<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="16/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,63,959,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 15 2026 14:43:30 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260916T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="16092026-TRY-05" position.sequence="05" ex-ref="16092026-TRY-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">உண்மையில் நடந்தது என்ன?</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">‘மிசா’ அடக்குமுறை: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கைதும் சர்ச்சைகளும்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">‘சன் நியூஸ்’ தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் – தோழர் தியாகு – விடுதலை ராஜேந்திரன் விளக்கம்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="SunNews1c_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">(நேற்­றைய தொடர்ச்சி)
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.1">சன் நியூஸ் தொலைக்­காட்­சி­யில்  மு.குண­சே­க­ரனைநெறி­யா­ள­ரா­கக் கொண்டு நடை­பெற்ற சிறப்பு விவாத நிகழ்ச்­சி­யின் விவ­ரம் வரு­மாறு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">அக்­கி­ர­ம­மான அரு­வ­றுப்­பான அவ­தூறு. ஒரு அரை­கு­றை­யான ஒருத்­த­ருக்கு நினைவு தவறி சொல்­றாரு, ஒரு எரர் இன்ஃக்ட், எரர் இன்லா அப்­படி எல்­லாம் சமா­தா­னமே சொல்ல முடி­யாது. திட்­ட­மிட்ட அவ­தூறு ஒரு பொய், முழு பொய், கொடிய பொய், ஒரு பிளாக் லைக், இதைத் தவிர இதுக்கு வேறு  என்ன இருக்க முடி­யும். இத­னால நான் என்ன சொல்­றேன்னா, இந்த ஆர்க்­யு­மெண்ட்டை நம்ம பேஸ் பண்ணி முறி அடிக்­க­ணும். ஏன்னா இந்த அவ­தூறை நம்­பக்­கூ­டிய ஒரு கூட்­டம் இருக்­கு­துங்­க­ற­து­தான் நீங்க சொல்ற அந்த நிலை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">நிகழ்­கா­லத் தமிழ்­நாடு, அதை நம்­புற, இடத்­துல கொஞ்­சம் பேரு...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">தோழர் தியாகு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">நிகழ்­கா­லத் தமிழ்­நாடு எல்­லாம் இல்­லைங்க. நம்ம அந்த விவா­தத்­துக்­குள்ள போக வேண­டாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">இன்­றைக்கு நிறைய பேர் இன்­னைக்கு வந்து அர­சி­யலை அறி­யா­த­வர்­கள் மிசாவ தெரி­யா­த­வங்க இந்த இன்ஸ்­டாவ ரீல்ஸ் பார்க்­கி­ற­வங்க ஷாட்ஸ் பார்க்­கி­ற­வங்­க­ளுக்கு அமைச்­சர் சட்ட அமைச்­சர் நிர்­மல் குமார் சொன்­னது உண்­மைன்னு நம்­பு­வாங்க, விஜய் பேசி­னது உண்­மைன்னு நம்­பு­வாங்க...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">தோழர் தியாகு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">இல்லை. அது உண்மை இல்லை. பொய்ன்னு நம்ம அவர்­க­ளுக்கு மெய்ப்­பித்­துக் காட்­டு­வோம்னு சொல்­றேன். நான் ஒன்­றும் தப்பா எல்­லாம் சொல்­லல. அது உண்மை இல்லை பொய்ன்னு சான்­று­க­ளோடு அவங்க வந்து காட்­டட்­டும், நான் கேட்­கி­றேன்ல,  மிசா கைதி, மிசா கொட்­ட­டி­யில் இருந்­தாரு, மிசா சட்­டத்­தின்­படி கைது செய்­யப்­பட்­டார். மிசா சட்­டத்­தின்­படி காவல் உத்­த­ரவு போட்­டி­ருக்­கி­றாங்க, எல்­லாத்­தை­யும் வெளிப்­ப­டுத்­தி­யாச்சு. அவர் அந்த பிப்­ர­வரி 1ஆம் தேதி முதல் நெருக்­கடி நிலை முடிந்து வெளியே விடு­கிற காலம் வரைக்­கும் சிறை­யில் தான் இருந்­தார். ஒரு ஆண்­டுக்கு மேல, இதெல்­லாம் தெளிவா தெரிந்த செய்­தி­தானே. நீங்க இதுக்­கெல்­லாம் சான்று கேட்டா என்ன அர்த்­தம். அதுக்கு மேலே இஸ்­மா­யில் ஆணை­யம் அறிக்கை இருக்­குது. இப்ப நம்ம ஃபேட்­டு­வலா நான் சொல்­றேன், ஜெயில் பழக்­கத்தை வச்சு சொல்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">இஸ்­மா­யில் ஆணை­யம்னு சொல்­றீங்க, இஸ்­மா­யில் ஆணை­யம்னா என்­னன்னு சொல்­ல­ணும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">தோழர் தியாகு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">நான் சொல்­றேன், நீதி­பதி மூ.இஸ்­மா­யில்ன்னு கேள்­விப்­பட்­டி­ருக்­கியா, தமிழ்­நாட்­டில் தமிழ் தெரிந்த கடைசி தலைமை நீதி­பதி அவர்­தான். ஒரு இஸ்­லா­மி­யர். கம்­பனை பற்றி பேசினா எல்­லோ­ரும் ரசிச்சு கேட்­டுக்­கிட்டு இருப்­பாங்க. தமிழ் இலக்­கி­யத்­தில் வல்­ல­வர் அவரு. அந்த இஸ்­மா­யில் விசா­ரணை எல்­லாம் நீங்க எல்­லாம்  படித்­தீர்­கள் என்­றாலே நிறைய பாடங்­கள் கிடைக்­கும்.  இஸ்­மா­யில் கமி­ஷன்ல நம்­பர் டூ விட்­னஸ் யாருன்னா, ஸ்டாலின் தான் ரெண்­டா­வது விட்­னஸ். அங்கே நடந்த ஒரு விவா­தத்தை மட்­டும் நான் உங்­க­ளுக்கு சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">சிறை­யில் அடக்­கு­முறை நடக்­கி­றது. அதை விசா­ரிக்­கி­ற­துக்கு போடப்­பட்­டி­ருக்­கின்ற ஒரு கமி­ஷன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">தோழர் தியாகு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">போடப்­பட்ட ஆணை­யம், நீங்க அது வந்து என்­னன்னா, ஷா கமி­ஷ­னுக்கு முன்­னா­லயே போடப்­பட்ட ஆணை­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">ஷா வந்து நேஷ­னல்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">தோழர் தியாகு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">ஷா வந்து மொரார்ஜி தேசாய் ஆட்­சிக்கு வந்த பிறகு போடு­றாங்க. இங்கே பிர­பு­தாஸ் பட்­வா­ரிய ஆளு­ந­ராக இங்கே அனுப்பி வைக்­கி­றாங்க.  உடனே, ஏன்னா நாங்க எல்­லாம் ஜெயில்ல அப்ப, என்ன பண்­றோம்னா, பிர­பு­தாஸ் பட்­வாரி அறிக்கை விட்­டுக்­கிட்டே இருக்­கி­றார். எல்லா ஊர்­லை­யும் அர­சி­யல் கைதி­களை விடு­தலை பண்­றோம். தமிழ்­நாட்­டி­லே­யும் எல்லா அர­சி­யல் கைதி­க­ளை­யும் விடு­தலை பண்­ண­ணும்  என்று அவர் சொல்­லிக்­கிட்டே இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">எம்.ஜி.ஆர். வரு­வ­தற்கு முன்­னால் நான் சொல்­றேன். அப்­படி அவர் போட்ட உத்­த­ர­வு­தான் இஸ்­மா­யில் ஆணை­யம். எம்.ஜி.ஆர். அரசு போட்ட உத்­த­ரவு அல்ல. அப்­படி இஸ்­மா­யில் ஆணை­யத்தை போட்டு, உத்­த­ரவு போட்டு நடத்­தும்­போது அந்த ஆணை­யத்­தில் சந்­துரு வந்து வழக்­க­றி­ஞரா, இளம் வழக்­க­றி­ஞரா சி.பி.எம். கைதி­க­ளுக்­காக அவரு வாதிட்­டார். வேறு பல வழக்­க­றி­ஞர்­கள் வாதிட்­டார்­கள், ஜெயி­லுக்கே போய் பார்த்­தா­ருங்க, சந்­திரு சி.பி.எம். கைதி­களை சந்­திச்சு அதில் ஸ்டாலின் வந்து அவ­ரு­டைய புத்­த­கத்­திலே எழுதி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">ஒரு இளம் வழக்­க­றி­ஞர் இன்­னைக்கு வந்­தி­ருந்­தாரு. அவர் சி.பி.எம். கைதி­களை எல்­லாம் பார்த்­துட்டு போனாரு. அவர் வந்­துட்டு போன­துக்­குப் பிறகு எங்­க­ளுக்கு என்­னென்ன பொருள் எல்­லாம் கொடுத்­தாங்க. சோப்பு, லுங்கி எல்­லாம் கொடுத்­தாங்க என்­றெல்­லாம் எழுதி வச்­சி­ருக்­கி­றார். அவர்­தான் சந்­தி­ருன்னு அப்­பு­றம் தெரிஞ்­சு­கிட்­டேன்.  இப்­போது  எழு­து­றார்,   அதில் என்ன முக்­கி­ய­மான விஷ­யம்னா வித்­யா­சா­கர் தரப்­பில் ஒரு வாதம் முன்­வைக்­கப்­பட்­டது. என்ன வாதம் முன் வைக்­கப்­ப­டு­துன்னா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">மார்ச் மூணாம் தேதி அன்­றைக்கு ஸ்டாலினை அவங்க அப்பா நேரில் பார்க்க வந்­தார். பார்க்க வந்­த­போது ஸ்டாலின்  எப்­படி இருக்­கிற? உன்னை எப்­படி நடத்­து­றாங்க?  என்று கேட்­டார்.  நல்லா நடத்­து­றாங்க, என்னை அடிக்­க­லைன்னு ஸ்டாலின் அப்­பா­வி­டம் சொன்­னார். இதை வந்து நான் கடி­தம் மூலமா உட­ன­டி­யா­கவே அதி­கா­ரிக்கு, மற்­ற­வங்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­து­றேன். இன்­றைக்கு முன்­னாள் முதல்­வர்வந்­தி­ருக்­கி­றாரு, அவர் பையனை பார்த்­தாரு, பையன்கிட்ட,   இவங்க திரும்­பத் திரும்ப கவர்­னர் அலு­வ­ல­கத்­தில் இருந்து மத்­திய அர­சில் இருந்து கடி­தம் வந்­து­கிட்டே இருக்கு. சென்னை சிறை­யில் ஏதோ நடக்­கு­றதா சொல்­றாங்க என்ன உண்மை  என்று கேட்­டுக் கிட்டே இருக்­காங்க, எது­வுமே இல்லை அவ­தூறு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">ஜி.லட்­சு­ம­ணன்  பார்­லி­மெண்­டில் பேசி இருக்­காரு, அதற்கு பிர­மா­னந்த ரெட்டி பதில் சொல்லி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">தோழர் தியாகு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">இரண்­டாம் தேதி அன்­றைக்கு இரவு கொட்­டடி  போக மறுத்து வம்பு செய்­த­போது குறைந்­த­பட்ச பலப் பிர­யோ­கம் செய்து, அவர்­களை உள்ளே அனுப்ப வேண்டி இருந்­த­துன்னு ஜெய­லரை விட்டு ஒரு நோட் எழு­து­றாங்க, கீழே சூப்­பர்­டெண்ட் ஆர்­டர் என்ன எழு­து­றார்னா, இப்­படி நடந்து கொள்­ளக் கூடாது என்று அவர்­களை எச்­ச­ரிக்­க­வும் என்று கீழ எழு­து­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">இதெல்­லாம் ரெக்­கார்ட் தயார் பண்­ணிக்­க­றாங்க, பின்­னால ஏதா­வது பிரச்­சினை வரும் என்­ப­தற்­காக.  இந்­தச் சூழல்ல கலை­ஞர் வந்து நேர்­கா­ணல், கலை­ஞர் வந்து பல களத்­தில் முயற்சி பண்­ணார் ஒரு பக்­கம் நெருக்­கடி நிலைக்கு எதி­ரான போராட்­டம், முர­சொ­லி­யில் தொடர்ந்து போட்­டுட்டு வரு­கி­றார். திரு­ம­ணங்­க ­ளில் யார் கலந்து கொள்ள முடி­யா­த­ வர்­கள் என்ற ஒரு பட்­டி­யல் வெளி­யிட்டு மிசா கைதி­கள் பட்­டி­யலை வெளி­யிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">இப்­படி எல்­லாம் நடந்­து­கிட்டு இருக்­கும் போது கவர்­னர் ஆபீஸ்ல இருந்து போன் பண்ணி, நீங்க உங்க பைய­னைத் தானே பார்க்­க­ணும் இந்த தேதி­யில் நீங்க போய் பார்த்­துக்­குங்க, அப்­ப­டின்னு கேட்­கு­றாங்க நான் பார்­கி­றேன், மிச்ச பேரெல்­லாம் இல்ல நீங்க முதல்ல பார்த்­துட்டு வாங்க, அதுக்­குப் பிறகு மிச்ச பேரை பரி­சீ­லிக்­கி­றோம். இது அவங்க பதில், முதல்ல மிச்ச பேரை எல்­லாம் பார்த்து முடிக்­கட்­டும், நான் கடை­சியா நான் போய் பார்க்­கி­றேன். ஜெயி­லுக்­குப் போன­வங்­கள அவங்க அவங்க குடும்­பத்­தார் முதல்ல பார்க்­க­ணும், அவங்க குடும்­பத்­தார் முதல்ல பார்க்­கட்­டும் ஜெயில்லே  இருக்­க­ற­வங்­கள எல்­லாம் போய் பார்த்­துட்டு வரட்­டும், அப்­படி சொல்­லி­தான் இவரு மூணாம் தேதி ஸ்டாலின் அவர் என்ன கிட்­ட­நே­ர­டியா  ஸ்டாலி­னும் விவ­ரித்­தார். ரெண்டு பேருமே என்­கிட்ட சொன்­னாங்க,  என்ன நடந்­துச்­சுங்­க­றதை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">அப்­போது கலை­ஞர் சொன்­னாரு, நான் போனேன்,  ஸ்டாலின் வந்­தான், ஒரு முழுக்கை சட்டை போட்­டி­ருந்­தான், வெள்ள சட்டை முழுக்கை சட்டை, அது தொல­தொ­லன்னு இருந்­துச்சு, அவன் அள­வுக்­கான சட்டை இல்லை என்று கலை­ஞர் சொன்­னார். வழக்­க­மாக அவன், அரக்கை சட்­டை­தான் போடு­வான். இன்­னைக்கு முழுக்கை சட்டை போட்­டி­ருந்­தான். அப்போ ஏதோ ஒரு காயத்தை மறைக்­கி­ற­துக்கு தான் அவ­னி­டம் சொல்லி முழுக்கை சட்டை போட்டு அழைச்­சுட்டு வந்து காயத்தை மறைச்சு கூட்­டிட்டு வந்­து­ருக்­காங்­கன்னு எனக்கு நல்லா புரிஞ்­சிச்சு. சரி நம்ம கேள்­விப்­பட்ட செய்­தி­கள் உண்­மை­தான் என்­பதை நான் உறுதி செய்து கொண்­டேன் என்று சொல்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">அந்த இஸ்­மா­யில் ஆணை­யத்­தில் இதை கார­ண­மாக வைத்து இஸ்­மா­யில் சொல்­றாரு, நிச்­ச­ய­மாக ஸ்டாலின் உண்­மையே சொல்லி இருக்­கவே முடி­யாது. ஏன்னா அவர் இப்­படி என்னை அடிச்­சிட்­டாங்­கன்னு சொல்லி இருந்தா யாருக்­குமே குடும்­பத்­தி­னர் இன்­டர்­வியூ பார்க்க அனு­மதி அதுக்­குப் பிறகு கிடைச்­சி­ருக்­காது. சிறை அதி­கா­ரி­கள் மேலும் துன்­பு­றுத்தி இருப்­பார்­கள். எனவே வித்­யா­சா­கர் சொல்­லு­கிற இந்த வாதத்தை நான் நிரா­க­ரிக்­கி­றேன், என்று யார் இஸ்­மா­யில் எழுதி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">ஒன்று அர­சி­யல் கைதி இல்லை. இப்­போது ஏன் இதை  செய்­யு­றாங்க,  இன்­றைக்கு தேர்­தல் நடக்­குது, ஆட்சி மாற்­றம் நடக்­குது, ஜன­நா­ய­கம் இருக்­கு­துன்னா, அன்­றைக்கு நெருக்­கடி நிலையை எதிர்த்­த­து­னால, இன்­றைக்கு இவை­யெல்­லாம் நடக்­குது. அது இல்­லா­மல் போனா, இந்­தியா ஒரு சர்­வா­தி­கார நாடாக அன்­றைக்கு போயி­ருக்­கும். நெருக்­கடி நிலை­யில் ஜெயி­லுக்­குப் போன­வங்­களை தியா­கி ­க­ளாக கொண்­டா­ட­ணும். ஜன­நா­யக உரி­மையை பாது­காத்­த­வங்­கன்னு செலி­ப­ரேட் பண்­ண­ணும், மாறாக தமிழ்­நாட்­டில் புதி­தாக அர­சி­யல் இயக்­கம் தொடங்கி, ஆட்­சிக்கு வந்த ஒரு கட்சி அதை கொச்­சைப்­ப­டுத்­து­வ­தும் மிசா­வில் என்ன நடந்­துச்­சுன்னு தெரி­யுமா? வர­லாற்றை வேண்­டு­மென்றே திரிப்­ப­தும் பொய் பிம்­பம் நீங்­க­லெல்­லாம் ஜெயி­லுக்­குப் போய் தியா­கம் பண்­ணீங்­கன்னு ஒரு பொய் பிம்­பத்தை கட்­ட­மைக்­கி­றீங்­கன்னு சொல்­றாங்­களே அது ஏன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">விடு­தலை இரா­ஜேந்­தி­ரன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்கு வர­லாற்று ரீதி­யாக இருக்­கின்ற கிடைத்­துள்ள பெருமை, அந்த வர­லாற்­றுப் பெரு­மி­தங்­களை  அடி­யோட தகர்த்து எறிந்து, அத­னு­டைய பிம்­பத்தை  குலைக்­க­ணும், அப்­ப­டிங்­கிற ஒரு அடிப்­படை உள்­நோக்­கத்­தோடு தான் இப்­படி திட்­ட­மிட்டு, இது செயல்­ப­டு­வ­தாக நான் நினைக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">பொய்­ய­யும் புனை சுருட்­டை­யும் கலந்த ஒரு நெரட்­டிவை செட் பண்ணி அந்த உண்­மை­யான வர­லாற்றை, திசை திருப்­பினா,  ஏற்­க­னவே  ரீல்ஸ் மோகத்­தில் இளை­ஞர்­கள் கிட்டே கொண்டு போன மாதிரி, இதை­யும்  கொண்டு போய், அவங்­க­ளு­டைய கடந்த கால வர­லாற்­றி­னு­டைய, அந்த தியா­கத் தழும்­பு­களை  கொச்­சைப்­ப­டுத்தி அவங்­க­ளுக்­கான ஒரு அடை­யா­ளத்தை  முற்­றாக அழித்து ஒழிக்­க­ணும் அப்­ப­டிங்­கிற ஒரு கொடூ­ர­மான ஒரு வன்­ம­மான சிந்­தனை தான் இதுக்கு பின்­னாடி இருக்­கி­றதா நான் பார்க்­கி­றேன். இல்­லாட்டி 50 ஆண்­டு­க­ளுக்கு முன்ன இருக்­கிற சர்க்­கார கமி­ஷனை  இப்ப வந்து எடுத்து அவர் பேச வேண்­டிய அவ­சி­யமே கிடை­யாது. இப்ப அதெல்­லாம் எடுத்து பேச­ணும்ன்னு சொன்னா இதுக்கு பின்­னாடி ஒரு பெரிய கான்ஸ்­பி­ரசி ஒன்னு இருக்­குன்னு நான் நினைக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">திரா­விட இயக்­கம் அல்­லது தி.மு.க. இன்­றைக்கு 75 ஆண்டு கால வர­லாறு உள்ள ஒரு இயக்­கம். எத்­த­னையோ பேர் தியா­கங்­களை செய்து,  எமர்­ஜென்­சி­யைக் கூட இந்­தி­யா­விலே  இவ்­வ­ளவு எதிர்த்து அதற்­குக் கடு­மை­யான விலை கொடுத்து, அதை ஆத­ரித்து போயி­ருக்­க­லாம் என்று  சொன்­னால்,  அவங்­க­ளுக்கு ஒரு பிரச்­சி­னை­யும் இல்­லா­மல் போயி­ருக்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">அதற்கு கடு­மை­யான ஒரு விலை கொடுத்து தன்னை நிலை­நாட்டி ஒரு கொள்கை அடை­யா­ளத்­தோடு இருக்­கிற ஒரு இயக்­கம். கொள்கை அடை­யா­ளத்­தோடு இருக்­கின்ற ஒரு இயக்­கம்  தமிழ்­நாட்­டில் எது­வுமே இருக்­கக் கூடாது. கொள்கை அடை­யா­ளங்­கள் உள்ள இயக்­கங்­கள் தமிழ்­நாட்­டில் இருந்­த­துன்னு சொன்னா, வல­து­சாரி பிற்­போக்­கிய பார்ப்­ப­ணிய இந்­துத்­துவ சிந்­த­னை­கள் வள­ரவே முடி­யாது.  இதை சுத்­தமா காலி பண்­ணிட்டு தான் நம்ம புதுசா ஒரு நிலத்­தில்,  நம்­மு­டைய வல­து­சாரி, மத­வாத, சாதி­ய­வாத கருத்­துக்­களை எல்­லாம்  கொண்டு வந்து நிற்க முடி­யும்.  அப்­ப­டி­யின்­கிற ஒரு பெரிய அஜெண்டா வோட­தான். இந்த இமேஜை குலைக்­கின்ற, உடைக்­கிற ஒரு சதி நடக்­கி­ற­தா­தான் நான் பார்க்க வேண்­டி­யி­ருக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">அதற்கு  இவர்­களை எல்­லாம் ஒரு கரு­வியா பயன்­ப­டுத்­தப் போறாங்­களோ? அப்­ப­டின்­னு­தான் நான் நினைக்க வேண்­டி­யி­ருக்கு.  அடுத்து வரு­கின்ற தேர்­த­லுக்­குள்  தி.மு.க.வுடைய இமே­ஜையே நான் காலி பண்­ணப் போறேன். தி.மு.க.வினு­டைய பிம்­பத் தையே நான் உடைச்சு எறிஞ்­சி­டப் போறேன். அப்­படி பிம்­பத்தை உடைக்­க­றது மட்­டும் இல்­லா­மல், பொய்­யான கதை­க­ளைச் சொல்லி, பொய்­யைச் சொல்லி அந்த ஒரு கீழ்த்­த­ர­மான விஷ­யங்­களை பேசி நாம்  பண்­ணிட முடி­யும். அப்­ப­டி­யின்­கிற ஒரு கற்­ப­னை­யில் அவங்க வந்து களம் இறங்கி இருக்­காங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">எதிர்க்­கட்­சி­கள் ஒன்று இருக்கு. தமிழ்­நாட்­டில்  ஒரு சிந்­தனை மர­புள்ள எழுத்­தா­ளர் இருக்­காங்க, சிந்­த­னை­யா­ளர்­கள் இருக்­காங்க, தமிழ்­நாட்­டில் எவ்­வ­ளவோ கருத்­துப் போராட்­டங்­கள் எல்­லாம் நடந்­து­கிட்டு இருக்கு, தமிழ்­நாட்­டி­னு­டைய அந்த ஒரு சட்­டம் எல்­லாம்  தமிழ்­நா­டில் இருக்கு, அப்­படி இருக்­கி­ற­தைப் பத்­திய புரி­தலோ, அறி­தலோ இல்­லாத, ஒரு கும்­பல் - இந்த ரீல்ஸை வச்­சிட்டு எல்­லாமே மாத்­தி­ட­லாம் அப்­ப­டிங்­கற ஒரு கற்­ப­னை­யில் இருக்­கிற ஒரு கும்­பல் தான், இந்த  வர­லாற்­றுப் பெரு­மை­களை உடைக்­கிற  இந்­தக் கீழ்த்­த­ர­மான வேளை­யில் இருந்­துட்டு இருக்­கு­றாங்க.  இந்­தக் கீழ்த்­த­ர­மான வேளை­களை எதிர்த்து, இவங்­களை அம்­ப­லப்­ப­டுத்தி இந்த வர­லா­று­களை  மக்­கள் கிட்ட கொண்டு போய் சேர்க்க வேண்­டிய ஒரு பெரிய கடமை இருக்கு, அதற்­கான ஒரு சூழலை அவர்­கள் இன்­றைக்கு உரு­வாக்கி இருக்­காங்­கன்­னு­தான் நினைக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">இதை  ஒரு நல்ல வித­மாக நாம் பயன்­ப­டுத்தி, இந்த பொய் முகங்­களை, இந்த பொய் வேட­தா­ரி­களை  மக்­கள் மத்­தி­யில் அம்­ப­லப்­ப­டுத்த வேண்­டிய அவ­சி­யம் இருக்­குன்னு நினைக்­கி­றேன். நீங்க அவ்­வ­ளவு சீக்­கி­ரம் அதெல்­லாம் மாத்­திட முடி­யாது. 75 ஆண்­டு­கள் உள்ள வர­லாறு உள்ள ஒரு இயக்­கத்தை நீ இப்­ப­டி­தான் வந்து பொம்­ப­ளைக்­காக கைது பண்ண, அதுக்­காக கைது. இன்­னும் சொல்­லப்­போனா, மிசா­வில் கைது செய்­யப்­பட்ட பலர் மேல இரண்­டாம் கட்ட தலை­வர்­கள்­தான் கைது பண்­ணாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">அப்­படி சில சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் கைது செய்­கின்ற போது, அவர்­களை திருட்டு வழக்கு, தடையை உடைச்­சாங்­கங்­கிற வழக்கு, அந்த வழக்கு போட்டு கூட மிசா­வில் கைது பண்­ணி­யி­ருக்­காங்க.  உதா­ர­ணம் சொல்­ல­னும்ன்னா மயி­லாடு சட்­ட­மன்ற உறுப்­பி­னர் கிட்­டப்பா பெரிய சுய­ம­ரி­யாதை வீரர், அவர எதுல கைது பண்­ணாங்க, ராத்­திரி 12 மணிக்கு ஒரு பெட்­டிக் கடை  பூட்ட உடைச்சு க்கிட்டு  இருந்­தாரு, அப்­ப­டின்னு சொல்லி ஒரு வழக்கை போட்டு, அந்த வழக்கை அப்­ப­டியே மிசா­வாக மாத்தி கைது பண்­ணாங்க, உள்ளே போடு­ற­துக்­கான வாய்ப்­பைத் தேடி இப்­படி பண்­ணாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">அந்த மாதிரி நடந்­தி­ருக்கு மிசா­வில். ஆனால் தலை­வர்­கள் இது போன்ற விவ­ரங்­க­ளில் எல்­லாம் கைது பண்­ணது என்ன கார­ணம்? இந்­திரா காந்தி கைது செய்­த­தற்கு  என்ன கார­ணம்? தேசத்தை வந்து ராணு­வத்­தையே வந்து கல­கம் பண்ண தூண்­டி­னாங்க, நாட்டை வந்து ஆபத்தை  உண்­டாக்­கி­னாங்க, முதல் ரெண்டு மூணு பிர­த­மர்­களை இந்த நாட்­டில் உரு­வாக்­கி­னாங்க. இதைல்­லாம் இந்­திரா காந்தி சொன்ன விஷ­யங்­கள். காஷ்­மீ­ரில்  முத­ல­மைச்­சரா இருக்­கி­ற­வர பிர­த­மர்ன்னு அழைக்­க­லாம்னு ஒரு மரபு இருந்­துச்சு. அப்போ தமிழ்­நாட்­டில் கலை­ஞரை பிர­த­மர் அவர்­களே, அப்­ப­டின்னா ஏன் காஷ்­மீர் உரிமை கலை­ஞ­ருக்­கும் வேணும், அப்­ப­டிங்­கிற அர்த்­தத்­தி­னால் பிர­த­மர் அவர்­களே என்று  பேசி­னாங்க. உடனே இரண்டு பிர­த­மர்­கள் இந்த நாட்­டில் பேசப்­பட்­டார்­கள். இதெல்­லாம் இந்­திரா காந்தி சொன்ன விஷ­யங்­கள். இன்­னொரு விஷ­யம் என்­ன­வென்­றால் எல்­லாமே  வன்­முறை சக்­தி­கள், அத­னாலே கைது பண்­ணுன்னு சொல்­றாங்க. அந்த அம்­மாவே இப்­படி ஒரு பொய்­யான பிம்­பத்தை கட்­ட­மைக்க முயற்­சித்து தோத்து போயி­டுச்சு அந்த அம்மா.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">அவங்­க­ளுக்கு ஒரு தேவை இருந்­தது. அவங்­க­ளுக்கு  அவங்­க­ளு­டைய அர­சி­யலை தக்க வச்­சுக்­க­ற­துக்கு தேவை இருந்­தது. இன்­றைக்கு ஒரு ஹீரோ­வுக்கு வில்­லன்­களை ஏன் தேடு­றார்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">விடு­தலை இரா­ஜேந்­தி­ரன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">இவங்­க­ளுக்கு வில்­லன்­கள் தேவைப்­ப­டு­கி­றது. இவர் ஹீரோவா நடிக்க வேண்டி இருக்கு. ஹீரோவா நடிக்­க­ற­துக்கு ஏதா­வது ஒரு வில்­லன்  நடிக்க வேண்­டிய அவ­சி­யம் இருக்கு. அத­னால நீங்க வந்து யாரா­வது ஒருத்­தங்­களை பிடிச்சு வில்­லனா ஆக்­க­ணும், அப்­ப­டின்னு நினைக்­கிற ஒரு பிம்­பத்தை உடைக்­கி­றது வந்து ஒரு மோச­மான ஒரு சூழ்ச்சி. இதை வந்து நிச்­ச­ய­மாக  தமிழ்­நாட்டு மக்­கள்  ஏத்­துக்க மாட்­டாங்க. இது வந்து மிசா வேற­தான். இது எதிர் வினை­தான் நிச்­ச­ய­மாக உண்­டாக்­கும். அத­னால் எமர்­ஜென்சி நேரத்­தில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்  செய்­தது என்­பது  தி.மு.க. வுடைய வர­லாற்­றில், அத­னு­டைய இயக்­கப் போராட்­டம் என்­பது  பொன்­னெ­ழுத்­துக்­க­ளால் பொறிக்­கக்­கூ­டிய ஒரு கால­கட்­டம்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">கலை­ஞர் எப்­படி அதை எதிர்­கொண்­டார், எப்­படி துணிச்­சலா அவர் எதிர்த்து நின்­னாரு. சொல்­லப்­போனா இந்­தி­யா­வி­லேயே முதன் முத­லாக அவ­சர நிலைக்கு எதி­ராக மக்­கள் போராட்­டம் நடத்­தி­னதே கலை­ஞர்­தான். ஏன்னா அண்­ணாவை பற்றி முர­சொ­லி­யில் அவர் எழு­தின ஒரு கருத்­துக்­காக அதை எழு­தக்­கூ­டா­துன்னு பத்­தி­ரிகை சென்­சார்  தடை விதிக்­கப்­பட்­டப்ப, இவர் தனிப்­பட்ட அச்­ச­கத்­தில் போய், ஒரு நோட்­டீஸ் எடுத்து அச்­ச­டிச்­சு­கிட்டு, அவர் அங்­கி­ருந்து அண்ணா சாலைக்கு, அண்ணா சிலை அருகே ஊர்­வ­ல­மாக வந்து, சென்­சார் ஆபீஸ்க்கு போய் உண்­ணா­வி­ரம் இருக்­கப் போறோம் என்று கிளம்­பி­னது. இந்­தி­யா­வி­லேயே எமர்­ஜென்­சியை எதிர்த்து நடத்­தப்­பட்ட முதல் போராட்­டம்  அப்­ப­டின்னு வர­லாற்­றிலே  பதிவு செஞ்­சி­ருக்­காங்க. அப்­ப­டிப்­பட்ட ஒரு தியாக வர­லாறு. பத்­தி­ரிகை சுதந்­தி­ரம், அந்த பத்­தி­ரி­கைக்கு தலைப்­பெல்­லாம் கூட வெண்­டைக்­காய்,  விளக்­கெண்­ணெய் பூசுங்க அப்­ப­டின்னு எல்­லாம் எதிர்த்து போரா­டி­யது. அப்­பு­றம் ஹிட்­லரா  படம் போட்­டது முர­சொலி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">இந்­திரா காந்தி மாறி  மாறி ஹிட்­லரா மாறு­வ­தைப் போன்று படம் போடப்­பட்­டது. அப்­படி ஒரு மாற்­றம், அப்­போது செல்­லப்­பான்னு சொல்லி முர­சொ­லி­யு­டைய ஓவி­யர். அதற்­காக அவர் முர­சொ­லி­யில் படம் போடவே கூடா­துன்னு சொல்லி சென்­சார் தடை விதிச்­சாங்க. அந்த கால­கட்­டத்­தில் கலை­ஞர் ஒரு கார்ட்­டூ­னிஸ்டா மாறி கலை­ஞரே படம் போட ஆரம்­பிச்­சாரு. ஒரு கார்ட்­டூ­னிஸ்­டாக,  ஒரு போரா­ளி­யாக, ஒரு எழுத்­தா­ள­ராக, ஒரு பத்­தி­ரிக்­கை­யா­ள­ராக, ஒரு களப் போரா­ளி­யாக எப்­படி தனக்கு கொடுக்­கப்­பட்ட அந்த அடக்­கு­முறை காலத்தை  ஒரு ஜன­நா­ய­கத்தை உண்­டாக்­கக் கூ­டிய ஒரு தலை­வ­ராக இருக்­கிற  வர­லாற்றை  உரு­வாக்­கி­யது தமிழ்­நாட்­டில் சாதா­ரண விஷ­யம்­மில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">அந்­தப் பெரு­மைக்­கு­ரி­யதை எப்­ப­டி­யா­வது உடைக்க வேண்­டும். ஆனால் எவ­னா­லே­யும் உடைக்க முடி­யாது அந்­தப் பெரு­மையை. இன்­றைக்கு ஸ்டாலின்  வந்து பெண்­கள் வழக்கு என்­றால் ஏன் அவர் மிசா­வில் போட­ணும், வேறு வழக்­கல போட­லாமே. எதுக்கு மிசா­வில் போட­ணும். பெண்­கள் குற்­றத்­தி­னால் கைது என்று ஒரு மந்­திரி சொல்­றார். அப்ப எதுக்கு அவரை மிசா­வில் போட­ணும். அந்த அறிவு கூட வேண்­டாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">உருவ கேலியை சட்­ட­மன்­றத்­தில் பண்­றாங்க, இன்­றைக்கு அதுக்கு ஸ்டாலின் அவர்­கள் ஒரு பதில் சொல்லி இருக்­கார். அதெல்­லாம் உண்­மை­தான் என்னை வந்து தாக்­கி­னது உண்­மை­தான், வர­லாற்றை மறைக்க முடி­யாது. இந்த வினை, எதிர்­வினை, அதுக்­கான ரெஸ்­பான்ஸை எப்­படி பார்க்­கு­றீங்க?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">தோழர் தியாகு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">இவர் வந்து என்ன பண்­புள்ள ஒரு மனி­தன்  எனக்­குப் புரி­யல. ஏன்னா முத­ல­மைச்­ச­ரான பிறகு அவர் வீட்­டில் போய் பார்க்­கி­றார்.  நான் தேர்­தல் நேரத்­தில் உங்­களை பத்தி ஏதோ தவ­று­தலா பேசிட்­டேன், ஐயம் வெரி சாரி, ஐயம் வெரி சாரி சாதா­ர­ணமா அவ­ருக்கு வரும் போல. சினிமா ஷூட்­டிங்  நடக்­கு­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">விடு­தலை இரா­ஜேந்­தி­ரன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">இதைக் கூட பண்­பாடு கருதி ஸ்டாலின் வெளிப்­ப­டுத்­தவே இல்லை. இப்­போது பிரச்­சினை வந்­த­துக்கு அப்­பு­றம்­தான் அதைக் கூட சொல்ல வேண்­டிய கட்­டா­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">தோழர் தியாகு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">அப்­போது கேள்­விப்­பட்­டது இப்போ அது உறு­தி­யா­குது. நீ இவ்­வ­ளவு மோசமா பழை­ய­படி செய்­ய­றது அந்த கை இப்­படி காட்­டு­னது, முதல்ல இப்­போது இப்­படி காட்­டு­றது சைகை செய்­றது இதெல்­லாம்  என்ன மனசு அது, என்ன நோக்­கம் உங்­க­ளுக்கு. என்ன சொல்­றேன்னா அவர் அப்­பா­வியா இருந்­துட்டு செய்­றார்ன்னு நான் நினைக்­கி­றேன். அவ­ரி­டம் ஒரு டெலி­ப­ரேட்­டான இந்த வில்­லத்­த­னம் இருக்கு. ஏன் இதை சொல்­றேன்னா, நீங்க ஊழல் பற்றி பேசு­றீங்க, சர்க்­கா­ரியா கமி­ஷன் பற்றி பேசு­றீங்க, மிசா பற்றி பேசு­றீங்க, அதுக்­கப்­பு­றம் யாரோட எல்­லாம் வரி­சையா ஒப்­பிட்­டுக்­கி­றீங்க. 67 அண்ணா, 77இல் எம்.ஜி.ஆர், அப்­பு­றம் என்.டி.ஆர்,  அப்­பு­றம் விஜய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">ஊழலை எதிர்க்­கிற யாரா­வது ஜெய­ல­லி­தாவை ஏற்­றுக் கொள்­வாங்­களா? இந்­தி­யா­வி­லேயே ஊழல் குற்­றச்­சாட்­டுக்­காக நீதி­மன்­றத்­தால் தண்­டிக்­கப்­பட்ட சிறை சென்ற, ஒரு முத­ல­மைச்­சர் அவர் மட்­டும்­தானே. இந்­தத் தக­வல் கூட உங்­க­ளுக்­குத் தெரி­யாதா? இத­யத்­துக்கு நெருக்­கமா சட்­டைப்­பை­யில் செங்­கோட்­டை­யன் அவரை வைத்­துக் கொள்­வ­தற்கு நீங்க அனு­ம­திச்­சி­ருக்­க­றீங்க, இந்த ஆவாச அர்­ஜுனா வந்து திருப்பி திருப்பி சொல்­றாரு, எங்­க­ளுக்கு இவங்க எல்­லாம் வழி­காட்­டி­கள், என்ன ஏமாத்­து­றது அது? நானும் கலை­ஞரை மதிக்­கி­றேன் கரு­ணா­நிதி வேறு ஒரு உறுப்­பி­னர் சொன்­ன­துக்கு ஐயம் சாரி சொன்­ன­வரு. இப்ப இவர் கரு­ணா­நி­தின்னு பேசு­றாரு. கரு­ணா­நிதி அவ­ரு­டைய பேரு. பேசிட்டு போங்க. யாரும் வேண்­டாம்னு சொல்­லலை. பத்­தி­ரி­கை­யில் கரு­ணா­நிதி தான் போட்­டுட்டு இருக்­காங்க, அதெல்­லாம்  இல்லை பிரச்­சினை, ஆனால் உங்­க­ளுக்கு நேர்மை இல்­லைன்னு சொல்­றோம். ஏன் எம்.ஜி.ஆர். மேல  எஸ்.டி.எஸ். ஊழல் புகார் மணு கொடுக்­க­லையா? சர்க்­கா­ரியா கமி­ஷன் தான் உங்­க­ளுக்கு ஊழ­லுக்கு அடிப்­ப­டை­யின்னா அந்­தப் புகார் மனு, என்ன அர­சி­யல்ல ஊழல் இருக்கு, பண­நா­ய­கமா ஜன­நா­ய­கமா மாற்ற வரும் போது இந்த ஊழல் பர­வலா இருக்கு, அதுக்கு எதிரா என்ன உருப்­ப­டி­யான நட­வ­டிக்கை. நீங்க வந்து கர்­நா­ட­கத்­தில் லோக் ஆயுக்தா போட்­டாங்க, எத்­த­னையோ வழி­கள் இருக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">அதை பத்தி எல்­லாம் பேசுங்க, நீங்க  போலீஸ்ல ஊழல் ஒழிப்­புக்­காக என்ன நட­வ­டிக்கை எடுக்­கி­றோம், நீதித்­து­றை­யில் வழக்கு என்று சொன்­னால் பர­ வா­யில்லை. ஆனால் இதை பயன்­ப­டுத்­திக் கொண்டு நீங்­கள்,  எது என்ன பின்­னணி நான் பார்க்­கி­றேன். இப்போ திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை  ஒழிச்சு கட்­ட­ணும்ங்­க­றது பா.ஜா.க.வினு­டைய நோக்­கம். இந்­துத்­துவ சக்­தி­க­ளு­டைய நோக்­கம். அதை நீங்க சர்வே பண்­றீங்­கங்­க­றது எங்க கணிப்பு. அத­னால் தான் நம்ம தேர்­தல்ல கூட அந்த கார­ணத்தை வச்­சு­தான் தி.மு.க. ஆத­ரிச்­சோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">ஸ்டாலி­னும் சொன்­னாரு டெல்­லிக்­கும் தமிழ்­நாட்­டுக்­கு­மான போராட்­டம்னு சொன்­னாரு. என்ன பொறுத்­த­வ­ரைக்­கும் அது இன்­னைக்­கும் நீடிக்­குது. அது முடிஞ்சு போன ஒரு செய்தி அல்ல. ஆனால் நான் என்ன சொல்­றேன்னா,  அன்­றைக்கு மிசா.  இன்­றைக்கு துருக்­மேனி,  துருக்­கு­மேனி கேட்ல முஸ்­லிம்­கள் தாக்­கப்­பட்­டாங்க. இன்­றைக்கு இந்­தியா பூரா முஸ்­லிம்­கள் தாக்­கப்­ப­டு­றாங்க. சி.ஐ.ஏ. போராட்­டத்­தின் போது என்­னென்ன நடந்­துச்சு? டெல்­லி­யில்  என்­னென்ன நடந்­து­கிட்டு இருக்கு இன்­றைக்கு வரைக்­கும். இப்­ப­டில்­லாம் நிறைய இருக்­குது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">இந்­தப் போராட்­டங்­க­ளுக்கு நடு­வில் தமிழ்­நாட்­டில் ஒரு அர­சி­யல் சூனி­யத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு உங்­க­ளுக்கு தடையா இருப்­பது தி.மு.க. அதுக்­கான தி.மு.க.னா நான் ஒரு தலை­வர், ரெண்டு தலை­வரை மட்­டும் நான் சொல்­றேன். தி.மு.க.வினு­டைய ஐடி­யா­லஜி, அது பரவி இருக்­கக்­கூ­டிய விதம், அது இன்­னொரு கட்­சியை சுல­பமா கலைச்­சிட்டு போற மாதிரி, இந்­தக் கட்­சியை கலைச்­சிட்­டுப்­போக  முடி­யாது. அந்த  ஒரு முயற்­சி­யில் நீங்க ஈடு­பட்­டி­ருக்­கீங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">அர­சி­யல் சூனி­ய­மாக்­க­ணும்ன்­றாங் களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">தோழர் தியாகு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">நான் அதை­விட முக்­கி­யமா எதை கரு­து­றேன்னா, ஒரு கட்சி தலை­மைங்­கி­றதை விட்­டு­வி­டுங்க. மொத்­தத்­தில் ஒரு மனித உரி­மை­க­ளுக்­காக, ஜன­நா­யக உரி­மை­க­ளுக்­காக, அர­ச­மைப்பு சட்ட விழி­மி­யங்­களை காப்­ப­தற்­காக, சிறைக்­குச் சென்­றால் அந்த சிறை­யில் எவ்­வ­ளவு தியா­கம் வேணா­லும் பண்­ண­லாம். ஜெயி­லுக்­குப் போனா எத்­தனை வரு­ஷம் வேணா­லும் இருக்­க­லாம். ஆனால் ஜெயில் பாது­காப்­பான இடம், அது ஒரு செக்­யூ­ரிட்­டி­யான இடம், அங்க விபத்­துல செத்­திட மாட்­டீங்க, ஒருத்­தன் வந்து உங்­களை கொலை பண்­ணிட மாட்­டான். அந்த இடத்தை ஆபத்­தான இடமா மாத்­து­றீங்­கல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">சிறைக்­குப் போவது ஒரு தியா­கம். ஆனா சிறைக்­குப் போவதே ஒரு உள்ள போனாலே அழிச்­சி­ரு­வோம். அந்­தக் கதையை இவ்­வ­ளவு கொச்­சைப்­ப­டுத்தி, இழி­வு­ப­டுத்தி, உங்­க­ளுக்கு இந்த பேசு­ற­துங்­க­ றது இருக்கு பாருங்க. இது எல்லா ஜன­நா­யக சக்­தி­கள், மனித உரி­மை­களை நேசிக்­கிற அத்­தனை பேரும் இதை கண்­டிக்­க­ணும். நான் தி.மு.க. காரனோ, தி.மு.க. ஆத­ர­வா­ளனோ அல்ல. ஒரு கட்­டத்­தில் ஆத­ரிக்­க­லாம் இன்­னொரு கட்­டத்­தில் எதிர்க்­க­லாம். எதிர்­கா­லத்­தில் நம்ம தி.மு.க. பத்தி என்ன முடி­வெ­டுக்­கப் போறோம் எது­வும் தெரி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">ஆனால் ஒன்றை உறு­தியா சொல்­றேன், எந்­தக் கட்­சி­யாக இருந்­தா­லும் நீ மனித உரி­மை­களை, ஜன­நா­ய­கத்தை நீ மதிக்­கி­ற­வனா, ஏன்னா இதே இஸ்­மா­யில் அறிக்­கைையை...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">எந்த ஒரு ஆர்ப்­பாட்­டமோ. போராட்­டமோ. ஒரு ஜெயிலோ, ஒரு நாள் காலை­யில் கைதாகி மாலை­யில் 5:00 மணி வரை­யி­லும் திரு­மண மண்­ட­பத்­தில் இருந்து வந்த வர­லாறு கூட விஜய்க்கு கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">தோழர் தியாகு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">எனக்கு இதுல என்ன வருத்­தம் என்­றால், நான் வெளிப்­ப­டையா சொல்­றேன். இப்­படி ஒருத்­தர்­கிட்டே போய் தி.மு.க. தோக்­க­லாமா? எனக்கு தி.மு.க. மேல­தான் வருத்­தம். மக்­கள் மேல வருத்­த­மில்லை.  நான் என்­னைக்­குமே மக்­களை குறை சொல்ல மாட்­டேன். மக்­களை இந்­தப் பக்­கம் தள்­ளி­விட்­டீங்க நீங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">   </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">சார் நிறைவா கேட்­க­ணும் ஒரு பாசி­சம் அப்­ப­டின்னு ஒன்றை எதிர்க்­கி­றோம். அப்­ப­டின்னு த.வெ.க. சொன்­னது கொள்கை எதி­ரின்னு பி.ஜே.பி.யை சொன்­னாங்க அவங்க கூட்­ட­ணி­யில் இருக்­கி­ற­வங்­கல்­லாம் எதிர்க்­கி­றாங்க, காங்­கி­ரஸ் எதிர்க்­கி­றது, சி.பி.ஐ., சி.பி.எம்., எதிர்க்­குது, வி.சி.கே. எதிர்க்­கி­றது. ஆனா இவ­ரு­டைய குறி விஜய் டி.வி.கே. டி.வி.கே. உடைய அமைச்­சர்­கள் இவங்­க­ளோட குறி வந்து பி.ஜே.பி. இல்ல டி.எம்.கே.,  டி.எம்.கே.க்கு எதிரா சாலி­டான எவி­டன்ஸ்­ஸோட தர்க்­க­பூர்­வ­மான விமர்­ச­னங்­க­ளையோ குற்­றச்­சாட்­டு­க­ளையோ வச்சா அதுல ஒரு நியா­யம் இருக்கு, அதை கடந்து இந்த மாதிரி பிலோ த பெல்ட் இறங்கி அடிக்­கி­றது, பேசு­றது எப்­படி புரிஞ்­சுக்­கு­ றீங்க,  ஏன் பண்­றாங்க?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">விடு­தலை இரா­ஜேந்­தி­ரன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">இதுல இன்­டை­ரக்ட் அஜெண்­டான்னு பாத்­தீங்­கன்னா, பி.ஜே.பி.க்கு  ஒரு பாதைய அமைத்­துக் கொடுக்­கிற மாதி­ரி­தான் எனக்­குத் தெரி­யுது. ஏன்னா ஒரு தத்­து­வார்த்த கட்­சிய வந்து ஒன்­னும் இல்­லாம நீங்க காலி பண்­ணிட்­டீங்­கன்னா,  வல­து­சாரி பிற்­போக்கு மத­வாத சக்­தி­கள் ஈசியா இங்க காலூன்­று­வ­தற்கு அழைச்­சிட்டு வர­துக்கு அவங்­க­ளுக்கு ஒரு வாய்ப்பை உண்­டாக்­க­ணும் அப்­ப­டிங்­கிற விஷ­யத்தை வந்து பி.ஜே.பி. சார்பா இந்த த.வெ.க. செஞ்­சுிட்டு இருக்கு, அப்­ப­டிங்­குற முடி­வுக்­கு­தான் வர வேண்­டிய இருக்கு. பி.ஜே.பி. எதிர்ப்­பும் கூட இவங்­க­கிட்ட ஒரு கன்ஸ்ட்­ரவ்­டி­வான கொள்கை ரீதி­யான எதிர்ப்பு இல்லை. டோக்­கனா சட்­ட­ச­பை­யில் வந்து ஒரு தீர்­மா­னத்தை போடு­றாங்க. அதோட அவங்க விஷ­யம் முடிஞ்சு போயி­டுது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">அதைத் தாண்டி இப்ப 1000 விஷ­யங்­கள் வந்து உரி­மை­களை பறிக்­கி­றது பல்­வேறு விஷ­யங்­கள் எல்­லாம் வந்­துட்டு இருக்கு. ஸ்டாலின் முத­ல­மைச்­ச­ராக இருந்த காலத்­துல இந்த ஒன்­றிய ஆட்­சி­யி­னு­டைய  எதுக்­கு­றப்ப எந்­தெந்த முறை­யில்  அதை எதிர்த்­தாரு எந்­தெந்த வடி­வங்­க­ளில் அதை எதித்­தாரு. நாடா­ளு­மன்­றத்­தில் போய் பேச வைக்­கி­றது  இங்க வந்து கூட்­டங்­களை போட்டு பேச வைக்­கி­றது. அதற்­கான கவர்­னரை வச்சு பேச வைக்­கி­றது. இது மாதிரி பல்­வேறு அத்­தனை கரு­வி­க­ளை­யும் பயன்­ப­டுத்தி, அவர் வந்து ஒன்­றிய அர­சி­னு­டைய அந்த அடக்கு முறை­யை­யும், அதி­கார முறை­க­ளை­யும் எதிர்க்­கின்ற ஒரு இயக்­க­மாக  தி.மு.க. ஆட்சி நடத்­தப்­பட்­டது. இப்ப ஒன்­னுமே இல்லை சட்­ட­ச­பை­யில் ஒரு தீர்­மா­னம் போட்டு, அதோடு முடி­கிற விஷ­யமா இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">தோழர் தியாகு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">அன்­றைக்கு இந்­தக் கூச்­சல் குழப்­பத்­துக்கு இடை­யில் ரெண்டு மோச­மான சட்­டங்­களை நிறை­வேற்­றி­னாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">மிசா­வுக்கே வந்­து­ரு­வோம்; மிசா ஒரு அவ­ருக்கு ஈடான ஒரு அர­சி­யல் தலை­வர். விஜய்க்கு ஈடான அர­சி­யல் தலை­வர்னா.  எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் வச்­சுக்­கங்க, அவா் மீது இவ­ருக்கு ஒரு காட்­டம் இருக்­கி­றது, அல்­லது இவர் கடு­மையா விமர்­சிக்­கி­றார் அல்­லது அவர் இவரை கடு­மையா விமர்­சிக்­கி­றார் என்­பது கூட சம­கால ஒரு அர­சி­யல் ஆளு­மை­கள் அப்­ப­டின்னு கடந்­துக்­க­லாம். இவரை விட பல மடங்கு அர­சி­யல்ல தியா­கம் பண்­ண­வங்­கள கலை­ஞர் அவர்­கள் தொடங்கி முர­சொ­லி­மா­றன் தொடங்கி ஸ்டாலின் அவர்­கள் வரை­யி­லும் பேசு­றதை  அன்­றைக்­குப் பேச வேண்­டிய தேவை­யும் அத­னு­டைய பின்­பு­லம் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">விடு­தலை இரா­ஜேந்­தி­ரன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">இது என்ன பின்­ப­லம்ன்னு தெரி­ய­வில்லை.  உத­ய­நிதி ஸ்டாலின் பற்றி பேசு­ற­துக்­குக் கூட இவ­ருக்கு தகுதி கிடை­யாது என்­பது என்­னு­டைய கருத்து.  உத­ய­நிதி ஸ்டாலின்  பேசு­கிற விஷ­யத்­துக்கு அவர் ஒன்­னும் பதில் சொல்­றது இல்ல. அமை­தியா தான் இருக்­கி­றாரு, போயிட்டு வந்­த­துக்கு அப்­பு­றம், அடுத்த நாள் போய் வீட்­டில் எழு­திட்டு வந்து திரும்பி படிச்­சிட்டு இருக்­கி­றாரு. உத­ய­நிதி ஸ்டாலின் கேட்­கிற ஷார்ப்­பான பல விஷ­யங்­க­ளுக்கு அவ­ருக்கு ஒரு பதி­லும் இல்லை. இதை விட்­டுட்டு,  இவர் வந்து இவ­ருக்கு போறது முத­ல­மைச்­சர் ஸ்டாலி­னுக்கு போறது, அப்­ப­றம் எமர்­ஜென்சி காலத்­துக்கு போறது, தமிழ்­நாட்டு அர­சி­யல்ல வந்து பல தியா­கத் தழும்­பு­களை ஏற்று, தமிழ்­நாட்­டி­னு­டைய வர­லாற்­றில் இடம் பெற்று தமிழ்­நாட்­டி­னு­டைய போராட்ட கலங்­களை எல்­லாம் கண்ட ஒரு பெரிய ஒரு மாவீ­ரரை போல, தன்னை சித்­த­ரிச்­சுக்­கிட்டு ஒரு மூன்று வரு­ஷத்­துக்கு முன்­னாடி ஒரு அர­சி­யல் கட்சி தொடங்கி, இப்போ பத­வி­யில் உட்­காந்­து­கிட்டு, இப்போ தமிழ்­நாட்­டி­னு­டைய அர­சி­யல் அத்­தா­ரிட்­டியே நான்­தான், தமிழ்­நாட்டு மக்­க­ளு­டைய ஏக பிர­தி­நி­தியே நான்­தான், என்னை யாரும் கேள்வி கேட்க முடி­யாது. நான் என்ன வேணா­லும் செய்­வேன்னு சொல்லி அங்கு வந்து உடல் மொழியை காட்­டு­றது, அந்த வீர வச­னம் பேசு­றது, இதெல்­லாம் வந்து எல்­லோ­ரும் சொல்­கிற மாதிரி அந்த ஸ்டுடியோ ஷூட்­டிங் அப்­ப­டிங்­கிற எல்­லைக்­குத் தான் வர வேண்­டி­யி­ருக்கு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.1">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">மிக்க நன்றி பல வர­லா­று­களை பேசி இருக்­கோம். இன்­னு­மும் பேச வேண்­டி­யது இருக்­கும். இன்­னொரு நாள் நம்ம பேச­லாம். மிக்க நன்றி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.1">இவ்­வாறு சன் நியூஸ் தொலைக்­காட்­சி­யில் சிறப்பு விவா­தம் நடை­பெற்­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>