<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="15/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,437,956,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Sep 14 2026 22:04:09 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260915T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="15092026-TRY-04" position.sequence="04" ex-ref="15092026-TRY-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="75">முப்பெரும் விழா -தமிழர்களின் குடும்ப விழா!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup871232_04_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Muperuvizaanc_04_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Bramma" fontStyle="Regular" size="15.5">கு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ரு­குல போராட்­டம்,வைக்­கம் போராட்­டம், ஆலய பிர­வே­சம், சுய­ம­ரி­யாதை இயக்­கம், தீண்­டாமை ஒழிப்பு என்று தன்­னு­டைய பொது­வாழ்வு முழு­வ­தும் போராட்ட வீர­ரா­கவே களத்­தில் நின்­ற­வர் தந்தை பெரி­யார் “ போருக்கு தயா­ராக இருப்­ப­வர்­கள்  சிறைச்­சா­லைக்கு செல்­லு­தல் என்ற நிலை­யோ­டும் நினைப்­போ­டும் இருக்­கக் கூடாது.செங்­கு­ருதி கொட்­ட­வும், செத்து மடி­ய­வும் சித்­த­மாக இருக்க வேண்­டும்.தாங்­கள் முடிக்க என்­னும் கரு­மத்­துக்கு சிறைக்கு செல்­லு­தல் என்­பது மிக மிக சாதா­ர­ண­மான காரி­ய­மென்று யாரும் எண்ணி விடக்­கூ­டாது, சிறை சொல்­வது போதாதா? என்று எண்ணி விடக்­கூ­டாது,சிறைச்­சா­லைக்கு செல்­வது சாதா­ரண ஒரு அற்ப காரி­யம் ஆகும்.அதை மூன்­றாம் தர ஆட்­க­ளுக்கு விட்­டு­விட வேண்­டும் பிர­மு­கர்­க­ளும், பொறுப்­பா­ன­வர்­க­ளும் அடி­ப­ட­வும்,உயிர்­வி­ட­வும் தயா­ராக இருக்க வேண்­டும்...! “ என்று தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு வேண்­டு­கோள் விடுத்து விடு­தலை நாளேட்­டில் தலை­யங்­கம் தீட்­டிய பெரி­யார் அவர்­க­ளின் பிறந்த நாள் - செப்­டம்­பர் 17ஆம் நாள் ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“மதம்.மொழி,கலாச்­சா­ரம்,ஓர் குடி­மக்­கள் என்ற உணர்ச்சி,வர­லாற்­றுப்­பந்­தம் இவை­கள் தான் இன இயல்­பா­கும்.இந்த வகை­யில் பார்த்­தால் இந்­தி­யா­வில் தனித்­தனி இனங்­கள் உண்டு,அவர்­களை மூன்று பெரும் பிரி­வு­க­ளாக கொள்­ள­லாம்.திரா­வி­டர் முஸ்­லிம்,ஆரி­யர் இந்த மூன்று வகை இனங்­க­ளில் திரா­வி­ட­ருக்­கும், முஸ்­லி­மும் இன இயல்­பு­க­ளில் அதிக வித்­தி­யா­சம் கிடை­யாது ஆரிய இன இயல்­பு­க­ளுக்­கும் மற்ற இரு இன  இயல்­பு­க­ளுக்­கும் துளி­யும் பொருத்­தம் கிடை­யாது, பகைமை பெரி­தும் உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனவே இந்த அடிப்­ப­டை­யில் இந்­தி­யாவை இன வாரி­யாக பிரிக்க வேண்­டும் இல்­லை­யேல் எந்த இனம் தந்­தி­ரத்­தா­லும் சூழ்ச்­சி­யா­லும் அதி­கா­ரத்­தைப் பெற்று இருக்­கி­றதோ அந்த இனத்­திற்கு மற்ற இனங்­கள் அடி­மை­யாக இருக்க நேரி­டும்..!” என சூளு­ரைத்து பொது­வாழ்­வில் புயல் போல் உரு­வெ­டுத்த பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் பிறந்த நாள் - செப்­டம்­பர் 15 ஆம் நாள் ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1949 ஆம் ஆண்டு செப்­டம்­பர் திங்­கள் 17ஆம் தேதி  - சென்னை ராய­பு­ரம் ராபின்­சன் பூங்கா மைதா­னத்­தில் கொட்­டும் மழை­யில் தி.மு.க. கழ­கம் துவங்­கப்­பட்ட நாள். சமு­தாய துறை­யிலே சீர்­தி­ருத்­தம், பொரு­ளா­தார துறை­யில் சம­தர்ம குறிக்­கோள், அர­சி­ய­லில் வட நாட்டு ஏகா­தி­ப­தி­யத்­தில்  இருந்து விடு­தலை ஆகிய கொள்­கைள் தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் கோட்­பா­டு­க­ளா­கும் என அறி­ஞர் அண்ணா அப்­போது அறி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தந்தை பெரி­யார் பிறந்த நாள்,அறி­ஞர் அண்ணா பிறந்­த­நாள், தி.மு.க. கழ­கத்­தின் பிறந்­த­நாள்.இந்த மூன்று பிறந்­த ­நாள்­க­ளை­யும் இணைத்து “முப்­பெ­ரும் விழா” என தமிழ்­நாட்­டுக்கு முதல் முத­லாக அறி­வித்­த­வர் முத்­த­மி­ழ­றி­ஞர்  
கலை­ஞர் அவர்­கள், 1974 ஆம் ஆண்டு சென்னை மெரினா கடற்­க­ரை­யில் எழுச்­சி­யோ­டும்,துடிப்­போ­டும் லட்­சோ­ப­லட்­சம் தமி­ழர்­கள் திரண்­டி­ருக்க நடை­பெற்ற முப்­பெ­ரும் விழா­வில் ஒவ்­வொரு விழாவை பற்­றி­யும்,அதன் சிறப்­பு­கள் பற்­றி­யும் முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர்.கலை­ஞர் அவர்­கள் ஆற்­றிய உரை மறக்க முடி­யாத வர­லாறு !</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1985 ஆம் ஆண்டு முதல் முப்­பெ­ரும் விழா­வில் பெரி­யார்,அண்ணா,கலை­ஞர் என முப்­பெ­ரும் தலை­வர்­கள் பெய­ரில் விரு­து­கள் வழங்­கப்­ப­டும் என அறி­விக்­கப்­பட்டு அது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது.அன்று முதல் தியா­கத்­தால்,கொள்கை உறு­தி­யால்,தன்­ன­ல­மற்ற உழைப்­பால்,மக்­கள் தொண்­டால்,உயர்ந்­தோங்கி நின்ற கழ­கத்­தி­னரை அடை­யா­ளம் கண்டு அவர்­க­ளுக்கு தலை­வர்­க­ளின் பெய­ரில் உரு­வாக்­கப்­பட்ட விரு­து­கள் ஒவ்­வொரு ஆண்­டும் நடை­பெ­றும் முப்­பெ­ரும் விழா­வில் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1999 ஆம் ஆண்டு திமு­க­வின் பொன் விழா ! அப்­போது தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­ச­ராக முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர்.கலை­ஞர் அவர்­கள் ஆட்சி சிம்­மா­ச­னத்­தில் அமர்ந்­தி­ருந்­தார்­கள்,அண்ணா அறி­வா­ல­யத்­தில் நடை­பெற்ற முப்­பெ­ரும் விழா­வில் புரட்சி கவி­ஞர் பார­தி­தா­சன் பெய­ரில் மேலும் ஒரு விருது வழங்­கப்­ப­டும் என்று அறி­விப்­பினை முத்­த­மி­ழ­றி­ஞர்  கலை­ஞர் வெளி­யிட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2018 ஆம் ஆண்டு தி.மு.­க.­வின் ஒப்­பா­ரும் மிக்­கா­ரும் இல்லா அன்பு அண்­ணன் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் கழ­கத்­தி­ன­ரால் தலை­வ­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பிறகு முப்­பெ­ரும் விழா­வில் இன­மான பேரா­சி­ரி­யர். அவர்­க­ளின் பெய­ரில் விருது அறி­விக்­கப்­பட்டு அது நடை­மு­றை­யில் இருந்து வரு­கி­றது.2025 ஆம் ஆண்டு முதல் “முர­சொலி செல்­வம்” விருது முர­சொலி அறக்­கட்­டளை சார்­பில் கழக முப்­பெ­ரும் விழா­வில் வழங்­கப்­பட்டு வரு­கி­றது .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தி.மு.­க.­வின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">வெள்ளி விழா 1974 ஆம் ஆண்டு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பொன் விழா 1999 ஆம் ஆண்டு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பவள விழா 2024 ஆம் ஆண்டு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இந்த மூன்று முக்­கிய நிகழ்­வு­க­ளும், லட்­சோ­ப­லட்­சம் கழ­கத் தொண்­டர்­க­ளின் எழுச்­சி­மிகு உணர்ச்­சி­களை பிர­தி ­ப­லிக்­கின்ற வகை­யி­லும்,உல­க­மெல்­லாம் பரவி, விரவி கிடக்­கின்ற தமி­ழர்­க­ளின் உள்­ள­மெல்­லாம் குதூ­க­லிக்­கின்ற வகை­யி­லும் முப்­பெ­ரும் விழா தமி­ழி­னத்­தின் இல்­லந்­தோ­றும் கொண்­டா­டும் விழா­வாக அமைந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மதுரைஜான்­சி­ராணி பூங்­கா­வில் மைதா­னத்­தில் திமு­க­வினை இளை­ஞ­ரணி மூலம் துடிப்­பான இயக்­க­மாக மாற்றி விட இளைய தலை­மு­றை­யின் எழுச்­சி­மிக்க வரவை திமு­க­வில் ஏற்­ப­டுத்­திட முனைந்­தார் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள்,கழ­கப் பொதுச் செய­லா­ளர் இன­மானப் பேரா­சி­ரி­யர் மற்­றும் கழக மாவட்ட செய­லா­ளர்­கள்,முன்­னோ­டி­கள் என 100% ஆத­ர­வோடு அன்று நம் தள­ப­தி­யார் இளை­ஞர் அணி செய­லா­ள­ராக பொறுப்­பேற்று கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திமு­க­ழ­கம் புதிய எழுச்­சி­யோ­டும்,உணர்ச்­சி­யோ­டும்,பொங்­கிப் பெருக்­கெ­டுத்­தோ­டும் காவிரி,வைகை நதி­களை போல தமிழ்­நாட்டு மக்­க­ளி­டத்­தில் புதிய நம்­பிக்­கையை தோற்­று­வித்­தது.நமது தள­ப­தி­ய­ரின் தலை­மை­யில் மக்­கள் தொண்டு, தமி­ழர் நலம், கழ­கத்­தின் வளர்ச்சி, போராட்ட களங்­கள் என அனைத்­தி­லும் திமு­க­வின் இளை­ஞர் அணி ஈட்டி முனை­க­ளாக செயல்­பட்­டது.’எள்’ என்­றால் எண்­ணெ­யாக நின்­றது,தாய் கழ­கத்­துக்கு துணை­யா­க­வும்,தூணா­க­வும் திகழ்ந்­தது.மக்­க­ளி­ட­மும், கழ­கத்­தொண்­டர்­க­ளுக்கு மத்­தி­யி­லும் புதிய நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தி­ய­தோடு,எதிர்­கால தமிழ்­நாட்­டின் நம்­பிக்கை நட்­சத்­தி­ர­மாக அன்றே நமது அன்பு அண்­ணன் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் உயர்ந்­தோங்கி 
நின்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அறி­ஞர் அண்ணா,முத்­த­மிழ் அறி­ஞர்  கலை­ஞர் ஆகி­யோர் வகுத்து தந்த வழி­யில் அவர்­கள் நமக்கு அளித்த கொள்­கை­யில்,குறிக்­கோ­ளில்,கோட்­பாட்­டில் லட்­சி­யத்­தில்,கடு­க­ள­வும் பிர­ளா­மல் கழ­கம் எனும் கற்­கோட்­டையை மேலும் உறு­தி­யாக கட்­ட­மைத்­தார் நமது அன்பு அண்­ணன் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள். சென்னை மாந­க­ரத்­தின் மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட முதல் மேய­ராக, சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக, அமைச்­ச­ராக, தமிழ்­நாட்­டின் துணை முத­ல­மைச்­ச­ ராக,மக்­கள் சேவை­யில் படிப்­ப­டி­யாக பல்­வேறு நிலை­க­ளில் செயல்­பட்டு,மகத்­தான சாத­னை­களை  படைத்து தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­ச­ராக,கழ­கத்­தின் தலை­வ­ராக உரு­வெ­டுத்­த­வர் அவர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தனது 60 ஆண்டு கால பொது­வாழ்­வில் ஒவ்­வொரு கட்­டத்­தி­லும் எதிர் நீச்­சல் போட்டே இம­யத்­தின் சிக­ரத்தை தொட்­ட­வர்அவர் என்று சொன்­னால் அது மிகை­யா­காது. இதுவே ரீல்ஸ் ‘டல்­ப­தி’க்­கும் உண்­மை­யான தள­ப­திக்­கும் இருக்­கும் வித்­தி­யா­சம்.இன்று மக்­களை சந்­திக்­கா­மல்,மக்­கள் பிரச்­சி­னை­ கள் என்ன என்று கூட தெரி­யா­மல்,கொள்கை கோட்­பாடு என எது­வும் புரி­யா­மல் மஜா­வாக ஆட்சி கட்­டி­லிலே அமர்ந்­தி­ருப்­ப­வர்­க­ளுக்கு “மிசா” என்­றால் என்ன என்றோ,இடை­ய­றாது மக்­கள் பணி­யாற்றி,உழைத்து மக்­கள் மன­தில் இடம் பிடித்து ஆட்­சி­யில் அமர்ந்­த­வர்­க­ளின் மரி­யாதை என்ன என்றோ,என்­றைக்­கும் புரி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திமு­க­வின் பவள விழா ஆண்­டான 2024 ஆம் ஆண்டு முதல் கழ­கத்­தின் ஈடு இணை­யற்ற தலை­வர் திரா­விட பேர­ர­சர் அன்பு அண்­ணன் அவர்­கள் பெய­ரில் “தள­பதி மு.க.ஸ்டாலின் விருது” அறி­விக்­கப்­பட்டு முப்­பெ­ரும் விழா­வில் வழங்­கப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“என் பாதை சுய­ம­ரி­யாதை பாதை,தமி­ழின நலம் காக்­கும் பாதை,தமிழ் மொழி காக்­கும் பாதை,பெரி­யார் பாதை, 
அண்­ணா­வின் பாதை,அற­வ­ழிப்­பாதை, அமைதி பாதை, ஜன­நா­யக நெறி­முறை பாதை,பல முனை­க­ளில் பய­மு­றுத்­தி­னா­லும் அறி­ஞர் அண்ணா பாதை­யில் இருந்து மாற மாட்­டேன் எது வேண்­டு­மா­னா­லும் வர­லாம், புயல் வர­லாம்,சூறா­வளி வர­லாம்,கொந்­த­ளிப்பு வர­லாம் நான் மாறவே மாட்­டேன்” என்று தமி­ழி­னத்­துக்கு உறுதி அளித்து தமிழ் மண்ணை காத்து நின்ற முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர்.கலை­ஞர் அவர்­க­ளின் அடிச்­சு­வட்­டில் வீறு நடை போட்­டுக் கொண்­டி­ருப்­ப­வர் தான் நமது தலை­வர் மு க ஸ்டாலின்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">5 ஆம் தலை­மு­றையை நோக்கி திமு கழ­கம் மக்­கள் சேவை­யில் பீடு நடை போட்­டுக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">77 ஆண்டு கால கழ­கம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">2 கோடி தொண்­டர்­களை தன்­ன­கத்தே கொண்­டுள்ள மிகப்­பெ­ரிய ராணுவ சேனை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கன்­னி­யா­கு­ம­ரி­யில் இருந்து சென்னை கடற்­கரை வரை உயிர் துடிப்­பான செயல் மற­வர்­க­ளின் பாசறை !</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“மானம் அவன் கேட்ட தாலாட்டு,மர­ணம் அவன் ஆடிய விளை­யாட்டு..” என சங்க தமி­ழில் உள்ள புற­நா­னூற்று கட்­டி­ளம் காளை­க­ளோடு ஒப்­பிட்டு கழ­கத்­தி­னரை தமிழ் உல­கிற்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­வர் டாக்­டர்.கலை­ஞர்.ஈட்டி முனைக்­கும் இமை கொட்டா  இளை­ஞர் பட்­டா­ளம்நிரம்பி வழி­யும் படை வரி­சை­யில் “வெட்­டிவா”என்­றால் கட்டி வரும் வீரர்­கள் நிறைந்த கழ­கம்.அந்த கழ­கத்­தின் இளைய தலை­முறை எழுச்சி வடி­வம் தான் கழக இளை­ஞர் அணி செய­லா­ளர்,சட்­ட­மன்ற எதிர்க்­கட்சி தலை­வர், நம் இளம் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">வில்­லி­லி­ருந்து புறப்­பட்ட அம்­பு­க­ளாய்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கழ­கத்­தின் இளை­ஞர் பட்­டா­ளம் !</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கொந்­த­ளிக்­கும் கட­லாய் !</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">குமு­றும் எரி­ம­லை­யாய் ! தமிழ்­நாட்­டின் மூலை முடுக்­கெல்­லாம் குவிந்து நின்று இலக்கு நோக்கி பாய்ந்­திட காத்து நிற்­கின்­ற­னர். அவர்­களை வழி­ந­டத்­திட,ஆற்­றல்­ப­டுத்­திட,களம் அமைத்­திட  நமது இளம் தலை­வர் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் பம்­ப­ர­மாக சுழன்று பணி­யாற்றி,எதி­ரி­க­ளுக்கு சிம்ம சொப்­ப­ன­மாக திகழ்­கி­றார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­ட­மன்­றத்­தில் அவர் ஒரு­வர் கேட்­கும் கேள்­வி­க­ளுக்கு  5 அமைச்­சர்­கள் சேர்ந்­தும் பதில் அளிக்க முடி­யா­மல் திண­று­வதை நாம் கண்­கூ­டாக பார்த்­தோம், தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சரோ அவர் கேள்­விக்கு பயந்து வெளியே ஓடு­கி­றார். 3 நாட்­கள் கழித்து வந்­தும் கேட்ட கேள்­விக்கு பதில் அளிக்­கா­மல் சுற்றி வளைத்து பஞ்ச் டய­லாக்­கு­களை பேசி ரீல்ஸ்க்கு சூட்­டிங்கை நடத்தி விட்டு,ஏதோ ஓப்­பற்ற ஓர் உரையை நிகழ்த்தி விட்­ட­தாக புள­காங்­கி­தம் அடைந்து கொள்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நமது கழக தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் முத­ல­மைச்­ச ­ராக இருந்­த­போது பாசிச வெறி பிடித்த ஆளு­நரை சட்­ட­மன்­றத்­தில் இருந்து வெளியே ஓட விட்­டார். இன்று கழக இளை­ஞ­ரணி செய­லா­ள­ரும் எதிர்க்­கட்­சி­த­லை­வ­ரு­மான நமது இளம் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் கேள்­விக்கு பயந்து ரீல்ஸ் முத­ல­மைச்­சர் சட்­ட ­ச­பை­யில் இருந்து வெளியே ஓடி­யுள்­ளார்.புலிக்கு பிறந்­தது பூனை­யா­ வ­தில்லை,இந்த சின்­னஞ்­சிறு எலி­க­ளின் சல­ச­லப்பு நீண்ட நாட்­கள் நீளப்­போ­வ­தும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2026 ஆம் ஆண்டு செப்­டம்­ப­ரில் நடை­பெ­ற­வி­ருக்­கும் கழ­கத்­தின் முப்­பெ­ரும் விழா­வில் கழக பாச­றை­க­ளுக்கு கழ­கத் தலை­வ­ரின் அறை­கூ­வல் காத்­தி­ருக்­கி­றது, ‘இம்’­என்­றால் சிறை­வா­சம் ‘ஏன்’ என்­றால் வன­வா­சம் ! இது­தான் தமிழ்­நாட்­டின் இன்­றைய அர­சி­யல் களம் என்ற சர்­வா­தி­கார நிலை தலை­வி­ரித்­தா­டு­கி­றது. கழ­கத்­தி­னர் பார்க்­காத அடக்கு முறை­களா? பொய் வழக்­கு­களா? ஓராண்­டுக்­கும் மேலாக முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர்.கலை­ஞர் வீட்­டில் சிறை வைக்­கப்­பட்­டார்,அவர் உடன்­பி­றப்­பு­க­ளு­டன் தொடர்பு கொள்ள கூடாது என்று முர­சொலி கடி­தங்­கள் முடக்­கப்­பட்­டது, பேச்­சு­ரிமை,கருத்­து­ரிமை,நட­மாட உரிமை என அனைத்து அடிப்­படை உரி­மை­களை பறித்­த­னர் டெல்லி கட்­சி­யி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க. கலங்­க­வில்லை !</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கண்­ணீர் விட­வில்லை !</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடிக்க அடிக்க எழும் பந்­தி­னைப் போல</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.கழ­கம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அரி­மா­வென ஆர்த்­தெ­ழுந்து நின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆள் தூக்கி சட்­டம் - அவ­சர நிலை பிர­க­ட­னம் கண்­டது நம் கழ­கம். அடக்­கு­மு­றை­யினை ஏவி விட்டு நமது கழ­கத்­த­லை­வர் தள­ப­தி­யார் உட்­பட ஏரா­ள­மான கழ­கத்­தி­னரை சிறை­யில் அடைத்து,அடித்து துன்­பு­றுத்தி மிரட்­டி­னர்.வீர மற­வர்­கள் சிட்­டி­பாபு,சாத்­தூர் பால­கி­ருஷ்­ணன் ஆகி­யோரை சிறைக்­குள்­ளேயே அடித்து கொன்று, நம் கழ­கத்­த­லை­வர் அவர்­க­ளின் முது­கெ­லும்பை நொறுக்கி மர­ணத்­தின் எல்­லைக்கே கொண்டு சென்ற போதும் அதி­கா­ர­வர்க்­கத்­தின் அடக்­கு­மு­றைக்கு அஞ்­சா­மல் எதிர்த்து நின்ற இயக்­கத்தை,அதை வழி­ந­டத்­தும் தகு­தி­யான நமது கழ­கத்­த­லை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளை­யும்,அவ­ரின் வார்ப்­பாக இன்று ஈடில்லா இளை­ஞர் அணியை வழி­ந­டத்­தும் கருப்பு சிவப்பு படை­யின் வீரர் சட்­ட­மன்ற எதிர்க்­கட்சி தலை­வர்,நமது இளம் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் ஆகி­யோரை கொண்ட இயக்­கம் நமது தி.மு.­க­ழ­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றும் நமது கழ­கம்  மட்­டுமே தமிழ் இனத்­தின் அர­னாக திகழ்­கி­றது.இன்­னும் 100 ஆண்­டு­கள் அல்ல ஆயி­ரம் ஆயி­ரம் ஆண்­டு­கள் ஆனா­லும் திமுக தமிழ் இனத்­தின் மூச்­சா­க­வும், பேச்­சா­க­வும், உயி­ரா­க­வும், உட­லா­க­வும் இருக்­கும். நடை­பெற உள்ள முப்­பெ­ரும் விழா எனும் நமது குடும்ப விழா­வில் நாம் அனை­வ­ரும் திர­ளாக கலந்துகொண்டு கழ­கத்­தை­யும் தமிழ்­நாட்­டை­யும் அடுத்த நிலைக்கு எழுச்­சி­யோடு எடுத்­துச் செல்ல உறுதி பூண்டு புறப்­ப­டு­வோம்!!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என்­றும் கழ­கத் தலை­வர் வழி­யில்</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>