<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="24/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,1031,609,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Sep 24 2026 03:39:05 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260924T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="24092026-CHN-07" position.sequence="07" ex-ref="24092026-CHN-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="22">இந்தியத் தேர்தல் ஆணையர்களிடையே முரண்பாடு   :</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="37">தன்னிச்சையாக செயல்படும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">எஸ்.ஐ.ஆர். விவகாரம்: 10 மாதங்களில் 14 முறை குற்றச்சாட்டு கூறிய இரு ஆணையர்கள்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">புது­டெல்லி, செப். 24 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இந்­திய தேர்­தல் ஆணை­யத்­தின் தன்­னிச்­சை­யான நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­வித்து இரண்டு தேர்­தல் ஆணை­யர்­கள் போர்க்­கொடி தூக்­கி­யுள்­ளது பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. நாட்­டின் ஜன­நா­யக தூணாக விளங்­கும் தலைமை தேர்­தல் ஆணை­யத்­தில் தலைமை தேர்­தல் ஆணை­யர் மற்­றும் இரண்டு தேர்­தல் ஆணை­யர்­கள் சம அந்­தஸ்­து­டன் செயல்­பட்டு வரு­கின்­ற­னர். கடந்த 2023ம் ஆண்டு சட்ட விதி­க­ளின்­படி, ஆணை­யத்­தின் அனைத்து முக்­கிய முடி­வு­க­ளும் ஒரு­ம­ன­தாக அல்­லது பெரும்­பான்மை அடிப்­ப­டை­யில் மட்­டுமே முறைப்­படி எடுக்­கப்­பட வேண்­டும் என்ற கட்­டா­யம் உள்­ளது. இதற்­கி­டையே, கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் பீகா­ரில் தொடங்­கப்­பட்ட வாக்­கா­ளர் பட்­டி­யல் சிறப்பு தீவிர திருத்­தப் பணி (எஸ்­ஐ­ஆர்) நாடு முழு­வ­தும் 30 மாநி­லங்­கள் மற்­றும் யூனி­யன் பிர­தே­சங்­க­ளில் தீவி­ர­மாக விரி­வு­ப­டுத்­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இந்த நட­வ­டிக்­கை­யின் மூல­மாக, சுமார் 13 கோடி வாக்­கா­ளர்­க­ளின் பெயர்­கள் வரைவு வாக்­கா­ளர் பட்­டி­ய­லி­லி­ருந்து அதி­ர­டி­யாக நீக்­கப்­பட்­டன. இது ஜன­நா­யக அமைப்­பு­கள் மற்­றும் பொது­மக்­கள் மத்­தி­யில் தங்­க­ளுக்கு வாக்­க­ளிக்­கும் உரிமை பறிக்­கப்­ப­டு­கி­றதோ என்ற கடு­மை­யான சந்­தே­கத்­தை­யும் பெரும் விவா­தத்­தை­யும் ஏற்­ப­டுத்தி இருந்­தது. இந்­நி­லை­யில், தலைமை தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமார் தலை­மை­யி­லான நிர்­வா­கம் எடுத்து வரும் முடி­வு­க­ளுக்கு எதி­ராக, மற்ற இரண்டு தேர்­தல் ஆணை­யர்­க­ளான சுக்­பீர் சிங் சந்து மற்­றும் விவேக் ஜோஷி ஆகி­யோர் கடந்த 10 மாதங்­க­ளில் 14 முறை எழுத்­துப்­பூர்­வ­மாக கடும் எதிர்ப்பை பதிவு செய்­துள்ள அதி­ரடி தக­வல்­கள் தற்­போது அம்­ப­ல­மா­கி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">புதிய வாக்­கா­ளர் சேர்க்­கைக்­கான படி­வம் 6ல் ஒன்­றிய அரசு விதி­க­ளில் திருத்­தம் செய்­யா­மல் சட்­ட­வி­ரோ­த­மாக புதிய நிபந்­த­னை­களை சேர்த்­தது, கள அள­வில் செயல்­ப­டும் வாக்­கா­ளர் பதிவு அதி­கா­ரி­க­ளின் அதி­கா­ரங்­களை பறித்து தேர்­தல் ஆணைய கம்ப்­யூட்­டர் இணை­ய­த­ளத்தை டெல்­லி­யில் இருந்து முழு­மை­யாக கட்­டுப்­ப­டுத்த முயன்­றது உள்­ளிட்ட பல்­வேறு விவ­கா­ரங்­களை அவர்­கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­னர். இது­கு­றித்து ஆணை­யக் கூட்­டத்­தில் முறை­யிட்ட சுக்­பீர் சிங் சந்து, ‘எங்­க­ளுக்கு தெரி­விக்­கா­மல் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த தன்­னிச்­சை­யான நட­வ­டிக்­கை­கள் சட்­ட­வி­ரோ­த­மா­னவை’ என்று காட்­ட­மாக எச்­ச­ரித்­த­தோடு, ஒன்­றிய அமைச்­ச­ரவை செய­லா­ள­ருக்­கும் தனித்­த­னி­யாக கடி­தம் அனுப்பி தங்­கள் எதிர்ப்பை பதிவு செய்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">குறிப்­பாக, மேற்­கு­வங்­கத்­தில் நீதி­மன்ற அதி­கா­ரி­கள் (நீதி­ப­தி­கள்) வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் சேர்த்த வாக்­கா­ளர்­க­ளுக்கு எதி­ராக தேர்­தல் ஆணை­யத்­தின் சார்­பில் யாரு­டைய அனு­ம­தி­யு­டன் மேல்­மு­றை­யீடு செய்­யப்­பட்­டது என்­பது குறித்­தும், உச்­ச­நீ­தி­மன்ற உத்­த­ரவு இருந்­தும் மென்­பொ­ருள் (தேர்­தல் ஆணைய சாப்ட்­வேர்) கோளா­றால் கோவா­வில் 97 தகு­தி­யான வாக்­கா­ளர்­கள் நீக்­கப்­பட்ட விவ­கா­ரத்­தி­லும் ஆணை­யர்­கள் கடும் அதி­ருப்தி அடைந்­துள்­ள­னர். இந்த அடுக்­க­டுக்­கான புகார்­கள் மற்­றும் கடந்த 9ம் தேதி நடந்த ஆலோ­சனை தொடர்­பாக தேர்­தல் ஆணை­யத்­தி­டம் விளக்­கம் கேட்­டும் இது­வரை எந்த பதி­லும் அளிக்­கப்­ப­ட­வில்லை. அர­ச­மைப்­புச் சட்­டத்­தின் 324வது பிரிவை நிலை­நி­றுத்த வேண்­டிய ஒரு தன்­னாட்சி அமைப்­பிற்­குள், பெரும்­பான்மை ஆணை­யர்­க­ளின் கருத்­து­களை புறந்­தள்­ளி­விட்டு தன்­னிச்­சை­யாக முடி­வு­கள் எடுக்­கப்­ப­டு­வது தேர்­தல் நடை­மு­றை­யின் வெளிப்­ப­டைத்­தன்­மைக்கே பெரும் அச்­சு­றுத்­த­லாக மாறி­யுள்ள நிலை­யில், இதற்கு முறை­யான தீர்வு காணப்­பட வேண்­டும் என்ற கோரிக்­கை­யும் எழுந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">தேர்­தல் ஆணை­யத்­தின் கட்­ட­மைப்பு மற்­றும் 2023 சட்­டம் சொல்­வது என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் 324-வது பிரி­வின்­படி தேர்­தல் ஆணை­யம் செயல்­ப­டு­கி­றது. இதில் தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஒரு­வ­ரும், இரண்டு தேர்­தல் ஆணை­யர்­க­ளும் இருப்­பார்­கள். சட்­டப்­படி மூவ­ருமே சம­மான அந்­தஸ்து கொண்­ட­வர்­கள்.. தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் என்­ப­வர் சம­மான பவர் கொண்­ட­வர்­க­ளில் முதன்­மை­யா­ன­வர் மட்­டுமே தவிர, தனிச்­சை­யாக சர்­வா­தி­கார முடி­வு­களை எடுக்க அவ­ருக்கு அதி­கா­ரம் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">2023 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் மற்­றும் பிற தேர்­தல் ஆணை­யர்­கள் நிய­ம­னச் சட்­டத்­தின் பிரிவு 18-ன் படி:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">1. ஆணை­யத்­தின் அனைத்து அலு­வல்­சார் நட­வ­டிக்­கை­க­ளும், முடி­வு­க­ளும் முடிந்­த­வரை ஒரு­ம­ன­தா­கவே எடுக்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">2. ஒரு­வேளை கருத்து வேறு­பாடு ஏற்­பட்­டால், பெரும்­பான்மை உறுப்­பி­னர்­க­ளின் கருத்­தின் அடிப்­ப­டை­யி­லேயே முடிவு செய்­யப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">3. ஆணை­யத்­தின் செயல்­பாட்டு விதி­கள் மற்­றும் வேலைப் பகிர்­வு­களை மாற்­றி­ய­மைக்க வேண்­டும் என்­றா­லும், அதற்கு மூன்று ஆணை­யர்­க­ளின் ஒரு­ம­ன­தான ஒப்­பு­தல் அவ­சி­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">ஆனால், இந்த விதி­கள் மீறப்­ப­டு­வ­தாக ஏப்­ரல் 16 அன்று சுக்­பீர் சிங் சாந்து அதி­கா­ரி­க­ளுக்­குக் கடி­தம் எழு­தி­னார். அதில், தேர்­தல் ஆணை­யத்­தின் 3 அதி­கா­ரி­க­ளின் ஒரு­மித்த ஒப்­பு­தல் இன்­றியே பல சுற்­ற­றிக்­கை­க­ளும் உத்­த­ர­வு­க­ளும் ஆணை­யத்­தின் பெய­ரில் வெளி­யி­டப்­பட்டு வரு­வ­தா­கக் குற்­றம் சாட்­டி­னார். அடுத்த எட்டு நாட்­க­ளில், ஏப்­ரல் 24 அன்று விவேக் ஜோஷி­யும் இதே விவ­கா­ரத்தை எழுப்பி, அர­சி­ய­ல­மைப்­புப் பிரிவு 324 மற்­றும் 2023 சட்ட விதி­க­ளின்­படி ஆணை­யத்­தின் முழு ஒப்­பு­தல் இல்­லா­மல் எந்த அறி­விப்­பும் வெளி­யா­கக் கூடாது என்று கண்­டிப்­பு­டன் தெரி­வித்­தார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">இரண்டு ஆணை­யர்­கள் எழுப்­பிய
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">4 முக்­கி­யப் புகார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">ஆணை­யர்­கள் சாந்து மற்­றும் ஜோஷி எழுப்­பிய 14 ஆட்­சே­ப­னை­க­ளும் தேர்­தல் ஆணை­யத்­தின் மிக முக்­கி­ய­மான நான்கு அடிப்­ப­டைப் பணி­களை மைய­மா­கக் கொண்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின்­படி நிய­மிக்­கப்­பட்ட மூன்று தேர்­தல் ஆணை­யர்­க­ளில், பெரும்­பான்மை யான இரண்டு ஆணை­யர்­க­ளின் கருத்­து­கள் புறக்­க­ணிக்­கப்­பட்டு, தன்­னிச்­சை­யாக முடி­வு­கள் எடுக் கப்­பட்டு வந்­த­தாக எழுந்­துள்ள இந்­தக் குற்­றச்­சாட்­டு­கள், இந்­திய ஜன­நா­ய­கத்­தின் தூணாக விளங் கும் தேர்­தல் ஆணை­யத்­தின் நடு நிலைமை மீது மிகப்­பெ­ரிய கேள்வி களை எழுப்பி உள்­ளன. தேர்­தல் ஆணைய வட்­டா­ரங்­கள் அனைத்து முடி­வு­க­ளும் ஒரு­ம­ன­தா­கவே எடுக்­கப்­பட்டு வரு­வ­தாக வெளியே செய்­தி­கள் வந்­தா­லும்.. அவை எல்­லாம் பொய் என்­பது தற்­போது தெரிய வந்­துள்­ளது. இந்த கடி­தங்­கள் மூலம் தேர்­தல் ஆணை­யத்­தில் ஆல் இஸ் நாட் வெல்என்­பது தெரிய வந்­துள்­ளது!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>