<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,373,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Sep 21 2026 16:27:58 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260922T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="22092026-MDU-02" position.sequence="02" ex-ref="22092026-MDU-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#8e3800" boxBorderWeight="1.97960263559774">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="58">பட்டினப்பாக்கம் மீனவர் எதிர்ப்பு!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup880512_02_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">உ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ருப்­ப­டி­யா­கச் செய்ய வேண்­டிய எதை­யும் முத­ல­மைச்­சர் விஜய் செய்­ய­வில்லை. ஒரு புதிய ஆட்சி வந்­தால், மக்­க­ளுக்­குக் கொடுத்த வாக்­கு­று­தி­களை படிப்­ப­டி­யாக நிறை­வேற்ற வேண்­டும். அதைச் செய்­ய­வில்லை. அறி­விக்­கப்­பட்ட ஓரிரு திட்­டங்­க­ளும் அரை­கு­றை­யா­கச் செய்து தரப்­பட்­டுள்­ளன. அல்­லது கடந்த ஆட்சி செய்த திட்­டங்­க­ளைத்  தொடர வேண்­டும். அதை­யும் செய்­ய­வில்லை விஜய். பல திட்­டங்­களை முடக்­கி­விட்­டார். பல திட்­டங்­க­ளுக்கு 
ஸ்டிக்­கர் ஒட்டி பெயரை மாற்­றி­விட்­டார். இது­தான் விஜய் செய்­தி­ருப்­பது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">அவ­ருக்கோ அவ­ரது அமைச்­சர்­க­ளுக்கோ கன­வு­கள் இல்லை. சிந்­த­னைத் திறன் இல்லை. தொலை நோக்­குப் பார்வை இல்லை. மொத்­தத்­தில் ஆட்சி 
அதி­காரத்தை வைத்து என்ன செய்­வது என்று தெரி­ய­வில்லை. ஆனால் கெட்ட எண்­ணங்­கள் மட்­டும் நிறைய இருக்­கின்­றன. அவ­தூ­று­கள் மூல­மாக ஆட்சி 
நடத்­து­வது போலக் காட்­டிக் கொள்ள நினைக்­கி­றார். தி.மு.க. மீது பழி­போட்டு தனது ஆட்­சியை நகர்த்­தப் பார்க்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஊரான் வீட்டு நெய்­யில் தனக்கு ஸ்வீட் செய்து கொண்டு இருக்­கி­றார். நடி­கர் அஜித்­கு­மா­ரின் கார் ரேஸ் தொடங்கி வைக்க சொந்­தச் செல­வில் போக­வேண்­டி­ய­வர் அர­சாங்க காசில் லண்­டன் சென்று வந்­துள்­ளார். தலை­மைச் செய­ல­கத்­தில் காலம் கால­மாக இது­வரை ஆண்ட அனைத்து முத­ல­மைச்­சர்­க­ளும்  இருந்த அறையை, நாமக்­கல் கவி­ஞர் மாளி­கைக்கு மாற்றி 6 கோடி ரூபா­யைச் செலவு செய்­தார். மேட்­டூர் அணைத்  தண்­ணீ­ரைத்  திறந்து வைக்க சேலம் சென்ற ஒரு மணி நேரத்­துக்கு 5 கோடி ரூபாய் பாது­காப்­புச் செல­வாம். இத்­த­கைய சூழ­லில் 1200 கோடி ரூபாய் மதிப்­பில் புதிய தலை­மைச் செய­ல­கம் 
கட்­டப் போகி­றா­ராம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இந்­திய நாடா­ளு­மன்­றம் கட்­டவே 900 கோடி ரூபாய் தான் செலவு செய்­யப்­பட்­டுள்­ளது. இவர்­கள் 1200 கோடி ரூபா­யில் தலை­மைச் செய­ல­கம் கட்­டப் போகி­றார்­க­ளாம். ரூ.6 கோடி­யில் தனக்கு அறை கட்­டி­ய­தி­லேயே பல்­வேறு முறை­கே­டு­கள் நடந்­தன. ரூ.1200 கோடி­யில் கட்­டும்­போது ஆயி­ரக்­க­ணக்­கான முறை­கே­டு­கள் நடக்­கத்­தான் போகி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தலை­மைச் செய­ல­கம் கட்­டு­வ­தற்­கா­கத் தேர்வு செய்­துள்ள பட்­டி­னப்­பாக்­கம் என்­பது மீன­வர்­கள் காலம் கால­மாக வாழும் பூமி ஆகும். பட்­டி­னப்­பாக்­கத்­தில் புதி­தாக தலை­மைச் செய­ல­கம் கட்ட உள்ள பகு­திக்கு தெற்­கில் முள்­ளிக்­குப்­பம், சீனி­வா­ச­பு­ரம் ஆகிய மீனவ கிரா­மங்­கள் உள்­ளன. வடக்­குப் பகு­தி­யில் ராஜீவ் காந்தி நகர், பவானி குப்­பம், இரு­த­ய­பு­ரம், செல்­வ­ராஜ்­பு­ரம், டுமீங் குப்­பம், நொச்சி நகர், நொச்­சிக்­குப்­பம் ஆக மொத்­தம் 12 குடி­யி­ருப்­புப் பகு­தி­கள் 
இரு மருங்­கி­லும் ஒரு கிலோ மீட்­ட­ருக்கு உள்­ளா­கவே உள்­ளன. இங்கு வசிப்­பவர்­க­ளில் பெரும்­பா­லா­ன­வர்­கள் மீனவ மக்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இப்­ப­கு­தி­யில் தலை­மைச் செய­ல­கம் அமைக்­கக் கூடாது என்று முள்­ளிக்­குப்­பம் மீன­வர்­கள் பஞ்­சா­யத்து சபை கூடி கடு­மை­யான எதிர்ப்பை பதிவு செய்­துள்­ள­னர். விஜய் அர­சாங்­கத்­துக்கு எதி­ரா­கக் கடு­மை­யாக இவர்­கள் போராடி வரு­கி­றார்­கள். ‘சுறா படத்­தில் மீன­வ­ராக நடித்த விஜய், நிஜத்­தில் 
எங்­களை ஏமாற்றி விட்­டார்’ என்று கொந்­த­ளிக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">முள்­ளிக்­குப்­பம் பகு­தி­யில் 20 லட்­சம் சதுர அடி பரப்­ப­ள­வில் புதிய சட்­ட­மன்­றம், தலை­மைச் செய­ல­கக் கட்­டட வளா­கம் அமைக்­கும் திட்­டத்தை தமிழ்­நாடு அரசு உட­ன­டி­யா­கக் கைவிட வேண்­டும் என்­றும், இதற்­கான விரி­வான திட்ட அறிக்கை தயா­ரிப்­புக்கு நிதி ஒதுக்­கீடு செய்­யக் கூடாது என்­றும் தமிழ்­நாடு நிதித் துறைச் செய­லா­ள­ருக்கு கோரிக்கை மனு அளித்­துள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">வர­லாற்­றுப் பூர்­வ­மாக தங்­க­ளுக்கு இப்­ப­கு­தி­யில் வாழ்­விட உரிமை வழங்­கப்­பட்­டுள்­ளது என்­றும், அத­ன­டிப்­ப­டை­யில் தலை­முறை தலை­மு­றை­யாக வாழ்ந்து வரு­கி­றோம் என்­றும் மீன­வர்­கள் சொல்லி இருக்­கி­றார்­கள். இப்­பகுதியை கடற்­கரை மண்­டல மேலாண்­மைத் திட்­டத்­தின் கீழ் மீன­வர்­க­ளுக்­கான  நீண்ட காலக் குடி­யி­ருப்­புப் பகு­தி­யாக அறி­விக்க வேண்­டும் என்ற தங்­க­ளது கோரிக்கை நீண்ட கால­மாக அர­சின் பரி­சீ­ல­னை­யில் இருப்­ப­தா­க­வும் அவர்­கள் சுட்­டிக் காட்டி இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">“தலை­மைச் செய­ல­கம் அமைக்­கப்­பட்­டால் உரு­வாக்­கப்­ப­டும் அதி உயர் பாது­காப்பு வளை­யங்­கள், போக்­கு­வ­ரத்­துத்  தடை­கள், விழா நேரக் கட்­டுப்­பா­டு­க­ளால்  பாரம்­ப­ரிய சாலை­யோர மீன் விற்­பனை, வலை பரா­ம­ரிப்பு மற்­றும் அன்­றாட மீன்­பி­டித் தொழில் முற்­றி­லு­மாக முடங்­கும் அபா­யம் உள்­ளது” என்­றும் அவர்­கள் எச்­ச­ரித்­துள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஆயி­ரக்­க­ணக்­கான மீன­வர்­க­ளின் குடும்­பங்­கள் அங்­கி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்­தப்­ப­டு­வது தான் நடக்­கப் போகி­றது. மேலும், இது சட்­ட­மன்­றம், தலை­மைச் செய­ல­கம் கட்­டப்­ப­டு­வ­தற்கு சரி­யான இட­மும் அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">2004 ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் சுனா­மி­யில் அதி­கம் பாதிக்­கப்­பட்ட இடம் இது. சென்­னை­யில் மட்­டும் 206 பேர் மர­ணம் அடைந்­தார்­கள்.  சென்னை முதல் கன்­னி­யா­கு­மரி வரை கடற்­க­ரைப் பகு­தி­க­ளைச் சூறை­யா­டி­யது அந்­தச் சுனாமி. கடற்­க­ரை­யோ­ரப் பகு­தி­க­ளில் 10 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் மர­ணம் அடைந்­தார்­கள். இத்­த­கைய ஒரு கடற்­க­ரைப் பகு­தியை யாரா­வது தலை­மைச் செய­ல­கம் கட்­டத் தேர்வு செய்­வார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இதன் மூல­மாக மீன­வர்­களை அவர்­க­ளது வாழ்­வி­டங்­க­ளில் இருந்து அப்­பு­றப்­ப­டுத்த நினைக்­கி­றார் விஜய். அவ­ரது பல செயல்­பா­டு­கள் மர்­ம­மாக இருக்­கின்­றன.  சென்னை விமான நிலைய நிர்­வா­கத்தை தனி­யா­ருக்கு மாற்­றக் கோரி பிர­த­மர் மோடிக்கு, முத­ல­மைச்­சர்  விஜய் கடி­தம் எழுதி இருக்­கி­றார். கடந்த ஆகஸ்ட் மாதம் பிர­த­மர் மோடிக்கு  எழு­திய கடி­தத்தை ரக­சி­ய­மாக 
வைத்­துள்­ளது இந்த அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">விமான நிலை­யங்­களை எடுத்து பரா­ம­ரிக்­கும் தனி­யார் நிறு­வ­னங்­க­ளின் அதி­பர்­கள், விஜய்யை நேரில் வந்து சந்­தித்­துள்­ளார்­கள். இதற்­கும் பரந்­தூர் விமான நிலை­யத் திட்­டத்தை ரத்து செய்­த­தற்­கும் பின்­னணி உள்­ளது. விமான நிலை­யத்தை ரத்து செய்­து­விட்டு, அந்த இடத்தை வேறு பணி­க­ளுக்கு மடை­மாற்­றம் செய்ய விஜய் திட்­ட­மி­டு­கி­றார். அத்­த­கைய கெட்ட எண்­ணத்­தில்­தான் மீன­வர்­க­ளி­டம் இருந்­தும் நிலங்­கள் பறிக்­கப்­பட இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பட்­டி­னப்­பாக்­கத்­தில் தலை­மைச் செய­ல­கம் கட்­டு­வ­தால் மீனவ மக்­க­ளின் வாழ்­வா­தார உரி­மை­கள் பாதிக்­கப்­ப­டும். அவர்­க­ளது அன்­றாட வாழ்க்கை பாதிக்­கப்­ப­டும்.  கட­லோ­ரச் சூழ­லி­யல் பாதிப்பை அடை­யும்.  கால­நி­லைப் பாதிப்­பு­க­ளும் காலப்­போக்­கில் ஏற்­ப­டும்.  பொது­மக்­க­ளுக்­கும்  கட­லுக்­கும் கடற்­க­ரைக்­கு­மான உறவு பாதிக்­கப்­ப­டும். 1200 கோடி ரூபாய் செலவு செய்து கட்­ட­டம் கட்ட பாது­காப்­பான இட­மும் அது அல்ல. அரசு ஊழி­யர்­கள் அச்­ச­மற்ற நிலை­யில் அங்கு பணி புரி­ய­வும் முடி­யாது. எனவே பட்­டி­னப்­பாக்­கத்­தில் தலை­மைச் செய­ல­கம் அமைப்­பது அனைத்து வகை­யி­லும் பாத­க­மான முடிவே ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>