<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="17/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,923,958,1496" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Sep 17 2026 03:44:11 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260917T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="17092026-VLR-05" position.sequence="05" ex-ref="17092026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">மின்வெட்டால் மக்கள் தவிப்பு: மின்துறை செயல்பாடற்றுக்கிடக்கிறது!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="30"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">மின்வெட்டை புகார் செய்யும் மின்னகத்துக்கே மின்வெட்டு!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="34">மின்துறையை தனியார் மயமாக்க த.வெ.க. அரசு முயற்சி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்னை, செப்.17 –-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமி­ழ­கத்­தில் மின­சார விநி­யோ­கம் சீராக இருப்­ப­தாக மின்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்டு வரும் நிலை­யில், சென்­னை­யின் பல்­வேறு பகு­தி­க­ளில் இரவு நேரங்­க­ளி­லும் பல மணி நேரம் மின்­வெட்டு ஏற்­ப­டு­வது, மின்­மாற்றி மற்­றும் கேபிள் பழு­து­க­ளால் மக்­கள் பாதிக்­கப்­ப­டு­வது, மின் தடையை புகார் செய்ய வேண்­டிய மின்­ன­கம் சேவை மையத்­துக்கே மின்­தடை ஏற்­ப­டு­வது என மின்­துறை செயல்­பா­டு­கள் மீது தொடர்ந்து புகார்­கள் எழுந்­துள்­ளன. இத­னால் குழந்­தை­கள், முதி­ய­வர்­கள், நோயா­ளி­கள், பொது­மக்­கள் மட்­டு­மின்றி சிறு, குறு மற்­றும் நடுத்­தர தொழில் நிறு­வ­னங்­க­ளும் பாதிக்­கப்­பட்டு வரு­வ­தாக கூறப்­ப­டு­ கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதற்­கி­டையே, மின் துறை­யில் போது­மான பணி­யா­ளர்­களை நிய­மித்து பரா­ம­ரிப்பு பணி­களை வலுப்­ப­டுத்­து­வ­தற்கு பதி­லாக, மின் உற்­பத்தி, பரி­மாற்­றம், விநி­யோ­கம் உள்­ளிட்ட பணி­க­ளில் தனி­யார் பங்­க­ளிப்பை அதி­க­ரிக்­கும் முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக தமிழ்­நாடு மின் ஊழி­யர் மத்­திய அமைப்பு குற்­றம் சாட்­டி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மின்­தடை, குறைந்த மின்­ன­ ழுத்­தம், மின் கட்­ட­ணப் பிரச்­சினை உள்­ளிட்ட புகார்­களைதெரி­விக்க பொது­மக்­கள் பயன்­ப­டுத்­தும் 94987 94987 என்ற மின்­ன­கம் எண்­ணுக்கு தின­மும் சுமார் 3,000 அழைப்­பு­கள் வரு­வ­தாக கூறப்­ப­டு­கி­ றது. ஆனால், மின்­தடை ஏற்­பட்ட நேரத்­தி­லேயே மின்­ன­கம் அழைப்பு மையத்­தை­யும் தொடர்பு கொள்ள முடி­யாத நிலை ஏற்­ப­டு­வ­தாக புகார்­கள் எழுந்­துள்­ளன. மின்­ன­கம் அழைப்பு மையத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்ள மின் காப்பு வசதி சுமார் 10 நிமி­டங்­க­ளுக்கு மட்­டுமே போது­மா­ன­தாக இருப்­ப­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மின்­ன­கம் அழைப்பு மையத்­துக்கு மயி­லாப்­பூர் 230 கிலோ வோல் துணை மின் நிலை­யத்­தில் இருந்து மின­சா­ரம் வழங்­கப்­ப­டு­கி­றது. அந்த துணை மின் நிலை­யத்­தில் ஏதே­னும் கோளாறு ஏற்­பட்டு, 10 நிமி­டங்­­ 
களுக்­குள் மின்­சா­ரம் சீரா­க­வில்லை என்­றால், மின்­ன­கம் அழைப்பு மைய­மும் செயல்­பட முடி­யாத நிலை ஏற்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது. மின­வெட் டால் பாதிக்­கப்­பட்ட மக்­கள் புகார் தெரி­விக்க வேண்­டிய நேரத்­தி­லேயே, அந்த புகாரை பெற வேண்­டிய மின்­ன­கம் மைய­மும் மின்­சா­ரம் இல்­லா­மல் முடங்­கு­வது, மின்­து­றை­யின் மின் காப்பு மற்­றும் அவ­ச­ர­கால ஏற்­பா­டு­கள் குறித்து கேள்­வியை எழுப்­பி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">களப்­ப­ணி­யில் உள்ள மின் அதி­கா­ரி­க­ளின் செல்­போன் எண்­கள் மாற்­றப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டும் நிலை­யில், புதிய எண்­கள் குறித்து பொது­மக்­க­ளி­டம் போதிய அள­வில் தக­வல் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை என்ற புகா­ரும் உள்­ளது. இத­னால் பழைய எண்­க­ளில் தொடர்பு கொள்­ளும் மக்­கள் பதில் கிடைக்­கா­மல் தவிக்­கின்­ற­னர். சில பகு­தி­க­ளில் ‘ஃபியூஸ் ஆஃப்’ புகார் எண்­க­ளும் தொடர்பு கொள்ள முடி­யாத நிலை இருப்­ப­தாக கூறப்­ப­டு­வ­ தால், பொது மக்­கள் மின்­ன­கம் எண்­ணையே நம்ப வேண்­டிய நிலை உள்­ளது. ஆனால், அது­வும் மின்­த­டை­யால் முடங்­கி­னால் புகார் தெரி­விக்­கக்­கூட முடி­யா­த­நிலை ஏற்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்­னை­யின் பல்­வேறு பகு­தி­க­ளில் இரவு நேரங்­க­ளி­லும் அறி­விக்­கப்­ப­டாத மின்­வெட்டு ஏற்­ப­டு­வ­தாக பொது­மக்­கள் தொடர்ந்து புகார் தெரி­வித்து வரு­கின்­ற­னர். சென்னை அமைந்­த­கரை பகு­தி­யில் 8 மணி நேரத்­திற்­கும் மேலாக மின்­சா­ரம் இல்­லா­மல் மக்­கள் பாதிக்­கப்­பட்­ட­தாக தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன. மின் விசிறி உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சிய சாத­னங்­கள் இயங்­கா­த­தால் குழந்­தை­ கள், முதி­ய­வர்­கள் உள்­ளிட்­டோர் இரவு நேரத்­தில் கடும் சிர­மத்­திற்கு ஆளா­ன­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. புளி­யந்­தோப்பு, பால­வாக்­கம் உள்­ளிட்ட பகு­தி­க­ளி­லும் சுமார் 3 மணி நேரம் வரை மின்­தடை ஏற்­பட்­ட­தாக பொது­மக்­கள் தெரி­வித்­துள்­ள­னர். நிலத்­தடி கேபிள் கோளாறு உள்­ளிட்ட கார­ணங்­க­ளால் மின்­சா­ரம் துண்­டிக்­கப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு­பு­றம் மின் விநி­யோ­கம் சீரா­கி­விட்­ட­தாக மின்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­ப­டும் நிலை­யில், மறு­பு­றம் பல பகு­தி­க­ளில் மின்­தடை தொடர்­வது பொது­மக்­க­ளி­டையே கேள்­வியை எழுப்­பி­யுள்­ளது. மின்­தடை ஏற்­ப­டும் பல்­வேறு சம்­ப­வங்­க­ளில் மின்­மாற்றி பழுது, நிலத்­தடி கேபிள் கோளாறு, மின் சாத­னங்­க­ளில் தொழில்­நுட்­பக் கோளாறு போன்­றவை கார­ணங்­க­ளாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மின்­மாற்­றி­க­ளில் தீப்­பற்­று­தல் அல்­லது முக்­கிய மின் சாத­னங்­க­ளில் பழுது ஏற்­பட்­டால், மின்­சா­ரத்தை மீண்­டும் வழங்­கு­வ­தற்கு நீண்ட நேரம் ஆகி­றது. இத­னால் மின்­மாற்­றி­ கள், துணை மின் நிலை­யங்­கள், கேபிள்­கள் உள்­ளிட்ட மின் கட்­ட­மைப்­பு­க­ளில் வழக்­க­மான பரா­ம­ரிப்­புப் பணி­கள் போது­மான அள­வில் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றதா என்ற கேள்வி எழுந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒவ்­வொரு மின்­மாற்றி தீ விபத்­துக்­கும் பரா­ம­ரிப்­பின்­மையே கார­ணம் என்று கூற முடி­யாது என்­றா­லும், தொடர்ந்து ஏற்­ப­டும் பழு­து­களை கருத்­தில் கொண்டு மின் கட்­ட­மைப்­பு­களை முன்­கூட்­டியே ஆய்வு செய்து பரா­ம­ரிக்க வேண்­டும் என்­பதே பொது மக்­க­ளின் எதிர்­பார்ப்­பாக உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மின்­தடை வீடு­களை மட்­டு­மின்றி சிறு, குறு மற்­றும் நடுத்­தர தொழில் நிறு­வ­னங்­க­ளை­யும் பாதிக்­கி­றது. திடீர் மின்­த­டை­யால் இயந்­தி­ரங்­கள் நிறுத்­தப்­ப­டு­வ­து­டன், மீண்­டும் மின்­சா­ரம் வந்த பிறகு உற்­பத்­தியை தொடங்­கு­வ­தற்கு கால தாம­தம் ஏற்­ப­டு­கி­றது. இத­னால் உற்­பத்தி இழப்பு ஏற்­ப­டு­வ­து­டன், மாற்று மின்­சார வச­தி­களை பயன்­ப­டுத்த வேண்­டிய தொழில் நிறு­வ­னங்­க­ளுக்கு கூடு­தல் செல­வும் ஏற்­ப­டு­கி­றது. மின்­சார விநி­யோ­கம் சீராக இல்­லா­விட்­டால் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, உற்­பத்தி என பல துறை­க­ளி­லும் பாதிப்பு ஏற்­ப­டும் அபா­யம் இருப்­ப­தாக சமூக ஆர்­வ­லர்­கள் எச்­ச­ரிக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாடு மின் ஊழி­யர் மத்­திய அமைப்பு பொதுச் செய­லா­ளர் ஜெய்­சங்­கர் வலி­யு­றுத்­தி­யுள்­ள­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மின்­சா­ரம் என்­பது மக்­க­ளின் அடிப்­ப­டைத் தேவை. மின்­வெட்­டால் மக்­கள் பாதிக்­கப்­ப­டும் நிலை­யில், புகார் தெரி­விக்­கும் மின்­ன­கத்­துக்கே போது­மான மின்­காப்பு வசதி இல்­லா­தது ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. மின் உற்­பத்தி முதல் விநி­யோ­கம் வரை பொதுத் துறையை வலுப்­ப­டுத்­து­வ­தற்கு பதி­லாக தனி­யார் பங்­க­ளிப்பை அதி­க­ரிப்­பது தீர்­வா­காது. புதிய மின் உற்­பத்தி நிலை­யங்­கள் மற்­றும் துணை மின் நிலை­யங்­களை பொதுத்­துறை மூலம் அமைக்க வேண்­டும். மின் மாற்றி, கேபிள் உள்­ளிட்ட மின் கட்­ட­மைப்­பு­களை முறை­யாக பரா­ம­ரிக்க போது­மான ஊழி­யர்­களை நிய­மிக்க வேண்­டும். ஒப்­பந்த தொழி­லா­ளர்­க­ளின் உரி­மை­க­ளை­யும் பாது­காக்க வேண்­டும். மின்­து­றையை தனி­யார் மய­மாக்­கும் முயற்­சி­களை கைவிட வேண்­டும் என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனவே, இரவு நேர மின்­வெட்டை கட்­டுப்­ப­டுத்தி தடை­யற்ற மின்­சா­ரம் வழங்­கு­தல், மின்­மாற்றி மற்­றும் மின் கட்­ட­மைப்­பு­களை முறை­யாக பரா­ம­ரித்­தல், மின்­ன­கத்­திற்கு போது­மான மின் காப்பு வசதி ஏற்­ப­டுத்­து­தல், போது­மான மின் ஊழி­யர்­களை நிய­மித்­தல், ஒப்­பந்த தொழி­லா­ளர்­க­ளின் உரி­மை­களை பாது­காத்­தல் மற்­றும் மின்­து­றையை தனி­யார் மய­மாக்­கும் முயற்­சி­களை கைவிட்டு பொதுத்­துறை மின்­வா­ரி­யத்தை வலுப்­ப­டுத்­து­தல் ஆகிய நட­வ­டிக்­கை­களை அரசு உட­ன­டி­யாக மேற்­கொள்ள வேண்­டும் என்­பதே பொது­மக்­கள் மற்­றும் மின் ஊழி­யர்­க­ளின் கோரிக்­கை­யாக உள்­ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>