<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,404,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Sep 21 2026 16:34:01 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260922T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="22092026-VLR-09" position.sequence="09" ex-ref="22092026-VLR-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="31">தி.மு.க. என்றென்றும் களத்தில் நிற்கும் கட்சி என்பதை இடைத்தேர்தல் வெற்றி மூலம் நிரூபித்து</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="31"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="92">‘சர்க்கஸ் கும்பலிடம்’ சிக்கியுள்ள தமிழ்நாட்டை மீட்டெடுப்போம்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="36">பூந்தமல்லி மண விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Udhayasir_09_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சென்னை, செப். 22–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தி.மு.கழ­கம் என்­றென்­றும் களத்­தில் 
நிற்­கும்  கட்சி என்­பதை இடைத்­தேர்­தல் வெற்றி மூலம் நிரூ­பித்து ‘சர்க்­கஸ் கும்­ப­லி­டம்’ சிக்­கி­யுள்ள தமிழ்­நாட்டை மீட்­டெ­டுப்போம் என பூவி­ருந்­த­வல்­லி­யில் நடை­பெற்ற மண­வி­ழா­வில் எதிர்க்­கட்­சித் தலை­வர் 
உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் சூளு­ரைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திரு­மண விழா­வில், கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வரு மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் ஆற்­றிய வாழ்த்­துரை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­றைக்கு பூந்­த­மல்லி நகர இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் அரு­மைத் தம்பி ராஷிக், சகோ­தரி மரி­யம் பாத்­திமா இணை­ய­ரு­டைய திரு­மண விழா­வில் கலந்­து­கொண்டு, உங்க ளோடு சேர்ந்து மண­மக்­களை வாழ்த்­து­வ­தில் மிகுந்த மகிழ்ச்சி அடை­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­தத் திரு­மண நிகழ்ச்சி மூல­மா­கத் 
திரு­மண வாழ்க்­கை­யில் அடி­யெ­டுத்து வைக்­கக்­கூ­டிய மண­மக்­க­ளுக்கு, நாம் அத்­தனை பேரும் நம் மன­மார்ந்த வாழ்த்து களைத் தெரி­வித்­துக் கொள்­வோம். அதை விடக் கூடு­தல் சிறப்பு, இங்கே வந்­த­வு­டனே கூறி­னார்­கள், இது ஒரு காதல் திரு­ம­ணம் என்று. காதல் கைகூடி, இன்­றைக்கு வெற்றிகர­மா­கத் 
திரு­மண வாழ்க்­கை­யிலே அடி­யெ­டுத்து வைத்­தி­ருக்­கி­றார்­கள். அதற்கு மீண்­டும் நம் 
வாழ்த்­து­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">நம் குடும்­பத் திரு­மண விழா!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நம் குடும்­பத் திரு­மண விழா­வில் கலந்­து­கொள்­ளும்­போது, எப்­படி ஓர் உணர்வு ஏற்­ப­டுமோ, அதே­போ­லத்­தான் இன்­றைக்கு இந்­தத் திரு­மண நிகழ்ச்­சி­யிலே நாம் அத்­தனை பேரும் கலந்­து­கொண்­டி­ருக் கிறோம். அதற்­குக் கார­ணம் என்­ன­வென்­றால், தம்பி ராஷிக் அவர்­கள் இளை­ஞர் அணி­யி­லி­ருந்து வந்­த­வர். அது­மட்­டு­மல்ல, அவ­ரு­டைய குடும்­பமே பாரம்­ப­ரி­ய­மிக்க திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்­காக உழைத்த குடும்­பம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தம்பி ராஷிக் அவர்­க­ளின் தாத்தா எம்.ஏ. அஜீஸ் அவர்­கள் கழ­கம் தோன்­றிய காலம் முதல் பூந்­த­மல்­லிப் பகு­தி­யில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய வளர்ச்­சிக் காகப் போரா­டி­ய­வர், பாடு­பட்­ட­வர். பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளோடு நெருக்­க­மா­கப் பழ­கி­ய­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">கழக அலு­வ­ல­கம் திறந்­த­வர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பேர­றி­ஞர் அண்ணா அவர்­களை அழைத்­துக்­கொண்டு வந்து, இங்கே இருக்­கக்­கூ­டிய கும­ணன்­சா­வ­டி­யில் அவ­ருக்­குச் சொந்­த­மான இடத்­தில், நம் கழக அலு­வ­ல­கத்­தைத் திறந்து வைத்த பெருமை அவ­ருக்கு உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ராஷிக்­கு­டைய மாமா அப்­துல் சத்­தார் அவர்­கள் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரு­டைய அன்­புக்கு மிகுந்த பாத்­தி­ர­மா­ன­வர். கலை­ஞர் அவர்­கள் செல்­லும் அனைத்து நிகழ்ச்­சி­ 
க­ளுக்­கும் கலை­ஞ­ருக்­குத் துணை­யாக இருந்­த­வர்­தான் அவ­ரு­டைய மாமா சத்­தார் அவர்­கள். நம் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் முதன்­மு­த­லாக சட்­ட­மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யிட்­ட ­போது, கலை­ஞ­ருக்­காக வீடு வீடா­கச் சென்று வாக்கு சேக­ரித்­த­வர்­தான் ராஷிக்­கு­டைய மாமா சத்­தார் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தாத்தா மற்­றும் மாமா­வு­டைய வழி­யில் இன்­றைக்கு ராஷிக்­கும் நம் கழ­கத்­திற்­காக 2010–ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கழ­கப் பணியை ஆற்றி வரு­கி­றார். 2016 முதல் நகர இளை­ஞர் அணித் துணை அமைப்­பா­ள­ரா­கச் சிறப்­பா­கப் பணி­யாற்றி, 2024 முதல் நகரஇளை­ஞர் அணி அமைப்­பா­ள­ராக இன்­றைக்கு மிகச் சிறப்­பாக இளை­ஞர் அணிப் பணி­களை, கழ­கப் பணி­க­ளைச் சிறப்­பாக ஆற்றி வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­ப­டிப்­பட்ட ஒரு பெருமை வாய்ந்த கழ­கக் குடும்­பத்­தில் நடை­பெ­று­கின்ற இந்­தத் திரு­ம­ணத்­திலே பங்­கேற்று, மண­மக்­களை வாழ்த்­து­வது எனக்­குக் கூடு­தல் பெருமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">இஸ்­லா­மிய சொந்­தங்­களே சாட்சி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­றைக்கு இந்­தத் திரு­மண விழா­வில் ஏரா­ள­மான இஸ்­லா­மி­யப் பெரு­மக்­கள் கலந்­து­கொண்­டி­ருக்­கி­றீர்­கள், மண­மக்­களை வாழ்த்த வருகை தந்­தி­ருக்­கி­றீர்­கள். இஸ்­லா­மிய மக்­க­ளுக்­கும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­துக்­கு­மான உறவு, அதைப் பற்றி நான் உங்­க­ளுக்­குச் சொல்­லத் தேவை­யில்லை. தி.மு.க.வுக்­கும் இஸ்­லா­மி­யர்­க­ளுக்­கு­மான உறவு இன்று நேற்று உரு­வான உறவு கிடை­யாது. மறைந்த நம் கண்­ணி­ய­மிக்க காயிதே மில்­லத் அவர்­கள் காலத்­தில் உரு­வான உறவு இது. இஸ்­லா­மி­யர்­க­ளுக்­கும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­துக்­கு­மான உறவு நாளுக்கு நாள் வலி­மை­யா­கிக்கொண்டே போகுமே தவிர, அதை 
ஒரு­நா­ளும் தி.மு.க.–வையும் இஸ்­லா­மி­யர்­க­ளை­யும் பிரித்­துப் பார்க்க முடி­யாது. அதற்கு இங்கே உணர்­வோடு திரண்­டி­ருக்­கக்­கூ­டிய இஸ்­லா­மிய சொந்­தங்­கள் நீங்­களே சாட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">மின்­வெட்­டும், அரி­வாள் வெட்­டும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­றைக்கு நம் தமிழ்­நாடு என்ன நிலை­மை­யில் இருக்­கி­றது என்று உங்­கள் அத்­தனை பேருக்­கும் தெரி­யும். நம் தலை­வர் ஆட்­சி­யில் இருக்­கும் பொழுது, நம் அரசு இருக்­கும் பொழுது, திரா­விட மாடல் ஆட்­சி­யில் இருக்­கும் பொழுது ஒரு நல்ல நிலை­யில் இருந்த தமிழ்­நாடு, இன்­றைக்கு ஒரு சர்க்­கஸ் கும்­ப­லி­டம் மாட்­டிக்­கொண்டு முழித்­துக் கொண்­டி­ருக்­கி­றது இந்­தத் தமிழ்­நாடு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சட்­டம்–­ஒ­ழுங்கு எந்த நிலை­மை­யில் இருக்­கி­றது என்று உங்­க­ளுக்கே தெரி­யும். நேற்று முன்­தி­னம் மட்­டும் தமிழ்­நாட்­டில் எட்­டுப் படு­கொ­லை­கள் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. நேற்று நம் தலை­வர் முப்­பெ­ரும் விழா­வில் பேசும்­போது சொன்­னார், இன்­றைக்கு இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர் பாணி­யி­லேயே சொல்ல வேண்­டும் என்­றால், `இன்­றைக்கு இந்த ஆட்­சி­யில் இரண்டே இரண்டு பேருக்­குத்­தான் போட்டி. ஒன்று மின்­வெட்டு, இன்­னொன்று அரி­வாள் வெட்டு’ என்று நம் தலை­வர் அவர்­கள் சிறப்­பா­கச் சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­றைக்கு மின்­வெட்டு தமிழ்­நாட்­டில் உச்­சத்­தில் இருக்­கி­றது. இன்­னும் சொல்­லப்­போ­னால் முத­ல­மைச்­ச­ரு­டைய சொந்­தத் தொகு­தி­யான பெரம்­பூர் தொகு­தி­யி­லேயே மின்­வெட்டு அதி­க­மாக இருக்­கின்ற கார­ணத்­தி­னால் தின­மும் மக்­கள் குடும்­பம் குடும்­ப­மாக வந்து சாலை­யில் மறி­ய­லில், போராட்­டத்­தில் ஈடு­பட்­டுக்­கொண்டு இருக்­கின்­றார்­கள். ஆட்­சிக்கு வந்து நான்கு மாதங்­கள் ஆகி­விட்­டன. ஆனால், இது­வ­ரைக்­கும் பார்த்­தீர்­கள் என்­றால், ஒரு திட்­டத்­தைக் கூட முழு­மை­யாக நிறை­வேற்­ற­வில்லை. தேர்­தல் அறிக்­கை­யில் சொன்ன ஒரு வாக்­கு­று­தி­யைக் கூட இன்­னும் முழு­மை­யாக நிறை­வேற்­ற­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒன்று நாம் தொடங்­கிய திட்­டத்தை ரத்து செய்­தி­ருக்­கி­றார்­கள். அப்­படி இல்­லை­யென்­றால், நாம் தொடங்கி வைத்த திட்­டத்­தின் பெயர்­களை ஸ்டிக்­கர் ஒட்டி மாற்றி இருக்­கின்­றார்­கள். இதைப் பற்றி எல்­லாம் சட்­ட­மன்­றத்­தில் நாங்­கள் எல்­லாம் கேள்வி கேட்­டால், அங்கு என்ன நிலைமை என்று நான் சொல்­லத் தேவை­யில்லை. அத்­தனை பேரும் இன்­றைக்கு நேர­லை­யில் பார்க்­கி­றீர்­கள். நேர­லைத் தொலைக்­காட்­சி­யில் பார்க்­கி­றீர்­கள். சட்­ட­மன்­றத்­தில் என்ன நடக்­கி­றது என்று இன்­றைக்கு அத்­தனை பேரும் பார்த்­துக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">சட்­ட­மன்­றமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">`சூப்­பர் சிங்­கர்’ நிகழ்ச்­சியா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சட்­ட­மன்­றத்­தில் முன்­னெல்­லாம் எதிர்க்­கட்­சி­யி­னர் கேள்வி கேட்­பார்­கள். ஆளு­கின்ற அரசு, முத­ல­மைச்­சர், அமைச்­சர்­கள், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் எல்­லாம் பதில் சொல்­வார்­கள். ஆனால், இன்­றைக்கு நாங்­கள் கேள்வி கேட்­டால், ஆளுங்­கட்­சி­யி­னர் அதற்­குப் பதி­லா­கப் பாட்­டுப் பாடு­கி­றார்­கள். கேள்வி கேட்­டால் பதில் சொல்ல முடி­யும், பாட்­டுப் பாடி­னால், நாங்­கள் என்ன எதிர் பாட்டா பாட முடி­யும்? எங்­க­ளுக்­கெல்­லாம் சில நேரங்­க­ளில் சந்­தே­கம் வந்­து­வி­டு­கி­றது. என்ன நாம் சட்­ட­மன்­றத்­துக்­குத்­தான் வந்­தி­ருக்­கி­றோமா? இல்லை `சூப்­பர் சிங்­கர்’ நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருக்­கி­றோமா? `பாட்டு பாடவா’ நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருக்­கி­றோமா? என்று அமைச்­சர்­கள் பாட்­டுப் பாடு­கி­றார்­கள், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் பாட்­டுப் பாடு­கி­றார்­கள், சபா­நா­ய­க­ரும் பாட்­டுப் பாடு­கி­றார். இன்­னும் நட­னம் மட்­டும்­தான் ஆட ஆரம்­பிக்­க­வில்லை. சண்­டைக்­காட்சி, நட­னம் இது மட்­டும்­தான்இன்­னும் சட்­ட­மன்­றத்­தில்,  அந்த சூட்­டிங் மட்­டும்­தான் நடக்­கா­மல் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">முத­ல­மைச்­சர் வாயைத் திறப்­பதே கிடை­யாது. வாயைத் திறந்­தார் என்­றால், வெறும் பஞ்ச் வச­னம்­தான். அது எங்­க­ளைப் பார்த்­துப் பேசு­வது கிடை­யாது. அது­வும் கேமரா எங்கே இருக்­கி­றது என்று சரி­யா­கப் பார்த்து, ஆங்­கிள் எல்­லாம் பார்த்து, சபா­நா­ய­க­ரி­டம் அனு­மதிவாங்கி, `டேக் போக­லாமா’ என்று கேட்­டு­விட்டு, சபா­நா­ய­கர் `ஆக்­சன்’ என்று சொன்­ன­தற்­குப் பிறகு முத­ல­மைச்­சர் அவர்­கள் தன்­னு­டைய பஞ்ச் டய­லாக்­கைப் பேசு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">முத­ல­மைச்­ச­ரி­டம் 16 கேள்­வி­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கடந்த நான்கு மாதங்­க­ளா­கச் சட்­டம்–­ஒ­ழுங்­குப் பிரச்­சினை மிக­வும் மோச­மாக இருக்­கி­றது என்று நான் கேள்வி கேட்­டேன். இவ்­வ­ளவு பிரச்­சி­னை­கள் நடந்­தி­ருக்­கின்­றன என்று சொன்­னேன். கிட்­டத்­தட்ட 35 நிமி­டங்­கள் பேசி­னேன். முத­ல­மைச்­ச­ரி­டம் 16 கேள்­வி­கள் கேட்­டேன். இதற்­கெல்­லாம் முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு மூன்று நாள் நேரம் இருக்­கி­றது, ஆயத்­த­மா­கி­விட்டு வாருங்­கள், அதி­கா­ரி­க­ளி­டம் கேளுங்­கள், என்ன பிரச்­சினை என்று கேளுங்­கள், இதற்கு என்ன தீர்வு காணப் போகி­றீர்­கள்? என்று தெளி­வா­கப் பதில் சொல்ல வேண்­டும் என்று கேட்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">முத­ல­மைச்­சர் சட்­ட­மன்­றத்­தி­லி­ருந்து ஓடிப்­போய்­விட்­டார். சரி, நான்­கூட ஆயத்­த­மா­வ­தற்­குத்­தான் ஓடிப்­போ­கி­றார் போலி­ருக்­கி­றது, ஆயத்­த­மா­கி­விட்டு மூன்று நாள்­கள் கழித்து வந்து பதில் சொல்­வார் என்று நின்­று­கொண்­டி­ ருந்­தால், காத்­துக்­கொண்டு இருந்­தால், 
நாங்­கள் கேட்ட ஒரு கேள்­விக்­குக் கூட முறை­யான பதில் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">முறை­யான பதில் இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">என்ன செய்­தார்? 50 ஆண்­டு­க­ளுக்கு முன்­னால் நடந்த பிரச்­சி­னை­யை­யெல்­லாம் இழுத்­துக்­கொண்டு வந்து, சர்க்­கா­ரியா கமி­ஷன் 
பற்­றித் தெரி­யுமா உங்­க­ளுக்கு? மிசா கைது பற்றி என்ன தெரி­யும் உங்­க­ளுக்கு? என்று இல்­லாத பொல்­லாத பொய்­க­ளை­யெல்­லாம் அன்று சட்­ட­ச­பை­யிலே பேசி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அது­மட்­டு­மல்ல, இன்­னொரு பஞ்ச் டய­லாக் பேசி­னார். அன்று நான் அவை­யி­லேயே இல்லை. என்ன தெரி­யுமா சொன்­னார்? ``என்­னு­டைய டேபி­ளில் மூன்று ஃபைல்­கள் இருக்­கின்­றன. அந்த ஃபைலை என்னை திறக்க வைத்­து­வி­டா­தீர்­கள்” என்று ஒரு பஞ்ச் வச­னம் பேசி­னார். அடுத்த நாள் நான் போய்ச் சொன்­னேன். ``ஒரு முத­ல­மைச்­சர் என்­றால், ஒரு ஃபைல் வந்­தது என்­றால், உடனே அதைத் திறந்து அது என்­ன­வென்று பார்த்து, கையெ­ழுத்­துப் போட்டு அதில் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். ஏன் ஃபைலை உங்­கள் டேபிள் மேலேயே வைத்­தி­ருக்­கி­றீர்­கள்? ஏன் ஜோசி­யக்­கா­ரர் சொன்­னால்­தான் அதைத் திறந்து பார்ப்­பீர்­களா? தய­வு­செய்து விரை­வா­கத் திறங்­கள், யார் மீதா­வது தவறு இருந்­தால், உடனே நட­வ­டிக்கை எடுங்­கள்’’ என்று கேள்வி கேட்­டேன். இது­வ­ரைக்­கும் அதற்கு ஒரு முறை­யான பதில் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­படி சட்­ட­மன்­றத்தை ஓர் அலங்­கோ­லக் காட்­சி­யாக, இப்­படி ஒரு கேடு­கெட்ட ஒரு சட்­ட­மன்­றத்தை, இது­வ­ரைக்­கும் தமிழ்­நாடு வர­லாற்­றி­லேயே யாரும் பார்க்­காத ஒரு சட்­ட­ 
மன்­றத்தை, இன்­றைக்கு நம் தமிழ்­நாட்டு மக்­கள் உரு­வாக்கி வைத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">பழி­யைப் போடும் வேலை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எதைக் கேட்­டா­லும் முத­லில் இங்கு இருக்­கக்­கூ­டிய ஆட்­சி­யா­ளர்­கள், முத­ல­மைச்­சர் உள்­ளிட்ட ஆட்­சி­யா­ளர்­கள், அமைச்­சர்­கள் எல்­லாம், அவர்­கள் ஆட்­சிக்கு வந்­து­விட்­டோம் என்­ப­தையே இன்­னும் நம்­ப­வில்லை. எந்­தக் கேள்வி கேட்­டா­லும், நம் மீது பழி போடு­வது. ``தி.மு.க. ஆட்­சி­யில் இது நடந்­தது, தி.மு.க. ஆட்­சி­யில் இது நடந்­தது’’ என்று நம் மீது பழி­யைப் போடும் வேலையை மட்­டும்­தான் இங்கு இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­ச­ரும் சரி, அமைச்­சர்­க­ளும் சரி தொடர்ந்து செய்­து­கொண்டு இருக்­கி­றார்­கள். எனவே, இப்­பேர்ப்­பட்ட கோமா­ளித்­த­னத்­தைத்­தான் இன்­றைக்கு மக்­கள் நேர­லை­யில் பார்த்­துக் கொண்­டி­ருக் 
கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அது­மட்­டு­மல்ல, ஆட்­சிக்கு வரு­வ­தற்கு 
அறு­திப் பெரும்­பான்­மைக்­குத் தேவை. 118 
சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள். ஆனால், இவர் க­ளுக்­குக் கிடைத்­தது வெறும் 106. அறு­திப் பெரும்­பான்மை கிடைக்­க­வில்லை, பெரும்­பான்மை கிடை­யாது. இன்­னும் சொல்­லப் 
போ­னால், நம் தலை­வர் தலை­மை­யில், நம் திரா­விட மாடல் அரசு தலை­மை­யில், நம் மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி தலை­மை­யில் நம் ஆட்­சி­யி­னு­டைய சாத­னை­களை 
எல்­லாம் சொல்லி வாக்­குக் கேட்டு, மக்­க­ளு­டைய வாக்­கு­க­ளைப் பெற்று இன்­றைக்­குச் 
சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கத் தேர்ந்­தெ­டுத்­தி­ருக்­கி­றார்­கள் அல்­லவா, நம் கூட்­ட­ணி­யின் ஆத­ர­வோ­டு­தான் இன்­றைக்கு இந்த ஆட்சி நடந்­து­கொண்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­னும் சொல்­லப்­போ­னால், நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தய­வில்­தான் 
இன்­றைக்கு இந்த ஆட்சி நடந்­து­கொண்டு 
இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அத­னால்­தான் இன்­றைக்கு ஒவ்­வொரு 
சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­கப் பார்த்­துப் பார்த்து, அது­வும் அ.தி.மு.க. சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை எல்­லாம் விலைக்கு வாங்­கும் வேலை­யில் இந்த அரசு இறங்­கி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">‘ஏன்­தான், இவர்­க­ளுக்கு வாக்­க­ளித்­தோம்?’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­படி விலைக்கு வாங்­கிய கார­ணத்­தி­னால்­தான் உங்­க­ளுக்­குத் தெரி­யும், இரண்டு சட்­ட­மன்ற இடைத்­தேர்­தல்­கள் மது­ராந்­த­கம், தாரா­பு­ரத்­தில் இடைத்­தேர்­தல் நடக்க 
இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த ரீல்ஸ் கும்­ப­லுக்கு வாக்­க­ளித்த கொஞ்­ச­நஞ்ச மக்­க­ளும், `ஏன்டா இவர்­க­ளுக்கு வாக்­க­ளித்­தோம்’ என்று இப்­போது கவ­லை­யில் ஆழ்ந்­தி­ருக்­கி­றார்­கள். இந்த ஆட்­சி­யா­ளர்­கள் அடிக்­கின்ற இந்­தக் கூத்­தை­யெல்­லாம், செய்­கின்ற இந்த அட்­டூ­ழி­யங்­களை எல்­லாம் மக்­க­ளுக்கு நாம் தொடர்ந்து அம்­ப­லப்­ப­டுத்த வேண்­டும். அதற்­குச் சரி­யான ஒரு தண்­ட­னையை வரு­கின்ற இடைத்­தேர்­தல் மூல­மாக நாம் இந்த ஆட்­சி­யா­ளர்­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆளுங்­கட்சி, எதிர்க்­கட்சி எந்த வரி­சை­யில் இருந்­தா­லும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­றைக்­குமே மக்­க­ளுக்­கா­கக் களத்­தில் நிற்­கும் என்­பதை இந்­தத் தேர்­தல் மூல­மாக நாம் நிரூ­பித்­துக் காட்ட வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">மண­மக்­க­ளுக்கு ஒரு வேண்­டு­கோள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த நேரத்­தில் மண­மக்­க­ளுக்கு ஒரு வேண்­டு­கோள். ஒரு­வரை ஒரு­வர் புரிந்து நடந்து கொள்­ளுங்­கள். காதல் திரு­ம­ணம், அத­னால் அதி­க­மாக அறி­வுரை சொல்ல வேண்­டிய அவ­சி­யம் கிடை­யாது. விட்­டுக்­கொ­டுக்­கும் விஷ­யத்­தில் விட்­டுக்­கொ­டுத்து, உரி­மை­களை நிலை­நாட்­டும் இடத்­தில் நிச்­ச­யம் நிலை­ 
நாட்­டுங்­கள். உங்­க­ளு­டைய வாழ்க்­கை­யைப் பகுத்­த­றி­வோடு, சுய­ம­ரி­யா­தை­யோடு அமைத்­துக்­கொள்­ளுங்­கள் என்று கூறி, உங்­கள் அத்­தனை பேரின் சார்­பா­க­வும் மண­மக்­களை வாழ்க வாழ்க என்றுவாழ்த்தி, வாய்ப்­புக்கு நன்றி கூறி விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள்  மண­மக்­களை வாழ்த்­திப் பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>