<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="18/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,66,957,983" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Sep 17 2026 12:25:08 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260918T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="18092026-CBE-05" position.sequence="05" ex-ref="18092026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="57">மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு சர்ச்சை:   யார் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது த.வெ.க. அரசு?   </lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup876834_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="17">தி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ரா­விட அர­சி­யல் இயக்­கம் என்­பது ஒரு­போ­தும் ஆன்­மீ­கத்­திற்கு எதி­ரான தல்ல. திரா­வி­டக் கொள்­கை­யின் முதல் அர­சி­யல் இயக்­க­மான நீதிக்­கட்சி எனப்­ப­டும் தென்­னிந்­திய நல­உ­ரி­மைச் சங்­கம் தோற்­று­விக்­கப்­பட்­டதே ஒரு குட­மு­ழுக்கு விவ­கா­ரத்­தால்­தான் என்­பது மறைக்க முடி­யாத வர­லாறு. தென்­க­யிலை எனப்­ப­டும் மயி­லாப்­பூர் கபா­லீஸ்­வ­ரர் கோயி­லில் 115 ஆண்­டு­க­ளுக்கு முன்பு திருப்­பணி நடை­பெற்­றது. சென்­னை­யின் பெரும் செல்­வந்­த­ரும், பொது­நல செயற்­பாட்டா ளரும், காங்­கி­ரஸ் கட்­சி­யில் மாந­க­ராட்சி உறுப்­பி­ன­ரா­க­வும் இருந்த பிட்டி.தியா­க­ரா­யர் அவர்­கள், ஒரு பவுன் 
5 ரூபாய் விற்ற காலத்­தி­லேயே மயி­லாப்­பூர் கோயில் குட­மு­ழுக்­கிற்­காக 10 ஆயி­ரம் ரூபாய்நன்­கொடை அளித்­தார். கோயில் அர்ச்­சர்­க­ளும் நிர்­வா­கத்­தி­ன­ரும் தியா­க
­ரா­ய­ரின் ஆன்­மிக உள்­ளத்­தைப் பாராட்டி, இன்­றைக்கு கோடி­க­ளில் மதிப்பு பெறும் அந்த நன்­கொ­டை­யைப் பெற்­றுச் 
சென்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">திருப்­பணி நிறை­வு­பெற்று, குட­மு­ழுக்கு நடை­பெ­றும் நாளில் தியா­க­ரா­யர் அவர்­கள் மயி­லாப்­பூர் திருக்­கோ­யி­லுக்­குச் சென்­றார். அர்ச்­ச­கர்­க­ளும் அவர்­க­ளுக்கு நெருக்க மான வர்­க­ளும் கோபு­ரத்­தின் மீது ஏறி நின்­றி­ருந்­த­னர். அதி­க­ள­வில் நன்­கொடை கொடுத்த பக்­தி­மா­னா­கிய தியா­க­ரா­ய­ரும் கோபு­ரத்­தின் மீது ஏறிட விருப்­பப்­பட்டு அதை  நோக்­கிச் சென்­றார். அப்­போது சென்னை மாந­க­ராட்­சி­யில் அவ­ருக்கு குமாஸ்­தா­வாக இருந்த பிரா­ம­ணர் ஒரு­வர் அவ­ரைத் தடுத்­தார். “உங்­கள் சாதிக்கு இதற்கு மேல் அனு­மதி யில்லை. கோபு­ரத்­திற்­குச் செல்­லும் தகு­தி­யும் உரி­மை­யும் ஆகம நெறிப்­படி பிராம ணர்­கள் உள்­ளிட்ட உயர் சாதியின­ருக்கே உரி­யது” என்று தியா­க­ரா­யரை அனு­ம­திக்க மறுத்­து­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பிட்டி. தியா­க­ரா­யர் தனது காரைத் திருப்­பச் சொல்லி, டி.எம்.நாயர் வீட்­டுக்கு விடச் சொன்­னார். தியா­க­ரா­ய­ரும் நாய­ரும் பிறகு நடே­ச­னாரை சந்­தித்­தார்­கள். ஏற்­க­னவே திரா­வி­டர் சங்­கம் – திரா­விட மாண­வர் விடுதி ஆகி­ய­வற்றை நடத்தி வந்த நட­சே­னார் – பிட்டி.தியா­க­ரா­யர் – டி.எம்.நாயர் ஆகி­யோர் இணைந்­த­னர். நீதிக்­கட்சி உரு­வா­னது. பிரிட்­டி­ஷார் ஆட்­சி­யில் இரட்­டை­யாட்சி முறை­யி­லான சட்­ட­மன்­றத் தேர்­த­லில் நீதிக்­கட்சி வென்­றது. 1925ஆம் ஆண்டு பன­கல் அர­சர் தலை­மை­யி­லான நீதிக்­கட்சி ஆட்­சி­யில், அற­நி­லை­யத்­து­றைச் சட்­டம் கொண்டு வரப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆன்­மீ­கத்­தில் நம்­பிக்­கை­யுள்­ள­வர் 
களால், ஆகம விதி­க­ளுக்­குட்­பட்டு கொண்டு வரப்­பட்ட அந்­தச் சட்­டத்­தின் விதி­களை சங்­க­ராச்­சா­ரி­யார் உள்­ளிட்ட ஆன்­மீ­கப் பெரி­ய­வர்­க­ளுக்கு அனுப்பி, அவர்­களின் சம்­ம­தத்­தை­யும் பெற்ற பிறகே, சென்னை மாநி­லத்­தில் உள்ள திருக் 
­கோ­யில்­க­ளைப் பாது­காக்­கும் அற­நி­லை­யச் சட்­டம் நிறை வேற்­றப்­பட்­டது. அது­போ­லவே, திரு­மு­ருக கிரு­பா­னந்த வாரி­யார் உள்­ளிட்ட ஆன்­மீக அன்­பர்­கள்பயன்­ப­டுத்­திய குட­மு­ழுக்கு என்ற சொல்லை,கும்­பா­பி­ஷே­கம், சம்ப்­ரோட்­ச­ணம் போன்ற சொற்­க­ளுக்கு மாற்­றா­கப் பயன்­படுத்­தி­யது திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். தமிழ்­நாட்­டில் எந்த ஆட்சி மாறி­னா­லும் குட­மு­ழுக்கு – நன்­னீ­ராட்­டுப் பெரு­விழா என்ற சொற்­கள் பயன்­ப­டுத்­தப் படு­
கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கட­வுள் மறுப்­பா­ள­ரான தந்தை பெரி­யார்­தான் கோயில் கரு­வ­றைக்­குள் அனைத்­துச் சாதி­யி­ன­ரும் அர்ச்­ச­க­ராக வேண்­டும் என்ற உரி­மைக்­கு­ரலை எழுப்­பி­ய­வர். அதனை சட்­ட­மாக்­கி­ய­வர் முத்த மிழ­றி­ஞர் கலை­ஞர். அதன்­படி, அனைத்து சாதி­யி­ன­ரை­யும் அர்ச்­சக ராக்­கும் பணி ஆணை­களை வழங்­கி­ய­வர் திரா­விட நாய­கர் நம் கழ­கத்­த­லை­வர் அவர்­கள். ஒன்றே குலம் – ஒரு­வனே தேவன் என்ற திரு­மூ­ல­ரின் வரி­களை முன்­மொ­ழிந்­த­வர் பேர­றி­ஞர் அண்ணா. அதையே, ‘கோயில் கூடாது என்­ப­தல்ல, அது கொடி­ய­வர்­க­ளின் கூடா­ர­மாகி விடக்­கூ­டாது” என்று வழி­மொ­ழிந்­த­வர் கலை­ஞர். இது­தான் திரா­விட இயக்க ஆட்­சி­யின் நிலைப்­பாடு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு திருக்­கோ­யி­லுக்கு 12 ஆண்டு களுக்கு ஒரு முறை குட­மு­ழுக்கு நடை பெறு­வது வழக்­க­மா­கும். மதுரை மீனாட்சி – சுந்­த­ரேசு வரர் கோயி­லுக்கு 2009ஆம் ஆண்டு குட­மு­ழுக்கு நடை­பெற்­றது. அப்­போது, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் தலைமையிலான திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்சி நடை­பெற்­றது. அதன்­படி, 2021ஆம் ஆண்டு குட­மு­ழுக்கு நடை பெற்­றி­ருக்க வேண்­டும். ஆனால், 2018ஆம் ஆண்டு ஏற்­பட்ட எதிர்­பா­ராத தீ விபத்­தின் கார­ண­மாக கோயி­லுக்­குச் சொந்­த­மான வீர­வ­சந்­த­ரா­யர் மண்­ட­பம் முழு­மை­யாக சேத­ம­டைந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">புகழ் பெற்ற மது­ரைத் திருக்­கோ­யில் பாண்­டிய மன்­னர்­க­ளால் கட்­டப்­பட்­டது. பின்­னர் சம­ணர்­கள் காலத்­தி­லும் அதன் பெருமை நிலைத்­தி­ருந்­தது. பல படை­யெ­டுப்­பு­களை எதிர்­கொண்டு,திரு­மலை நாயக்­கர்  காலத்­தில், சைவத்­து­டன் வைண­வ­மும், தமிழ் மண்­ணுக்­கே­யு­ரிய சமய நல்­லி­ணக்­கத்­து­டன் ஒன்­றா­கக்  கலந்­தது. கள்­ள­ழ­கர் வைகை­யாற்­றில் இறங்­கும் விழா­வை­யும், அத­னைத் தொடர்ந்து மீனாட்­சி­யம்­மன் திருக் கல்­யா­ண­மும் நடை­பெ­றும் விழா­வை­யும் கொண்­டா­டு­வது இன்­று­வரை வழக்­க­மாக உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வீர­வ­சந்­த­ரா­யர் மண்­ட­பத்­தைப்பழமை மாறா­மல் புதுப்­பித்த பிறகு, மதுரைதிருக்­கோ­யி­லுக்­குக் குட­மு­ழுக்கு நடத்­துவ தென திரா­விட மாடல் ஆட்­சி­யில் தீர்­மா­னிக் கப்­பட்­டது. அதற்­கா­னப் பணி­கள் நடை­பெ­றத் தொடங்­கின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மதுரை திருக்­கோ­யி­லின் அறங்­கா­வ­லர் குழுத் தலை­வ­ராக ருக்­மணி பி.டி.ஆர்.பழ­னி­வேல்­ரா­சன் அவர்­க­ளும், அவ­ரு­டன் அறங்­கா­வ­லர் உறுப்­பி­னர்க ளும் திரா­விட மாடல் ஆட்­சி­யில் நிய­மிக்­கப் பட்­ட­னர். மீனாட்சி அம்­மனை முதன்மை யாகக் கொண்ட திருக்­கோ­யி­லுக்கு அறங்­கா­வ­லர் குழுத் தலை­வ­ராக ஒரு பெண்­மணி நிய­மிக்­கப்­பட்­டது வர­லாற்­றுச் சாத­னை­யா­கும். அது­வும், தன் துணை வரை இழந்­த­வர் அவர். அது­போ­லவே, அறங்­கா­வ­லர் உறுப்­பி­னர்­க­ளில் ஒரு­வ­ராக மீனா அன்­பு­நிதி என்ற பெண்­ம­ணி­யும் நிய­மிக்­கப்­பட்­டார். அறங்­கா­வ­லர் குழு வர­லாற்­றில் இத்­த­கைய இரண்டு பெண்களை மிக முக்­கி­ய­மான திரு க்­கோ­யி­லில் நிய­மித்­தது திரா­விட மாடல் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மதுரை மீனாட்­சி­யம்­மன் சுந்­த­ரேஸ்­வ­ரர்திருக்­கோ­யில் திருப்­ப­ணிக்­காக திருக்­கோ­யில் நிதி­யாக 15 கோடியே 81 இலட்­சம் ரூபாயை திரா­விட மாடல் அர­சின் அற­நி­லை­யத்­துறை ஒதுக்­கி­யது. உப­ய­தா­ரர் நிதி 16 கோடியே 47 இலட்­சம் ரூபாய் நிதி­யும் சேர்த்து, 32 கோடியே 28 இலட்­சம் ரூபாய் செல­வில், 186 திருப்­ப­ணி­க­ளைத் திருக்­கோ­யி­லில் மேற்­கொள்­வது என­வும், 2026 மார்ச் மாதத்­திற்­குள் குட­மு­ழுக்கு நடத்­து­வது என­வும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தீ விபத்­தால் சிதி­ல­ம­டைந்த வீர­வ­சந்த ராயர் மண்­ட­பத்தை பழம்­பெ­ரு­மை­யு­டன் புதுப்­பிப்­ப­தற்­காக 35 கோடியே 30 இலட்­சம் ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு, நாமக்­கல் அரு­கி­லி­ருந்து, அதே வகையிலான கல் மிகுந்த சிரத்­தை­யு­டன் வெட்டி எடுக்­கப்­பட்டு, பாது­காப்­பு­டன் மது­ரைக்­குக் கொண்டு வரும் பணியை திரா­விட மாடல் அர­சின் இந்து சமய அற­நி­லை­யத்­துறை அமைச்­சர் திரு.சேகர்­பாபு அவர்­கள் மேற்­கொண்­டார்.  தலை­மைச் சிற்பி வேல்­மு­ரு­கன் முன்­னெ ­டுப்­பில், பழமை மாறாத சிற்­பங்க ளுட­னான மண்­ட­பத் தூண்­க­ளின் பணி­கள் விரை­வாக நடை­பெற்­றன. ஒவ்­வொன்­றும் 16 அடி உய­ரத்­தி­லான, 73 கல் தூண்­க­ளு­டன், உரிய நேரத்­தில் மண்­ட­பத்தை முடித்து, குட­மு­ழுக்கு நடை­பெ­று­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­க­ளும் 2026ஆம் ஆண்டு தொடக்­கத்­தி­லேயே திரா­விட மாடல் அர­சி­னால் நிறை­ வேற்­றப் ­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்த 7–3–2026 அன்று திரா­விட மாடல் அர­சின் அற­நி­லை­யத்­துறை அமைச்­சர் சேகர்­பாபு அவர்­கள் தலைமை யில் நடை­பெற்ற மது­ரைக் கோயில் திருப்­பணி சீராய்­வுக் கூட்­டத்­தில் பங்­கேற்ற பட்­டர்­கள் உள்­ளிட்ட நிர்­வா­கி­கள், திருப் 
பணி­கள் விரைந்து நடந்து முடிந்­துள்ள நிலை­யில், திருக்­கோ­யி­லின் வழக்­க­மான சித்­தி­ரைத் திரு­விழா மற்­றும் இதர நிகழ்வு களை நிறைவு செய்­த­பி­றகு, பரா­பவ ஆண்டு ஆவ­ணித் திங்­கள் 31ஆம் நாள் (17–9–2026) அன்று குட­மு­ழுக்கு விழாவை நடத்­த­லாம் எனத் தெரி­வித்த நிலை­யில், ஆகம விதி­களை மதித்து திரா­விட மாடல் அர­சின் அற­நி­லை­யத் துறை, அந்­தத் தேதி­யில் குட­மு­ழுக்கு நடத்த அனு­மதி வழங்­கி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டில் ஆட்சி மாற்­றம் ஏற்­பட்ட நிலை­யில், மதுரை மீனாட்­சி­யம்­மன் திருக்­கோ­யில் அறங்­கா­வ­லர் குழுத் தலை­வர் மற்­றும் அறங்­கா­வ­லர் உறுப்­பி­னர் ஆகிய இரண்டு பெண்­மணி களை­யும் புறக்­க­ணிக்­கும் வகை­யில், அறங்­கா­வ­லர் குழு உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரை­யும் புறந்­தள்ளி, ஆகம விதி­க­ளுக்கு முர­ணா­ க­வும், அற­நி­லை­யத் துறை மர­புக்கு மாறா­க­வும், எங்­கி­ருந்தோ வந்த உத்­த­ர­வுக்கு அடி­ப­ணிந்த அடிமையாக செயல்­பட்டு வரு­கி­றது ஜோசப் விஜய் தலை­மை­யி­லான த.வெ.க. அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மதுரை திருக்­கோ­யில் குட­மு­ழுக்கு விழா அழைப்­பி­த­ழில் அறங்­கா­வ­லர் குழுத் தலை­வர் மற்­றும் 5 உறுப்­பி­னர் களின் பெயர்­கள் இடம்­பெ­ற­வில்லை. கார­ணம், ஒரு பெண்­மணி தலை­வ­ராக இருக்­கி­றார். மற்­றொரு பெண்­மணி உறுப்­பி­ன­ராக இருக்­கி­றார். அவர்­களை முன்­னிறுத்­ ­து­வதா என்­கிற ஆணா­திக்க உணர்வே முதன்மையான­தா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சிவ­பெ­ரு­மானே தன் உடம்­பில் பாதியை, பெண்­ணான உமை­யம்மைக்­குக் கொடுத்­த­வர். ஜோசப் விஜய் ஆட்­சி­யில், மது­ரைத் திருக்­கோ­யில் அறங்­கா­வ­லர் குழு­வில் உள்ள இரண்டு பெண்­ம­ணி­களை முற்­றி­லு­ மாக ஒதுக்­கி­விட்டு, அழைப்­பி­த­ழில் ஆர்.எஸ்.எஸ். வளர்ப்­பான அமைச்­சர் நிர்­மல் குமா­ருக்கு முக்­கி­யத்­து­வம் தந்­தி­ருக் கிறார்­கள். அவ­ரை­ய­டுத்து, மதுரை மாவட்­டத்­திற்­குட்­பட்ட காங்­கி­ரஸ் அமைச்­சர் விஸ்­வ­நா­தன் பெயர் அச்­சி­டப் பட்­டுள்­ளது. த.வெ.க.வின் அற­நி­லை­யத் துறை அமைச்­சர் ‘முறுக்கு பாக்­கெட்’ ரமேஷ் பெய­ரைப் போனால் போகிற தென்று அதற்­குப்­பி­றகு அச்­சிட்­டுள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அறங்­கா­வ­லர்­க­ளைப் புறக்­க­ணிப்­பது குறித்து உயர்­நீ­தி­மன்­றமே கண்­ட­னம் தெரி­வித்­தும் விஜய்­யின் த.வெ.க. அரசு நேர்­மை­யா­கச் செயல்­ப­ட­வில்லை. அறங்­கா­வ­லர் குழு­வில் உள்­ள­வர்­களை மட்­டு­மல்ல, பக்­திப் பாசு­ரங்­கள் நிறைந்த 
தமி­ழை­யும் த.வெ.க. அரசு முற்­றி­லு­மாக ஓரங்­கட்­டி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">திரா­விட மாடல் ஆட்­சி­யில், ஆகம விதி­கள்­ப­டி­யான வட­மொழி மந்­தி­ரங்களு­டன், தேவா­ரம் – திரு­வா­ச­கம் உள்­ளிட்ட தமிழ் மந்­தி­ரங்­க­ளை­யும் பாடக் கூடிய ஓது­வார்­க­ளுக்­கு­யாக சாலை­யி­லும், கோபு­ரத்­தி­லும், கரு­வ­றை­யி­லும் உரிய வாய்ப்பு வழங்­கப்­பட்­டது. ஜோசப் விஜய் ஆட்­சி­யில் தமிழ் ஓது­வார்­க­ளுக்கு அனு­மதி அளிக்­க­வில்லை என்­ப­தால்,  அவர்­கள் அற­நி­லை­யத்­துறை அலு­வ­ல­கத் திலேயே முற்­று­கைப் போராட்­டம் நடத்­தும் அவல நிலை ஏற்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சங்­கம் வைத்து தமிழ் வளர்த்த மாம­து­ரை­யில் அமைந்­துள்ள மீனாட்சி யம்­மன் கோயில் திருக்­கு­ட­மு­ழுக்­கில் தமி­ழுக்கு உரிய இடம் தர­வேண்­டும் என்று போரா­டிய தமிழ்­நெ­றிப் பக்­தர்­க­ளைத் தீவி­ர­வா­தி­ கள் போல இழுத்­துச் சென்று கைது செய்­தது த.வெ.க. அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">திரா­விட மாடல் ஆட்­சி­யில் 4000 திருக்­கோ­யில்­க­ளுக்கு மேல் சிறப்­பான முறை­யில் குட­மு­ழுக்­குப் பெரு­வி­ழாக்­கள் நடை­பெற்­றன. அதே திரா­விட மாடல் ஆட்­சி­யில் திருப்­ப­ணி­கள் நிறை­வு­பெற்ற, புகழ்­மிக்க மதுரை மீனாட்­சி­யம்­மன் திருக்­கோ­யில் 
குட­மு­ழுக்கை நடத்­து­வ­தில், ஜோசப் விஜய்­யின் த.வெ.க. அரசு இத்­தனை தகி­டு­தத்­தங்­களை செய்­வது யாரைத்திருப்­திப்­ப­டுத்­து ­வ­தற்­காக?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">  
</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>