதே மாதிரி இங்கே  எமர்­ஜென்­சி­னு­டைய கொடு­மையை விளக்­கு­கின்ற பிர­சு­ரங்­கள் எல்­லாம் வந்து மக்­க­ளி­டம் வந்து போகி­றது. அந்த சிபி­எம் லீட­ரு­டைய ஒரு பேச்சு ஒன்று  ஏ.கே. கோபா­ல­னு­டைய ஒரு பேச்சு எமர்­ஜென்­சிங்­கி­றது  ஒரு சட்ட விரோ­த­மா­னது, அது பிறப்­பிக்­கப்­பட்ட முறை தவறு என்­பதை, ரொம்ப ஸ்ட்ராங்கா, ஏன்னா அதற்­கான மாற்­றுக் கருத்­துக்­கள் வந்து இங்கே எந்த ஊட­கத்­துக்­கும் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">ஏன் எமர்­ஜென்சி கொண்டு வரப்­பட்­டது, அதன் அடக்கு முறை என்­ப­தைப் பற்றி யாருக்­கும் எது­வும் தெரி­யாது. பத்­தி­ரிக்கை தணிக்கை கிடை­யாது அன்­றைக்கு டெலி­வி­ஷன் கிடை­யாது. ரேடியோ மட்­டும் தான் இருந்­துச்சு. வானொலி மட்­டும் முழுக்க முழுக்க அவர்­கள் சார்பு செய்­தி­கள் மட்­டும்­தான் வரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">பத்­தி­ரி­கை­க­ளுக்கு  தனிக்கை செய்­தி­க­ளும்  ஒரு சார்பு செய்­தி­தான் வரும். அந்த மாதிரி இருக்­கிற நேரத்­தில், இந்த ஏ.கே. கோபா­லின் ஒரு பேச்சு முக்­கி­ய­மான ஒரு பேச்சு, அதை வந்து தமிழ்­நாட்­டில் பல லட்­சக்­க­ணக்­கில் தட்­டச்சு செய்து, தமிழ்­நாடு முதல் எச்­ச­ரிக்கை விடப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">இந்த எமர்­ஜென்­சி­யி­னு­டைய கொடுமை பற்றி விடப்­பட்­டது.  இன்­னொரு விஷ­யம் என்­னென்­றால் காம­ரா­ஜ­ருக்­கும் காம­ரா­ஜர் காங்­கி­ரஸ் வந்து கலை­ஞர் ஆத­ரிக்­க­வில்லை., ஆனால் காம­ரா­ஜர்  இந்த எமர்­ஜென்­சி­யால் வந்து கடு­மை­யாக பாதிக்­கப்­பட்டு எதிர்த்­தார் .ரொம்ப வருந்­தும் மன­நி­லை­யில் இருந்­தார்.  கலை­ஞ­ருக்­கும் காம­ரா­ஜ­ருக்­கும் இடை­யில் இந்த அடக்கு முறைக்கு எதி­ரான ஒரு நட்­புங்­கி­றது ஒரு பெரிய உணர்வா பிர­தி­ப­லிக்க ஆரம்­பிச்­சது. அப்­ப­தான் காம­ரா­ஜர்  காங்­கி­ரஸை எதிர்த்து கொண்டு வந்த தொடர்ச்­சியா எழுதி கொண்­டு­வந்த முர­சொலி பத்­தி­ரி­கை­யில் காம­ரா­ஜர் வந்து எமர்­ஜென்சி எதிர்த்து அடக்கு முறையை எதிர்த்து பேசிய பேச்சை எல்­லாம் முர­சொலி பத்­தி­ரி­கை­யில் கலை­ஞர்  வெளி­யிட ஆரம்­பிச்­சார்.   கலை­ஞர் பேச ஆரம்­பிச்சு, அவரை கைது செய்­ய­னும் அப்­படி என்­கிற ஒரு நிலைமை வரும் போது கூட, நான் காம­ரா­ஜரை கைது செய்ய மாட்­டேன்  என்று அவர் உறு­தி­யான ஒரு நிலைப்­பாடு எடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">பத்­தி­ரிக்கை சென்­சார் எல்லா இடத்­தி­லும் நடந்­துச்சு, ஆனா தி.மு.க.ஆட்­சி­யில் பத்­தி­ரிக்கை சென்­சார் அப்­ப­டிங்­கி­றது வந்து, நீங்­கள் பத்­தி­ரிகை சென்­சார் வைக்­க­ணும் அப்­ப­டின்னு சென்ட்­ரல் கவர்­மெண்ட்­டில் ஒரு உத்­த­ரவு வந்­தப்­போது, சென்­சார் அதி­கா­ரின்னு ஒரு பரஞ்­ஜோ­திங்­கிற ஒரு அதி­கா­ரியை  பேருக்கு மட்­டும் அதி­கா­ரி­யாக வைச்­சி­ருந்­தார்­க­ளேத் தவிர, எந்­தப் பத்­தி­ரி­கைக்­கும் இந்த சென்­சா­ருக்கு யாரும் போறது கிடை­யாது. எந்த பத்­தி­ரிக்­கை­யும் ஒரு சென்­சார் செய்­ய­ற­தும் கிடை­யாது. நாங்­கள் ஒரு அதி­கா­ரின்னு வச்­சி­ருந்­தோம் என்­ப­தோடு நிறுத்­தி­யி­ருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">ஆட்சி கலைக்­கப்­ப­டு­கிற வரை­யி­லும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">விடு­தலை இரா­ஜேந்­தி­ரன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">அந்த பீரி­யட் தான்,  அந்­தப் பீரி­யட்டை   தான் நான் முழு­மை­யாக பத்­தி­ரிகை  எந்த தடை­யும் இல்­லா­மல் எழு­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">தமிழ்­நாட்­டில் மட்­டும்­தான் இந்த அவ­ர­நிலை கொடு­மையை பற்றி விரி­வாக எழு­தக்­கூ­டிய ஒரு கருத்து சுதந்­தி­ரத்தை இந்த அவ­ச­ர­நிலை அடக்கு முறைக்கு கீழே தன்­னு­டைய அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி அந்த உரி­மை­களை வந்து எப்­படி கலை­ஞர் வழங்­கி­னார். அப்­ப­டி­யென்­கிற விஷ­யத்தை நான்  சொல்ல வரு­கி­றேன். அதே மாதி­ரி­தான்  இந்­தக் கருத்து உரிமை, ஒரு கட்­டத்­துக்கு மேலே வந்­தப்­போது  காம­ரா­ஜ­ரு­டைய மர­ணம் அப்­போ­து­தான் நடக்­கி­றது. அப்­பு­றம் அவ­ருக்கு வந்து எந்த மண்­ட­பத்­தில் அமைக்­கி­றது போன்ற அந்த  முயற்­சி­கள் எல்­லாமே செய்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">ரெண்டு விஷ­யம். ஒன்று  தோழர் தியாகு  கிட்டே கேட்­கி­றது. பொலிட்­டிக்­கல் டிடென்யூ, ஒரு அர­சி­யல் கைதி, மிசா­வில்  சிட்டி பாபு எம்.பி. இருந்­த­வரு, ஆற்­காடு வீரா­சாமி அமைச்­ச­ராக இருந்­த­வர், எம்.பி., எம்.எல்.ஏ.வாக இருந்­த­வர். அர­சி­யல் தலை­வர்­கள் சி.பி.எம்.யைச் சேர்ந்­த­வர்­கள்,  கைது செய்­யப்­ப­டு­கி­றார்­கள். தி.மு.க.வை சேர்ந்­த­வங்­கள் கைது செய்­யப்­ப­டு­றார்­கள், நக்­சல் இயக்­கங்­களை சேர்ந்­த­வங்­க­ளுக்கு அந்­தப் பிரச்­சினை வரு­கி­றது, ஆர்.எஸ்.எஸ். சைச் சேர்ந்­த­வர்­கள், பி.ஜே.பி.யை சேர்ந்த மூத்த தலை­வர்­களே அந்த அடக்கு முறைக்கு ஆளா­னார்­கள், இன்­றைக்­கும் அவர்­கள்  நெருக்­கடி நிலையை ஒரு கருப்பு நாள், அப்­ப­டின்­னு­தான் அத்­வானி திரும்ப திரும்ப சொல்­லிட்டே இருக்­கி­றார். இப்­போது  ஒரு முக்­கி­ய­மான கேள்வி  ஸ்டாலின் அவர்­க­ளைப் பற்­றிய ஒரு அவ­தூறு அல்­லது இந்த கருத்து சொல்­லும்­போது, அவர் அர­சி­யல் கைதி அல்ல, ஒரு பொலிட்­டி­கல் டிட்­டனி அல்ல அப்­ப­டின்னு சொல்­றாங்­களே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.8">தோழர் தியாகு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">இதை சொல்லி இருக்­கி­ற­வர், சட்­டத்­துறை நீதித்­து­றைக்கு அமைச்­ச­ராக இருப்­ப­வர் , அவ­ருக்கு சட்­டம் பற்றி, நீதி பற்றி தெரிஞ்­சி­ருக்­க­ணும் இல்­லையா?   இதை நான் வாதமே கேட்­கி­றேன். அவர் பதில் சொல்­லட்­டும். நான் என்ன கேட்­கி­றேன்னா, நான் ஏற்­க­னவே சொன்ன மாதிரி, ஸ்டாலினை கொண்டு வந்து எந்த கொட்­ட­டி­யில் அடைக்­கி­றாங்க, மிசா பிளாக்லே அடைக்­கி­றாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">ஜெயில்ல வந்து செக்­ரி­கே­ஷன் ரொம்ப முக்­கி­யம். விசா­ரணை கைதி­கள் தனியா இருப்­பாங்க. தண்­டனை கைதி­கள், நீண்ட தண்­டனை கைதி­கள், குறைந்த தண்­டனை கைதி­கள், கடுங்­கா­வல், வெறுங்­கா­வல் இப்­படி எல்­லாம் பிரித்து வச்­சி­ருப்­பாங்க. இப்­படி நக்­ச­லைட்டா இருக்­க­ற­வங்க, அர­சி­யல் கைதி­கள்  என்று பிரித்து வச்­சி­ருப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">மிசா கைதி­கள் தனி பிளாக், அதில் வேற யாரை­யும் அவங்­க­ளோட சேர்த்து போட முடி­யாது. அங்கே வேலைக்கு போற­வர்­கள் மற்­ற­வர்­கள் காவ­லர்­களை தவிர ஒரு மிசா கைதி­யும் அர­சி­யல் கைதி­யும் வேறு ஒரு சாதா­ரண கைதி­யை­யும் ஒரு கொட்­ட­டிக்­குள்­ளயே அடைத்து வைக்க முடி­யாது. ஒரு பிளாக்­கில் வைக்க முடி­யாது. ஒன்­ப­தாம் பிளாக் என்ன பிளாக்? அது மிசா பிளாக். எல்­லா­ரும் எழு­திட்­டாங்க. எல்­லாத்­து­லே­யும் வந்­து­ருக்கு இந்­தச் செய்தி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">இஸ்­மா­யில் ஆணைய அறிக்கை மிக தெளி­வான சான்று. இந்த அறிக்­கை­யில் இருக்­கி­ற­படி மூணா­வது ரூம்­மில் மூணா­வது அறை­யில் கொட்­ட­டி­யில் சிட்­டி­பாபு என்ற மிசா கைதி­யோ­டும் வி.எஸ். கோவிந்­த­ரா­ஜன் என்ற மிசா கைதி­க­ளோ­டும் நீல­நா­ரா­ய­ணன், ஆற்­காடு வீரா­சாமி என்ற மிசா கைதி­க­ளோ­டும் மு.க.ஸ்டாலின் அடைக்­கப்­பட்­டது மிசா சட்­டத்­தி­லேயா அல்­லது வேறு வழக்­கி­லேயா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">இப்ப நீங்க சொல்­றீங்க, அவர் வேறு வழக்­குல போனாரு, வேறு குற்­றத்­துக்­காக போனார்.  அந்த குற்­றத்­துக்­காக ஒருத்­தரை ஜெயில்ல அனுப்­பு­றது எப்­படி அனுப்ப முடி­யும்? எவ்­வ­ளவு மோச­மான சர்­வா­தி­கார ஆட்­சி­யி­லே­யும் ஒரு போலீஸ் அதி­காரி, ஒருத்­தரை கொண்டு போய் இவரை ஜெயி­லில் போட்டு வைங்­கன்னு அனுப்ப முடி­யாது. நீங்­கள் என்ன செய்­ய­னும் ரிமாண்ட் ஆர்­டர், காவல் ஆணை வாங்­க­ணும், முதல் தக­வல் அறிக்கை தாக்­கல் பண்­ண­னும். குற்­றப்­பத்­தி­ரிகை கொடுக்­க­ணும். அவர் ரிமாண்ட் செய்த பிற­கு­தான், நீங்க என்ன செய்ய வேண்­டும் என்­றால் ஜெயில்லே கொண்டு போய் ஒப்­ப­டைக்க முடி­யும்.  எந்த கோர்ட்டு, எந்த குற்­றத்­துக்­காக அவரை ரிமாண்ட் செய்­தீர்­கள் என்­பதை  நீங்­கள்­தான் அர­சாங்­கத்­தில் இருக்­க­றீர்­கள்,  அன்­றைக்கு  டிஜிட்­டல் ரெக்­கார்­டிங் கிடை­யாது. ஆனால் எழுதி வச்­சி­ருக்­கி­றார்­கள். ஹாட் காப்­பீஸ் இருக்கு. எடுத்து கொடுங்­கள் டிட்­டென்ஸ் காட்டி இருக்­கி­றார்­கள் இல்­லையா நீங்­கள் எடுத்து கொடுங்­கள், ரிமாண்ட் ஆர்­டர் எந்த மேஜிஸ்ட்­ரேட் போட்­டார், எப்­படி போட்­டார் அது என்ன குற்­றம், அவர் மேல என்ன செக்­சன் என்ன பிரி­வின்­படி குற்­றம் ஐ.பி.சி.இல என்ன பிரி­வின்­படி அவர் குற்­றம் செய்­தார். சரி, அது அப்­பு­றம் என்ன ஆச்சு? அதுக்கு பிறகு திரும்ப கோர்ட்­டில் போய் ரிமாண்ட் ஆர்­டர் எக்ஸ்­டென்ட் பண்­ணாங்­களா? அவரை கஸ்­ட­டி­யில் எடுத்து விசா­ரிச்­சாங்­களா? எது­வுமே இல்­லா­மல் நீங்­கள் கற்­ப­னை­யாக இது வேறு குற்­றத்­துக்கு போனாரு, மிசா காலத்­தில் சிறைக்கு போனார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.8">ஆனால் மிசா­வில் சிறைக்கு போக­வில்லை, சான்று கொடுக்­க­ணும் இல்­லையா. நீங்­கள் சட்­டத்­துறை அமைச்­சர் உங்­க­ளுக்கு இந்த சட்­டம் எல்­லாம் தெரிஞ்­சி­ருக்­க­ணுமே, அப்­படி இல்­லை ன்னு சொன்னா இது முற்­றி­லும் அவ­தூ­று­தான்.  இதுக்கு வேறு என்ன பேர் சொல்ல முடி­யும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="14">(தொடர்ச்சி நாளை)</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>