<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="18/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,66,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Sep 18 2026 03:41:07 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260918T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="18092026-MDU-05" position.sequence="05" ex-ref="18092026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="31">நான்கு மாதங்களில் விஜய்யின் தமிழ்நாடு : ஆட்சியல்ல</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="31"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="85">தனிநபர் பிம்பத்தை மையப்படுத்திய ஆட்சி! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="44">‘தி பிரிண்ட்’ இதழில் எம்.ஜி. தேவசகாயம் ஐ.ஏ.எஸ். (ஓய்வு) விமர்சனம்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="28">அரசியல் ஊழலுக்கு வழி வகுத்த விஜய்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ThePrintlogo_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="devasagayamco_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான தமிழ்நாட்டின் ‘மைனாரிட்டி’ அரசு, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் பதவியேற்று நான்கு மாதங்களை நிறைவு செய்துள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">“ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்ற புகழ்பெற்ற தமிழ்ப் பழமொழி உண்டு. ஒரு பானைச் சோறு முழுவதும் வெந்து விட்டதா என்பதை அறிய ஒரு சோற்றுப் பருக்கையைச் சோதித்தாலே போதும் என்பதே அதன் பொருள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">அந்த வகையில், தமிழ்நாட்டின் ஆளுகை எந்தத் திசையில் செல்கிறது என்பதை மதிப்பிட நான்கு மாதங்கள் போதுமான காலமே. த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ள ‘ஆட்சிநிர்வாகம்’ சார்ந்த முடிவுகளையும் நடவடிக்கை களையும் மதிப்பிடுவதற்கும் இதுவே பொருந்தும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">இதற்குச் சான்றாக, அரசின் இரண்டுமுக்கிய நிர்வாக முடிவுகளையும், மாநிலச் சட்டப்பேரவையில் நடைபெற்ற ஒரு நிகழ்வையும் எடுத்துக்கொள்வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">சென்னைக்கு அருகிலுள்ள பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டம் திடீரெனக் கைவிடப்பட்டது முதலாவது முடிவு. சென்னை பட்டினப்பாக்கத்தில் கடற்கரை யோரம் பிரம்மாண்டமான புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை அவசரமாகக் கட்ட முடிவு செய்தது இரண்டாவது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">மூன்றாவது, செப்டம்பர் 7 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் அநாகரிகமாக நடந்துகொண்ட விதம் தொடர்பானது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">இந்த முடிவுகளும் நடவடிக்கைகளும் எவ்வளவு முதிர்ச்சியற்ற தன்மையைக் கொண்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்ள, அவற்றைச் சற்று விரிவாகப் பார்க்க வேண்டி யுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.2">‘இயற்கை’ மற்றும் வளர்ச்சியில் திடீர் திருப்பங்கள்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">முதலில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்டத்தை எடுத்துக்கொள்வோம். வளமான விவசாய நிலங்களை இழக்கும் கிராம மக்களுக்கு ஏற்கெனவே அளித்திருந்த வாக்குறுதியின் அடிப்படையில் விஜய் இத்திட்டத்தை ரத்து செய்தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">“நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. ஆனால், இயற்கையை அழித்துத்தான் இந்த விமான நிலையம் அமைய வேண்டும் என்றால் அதை எதிர்க்கிறேன்” என்று விஜய் கூறியிருந்தார். இயற்கையான நீர்வழித் தடங்கள் அழிக்கப்படுவது, சென்னை ஆண்டு தோறும் பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளத்தை எதிர்கொள்வதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று என்றும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">ஆட்சிக்கு வந்த பிறகு, நிலத்தின் சூழலியல் பாதிப்புக்குள்ளாகும் தன்மையையும்விவசாயிகளின் நலனையும் முக்கியக் காரணங்களாகக் கூறி, தனது அந்த நிலைப்பாட்டையே அரசின் கொள்கையாக மாற்றியுள்ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">இதுவரை சரி. ஆனால், திட்டம் ரத்து செய்யப்பட்ட சில நாட்களுக்குள்ளேயே, கையகப்படுத்தப்பட்ட நிலங்களைத் தொழில் அல்லது பிற பயன்பாடுகளுக்குப் பயன்படுத்து வதற்கான வழிகளை அரசு ஆராய்ந்து வருவதாகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சட்டப்பேரவையில் அறிவித்தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">தொழில்துறையைக் காட்டிலும் விவசாயமேமிக முக்கியமானது என்ற வகையில், கையகப்படுத்தப்பட்ட 5,000 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை மீண்டும் இயற்கைக்கும், விவசாயம் மேற்கொள்ள விவசாயிகளுக்கும் திருப்பித் தருவது குறித்து எந்தப் பேச்சும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">ஆக,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.2"> ஏதோ ஒரு காரணத்தைக் கூறிஉள்கட்டமைப்புத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு,அந்த விவசாய நிலத்தை ‘லாபகரமான’ ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதே மறைமுகத் திட்டமாக இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">அதேவேளையில், இந்த முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டத்துக்கான மாற்று இடமும் இதுவரை அடையாளம் காணப்பட வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">அடுத்ததாக, சென்னை பட்டினப்பாக்கத்தில் 20 லட்சம் சதுர அடி பரப்பில், 15 மாடிகளைக் கொண்ட புதிய தலைமைச் செயலகம் கட்டும் முடிவு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">இது முற்றிலும் அபத்தமான முடிவாக இருப்பதோடு, கடலோர ஒழுங்குமுறை மண்டல (Coastal Regulation Zone – CRZ) விதிகளின் கீழ் பல தீவிரமான கேள்விகளையும் எழுப்புகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் வசமுள்ள25.55 ஏக்கர் நிலம், வங்காள விரிகுடாவின் உயர் அலை எல்லையிலிருந்து (High Tide Line) சில மீட்டர் தொலைவிலேயே, ஏறத்தாழ கடலோரத்தை ஒட்டியே அமைந்துள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">பட்டினப்பாக்கம், புகழ்பெற்ற மெரினா கடற்கரையின் நீட்சியாக, உயிரோட்டமும் அமைதியும் ஒருங்கே கொண்ட பகுதி. ஏற்கெனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பழைய சென்னை நகரின் நெருக்க மான மயிலாப்பூர் பகுதியின் ஓர் அங்கமாகவும் அது உள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">கடல் மட்டம் உயர்ந்து வரும் அபாயம் நிலவும் சூழலில், இந்தத் திட்டம் சென்னைகடற்கரைக்குச் சூழலியல் பேரிடராக மாறக்கூடும்.பெருமளவில் வாழும் மீனவ மக்களுக்கு இது பொருளாதார ரீதியிலும் வாழ்வாதார ரீதியிலும் பேரிடராக அமையக் கூடும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">கடலோர மக்களின் வாழ்வாதாரம், பொதுமக்கள் கடற்கரையை அணுகு வதற்கான உரிமை, காலநிலை மாற்றத்தால் இப்பகுதிக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி மீனவர்களும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் இத் 
திட்டத்துக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித் 
துள்ளனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">இதில் முரண்நகை என்னவென்றால், முதலமைச்சர் அலுவலகம் கடலை நோக்கி அமைந்தால் விஜய்க்கு அதிர்ஷ்டம் ஏற்பட்டு, பிரதமராக உயர வாய்ப்பு ஏற்படும் என்று அவரது ஜோதிடர் கூறிய ஆலோசனையின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்ட தாகக் கூறப்படுகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">மேலும், இந்த இடத்துக்கு எதிர்ப்புறச் சாலையில் ஜோசப் விஜய்க்குச் சொந்தமான அதிசொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பும் அமைந்துள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.2">முதலமைச்சர் நாற்காலியில் சினிமா</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">தனது பொறுப்பிலுள்ள காவல்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்தபோது, சட்டப்பேரவையில் முதலமைச்சராக விஜய் நடந்துகொண்ட விதம் அவமானகரமானதாக இருந்தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">மாநிலத்தில் வேகமாகச் சீர்குலைந்து வரும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய நியாயமான கேள்வி களுக்குப் பதிலளிக்காமல், விஜய் விவாதத்தின் மையத்திலிருந்து விலகி, நெருக்கடிநிலைக் காலத்தின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம் (Maintenance of Internal Security Act – MISA) குறித்து தி.மு.க. தொடர்ந்து பேசுவதை விமர்சித்தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">அப்போது தனது வலது உள்ளங்கையைத் தாடைக்கு அருகே வைத்து அவர் செய்த சைகை அவமதிப்பானதாக அமைந்தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப் 
பட்டிருந்தபோது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட தாடைக் காயத்தின் நீடித்த பாதிப்பைக் கேலி செய்யும் விதமாகவோ அல்லது உடல் தோற்றத்தை இழிவுபடுத்தும் விதமாகவோ அந்தச் சைகை இருந்ததாகப் பலரும் அதைப் புரிந்துகொண்டனர்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">மேலும், சர்க்காரியா ஆணையம் தொடர்பான பொருத்தமற்ற விவரங்களையும், தி.மு.க. மீதான ஊழல் விவகாரத்தில் அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீஸையும் விஜய் தனது பேச்சில் கொண்டு வந்தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">அவர் பேசிய தொனியும் விதமும், வெளிப் படுத்திய உடல்மொழியும், அவர் இன்னமும் ஒரு முதலமைச்சராக இல்லாமல் வெறும் சினிமா நடிகராகவே இருக்கிறார் என்பதையே தெளிவாகக் காட்டின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">அந்தச் செயல் “தற்செயலானது” என்று அவர் பின்னர் கூறியது நிலைமையை மேலும் மோசமாக்கவே செய்தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.2">நலத்திட்டங்கள் மட்டுமே 
ஆட்சி நிர்வாகம் அல்ல</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் ‘ஆளுகை’ நிகழ்ச்சி நிரலைப் பொறுத்த வரையில், அது நீண்டதொரு ‘இலவச நலத் திட்டங்கள்’ பட்டியலாகவே உள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">இந்தப் பட்டியல் அவரது தனிப்பட்ட இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">‘TVK Governing Mandate-2026’ என்ற தலைப்பிலான அந்தப் பட்டியலில் நீண்ட ‘உத்தரவாதத் திட்ட வரைவு’ இடம் 
பெற்றுள்ளது. அவற்றில் கீழ்க்கண்டவை செயல்படுத்தப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.2">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">200 யூனிட் இலவச மின்சாரம்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.2">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.2">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் படைகள்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.2">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">717 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடல்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.2">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டமான ‘வெற்றிப் பயணம்’ விரிவாக்கம்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.2">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">மேலும் பல திட்டங்கள் செயல்படுத்தப் 
படவுள்ளதாகக் கூறப்படுகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">இவையெல்லாம் அதிகபட்சமாக அரசின் முடிவுகள் மற்றும் திட்டங்கள் என்றுதான் அழைக்கப்பட முடியும்; இவற்றையே ‘ஆளுகை’ என்று கூற முடியாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">‘Government’ என்ற அரசையும், ‘Governance’ என்ற ஆட்சி நிர்வாகத்தையும் ஒன்றாகக் குழப்புவதாலேயே இந்தத் தவறான புரிதல் உருவாகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">ஒரு நாட்டிலோ மாநிலத்திலோ பலதரப்பட்ட விவகாரங்களை நிர்வகிப்பதற்காக அரசியல், பொருளாதார மற்றும் நிர்வாக அதிகாரங் களைச் செயல்படுத்துவதே ஆளுகை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">குடிமக்களும் பல்வேறு சமூகக் குழுக்களும் தங்களது நலன்களையும் கோரிக்கை களையும் வெளிப்படுத்தவும், கருத்து வேறுபாடுகளைச் சமரசப்படுத்தவும், தங்களது சட்டப்பூர்வ உரிமைகளையும் கடமை களையும் செயல்படுத்தவும் உதவும் சிக்கலான அமைப்புகள், செயல்முறைகள் மற்றும் நிறுவனங்களின் தொகுப்பே ஆட்சி நிர்வாகம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">நல்லாட்சி என்பது பங்கேற்பு மிக்கதாகவும், வெளிப்படையானதாகவும், பொறுப்புக்கூறக் 
கூடியதாகவும் இருக்க வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">அரசு அதன் முக்கிய அங்கமாக இருந்தாலும்,ஆளுகை என்பது அரசுடன் மட்டும் நின்று விடுவதில்லை. தனியார் துறையையும் குடிமைச் சமூகத்தையும் அது உள்ளடக்கு கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.2">ஆட்சி நிர்வாகம் என்பது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.2">கூட்டுப் பொறுப்பு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">ஆட்சி நிர்வாகம் என்பது ‘தனிநபர் பிம்பத்தை மையப்படுத்தியதாக’ இருக்க வேண்டுமா? ‘அரசை மையப்படுத்தியதாக’ இருக்க வேண்டுமா? அல்லது ‘சமூகத்தை மையப்படுத்தியதாக’ இருக்க வேண்டுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">உண்மையான ஜனநாயகத்தில் தனிநபர் பிம்பத்தை மையப்படுத்திய ஆட்சியை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசுக்கு எல்லை யற்ற அதிகாரத்தை வழங்கும் அரசு மைய ஆளுகையையும் ஏற்றுக்கொள்ள முடியாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">எதேச்சாதிகாரத்திலிருந்து வேறுபட்ட ஜனநாயகத்தில், ஆளுகை ‘சமூகத்தை மையப்படுத்தியதாக’ இருக்க வேண்டும். அதில் பங்கேற்பும் பங்களிப்பும் பின்வருமாறு அமைய வேண்டும்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.2">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">ஆளும் அமைப்புகளைப் பிரதிநிதித்து வப்படுத்தும் அரசுகள், சாதகமான அரசியல், நிர்வாக, சட்ட மற்றும் வாழ்வியல் சூழலை உருவாக்க வேண்டும். அத்தகைய அரசுகள் அடித்தள ஜனநாயகச் செயல்முறை களின் மூலம் கட்டமைக்கப்பட வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.2">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">வர்த்தகம், வணிகம், விவசாயம் மற்றும் தொழில்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனியார் துறை, தொழில்முனைவை ஊக்குவித்து வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் உருவாக்க வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11.2">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">தன்னார்வ அமைப்புகளைப் பிரதிநிதித் துவப்படுத்தும் குடிமைச் சமூகம், பல்வேறு குழுக்களைப் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்கச் செய்து பரஸ்பரத் தொடர்பை எளிதாக்க வேண்டும். முரண்பாடுகளைத் தீர்ப்பதிலும் அது பங்காற்ற வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">இத்தகைய ஆட்சி என்பது ஒரு கூட்டு முயற்சி. எனவே, அது சில அடிப்படையான செயல்பாட்டு நெறிகளையும் கோட்பாடு களையும் கடைப்பிடிக்க வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">முடிவெடுக்கும் செயல்முறையில் அனைத்துத்தரப்பினரின் பங்கேற்பு; அரசு மற்றும் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக் கூறலும்; சமூக மற்றும் பொதுநலன், பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் குடிமக்களின் பங்கேற்பு; அரசு அமைப்பு களுக்கும் குடிமைச் சமூகத்துக்கும் இடையிலான சமநிலையான உறவு; அரசுத் திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கான சமூகத் தணிக்கை; குறைதீர்ப்பாளர் (Ombudsman) அமைப்புகளைக் கட்டாயமாக ஏற்படுத்தி அவை அச்சமின்றிச் செயல்படுவதை உறுதி செய்தல்; திறன்மிக்க, பாரபட்சமற்ற நீதித்துறை ஆகியவை அவற்றில் அடங்கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">எல்லாவற்றிலும் முக்கியமாக, அரசுகளின் ‘வளர்ச்சி’ திட்டம் குறித்து எந்தவித அச்சமோ சார்போ இன்றி தங்கள் கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான போதுமான ஜனநாயக வெளி, தன்னார்வ அமைப்புகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் குடிமைச் சமூகத்துக்கு வழங்கப்பட வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">தமிழ்நாட்டில் தனிநபர் பிம்பத்தை மையப்படுத்திய ஆட்சி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">தமிழ்நாட்டின் ஆளுகை அரசு மையமான தாகவும் இல்லை; சமூகத்தை மையப்படுத்தி யதாகவும் இல்லை. மாறாக, அது தனிநபர் பிம்பத்தை மையப்படுத்தியதாக உள்ளது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">ஜோசப் விஜய்யைச் சுற்றியே அது கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு சூப்பர் ஹீரோவாகவும், பலவீனமானவர்களின் பாதுகாவலராகவும், சுயநல சக்திகளால் பாதிக்கப்பட்டவராகவும், ஏழைகளின் மீட்பராகவும், தார்மிக மாற்றாகவும் முன்னிறுத்தப்படுகிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">‘அண்ணா’ – மூத்த சகோதரர் – என்ற பிம்பம் இந்த அரசியல் உத்தியின் மையமாக மாறியது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">தேர்தல் பிரச்சாரத்தின்போது சமூக ஊடகங்களில் ரீல்களும் மீம்களும் மூலம் இந்தப் பிம்பம் பரப்பப்பட்டது. மக்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பைக் கொண்ட விஜய்யின் திரை பிம்பம் இதற்கு முழுமையாகப் பயன்படுத்தப் பட்டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">அளவுக்கு மீறிய வீர பிம்பம், துணிச்சல், இளமைத் துடிப்பு ஆகியவற்றை மையப் படுத்திய அந்தத் திரை அடையாளத்தில், சண்டைக் காட்சிகளில் ஏராளமான வில்லன் களை அவர் வீழ்த்துவதாகவும், சிக்கலான ஆளுகைப் பிரச்சினைகளுக்குக் கண நேரத்தில் தீர்வு காண்பதாகவும் காட்சிகள் அமைந்திருந்தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">இப்போது அவர் தலைமையிலான அரசிலும் அதே அணுகுமுறை தொடர்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">திரைத்துறை மற்றும் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த ஏராளமான ஆலோசகர் களைத் தன்னைச் சுற்றி வைத்துக்கொள்வதன் மூலம் இந்தப் போக்கை அவர் மேலும் வலுப்படுத்தியுள்ளார். இதனால் அரசு அதிகாரிகளின் பங்கு இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தலைமைச் செயலாளர் தனது பொறுப்பிலிருந்து விலகி நிற்கிறாரோ அல்லது இந்தத் தனிநபர் பிம்பக் காட்சியில் தீவிரமாகப் பங்கேற்கிறாரோ என்ற தோற்றம் உருவாகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">நேர்மறையான அம்சமாக, நிர்வாகத்தின் உயர் மட்டங்களில் நிலவிய ஊழலை விஜய் கட்டுப்படுத்தியுள்ளதாகக் கூறப்படும் நிலையில் எதிர்மறையான அம்சமாக, அரசியல் ஊழலுக்கு அவர் வழிவகுத்துள்ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">தமிழக வெற்றிக் கழகமும் ஜோசப் விஜய்யும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 234 இடங்களில் 108 இடங்களை வென்றனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">தி.மு.க. கூட்டணியில் தேர்தலைச் சந்தித்த இந்திய தேசிய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்களுடன் இணைத்துக்கொண்டு, 118 உறுப்பினர்களைக் கொண்ட செயல்படக்கூடிய பெரும்பான்மையை உருவாக்கினர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">அ.தி.மு.க. உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளி லிருந்தும் கட்சித் தாவல்களை விஜய் ஊக்குவித்தார்; அக்கட்சியின் சில சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது நிச்சயமற்ற நிலையில் விடப்பட்டுள்ளனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசின் விருப்பங்களுக்கு இணங்கிச் செயல்படுவதன் மூலம், விஜய் தமிழர் அடையாளத்தையே கடுமையாகச் சமரசம் செய்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.2">நிர்வாகம், அரசியல் அல்லது தலைமைத் துவத்தில் எந்தவித முன் அனுபவமோ செயல்பாட்டு வரலாறோ இல்லாத ஒரு புதிய அரசியல் அமைப்பு, சினிமா பாணியிலான அரசியல் காட்சியமைப்புகள், பிரச்சார ரீல்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்களின் மிகப்பெரிய அளவிலான பயன்பாடு ஆகியவற்றின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியிருப்பதை தமிழ்நாடு தற்போது காண்கிறது. இதைத்தான் ஜோசப் விஜய் தற்போது செய்து வருகிறார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>