<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,306,493,1249" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 22 2026 03:40:19 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260922T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="22092026-CHN-09" position.sequence="09" ex-ref="22092026-CHN-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="17">ஜெம் வீர­மணி தொடர்­பான வழக்கை கைவி­ட­வில்லை! ‘‘மேல்­வி­சா­ரணை தொட­ரும்’’ என்­று­தான் குறிப்­பாணை தாக்­கல்! இடைத்­தேர்­த­லில்    </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="17"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="52">மக்­க­ளின் கவ­னத்தை திசை திருப்ப தவ­றான தக­வலைப் பரப்­பு­கி­றார் நிர்­மல் குமார்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="19">கழக சட்­டத் துறைச் செய­லா­ளர் என்.ஆர்.இளங்கோ கடும் கண்­ட­னம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="N.R_09_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சென்னை, செப்.22–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">கழக சட்­டத்­து­றைச் செய­லா­ளர் என்.ஆர்.இளங்கோ அளித்த பேட்டி வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இன்று சட்ட அமைச்­சர் நிர்­மல் குமார் அவர்­கள், ஜெம் கிரா­னைட் வீர­மணி அவர்­க­ளு­டைய போக்சோ வழக்­கைப் பற்றி, தன்­னு­டைய அர­சி­யல் சுய­லா­பத்­திற்­கா­க­வும், வரக்­கூ­டிய இடைத்­தேர்­தல்­க­ளில் அர­சி­யல் லாபம் தேடு­வ­தற்­கா­க­வும் தவ­றான கருத்­து­களை மக்­க­ளி­டையே பரப்­பி­ய­தால், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சட்­டத்­து­றை­யின் சார்­பில் இந்த விளக்­கத்தை அளிக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தொடர்ச்­சி­யாக, நிர்­மல் குமார் அவர்­கள் தான் சட்ட அமைச்­சர் என்­பதை மறந்து, மக்­க­ளுக்­கா­கப் பணி­யாற்ற வேண்­டிய பணியை மறந்து, மக்­க­ளுக்கு உண்மை நில­வ­ரத்தை மட்­டுமே தர வேண்­டும் என்ற பொறுப்­பு­ணர்ச்­சியை மறந்து, அர­சி­யல் லாபங்­க­ளுக்­கா­க­வும், இடைத்­தேர்­த­லில் எப்­ப­டி­யா­வது மக்­கள் கவ­னத்­தைத் திசை­தி­ருப்­பு­வ­தற்­கா­க­வும் இது­போன்ற பேட்­டி­க­ளைத் தரு­வதை வழக்­க­மா­கக் கொண்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">குறிப்­பா­கச் சொல்­லப்­போ­னால், கழ­கத் தலை­வர் அவர்­க­ளைப் பற்றி, அவர் மிசா­வில் அனு­ப­வித்த கொடு­மை­கள் குறித்து மிக­வும் அவ­தூ­றான தக­வல்­க­ளைப் பதிவு செய்­தார். அதற்­காக மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர் திருச்சி சிவா அவர்­கள் ஏற்­க­னவே காவல்­து­றைத் தலை­வ­ரி­டம் ஒரு புகார் கொடுத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">முற்­றி­லும் தவ­றான கருத்து!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இன்­றைக்கு ஜெம் கிரா­னைட் வீர­மணி அவர்­கள் மீது பதி­யப்­பட்­டுள்ள போக்சோ வழக்கை குறித்து, அது ஏதோ திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில் நீர்த்­துப்­போ­கச் செய்­த­தாக ஒரு கருத்­தைப் பரப்­பி­யி­ருக்­கி­றார். அது முற்­றி­லும் தவ­றான கருத்­தா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ஏனென்று சொன்­னால், 7.10.2025-ல் பதிவு செய்­யப்­பட்ட அந்த வழக்கு அப்­போது காவல்­து­றை­யி­ன­ரால் விசா­ரிக்­கப்­பட்டு, வீடு­கள் சோத­னை­யி­டப்­பட்டு, கிடைத்­தி­ருந்த ஆதா­ரங்­களை வைத்து மேல்­வி­சா­ரணை செய்து, உரிய ஆதா­ரங்­கள் கிடைக்­கா­த­தால், நீதி­மன்­றத்­தில் இது­வரை செய்த புலன் விசா­ர­ணை­யில் உரிய ஆதா­ரங்­கள் கிடைக்­க­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது. இந்த வழக்கை நாங்­கள் கைவி­ட­வில்லை. உரிய ஆதா­ரங்­க­ளைத் திரட்­டும் வரை இந்த வழக்­கி­னு­டைய மேல்­வி­சா­ர­ணை­யைத் தள்ளி வைத்­தி­ருக்­கி­றோம் என்­று­தான் குறிப்­பிட்டு, போக்சோ நீதி­மன்­றத்­தில் குறிப்­பாணை தாக்­கல் செய்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அது­வும் கூட, அப்­போது இருந்த டைரக்­டர் ஆஃப் பப்­ளிக் பிரா­சி­கி­யூ­ஷன், அடி­ஷ­னல் டைரக்­டர் ஆஃப் பப்­ளிக் பிரா­சி­கி­யூ­ஷன் ஆகி­யோ­ரு­டைய கருத்­து­ரு­வின் அடிப்­ப­டை­யில் அது தாக்­கல் செய்­யப்­பட்­டது. எனவே, திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில் அந்த வழக்­கின் புலன் விசா­ரணை கைவி­டப்­ப­ட­வில்லை. மேல்­வி­சா­ரணை தொட­ரும் என்­று­தான் குறிப்­பாணை தாக்­கல் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. இதை மறைத்து, அவ­தூ­றான கருத்­து­களை சட்ட அமைச்­சர் பரப்பி வரு­கி­றார். குறிப்­பா­கச் சொல்­லப்­போ­னால், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய நிலைப்­பாடு என்­ன­வென்­றால், குற்­றம் புரி­ப­வர்­கள் யாராக இருந்­தா­லும், குறிப்­பாக பாலி­யல் வன்­மு­றை­க­ளில் ஈடு­ப­டு­ப­வர்­கள் யாராக இருந்­தா­லும், உரிய தண்­டனை கொடுக்­கப்­பட வேண்­டும் என்­ப­தில் நாங்­கள் உறு­தி­யாக இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இது­போன்ற வழக்­கு­க­ளில் ஆதா­ர­மற்ற செய்­தி­க­ளைப் பரப்­பு­வதே, திரு. நிர்­மல் குமார் அவர்­கள் எப்­ப­டி­யா­வது குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர்­க­ளைக் காப்­பாற்­றி­வி­ட­லாமா என்ற எண்­ணத்­தோடு பேசு­வ­தா­கத்­தான் தெரி­கி­றது. ஏனென்று சொன்­னால், இல்­லாத அர­சி­யல் அழுத்­தங்­களை இருப்­ப­தா­கச் சொன்­னால், பாதிக்­கப்­பட்ட அந்த நபர்­கள், இந்த வழக்­கில் ஏதோ மிகப்­பெ­ரிய பிரச்­சனை இருப்­பது போல் இருக்­கி­றது என்று கருதி, அவர்­கள் சாட்­சி­யம் அளிக்­கா­மல் அதி­லி­ருந்து வில­கிச் செல்­வ­தற்­கா­கவே, திரு. நிர்­மல் குமார் அவர்­கள் குற்­றம் சாட்­டப்­பட்ட நபர்­க­ளைக் காப்­பாற்­று­வ­தற்­கா­கவே இந்த அறிக்­கையை வெளி­யி­டு­வ­தாக நாங்­கள் நம்­பு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அது­மட்­டு­மல்ல, தமி­ழக வெற்­றிக் கழ­கம் ஆட்­சிக்கு வந்­த­தி­லி­ருந்து, ஒரு நாளைக்கு இரண்டு பாலி­யல் குற்­றங்­க­ளா­வது புகார்­க­ளாக அளிக்­கப்­பட்டு வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சொல்­லப்­போ­னால், என் கையில் இருக்­கும் பட்­டி­ய­லில் தமி­ழக வெற்­றிக் கழக ஆட்­சி­யில் நடந்­தி­ருக்­கக்­கூ­டிய பாலி­யல் குற்­றங்­க­ளைப் பற்றி சொன்­னால், அதற்கு ஒரு நாள் கூடப் போதாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">குற்­ற­வா­ளி­களை காப்­பாற்­றும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">நோக்­கில் சட்ட அமைச்­சர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ஆட்­சிக்கு வந்த 150 நாட்­க­ளில் இது­வரை 219 பாலி­யல் குற்­றங்­கள் அரங்­கே­றி­யி­ருக்­கின்­றன. வேறு யாரோ அல்ல; தமி­ழக வெற்­றிக் கழ­கத்­தி­னு­டைய பொறுப்­பா­ளர்­கள் அவர்­களே பாலி­யல் குற்­றங்­க­ளில் ஈடு­பட்டு கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சொல்­லப்­போ­னால், ஒரே ஒரு நாளில் மட்­டும், 15-ஆம் தேதி ஜூன் 2026-ல் மட்­டும்,ஏறக்­கு­றைய ஐந்து இடங்­க­ளில் சிறு­மி­கள் பாலி­யல் தொல்­லைக்கு ஆளாக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள்; பாலி­யல் குற்­றங்­க­ளுக்கு ஆளாக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இதைப் பற்­றி­யெல்­லாம் கவ­லைப்­ப­டா­மல், சட்­டம்-­ஒ­ழுங்­கைப் பற்றி கவ­லைப்­ப­டா­மல், அர­சி­யல் லாபத்­திற்­காக குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர்­க­ளைக் காப்­பாற்­றும் நோக்­கத்­தில் மட்­டுமே சட்ட அமைச்­சர் இது­போன்ற பேட்­டி­களை அளித்து வரு­கி­றார். சட்ட அமைச்­சர் தன்­னு­டைய பொறுப்பை உணர்ந்து கொண்டு பேச வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">போக்சோ போன்ற சிறப்பு வழக்­கு­கள் மிகக் கடு­மை­யா­கத் தண்­டிக்­கப்­பட வேண்­டி­யவை. அவற்­றில் இந்­தக் குற்­றங்­கள் பற்றி பொது­வெ­ளி­யில் பேசி, அந்­தக் குற்­றங்­களை நீர்த்­துப்­போ­கச் செய்­வது என்­பது சட்­டம்-­ஒ­ழுங்­குக்கு நல்­ல­தல்ல. இது­போன்று திசை­தி­ருப்­பும் வேலை­கள் அந்த வழக்கைநீர்த்­துப்­போ­கச் செய்­யும். அது கூடத் தெரி­யா­மல் இருக்­கி­றார் ஒரு சட்டஅமைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மேலும், சட்ட அமைச்­சர் தான் சட்­டத்­திற்கு அப்­பாற்­பட்­ட­வர் என்று நினைத்­துக்­கொண்டு பேசு­கி­றார். அவ­தூறு செய்­தால், அவ­தூறு பரப்­பி­னால், அவ­ரும் அவ­தூறு செய்த குற்­றத்­திற்கு உட்­பட்­ட­வர்­தான். அதற்­கான உரிய நட­வ­டிக்­கையை திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தொட­ரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">நான் இது­வரை சொன்­ன­தில், குறைந்­த­பட்­சம் மூன்று சிறு­மி­க­ளா­வது பாலி­யல் வன்­பு­ணர்­வுக்கு ஆளாக்­கப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். அந்த வழக்­கு­க­ளில் உரிய நட­வ­டிக்கை எடுக்­காத தமி­ழக வெற்­றிக் கழக அரசு, இல்­லாத கூற்­று­க­ளைச் சொல்லி வழக்கை நீர்த்­துப்­போ­கச் செய்­வது உண்­மை­யி­லேயே கண்­ட­னத்­துக்­கு­ரி­யது. தமி­ழ­கத்­தின் நல­னுக்கு உகந்­த­தல்ல என்­ப­தால் கவ­லைக்­கு­ரி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்­தப் போக்கை தமி­ழக அமைச்­ச­ர­வை­யில் இடம்­பெற்­றி­ருக்­கிற அனை­வ­ரும் கைவிட வேண்­டும் என்­பதை நாங்­கள் அழுத்­த­மா­கப் பதிவு செய்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">ஆதா­ரத்­தோடு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">நிரூ­பிக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இப்­ப­டியே மீறிச் சென்­றால், வெறு­மனே அவ­தூறு வழக்கு மட்­டு­மல்­லா­மல், போக்சோ வழக்­கைத் திசை­தி­ருப்­பி­ய­தற்­கா­க­வும், குற்­ற­வா­ளி­க­ளைத் தப்­ப­வைப்­ப­தற்கு ஒரு வழி­யாக இருந்­த­தற்­கா­க­வும், அதற்­குக் கார­ண­மாக இருந்­த­தற்­கா­க­வும், உரிய பிரி­வு­க­ளில் அவர்­கள் மீது வழக்கு தாக்­கல் செய்­வோம் என்­ப­தைத் தெரி­வித்­துக் கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்த வழக்கு விவ­கா­ரத்­தில் அதி­கா­ரி­க­ளுக்கு பணம் வழங்­கப்­பட்­டி­ருந்­தால், அது ஊழல் தடுப்­புச் சட்­டத்­தின் கீழ் வரும். அவர்­க­ளி­டம் உரிய ஆதா­ரங்­கள் இருந்­தால், அவர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­து­டன் தொடர்பு இருக்­கி­றது என்­பதை அவர் ஆதா­ரத்­தோடு நிரூ­பிக்க வேண்­டும். அப்­படி நிரூ­பிக்­க­வில்லை என்­றால், அவர் பொது­வெ­ளி­யில் மன்­னிப்பு கேட்க வேண்­டும். மன்­னிப்பு கேட்­க­வில்லை என்­றால், அவர் மீது உரிய வழக்­கைத் தொட­ரு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">கேள்வி: முன்­னாள் முத­ல­மைச்­சர், தி.மு.க. தலை­வர் சந்­தித்­தது குறித்து...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">பதில்: நீங்­கள்அரசு ஆவ­ணங்­க­ளில் பார்த்­தால், கொரோனா கால­கட்­டத்­தில் முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் பொது நிவா­ரண நிதிக்கு அனைத்து தொழில் புரி­வோ­ரும், தொழில் முனை­வோ­ரும், சாதா­ரண மக்­க­ளும் பணம் வழங்­கி­னார்­கள். அது­போன்று, ஒரு நாள் கொரோனா நிவா­ரண நிதி­யாக திரு. வீர­மணி அவர்­கள் பணம் கொடுத்­தி­ருக்­கி­றார் என்­பதை அறி­கி­றோம். அதைத் தவிர்த்து, வேறு எந்­தக் கார­ணத்­தைக் கொண்­டும் அவர் எங்­கள் கழ­கத் தலை­வ­ரைச் சந்­திக்­க­வில்லை என்­பதை நாங்­கள் உறு­தி­யா­கச் சொல்­லிக் கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இது­போன்ற மோச­மான குற்­றங்­க ளை கடு­மை­யாக விசா­ரிப்­பதை வர­வேற்­கி­றோம். அதில் மாற்­றுக் கருத்து இல்லை. ஆனால், அதைத் திசை­தி­ருப்­பும் வித­மா­கப் பேட்­டி­கள் அளிப்­ப­தைத்­தான், பொறுப்­புள்ள அமைச்­சர்­களே பேசு­வ­தைத்­தான் கண்­டிக்­கி­றோம். அது கண்­ட­னத்­திற்­கு­ரி­யது; தண்­ட­னைக்­கு­ரி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு என்.ஆர்.இளங்கோ தனது பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>