<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="17/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,335,958,1083" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Sep 17 2026 03:44:38 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260917T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="17092026-VLR-06" position.sequence="06" ex-ref="17092026-VLR-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்து, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="23"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="38">பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – மக்கள் எதிர்ப்பை மதிப்பதுதான் ஜனநாயகம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="veeramani_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">சென்னை, செப். 17 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வருமாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இந்­தி­யாவை, குறிப்­பாக தமிழ்­நாட்­டைப் பொறுத்­த­வரை விவ­சா­யம் என்­பது அதி­கம் இடர்ப்­பா­டு­கள் உள்ள தொழில்! கால­நிலை மாற்­றம், திடீர் மழை, மேக­வெ­டிப்பு, வெள்­ளம், புயல், வறட்சி உள்­ளிட்ட இயற்­கைப் பேரி­டர்­கள், விதை, உரம், பூச்­சிக் ­கொல்லி மருந்து விலை உயர்­வு­கள், டிராக்­டர் வாடகை, பணி­யாட்­க­ளுக்­கான செல­வு­கள் என்று ஆண்­டுக்­காண்டு உயர்ந்து கொண்டே செல்­லும் செல­வு­கள், நல்ல விளைச்­சல் கிடைத்­தா­லும் விலை­யில் ஏற்­ப­டும் வீழ்ச்சி என்று போட்ட முத­லீட்­டைத் திரும்ப எடுப்­ப­தில் ஏரா­ள­மான சிக்­கல்­கள் நிறைந்­தது இந்­திய விவ­சா­யம். இத்­த­னைச் சிக்­கல்­க­ளுக்கு மத்­தி­யி­லும் பல கோடிக்­க­ணக்­கான மக்­கள் இன்­றும் விவ­சா­யத்­தைத் தங்­கள் வாழ்­வா­தா­ர­மா­கக் கரு­து­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.3">தண்­ணீர் திறந்­தும், விவ­சா­யி­ க­ளுக்கு எந்­தப் பய­னில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">தமிழ்­நாட்­டைப் பொறுத்­த­வரை, ஆற்­று­நீர்ப் பாச­னத்­தில் காவி­ரி­யின் பங்கு பெரி­யது. ஆனால், கரு­நா­டக அர­சின் பிடி­வா­தம் கார­ண­மா­க­வும், தமிழ்­நாடு அர­சின் அணு­கு­மு­றைக் குறை­பா­டு­கள் கார­ண­மா­க­வும், ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்­டூர் அணை­யி­லி­ருந்து திறக்­கப்­பட வேண்­டிய நீர், செப்­டம்­பர் ஒன்­றாம் தேதி தான் திறக்­கப்­பட்­டது. இத­னால், டெல்டா விவ­சா­யி­க­ளுக்கு எந்­தப் பய­னும் இல்லை என்­னும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">மற்­றொரு புறம், சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்கு முன்பு, கூட்­டு­ற­வுச் சங்­கங்­க­ளில் பெற்ற விவ­சா­யி­க­ளின் பயிர்க்­க­டன்­கள் முழு­மை­யாக ரத்து செய்­யப் ­ப­டும் என்று வாக்­கு­றுதி அளித்­தி­ருந்த த.வெ.க.  -ஆட்­சி­யில் வந்து அமர்ந்­த­தும், 2025 மே 1 முதல் 2026 பிப்­ர­வரி 28 வரை பெறப்­பட்ட ரூ.75,000 வரை­யி­லான கடன்­கள் மட்­டுமே ரத்து செய்­யப்­ப­டும் என்று அறி­வித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.3">அமைச்­ச­ரு­டன் நடந்த பேச்­சு­வார்த்தை தோல்வி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இத­னால், முழு­மை­யான பலன் கிட்­டாது என்­ப­தால், விவ­சா­யி­கள் கடந்த மே மாதம் முதலே தொடர்ந்து போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.  (15.9.2026) திருச்சி சம­ய­பு­ரம் டோல்­கேட் அருகே காத்­தி­ருப்­புப் போராட்­டம் நடத்­தப் போவ­தாக, 50-க்கும் மேற்­பட்ட விவ­சா­யி ­கள் சங்­கத்­தி­னர் அறி­வித்­தி­ருந்த நிலை­யில், அமைச்­ச­ரு­டன் நடந்த பேச்­சு­வார்த்­தை­யும் நேற்று தோல்வி அடைந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">போராட்­டத்­தைத் தொடர அனு­மதி மறுக்­கப்­பட்ட நிலை­யில், தனி­யார் ஒரு­வ­ரின் நிலத்­தில் 500-க்கும் மேற்­பட்ட விவ­சா­யி­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். வெய்­யில் கொடு­மை­யால் பனை ஓலை­யைத் தலைக்கு வைத்­துக் கொண்டு போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர் என்ற செய்தி பெரி­தும் கவ­லைக்­கு­ரி­ய­தா­கும். மேலும், பல இடங்­க­ளில் போராட்­டத்­திற்­குக் கிளம்­பிய விவ­சா­யி­கள் கைது செய்­யப்­பட்டு, வீட்­டுக் காவ­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­றும் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.  இது நியா­ய­மா­னது அல்ல!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">விவ­சா­யி­க­ளின் கோரிக்கை நியா­ய­மா­னது. ஆட்­சிக்கு வரும் முன்­னர் அளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­மா­று­தானே கோரு­கின்­ற­னர். அதற்­குக் காது­கொ­டுக்க வேண்­டி­யது அர­சின், முத­ல­ மைச்­ச­ரின் கடமை அல்­லவா? இன்­னல்­க­ளுக்கு மத்­தி­யில் அவர்­கள் மேற்­கொள்­ளும் விவ­சா­யம் இல்­லா­ விட்­டால், நமது நிலைமை என்ன? மேலும், தொடங்­கி­யுள்ள சூப்­பர் எல்­நினோ எத்­த­கைய ஆபத்­து­களை ஏற்­ப­டுத்­தப் போகி­றது என்ற அச்­சம், அனைத்­துத் தரப்­பி­ன­ரி­ட­மும் இருப்­ப­தைப் போல, விவ­சா­யி­ க­ளி­டையே அதி­கம் இருக்­கும் சூழ­லில், அவர்­க­ளின் சூழலை, நெருக்­க­டி­யைப் புரிந்­து ­கொள்ள வேண்­டி­யது ஓர் அர­சின் கட்­டா­யக் கட­மை­யா­கும்.  கைது செய்­யப்­பட்­டுள்ள விவ­சா­யி­ களை விடு­விப்­ப­ து­டன், அவர்­க­ளது போராட்­டத்­தின் நியா­யத்­தைப் புரிந்து பயிர்க் கடன்­களை முழு­மை­யா­கத் தமிழ்­நாடு அரசு தள்­ளு­படி செய்ய வேண்­டும் என்று கேட்­டுக் கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.3">பட்­டி­னப்­பாக்­கத்­தில் தலை­மைச் செய­ல­கம் அவ­சி­யமா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">ஏற்­கெ­னவே கடும் நிதி நெருக்­க­டி­யில் இருப்­ப­தா­கச் சொல்­லும் தமிழ்­நாடு அரசு, சென்னை பட்­டி­னப்­பாக்­கத்­தில் புதிய தலை­மைச் செய­ல­கம் கட்ட ரூ.1,200 கோடி ஒதுக்கி அர­சாணை வெளி­யிட்­டுள்­ளது. இது தேவையா, இப்­போது? முத­லில், தலை­மைச் செய­ல­கம் கட்­டத்  தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ள இடம், சூழ­லி­யல் அடிப்­ப­டை­யில் பொருத்­த­மில்­லாத இடம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">கட­லில் இருந்து 500 மீட்­ட­ருக் ­குள் (CRZ-II) பெரிய அடுக்­கு­மா­டிக் கட்­ட­டங்­கள் கட்­டு­வ­தற்கு 2011 ஆம் ஆண்டே தடை விதிக்­கும் வகை­யில் கொள்­கை­கள் எட்­டப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">ஆலிவ் ரிட்லி (Olive Ridley) ஆமை­கள் முட்­டை­யிட்டு இனப்­பெ­ருக்­கம் செய்­யும் ஒரு மென்­மை­யான சூழ­லைக் கொண்ட பகு­தி­யாக இந்­தக் கடற்­க­ரைப்­ப­குதி திகழ்­கி ­றது. கட்­டு­மா­னப் பணி­க­ளும், பிர­கா­ச­மான விளக்­கு­க­ளும் அவற்­றின் இனப்­பெ­ருக்­கச் சுழற்­சி­யைப் பாதிக்­கக்­கூ­டும் என்­றும் சுற்­றுச்­சூ­ழல் ஆர்­வ­லர்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">கடல் மட்­டத்­தில் ஏற்­ப­டும் உயர்­வு­கள், சென்­னை­யின் கட­லோ­ரப் பகு­தி­க­ளைப் பாதிக்­கும் ஆபத்து உள்­ள­தைத் தொடர்ந்து அறி­வி­ய­லா­ளர்­கள் சுட்­டிக்­காட்டி வரு­கின்­ற­னர். அதில், இந்­தப் பகுதி கடும் பாதிப்­பைச் சந்­திக்­கும் ஆபத்து அதி­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.3">மீன­வர்­க­ளின் வாழ்­வா­தா­ரம் கேள்­விக்­கு­றி­யா­கும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">அது மட்­டு­மல்­லாது, அங்கு சுமார் 12 மீன­வர் குடி­யி­ருப்­பு­கள் உள்­ளன. 1500-க்கும் மேற்­பட்ட மீன­வர் குடும்­ப ங்­கள், அந்­தக் கடல்­ப­ரப்பை நம்­பித் தொழில் செய்­கின்­ற­னர். அவர்­க­ளின் வாழ்­வா­தா­ரம் கேள்­விக்­கு­றி­யா­கும். பாது­காப்­புக் கார­ணங்­கள், போக்­கு­வ­ரத்­துக் கார­ணங்­கள் உள்­ளிட்­ட­வற்­றுக்­காக அந்­தப் பகுதி மக்­கள் அப்­பு­றப்­ப­டுத்­தப்­ப­டும் ஆபத்து உள்­ளது. முறை­யான வச­தி­க­ளு­டன் கடந்த காலங்­க­ளில் அவர்­க­ளுக்கு அங்­கேயே குடி­யி­ருப்­பு­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இந்த நிலை­யில் அங்கு தலை­மைச் செய­ல­க­மும், சட்­ட­மன்­றக் கட்­ட­ட­மும் அமைக்­கப்­ப­டு­வது அவர்­க­ளின் வாழ்க்­கை­யைப் பாதிக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">நெருக்­கடி மிகுந்த சாந்­தோம் சாலை­யில் பல பள்­ளி­கள் நெடுங்­கா­ல­மாக நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. தலை­மைச் செய­ல­கம், முத­ல­ மைச்­சர் அலு­வ­ல­கம், சட்­ட­மன்­றம் எல்­லாம்  அங்ேக அமைந்­தால், அத­னால் ஏற்­ப­டும் போகு­வ­ரத்து, அந்­தப் பகு­தியை வெகு­வா­கப் பாதிக்­கும். இப்­படி பல்­வேறு கார­ணங்­க­ளால், ஆளும் த.வெ.க. ஆட்­சிக்கு ஆத­ர­வ­ளித்து வரும் பல கட்­சி­க­ளே­கூட இத் திட்­டத்தை எதிர்க்­ கின்­றன என்­ப­தைப் புரிந்­து­ கொள்­ளுங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.3">அவ­சி­யம் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இவற்­றை­யெல்­லாம் ஓர் அரசு கவ­னத்­தில் கொள்ள வேண்­டாமா? தலை­மைச் செய­ல­கத்­திற்கு இடத்­தைத் தேர்ந்­தெ­டுக்­கும்­போது, இவை குறித்­தெல்­லாம் யோசிக்­கா­மலா முடிவு செய்­வார்­கள்? ஏழை, எளிய, நடுத்­தர மக்­க­ளின் வாழ்க்­கை­யைப் பாதிக்­கும் வகை­யில் திட்­ட­மி­ட­லாமா? புதிய தலை­மைச் செய­ல­கம் அமைக்க வேண்­டும் என்று அரசு கரு­தி­யி­ருக்­கு­மே­யா­னால், அதற்­குள் பல கோடி செல­வில் முத­ல­மைச்­சர் அலு­வ­ல­கத்தை, நாமக்­கல் கவி­ஞர் மாளி­கை­யின் பத்­தா­வது மாடிக்கு மாற்ற வேண்­டிய அவ­சி­யம் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.3">பொரு­ளா­தார நிலையை உயர்த்­து­வ­தில் கவ­னம் செலுத்­திய ‘திரா­விட மாடல்’ ஆட்சி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">முறை­யா­கத் திட்­ட­மிட்டு, கடந்த 18 ஆண்­டு­க­ளுக்கு முன்பு  ஓமந்­தூ­ரார் அர­சி­னர் தோட்­டத்­தில் முத்­த­மி­ழ­ றி­ஞர் கலை­ஞர் உரு­வாக்­கிய பசுமை சூழ் தலை­மைச் செய­ல­கத்­தை­யும், சட்­ட­மன்­றத்­தை­யும், அர­சி­யல் காழ்ப்­பு­ணர்ச்சி கார­ண­மாக அடுத்து வந்த முத­ல­மைச்­சர் ஜெய­ல­லிதா அம்­மை­யார் மருத்­து­வ­ம­னை­யாக மாற்­றி­னார். பிறகு ‘திரா­விடமாடல்’ ஆட்சி, தள­பதி மு.க. ஸ்டாலின் தலை­மை­யில் அமைந்­தா­லும், நிதி­நி­லை­யைக் கருத்­தில் கொண்டு, புதிய தலை­மைச் செய­ல­கம் குறித்து யோசிக்­கா­மல், பொரு­ளா­தார நிலையை உயர்த்­து­வ­தில் கவ­னம் செலுத்­தி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">முந்­தைய நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத்தை விடுத்து, புதிய கட்­ட­டத்­தைக் கட்டி, தன் பெய­ரைப் பொறிக்க பிர­த­மர் நரேந்­திர மோடி ஆசைப்­பட்­டது போல, இங்­கே­யும் தேவை­யற்ற செல­வு­க­ளைச் செய்­யக் கூடாது. கல்­வெட்­டு­க­ளில் பெய­ரைப் பொறிப்­ப­தை­விட, ஆட்­சி­யில் மேற்­கொள்­ளப்­பட்ட மக்­கள் நலத் திட்­டங்­க­ளின் மூலம் மக்­கள் நெஞ்­சங்­க­ளில் நிலைத்­தி­ருப்­பதே முக்­கி­ய­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">மீண்­டும் புதிய தலை­மைச் செய­ல­கம் என்ற பேச்சு எழுந்­தி­ருப்­ப­தும், குறிப்­பாக பட்­டி­னப்­பாக்­கத்­தில் கட்­டப்­ப­டு­வ­தா­கப் போடப்­பட்­டி­ருக்­கும் திட்­ட­மும் அவ­சி­ய­மற்­றது, தமிழ்­நாடுஅரசு மறு­ப­ரி­சீ­லனை செய்து அத் திட்­டத்தை நிறுத்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>