<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="21/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,72,959,1419" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Sep 21 2026 03:33:07 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260921T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="21092026-CBE-02" position.sequence="02" ex-ref="21092026-CBE-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="55">தி.மு.க. தந்தது ‘ரியல்’ ஆட்சி ! த.வெ.க. நடத்துவது ‘ரீல்ஸ்’ ஆட்சி!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="33">கழக முப்பெரும் விழாவில் கழகத் தலைவர் உரை...   முதல் பக்கத் தொடர்ச்சி!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">மிசாவைப் பற்றிப் பேசுபவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்: ‘என் மிசா கைதை உங்கள் எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை!’ என்னுடைய தியாகத்திற்கு மதிப்பெண் போட உங்கள் எவனுக்கும் தகுதி கிடையாது!" </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Thalaivarphoto_02_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="HSlfVxibAAAbNWM_02_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="7">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="7"> தலை­வர் கலை­ஞர் விருதை என்­னு­டைய அரு­மைச் சகோ­த­ரர் திருச்சி சிவா பெற்­றி­ருக்­கி­றார். மிசா சிறை­வா­சம் முதல், இளை­ஞ­ரணி தொடங்கி இன்­று­வரை என்­னு­டன் பய­ணித்­துக் கொண்­டி­ருப்­ப­வர். இன்­னும் சொல்ல வேண்­டும் என்­றால், நம்­மு­டைய உடன்­பி­றப்­பு­கள் எல்­லாம் என்னை அன்­போடு, பாசத்­தோடு “தள­பதி, தள­பதி” என்று அழைக்­கி­றீர்­களே, அதை முதன்­மு­த­லில் எனக்கு சூட்­டி­ய­வரே அவர்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="7">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="7"> பாவேந்­தர் பார­தி­தா­சன் விரு­தைப் பெற்­றுள்ள டாக்­டர் கனி­மொழி என்.வி.என். சோமு அவர்­கள் – மூன்­றா­வது தலை­மு­றை­யா­கக் கழ­கத்­திற்­குத் தொண்­டாற்­றும் குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர். விபத்­தில் சிக்கி மறைந்த நம்­மு­டைய ஆரு­யிர் அண்­ணன் என்.வி.என். சோமு அவர்­க­ளு­டைய அருமை மகள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="7">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="7"> பேரா­சி­ரி­யர் விரு­தைப் பெற்­றுள்ள மிசா அக­மது தம்பி அவர்­கள் – அவ­ரு­டைய பெய­ரி­லேயே ‘மிசா’­வைத் தாங்கி, அரை நூற்­றாண்­டுக்­கும் மேலா­கக் கழ­கத்­தின் வளர்ச்­சிக்­கா­கத் தன்னை அர்ப்­ப­ணித்து பணி­யாற்­றிக் கொண்­டுள்ள தியாகி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="7">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="7"> மு.க. ஸ்டாலின் விரு­தைப் பெற்­றுள்ள தம்பி இளை­ய­ராஜா அவர்­கள் – ஒடுக்­கப்­பட்ட சமூ­கத்­தி­லி­ருந்து உழைப்­பால் உயர்ந்து, இளை­ஞர்­க­ளைக் கழ­கத்தை நோக்கி ஈர்த்து வரும் ஆற்­ற­லைக் கொண்­டி­ருப்­ப­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="7">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="7"> என்­மீது பெருத்த நம்­பிக்­கை­யோடு என்னை ஊக்­கு­வித்து உற்­சா­கப்­ப­டுத்­திய எனக்கு ஒரு அர­சி­யல் ஆசா­னா­கவே விளங்­கிய நம்­மு­டைய அன்­புக்­கு­ரிய முர­சொலி செல்­வம் விரு­தைப் பெற்­றுள்ள மூத்த ஊட­க­வி­ய­லா­ளர் ப. திரு­மா­வே­லன் அவர்­கள் – தனது கூர்­மை­யான எழுத்­துக்­க­ளால் திரா­விட இயக்­கத்­தின் வர­லாற்­றை­யும், தியா­கத்­தை­யும், தேவை­யை­யும் இளை­ஞர்­க­ளி­டம் கொண்டு சேர்ப்­ப­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவர்­கள் அனை­வ­ருக்­கும் தலை­மைக் கழ­கத்­தின் சார்­பா­க­வும், கழக உடன்­பி­றப்­பு­க­ளான உங்­கள் சார்­பா­க­வும் என்­னு­டைய வாழ்த்­து­கள், பாராட்­டு­கள்! இந்த விழா­வைச் சிறப்­பாக ஏற்­பாடு செய்து, இதை வெற்­றி­க­ர­மாக நடத்­திக்­காட்­டி­யி­ருக்­கும் நம்­மு­டைய அருமை மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் தம்பி சிற்­ற­ரசு அவர்­க­ளுக்­கும் என்­னு­டைய பாராட்­டு­கள். அவ­ருக்கு துணை நின்ற அத்­தனை தோழர்­க­ளுக்­கும் என்­னு­டைய வாழ்த்­து­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">75 ஆண்டு காலம் கம்­பீ­ரத்­தோடு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">நிலைத்து நிற்­கும் கழ­கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­ப­டிப்­பட்ட விரு­து­க­ளைப் பெறத் தகு­தி­யுள்ள லட்­சக்­க­ணக்­கான தொண்­டர்­க­ளைப் பெற்­றுள்ள இயக்­கம்­தான் நம்­மு­டைய திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு இயக்­கம் 75 ஆண்­டு­கள் நிலைத்து நிற்­பது சாதா­ரண சாதனை கிடை­யாது! 75 ஆண்­டு­க­ளுக்­குப் பிற­கும், அதே கம்­பீ­ரத்­தோடு காட்சி அளிப்­ப­தும் சாதா­ரண சாதனை கிடை­யாது! இந்­தச் சாதனை யாரால் வந்­தது? விருது பெற்ற இவர்­க­ளைப் போன்­ற­வர்­க­ளால் வந்­தது! இந்த அரங்­கத்­தில் கூடி­யி­ருக்­கும் உங்­க­ளைப் போன்­ற­வர்­க­ளால் வந்­தது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மல்ல, அறி­வா­ல­யத்­திற்­குக்­கூட வரா­மல், ஒவ்­வொரு ஊரி­லும், ஒவ்­வொரு கிரா­மத்­தி­லும், ஒவ்­வொரு தெரு­வி­லும், ஒவ்­வொரு வீட்­டி­லும் கழ­கத்தை வளர்த்­துக் கொண்­டி­ருக்­கும் நமது தீர­மிக்க உடன்­பி­றப்­பு­க­ளால் இந்­தச் சாதனை வந்­தது! அவர்­க­ளால்­தான் நான் வாழ்­கி­றேன்! அவர்­களை நம்­பித்­தான் நான் வாழ்­கி­றேன்! அவர்­கள் இருக்­கி­றார்­கள் என்ற மன உறு­தி­யில்­தான் நான் செயல்­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தலை­வர் கலை­ஞ­ரின் உடன்­பி­றப்­பு­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">முப்­பெ­ரும் விழா வாழ்த்­துக்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்­னைத் தலை­வ­ராக்­கி­யது யார்? உடன்­பி­றப்­பு­க­ளான நீங்­கள்! என்னை முத­ல­மைச்­சர் பதவி வரைக்­கும் உயர்த்தி அழகு பார்த்­தது யார்? கழக உடன்­பி­றப்­பு­க­ளான நீங்­க­ளும், தமிழ்­நாட்டு மக்­க­ளும்­தான்! தலை­வர் கலை­ஞ­ரின் உயி­ரி­னும் மேலான அத்­தனை  உடன்­பி­றப்­பு­க­ளுக்­கும் இந்த நேரத்­தில் என் முப்­பெ­ரும் விழா வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த இயக்­கத்­திற்கு கொள்­கை­யும் லட்­சி­ய­மும்­தான் முக்­கி­யம். நாம் பார்க்­காத வெற்­றி­யும் இல்லை; நாம் பார்க்­காத தோல்­வி­யும் இல்லை! இன்­னும் சொல்­லப்­போ­னால், இந்­தத் தேர்­த­லில் அதி­கத் தொகு­தி­க­ளைக் கைப்­பற்­றிய கட்­சிக்­கும் நமக்­கும் வித்­தி­யா­சம் என்ன? 17 லட்­சம் வாக்­கு­கள் தான். எதிரி யார் என்று சரி­யா­கக் கணித்­துப் பணி­யாற்­றி­யி­ருந்­தால், இந்­தத் தோல்­வியே ஏற்­பட்­டி­ருக்­காது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆட்சி அமைத்­துள்ள கட்­சிக்கு, பெரும்­பான்­மைக்­குத் தேவை­யான இடங்­கள்­கூ­டக் கிடைக்­க­வில்லை. ஆனால், ஏதோ பெரிய அலை அடித்­தது போல­வும், தமிழ்­நாடே அவர்­க­ளின் வரு­கைக்­கா­கக் காத்­தி­ருந்­தது போல­வும் ‘இமேஜ் பில்­டப்’ செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். உண்­மை­யில், அவர்­க­ளின் ஆட்சி நடப்­பதே நம் கூட்­ட­ணி­யில் வென்ற கட்­சி­க­ளின் ஆத­ர­வோ­டு­தான். ஆனால், ஆத­ரவு தந்த அந்­தக் கட்­சி­க­ளை­யும் நம்­பா­மல், குதிரை பேரம் நடத்­திக் கொண்­டி­ருப்­ப­து­தான் ஆளுங்­கட்­சி­யின் லட்­ச­ணம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பெயரை மாற்றி ஸ்டிக்­கர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ஒட்­டும் ஆட்சி நடக்­கி­றது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­ப­டி­யொரு பல­வீ­ன­மான ஆட்­சியை அமைத்­துள்ள ஒரு கட்சி என்ன செய்ய வேண்­டும்? நியா­ய­மாக, மக்­கள் நலத்­திட்­டங்­க­ளைச் செய்து நல்ல பெயர் வாங்­கப் பார்க்க வேண்­டும். ஆனால் அதையா செய்­கி­றார்­கள்? இப்­போது ஆளும் த.வெ.க. அர­சின் வேலை என்ன? நம் திரா­விட மாடல் ஆட்­சி­யில் கொண்டு வந்த திட்­டங்­களை நிறுத்­து­வது; இல்லை என்­றால் பெயரை மாற்றி ஸ்டிக்­கர் ஒட்­டு­வது. இது­தான் மாற்­றமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­ச­ரைப் பொறுத்­த­வரை, தின­மும் ‘ஷூட்­டிங் மூட்’–­இல் தான் இருக்­கி­றார். சினி­மா­வில் நடிப்­பதை நிறுத்­தி­விட்­டேன் என்று கூறி­விட்டு, யார் இயக்­கு­னர், யார் கேம­ரா­மேன் என்று சொல்­லா­மல் இப்­போது மக்­கள் முன்­னாடி நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார். முத­லில் பஞ்ச் டய­லாக், இப்­போது ஃபாரின் ஷூட்­டிங்! எல்­லாமே ‘ரீல்ஸ்’­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கழக ஆட்சி தொடர்ந்­தி­ருந்­தால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மக்­க­ளுக்கு கிடைத்­தி­ருக்­கும் நன்­மை­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பரந்­தூர் விமான நிலை­யத் திட்­டத்தை ரத்து செய்­த­தன் மூல­மாக, தமிழ்­நாட்­டின் வளர்ச்­சியை சற்­றே­றக்­கு­றைய 25 ஆண்டு காலம் பின்­னுக்­குத் தள்­ளி­விட்­டார்­கள்! இதுவே நம் திரா­விட மாடல் ஆட்சி தொடர்ந்­தி­ருந்­தால், இந்­நே­ரம் மக­ளி­ருக்கு உரி­மைத் தொகை­யாக 2,000 ரூபாய் கிடைத்­தி­ருக்­கும்! அனைத்­துக் குடும்­பங்­க­ளுக்­கும் 8,000 ரூபாய் இல்­லத்­த­ரசி கூப்­பன் கிடைத்­தி­ருக்­கும்! 25 லட்­சம் உழ­வர்­க­ளுக்­குப் புதிய மின்­சார மோட்­டார்­கள் வழங்­கி­யி­ருப்­போம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், மக்­க­ளுக்கு உத­வாத இந்த உத­வாக்­கரை ஆட்­சி­யில் என்ன நடக்­கி­றது? நான்கு மாதங்­க­ளுக்கு முன்­னால் அரிசி, பருப்பு, சர்க்­கரை எல்­லாம் என்ன விலைக்கு விற்­றன... இன்று என்ன விலைக்கு விற்­கின்­றன? விலை­வாசி உயர்வே இந்த ஆட்­சி­யின் லட்­ச­ணத்­தைச் சொல்­லப் போதும்! நம் ஆட்­சி­யில் தமிழ்­நாடு பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் முத­லி­டத்­தில் இருந்­தது; ஆனால், இந்­தத் த.வெ.க. ஆட்­சி­யில் விலை­வாசி உயர்­வில் முதன்மை மாநி­ல­மாக ஆகப்­போ­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­ச­ரைப் பொறுத்­த­வ­ரைக்­கும், அவ­ரது குறை­களை, அவர் நடத்­திக் கொண்­டி­ருக்­கும் துக்­ளக் தர்­பாரை மக்­கள் பேசக்­கூ­டாது என்­ப­தற்­காக அமைச்­ச­ரவை முதல் ஊட­கங்­கள் வரை டைவர்­ஷன் செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். அதி­லும், இப்­போது நாட்­டிற்கு அவ­சி­ய­மான செய்தி என்ன தெரி­யுமா? “முத­ல­மைச்­சர் இன்று கோட் போட்­டார்”, “வெள்­ளிக்­கி­ழ­மையா... பட்டு வேட்டி – பட்டு சட்டை!”, “நெற்­றி­யில் என்ன நிறப் பொட்டு?”, “கையில் என்ன கயிறு?”, “ஜோசி­யர் இன்று என்ன சொல்­லி­யி­ருக்­கி­றார்?” – இது­தான் இன்­றைக்­குச் செய்­தி­க­ளா­கி­விட்­டன. முத­ல­மைச்­ச­ரும் ‘இதைச் செய்­தாலே போதும்’ என்ற மன­நி­லை­யில்­தான் இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­ச­ரின் செய்­கை­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">டிரெண்­டிங் செய்­கி­றார்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தி­யா­வி­லேயே இரட்டை இலக்க வளர்ச்சி, கல்­வி­யில் சிறந்த தமிழ்­நாடு, முத­லீட்­டா­ளர்­க­ளின் முதல் முக­வரி தமிழ்­நாடு, டிரில்­லி­யன் டாலர் பொரு­ளா­தா­ரம், இந்­தி­யா­வி­லேயே எந்த மாநி­லத்­தி­லும் இல்­லாத ‘நான் முதல்­வன்’, ‘புது­மைப் பெண்’, ‘தமிழ்ப் புதல்­வன்’ என்று பேசப்­பட்ட நாட்­டில்... அவை எல்­லா­வற்­றை­யும் பின்­னுக்­குத் தள்ளி கோட்–­சூட், வேட்டி, சட்டை, காலால் நடந்­தார், கையால் சைகை செய்­தார், வாயால் சாப்­பிட்­டார் என்­று­தான் செய்­தி­கள் வரு­கின்­றன; அதைத்­தான் டிரெண்­டும் செய்­கி­றார்­கள்! இதை­யெல்­லாம் பார்ப்­ப­தற்கே மிக­வும் அரு­வ­ருப்­பாக – அசிங்­க­மாக இருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவ­ரின் பாணி­யி­லேயே சொல்ல வேண்­டும் என்­றால், த.வெ.க. ஆட்­சி­யில் இரண்டே இரண்­டுக்கு நடு­வில்­தான் போட்­டியே... ஒன்று மின்­வெட்டு! இன்­னொன்று அரி­வாள் வெட்டு! இப்­ப­டித்­தானே ஆக்­சன் செய்­வார். எது அதி­கம் என்­ப­து­தான் போட்­டியே! பட்­டப்­ப­க­லில் கொலை­கள், துப்­பாக்­கிச் சூடு­கள், ஆளுங்­கட்­சி­யி­னரே போதைப்­பொ­ருட்­களை விற்­பனை செய்­வது, பாலி­யல் வன்­கொ­டு­மை­க­ளில் ஈடு­ப­டு­வது என குற்­ற­வா­ளி­க­ளின் வேட்­டைக்­கா­டா­கத் தமிழ்­நாடு மாறி­யி­ருக்­கி­றது. த.வெ.க. ஆட்­சி­யில் சட்­ட­மும் இல்லை, ஒழுங்­கும் இல்லை! ஆனால், முத­ல­மைச்­ச­ராக இருப்­ப­வ­ருக்கு இதைப் பற்­றி­யெல்­லாம் துளி­கூ­டக் கவ­லையே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏமா­று­ப­வர்­கள் இருக்­கும் வரை, இப்­படி ஏமாற்­று­ப­வர்­க­ளும் இருக்­கத்­தான் செய்­வார்­கள். ஆனால், இவர்­க­ளால் மக்­களை எல்லா நாளும் ஏமாற்ற முடி­யாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">லண்­டன் சென்று முதல்­வர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">முத­லீட்டை ஈர்த்த லட்­ச­ணம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கடந்த வாரம் முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தற்­காக வெளி­நாட்­டுக்­குப் பய­ணம் செய்­த­தாக முத­ல­மைச்­சரே சொன்­னார். இதற்கு முன்­னால் நான் வெளி­நாட்­டுக்­குப் பய­ணம் செய்­த­போது என்ன பேசி­னார்? “சி.எம். சார்... வெளி­நாட்டு முத­லீடா? வெளி­நாட்­டில் முத­லீடா?” என்று மேடை­யில் கத்­தி­னார். அவர் அள­விற்கு நான் இறங்கி வரத் தயா­ராக இல்லை. இப்­போது, நான் அல்ல; தமிழ்­நாட்டு மக்­கள் அவ­ரைப் பார்த்து, “சி.எம். சார்... இந்­தி­யா­வில் இருக்­கும் நிறு­வ­னத்­திற்கு எதுக்கு லண்­ட­னில் போய் கையெ­ழுத்து போடு­கி­றீர்­கள்?” என்று சத்­த­மா­கக் கேட்­கி­றார்­கள். அதை­விட இன்­னொரு பெரிய கொடுமை என்ன தெரி­யுமா? தொழில்­துறை அமைச்­சர் இல்­லா­மல், தொழில்­துறை செய­லா­ளர் இல்­லா­மல் முத­லீ­டு­களை ஈர்க்­கப் போயி­ருக்­கி­றார் முத­ல­மைச்­சர். இது­தான் முத­லீ­டு­களை ஈர்க்­கும் லட்­ச­ணமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மல்ல, ரீல்ஸ் வெறி பிடித்த ஆளுங்­கட்­சி­யி­ன­ரால் நூற்­றாண்டு புகழ்­பெற்ற சட்­ட­மன்­றம்­கூ­டத் தனது மாண்பை இழந்து இப்­போது நிற்­கி­றது! நடந்து முடிந்த சட்­ட­மன்­றக் கூட்­டத்­தொ­ட­ரைப் பார்த்­தி­ருப்­பீர்­கள்; அதை நேர­டி­யாக ஒளி­ப­ரப்பு செய்­தார்­கள். என்ன நடக்­கி­றது? முத­ல­மைச்­சர் சிரிப்­ப­தைப் பார்க்க முடி­ய­வில்லை என்று கவ­லைப்­பட்டு, சட்­ட­மன்­றப் பேர­வை­யில் ஸ்கிரீன் வைக்­கச் சொல்லி ஆளுங்­கட்சி எம்.எல்.ஏ.க்கள் கேட்­கி­றார்­கள். இது­தான் நாட்­டிற்­குத் தேவையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">உத­ய­நிதி சட்­ட­மன்­றத்­தில் கேட்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கேள்­வி­க­ளுக்கு பதில் சொல்ல முடி­ய­வில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வர் நம்­மு­டைய தம்பி உத­ய­நிதி அவர்­கள் கேட்­கும் கேள்­வி­க­ளுக்­குப் பதில் சொல்ல முடி­யா­மல், மிசா – சர்க்­கா­ரியா கமி­ஷன் என்று சம்­பந்­தம் இல்­லா­மல் பேசி அவ­தூ­று­க­ளைப் பரப்­பு­கி­றார்­கள்; டைவர்­ஷன் செய்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மிசா­வைப் பற்­றிப் பேசு­ப­வர்­க­ளுக்கு நான் சொல்ல விரும்­பு­வது ஒன்றே ஒன்­று­தான்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“என் மிசா கைதை உங்­கள் எவ­னுக்­கும் நிரூ­பிக்க வேண்­டிய அவ­சி­யம் எனக்கு இல்லை!”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“என்­னு­டைய தியா­கத்­திற்கு மதிப்­பெண் போட உங்­கள் எவ­னுக்­கும் தகுதி கிடை­யாது!”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என் மிசா வர­லாற்றை, அண்­ணன் சிட்­டி­பாபு தனது சிறை டைரி­யில் பதிவு செய்­தி­ருக்­கி­றார். அது­தான் காலத்­தால் அழிக்க முடி­யாத கல்­வெட்டு. அது­மட்­டு­மல்ல, சிறைச்­சா­லைச் சித்­தி­ர­வ­தை­க­ளைப் பற்றி விசா­ரிக்க மக்­கள் தில­கம் எம்.ஜி.ஆர். அவர்­கள் அமைத்த இஸ்­மா­யில் கமி­ஷ­னின் அறிக்கை இருக்­கி­றது. சாட்சி எல்­லாம் சென்று சொல்லி இருக்­கி­றேன். அனை­வ­ரும் வந்து சொன்­னார்­கள். படிக்­கத் தெரிந்­த­வன் அதை­யெல்­லாம் எடுத்­துப் படிக்­கட்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தியை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கேட்­டால் ரீல்ஸ் பரப்­பு­கி­றார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வாக்­க­ளித்த மக்­கள் வாக்­கு­று­தி­க­ளைப் பற்­றிக் கேட்­டால், அவ­தூறு பரப்பி ரீல்ஸ் போட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். இவர்­கள் கட்­சிக்கு நியா­ய­மாக ‘தமி­ழக வெற்­றிக் கழ­கம்’ என்று இல்­லா­மல், ‘தமி­ழக ரீல்ஸ் கழ­கம்’ என்­று­தான் பெயர் வைத்­தி­ருக்க வேண்­டும்! தி.மு.க. தந்­தது ரியல் ஆட்சி! இவர்­கள் நடத்­து­வது ரீல்ஸ் ஆட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு முறை மக்­கள் ஏமாந்­தி­ருக்­க­லாம். தொடர்ந்து ஏமா­று­வார்­கள் என்று நினைத்­தால், ஏமா­றப்­போ­வது இப்­போது இருக்­கும் முத­ல­மைச்­சர்­தான். அவ­தூ­று­க­ளைப் பரப்பி, கொச்­சை­யா­கப் பேசி, தி.மு.க.வை அவ­மா­னப்­ப­டுத்­த­லாம், பல­வீ­னப்­ப­டுத்­த­லாம் என்று நினைத்­துப் பலர் செயல்­ப­டு­கி­றார்­கள். இதை­யெல்­லாம் 78 வரு­டங்­க­ளாக நாங்­கள் பார்த்­துக் கொண்­டு­தான் இருக்­கி­றோம். கேட்­டுக் கேட்­டுப் புளித்­துப் போன இந்த அவ­தூ­று­க­ளைப் பரப்­பும் எதி­ரி­கள்­தான் மாறிக் கொண்­டி­ருக்­கி­றார்­களே தவிர, நாங்­கள் உறு­தி­யாக நிலைத்து நின்று கொண்­டு­தான் இருக்­கி­றோம். தன்னை விட இயக்­க­மும் கொள்­கை­யும்­தான் பெரிது என்று நினைக்­கி­ற­வர்­கள்­தான் எங்­கள் உடன்­பி­றப்­பு­கள். நாங்­கள் வட்­டி­யும் முத­லு­மா­கத் திருப்­பித் தர காத்­தி­ருக்­கி­றோம். நேரம் விரை­வி­லேயே வரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">திமிர்த்­த­னத்­திற்­கும் ஆண­வத்­திற்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பாடம் புகட்ட வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விரை­வில் இரண்டு தொகுதி இடைத்­தேர்­தல் வரப்­போ­கி­றது! இது முறை­யாக வரும் தேர்­தலா? இல்லை, திணிக்­கப்­பட்ட தேர்­தல்! எவ்­வ­ளவு அகம்­பா­வம் இருந்­தால், வேறு கட்­சி­யில் வெற்றி பெற்ற உறுப்­பி­னர்­களை விர­லில் வைத்த மை ஈரம் காய­வ­தற்கு முன்­னால் ராஜி­னாமா செய்ய வைத்­தி­ருப்­பார்­கள்? அது­மட்­டு­மல்ல, வெட்­கமே இல்­லா­மல் இப்­போது அவர்­க­ளையே தங்­க­ளு­டைய சின்­னத்­தில் மீண்­டும் நிற்க வைத்­தி­ருக்­கி­றார்­கள். கேட்­டால் – குதிரை பேரம் இல்­லை­யாம்; தூய ஆட்­சி­யாம்! இது­தான் இவர்­க­ளின் மானங்­கெட்ட மாற்­றமா!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பொது­வா­கச் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் மர­ண­ம­டைந்­தால்­தான் இடைத்­தேர்­தல் வரும். முதல்­மு­றை­யாக ஜன­நா­ய­கம் மர­ண­ம­டைந்து இடைத்­தேர்­தல் வரு­கி­றது. இதைத்­தான் நம் உடன்­பி­றப்­பு­கள் ஆட்­சி­யின் தோல்­வி­க­ளோடு சேர்த்து, இரண்டு தொகு­தி­யி­லும் வீடு வீடா­கச் சென்று பிரச்­சா­ரம் செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அர­சாங்­கமே இன்­றைக்­குச் செய­லி­ழந்து போயி­ருக்­கி­றது. காலை­யில் கூடச் பத்­தி­ரி­கை­க­ளில் பார்த்­தி­ருப்­பீர்­கள்; ஒரே நாளில் 8 கொலை­கள்! அது­வும் மக்­கள் நட­மாட்­டம் இருக்­கும் பகு­தி­க­ளில். இரட்­டைக் கொலை­கள், ஆண­வக் கொலை­கள், லாக்­கப் படு­கொ­லை­கள், டாஸ்­மாக் தக­ராறு கொலை­கள், விநா­ய­கர் சதுர்த்தி ஊர்­வ­லத்­தில் கொலை­கள் என ஒவ்­வொரு நாளும் விடிந்­தால் எண்ண முடி­யாத அள­விற்கு கொலை­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மின்­சா­ரம் இல்­லா­மல் நடு­ராத்­தி­ரி­யில் குழந்­தை­க­ளோடு மக்­கள் போரா­டு­கி­றார்­கள்! தொழில்­கள் எல்­லாம் முடங்­கிக் கிடக்­கின்­றன! ஏழை மக்­க­ளுக்கு எட்­டாத அள­விற்கு விலை­வாசி உயர்ந்து, பெண்­கள் எல்­லாம் வீட்­டிற்­குத் தேவை­யான பொருட்­களை வாங்­கவே பயப்­ப­டு­கி­றார்­கள்! வரு­மா­னம் போத­வில்லை! இவர்­கள் சொன்ன 2,500 ரூபா­யும் வர­வில்லை! பணம் கொடுத்­தா­லும் ஆவின் பால் கிடைக்­க­வில்லை! ஒரு மாத­மாக டெங்கு காய்ச்­சல், வைரஸ் காய்ச்­சல் பர­விக் கொண்­டி­ருக்­கி­றது; 12 பேர் இறந்­து­விட்­டார்­கள். இனி­மேல்­தான் நட­வ­டிக்கை எடுக்­கப் போகி­றோம் என்று சொல்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது எல்­லா­வற்­றை­யும் கவர்ச்­சி­யால் சரி­கட்­ட­லாம் என்று ஆண­வத்­தோடு இருக்­கும் ஒரு­வர்­தான் முத­ல­மைச்­ச­ராக இருக்­கி­றார். ஊட­கங்­க­ளைச் சந்­தித்­துப் பதில் சொல்ல மாட்­டேன் என்று திமி­ராக இருக்­கி­றார். இந்­தத் திமிர்த்­த­னத்­திற்­கும் ஆண­வத்­திற்­கும் பாடம் புகட்­டும் வாய்ப்­பு­தான் இந்த இடைத்­தேர்­தல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">இடைத்­தேர்­த­லில் கழ­கத்­திற்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">வாக்­க­ளித்து ஆளும்­கட்­சிக்கு பாடம் புகட்­டு­வீர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அத­னால், மது­ராந்­த­கம், தாரா­பு­ரம் வாக்­கா­ளப் பெரு­மக்­களே! ஆளுங்­கட்­சிக்­குத் தக்க பாடம் புகட்­டத் தி.மு.க.விற்கு வாக்­க­ளி­யுங்­கள் என்று இந்த முப்­பெ­ரும் விழா மேடை­யில் நின்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­னும் பேரி­யக்­கம் காலத்­திற்கு ஏற்­றாற்­போல மாற்­றம் கண்­ட­தால்­தான் 78 ஆண்­டு­க­ளுக்­கும் மேலா­கத் தி.மு.க. அதே வலி­மை­யோடு இருக்­கி­றது. அதற்கு இன்­னும் வலிமை கூட்­டத்­தான் கழக மறு­சீ­ர­மைப்­புச் செய்­யத் தொடங்­கி­யுள்­ளோம். நம்மை மாற்­றிக் கொண்டு, மக்­க­ளை­யும் கவர்ச்­சி­யில் இருந்து மாற்ற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">இன்­றைய இளை­ஞர்­க­ளின் மொழி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பேசுங்­கள்! தமிழ்­நாட்டை மீட்­போம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­றைய “Gen Z” இளை­ஞர்­க­ளை­யும் கவர வேண்­டும் என்­றால், அவர்­க­ளின் மொழி­யில் பேச வேண்­டும். அது­வும் எப்­ப­டிப் பேச வேண்­டும்? அவர்­க­ளின் கைப்­பே­சி­யில் போய் சேரும் வகை­யில் பேசுங்­கள்!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>