<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="18/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,66,957,1194" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Sep 18 2026 03:34:01 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260918T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="18092026-CBE-06" position.sequence="06" ex-ref="18092026-CBE-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup876924_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup877278_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமிழ்நாடு இப்போது பதற்றமான நிலையில் இருக்கிறது. ஊடகங்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்று குற்றச் செய்திகளாகவே வருகின்றன. மின்வெட்டு, தண்ணீர்ப் பிரச்சினை என்று மக்கள் போராட்டங்கள் பல இடங்களில் நடக்கின்றன. மதுரை பள்ளி மாணவன் மரணம் தொடர்பாக குடும்பத்தினர் மூன்று நாட்களாக தொடர் போராட்டம் நடத்தினர். காவல்துறையின் செயல்பாடு குறித்த புகைப்படம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. ஆனால் தமிழ்நாட்டின் முதல்வர் இதுவரை வாய் திறந்து பேசவில்லை. இந்த நிலையில் த.வெ.க. ஆட்சி நிலைக்குமா என்ற விவாதமும் நடந்து கொண்டிருக்கிறது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை என்கிற குறைபாடுகள் முந்தைய ஆட்சி மீது முன்வைக்கப்பட்டன. சமூக வலைத்தளங்கள் மூலம் காணொளிகள் வெளியிடப்பட்டன. “இளைஞர் சமுதாயத்திடம் புதிய மாற்றம், இது இளைஞர்களின் ஆட்சி” என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நடிகர் விஜய் அவர்களின் ரசிகர்கள் இதனை அரசியலாக மாற்றினர். “மாற்றம் வேண்டும்” என்ற கருத்தைப் பரப்பினர். ஏன் த.வெ.க.வுக்கு வாக்களித்தீர்கள் என்ற கேள்விக்கு “முந்தைய ஆட்சி நன்றாகத்தான் உள்ளது, ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக வாக்களித்தோம்” என்று பலர் தெரிவித்தனர். இளைஞர்களால் கொண்டு வரப்பட்ட புரட்சி என்று இந்தியாவுக்கு வெளியே உள்ள தமிழர்கள் கருதுவதையும் சமூக வலைத்தளங்கள் மூலம் திட்டமிட்டு பரப்பினர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தி,மு,க,வையே அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் குறிவைத்து எதிர்த்தன. நான்குமுனைப் போட்டியில் மூன்று தரப்புமே தி.மு.க.வை கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இவ்வளவு அவதூறு பிரச்சாரத்துக்கு பிறகும் த.வெ.க. வெற்றி பெற்றது 107 இடங்கள் மட்டுமே. ஆட்சி அமைக்க குறைந்தபட்சமாக 118 இடங்கள் தேவை. திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் 5, விடுதலை சிறுத்தைகள் 2, சிபிஐ 2, சிபிஎம் 2, முஸ்லீம் லீக் 2 என்று 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் மிகச் சரியாக 118 இடங்கள் மட்டுமே த.வெ.க.விடம் உள்ளன. ஒரு இடம்கூட கூடுதலாக இல்லை. ஏதேனும் ஒரு எம்.எல்.ஏ. வாக்களிக்க இயலாமல் போனால் த.வெ.க. ஆட்சி கவிழ்ந்துவிடக் கூடிய சூழ்நிலை உள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தற்போது முதலமைச்சராக உள்ள சி. ஜோசப் விஜய், தேர்தல் பரப்புரையின்போது பல வாக்குறுதிகளை வாரி வழங்கினார். குறிப்பாக பெண்களுக்கு மாதம் ரூ.2500, அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம், தாய்மாமன் சீராக தங்கச் செயின், தங்க மோதிரம், விவசாயிகளுக்கு முழுக்கடன் தள்ளுபடி, 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் 500 யூனிட் பயன்படுத்துவதற்கு மட்டும் இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் வரை இலவசம் போன்ற ஏமாற்று அறிவிப்புகள் வந்தன. கடந்த தி.மு.க. அரசு வழங்கிய ரூ.1000 மட்டுமே பெண்களுக்கு மே மாதம் கொடுக்கப்பட்டுள்ளது. 2500 ரூபாய் வழங்குவார் விஜய் என்று பெண்கள் காத்திருக்கின்றனர். சில இடங்களில் இதற்கான போராட்டங்களும் நடந்துள்ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் 1916–இல் தொடங்கிய நீதிக்கட்சியின் தொடர்ச்சியான தி.மு.க. 1967–இல் பேரறிஞர் அண்ணா தலைமையில் முதன்முறையாக ஆட்சி அமைத்து தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது. 1967 முதல் 2026 வரை 69 சதவீத இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் உயர்வுக்கு உறுதி செய்யப்பட்டது. இந்தித் திணிப்பு தடுக்கப்பட்டது. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கப்பட்டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">திருமதி. இந்திராகாந்தி 1975–இல் கொண்டுவந்த அவசர நிலையில் சிறையிலடைக்கப்பட்டு கடுமை யாக தாக்கப்பட்டவர் தலைவர் மு.க. ஸ்டாலின். அவர் தலைமையில் 2021–2026 கால அரசு – முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன், மகளிர் விடியல் பயணம், SMART வகுப்பறைகள், இல்லம் தேடி மருத்துவம், உயிர் காக்கும் 48, இரு இலக்க GDP என தமிழ்நாட்டை இந்தியாவிலேயே வளர்ச்சியடைந்த மாநிலமாக உயர்த்தியது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்தியாவில் வேலை பார்க்கின்ற பெண்களில் 42% தமிழ்நாட்டில் உள்ளனர். 67% பெண்கள் பட்டப்படிப்பு பெறும் மாநிலமாக ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சி பெற்றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இத்தகைய வளர்ச்சி இருந்தபோதும் ஆங்காங்கு நடந்த சில சம்பவங்களை வைத்து தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும், தி.மு.க. தீய சக்தி என்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பல லட்சம் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு ‘ரூட்’ என்கிற நிறுவனத்திற்கு பெருந்தொகை கொடுத்து, லட்சக்கணக்கான வீடியோக்கள் மூலம் நடிகர் ஜோசப் விஜய்க்கு ஆதரவான பிரச்சாரம் நடைபெற்றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">100 நாள் ஆட்சியின் அவலம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">விஜய் பொறுப்பேற்ற இந்த 100 நாட்களில் 
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரத்தின் மூலம் வாங்கி தன்னுடைய அரசாங்கத்தை காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறாரே ஒழிய, வேறு எந்த ஒன்றையும் மக்களுக்காக செய்யவில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஒரு பள்ளிக்கூட பையனை போல காலையில் சீருடை அணிந்து கிளம்பி வருகிறார், மதியம் வீட்டிலிருந்து வந்த டிபன் பாக்ஸில் உணவை சாப்பிடுகிறார், இல்லை சாப்பிடுவதாக நடிக்கிறார். மாலை 5 மணி அடித்தால் கிளம்பிவிடுகிற பள்ளிக்கூட பையனை போல கிளம்பிவிடுகிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கோவை சூலூரில் பத்து வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாள். அந்த குழந்தையின் இறப்புக்கு இன்றைய முதல்வர் விஜய் இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை. கோவையில் போதை கும்பலால் கல்லூரி மாணவன் படுகொலை, திருவொற்றியூரில் பள்ளி மாணவன் போதை கும்பலால் படுகொலை என பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சட்டமன்ற ஜனநாயகத்தின் மாண்பை கேலிக்கூத்தாக்கியவிஜய் ஆட்சியில், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், தளபதி ஸ்டாலின் ஆட்சிக்கால சட்டமன்றங்களில் இருந்தநகைச்சுவை, கலகலப்பு, பொருள் பொதிந்த விவாதங்கள் இல்லை,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமிழ்நாடு நல்ல வளர்ச்சி பெற்ற மாநிலம். கல்வி, தொழில்துறை, மருத்துவம், விவசாயம், பெண்கள் முன்னேற்றம் என அனைத்துத் துறைகளிலும் ஐ.நா.சபை அறிவித்த நிலைத்த வளர்ச்சி இலக்குகளை கடந்த ஐந்து ஆண்டுகளில் முழுமையாக எட்டியுள்ள மாநிலம். இந்த வளர்ச்சி தொடருமா? கீழே சென்றுவிடுமா? வளர்ச்சி அரசியலில் இருந்து கவர்ச்சி அரசியலுக்குள் சென்றுவிட்ட தமிழ்நாட்டின் நிலை என்னவாகுமோ என்ற கவலையே சமூக அக்கறை மிக்கவர்களின்இதய ஓட்டமாக இருக்கிறது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>