<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,121,958,1039" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 22 2026 03:44:37 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260922T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="22092026-MDU-05" position.sequence="05" ex-ref="22092026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="127">திட்டமிட்டு உழைத்து வெற்றியை நிலை நாட்டுவோம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து கழக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="36">எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுச்சி உரை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame888920_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup889972_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup889973_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="maduranthagamM_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மது­ராந்­த­கம், செப்.22–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்­ட­மன்­றத் தொகுதி இடைத்­தேர்­த­லில் 
மக்­க­ளோடு மக்­க­ளாய் களத்­தில் நின்று, திட்­ட­மிட்டு உழைத்து, வெற்­றியை நிலை நாட்­டு­வோம்! என்று  மது­ராந்­த­கம் தொகுதி இடைத்­தேர்­தல் பணி­கள் குறித்து கழக இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றுகையில், கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் குறிப்பிட்டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் 
எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி 
ஸ்டாலின் அவர்­கள் ஆற்­றிய உரை வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மது­ராந்­த­கம் இடைத்­தேர்­தல்… இந்­தச் சட்­ட­மன்­றத் தொகு­தி­யின் கழக நிர்­வா­கி­கள்  மற்­றும் இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் உங்­கள் அனை­வ­ரை­யும் ஒரே இடத்­தில் சந்­திப்­ப­தில் மிகுந்த மகிழ்ச்சி அடை­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">10 ஆண்­டு­க­ளுக்கு முன் திறந்த</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அதே அரங்­கத்­தில் சந்­திக்­கி­றேன்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­நி­கழ்ச்­சி­யில் கழ­கத்­தின் கிளைச் செய­லா­ளர்­கள் அனை­வ­ரும் கலந்து கொண்­டி­ருக்­கி­றீர்­கள். அதே­போல இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் அனை­வ­ரும் வந்­தி­ருக்­கி­றீர்­கள். இந்த அரங்­கத்­தைப் பத்து வரு­டங்­க­ளுக்கு முன்பு திறந்து வைத்­தது நான்­தான் என்று இங்கு வந்­த­வு­டனே எனக்­குச் சொன்­னார்­கள். அதே அரங்­கத்­தில், நம் இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள், கழக நிர்­வா­கி­கள் கிட்­டத்­தட்ட 1,500 பேரை ஒரே இடத்­தில் சந்­திப்­பது எனக்­குக் கூடு­தல் மகிழ்ச்­சி­யைத் தரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாம் அனை­வ­ரும் பல­முறை சந்­தித்­தி­ருக்­கி­றோம். உங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் நான் தனித்­த­னி­யா­கச் சந்­தித்­தி­ருக்­கி­றேன், குழு­வா­கச் சந்­தித்­தி­ருக்­கி­றோம், புகைப்­ப­டம் எடுத்­தி­ருக்­கி­றோம். ஆனால், இன்­றைக்கு ஒரு வித்­தி­யா­ச­மான சூழ்­நி­லை­யில், மிக முக்­கி­ய­மான ஒரு சூழ்­நி­லை­யில் நாம் இங்கு கூடி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வரு­கின்ற 6–ஆம் தேதி மது­ராந்­த­கம் சட்­ட­மன்­றத்­திற்­கான இடைத்­தேர்­தல் நடை­பெற இருக்­கி­றது. அந்த இடைத்­தேர்­த­லில் நிச்­ச­யம் நாம் வெற்றி பெற வேண்­டும், வெற்றி பெறப் போவது உறுதி என்­ப­தைச் சொல்­கின்ற வகை­யில் எழுச்­சி­யோடு இங்கு கூடி­யி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதற்­கா­கத்­தான் நம் வெற்றி வேட்­பா­ளர் திரு.பரந்­தா­மன் அவர்­களை, நம் தலை­வர் அவர்­கள் உங்­க­ளி­டத்­தில் ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றார்­கள். உங்­கள் மீது இருக்­கின்ற தைரி­யத்­தில், தலை­வர் அவர்­கள் உங்­க­ளி­டத்­தில்  பரந்­தா­மன் அவர்­களை ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றார்­கள். எப்­ப­டி­யும் நீங்­கள் நிச்­ச­யம் வெற்­றி­யைத் தேடித் தரு­வீர்­கள் என்ற நம்­பிக்­கை­யோடு, நானும் நம் கழ­கத்­தின் அனைத்து மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­க­ளும், நிர்­வா­கி­க­ளும் இங்கு அனை­வ­ரும் ஒன்­றாக அந்த உணர்­வோடு கூடி­யி­ருக்­கி ­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அடுத்த 16 நாட்­கள் களப்­பணி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மிக­வும் முக்­கி­ய­மான தரு­ணத்­தில் தலை­வர் அவர்­கள் என்னை இங்கு அனுப்பி வைத்­தி­ருக்­கி­றார்­கள். தேர்­த­லுக்கு இன்­னும் சரி­யாக 16 நாட்­கள் இருக்­கின்­றன. வெற்றி என்­பது சுல­பம் கிடை­யாது. வெற்றி என்­பது உறுதி, ஆனால், எப்­படி அது உறு­தி­யா­கும் என்­றால், அடுத்த 16 நாட்­கள் நாம் அனை­வ­ரும் என்ன களப்­பணி செய்­யப் போகி­றோம் என்­ப­தைப் பொறுத்து, அந்த வெற்றி நிச்­ச­யம் உறு­தி­யாக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­லில் சற்­றுப் பின்­னோக்­கிப் பாருங்­கள். எதற்­காக இந்த இடைத்­தேர்­தல் வந்­தது? இது சாதா­ர­ண­மாக வந்த இடைத்­தேர்­தலா? இது இயல்­பாக நடந்த, நடக்­கக்­கூ­டிய ஒரு இடைத்­தேர்­தலா? இல்லை. இது ஒரு திணிக்­கப்­பட்ட தேர்­தல். ஆளுங்­கட்­சி­யின் குதி­ரை­பேர அர­சி­ய­லால், இங்கே ஏற்­க­னவே வெற்றி பெற்ற வேட்­பா­ளர் ஆளுங்­கட்­சி­யி­டம் விலை போன கார­ணத்­தி­னால், இன்­றைக்கு மது­ராந்­த­கத்­தில் இந்த ஒரு இடைத்­தேர்­தல், மது­ராந்­த­கத்­தில் மட்­டும் கிடை­யாது, இனி தாரா­பு­ரத்­தி­லும் சேர்த்து இந்த இடைத்­தேர்­தல் உங்­கள் மீது, நம் மீது, இந்த மக்­கள் மீது திணிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கடந்த ஏப்­ரல் 24–ஆம் தேதி, தமிழ்­நாடு முழு­வ­தும் தேர்­தல் நடந்­தது. மே 4–ஆம் தேதி அன்று வாக்கு எண்­ணிக்கை நடை­பெற்­றது. தேர்­த­லில், இந்த ஆளுங்­கட்சி, இங்கு இருக்­கக்­கூ­டிய ஆளுங்­கட்சி பெரும்­பான்­மைக்கு 118 இடங்­களை வெல்ல வேண்­டும். வென்­றார்­களா? வெற்றி பெற­வில்லை. வெறும் 107 இடங்­க­ளில் வென்­றார்­கள். அறு­திப் பெரும்­பான்­மை­யோடு இந்த ஆட்சி அமைந்­தி­ருக்­கி­றதா என்று கேட்­டால் கிடை­யாது. இன்­னும் சொல்­லப்­போ­னால் நமக்­கும் இங்கு அமைந்­தி­ருக்­கக்­கூ­டிய ஆளுங்­கட்­சிக்­கும் வாக்கு வித்­தி­யா­சம் பார்த்­தால் வெறும் 17 லட்­சம் வாக்­கு­கள் வித்­தி­யா­சம்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­னும் வெளிப்­ப­டை­யா­கச் சொல்ல வேண்­டும் என்­றால், நம் முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞ­ரு­டைய உடன்­பி­றப்­பு­க­ளின் உழைப்­பால், நம் தலை­வர் பெய­ரைச் சொல்லி, திரா­விட மாடல் ஆட்­சி­யின் சாத­னை­களை எல்­லாம் சொல்லி, மக்­க­ளி­டத்­தில் சென்று வாக்கு பெற்று வெற்றி பெற்ற அந்­தச் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் உத­வி­யால்­தான் இன்­றைக்கு இந்த ஆட்சி நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது. இன்­னும் சொல்­லப்­போ­னால் நம் தய­வில்­தான் இன்­றைக்கு இந்த ஆட்சி நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">எப்­படி இந்த `சோஃபா மாடல்’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ஆட்சி அமைந்­தது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மோடு கூட்­டணி அமைத்­த­வர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரா­கச் சென்­றார்­கள். நம்­மி­டம் என்ன சொல்­லி­விட்­டுச் சென்­றார்­கள், மக்­க­ளி­டத்­தில் என்ன சொல்­லி­விட்­டுச் சென்­றார்­கள்? குடி­ய­ர­சுத் தலை­வர் ஆட்சி அமைந்­து­வி­டக் கூடாது, குடி­ய­ர­சுத் தலை­வர் ஆட்சி அமை­வ­தன் மூல­மாக ஆளு­ந­ரின் ஆட்சி இங்கு வந்­து­வி­டக் கூடாது என்று நம் தலை­வ­ரி­டம் சொல்­லி­விட்­டுச் சென்­றார்­கள். சிலர் சொல்­லிக் கொள்­ளா­மல் ஓடிப் போய்­விட்­டார்­கள்; ஒரே இர­வில், திருட்­டு­த­ன­மாக. நான் யாரைச் சொல்­கி­றேன் என்­பது உங்­க­ளுக்­குத் தெரி­யும். இன்­றைக்கு அவர்­க­ளின் நிலைமை என்­ன­வென்று உங்­க­ளுக்­குத் தெரி­யும். ஏனெ­னில் இவர் நேர­டி­யா­கப் பிர­தம 
மந்­திரி பதவி வேட்­பா­ள­ருக்கே சென்­று­விட்­டார். திரும்­பச் சேர்த்­தால் நீங்­களா விட்­டு­வி­டு­வீர்­களா? எப்­படி இந்த ஆட்சி அமைந்­தது? அன்று அனைத்­தும் தொலைக்­காட்­சி­யில் நேர­லை­யாக வந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அன்­றைக்கு நாம் சொன்­னோம் அல்­லவா, சோஃபா மாடல் அரசு என்று. இப்­போது சோஃபா மாடல் ஆட்சி என்று எல்­லா­ருமே சொல்­கி­றார்­கள். இன்­றைக்கு அந்­தக் கட்­சித் தலை­வர்­களே சொல்­கி­றார்­கள்; நம்­மோடு கூட்­டணி வைத்­தி­ருந்­தார்­களே அந்­தத் தலை­வரே சொல்­கி­றார், ஏன், சோஃபா மாடல் அரசு என்று சொல்­கி­றார்­கள் என்று எனக்­குத் தெரி­ய­வில்லை என்று. ஒரு சோஃபா வந்­தது, நாங்­கள் முன்­னரே பதிவு செய்­தி­ருந்­தோம். அது எப்­ப­டிச் சரி­யாக வாக்கு எண்­ணிக்கை முடிந்து முத­ல­மைச்­சர் வரு­வ­தற்­குப் பத்து நிமி­டங்­கள் முன்பு வந்­தது அந்த சோஃபா? எல்­லாக் கட்சி அலு­வ­ல­கங்­க­ளுக்­கும் பார்த்­தால், ஒரே மாதி­ரி­யான சோஃபா. எல்­லோ­ரும் ஒரே இடத்­தில் வாங்­கி­யி­ருக்­கி­றார்­கள் போலும். ஒரே நிறு­வ­னம். அள­வு­கள் வேறாக இருக்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சில­ருக்கு மூன்று இருக்­கை­கள், சில­ருக்கு ஐந்து இருக்­கை­கள், சில­ருக்கு ஒற்றை இருக்கை. பாவம், சில­ருக்கு சோஃபா போக­வில்லை. அது என்ன ரக­சி­யம் என்று நமக்­குத் தெரி­யாது. ஏனெ­னில், அந்­தச் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் ‘நாங்­கள் தி.மு.க.வுடன்­தான் இருக்­கி­றோம்’ என்று சொல்­லி­விட்­டார்­கள். அந்த எரிச்­ச­லில் சிலர், இன்­றைக்­குக் கூச்­ச­லிட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது யார் என்று தெரி­யும், உங்­க­ளுக்­கும் தெரி­யும். இப்­படி ஒவ்­வொரு கட்சி அலு­வ­ல­கத்­துக்­கும் சோஃபா அனுப்பி, இப்­போது இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர் அவர்­கள் தேர்­தல் பிரச்­சா­ரத்­துக்­குக்­கூட அந்த அளவு வீட்டை விட்டு வெளியே வர­வில்லை. ஆனால், தின­மும் மாலை­யா­னால் சென்று ஆளு­நர் மாளி­கை­யைப் பார்த்­துக் கொண்டே இருந்­தார். வீட்டை விட்டு நாள்­தோ­றும் வெளியே வந்­தார், பிரச்­சா­ரத்­து
க்­குக்­கூட அவர் அவ்­வ­ளவு செல்­ல­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தீர்ந்­து­போன சக்­தி–`­காஞ்­சி ­போன சக்தி’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மே 10–ஆம் தேதி அவர் முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்­றுக் கொண்­டார். அதன் பிறகு, மே 13–ஆம் தேதி சட்­ட­மன்­றத்­தில் நம்­பிக்கை வாக்­கெ­டுப்பு நடந்­தது. ஆனால், அதற்கு முன்­னரே தெரிந்­து­விட்­டது, அ.தி.மு.க.வை கிட்­டத்­தட்ட இரண்­டா­கப் பிளந்து அதில் ஒரு குழு அவர்­க­ளுக்கு ஆத­ரவு அளிக்­கப் போவ­தாக முடி­வெ­டுத்­து­விட்­டார்­கள். அவர்­க­ளுக்கு அமைச்­சர் பதவி தரு­கி­றோம், இன்­னும் பெரிய சோஃபா அனுப்­பு­கி­றோம் என்று பொய் வாக்­கு­று­தி­கள் எல்­லாம் கொடுத்­தி­ருந்­த­னர். அதே­போல நம் 
கூட்­ட­ணிக் கட்­சி­கள் என்­னென்ன கார­ணங்­கள் எல்­லாம் சொன்­னார்­களோ அவற்­றை­யெல்­லாம் சொல்லி, அ.தி.மு.க.வை கிட்­டத்­தட்ட பிள­வு­ப­டுத்தி 25 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் அவர்­க­ளுக்கு ஆத­ரவு அளித்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­பிக்கை வாக்­கெ­டுப்பு நடக்­கும்­போது இதை நான் சட்­ட­மன்­றத்­தில் பேசி­னேன். எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக நான் பேசி­னேன், இத­னைப் பதிவு செய்­தி­ருக்­கி­றேன். எப்­படி இருந்­தா­லும் நீங்­கள் ஆட்­சிக்கு வந்­து­வி­டு­வீர்­கள், உங்­க­ளி­டத்­தில் அறு­திப் பெரும்­பான்மை கிடை­யாது. எங்­க­ளு­டைய கூட்­ட­ணிக் கட்­சி­க­ளால்­தான் நீங்­கள் இன்­றைக்கு ஆட்சி அமைத்­தி­ருக்­கி­றீர்­கள். அது­மட்­டு­மல்ல, எங்­க­ளைப் பார்த்­துத் `தீய சக்தி’ என்று சொன்­னீர்­கள், அவர்­க­ளைப் பார்த்து,`தீர்ந்­து­போன சக்தி’ என்று சொன்­னீர்­கள். இன்­றைக்­குத் தீர்ந்­து­போன சக்­தி­யி­ட­மி­ருந்து பிரித்து அவர்­க­ளைத் திருடி வரு­கின்ற அள­விற்கு `காஞ்­சி­போன சக்­தி’­யாக நீங்­கள் இருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அ.தி.மு.க–வை இரண்­டா­கப் பிளந்­து­விட்­டீர்­கள், அவர்­க­ளில் சிலர், உங்­க­ளுக்கு வாக்­க­ளிக்­கப் போகி­றார்­கள், அதை­யும் இன்­றைக்கு இந்த நாடு பார்க்­கத்­தான் போகி­றது. அத­னால் இந்­தக் கொடு­மை­களை எல்­லாம்பார்க்க, நாங்­கள் உள்ளே இருக்­கப் போவ­தில்லை, திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் வெளி­ந­டப்பு செய்­யும் என்று கூறி, நாங்­கள் வெளி­ந­டப்பு செய்­தோம். அதன் பிறகு நம்­பிக்கை வாக்­கெ­டுப்­பில் வெற்றி பெற்­று­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அ.தி.மு.க–வின் பொதுச்­செ­ய­லா­ளர் அவர்­க­ளைக் கட்­சியை விட்டு நீக்­கி­னார். கொறடா என்ன சொல்­கி­றாரோ, அதைத்­தான் கேட்க வேண்­டும், அதை மீறித்­தான் வாக்­க­ளித்­தார்­கள். அத­னால்­தான் இன்­றைக்கு இந்த ஆட்சி நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது. அதன் பிறகு சட்­டப் போராட்­டங்­கள் நடக்­கின்­றன, இன்­றைக்கு அனை­வ­ரும் ‘மீண்­டும் எங்­களை எப்­ப­டி­யா­வது கட்­சி­யில் சேர்த்­துக் கொள்­ளுங்­கள், தெரி­யா­மல் வாக்­க­ளித்­து­விட்­டோம்’ என்று சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தச் சூழ­லில்­தான் அ.தி.மு.க. சார்­பாக ஆத­ர­வ­ளித்த இந்­தத் தொகு­தி­யின் வேட்­பா­ளர், சட்­ட­மன்ற உறுப்­பி­னர், அன்­றைய சட்­ட­மன்ற உறுப்­பி­னர் வாக்கு எண்­ணிக்கை மே 4, சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­கப் பத­விப் பிர­மா­ணம்எடுத்­தது</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>