<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="23/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,357,609,1145" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 22 2026 22:18:23 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260923T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="23092026-VLR-03" position.sequence="03" ex-ref="23092026-VLR-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="26">45 நிமிடம் பேசிய ஆதவ் அர்ஜுனாவால்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="26"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">4 நிமிடம் கூட த.வெ.க. ஆட்சியின் சாதனையைச் சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை!  </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="33">ஆள் இல்லாத கடைக்கு டீ ஆத்தும் ஆதவ் –- - இ.பரந்தாமன் பதிலடி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="paranthamancn_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்னை, செப்.23–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் 45 நிமி­டம் பேசிய ஆதவ் அர்­ஜூ­னா­வால், 
4 நிமி­டம் கூட த.வெ.க. ஆட்­சி­யின் 
சாத­னையை பற்றி சொல்லி வாக்கு கேட்க முடி­ய­வில்லை என்று 
இ.பரந்­தா­மன் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மது­ராந்­த­கம் தி.மு.க. வேட்­பா­ளர் ஐ.பரந்­தா­மன்  காலை நிரு­பர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">த.வெ.க. கட்­சியை சேர்ந்த ஆதவ் அர்­ஜுனா, மது­ராந்­த­கம் சட்­டப்­பே­ரவை தொகு­திக்கு அந்த கட்­சி­யி­னு­டைய தேர்­தல் பொறுப்­பா­ள­ராக இருந்து பணி­யாற்­று­வ­தற்­காக அந்த கட்சி நிர்­வா­கி­கள் மத்­தி­யிலே ஒரு நீண்­ட­தொரு உரை­யாற்றி இருக்­கி­றார். 45 நிமி­டம் அவர் உரை­யாற் றினார் என்­பதை விட,45 நிமி­டம் வாந்தி எடுத்­தார் என்று தான் நான் சொல்ல வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஏனென்­றால், ஆட் சிக்கு வந்து நான்கு மாதம் ஆகி­றது. 44 நிமி­டங்­க­ளில் நான்கு நிமி­டம் கூட தன்­னு­டைய ஆட்சி சாதனை யைச் சொல்லி ஓட்டு கேட்­க­ற­துக்கு வக்கு இல்லை. 44 நிமி­ட­மும் திமு­க­வை­யும், திமுக தலை­வ­ரை­யும்,எதிர்­கட்­சித் தலை­ வரை­யும், திமுக சார்­பாக வந்து இங்கே தேர்­தல் பணி ஆற்றி யிருக்­கக்­கூ­டிய முன்­னாள் அமைச்­சர்­க­ளைப் பற்றி தான் ஒப்­பாரி வச்­சி­ருக்­கி­றாரே தவிர, அமைச்­சர் ஆதவ் அர்­ஜுனா தங்­க­ளு­டைய சொந்த செல்­வாக் கையோ, தங்­க­ளு­டைய ஆட்சி திட்­டங்­க­ளைப் பற்றி விளக்கி சொல்­வ­தற்கோ எது­வுமே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­டி­யில் இருந்­தால் தானே அகப்­பை­யில் வரும் என்று சொல்­வார்­கள். அந்த மாதி­ரி­தான் காலி பாத்­தி­ரம் டப டப டப டன்னு சத்­தம் போட்­டுட்டு நேற்றுமது­ராந்­த­கத்­தில் இருந்து போயி­ருக்­கி­றது. அவர் கேட்­கி­றார், உத­ய­நிதி ஸ்டாலின் கலை­ஞ­ரின் பேர னாதான் இருக்­காரு, அவர் என்ன கீழே இருந்து கஷ்டப்­பட்டு வந்­தா­ரான்னு கேட்­கி­றாரு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கலை­ஞ­ரின் பேரன் என்று சொல்­வ­தில் நாங்­கள் பெரு­மைப்­படு­கி­றோம். அவர் கலை­ஞ­ரின் பேரன் இல்­லாம வேற யாரு பேரன்? அவ­ருக்கு ஒரு வர­லாறு இருக்­கி­றது, ஒரு அடை­யா­ளம் இருக்­கி­றது. ஆதவ் அர்­ஜு­னா­வுக்கு என்ன அட்­ரஸ் இருக்­கி­றது? ஆதவ் அர்­ஜு­னானா த.வெ.­க.­ வில், ஆதி­கா­லத்தில இருந்து கஷ்­டப்­பட்டு அந்த கட்­சிக்கு வந்­தாரா? தவெ­க­வில இருக்­கக்­கூ­டிய ரசி­கர்­கள் எல்­லாம் போஸ்­டர் ஒட்டி, அந்த ரசி­கர் மன்­றத்­தில நற்­ப­ணி­களை செஞ்­சாங்­கன்னு சொன்னாங்­களே, அந்த மாதிரி வந்­தாரா?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எத்­தனை கட்சி மாறி­ய­வர், எடப்­பாடி பழ­னி­சாமி சொன்ன மாதிரி கட்­சிக்கு அங்­கங்க குத்­தகை எடுத்­துட்டு வராரு. அவ­ரெல்­லாம் உத­ய­நிதி ஸ்டாலி­னைப் பற்றி பேசு­வ­தற்கு கொஞ்ச­ மும் அரு­கதை இல்லை. “ஊரா நெய்­யில் ஸ்வீட் செய்­யா­தீங்க சிஎம் சார்” என்று முதல்­வர் விஜய் தனது தேர்­தல் பிரச்­சா­ரத்­தின் போது பேசி­னார். நான் கேட்கி றேன், இந்த மது­ராந்­த­கம் தொகு­தி­யி­னு­டைய தவெக வேட்­பா­ளர் யார் சார்? ஊரான் வீட்டு நெய் சார். உங்க கட்­சி­யில் யாருமே வேட்­பா­ளர் இல்­லையா? அ.தி.­மு.­க.­வில் இருந்து நீங்க பொட்டி கொடுத்து தூக்கிட்டு வந்து வச்சு இன்றைக்கு வேட்­பா­ளரா போட்டு இருக்­கீங்­களே?.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உங்க கட்­சிக்­கா­ரங்க எல்­லாம் இன்­னைக்குமன­வ­ருத்­தத்­தில இருக்கிறார்­கள். நாங்­கள் எவ்வ ளவு தூரம்போஸ்­டர் ஒட் டுனோம், நாங்க எவ்­வ­ளவு தூரம் கொடி கட்­டி­னோம், நாங்க எவ்­வ­ளவு தூரம் பாலா­பி­ஷே­கம் பண்ணிணோம், ஆனால் எங்­க­ளுக் கெல்­லாம் சீட் கொடுக்க வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஊரான் வீட்டு நெய்யில ஸ்வீட் செய்­றாரு எங்க தலை­வர்ன்னு உங்க கட் சியைப் பார்த்து கேள்வி கேட்­கி­றார்­கள். அது­மட்டுமல்ல, ரொம்ப அருமையான ஜோக் ஒன்று சொன்­னார். இங்க அக்கா சொன்­னாங்­க­ளாம், ‘மதுராந்­த­கத்­தில் தண்­ணீர் பிரச்­சனைஇருக்­கி­றது. அதை தீர்க்­க­றது நம்ம நீர் வளத்­துறை அமைச்­சரே வந்­து­விட்­டார், தண்ணீரும் வந்­து­வி­டும்’ என்று அந்த அமைச்­சரை காட்டி சொன்­னா­ராம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நீர்­வ­ளத்­துறை அமைச்சர் வந்தா நீர் வந்­து­ருமா? நீங்க நான்கு மாத்­தில் ஜூன் மாசம் 12ம் தேதி அன்று மேட்­டூர் அணையை திறக்­கி­ற­துக்கே உங்­க­ளால் முடி ய வில்லை. நீங்க மது­ராந்தகத்­துல எப்­படி தண்­ணிய கொண்டு வந்து சேர்க்க போறீங்க? அது­மட்­டு­மல்ல டாஸ்மாக்­கில் ஊழல் செஞ்சிருக்­காங்க, பாட்­டி­லுக்கு 20 ரூபா வாங்­கிட்டு இருக்­கீங்கன்னு உங்­கள் அமைச்­சரே சொல்­றாரு, ஊழ­லைப் பற்றி நீங்­கள் பேச­லாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதை­விட கொடுமை என்­ன­வென்­றால், ஓட்­டுக்கு பணம் கொடுக்­கி­றார்­கள் என்று சொல்லி திமு­ககாரங்­களை பற்றி பொய் -பிரச்­சா­ரம் செய்ய வருகிறார். இதை சொல்­வ­தற்கு ஆதவ் அர்­ஜு­னா­வுக்கு எங்­க­யா­வது துளி­யும் தார் மீக உரிமை உள்­ளதா? ஒரு எம்­எல்­ஏவை கோடிக்கணக்­கில பணம் கொடுத்து விலைக்கு வாங்­கிய நீங்­கள் எல்­லாம் திமு­க­வி­னரை பார்த்து பர்­சேஸ் பண்ண வரு­கி­றார்­கள் என்று சொல்வதற்கு உங்­க­ளுக்கு என்ன சார் ரைட் இருக்கு? அதி முக­வில் இருந்து தேர்ந்தெடுக்­கப்­பட்ட எம்­எல்­ஏவை விலைக்கு வாங்­கி­னீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதை­விட வெட்­கம் என்ன? ‘‘ஆளும் வள­ர­ணும், அறி­வும் வள­ர­ணும், அது தாண்டா வளர்ச்சி” என்று பட்­டுக்­கோட்டை சொல்லியி­ருக்­கி­றார். ஆளு­தான் வளர்ந்­தி­ருக்­கார், அறிவு வளர்ந்­தி­ருக்கா இல்­லையா என்று நான் சொல்ல தேவையில்லை, மது­ராந்­த­கத்­தில் உள்ள மக்­க­ளும் சரி, தமிழ்நாட்டு மக்­க­ளும் சரி, உங்களு­டைய நட­வ­டிக்கை யைப் பார்த்து தெரிந்து கொள்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னால் தான் சொல்றேன், தயவு செய்து தேர்­தல் பணி ஆற்ற வந்த தவெக்­கட்சிக்­கா­ரர்­கள், அமைச்­சர்கள் எல்­லாம் உங்­கள் சாதனையைச் சொல்லி ஓட்டு கேளுங்­கள். திமு­கவை திட்டுவ­தில் ஒரு பிர­யோ­ஜனமும் கிடை ­யாது.’உத­ய­நிதி எல்­லாம் ஒரு பெரிய ஆளே இல்லை? ‘நாங்க கைது பண்­ணல், கைது பண்ற அளவுக்கு அவர் பெரியஆளு கிடை­யாது’ என்று சொல்லி இருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கைது செய்த போது, உத­ய­நிதி ஸ்டாலி­னி­டம் கையெ­ழுத்து வாங்­கும் போது அரு­கில் நான் தான் இருந்­தேன் உயர்­நீ­தி­மன் றத்­தில் நீதி­ப­தி­கள் கேட்ட போது, “நாங்­கள் அவரை கைது பண்ண வில்லை என்று சொல்லி பின்­னங்­கால் பிட­றி­யில் பட ஓடி என்று நீதி­மன்­றத்­தில் சொன்ன வாச­கம் பதிவாகியுள்­ளது.இதை எல்­லாம் நீங்­கள் தெரிந்து பேச வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஏதோ மது­ராந்தகத்­தில் வந்து உட்­கார்ந்து கிட்டு பொய்யா பேசினா உங்­க­ளுக்கு ஓட்டு போட் டுரு­வோம்னு நினைக்காதீங்க. இந்த 4 மாத ஆட்சி மக்­க­ளுக்கு மிகப்­பெ­ரிய ஒரு வேத­னை­யைக் கொடுத்­துள்ளது. கரண்ட் பில் அதிகமாக வரு­கி­றது, கரண்ட் அடிக்­கடி கட் ஆகி­றது. ஏரி வேலை செய்­த­வர்­க­ளுக்கு இன்­னும் கூலி கொடுக்க வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நான் செல்­கிற இட­மெல்லாம் மக்­கள் சொல்­கி­றார்கள், சர்க்­கரை விலை ஏறியதால் டீ கடை­யில்போய் டீ, காபி வாங்கி குடிக்க முடி­ய­வில்லை. அந்த அள வுக்கு விலை ஏறி­விட்­டது. கரண்ட்ட தொட்­டா­தான் ஷாக் அடிக்­கும், ஆனால் கரண்ட் பில்லை பார்த் தாலே ஷாக் அடிக்­கி­றது. உங்­கள் ஆட்­சி­யின் லட்ச ணம் இது தான். நாவ­டக் கம் தேவை, தேர்­தல் பணி களை மட்­டும் பாருங்­கள். தேவை­யில்­லா­மல் சீண்டினால் தெரு தெரு­வாக நான் உங்­களை பற்றி பேச வேண்டி வரும். 75 ஆண்டு கால கட்­சியை பேக்­பண்ணி விட்­ட­தாக ஆதவ் பேசியுள்­ளார். மது­ராந்­த­கத்­தில் தவெ­க­வுக்கு வேட்­பா­ளர் இல்­லையே. ஏன் அதி­முக வேட்­பா­ளர் பர்­சேஸ் பண் ணினார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">75 ஆண்டு காலம் கட்சியில் அக்­மார்க் தொண்டனுக்கு சீட் கொடுக்­கி­றார் கள், தவெ­க­வுக்கு ஆளே இல்லை, அத­னால் தான் ஆன் இல்­லாத கடைக்கு டீ ஆத்­து­றாகு ஆதவ். என்னுடைய வெற்றி தமிழ்­நாட்­டில் அர­சி­யல் மாற்­றத்தை ஏற்படுத்­தும். இவ்­வாறு அவர் கூறி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>