<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="18/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,376,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Sep 17 2026 12:21:14 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260918T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="18092026-TRY-02" position.sequence="02" ex-ref="18092026-TRY-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#8e3800" boxBorderWeight="1.99193248209899">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">சர்க்காரியா கமிஷன் – பொய்யும் உண்மையும்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup874951_02_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ம</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ண்­ட­பத்­தில் யாரோ எழு­திக் கொடுத்­ததை சட்­ட­ச­பைக்­குள் வந்து பேசி­னார் முத­ல­மைச்­சர் விஜய். ‘அவை­யில் இல்­லா­த­வர்­கள் பற்றி உண்­மைக்கு மாறா­கப் பேசு­வது உரிமை மீறல்’ எனச் சொல்லி பேர­வைத் தலை­வ­ரி­டம் மனு கொடுத்­துள்­ளது தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">‘என் மேஜை­யில் கோப்பு உள்­ளது’ என்று மிரட்­டிக் கொண்­டி­ருந்த விஜய், தனது மேஜை­யில் இருப்­ப­தா­கச் சொன்­னது இந்த அதர பழ­சான சர்க்­கா­ரியா 
கமி­ஷன் கோப்­பு­கள் தான் போலும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">புகார் கொடுத்­த­வரே விசா­ர­ணைக்கு வரா­மல், வழக்­குப் போட்­ட­வர் வாபஸ் பெற்ற வழக்கு தான் சர்க்­கா­ரியா கமி­ஷன் வர­லாறு ஆகும். இதனை விஜய் 
அறி­ய­மாட்­டார். ஏனென்­றால் அவ­ருக்கு எழு­திக் கொடுத்த காகி­தத்­தில் அது 
இருக்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தி.மு.க.வில் கட்­சிக் கட்­டுப்­பாட்டை மீறி­ய­தாக கட்­சி­யில் இருந்து 1972 ஆம் ஆண்டு வெளி­யேற்­றப்­பட்­டார் எம்.ஜி.ஆர். அப்­போது ஆளும் கட்­சி­யாக இருந்த தி.மு.க. அமைச்­சர்­கள் மீது பல்­வேறு புகார்­களை அவர் கொடுத்­தார். அவ­சர நிலைச் சட்­டத்தை எதிர்த்த கார­ணத்­தால் இந்­தப் புகாரை தி.மு.க.வுக்கு எதி­ராக அன்­றைய பிர­த­மர் இந்­திரா பயன்­ப­டுத்­திக் கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">1975 ஜூன் 26 ஆம் நாள் இந்­தி­யா­வில் அவ­சர நிலையை பிர­க­ட­னம் செய்­தார் பிர­த­மர் இந்­திரா.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மறு­நாளே,  அத­னைக் கடு­மை­யாக எதிர்த்­தது திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். தலை­மைச் செயற்­கு­ழுக் கூட்­டம் கூடி­யது. அதி­காலை 4 மணிக்கு கலை­ஞர் தன் கைப்­பட தீர்­மா­னத்தை எழு­தி­னார். இந்­தி­யா­வி­லேயே அவ­சர  நிலைப்­பி­ர­க­ட­னத்­துக்கு  எதி­ராக ஒரு மாநி­லத்­தின் முத­ல­மைச்­சர் தீட்­டிய தீர்க்­க­மான தீர்­மா­னம் அது­தான்.  இந்­தியா முழுக்க எதிர்க்­கட்­சித் தலை­வர்­கள் கைதா­னார்­கள். இங்கு தி.மு.க. ஆட்சி  இருந்­த­தால்  யாரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">8.1.1976 நாடா­ளு­மன்­றத்­தில் பேசிய பிர­த­மர் இந்­திரா, இந்­தி­யா­வில் கட்­டுப்­பா­டற்ற இரண்டு தீவு­கள் இருப்­ப­தா­கச் சொன்­னார். ஒன்று தி.மு.க. ஆண்ட தமிழ்­நாடு, மற்­றொன்று ஸ்தாபன காங்­கி­ரசு ஆட்சி செய்த குஜ­ராத். இதனை மன­தில் வைத்து அப்­ப­டிச் சொன்­னார். 20.1.1976 அன்று குஜ­ராத் முதல்­வர் பாபு­பாய் படேல் சென்னை வந்­தார். வட­சென்­னை­யில் நடந்த காம­ரா­சர் சிலை திறப்பு விழா­வில் முதல்­வர் கலை­ஞ­ரும் முதல்­வர் பாபு­பாய் படே­லும் கலந்து கொண்­ட­னர். இது பிர­த­மர் இந்­தி­ராவை கோபம் கொள்ள வைத்­தது. இத­னால் தி.மு.க. ஆட்சி 30.1.1976 அன்று கலைக்­கப்­பட்­டது. பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தி.மு.க.வினர் கைதாகி சிறை வைக்­கப்­பட்­டார்­கள். சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தி.மு.க.வை மேலும் பழி­வாங்­கத் திட்­ட­மிட்ட காங்­கி­ரஸ் அரசு, நான்கு ஆண்­டு­க­ளுக்கு முன்­னால் எம்.ஜி.ஆர். கொடுத்த புகாரை தூசி தட்டி எடுத்து சர்க்­கா­ரியா தலை­மை­யில் கமி­ஷன் அமைத்­தது.’’ எம்.ஜி.ஆர். கொடுத்த புகாரை வைத்­துத் தான் சர்க்­கா­ரியா கமி­ஷன் அமைக்­கப்­ப­டு­கி­றது” என்று ஒன்­றிய உள்­துறை அமைச்­சர் ஓம் மேத்தா கூறி­னார். இதற்­காக அஞ்­ச­வில்லை கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">“இவை அனைத்­தும் பழைய புகார்­கள். இவை அனைத்­துக்­கும் பதில் அளித்து தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் நான் பேசி இருக்­கி­றேன். மீண்­டும் விசா­ரணை ஆணை­யம் அமைக்­கப்­ப­டு­மா­னால் அங்­கும் சொல்­வேன். எனக்கு விளக்­கம் அளிப்­ப­தற்­காக மீண்­டும் ஒரு வாய்ப்பு கிடைத்­தி­ருப்­பதை  வர­வேற்­கி­றேன்” என்று தலை­வர் கலை­ஞர் அவர்­கள் பகி­ரங்­க­மாக அறி­வித்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">பிர­த­மர் இந்­திரா அர­சின் பழி­வாங்­கும் நட­வ­டிக்கை இது என்று அன்­றைய அகில இந்­தி­யத் தலை­வர்­கள் ஜெயப்­பி­ர­காஷ் நாரா­ய­ணன், மொராஜி தேசாய், பாபு ஜெக­ஜீ­வன் ராம், அசோக் மேத்தா ஆகி­யோர் பொதுக்­கூட்ட மேடை­க­ளில் முழங்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சர்க்­கா­ரியா கமி­ஷன் விசா­ரணை சென்­னை­யில் நடை­பெற்­றது. புகார் சொன்ன எம்.ஜி.ஆர். தன்னை குறுக்கு விசா­ரணை செய்ய அனு­ம­திக்­க­வில்லை. புகார் சொன்ன யாரும், தங்­களை தி.மு.க. தரப்­பால் குறுக்கு விசா­ரணை செய்ய 
அனு­மதிக்கவில்லை. அந்த  விசா­ரணை கேலிக்­கூத்­தா­கச் செல்­வ­தற்கு இது ஒரு உதா­ர­ணம் ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘நான் கொடுத்த புகார்­கள் குறித்து எனக்கு எது­வும் தெரி­யாது. சேலம் கண்­ணன் எழு­திக் கொடுத்­ததை நான் கொடுத்­தேன்’ என்று பகி­ரங்­க­மாக எம்.ஜி.ஆர். 
சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அடுத்து அமைந்த ஜனதா கட்சி அரசு, இந்த ஆணை­யத்தை ரத்து செய்­ய­வில்லை. ‘தி.மு.க. அமைச்­சர்­கள் மீது பிர­த­மர் இந்­திரா போட்ட வழக்­கு­கள் 
அர­சி­யல் உள்­நோக்­கம் கொண்­டவை என்று நாமே பிரச்­சா­ரம் செய்­துள்­ளோம்’ என்று ஜெயப்­பி­ர­காஷ் நாரா­ய­ணன் அவர்­கள் சொன்­னார்­கள். ‘ஜனதா ஆட்சி 
இந்­தக் கமி­ஷனை கலைக்க வேண்­டும்’ என்று ஜனதா கட்­சி­யின் முன்­னாள் 
செய­லா­ளர் ராஜிந்­தர் பூரி எழு­தி­னார். ‘கலை­ஞ­ரைப் பழி­வாங்க இந்­திரா அமைத்­தது தான் இந்­தக் கமி­ஷன். அகில இந்­தி­யத் தலை­வர்­கள் தலை­ம­றை­வாக இருந்த போது அவர்­களை மறைத்து வைத்து காப்­பாற்­றி­ய­வர் கலை­ஞர். அத­னால்­தான் அவர் மீது இந்­தக் கமி­ஷன் அமைக்­கப்­பட்­டது’ என்று ராஜிந்­தர் பூரி எழு­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">‘நெருக்­கடி நிலையை எதிர்த்­தார் என்­ப­தற்­கா­கத் தான் கலை­ஞர் மீது சர்க்­கா­ரியா கமி­ஷன் அமைக்­கப்­பட்­டது. அவர் மீது பழி­தூற்றி அர­சி­யல் ரீதி­யாக வஞ்­சம் தீர்ப்­ப­தற்­கா­கத் தான் சர்க்­கா­ரியா கமி­ஷனை  இந்­திரா அமைத்­தார்’ என்று பகி­ரங்­க­மாக மேடை­யில் பேசி­னார் சந்­தி­ர­சே­கர். (பிற்­கா­லத்­தில் பிர­த­ம­ராக இருந்­த­வர்)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">1977 ஆம் ஆண்டு பத­வியை இழந்த பின்­னர், மனம் மாறி­னார் இந்­திரா காந்தி. நெருக்­கடி நிலைக் காலத்­தில் அனைத்­துத் தவ­று­க­ளுக்­கும் மன்­னிப்­புக் கோரி­னார் இந்­திரா. (23.1.1978)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சென்­னை­யில் நடை­பெற்ற தந்தை பெரி­யார் பிறந்­த­நாள் விழா­வுக்கு வருகை தந்த இந்­திரா காந்­தி­யி­டம் சர்க்­கா­ரியா கமி­ஷன் பற்றி நிரு­பர்­கள் கேட்­டார்­கள்.  “இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யும், அ.தி.மு.க.வும் என்னை வற்­பு­றுத்­தி­னார்­கள். 
அத­னால் சர்க்­கா­ரியா கமி­ஷன் போடப்­பட்­டது” என்று பதில் அளித்­தார் இந்­திரா. 
( 30.9.1979)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அன்று மாலை நடை­பெற்ற பொதுக்­கூட்­டத்­தில் உரை­யாற்­றிய இந்­திரா, “நாங்­கள் தவறு செய்­தி­ருக்­கி­றோம். அதை உணர்ந்து நாங்­கள் செய்த தவ­று­களை 
ஏற்­றுக் கொண்டு, அந்­தத் தவ­று­க­ளால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளி­டம் மன்­னிப்­புக் 
கேட்­டுக் கொள்­கி­றோம்” என்று பகி­ரங்­க­மா­கச் சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சர்க்­கா­ரியா கமி­ஷன் விசா­ர­ணையை வைத்து இரண்டே இரண்டு வழக்­கு­களை சி.பி.ஐ. தாக்­கல் செய்­தது. 14.5.1981 அன்று நீதி­மன்­றத்­தில் ஆஜ­ரான சி.பி.ஐ. வழக்­க­றி­ஞர் நம்­பீ­சன், ‘இரண்டு வழக்­கு­க­ளை­யும் தொடர்ந்து நடத்த ஆதா­ரங்­கள் இல்லை’ என்று குறிப்­பிட்­டார். அத­ன­டிப்­ப­டை­யில் அந்த இரண்டு வழக்­கு­க­ளை­யும் சி.பி.ஐ. நீதி­மன்­றம் 16.5.1981 அன்று தள்­ளு­படி செய்­தது. இது­தான் சர்க்­கா­ரியா கமி­ஷன் சரிந்த வர­லாறு ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அர­சி­யல் கார­ணங்­க­ளுக்­காக புகார் கொடுத்து, அர­சி­யல் நோக்­கத்­துக்­காக 
கமி­ஷன் அமைக்­கப்­பட்டு, ஆதா­ரம் இல்­லா­மல் திரும்­பப் பெறப்­பட்ட வழக்­கு­தான் சர்க்­கா­ரியா கமி­ஷன் வழக்­கு­கள் ஆகும். இந்த வர­லாறு ஏதும் தெரி­யா­மல் 
கதா­கா­லட்­சே­பம் நடத்­திக் கொண்டு இருக்­கி­றார் விஜய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>