<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,33,958,1010" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Sep 20 2026 03:31:33 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260920T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="20092026-CBE-03" position.sequence="03" ex-ref="20092026-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">20.09.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="31">மக்கள் விரோத விஜய் ஆட்சிக்கு - மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="31"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="87">இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்! </lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="87"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">பெரம்பூரில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் - அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup743934_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup881937_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="R.S.Bharathi_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்னை. செப்.19–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்னை வடக்கு மாவட்­டம் பெரம்­பூர் பகுதி 44-வது  வட்ட தி.மு.க. சார்­பில் தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் தரங்­கெட்டு பேசிய முத­ல­மைச்­சர் விஜய் அவர்­க­ளின் ஆண­வத்தை கண்­டித்து மாபெ­ரும் கண்­ட­னப்­பொ­துக்­கூட்­டம் பெரம்­பூர் பழனி ஆண்­ட­வர் கோவில் தெரு­வில்  நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இக்­கூட்­டத்­திற்கு  வட்ட செய­லா­ளர் த.ஆறு­மு­கம் தலைமை தாங்­கி­னார். பகுதி செய­லா­ளர்­கள் க.ஜெய­ரா­மன். அ.முரு­கன் ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர்.  இக்­கூட்­டத்­தில் தி.மு.க. அமைப்­புச் செய­லா­ளர். மூத்த வழக்­க­றி­ஞர் ஆர்.எஸ். பாரதி பேசி­னார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவர் பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெரம்­பூர் சட்­ட­மன்ற தொகு­தி­யில் நடை­பெ­று­கின்ற இந்த பொதுக்­கூட்­டம் மிக­வும் உணர்ச்­சி­ம­ய­மான.  கழ­கத் தொண்­டர்­கள் திர­ளாக பங்­கேற்­றுள்ள பொதுக் கூட்­ட­மாக நடை­பெற்று வரு­கி­றது. இதே பழனி ஆண்­ட­வர் கோவில் தெரு­வில் கடந்த 40 ஆண்­டு­க­ளுக்கு முன்பு ஆர்.டி.சீதா­பதி மாவட்ட செய­லா­ள­ராக இருந்­த­போது.  செங்­கை­சி­வம் பகுதி செய­லா­ள­ராக இருந்­த­போது பல கூட்­டங்­க­ளில் நான் பங்­கேற்று உள்­ளேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">எழுச்­சி­யைக்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">காண்­கி­றேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அப்­போது நான் கண்ட எழுச்­சியை இப்­பொ­ழுது காண்­கி­றேன். ஆட்சி இருக்­கும் பொழுது இது போன்ற கூட்­டத்தை கூட்­டி­னால் நலத்­திட்ட உத­வி­கள் என்ற பெய­ரில் கூட்­டத்தை கூட்­டு­வது வாடிக்­கை­யாக இருந்­தது. ஆனால் தற்­பொ­ழுது எதிர்க்­கட்­சி­யாக இருக்­கி­றது நடை­பெ­று­கின்ற இந்த கூட்­டம். கழ­கத் தோழர்­க­ளை­யும் பொதுமக்­க­ளை­யும் பங்­கேற்க செய்துஉள்ள சிறப்­பு­மிக்க கூட்­ட­மாக திகழ்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எப்­பொ­ழு­துமே எதிர்க்­கட்­சி­யாக இருந்­தால் தி.மு.கழ­கத்­திற்கு ஒரு கெத்து உள்­ளது.  அதைத்­தான் கலை­ஞர் அவர்­க­ளும் சொல்­லு­வார். 
தி.மு.க.காரன் தூங்­கி­னால் கும்­ப­கர்­ணன்.  எழுந்­தால் இந்­தி­ர­ஜித் என்­பார். அதைப் போல் தான் இன்­றைக்கு ஒவ்­வொரு தி.மு.க.கார­னும். இந்­தி­ர­ஜித் -ஆக வீறு கொண்டு எழுந்து உள்­ளான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நடை­பெற்று முடிந்த சட்­ட­மன்ற தேர்­த­லில். தி.மு.க. ஆட்­சி­யில் 
இருந்­த­போது செய்த எண்­ணற்ற 
சாத­னை­களை.  நலத்­திட்­டங்­களை எல்­லாம் மக்­கள் மறந்து விட்டு.  மது கிண்­ணத்­தில் விழுந்த வண்டை போல் மயங்கி போய் விசி­லுக்கு வாக்­க­ளித்து விட்­டார்­கள். இப்­பொ­ழுது இந்த ஆட்­சி­யில் நடை­பெற்று வரும் சீர்­கே­டு­களை கண்டு.  மக்­கள் விரோத நட­வ­டிக்­கை­களை கண்டு. ஏண்டா இவர்­க­ளுக்கு ஓட்டு போட்­டோம் என்று மக்­கள் கொஞ்­சம் கொஞ்­ச­மாக தெளிந்து வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">குற்ற சம்­ப­வங்­க­ளில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">த.வெ.க. நிர்­வா­கி­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உதா­ர­ணத்­திற்கு முத­ல­மைச்­சர் விஜய் வெற்றி பெற்ற இந்த தொகுதி கேட்­பா­ரற்று உள்­ளது.  பத்து நாட்­க­ளாக குடிக்க குடி­நீர் கூட கிடை­யாது.  எங்கு பார்த்­தா­லும் மின்­வெட்டு.  இங்­கு­தான் இப்­படி என்­றால்.  தமிழ்­நாடு முழு­வ­தும் கொலை.  கொள்­ளை­கள். பாலி­யல் பலாத்­கா­ரங்­கள் தினம் தினம் அதி­க­ரித்து வரு­கி­றது. இதில் யார் அதி­க­மாக ஈடு­ப­டு­கி­றார்­கள் என்­றால்.  த.வெ.­க.வை சேர்ந்­த­வர்­கள் தான் அதி­கம் குற்ற சம்­ப­வங்­க­ளில் ஈடு­ப­டு­கி­றார்­கள் என்று பத்­தி­ரி­கை­ க­ளில் தினம் தினம் செய்­தி­கள் வெளி வரு­கின்­றன. உதா­ர­ணத்­திற்கு நேற்று முன்­தி­னம் கூட திருப்­பதி குடை ஊர்­வ­லத்­தில் பாது­காப்பு பணி ஈடு­பட்­டி­ருந்த பெண் போலீ­ஸி­டம். த.வெ.க. நிர்­வாகி சில்­மி­ஷத்­தில் ஈடு­பட்­டுள்­ளார்.  பாதிக்­கப்­பட்ட பெண் போலீஸ் அளித்த புகா­ரின் பேரில் த.வெ.க. நிர்­வாகி மீது வழக்­கும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால் ஆதவ் அர்­ஜுனா அவர்­கள் தலை­யீட்­டின் பேரில் அந்த 
நிர்­வாகி மீது எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை என்­பதை இந்த பொதுக்­கூட்­டம் வாயி­லாக நான் குற்­றம் சாட்­டு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மக்­கள் விரோத</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">த.வெ.க. அரசு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">த.வெ.க. ஆட்­சிக்கு வந்து இந்த 115 நாட்­க­ளில் ரீல்ஸ் போடு­வதை மட்­டுமே  வழக்­க­மா­கக் கொண்­டுள்­ளார்­கள்.  கஜானா காலி  என்று சொல்­கிற விஜய் அவர்­கள்.  பட்­டி­னப்­பாக்­கத்­தில் சட்­ட­மன்­றம் கட்ட மட்­டும் பணம் எப்­படி வந்­தது.  அது­வும் குறிப்­பாக மீன­வர்­கள் அதி­கம் வாழ்­கிற பகுதி அது. மீன­வர்­கள் பலத்த எதிர்ப்பு தெரி­வித்த போதும் இந்த மக்­கள் விரோத அரசு எதேச்ச­தி­கா­ரத்­தோடு சட்­ட­மன்­றம் கட்ட முயற்­சிப்­பது மிக­வும் கண்டனத்­துக்­கு­ரி­ய­தா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதே போல் தான் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்­தில் அதே பட்­டி­னப்­பாக்­கம் பகு­தி­யில் அங்­கி­ருந்து மீனவ 
மக்­களை வெளி­யேற்ற முயன்ற போது .  மீன­வர்­கள் மத்­தி­யில் மிகப்­பெ­ரிய போராட்­டம் வெடித்­தது. அப்­போது எட்டு மீன­வர்­கள் கொல்­லப்­பட்­ட­னர்.  இந்த வர­லா­று­கள் எல்­லாம் இப்­போ­துள்ள ஆட்சி அதி­கா­ரத்­தில் உள்­ள­வர்­க­ளுக்­கும் தெரி­யாது. இப்­போ­துள்ள அதி­கா­ரி­க­ளுக்­கும் தெரி­யாது.  கொல்­லப்­பட்ட எட்டு பேரின் இறுதி ஊர்­வ­லத்­தில் தி.மு.­க­ழ­கத்­தின் சார்­பில் பங்­கேற்று 10 கிலோ மீட்­டர் தூரம் நடந்தே சென்று இறுதி மரி­யாதை செலுத்­தி­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்த தி.மு.க. ஆட்சி காலத்­தின் போது ஏரா­ள­மான திட்­டங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டது.  அதை­யெல்­லாம் மக்­கள் மறந்து விட்டு மாற்­றம் வேண்­டும் என்று சொல்லி ஓட்டு போட்­ட­தன் விளை­வாக,  அதன் பயனை மக்­கள் அனு­ப­வித்­துக் கொண்­டுள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைக்கு விலை­வாசி.  தி.மு.க. ஆட்சி காலத்தை விட இந்த நான்கு மாதங்­க­ளில் பன்­ம­டங்கு உயர்ந்து உள்­ளது.  குறிப்­பாக சொல்ல வேண்­டு­மென்­றால் ஒரு மூட்டை புழுங்­கல் அரிசி . திமுக ஆட்சி காலத்­தில் 1600 ரூபாய் இருந்­தது.  இன்று 2200 க்கு விற்­கி­றது.  ஒரு கிலோ சர்க்­கரை ரூபாய் நாற்­ப­தில் இருந்து 74 க்கு உயர்ந்­துள்­ளது.  ஒரு கிலோ துவ­ரம் பருப்பு ரூபாய் 130 இருந்து.  170 ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.  இது­தான் இந்த ஆட்­சி­யின் லட்­ச­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஊரிலே ஒரு பழ­மொழி சொல்­வார்­கள்.  நாயை குளிப்­பாட்டி நடு­வீட்­டில் வைத்­தா­லும் அது எதையோ தின்­ப­தற்கு வாலை ஆட்­டிக் கொண்டு  வெளியே ஓடு­மாம். அது போல இருக்­கி­றது இன்­றைய அர­சி­யல் நிலை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">சட்­ட­மன்­றம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">நாடக மன்­ற­மாக மாறி­விட்­டது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைய சட்­ட­மன்­றம் என்­பது நாடக மன்­ற­மாக மாறி­விட்­டது.  சட்­ட­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சி­கள் கேட்­கும் கேள்­விக்கு பதில் சொல்ல யாருக்­கும் தெரி­ய­வில்லை.  மாறாக தி.மு.க. மீது வேண்­டு­மென்றே பொய்­யான குற்­றச்­சாட்டை முன் வைக்­கி­றார்­கள்.  சட்­ட­மன்­றத்­தில் காவல்­துறை மானிய கோரிக்­கை­யின் போது நடை­பெற்ற விவா­தத்­தின் போது பங்­கேற்று பேசிய சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வர் 
உத­ய­நிதி ஸ்டாலின் முத்­த­மிழ் 
அறி­ஞர் கலை­ஞர் அவர்­களை போல் ஆதா­ரத்­தோடு பேசி­னார்.  பல்­வேறு கேள்­வி­களை முன் வைத்­தார். அதற்கு முத­ல­மைச்­சர் விஜய் அவர்­கள் மூன்று நாள் அவ­கா­சம் வாங்­கிக் கொண்டு சென்­றார். என்ன பதில் சொல்­ல­லாம் என்று அதி­கா­ரி­க­ளி­டம் ஆலோ­சனை நடத்தி உள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதி­கா­ரி­க­ளும் உத­ய­நிதி கேட்ட கேள்­வி­கள் அனைத்­தும் சரி­தான்.  அவற்­றுக்கு ஏதும் பதில் இல்லை என்று சொல்லி இருப்­பார்­கள்.  அத­னால் அந்த கேள்­வி­களை மடை­மாற்­றம் செய்ய சர்க்­கா­ரியா கமி­ஷன் குறித்து எவனோ எழு­திக் கொடுத்­ததை முத­ல­மைச்­சர் விஜய் சட்­ட­மன்­றத்­தில் பேசி­யுள்­ளார்.  சர்க்­கா­ரியா கமி­ஷன் என்­பது 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அவர்­கள் தி.மு.­க.­வில் இருந்து பிரிந்து சென்ற போது கொடுத்த புகா­ரின் அடிப்­ப­டை­யில். 1976 ஆம் ஆண்டு எமர்­ஜென்சி அமல்­ப­டுத்­தப்­பட்ட பிறகு போடப்­பட்ட கமி­ஷன். ஆனால் யார் புகார் கொடுத்­தாரோ.  அதே எம்­ஜி­ஆர் அவர்­கள் ஆட்­சிக்கு வந்த பிறகு.  எந்­த­வித ஆதா­ர­மும்  இல்­லா­த­தால் அவரே அதனை கைவிட்­டார் என்­பது வர­லாறு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­போ­லத்­தான் மிசா சட்­ட­மும். மிசா என்­கிற எமர்­ஜென்­சியை கொண்டு வந்த இந்­திரா காந்தி. தி.மு.க. தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளி­டம் இந்த சட்­டத்தை நீங்­கள் ஆத­ரித்­தால் உங்­கள் ஆட்­சிக்கு மேலும் ஒரு வரு­டம் நீட்­டிப்பு தரு­கி­றேன் என்று கூறி­னார். அதை கலை­ஞர் அவர்­கள் ஏற்­க­வில்லை.   அது­மட்­டு­மல்ல இன்­றைக்கு வாய் கிழிய காம­ரா­ஜர் ஆட்சி வர­வேண்­டும் என்று பேசு­கி­றார்­களே காங்­கி­ரஸ் காரர்­கள். அந்த காம­ரா­ஜரை கைது செய்ய வேண்­டும் என்று இந்­திரா காந்தி அவர்­கள் கலை­ஞர் அவர்­க­ளி­டம் சொன்­னார்.  அதற்கு கலை­ஞர் அவர்­கள் மறுத்தகார­ணத்­தி­னா­லும். மேலும் காம­ரா­ஜர் அவர்­கள் இறந்த போது அவ­ருக்கு அரசு மரி­யாதை கொடுத்­த­தால் அம்­மை­யார் இந்­திரா காந்­திக்கு தி.மு.க. மீது கடும் கோபம் ஏற்­பட்­டது.  அதனை தொடர்ந்து தான் 30.01.1976 ஆண்டு தி.மு.க. ஆட்சி கலைக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கொடூர சட்­ட­மான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மிசா சட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மிசா சட்­டத்­தில் இந்­தி­யா­வில் உள்ள பெருந்­த­லை­வர்­க­ளான வாஜ்­பாய், லல்லு பிர­சாத் யாதவ், ஜெய­பி­ர­காஷ் நாரா­ய­ணன்   உள்­ளிட்ட பலர் கைது செய்­யப்­பட்­ட­னர் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த கொடூர சட்­ட­மான மிசா சட்­டத்­தில் தான் நமது கழ­கத் தலை­வர் அவர்­கள் தள­பதி அவர்­க­ளும் கைது செய்­யப்­பட்­டார்.  கைது செய்­யப்­பட்ட போது முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் அவர்­கள் சொன்ன வார்த்­தையை நான் இங்கு நினைவு படுத்த விரும்­பு­கி­றேன்.  “” ஸ்டாலின் நான் கூட 29 வயது தான் சிறைக்­குச் சென்­றேன்.  ஆனால் நீ 23 வய­தி­லேயே சிறைக்கு செல்­கி­றாய் . என்னை விட நீ பெரிய தியாகி ஸ்டாலின்” என பாராட்­டி­னார். இது­தான் தி.மு.­க.­வின் தியாக 
வர­லாறு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மிசா சட்­டத்­தில் கைது செய்­யப்­பட்ட  கழ­கத் தலை­வர் தள­பதி.  சிட்டி பாபு உள்­ளிட்ட ஏரா­ள­மா­னார் எண்­ணற்ற கொடு­மை­க­ளுக்கு உள்­ளா­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மிசா சட்­டம் குறித்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">அவ­தூறு பரப்­பும் முத­ல­மைச்­சர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மிசா சட்­டம் குறித்து அவ­தூறு பரப்­பும் இப்­போ­தைய தமி­ழக முத­ல­மைச்­ச­ருக்­கும். எந்த ஒரு கட்­சி­யி­லும் நிலை­யாக இல்­லா­மல். பல கட்­சி­க­ளுக்கு சென்று இப்­பொ­ழுது  த.வெ.க.வில் சேர்ந்து அமைச்­ச­ராக இருக்­கும் 
நிர்­மல் குமா­ருக்­கும் ஒன்­றைச் ஆதா­ர­ மாக சொல்­லிக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“ 2013-ம் ஆண்டு தற்­போ­தைய பிர­த­மர் மோடி அவர்­கள் ஒரு ட்விட்­டர் ஒன்றை பதிவு செய்­துள்­ளார். அதில் மிசா எமர்­ஜென்சி காலத்­தின் போது இந்­தி­யா­வில் உள்ள பல்­வேறு தலை­வர்­க­ளும்.  அவர்­க­ளது மகன்­க­ளும் குறிப்­பாக ஸ்டாலின்அவர்­க­ளும்.  பல்­வேறு கொடு­மை­களை அனு­ப­வித்­த­னர் “ என்று  பதிவு செய்­துள்­ளதை மிசா என்­றால் தெரி­யாத கத்­துக்­குட்­டி­க­ளுக்கு சுட்­டிக்­காட்ட விரும்­பு­கி­றேன். அது மட்­டு­மல்ல மிசா சட்­டத்­தின் 
ஆவ­ணங்­கள் குறித்து RTI - ல் எங்­க­ளது வழக்­க­றி­ஞர்­கள் கேட்­டி­ருந்­த­னர். அதற்கு RTI-ல் இருந்து வந்த பதில்.  ஆவ­ணங்­கள் இல்லை என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார்­கள்.  அரசுஆவ­ணங்­களை மறைப்­பது. அவற்றை ஒளித்து வைப்­பது.: தவ­றாக பயன்­ப­டுத்­து­வது மாபெ­ரும் குற்­ற­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதே போல் குற்­றத்தை தான் டான்சி நில வழக்­கின் போது  நான் ஆவ­ணங்­களை கேட்டு தர மறுத்­த­தன் கார­ண­மாக.  நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடுத்து அந்த வழக்­கில் ஜெய­ல­லிதா குற்­ற­வாளி என்று தீர்ப்பு கிடைக்­கப்­பெற்று ஜெய­ல­லிதா  சிறைக்­குச் சென்­றார் என்­பதை இன்­றைய ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு சுட்­டிக்­காட்ட விரும்­பு­கி­றேன்.  நிச்­ச­யம் அதே நிலை இப்­போது ஆட்­சி­யா­ளர்­க­ளுக்­கும் ஏற்­ப­டும்.  தி.மு.க. மீது அவ­தூறு பரப்­பி­னால்.  பொய் குற்­றச்­சாட்­டு­களை கூறி கெட்ட பெயர் ஏற்­ப­டுத்த வேண்­டும் என்று முயற்­சித்­தால் தி.மு.­க.­வி­னர் சும்மா விட மாட்­டார்­கள்.  சட்­டத்­தின் துணை­யோடு. உரிய ஆதா­ரங்­க­ளோடு இந்த மக்­கள் விரோத ஆட்சி மீது தகுந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.  அது மட்­டு­மல்ல.  ஊழ­லற்ற ஆட்சி தரு­கி­றேன் என்று கூறி­விட்டு.  இன்­றைக்கு எந்­தத் துறை­யில் பார்த்­தா­லும் ஊழல் நிறைந்­துள்­ளது.  அவற்­றை­யெல்­லாம் எங்­கள் சட்­டத்­துறை ஆதா­ரத்­தோடு சேக­ரித்து வரு­கி­றோம்.  ஏற்­க­னவே நிறைய ஊழல் பட்­டி­யல்­களை ஆதா­ரத்­து­டன் வைத்­துள்­ளோம் அவற்­றை­யும் சட்­டப்­படி உரிய தொடர் நட­வ­டிக்கை எடுத்து மக்­கள் விரோத விஜய் ஆட்­சி­யின் மீது உரிய நட­வ­டிக்கை  எடுப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">நூற்றி பதி­னைந்து நாள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">ரீல்ஸ் ஆட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த நூற்றி பதி­னைந்து நாள் ரீல்ஸ் ஆட்­சி­யில் மக்­கள் மிக­வும் தெளி­வ­டைந்து விட்­டார்­கள்.  கொடுத்த வாக்­கு­று­தி­கள் எதை­யும் நிறை­வேற்­ற­வில்லை.  மக்­கள் நலப்­­  பணி­கள் முடக்­கப்­பட்டு கிடப்­பில் போடப்­பட்­டுள்­ளன.  வளர்ச்­சித் திட்­டங்­கள் ஏதும் முன்­னெ­டுக்­க­வில்லை.  பரந்­தூர் விமான நிலைய திட்­டம் கைவி­டப்­பட்­டது.  இந்த ஆட்­சி­யின் நிர்­வாக திறமை இன்­மை­யால் பல்­வேறு தொழிற்­சா­லை­கள் அண்டை மாநி­லங்­க­ளுக்­குப் போய் கொண்­டுள்­ளது.  இவை­யெல்­லாம் மக்­கள் தினம் தினம் பார்த்­துக் கொண்­டு­தான் இருக்­கி­றார்­கள்.  இவற்­றிற்­கெல்­லாம் வரு­கின்ற மது­ராந்­த­கம் மற்­றும் தாரா­பு­ரம் சட்­ட­மன்ற இடைத்­தேர்­த­லில் மக்­கள் தங்­கள் பதி­லினை  தங்­க­ளது வாக்­கு­க­ளின் மூலம் சவுக்­க­டி­யாக தெரி­விப்­பார்­கள்.  தி.மு.க. கூட்­டணி வேட்­பா­ளர்­கள் நிச்­ச­யம் வெற்றி பெறு­வார்­கள்.  அவர்­கள்வெற்றி பெறு­வ­தன் மூலம் இந்த மக்­கள் விரோத ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு சரி­யான பாடம் புகட்­டப்­ப­டும் என்­பதை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு அவர் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கூட்­டத்­தில் சென்னை வடக்கு மாவட்ட பொறுப்­பா­ளர் ஆர்.டி.சேகர், வட­சென்னை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டாக்­டர் கலா­நிதி வீரா­சாமி, மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர் இரா. கிரி­ ரா­ஜன், தலைமை செயற்­குழு உறுப்­பி­னர் இரா. கருணா,மாநில நிர்­வா­கி­கள் இரா. நரேந்­தி­ரன்,  என். மருது கணேஷ்,  மாவட்ட நிர்­வா­கி­கள் எஸ்.ஆர்.கம­லக்­கண்­ணன்,  தயா­ளன்,  பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் வே. சிவக்­கு­மார்,  த.கம­லக்­கண்­ணன் மற்­றும் கழக நிர்­வா­கி­கள் ஏரா­ள­மா­னோர் பங்­கேற்­ற­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>