<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,322,958,1166" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Sep 21 2026 14:14:30 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260922T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="22092026-TRY-05" position.sequence="05" ex-ref="22092026-TRY-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">நீர்வளத்துறையில்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="24"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="34">ரூ.42 கோடி டெண்டர் முறைகேடு!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">அமைச்சர் நிர்ப்பந்தம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup888613_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சென்னை, செப். 22 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">ரூ.42 கோடி­யி­லான நீர்­வ­ளத்­துறை டெண்­ட­ரில் முறை­கேடு நடந்­துள்­ள­தா­க­வும், குறைந்த ஒப்­பந்­தப்­புள்­ளியை புறக்­க­ணத்து அடுத்த நிறு­வ­னத்­துக்கு பணி ஒதுக்­கீடு செய்­துள்­ள­தா­க­வும் குற்­றச் ­சாட்டு எழுந்­துள்­ளது. இவை அனைத்­தும் அமைச்­ச­ரின் நிர்­பந்­தம் கார­ண­மாக நடந்­துள்­ள­தாக ஒப்­பந்­த­தா­ரர்­கள் எழுப்­பி­யுள்ள குற்­றச்­சாட்டு நீர்­வ­ளத் து­றை­யில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி
­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">வட­கி­ழக்கு பரு­வ­மழை தொடங்க உள்ள நிலை­யில், மழை­நீர் தேங்­கு­வ­தைத் தடுக்­கும் வகை­யி­லும், நீர்­நி­லை­கள் மற்­றும் நீர்­வ­ழித்­த­டங்­களை சீர­ மைக்­கும் வகை­யி­லும் தமி­ழக நீர்­வ­ளத்­துறை சார்­பில் பல்­வேறு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இதன் ஒரு பகு­தி­யாக ஏரி­கள், கால்­வாய்­கள் மற்­றும் நீர்­வ­ழிப்­பா ­தை­க­ளில் தூர்­வா­ரும் பணி­கள், கால்­வாய் அக­லப்­ப­டுத்­து­தல், ஆகா­யத்­தா­மரை அகற்­று­தல், குப்­பை­களை அகற்­று­தல் உள்­ளிட்ட பணி­க­ளுக்கு டெண்­டர் விடப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இந்த டெண்­டர் நட­வ­டிக்­கை­க­ளில் மொத்­தம் 202 பணி­கள் இடம்­பெற்­றுள்­ள­தா­க­வும், சில பணி­க­ளுக்கு மிகக் குறு­கிய கால அவ­கா­சம் வழங்­கப்­பட்­ட­தா­க­வும், குறிப்­பிட்ட ஒப்­பந்­த­தா­ரர்­க­ளுக்கு சாத­க­மாக நிபந்­த­னை­கள் அமைக்­கப்­பட்­ட­தா­க­வும் ஒப்­பந்­த­தா­ரர்­கள் குற்­றச்­சாட்­டு­களை எழுப்பி இருந்­த­னர். மேலும் இது­கு­றித்து விசா­ரணை நடத்த வேண்­டும் என்ற கோரிக்­கை­க­ளும் எழுந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இதன் ஒரு பகு­தி­யாக திரு­வள்­ளூர் மாவட்­டத்­தில் உள்ள அய்­யப்­பாக்­கம் ஏரி­யின் நீர்த்­தேக்­கப் பகு­தி­களை சீர­மைப்­ப­தற்­காக நீர்­வ­ளத்­துறை சார்­பில் ரூ.42 கோடி­யி­லான பணி­க­ளுக்­கான டெண்­டர் அறி­விப்பு வெளி­யி­டப்­பட்டு, ஆகஸ்ட் 20ம் தேதி ஆன்­லைன் டெண்­டர் திறக்­கப்­பட்டு, ஆகஸ்ட் 28ம் தேதி நிறை­ வ­டைந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.  பொது­வாக அரசு டெண்­டர்­க­ளில் தகு­தி­யான ஒப்­பந்­த­தா­ரர்­கள் போட்­டி­யிட்டு, விதி­மு­றை­ க­ளுக்கு உட்­பட்டு பெறப்­பட்ட ஒப்­பந்­தப்­புள்­ளி­க­ளில் தகு­தி­யான குறைந்த விலைப்­புள்ளி உள்­ளிட்ட அள­வு­கோல்­க­ளின் அடிப்­ப­டை­யில் ஒப்­பந்­தம் வழங்­கப்­ப­டு­வது நடை­மு­றை­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இந்­நி­லை­யில், டெண்­டர் போட்­டியை தவிர்க்­கும் வகை­யில் சில ஒப்­பந்­த­தா­ரர்­கள் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை எழும்­பூ­ரில் உள்ள தனி­யார் ஓட்­ட­லில் ஆலோ­சனை நடத்­தி­ய­தா­க­வும் குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது. அந்த கூட்­டத்­தில் எந்த ஒப்­பந்­த­தா­ரர் எந்­தப் பணிக்கு விண்­ணப்­பிப்­பது என்­பது குறித்து முன்­கூட்­டியே முடிவு செய்­யப்­பட்­ட­தா­க­வும், ஒரு­வர் விண்­ணப்­பிக்­கும் பணிக்கு மற்­றொரு ஒப்­பந்­த­தா­ரர் போட்­டி­யி­டக்­கூ­டாது என முடிவு செய்­யப்­பட்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மேலும், சில பணி­க­ளுக்கு அரசு மதிப்­பீட்­டை­விட குறை­வான தொகை­யில், அதா­வது ‘மைனஸ்’ விலை­யில் ஒப்­பந்­தப்­புள்­ளி­களை தாக்­கல் செய்­வது குறித்­தும் ஒப்­பந்­த­தா­ரர்­கள் மத்­தி­யில் உடன்­பாடு ஏற்­பட்­ட­தாக கூறப்­ப­டு ­கி­றது.  இந்த கூட்­டத்­தில் பங்­கேற்­ற­வர்­க­ளுக்கு மட்­டுமே செயற்­பொ­றி­யா­ளர் அலு­வ­ல­கம் சார்­பில் தேவை­யான சான்­றி­தழ்­கள் வழங்­க ப்­ப­டு­வ­தா­க­வும், மற்ற ஒப்­பந்­த­தா­ரர்­க­ளுக்கு சான்­றி­தழ் வழங்­கு­வ­தில் கால­தா­ம­தம் அல்­லது மறுப்பு ஏற்­பட்­ட­தா­க­வும் சில ஒப்­பந்­த­தா­ரர்­கள் குற்­றம்­சாட்­டி ­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இதற்­கி­டையே, திரு­வள் ­ளூர் மாவட்ட நீர்­வ­ளத்­துறை செயற்­பொ­றி­யா­ளர் ராதா­கி­ருஷ்­ணன் தலை­மை­யி­லான அலு­வ­ல­கத்­தின் கீழ் நடை­பெற்­ற­தாக கூறப்­ப­டும் பணி­க­ளில், குறைந்த ஒப்­பந்­தப்­புள்ளி கோரிய நிறு­ வ­னத்தை புறக்­க­ணித்து, அதற்கு அடுத்த நிலை­யில் இருந்த நிறு­வ­னத்­திற்கு பணி­கள் வழங்­கப்­பட்­ட­தாக குற்­றச்­சாட்டு முன்­வை க்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">குறிப்­பாக அடை­யாறு முகத்­து­வா­ரம் தூர்­வா­ரும் பணிக்­கான ஒப்­பந்­தப்­புள்­ளி­யில், அஜய் பில்­டர்ஸ் நிறு­வ­னம் -6.00 சத­வீ­தம் குறை­வாக ஒப்­பந்­தப்­புள்ளி கோரி­ய­தா­க­வும், வெங்­க­டேஷ் பாபு நிறு­வ­னம் -1.90 சத­வீ­தம் குறை­வாக கோரி­ய­தா­க­வும் கூறப்­ப­டு­கி­றது. அதே­போல் மற்­றொரு பணிக்­கும் அஜய் பில்­டர்ஸ் நிறு­வ­னம் -6.00 சத­வீ­தம் குறை­வா­க­வும், வெங்­க­டேஷ் பாபு நிறு­வ­னம் -4.90 சத­வீ­தம் குறை­வா­க­வும் ஒப்­பந் ­தப்­புள்ளி கோரி­
யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு குறைந்த விலைப்­புள்ளி கோரிய நிறு­வ­னங்­கள் இருக்­கும்­போது, அடுத்த நிலை­யில் இருந்த வெங்­க­டேஷ் பாபு நிறு­வ­னத்­திற்கே அமைச்­ச­ரின் அறி­வு­றுத்­தல் படியே இரண்டு பணி­க­ளும் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. எனவே, குறைந்த ஒப்­பந்­தப்­புள்­ளியை கோரிய நிறு­வ­னத்தை விட அதிக விலை ப்­புள்ளி கோரிய நிறு­வ­னத்­திற்கு பணி வழங்­கப்­பட்­டி­ருந்­தால், அதற்­கான கார­ணங்­கள் டெண்­டர் ஆவ­ணங்­க­ளில் தெளி­வாக பதி­வு­செய்­யப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">குறிப்­பாக ஒரே நிறு­வ­னத் ­திற்கு தொடர்ந்து பணி­கள் ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தால், அந்த முடி­வுக் ­கான கார­ணம் என்ன? குறைந்த ஒப்­பந்­தப்­புள்ளி கோரிய நிறு­வ­னம் ஏன் நிரா­க­ரிக்­க ப்­பட்­டது? நிரா­க­ரிப்­புக்­கான தொழில்­நுட்ப அல்­லது தகுதி கார­ணங்­கள் என்ன? டெண்­டர் மதிப்­பீட்­டுக் குழு என்ன முடிவு செய்­தது? என்­பது குறித்து அதி­கா­ரப்­பூர்வ ஆவ­ணங்­கள் மூலம் விளக்­கம் அளிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஏற்­க­னவே ரூ.42 கோடி மதிப்­பி­லான நீர்­வ­ளத்­துறை டெண்­டர்­கள் தொடர்­பாக, குறிப்­பிட்ட ஒப்­பந்­த­தா­ரர்­கள் மட்­டுமே பங்­கேற் ­கும் வகை­யில் சிறப்பு நிபந்­த­னை­கள் விதிக்­கப்­பட்­ட­ தா­க­வும், டெண்­டர்­க­ளுக்கு குறு­கிய கால அவ­கா­சம் வழங்­கப்­பட்­ட­தா­க­வும் குற்­றச் ­சாட்­டு­கள் வெளி­யா­கின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">எனவே, அய்­யப்­பாக்­கம் ஏரி மற்­றும் தொடர்­பு­டைய நீர்­வ­ழிப் ­ப­ணி­க­ளுக்­கான டெண்­டர் ஆவ­ணங்­கள், பங்­கேற்ற நிறு­வ­னங்­க ­ளின் ஒப்­பந்­தப்­புள்­ளி­கள், தொழில்­நுட்ப தகுதி மதிப்­பீடு, L1/L2 நிலை, பணி ஒதுக்­கீட்­டுக்­கான கார­ணங்­கள் உள்­ளிட்­ட­வற்றை சம்­பந்­தப்­பட்ட துறை உயர் அதி­கா­ரி­கள் ஆய்வு செய்ய வேண்­டும் என ஒப்­பந்­த­தா­ரர்­கள் கோரிக்கை வைத்­துள்­ள­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>