<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="17/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,66,957,983" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Sep 17 2026 03:40:11 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260917T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="17092026-MDU-08" position.sequence="08" ex-ref="17092026-MDU-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="57">மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு சர்ச்சை:   யார் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது த.வெ.க. அரசு?   </lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup876115_08_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="17">தி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ராவிட அரசியல் இயக்கம் என்பது ஒருபோதும் ஆன்மீகத்திற்கு எதிரான தல்ல. திராவிடக் கொள்கையின் முதல் அரசியல் இயக்கமான நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டதே ஒரு குடமுழுக்கு விவகாரத்தால்தான் என்பது மறைக்க முடியாத வரலாறு. தென்கயிலை எனப்படும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 115 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணி நடைபெற்றது. சென்னையின் பெரும் செல்வந்தரும், பொதுநல செயற்பாட்டா ளரும், காங்கிரஸ் கட்சியில் மாநகராட்சி உறுப்பினராகவும் இருந்த பிட்டி.தியாகராயர் அவர்கள், ஒரு பவுன் 5 ரூபாய் விற்ற காலத்திலேயே மயிலாப்பூர் கோயில் குடமுழுக்கிற்காக 10ஆயிரம் ரூபாய்நன்கொடை அளித்தார். கோயில் அர்ச்சர்களும்நிர்வாகத்தினரும் தியாக
ராயரின் ஆன்மிக உள்ளத்தைப் பாராட்டி, இன்றைக்கு கோடிகளில் மதிப்பு பெறும் அந்த நன்கொடையைப் பெற்றுச் சென்றனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">திருப்பணி நிறைவுபெற்று, குடமுழுக்கு நடைபெறும் நாளில் தியாகராயர் அவர்கள் மயிலாப்பூர் திருக்கோயிலுக்குச் சென்றார். அர்ச்சகர்களும் அவர்களுக்கு நெருக்க மான வர்களும் கோபுரத்தின் மீது ஏறி நின்றிருந்தனர். அதிகளவில் நன்கொடை கொடுத்த பக்திமானாகிய தியாகராயரும் கோபுரத்தின் மீது ஏறிட விருப்பப்பட்டு அதை  நோக்கிச் சென்றார். அப்போது சென்னை மாநகராட்சியில் அவருக்கு குமாஸ்தாவாக இருந்த பிராமணர் ஒருவர் அவரைத் தடுத்தார். “உங்கள் சாதிக்கு இதற்கு மேல் அனுமதி யில்லை. கோபுரத்திற்குச் செல்லும் தகுதியும் உரிமையும் ஆகம நெறிப்படி பிராம ணர்கள் உள்ளிட்ட உயர் சாதி யினருக்கே உரியது” என்று தியாகராயரை அனுமதிக்க மறுத்துவிட்டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பிட்டி. தியாகராயர் தனது காரைத் திருப்பச் சொல்லி, டி.எம்.நாயர் வீட்டுக்கு விடச் சொன்னார். தியாகராயரும் நாயரும் பிறகு நடேசனாரை சந்தித்தார்கள். ஏற்கனவே திராவிடர் சங்கம் – திராவிட மாணவர் விடுதி ஆகியவற்றை நடத்தி வந்த நடசேனார் – பிட்டி.தியாகராயர் – டி.எம்.நாயர் ஆகியோர் இணைந்தனர். நீதிக்கட்சி உருவானது. பிரிட்டிஷார் ஆட்சியில் இரட்டையாட்சி முறையிலான சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி வென்றது. 1925ஆம் ஆண்டு பனகல் அரசர் தலைமையிலான நீதிக்கட்சி ஆட்சியில், அறநிலையத்துறைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆன்மீகத்தில் நம்பிக்கையுள்ளவர் 
களால், ஆகம விதிகளுக்குட்பட்டு கொண்டு வரப்பட்ட அந்தச் சட்டத்தின் விதிகளை சங்கராச்சாரியார் உள்ளிட்ட ஆன்மீகப் பெரியவர்களுக்கு அனுப்பி, அவர்களின் சம்மதத்தையும் பெற்ற பிறகே, சென்னை மாநிலத்தில் உள்ள திருக்கோயில்களைப் பாதுகாக்கும் அறநிலையச் சட்டம் நிறை வேற்றப்பட்டது. அதுபோலவே, திருமுருக கிருபானந்த வாரியார் உள்ளிட்ட ஆன்மீக அன்பர்கள்பயன்படுத்திய குடமுழுக்கு என்ற சொல்லை,கும்பாபிஷேகம், சம்ப்ரோட்சணம் போன்ற சொற்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தியது திராவிட முன்னேற்றக் கழகம். தமிழ்நாட்டில் எந்த ஆட்சி மாறினாலும் குடமுழுக்கு – நன்னீராட்டுப் பெருவிழா என்ற சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார்தான் கோயில் கருவறைக்குள் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற உரிமைக்குரலை எழுப்பியவர். அதனை சட்டமாக்கியவர் முத்த மிழறிஞர் கலைஞர். அதன்படி, அனைத்து சாதியினரையும் அர்ச்சக ராக்கும் பணி ஆணைகளை வழங்கியவர் திராவிட நாயகர் நம் கழகத்தலைவர் அவர்கள். ஒன்றே குலம் – ஒருவனே தேவன் என்ற திருமூலரின் வரிகளை முன்மொழிந்தவர் பேரறிஞர் அண்ணா. அதையே, ‘கோயில் கூடாது என்பதல்ல, அது கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது” என்று வழிமொழிந்தவர் கலைஞர். இதுதான் திராவிட இயக்க ஆட்சியின் நிலைப்பாடு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு திருக்கோயிலுக்கு 12 ஆண்டு களுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடை பெறுவது வழக்கமாகும். மதுரை மீனாட்சி – சுந்தரேசு வரர் கோயிலுக்கு 2009ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அப்போது, முத்தமிழறிஞர் கலைஞர் தலைமை யிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்றது. அதன்படி, 2021ஆம் ஆண்டு குடமுழுக்கு நடை பெற்றிருக்க வேண்டும். ஆனால், 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்தின் காரணமாக கோயிலுக்குச் சொந்தமான வீரவசந்தராயர் மண்டபம் முழுமையாக சேதமடைந்தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">புகழ் பெற்ற மதுரைத் திருக்கோயில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. பின்னர் சமணர்கள் காலத்திலும் அதன் பெருமை நிலைத்திருந்தது. பல படையெடுப்புகளை எதிர்கொண்டு,திருமலை நாயக்கர்  காலத்தில், சைவத்துடன்வைணவமும், தமிழ் மண்ணுக்கேயுரிய சமய நல்லிணக்கத்துடன் ஒன்றாகக்  கலந்தது. கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழாவையும், அதனைத்தொடர்ந்து மீனாட்சியம்மன் திருக் 
கல்யாணமும் நடைபெறும் விழாவையும் கொண்டாடுவது இன்றுவரை வழக்கமாக உள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வீரவசந்தராயர் மண்டபத்தைப்பழமை மாறாமல் புதுப்பித்த பிறகு, மதுரைதிருக்கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்துவ தென திராவிட மாடல் ஆட்சியில் தீர்மானிக் கப்பட்டது. அதற்கானப் பணிகள் நடைபெறத் தொடங்கின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மதுரை திருக்கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவராக ருக்மணி பி.டி.ஆர்.பழனிவேல்ராசன் அவர்களும், அவருடன் அறங்காவலர் உறுப்பினர்க ளும் திராவிட மாடல் ஆட்சியில் நியமிக்கப் பட்டனர். மீனாட்சி அம்மனை முதன்மை யாகக் கொண்ட திருக்கோயிலுக்கு அறங்காவலர் குழுத் தலைவராக ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டது வரலாற்றுச் சாதனையாகும். அதுவும், தன் துணை வரை இழந்தவர் அவர். அதுபோலவே,அறங்காவலர் உறுப்பினர்களில் ஒருவராக மீனா அன்புநிதி என்ற பெண்மணியும் நியமிக்கப்பட்டார். அறங்காவலர் குழு வரலாற்றில் இத்தகைய இரண்டு பெண் களை மிக முக்கியமான திருக்கோயிலில் நியமித்தது திராவிட மாடல் அரசு. 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருப்பணிக்காக திருக்கோயில்நிதியாக 15 கோடியே 81 இலட்சம் ரூபாயை திராவிட மாடல் அரசின் அறநிலையத்துறை ஒதுக்கியது. உபயதாரர் நிதி 16 கோடியே 47 இலட்சம் ரூபாய் நிதியும் சேர்த்து, 32 கோடியே 28 இலட்சம் ரூபாய் செலவில், 186 திருப்பணிகளைத் திருக்கோயிலில் மேற்கொள்வது எனவும், 2026 மார்ச் மாதத்திற்குள் குடமுழுக்கு நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தீ விபத்தால் சிதிலமடைந்த வீரவசந்த ராயர் மண்டபத்தை பழம்பெருமையுடன் புதுப்பிப்பதற்காக 35 கோடியே 30 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நாமக்கல் அருகிலிருந்து, அதே வகை யிலான கல் மிகுந்த சிரத்தையுடன் வெட்டி எடுக்கப்பட்டு, பாதுகாப்புடன் மதுரைக்குக் கொண்டு வரும் பணியை திராவிட மாடல் அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர்பாபு அவர்கள் மேற்கொண்டார்.  தலைமைச் சிற்பி வேல்முருகன் முன்னெடுப்பில், பழமை மாறாத சிற்பங்க ளுடனான மண்டபத் தூண்களின் பணிகள் விரைவாக நடைபெற்றன. ஒவ்வொன்றும் 16 அடி உயரத்திலான, 73 கல் தூண்களுடன், உரிய நேரத்தில் மண்டபத்தை முடித்து, குடமுழுக்கு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் 2026ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே திராவிட மாடல் அரசினால் நிறைவேற்றப்பட்டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்த 7–3–2026 அன்று திராவிட மாடல் அரசின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தலைமை யில் நடைபெற்ற மதுரைக் கோயில் திருப்பணி சீராய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பட்டர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், திருப் 
பணிகள் விரைந்து நடந்து முடிந்துள்ள நிலையில், திருக்கோயிலின் வழக்கமான சித்திரைத் திருவிழா மற்றும் இதர நிகழ்வு களை நிறைவு செய்தபிறகு, பராபவ ஆண்டு ஆவணித் திங்கள் 31ஆம் நாள் (17–9–2026) அன்று குடமுழுக்கு விழாவை நடத்தலாம் எனத் தெரிவித்த நிலையில், ஆகம விதிகளை மதித்து திராவிட மாடல் அரசின் அறநிலையத் துறை, அந்தத் தேதியில் குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கியது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் அறங்காவலர் உறுப்பினர் ஆகிய இரண்டு பெண்மணி களையும் புறக்கணிக்கும் வகையில், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனைவரையும் புறந்தள்ளி, ஆகம விதிகளுக்கு முரணாகவும், அறநிலையத் துறை மரபுக்கு மாறாகவும், எங்கிருந்தோ வந்த உத்தரவுக்கு அடிபணிந்த அடிமை யாக செயல்பட்டு வருகிறது ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மதுரை திருக்கோயில் குடமுழுக்கு விழா அழைப்பிதழில் அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் 5 உறுப்பினர் களின் பெயர்கள் இடம்பெறவில்லை. காரணம், ஒரு பெண்மணி தலைவராக இருக்கிறார். மற்றொரு பெண்மணிஉறுப்பினராக இருக்கிறார். அவர்களை முன்னிறுத்துவதா என்கிற ஆணாதிக்க உணர்வே முதன்மை யானதாகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சிவபெருமானே தன் உடம்பில் பாதியை, பெண்ணான உமையம் மைக்குக் கொடுத்தவர். ஜோசப் விஜய் ஆட்சியில், மதுரைத் திருக்கோயில் அறங்காவலர் குழுவில் உள்ள இரண்டு பெண்மணிகளை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு, அழைப்பிதழில் ஆர்.எஸ்.எஸ். வளர்ப்பான அமைச்சர் நிர்மல் குமாருக்கு முக்கியத்துவம் தந்திருக் கிறார்கள். அவரையடுத்து, மதுரை மாவட்டத்திற்குட்பட்ட காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் பெயர் அச்சிடப் பட்டுள்ளது. த.வெ.க.வின் அறநிலையத் துறை அமைச்சர் ‘முறுக்கு பாக்கெட்’ ரமேஷ் பெயரைப் போனால் போகிற தென்று அதற்குப்பிறகு அச்சிட்டுள்ளார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அறங்காவலர்களைப் புறக்கணிப்பது குறித்து உயர்நீதிமன்றமே கண்டனம் தெரிவித்தும் விஜய்யின் த.வெ.க. அரசு நேர்மையாகச் செயல்படவில்லை. அறங்காவலர் குழுவில் உள்ளவர்களை மட்டுமல்ல, பக்திப் பாசுரங்கள் நிறைந்த தமிழையும் த.வெ.க. அரசு முற்றிலுமாக ஓரங்கட்டியுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">திராவிட மாடல் ஆட்சியில், ஆகம விதிகள்படியான வடமொழி மந்திரங் 
களுடன், தேவாரம் – திருவாசகம் உள்ளிட்ட தமிழ் மந்திரங்களையும் பாடக் கூடிய ஓதுவார்களுக்குயாக சாலையிலும், கோபுரத்திலும், கருவறையிலும் உரிய வாய்ப்பு வழங்கப்பட்டது. ஜோசப் விஜய் ஆட்சியில்தமிழ் ஓதுவார்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்பதால்,  அவர்கள் அறநிலையத்துறை அலுவலகத் திலேயே முற்றுகைப் போராட்டம் நடத்தும் அவல நிலை ஏற்பட்டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாமதுரையில் அமைந்துள்ள மீனாட்சி யம்மன் கோயில் திருக்குடமுழுக்கில் தமிழுக்கு உரிய இடம் தரவேண்டும் என்று போராடிய தமிழ்நெறிப் பக்தர்களைத் தீவிரவாதிகள் போல இழுத்துச் சென்று கைது செய்தது த.வெ.க. அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">திராவிட மாடல் ஆட்சியில் 4000 திருக்கோயில்களுக்கு மேல் சிறப்பான முறையில் குடமுழுக்குப் பெருவிழாக்கள் நடைபெற்றன. அதே திராவிட மாடல் ஆட்சியில் திருப்பணிகள் நிறைவுபெற்ற, புகழ்மிக்க மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் குடமுழுக்கை நடத்துவதில், ஜோசப் விஜய்யின் த.வெ.க. அரசு இத்தனை தகிடுதத்தங்களை செய்வது யாரைத் திருப்திப்படுத்துவதற்காக?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">  
</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>