<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,39,493,1496" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 22 2026 03:46:38 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260922T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="22092026-MDU-07" position.sequence="07" ex-ref="22092026-MDU-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">மதுரை</lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">22.09.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">தீர்த்தநீர் என்று அண்டாவில் இருந்து குடிநீரை தெளிப்பதா? வி.ஐ.பி. கலாச்சாரம்! தலைமை நீதிபதி அவமதிப்பு!</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="24"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="34">மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா அலங்கோலங்கள்!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="26">த.வெ.க. அரசுக்கு மார்க்சிஸ்ட் சு.வெங்கடேசன் எம்.பி. கடும் கண்டனம்!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Su.Venkadesan_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மதுரை, செப். 22 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குட­மு­ழுக்க விழா என்ற பெய­ரில் த.வெ.க. அரசு நடத்­திய அலங்­கோ­லங்­களை மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யைச் சேர்ந்த மதுரை சு.வெங்­க­டே­சன் கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது­கு­றித்து அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்கை வரு­மாறு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மீனாட்சி சுந்­த­ரே­சு­வ­ரர் திருக்­கோ­வில் திருக்­குட நன்­னீ­ராட்­டுப் பெரு­விழா பதி­னேழு ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னர் நடந்­தே­றி­யுள்­ளது. இவ்­வி­ழா­வுக்­கான அழைப்­பி­தழ் தொடங்கி இப்­பெ­ரு­விழா நடந்­தேறி முடிந்­தது வரை எத்­த­னையோ கருத்­து­க­ளும் விமர்­ச­னங்­க­ளும் விவா­தங்­க­ளும் பொதுத்­த­ளத்­தில் தொடர்ந்து நடந்­து­வ­ரு­வ­தைப் பார்க்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">அழைப்­பி­த­ழில் பெயர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">விழா அழைப்­பி­த­ழில் அறங்­கா­வ­லர் குழு­வின் தலை­வர் மற்­றும் உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­கள் இடம்­பெ­றா­த­தைப்­பற்றி பல­ரும் கேள்வி எழுப்­பி­யி­ருந்­த­னர். அக்­கட்­டுரை எழு­தப்­பட்டு ஓரிரு நாள்­க­ளுக்­குப் பின்­னர்­தான் எனக்கு அழைப்­பி­தழ் கிடைக்­கப்­பெற்­றது. அதற்­குள் நீதி­மன்­றம் வரை சென்று உத்­த­ர­வு­கள் பிறப்­பிக்­கப்­பட்­டு­விட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">அற­நி­லையத் துறை­யா­னது, அழைப்­பி­த­ழில் அறங்­கா­வ­லர் குழுத் தலை­வர் உள்­ளிட்ட உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­க­ளைப் போடா­தது தவறு. அழைப்­பி­த­ழில் இடம்­பெற்ற 36 பெயர்­க­ளில் 19பெயர்­கள் அற­நி­லை­யத்­துறை அதி­கா­ரி­க­ளின் பெயர் ­கள். இவ்­வ­ளவு பெயர்­க­ளைப் போடும்­போது அறங்­கா­வ­லர் குழு­வி­ன­ரின் பெய­ரைப் போடா­தது அறிந்தே நிகழ்ந்த ஒன்று என்­பது வெளிப்­ப­டை­யா­னது. திருப்­ப­ணி­யா­னது குறு­கிய அர­சி­ய­லுக்­கான இட­மன்று என்ற பொறுப்­போடு அற­நி­லை­யத்­துறை நடந்­தி­ருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அழைப்­பி­த­ழில் பெயர் இடம்­பெ­றா­தது மட்­டு­மன்று, பெயர் இடம்­பெற்­ற­தும் விவா­தத்­திற்­கு­ரிய மிக­முக்­கிய விச­யம் என்றே கரு­து­கி­றேன். அழைப்­பி­த­ழில் 12 ஆன்­மீ­கப் பெரி­ய­வர்­கள், 9 ஆக­மப் பண்­டி­தர்­க­ளின் பெயர்­கள் இடம்­பெற்­றுள்­ளன. இப்­பெ­ரு­வி­ழா­வுக்­கான அடிப்­ப­டைப் பணி­க­ளான கோபு­ரங்­கள் மற்­றும் கோவில் முழு­மை­யை­யும் செப்­ப­னி­டும் திருப்­ப­ணி­யைச் செய்­து­மு­டித்­துள்ள ஸ்தப­தி­க­ளின் சிற்­பி­க­ளின் பெயர்­கள் எது­வும் இடம்­பெ­ற­வில்லை. எரி­யுண்ட வீர­வ­சந்­த­ரா­யர் மண்­ட­பத்தை மறு உரு­வாக்­கம் செய்து தந்­துள்ள தலை­மைச் சிற்பி உள்­ளிட்ட யார் பெய­ரும் இடம்­பெ­ற­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இத்­தி­ருப்­ப­ணிக்­கான மொத்­தச் செல­வில், சரி­பா­திச் செல­வைச் செய்­த­வர்­கள் கொடை­யா­ளர்­கள். அவர்­கள் யாரு­டைய பெய­ரும் இடம்­பெ­ற­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இத்­தி­ருக்­கோ­யி­லுக்கு மர­பு­வழி முத­லு­ரிமை கொண்ட மதுரை ஆதீ­னத்­தின் பெயர் ஆறா­வ­தாக இடம்­பெற்­றுள்­ளது. தமிழ்ச்­சைவ சித்­தாந்­தத்தை ஏற்­றுக்­கொள்­ளாத அத்­வைத மடங்­க­ளான காஞ்சி காம­கோடி, சிருங்­கேரி சாரதா பீடா­தி­ப­தி­க­ளின் பெயர்­கள் முதன்­மை­யாக இடம்­பெற்­றன.மக்­கள் பிர­தி­நி­தி­கள் அனை­வ­ரின் பெயர்­க­ளும் இடம்­பெற்று உள்­ளன. மாவட்ட ஆட்­சி­ய­ரின் பெய­ரும் மாந­க­ராட்சி ஆணை­ய­ரின் பெய­ரும் இருந்­தன; ஆனால், காவல்­துறை அதி­கா­ரி­க­ளின் பெயர்­கள் இடம்­பெற­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவை­யெல்­லாம் பெயர்­கள் இடம்­பெற்­றது, பெறா­தது சார்ந்த விவ­ரங்­கள். ஆனால் முக்­கி­ய­மான கேள்வி, திருக்­குட முழுக்கு நன்­னீ­ராட்டு விழா அழைப்­பி­த­ழில் மக்­கள் பிர­தி­நி­தி­கள் பெயர்­கள் ஏன் இடம்­பெற வேண்­டும்? அரசு அதி­கா­ரி­க­ளின் பெயர்­கள் ஏன் இடம்­பெற வேண்­டும்? மடா­தி­ப­தி­க­ளின் பெயர்­கள் ஏன் இடம்­பெற வேண்­டும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திருக்­குட முழுக்கு நன்­னீ­ராட்டு விழா என்­பது சம­யஞ்­சார்ந்த சடங்கு. இதில் மக்­கள் பிர­தி­நி­தி­கள் கலந்­து­கொண்டு வழி­பட முடி­யும்; கலந்­து­கொண்டு சிறப்­பிக்க முடி­யாது. அப்­படி ­யிருக்க, “கலந்­து­கொண்டு சிறப்­பிப்­ப­வர்­கள்” என்ற பெய­ர்ப்­ பட்­டி­யல் தேவை­யற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கோவில்­க­ளில் வரு­டம் முழு­வ­தும் நடக்­கிற சித்­திரை திரு­விழா, தெப்­பத்­தி­ரு­விழா போன்ற விழாக் ­க­ளின் அழைப்­பி­தழ்­க­ளில் சமய நடை­முறை மட்­டுமே இடம்­பெ­று­கி­றது. அதே போன்றே திருக்­குட முழுக்கு நன்­னீ­ராட்டு விழா அழைப்­பி­த­ழும் இருக்க வேண்­டும். அதே­போன்று திருக்­குட நன்­னீ­ராட்டு விழா­வில் விழா நடக்­கும் கோயி­லுக்­குத் தொடர்­பற்ற மடத்­துத் தலை­வர்­க­ளின் பெயர்­கள் ஏன் இடம்­பெற வேண்­டும்? அப்­படி இடம்­பெற சைவ, வைணவ, வேதாந்த மடத்­துத் தலை­வர்­கள் அனை­வ­ரின் பெய­ரை­யும் போடு­வ­தாக இருந்­தால் அந்த எண்­ணிக்­கைக்கு எல்லை ஏது? குறிப்­பிட்ட மடா­தி­ப­தி­க­ளின் பெயரை மட்­டும் போடு­வ­தாக இருந்­தால் அந்­தத் தேர்வு யாரு­டை­யது என்ற கேள்வி தவிர்க்க முடி­யா­த­ தா­கி­றது. பெயர்­வி­ளங்க ஒளிர்­தல் துற­வு­நி­லை­யின் தத்­து­வச்­சா­ரத்­திற்கு எதி­ரா­ன­தென்றே ஆன்­மீக மரபு போதிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">குறை­பா­டு­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த விழா­வில் குறை­பா­டு­களே இல்லை, எல்­லாம் சரி­யா­கவே நடந்­தது என்று யாரும் வாதிட முடி­யாது. குறை­பா­டு­களை நேர்­ம­றை­யாக ஏற்­றுக்­கொள்­வ­தும் அதி­லி­ருந்து படிப்­பி­னை­கள் பெறு­வ­தும்­தான் முக்­கி­யம். சில குறை­பா­டு­கள் திட்­ட­மி­ட­லில் நடந்த தவ­று­கள். சில குறை­பா­டு­கள் செய­லாக்­கத்­தில் நிகழ்ந்­தவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">1.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">தீர்த்­த­நீர் தெளித்­தல்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திருக்­குட முழுக்கு விழா என்­ப­தன் முக்­கி­யச் சடங்கு வேள்­வி­யில் உரு­வாக்­கப்­பட்ட சக்­தியை கும்­பங்­க­ ளில் நீர்­மூ­லம் சுமந்­து­ சென்று கோபு­ரத்­தின் மீதி­ருக்­கும் திருக்­கு­டங்­க­ளுக்கு நன்­னீ­ராட்­டு­தல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கோபு­ரங்­க­ளின் மீது நன்­னீ­ராட்டு முடிந்­த­தும் அங்­கி­ருந்து தெளிக்­கப்­ப­டும் இந்­நன்­னீர் துளி­களே பக்­தர்­கள் தீர்த்­த­மாக ஏற்­கின்­ற­னர். மதுரை திருக்­குட முழுக்கு விழா முடி­வுற்ற பின்­னர் நான்கு கோபு­ரங்­க­ளின் எதிர் உள்ள வீதி­க­ளில் குவிந்­தி­ருந்த மக்­க­ளின் மீது தீர்த்­த­நீர் எது­வும் தெளிக்­கப்­ப­ட­வில்லை. இது பக்­தர்­களை கோபப்­ப­டுத்­தி­யது. தாங்­கள் புனி­த­மாக கருதும் ஒன்று தங்­க­ளுக்கு கிடைக்­கா­த­த­னால் ஏற்­பட்ட ஆவே­சத்தை வெளிப் ­ப­டுத்­தி­னர். பக்­தர்­க­ளின் உணர்வு நியா­ய­மா­னதே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திருக்­குட முழுக்­குத் தீர்த்­த­தைத் தெளிக்­கச் செய்­யப்­பட்ட ஏற்­பா­டு­கள் குறித்து முன்­ன­தாக நடந்த ஆய்­வுக்­கூட்­டத்­தில் நாங்­கள் கேட்­ட­போது டிரோன் மூலம் தெளிக்க ஏற்­பாடு உள்­ள­தாக கூறி­னர். ஆனால் அது நடை­மு­றை­யா­க­வில்லை. திருக்­குட முழுக்கு விழா தொடங்­கிய சிறி­து­நே­ரத்­தில் அம்­மன் சந்­நிதி கோபு­ரத்­தின் மேல பறந்­து­கொண்டு இருந்த டிரோன் ஒன்று சிதைந்து விழுந்­தது. அத­னால் பதட்­ட­ம­டைந்து இம்­மு­யற்சி கைவி­டப்­பட்­ட­தா­கத் தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திருக்­குட முழுக்கு நன்­னீ­ரைப் பக்­தர்­க­ளுக்­குத் தெளிக்­கும் செய­லின் சிறந்த உதா­ர­ண­மாக 2023ஆம் ஆண்டு பழ­னி­கோ­வில் திருக்­குட முழுக்கு விழா­வைச் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது. அங்கு டிரோன் மூலம் தீர்த்த­ நீரை­யும் ஹெலி­ஹாப்­டர் மூலம் பூக்­க­ளை­யும் பக்­தர்­கள் மேல் தூவ ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. அம்­முறை இங்­கும் பின்­பற்ற ப்பட்­டி­ருக்க வேண்­டும். அது பின்­பற்­றப்­ப­டா­தது மட்­டு­மன்று, தீர்த்­த­நீர் தெளிக்­கப்­ப­டா­த­தால் கோப­ம­டைந்த மக்­களை அமை­திப்­ப­டுத்த அண்­டா­வில் இருந்த தண்­ணீரை மக்­கள்­மீது தெளிக்­கும் செய­லில் காவல்­து­றை­யைச் சார்ந்த சிலர் ஈடு­பட்­டது கேலிக்­கூத்­தான ஒன்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">சித்­தி­ரை­வீ­தி­க­ளில் பக்­தர்­களை அனு­ம­திக்­கா­தது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதே போன்று சித்­தி­ரை­வீ­தி­யில் பக்­தர்­களை முற்­றாக அனு­ம­திக்­கா­தது சரி­யான முடி­வன்று. ஆடி­வீதி கோவில் நிர்­வா­கத்­திற் ­கா­னது. சித்­தி­ரை­வீதி மாந­க­ராட்சி நிர்­வா­கத்­திற் ­கா­னது, இதில் உள்ள நிர்­வாக முரண்­க­ளால் கடந்த காலங்­க­ளில் நிறை­யப் பிரச்­சி­னை­கள் ஏற்­பட்­ட­துண்டு. அவற்றை முறி­ய­டித்­துத்­தான் நல்ல முடி­வு­கள் எடுக்­கப்­பட்­டன. உதா­ர­ண­மாக சித்­தி­ரைத் திரு­வி­ழா­வின் போது கோவில்­நிர்­வா­கம் சார்­பில் சித்­தி­ரை­வீ­தி­க­ளின் நான்கு பக்­கங்­க­ளி­லும் முழு­மை­யா­கப் பந்­தல் அமைக்­கும் முடிவு ஏழு ஆண்­டு­க­ளுக்கு முன்பு எடுக்­கப்­பட்­டது. இந்த முறை சித்­தி­ரை­வீதி முழு­வ­தை­யும் அடைக்­கக் காவல்­து­றை­யின் கண்­ணோட்­டத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு முடி­வெ­டுக்­கப்­பட்டு உள்­ளது. அது சரி­யான முடி­வன்று. சித்­தி­ரை­வீ­தி­யில் மக்­களை திருக்­குட முழுக்கு நிகழ்­வைக் காண அனு­ம­தித்­தி­ருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">வி.ஐ.பி. கலாச்­சா­ரம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இரண்­டா­வது முக்­கிய பிரச்­சினை வி.ஐ.பி. கலாச்­சா­ரம். லட்­சக்­க­ணக்­கான மக்­கள் பங்­கேற்­கும் விழா­வில் அனை­வ­ரை­யும் திருக்­குட முழுக்கு நன்­னீ­ராட்­டின்­போது கோயி­லின் மேற்­கூ­ரைக்கு அனு­ம­திக்க வாய்ப்­பில்லை. கோவில் மேற்­கூ­ரை­யின் இட­வ­சதி, தாங்­குந்­தி­றன் இரண்­டை­யும் பொதுப்­ப­ணித்­துறை மதிப்­பிட்­டுக் கொடுத்த எண்­ணிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் 11 ஆயி­ரம் பேரை அனு­ம­திக்க நிர்­வா­கம் முடிவு செய்­கி­றது. எனவே 11 ஆயி­ரம் பேருக்கு பாஸ் கொடுக்க முடிவு செய்­யப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">அதில் இரண்­டா­யி­ரம் பாஸ் பொது­மக்­க­ளுக்­காக குலுக்­கல் முறை­யில் தேர்வு செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது. மீதம் உள்ள 9 ஆயி­ரம் பாஸ்­கள் யாரால் எந்த அடிப்­ப­டை­யில் பிரித்து தரப்­பட்­டது என்­ப­தில் வெளிப்­ப­டைத்­தன்மை தேவை. பாஸ் வழங்­கு­வதை யார் தீர்­மா­னித்­தார்­கள் என்ற கேள்­விக்கு யாரும் பொறுப்­பேற்­கப் போவ­தில்லை. அந்த வெளிப்­ப­டைத்­தன்மை இல்­லாத வரை அர­சின் மீதான குற்­றச் ­சாட்டு அக­லாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பாஸ் எந்த அடிப்­ப­டை­யில் பிரித்­துத் தந்­தா­லும் அதன் மீது விமர்­ச­னம் வரத்­தான் செய்­யும். ஆனால் அடிப்­ப­டையே வெளி­யில் தெரி­யாத மர்­ம­மாக இருந்­தால் கடுங்­குற்­றச்­சாட்­டு­கள் வரத்­தான் செய்­யும். குறிப்­பாக கோயி­லுக்கு பொறுப்பு அதி­கா­ரியை விழா­வுக்கு முந்­தைய இரண்டு நாள்­க­ளில் தொடர்­பு­கொள்ள முடி­ய­வில்லை. அவ­ரது போன் செய­லில் இல்லை. எங்­க­ளது எந்த ஆய்வு நிகழ்­வி ­லும் அவர் இல்லை. நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக எனக்கு தரப்­பட வேண்­டிய “பேட்ஜ்” தரப்­ப­ட­வில்லை. நான் பேட்ஜ் அணி­யா­மல்­தான் விழா­வில் பங்­கேற்­றேன். அதை ஒரு பிரச்­சி­னை­யாக நான் கரு­த­வில்லை. இவ்­வ­ளவு பெரி­ய­நி­கழ்­வில் இது­போன்ற கவ­னக்­கு­றைவு இருக்­கத்­தான் செய்­யும். ஆனால் அத­னைக் கூப்­பிட்­டுக் கேட்­க­வேண்­டி­ய­வரை யாரா­லும் தொடர்­பு­கொள்ள முடி­யா­தது முக்­கிய பிரச்­சினை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­த­தால், பேட்ஜ் இல்­லா­விட்­டா­லும் காவ­லர்­கள் என்னை உள்ளே அனு­ம­தித்­து­விட்­ட­னர். ஆனால் இப்­பெ­ரும் நிகழ்­வுக்கு நன்­கொடை வழங்­கிய அனை­வ­ருக்­கும் பாஸ் போய்ச்­சேர்ந்­ததா? கிடைக்­கா­த­வர்­கள் என்ன செய்­தி­ருப்­பார்­கள்? யாரைத் தொடர்­பு­கொண்டு கேட்­டி­ருப்­பார்­கள் என்று யோசித்­தால் கவ­லையே மிஞ்­சு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உயர்­நீ­தி­மன்ற தலைமை நீதி­பதி உள்­ளிட்­ட­வர்­க­ளுக்கு அவ­ம­திப்பு நடந்­துள்­ள­தாக ஊட­கங்­க­ளில் செய்தி வெளி­யா­கி­யுள்­ளது.   பல லட்­சம் பக்­தர்­கள் காத்­தி­ருக்க 11ஆயி­ரம் பேர் மட்­டும் உள்ளே அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­ற­னர். திருக்­குட முழுக்கு முடிந்­த வு­டன் கோயி­லின் மேற்­கூ­ரை­யி­லி­ருக்­கும் அந்த 11ஆயி­ரம் பேரில் இருந்து சுமார் இரண்­டா­யி­ரம் பேர் மட்­டும் சன்­ன­தி­யில் வழி­பட அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­ற­னர். சன்­ன­திக்கு முன் உள்ள மண்­ட­பத்­தில் அதி­க­பட்­சம் நூறு பேர் இருக்­க­லாம். அப்­ப­டி­யென்­றால் 2000 பேரில் முண்­டி ­ய­டித்­துக்­கொண்டு போகிற 100 பேருக்கு மட்­டுமே முதல்­த­ரி­ச­னம் கிடைத்­ திருக்­கும். மற்­ற­வர்­கள் அதன் பின்­னரே வழி­பாடு செய்­தி­ருப்­பர். முண்­டி ­ய­டித்­துச் சென்­றால் அங்கே என்ன நடக்­கும் என்­பதை நம்­மால் எளி­தில் யூகிக்க முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">உயர்­நீ­தி­மன்ற தலைமை நீதி­பதி சார்ந்த பிரச்­சி­னை­ யாக ஊட­கங்­க­ளில் செய்தி வெளி­வந்த பின்­ன­ணி­யி­ லா­வது இப்­பி­ரச்­ச­னைக்கு முற்­று­புள்ளி வைக்க அர­சும் நீதித்­து­றை­யும் முன்­வர வேண்­டு­மெ­னக் கோரு­கி­றேன். திருக்­குட முழுக்கு நிகழ்வை கோயி­லின் மேற்­கூ­ரை­யில் அமர்ந்து பார்த்­த­வர்­களே மீண்­டும் கரு­வறை வழி­பாட்­டி­லும் பங்­கேற்­பது நிய­ தியா? லட்­சக்­க­ணக்­கான மக்­கள் கோயி­லுக்கு வெளி­யில் நின்­று­கொண்­டி­ருக்­கும்­போது பாஸ்­பெற்று உள்ளே சென்­ற­வர்­கள் இரண்டு வகை­யான 
முன்­னு­ரி­மை­க­ளை­யும் பெறு­வது சரி­யன்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">மூன்று முக்­கி­யப் பிரச்­சி­னை­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த விழா­வில், மூன்று விச­யங்­கள் முக்­கிய பிரச்­சி­னை­யாக இருந்­தன. நன்­னீ­ராட்டு தீர்த்­தம் தெளிக்­கப்­ப­டா­தது, சித்­திரை வீதி­யில் மக்­களை அனு­ம­திக்­கா­தது, பொது­வ­ழி­பாடு பத்து மணிக்கு மேல் என தீர்­மா­னித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தீர்த்­தம் தெளிக்க தெளி­வான திட்­ட­மி­டல் செய்­யப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சுதந்­தி­ரத்­திற்கு பின்­னர் 1953ஆம் ஆண்டு  பி.டி. இரா­ஜன் தலை­மை­யி­லான குழு மிகச்­சி­றப்­பாக குட­மு­ழுக்கை நடத்­தி­யுள்­ளது. அத்­தி­ருப்­ப­ணிக்­கு­ழு­வால் அம்­ம­னுக்கு வைர­கி­ரீ­டம் உரு­வாக்கி தரப்­பட்­டது. அதே போன்று 1974இல் லெ. நாரா­ய­ணன் செட்­டி­யார் தலை­மை­யி­லான குழு­வி­ன­ரால் முன்­ன­தன் தொடர்ச்­சி­யாக சிறப்­பாக குட­மு­ழுக்கை நடத்­தி­யுள்­ள­னர். இக்­கு­ட­மு­ழுக்கை முன்­னிட்டு வெளி­யி­டப்­பட்ட மலர், கோவில் வர­லாற்­றுக்கு சூட்­டப்­பட்ட கிரீ­டங்­க­ளில் ஒன்று. இப்­ப­ணிக்­காக இக்­கு­ழு­வி­னர் என்­றென்­றும் நினை­வு ­கூ­ரப்­ப­டு­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அவர் தமது அறிக்­கை­யில் கூறி­யுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>