<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="16/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,404,493,1241" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 15 2026 14:49:51 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260916T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="16092026-TRY-07" position.sequence="07" ex-ref="16092026-TRY-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="22">மதுராந்தகம் – தாராபுரம் இடைத்தேர்தல்:</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="37">தி.மு.கழகத்திற்கு திராவிடர் கழகம் ஆதரவு! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="26">திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="veeramani_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">சென்னை, செப்.16–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் மது­ராந்­த­கம், தாரா­பு­ரம் ஆகிய இரண்டு சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளுக்கு, பொதுத் தேர்­தல் நடை­பெற்ற சில மாதங்­க­ளி­லேயே அவ­சி­ய­மற்ற ஓர் இடைத் தேர்­தல் திணிக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">மொத்­தம் காலி­யாக உள்ள ஏழுதொகு­தி­க­ளில், பிற அய்ந்து தொகு­தி­க­ளின் வெற்­றியை எதிர்த்­துத் தேர்­தல் வழக்கு இருப்­ப­தால், அவற்றை விடுத்து இவ் விரண்டு தொகு­தி­ க­ளுக்­கும் இடைத் தேர்­தல் அறி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கத் தேர்­தல் ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இந்த இரண்டு தொகு­தி­க­ளி­லும் முன்பு அ.இ.அ.தி.மு.க. சார்­பில் வெற்றி பெற்­ற­வர்­கள், மக்­கள் தங்­க­ளைத் தேர்ந்­தெ­டுக்­கக் கார­ண­மான கட்­சி­யின் நிலைப்­பாட்­டுக்கு மாறாக, போதிய தனிப் பெரும்­பான்மை இல்­லாத த.வெ.க. அரசு சட்­ட­மன்­றத்­தில் பெரும்­பான்­மையை நிரூ­பிக்க வாக்­கெ­டுப்பு நடத்­தி­ய­போது அவ­ர­க­ளுக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">விசித்­தி­ர­மான 
குதிரை பேரம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">பின்­னர் சில நாட்­க­ளி­லேயே தங்­கள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பத­வி­க­ளி­லி­ருந்து விலகி, தலை­மைச் செய­ல­கத்­துக்­குள்­ளேயே அமைச்­ச­ரைச் சந்­தித்து த.வெ.க. வில் இணைந்­து­விட்­ட­தா­கக் கூறிய, தமிழ்­நாட்­டில் இது­வரை இல்­லாத விசித்­தி­ர­மான ‘குதிரை பேரம்’ நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அதன்  விளை­வாக  திணிக்­கப்­   பட்­டுள்ள இந்த இடைத்­தேர்­தல் அக்­டோ­பர் 6 ஆம் தேதி நடை­பெ­ற­வுள்­ளது. இதில் கட்சி மாறி வந்­த­வர்­க­ளுக்கே வேட்­பா­ளர்­க­ளாக மீண்­டும் இட­ம­ளித்­துள்­ளது ஆளுங்­கட்சி! இது அர­சி­யல் அற­வ­ழியா? அவர்­கள் முன்பு போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்ற அ.இ.அ.தி.மு.க. இப்­போது வேறு வேட்­பா­ளர்­களை அறி­வித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சி­யாக இருக்­கும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பில் வழக்­கு­ரை­ஞர் பரந்­தா­மன் அவர்­கள் மது­ராந்­த­கம் தொகு­திக்­கும், வழக்­கு­ரை­ஞர் சுகன்யா அவர்­கள் தாரா­பு­ரம் தொகு­திக்­கும் வேட்­பா­ளர்­க­ளாக அறி­விக்­கப்­பட்­டுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">சட்­ட­மன்­றப் பொதுத் தேர்­த­லில் அறு­திப் பெரும்­பான்மை பெறாத த.வெ.க.வுக்கு, அப்­போது தி.மு.க. தலை­மை­யி­லான கூட்­ட­ணி­யில்போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்ற சில கட்­சி­கள் ஆத­ர­வ­ளித்து, ஆட்­சி­யி­லும் பங்கு பெற்­றன. கம்­யூ­னிஸ்ட் கட்­சி­கள் இரண்­டும் வெளி­யில் இருந்து ஆத­ரவு என்ற நிலைப்­பாட்டை          எடுத்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">மக்­க­ளின் வரிப்­ப­ணம் 
அல்­லவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஆனால் அதை­யும் தாண்டி, 
த.வெ.க.வுக்கு ஏற்­பட்ட அச்ச உணர்­வின் கார­ண­மாக, அ.தி.மு.க.வில் இருந்து சில சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை ஆசை­காட்டி இழுத்­த­னர். அத­னால்  கட்­சித்­தா­வல்  சட்­டப்­படி  அவர்­க­ளின் பதவி பறிக்­கப்­ப­டும் சூழல் ஏற்­ப­டும் என்­ப­தால், அவர்­க­ளைப் பதவி வில­கச் செய்து தற்­போதுஇடைத்­தேர்­தல் நடை­பெற வேண்­டியஅவ­சி­யத்தை உரு­வாக்­கி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இதற்­கான தேவைஎன்ன? இந்த தேர்­தல் நடை­பெ­று­வ­தற்கு செல­வ­ழிக்­கப்­ப­டும் தொகை மக்­க­ளின் வரிப்­ப­ணம் அல்­லவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இதை வீண­டிக்க யார்  உரிமை தந்­தது? இந்­தத் தேர்­த­லைத் திணித்து மக்­கள் பணத்தை வீண­டிக்­கக் கார­ணம் யார் என்­பதை மக்­கள் அறிய மாட்­டார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தற்­போது ஆட்­சிக்­கான பெரும்­பான்­மை­யில் எந்­தப் பிரச்­சி­னை­யு­ மில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இந்த இடைத் தேர்­தல் வெற்றி தோல்வி, ஆட்­சி­யில் எந்த மாற்­றத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­வி­டாது என்ற நிலை­யில், நடை­பெ­ற­வுள்ள இடைத் தேர்­த­லின் முக்­கி­யத்­து­வம் என்ன என்­ப­தைச் சிந்­தித்­துப் பார்த்து, அதற்­கேற்ப மக்­கள் வாக்­க­ளிக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">இடைத் தேர்­தல் 
என்­பது எடைத்­தேர்­தலே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கடந்த 120 நாட்­க­ளா­கத் தமிழ்­நாட்­டில் நடை­பெற்­று­வ­ரும் த.வெ.க. ஆட்­சி­யின் செயல்­பா­டு­களை அள­வி­டு­வ­தற்­கான வாய்ப்பே இந்த இடைத் தேர்­தல்! பொது­வாக இடைத் தேர்­தல்­கள் என்­ப­வையே,  அரசை எடை­போட்­டுப் பார்க்­கும் தேர்­தலே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அப்­படி எடை போட்­டுப் பார்த்­தால் இந்த நான்கு மாதங்­க­ளில்  ஆட்­சி­யில் நடை­பெற்­றவை என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">1. தமிழ்­நாட்­டில் இது­வரை அறிந்­தி­ராத குதிரை பேரங்­க­ளும், கட்­சித் தாவல்­க­ளும், நமது அர­சி­யல் மாண்­பைக் கேலிக்கு உள்­ளாக்­கி­யுள்­ளன. அந்­தச் சூழ்­நி­லைக்கு இலக்­கான இரண்டு தொகு­தி­க­ளில் தான் இப்­போது இடைத்­தேர்­தல் நடை­பெ­று­ கி­றது. வாக்­க­ளித்த மக்­க­ளின் முடி­வுக்கு எதி­ரா­கவே, கட்சி மாறிய வேட்­பா­ளர்­கள் இப்­போது மீண்­டும் வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">2. தமிழ்­நாட்­டின் சட்­டம் – ஒழுங்கு சீர்­கு­லைந்­து­வ­ரும் செய்­தி­கள் அன்­றா­டம் வந்து கொண்­டி­ருக்­கின்­றன. கொலை­க­ளும், கூலிப் படை­க­ளும், பாலி­யல் வன்­கொ­டு­மை­க­ளும், ஆண­வப் படு­கொ­லை­ க­ளும் மக்­களை அச்­சத்­தில் ஆழ்த்­தி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">3. தமிழ்­நாட்டை, ஏழை, எளிய, பிற்­ப­டுத்­தப்­பட்ட, ஒடுக்­கப்­பட்ட மக்­களை வஞ்­சிக்­கும் ஒன்­றிய பா.ஜ.க. அர­சின் திட்­டங்­க­ளுக்கு ஒப்­பு­தல் வழங்­கா­மல், மக்­க­ளைப் பாது­காத்து வந்­தது கடந்த தி.மு.க. ஆட்சி. ஆனால், மகாத்மா காந்தி ஊரக வேலை­வாய்ப்பு உறு­தித் திட்­டம் என்ற பெய­ரில் நடை­பெற்­று­வந்த 100 நாள் வேலைத் திட்­டத்தை வீண­டிக்­கும் வகை­யில் ஒன்­றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த திட்­டத்தை         ஏற்­றுக் கையொப்­ப­மிட்­டி­ருக்­கி­றது தற்­போ­தைய த.வெ.க.அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">4. தமிழ்­நாட்­டின் தொழில் வளர்ச்­சி­யை­யும், பொரு­ளா­தார வளர்ச்­சி­யை­யும் விரி­வாக்­கும் வகை­யில் மேற்­கொள்­ளப்­பட்ட கட்­ட­மைப்­புத் திட்­டங்­களை இந்த அரசு கைவிட்­டுள்­ளது. அவற்­றுள் தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்­குப் பெரி­தும் உத­வக் கூடிய பரந்­தூர் விமான நிலை­யத் திட்­டம், பரந்­தூர் வரை­யி­லான மெட்ரோ விரி­வாக்­கம், உல­க­ளா­விய விளை­யாட்டு நக­ரம், கிழக்­குக் கடற்­க­ரைச் சாலை மேம்­பா­லத் திட்­டம், சென்னை கிண்டி – வேளச்­சேரி மேம்­பா­லத் திட்­டம்  ஆகி­யவை வெளிப்­ப­டை­யா­கக் கைவி­டப்­பட்­டு­விட்­டன. இன்­னும் பல திட்­டங்­கள் கிடப்­பில் போடப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">5. தேர்­த­லில் வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றா­மல் இருப்­ப­தற்­கான கார­ணங்­க­ளைத் தேடிக் கொண்­டி­ருக்­கி­றது த.வெ.க. அரசு. திரா­விட முன்­னேற்­றக் கழக அரசு கொண்­டு­வந்த மக­ளி­ருக்கு மாதந்­தோ­றும் ரூ.1000 வழங்­கும் மக­ளிர் உரி­மைத் தொகையை ரூ.2500 ஆக உயர்த்­தித் தரு­வோம் என்ற வாக்­கு­று­தி­யைத் த.வெ.க. நிறை­வேற்­ற­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அனைத்து வீடு­க­ளுக்­கும் ஆறு சிலிண்­டர்­கள் தரு­வோம் என்று சொன்­னதை,    தகுதி    உடை­ய­வர்­க­ளுக்கு மூன்று சிலிண்­டர் என்று மாற்றி, சொன்­ன­தற்கு மாறாக நடந்­து­கொள்­கி­றது த.வெ.க. அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">6. ஆத­ரவு அளித்­துள்ள கட்­சி­களே, இந்த அர­சின் பல நிலைப்­பா­டு­ க­ளுக்­குக் கண்­ட­னம் தெரி­விக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. காட்­சி­களே நிரம்­பி­யி­ருக்­கின்­ற­னவே தவிர, ஆட்சி சரி­யாக நடை­பெ­று­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">7. நிதி­நி­லை­யைக் கார­ணம் காட்டி, மக்­கள் நலத் திட்­டங்­க­ளைத் தவிர்க்­கும அரசு, ரூ.1200 கோடி செல­வில் புதிய தலை­மைச் செய­ல­கம் என்­றும், பல கோடி செல­வில் முத­ல­மைச்­சர் அலு­வ­ல­கம் மாற்­றம் என்­றும் தேவை­யற்­ற­வற்­றுக்­குச் செல­வ­ழிக்­கும் அவ­லம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">8. ஒன்­றிய பா.ஜ.க. அர­சின் தேசி­யக் கல்­விக் கொள்­கை­யின் அம்­சங்­களை நிறை­வேற்ற மறை­  மு­க­மா­கப் பல நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. தனி­யார் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்­குச் சாத­மா­கச் சில சட்­டங்­க­ளும் கொண்­டு ­வ­ரப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">9. மக்­கள் நலத் திட்­டங்­க­ளுக்கு எதிர்க்­கட்­சி­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­றா­மல், அர­சி­யல் காழ்ப்­பு­ணர்ச்­சி­யு­டன் கைது, வழக்­கு­கள் தொடர்­வ­தி­லேயே இந்த அரசு குறி­யாக இருப்­ப­து­டன், அதற்கு முகாந்­தி­ரங்­கள் இல்லை என்று நீதி­மன்­றங்­  க­ளின் கண்­ட­னங்­க­ளை­யும் பெற்­றுள்­ளது. இதுவே, இதன் காழ்ப்­பு­ணர்ச்­சிக்கு அடை­யா­ள­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">10. தமிழ்­நாட்டு சட்­ட­மன்­றத்­தில், தேர்­தல் தொகுதி மறு­வ­ரை­ய­றைப்­பற்றி, எதிர்க்­கட்­சி­கள் உள்­பட அனை­வ­ரின் ஆத­ர­வு­டன் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னம் ஒன்­றாக இருக்க, உள்­துறை அமைச்­சர் அமித்ஷா தலை­மை­யில் நடந்த தென்­மண்­டல முத­ல­மைச்­சர்­கள் கூட்­டத்­தில் பங்­கேற்ற பின், அந்தமுடிவு மாற்­றப்­பட்­டதே, இது நியா­யந்­தானா? உரி­மையை அடகு வைத்த கொடு­மை­யல்­லவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இன்­னும் இந்த 120 நாட்­க­ளில் நடை­பெற்­றுள்ள மக்­கள் நலத் திட்­டங்­கள் என்று சொல்­வ­தற்கு எது­வு­மில்லை என்­பதே தற்­போ­தைய நிலை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">தி.மு.கழ­கம் 
நமது ஆத­ரவு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இந்த இடைத் தேர்­த­லில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் வெற்­றி­பெற வேண்­டி­யது அவ­சி­ய­மான ஒன்­றா­கும். கடந்த அய்ந்து ஆண்­டு­க­ளில் சிறப்­பான ஆட்­சியை வழங்­கி­னா­லும், மக்­க­ளின் மாறு­பட்ட முடி­வின் கார­ண­மாக எதிர்க்­கட்­சி­யாக ஆக்­கப்­பட்­ட­போ­தும், ஆக்­கப்­பூர்­வ­மா­கச் செயல்­பட்டு மக்­க­ளுக்­கா­கக் குரல் கொடுத்து வரு­வது திரா­விட முன்­னேற்­றக் கழ­கமே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இன்­னும், தனது பா.ஜ.க. கூட்­ட­ணியை விடா­மல், அவர்­க­ளு­டன் இணைந்தே போட்­டி­யி­டு­கி­றது அ.இ.அ.தி.மு.க! தமிழ்­நாட்­டில் பா.ஜ.க கூட்­டணி என்­பது முற்­றி­லும் தோற்­க­டிக்­கப்­பட வேண்­டிய கூட்­ட­ணியே ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இந்­தத் தேர்­த­லில், தி.மு.க. வெற்றி பெறு­வ­தன் மூலம் த.வெ.க. அர­சுக்கு ஒரு பாடம் கற்­பிக்க முடி­யும். அதன் தவ­றான நிலைப்­பா­டு­கள், போக்­கு­கள், அர­சி­யல் காழ்ப்­பு­ணர்ச்சி ஆகி­யவை மக்­க­ளுக்கு விரோ­த­மா­னவை என்­பதை எடுத்­துச் சொல்லி திருத்த முய­லும் மாறு­பட்ட மக்­கள் தீர்ப்பு. ஆரோக்­கிய அர­சி­யல் உரு­வாக தோல்வி ஒரு பாட­மாக ஆவ­தற்கு, இந்த இடைத் தேர்­தல் ஒரு முக்­கி­ய­மான வாய்ப்­பா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">எனவே, நான்கு மாத த.வெ.க. ஆட்­சிக்­குப் பாடம் கற்­பிக்­க­வும், ஜன­நா­ய­கத்­தின் மாண்­பை­யும் கருதி, இவ் விரு தொகுதி மக்­க­ளும் தி.மு.க. வேட்­பா­ளர்­களை ஆத­ரிக்க வேண்­டும் என்று திரா­வி­டர் கழ­கத்­தின் சார்­பில் கேட்­டுக் கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">போதிய பெரும்­பான்மை ஆளுங்­கட்­சிக்கு இல்லை என்ற நிலை­யில், த.வெ.க.வுக்கு ஆத­ரவு கொடுத்த கட்­சி­களே, ஆளுங்­கட்­சி­யின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு விமர்­ச­ன­ மும், எதிர்ப்­பும் தெரி­விக்­கும் நிலை­யில், சட்­ட­மன்ற நட­வ­டிக்­கை­க­ளின் மர­பும், மாண்­பும் காணா­மல் போன விசித்­தி­ரத்தை உரு­வாக்­கிய ஆளுங்­கட்­சித் தோற்­றால், தங்­க­ளது அதி­கார, ஆண­வம்­பற்றி அவர்­களே உணர்ந்து, மாற்­றத்தை ஏற்­ப­டுத்­திக் கொள்ள தி.மு.க.வின் வெற்றி உத­வும் அல்­லவா!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">திரா­வி­டர் கழ­கத்­தின் முழு­மை­யான ஆத­ரவை திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்கு வழங்கி, பிரச்­சா­ரத்­தி­லும் கழ­கம் ஈடு­ப­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">மயக்­க­மின்றி, தயக்­க­மின்றி இரண்டு தொகுதி வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளும் ஆழ்ந்து சிந்­தித்து, வாக்­க­ளித்து தி.மு.க.வை வெற்றி பெற வைத்­தால், அது ஒரு நல்ல அர­சி­யல் திருப்­பம் ஆகும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அவர்­கள் தமது அறிக்­கை­யில்கூறி­யுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>