<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,66,376,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 22 2026 03:30:50 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260922T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="22092026-CBE-02" position.sequence="02" ex-ref="22092026-CBE-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#8e3800" boxBorderWeight="1.99193248209899">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup880512_02_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15.5">தி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ராவிட மாடல் ஆட்சியில் ஐந்தாண்டு காலத்தில் 4 ஆயிரத்து 677 கோவில்களுக்கு திருக்குடமுழுக்கு செய்யப்பட்டது.  ஒரு  இடத்தில் கூட ஒரு சிறு பிரச்சினை கூட எழவில்லை. பக்தர்கள் அனைவரும் உரிய மரியாதையுடன் பங்கெடுத்து மனமகிழ்ச்சியோடு திரும்பினார்கள். திராவிட மாடல் ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை  மிகச் சிறப்பாகச் செயல்பட்டது என  பக்தர்கள் அனைவரும் பாராட்டினார்கள். கட்சி சார்பற்ற வகையில் வெளியில் உள்ள அனைவரும் பாராட்டும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருப்பணிகள் அனைத்தும் திராவிட மாடல் ஆட்சியில் செய்து முடிக்கப்பட்டு விட்டது. செப்டம்பர் 17 குடமுழுக்கு என்று கடந்த பிப்ரவரி மாதமே நாளும் குறிக்கப்பட்டு விட்டது. குறிக்கப்பட்ட நாளில் குடமுழுக்கை ஒழுங்காக நடத்தத்  தெரியவில்லை  த.வெ.க.  அரசால்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஒரே ஒரு குடமுழுக்கைக் கூட ஒழுங்காக  நடத்தத்  துப்பு இல்லை. ஆட்சிக்கு வந்ததும்  பழனி முருகன்  கோவில் நிலத்தை ஆட்டையைப் போட உதவி புரிந்த அமைச்சர் ரமேஷால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கைக் கூட ஒழுங்காக முறையாக நடத்தத் தெரியவில்லை. ‘ஐந்து கட்சி மாறி அமாவாசை’ நிர்மல் குமாரின் நிர்வாக லட்சணம் சந்தி சிரித்து விட்டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அச்சடித்த ‘பாஸ்களை’ அநியாய விலைக்கு விற்று, உண்மையான பக்தர்களை ரோட்டில் பறிதவிக்க விட்டு, மதுரை  மக்களையும்,  குடமுழுக்கை  பார்க்க  வந்த  அனைத்து மக்களையும் உதாசீனப்படுத்தி ஒரு கேலிக்கூத்தை அலட்சியமாக  நடத்தி  இருக்கிறது  விஜய்  அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">குடமுழுக்கை பார்க்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை தூரத்தில் பல்வேறு சாலைகளில் பலமணி நேரம் நிறுத்தியதால் அவர்கள் மயக்கம் அடைந்துள்ளார்கள். 40க்கும் மேற்பட்டவர்கள் மயங்கி உள்ளார்கள். மதுரை அரசு மருத்துவமனையில் பலரும் சேர்க்கப்பட்டுள்ளார்கள். ஒரு போலீஸ் எஸ்.ஐ.யே மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்னொரு கரூரை மதுரையில் காட்ட நினைத்துள்ளார்கள் என்பது தெரிகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கடந்த காலங்களில் குடமுழுக்கின் போது சித்திரை வீதிகளில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு குடமுழுக்கு நேரத்தில் கோபுரத்தை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இப்போது சித்திரை வீதிகளிலும், ஆவணி வீதிகளிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. குடமுழுக்கின் போது கோபுரத்தை தூரத்தில் இருந்து தரிசிக்கக் கூட பக்தர்கள் முடியாமல் அவதிப்பட்டனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">குடகுழுக்கு முடிந்த பிறகு நான்கு வாசல்களில் இரண்டு வாசல்களை மூடி விட்டார்கள். அதையும் பக்தர்களுக்கு அறிவிக்கவில்லை. அனைத்து வாசல்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று முண்டியடித்தார்கள். தடுப்புக் காவலை  தாண்டி  மக்கள் ஓடியது வேதனையான காட்சியாக இருந்தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கோயில் மேல்புறம் 20 ஆயிரம் பேர் வரை நிற்கலாம். ஆனாலும்  9000 அனுமதிச் சீட்டுகள்  மட்டுமே அச்சடிக்கப்பட்டுள்ளது. அதிலும் 2000 சீட்டுகள் மட்டுமே குலுக்கள் முறையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.  அதிலும் அவர்கள் அந்த அனுமதிச் சீட்டைப் பெற்றுக் கொள்ள ஒரே ஒரு நாள் இடைவெளிதான் இருந்தது. அதனால் பதிவு செய்தவர்களில் பலரும் அதை  வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மற்ற அனுமதிச் சீட்டுகள் அனைத்தும் பத்தாயிரம் ரூபாய்க்கு பொதுவெளியில் விற்கப்பட்டுள்ளது. விஜய் படம் வெளியானால் பிளாக்கில் டிக்கெட் விற்பார்களே அதைப் போல!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கக் கூடிய மடாதிபதிகளுக்கே அனுமதிச் சீட்டுகள் கடைசி நேரத்தில் தரப்பட்டுள்ளது.மேலும் பலருக்கு தரப்படவே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சிறிய கிராமத்துக் கோயில்களில் கூட குடமுழுக்கு அன்று வந்திருப்பவர்கள் அனைவர் மீதும் குடமுழுக்கு புனித நீர் தெளிக்கப்படுவது வழக்கம். புனித நீரை தெளிக்காமல்  இருந்திருந்தால் கூட பரவாயில்லை. வெறும் தண்ணீரை  எடுத்து வந்து தெளித்ததால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்கள். ‘குடமுழுக்கு ஏன் நடத்துகிறீர்கள்? பக்தர்களை எதற்காக ஏமாற்றுகிறீர்கள்?’ என பொதுமக்கள் பொங்கினார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">எந்த ஒரு ஆலய திருவிழா என்றாலும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் ஆலயத்தின் வெளியே உள்ள பணிகளை எடுத்துக் கொள்ளும். கோயிலின் உள்ளே உள்ள பணிகளை அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர் குழுவினர் தலைமையில் உபயதாரர்கள் தீவிர பக்தர்கள் பேரவை என பல்வேறு அமைப்பினர் கருத்துகளை கோரிக்கைகளை ஒருங்கிணைந்து அதனை முன் நடக்கக்கூடிய கூட்டங்களில் கலந்துஆலோசித்து அதன்படி மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தும்.  ஆனால் இவை எதுவும் நடக்கவில்லை. எந்தவிதமான ஆலோசனைகளும் நடத்தப்படவில்லை. அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பக்தர்கள், அலுவலர்கள் ஆகியோரிடம் ஆலோசனை செய்யப்படவில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கோயில் அன்னதானம் குடமுழுக்கு அன்று 2000 பேருக்கு மட்டுமே நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானவர்கள் வந்த இடத்தில் இவை எப்படி போதுமானதாக இருக்கும்? பொதுமக்கள் ஆங்காங்கே அன்னதானம் வழங்குவதற்கும் உணவு பாதுகாப்பு துறை கட்டுப்பாடு விதித்தது. இதன் காரணமாக அதிக அளவில் வழங்குவது தடைப்பட்டது. பலரும் உணவு கிடைக்காமல் திண்டாடினார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கோயிலில் நடைபெறக்கூடிய அன்னதானம் நடைபெறக்கூடிய இடம் 250 பேர் மட்டுமே ஒரு நேரத்தில் சாப்பிட முடியும். ஆயிரக்கணக்கானவர்கள் எப்படி அதில் அமர்ந்து சாப்பிட முடியும்? மாற்று இடங்களை ஏற்பாடு செய்திருக்க வேண்டாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவமதிக்கப்பட்டுள்ளார். ‘தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?’ என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி கேட்டுள்ளார். பக்தர்கள் மொழியில் சொல்வதாக இருந்தால், ‘இது தான் நேரம், கிரகம், தலையெழுத்து’ ஆகும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">குடமுழுக்கு  நாள் அன்று மட்டுமின்றி முதல் நாளே அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் ஆதார் கார்டுகள் இருந்தால் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. அவர்களது உறவினர்கள் யாரும் மாடிகளில் இருந்து குடமுழுக்கு காணக் கூடாது மீறினால் வழக்கு பதிவு செய்யப்படும் என காவல்துறை மிரட்டல் விடுத்தது. இது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சித்திரைத் திருவிழாவை போன்று கூட்டம் கூடியது. குடமுழுக்கை தூரத்தில் இருந்தாவது பார்த்து விடலாம்  என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்தவர்கள் அனைவரும் துரத்தி அடிக்கப்பட்டார்கள்.  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி உள்ளே நுழைய முடியாமல் இரவிலேயே விரட்டி அடிக்கப்பட்டனர். நல்லவேளை, மதுரைக்கு உள்ளேயாவது அனுமதித்தார்களே?!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தற்குறிகள் கையில் ஆட்சி அதிகாரம் போனால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணமாக நடந்துள்ளது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">வயிறு எரியும் வகையில் ஒரு பெண் பக்தர் கோபத்தால் கொந்தளிக்கிறார். ‘மதுரை மக்களின் கோபமும் சாபமும் இந்த ஆட்சி ஒழியனும்’ என்று சாபம் இடுகிறார். கண்ணகி இட்ட சாபம் போல இருக்கிறது அது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. வீடியோவை நீக்கலாம். ஆனால் பக்தர்களின் மனதில் விழுந்துள்ள வடு மறையவே மறையாது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>