<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="24/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,66,957,1092" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Sep 24 2026 00:47:22 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260924T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="24092026-MDU-04" position.sequence="04" ex-ref="24092026-MDU-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="101">நாடக மேடையல்ல சட்டமன்றம்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="20">புதுடெல்லியில் இருந்து வெளியாகும் ‘தி பயனியர் ‘ ஆங்கில நாளேட்டில் செப். 22 ஆம் தேதியன்று வெளியான செய்திக் கட்டுரை.</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="16">இதை எழுதிய ரவிகுமார் சொக்க லிங்கம் அமெரிக்காவில் முன்னாள் படைவீரர் களுக்கான விவகாரங்களில் பணியாற்றும் மருத்துவர், மனநல மருத்துவர் மற்றும் பொது சுகாதார அறிஞராகும்.</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup895564_04_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup895544_04_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">புதிய தமிழ்­நாடு அரசு, பொது வாழ்க்­கை­யில் புதிய அணு­கு­மு­றை­யை­யும் செயல்­து­டிப்­பை­யும் கொண்­டு­வ­ரு­வ­தற்கு உரிமை பெற்­றுள்­ளது. ஆனால், தலைப்­புச் செய்­தி­க­ளில் இடம்­பி­டிக்­கும் முழக்­கங்­கள் அர­சின் செயல்­பாட்டை அள­வி­டும் அள­வு­கோ­லாக இருக்க முடி­யாது. மாற்­றத்தை உறுதி செய்­வ­தா­கக் கூறி ஆட்­சிக்கு வந்த அரசு, அர­சி­யல் நாட­கங்­க­ளின் மூலம் அல்ல; மக்­க­ளின் வாழ்க்­கை­யில் ஏற்­ப­டுத்­தும் முன்­னேற்­றங்­க­ளின் மூலமே அதை நிரூ­பிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்டு மக்­கள் ஒரு கட்­சிக்­காக வாக்­க­ளிக்­க­வில்லை. அவர்­கள் ஒரு அர­சைத் தேர்ந்­தெ­டுத்­தி­ருக்­கி­றார்­கள். இந்த வேறு­பாடு வெளிப்­ப­டை­யா­கத் தெரிந்­தி­ருக்க வேண்­டும். ஆனால், புதிய அரசு பத­வி­யேற்ற பிறகு,  பெரும்­ப­குதி தேர்­தல் பிரச்­சா­ரத்­தைப் போலவே நீண்­டு­ கொண்­டி­ ருப்­ப­தைப் பார்க்க முடி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதி­கப்­ப­டி­யான உணர்ச்­சி­கள், கூர்­மை­யான முழக்­கங்­கள், கவ­ன­மா­கத் திட்­ட­மி­டப்­பட்ட பரி­மாற்­றங்­கள் ஆகி­யவை அடுத்­த­டுத்த அர­சி­யல் தரு­ணங்­க­ளைத் தேடும் முயற்­சி­யா­கத் தெரி­கின்­றன. ஆனால், ஜன­நா­யக நிர்­வா­கத்­தின் உண்­மை­யான பணி என்­பது அள­வி­டக்­கூ­டிய வாக்­கு­று­தி­கள், நிர்­வா­கத் தெளிவு மற்­றும் அதி­கா­ரத்­தைப் பொறுப்­பு­டன் பயன்­ப­டுத்­தும் நிறு­வ­னங்­க­ளுக்கு மதிப்பு அளிப்­பது ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யா­கக் கொண்­ட­தாக இருக்க வேண்­டும். இவை மெல்ல மெல்ல பழைய நினை­வு­க­ளாக மாறி­வி­டக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இது மாற்­றத்­துக்கு எதி­ரான வாதம் அல்ல. தமிழ்­நாட்டு வாக்­கா­ளர்­க­ளுக்கு மாற்­றத்தை எதிர்­பார்க்­கும் முழு உரி­மை­யும் உள்­ளது. குறிப்­பாக, நீண்ட கால­மாக நிலவி வரும் அர­சி­யல் அமைப்­புக்கு மாற்­றாக புதிய தலை­முறை அர­சி­யல் வர வேண்­டும் என்று எதிர்­பார்த்த பல இளம் வாக்­கா­ளர்­கள் உள்­ள­னர். புதிய அணு­கு­மு­றை­யு­டன் பொது தலைமை உரு­வாக வேண்­டும் என்று அவர்­கள் விரும்­பி­யது தவ­றா­ன­தல்ல. ஆனால், புதிய அரசு எவ்­வாறு செயல்­ப­டு­கி­றது என்­ப­தில்­தான் உண்­மை­யான சோதனை உள்­ளது. தலை­வர்­க­ளைக் கொண்­டா­டு­வ­தன் அள­வைக் கொண்டு அரசு மதிப்­பி­டப்­ப­டக் கூடாது; அது அளிக்­கும் பதில்­க­ளின் தரத்­தைக் கொண்டே மதிப்­பி­டப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாடு சட்­டப்­பே­ரவை என்­பது தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பிர­தி­நி­தி­கள் மக்­க­ளுக்­கா­கப் பேசும் ஒரு ஜன­நா­யக மேடை. பாது­காப்­பான சாலை­கள், நல்ல பள்­ளி­கள், முறை­யா­கச் செயல்­ப­டும் மருத்­து­வ­ம­னை­கள், நம்­ப­க­மான வேலை­வாய்ப்­பு­கள், மலிவு விலை­யில் உணவு, அர­சி­யல் ஆத­ர­வின்றி அனை­வ­ருக்­கும் கிடைக்­கும் நீதி ஆகி­ய­வற்றை மக்­கள் எதிர்­பார்க் ­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டின் அர­சி­ய­லில் அதி­கா­ரம் பெற்­ற­வர்­க­ளுக்­கும், அதே­போல் எதிர்க்­கட்­சி­யில் இருப்­ப­வர்­க­ளுக்­கும் இதைப் புரிந்­து­கொள்ள வேண்­டிய பொறுப்பு உள்­ளது. சட்­டப்­பே­ர­வை­யின் வர­லாற்­றில் கருத்­தி­யல் மோதல்­கள், சமூக நீதி, கூட்­டாட்­சிக் கொள்கை, நலத்­திட்­டங்­கள் மற்­றும் விளிம்­பு­நிலை மக்­க­ளின் உரி­மை­கள் தொடர்­பான கடு­மை­யான விவா­தங்­கள் இடம்­பெற்­றுள்­ளன. மொழி கூர்­மை­யாக இருக்­க­லாம். ஆனால், சிறந்த நாடா­ளு­மன்ற விவா­தங்­கள் உண்மை, நினை­வாற்­றல் மற்­றும் வாதத்­தின் அடிப்­ப­டை­யி­லேயே நடை­பெ­றும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­டப்­பே­ரவை நட­வ­டிக்­கை­கள் ஒரு ஜன­நா­யக வாய்ப்பு. தேர்­தல் முடிந்த பிற­கும் அது நீடிக்­கி­றது. எதிர்க்­கட்­சி­யி­ன­ரின் விமர்­ச­னங்­களை விசா­ர­ணைக்கு அப்­பாற்­பட்­ட­தா­கக் கரு­தக்­கூ­டாது. அறி­விப்­பு­க­ளுக்­குப் பதி­லாக தெளி­வான பதில்­கள் வழங்­கப்­பட வேண்­டும். அமைச்­சர்­கள் தங்­க­ளு­ டைய துறை­க­ளைப் பற்றி முழு­மை­யா­கத் தெரிந்­தி­ருக்க வேண்­டும். பொது­மக்­க­ளின் பணம் செல­வி­டப்­ப­டும் விதம் வெளிப்­ப­டை­யாக இருக்க வேண்­டும். காவல்­துறை நட­வ­டிக்­கை­கள், விசா­ர­ணை­க­ளின் நிலை, திட்­டங்­க­ளின் முடி­வு­கள் ஆகி­யவை ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு அமைச்­சர் கருத்தை உயர்த்தி பேசு­வது மட்­டும் பிரச்­சி­னை­யல்ல. ஆனால், ஒரு அமைச்­ச­ரவை ஒட்­டு­மொத்­த­மாக ஒரே குர­லில் மட்­டுமே பேசு­வது பிரச்­சி­னை­யாக இருக்­க­லாம். தவ­று­க­ளைச் சுட்­டிக்­காட்­டும் குரல்­கள் மீண்­டும் மீண்­டும் ஒதுக்­கப்­ப­டும்­போது, நிர்­வா­கத்­தின் மீது நம்­பிக்கை குறைந்து விடும். ஒவ்­வொரு வாக்­கு­று­திக்­கும் போதிய நிதி ஒதுக்­கீடு இருக்க வேண்­டும். ஒவ்­வொரு அறி­விப்­புக்­கும் ஒரு காலக்­கெடு இருக்க வேண்­டும். ஒவ்­வொரு தோல்­விக்­கும் அதற்­கு­ரிய பொறுப்பு நிர்­ண­யிக்­கப்­பட வேண்­டும். தேர்­தல் முடி­வு­டன் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைப்­பதை நிறுத்­தி­விட்டு, அதன் பின்­னர் செயல்­பா­டு­க­ளின் அடிப்­ப­டை­யில் மதிப்­பி­டப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முதல் முறை­யாக ஆட்­சிக்கு வரும் நிர்­வா­கத்­தில், அமைச்­சர்­கள் தங்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ள துறை­க­ளின் அள­வை­யும் சிக்­கல்­க­ளை­யும் அறிந்­து­கொள்ள சிறிது காலம் தேவைப்­ப­ட­லாம். அதில்தவறு இல்லை. ஆனால், அந்­தக் குறையை விரை­வாக சரி­செய்ய வேண்­டும். அமைச்­சர்­க­ளுக்கு முக்­கி­யக் கொள்கை விவ­ரங் ­கள், பயிற்சி பெற்ற கொள்­கைக் குழுக்­கள், துறை வாரி­யான ஆய்­வு­கள், ஆலோ­ச­னை­கள் மற்­றும் குடி­மக்­க­ளின் கருத்­து­க­ளைப் பெறும் முறை­கள் ஆகி­யவை இருக்க வேண்­டும். இலக்­கு­கள் மற்­றும் முன்­னேற் ­றம் அல்­லது தோல்வி குறித்து முறை­யா­கத் தக­வல் வெளி­யி­டப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தற்­போ­தைய மாநில அரசு நிர்­வா­கம் நலத்­திட்­டங்­கள், முத­லீடு, பெண்­க­ளின் பாது­காப்பு மற்­றும் போதைப்­பொ­ருள் கட்­டுப்­பாடு உள்­ளிட்ட பல்­வேறு நட­வ­டிக்­கை­களை அறி­வித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவற்­றில் சில நட­வ­டிக்­கை­கள் நியா­ய­மான முறை­யில் பரி­சீ­லிக்­கப்­பட வேண்­டி­யவை. விரி­வு­ப­டுத்­தப்­பட்ட மின்­சார 
ஆத­ரவு, பயிர்க்­க­டன் நிவா­ர­ணம், குறிப்­பிட்ட டாஸ்­மாக் (TASMAC) விற்­பனை நிலை­யங்­களை மூடு­தல், போதைப்­பொ­ருள் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் போன்­றவை இதில் அடங்­கும். ஆனால், அறி­விப்­பு­கள் மட்­டும் போதாது. முக்­கி­ய­மான பல வாக்­கு­று­தி­கள் இன்­னும் முழு­மை­யாக செயல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை அல்­லது ஒரு பகுதி மட்­டுமே நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உதா­ர­ண­மாக, மாதாந்­திர உத­வித்­தொ­கையை அதி­க­ரிப்­பது, அரசு வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வது, கட்­ட­ண­மில்லா பயண வச­தியை விரி­வு­ப­டுத்­து­வது போன்­றவை குறிப்­பி­டத்­தக்­கவை. பெண்­க­ளுக்­கான இல­வ­சப் பய­ணத் திட்­டம் குறித்­தும் அரசு நிதிச் சுமையை கார­ண­மா­கக் குறிப்­பிட்­டுள்­ளது. அதே நேரத்­தில், உள்­கட்­ட­மைப்பு மேம்­பாடு மற்­றும் விரி­வாக்­கத் திட்­டங்­களை அறி­வித்து வரு­கி­றது. இவை அனைத்­தும் நடை­மு­றை­யில் எவ்­வாறு செயல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன என்­ப­து­தான் முக்­கி­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">வாக்­கு­றுதி என்­பது ஒரு சடங்கு ஆவ­ணம் அல்ல; அது பொது­மக்­க­ளி­டம் அளிக்­கப்­ப­டும் ஒரு பொது உறு­தி­மொழி. ஒரு வாக்­கு­று­தி­யின் செலவு ஏற்க முடி­யாத அள­வுக்கு அதி­க­மாக இருந்­தால், அதற்­கான கணக்­கீடு வெளிப்­ப­டை­யாக வெளி­யி­டப்­பட வேண்­டும். திட்­டம் மாற்­றப்­பட்­டி­ருந்­தால், புதிய விதி­மு­றை­கள் தெளி­வா­கக் கூறப்­பட வேண்­டும். அதை நிறை­வேற்ற முடி­ய­ வில்லை என்­றால், அதற்­கான கார­ணத்தை மக்­க­ளி­டம் தெரி­விக்க வேண்­டும். இல்­லை­யெ­னில், வாக்­கு­று­தி­க­ளைப் பாது­காப்­பது போல் பேசிக்­கொண்டே அதன் அடிப்­ப­டைக் கருத்தை அமை­தி­யாக கைவி­டு­வது போன்ற நிலை உரு­வா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வன்­முறை மற்­றும் குற்­றங்­க­ளை­விட முக்­கி­ய­மான பிரச்­சினை வேறு எது­வும் இல்லை. குடும்­பங்­கள் தங்­கள் குழந்­தை­கள் போதைப்­பொ­ருள், அச்­சு­றுத்­தல் மற்­றும் குற்­ற­வி­யல் வலைப்­பின்­னல்­க­ளில் சிக்­கிக்­கொள்­வதை விரும்­பு­வ­தில்லை. பொது­மக்­க­ளின் பாது­காப்பை அள­வி­டக்­கூ­டிய நிர்­வா­கக் குறி­யீ­டாக அரசு கருத வேண்­டும். அதி­க­ரித்து வரும் போதைப்­பொ­ருள் பயன்­பாட்டை வெறும் சில கைது நட­வ­டிக்­கை­க­ளால் மட்­டுமே கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. பல துறை­களை உள்­ள­டக்­கிய சட்­டங்­கள், பொது சுகா­தா­ரத் தலை­யீ­டு­கள், மறு­வாழ்வு, சட்ட அம­லாக்­கம் மற்­றும் பெற்­றோர் ஆலோ­சனை ஆகி­யவை ஒருங்­கி­ணைந்து செயல்­பட வேண்­டும். இது நீண்ட கால முயற்­சி­யாக இருக்­க­லாம்; ஆனால் நல்ல நிர்­வா­கத்­திற்­கான அடிப்­ப­டை­யாக இது அமை­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">போதைப்­பொ­ருள் தடுப்­புக் குழுக்­கள், தடுப்பு நட­வ­டிக்­கை­கள் மற்­றும் மறு­வாழ்வு முயற்­சி­க­ளை­யும் நிர்­வா­கம் அறி­வித்­துள்­ளது. அவை தொடங்­கப்­பட வேண்­டிய அவ­சி­ய­மான நட­வ­டிக்­கை­கள். ஆனால், கைது எண்­ணிக்­கை­கள் மற்­றும் கைப்­பற்­றப்­பட்ட போதைப்­பொ­ருட்­க­ளின் அளவு மட்­டுமே வெற்­றிக்­கான இறுதி அள­வு­கோ­லாக இருக்க முடி­யாது. அதி­க­மான கைது 
நட­வ­டிக்­கை­கள் சிறந்த சட்ட அம­லாக்­கத்­தைக் காட்­டக்­கூ­டும்; அதே நேரத்­தில் ஒரு பெரிய பிரச்­சினை இருப்­ப­தை­யும் அவை வெளிப்­ப­டுத்­த­லாம். போதைப்­பொ­ருள் கடத்­தல் வலைப்­பின்­னல்­கள் உண்­மை­யில் முறி­ய­டிக்­கப்­ப­டு­கி­றதா, இளை­ஞர்­கள் பய­னுள்ள சிகிச்­சை­யைப் பெறு­கி­றார்­களா, மீண்­டும் குற்­றத்­தில்ஈடு­ப­டு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை குறை­கி­றதா, வன்­முறை குறை­கி­றதா என்­ப­தை­யும் கண்­கா­ணிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பொதுப் பாது­காப்பு குறித்த மாதாந்­திர அறிக்­கையை அரசு வெளி­யிட வேண்­டும். அதில் போதைப்­பொ­ருள் வழக்­கு­கள், கைது நட­வ­டிக்­கை­கள், காவல்­துறை நட­வ­டிக்­கை­கள், மீண்­டும் குற்­றத்­தில் ஈடு­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை, பாலி­யல் குற்­றங்­கள், பெண்­கள் பாது­காப்பு குறி ­யீ­டு­கள் மற்­றும் முக்­கிய விசா­ர­ணை­க­ளின் நிலை ஆகி­யவை இடம்­பெற வேண்­டும். அர­சி­யல் ரீதி­யாக செல்­வாக்கு பெற்­ற­வர்­க­ளுக்­காக வேறு வித­மான அள­வு­கோல்­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றதா என்­ப­தை­யும் அந்த அறிக்கை வெளிப்­ப­டுத்த வேண்­டும். ஒரே வித­மான தர­நி­லை­கள் அனை­வ­ருக்­கும் பொருந்த வேண்­டும். செல்­வாக்கு பெற்­ற­வர்­க­ளுக்கு மட்­டும் சகிப்­புத்­தன்மை காட்­டப்­ப­டும் நிலை­யில் ஜன­நா­ய­கம் வலுப்­பெறாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டின் இளம் வாக்­கா­ளர்­கள், தேர்­தல் நாளுக்­குப் பிறகு மீத­முள்ள குடி­மக்­க­ளுக்­கான மிக முக்­கி­ய­மான பணியை இப்­போது மேற்­கொள்ள வேண்­டும். புதிய தலை­வரை ஆத­ரிப்­ப­தற்கு அவர்­கள் தங்­கள் தீர்ப்பை முழு­மை­யாக விட்­டுக்­கொ­டுக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. பாராட்­டு­வது மௌன­மாக இருப்­ப­தைக் குறிக்­காது. உணர்ச்சி என்­பது ஒரு ஜன­நா­ய­கத்­தின் ஒரு பகு­தி­யாக இருக்­க­லாம்; ஆனால் ஜன­நா­ய­கம் என்­பது ஒரு பொறுப்­பும் கூட.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தமிழ்­நாட்­டின் சாத­னை­கள் ஒரே ஒரு தலை­வ­ரால் உரு­வாக்­கப்­பட்­டவை அல்ல. தி.மு.க. தனது சமூ­க­நீதி பாரம்­ப­ரி­யத்­தை­யும் பொது வளர்ச்சி மாதி­ரி­யை­யும் உரு­வாக்­கி­யுள்­ளது. அ.தி.மு.க.வும் தனது ஆட்­சிக்­கா­லத்­தில் பல்­வேறு நிர்­வா­கத் திட்­டங் ­க­ளை­யும் கொள்­கை­க­ளை­யும் செயல்­ப­டுத்­தி­யுள்­ளது. மற்ற சிறிய கட்­சி­க­ளும் சமூக நீதி உள்­ளிட்ட பல்­வேறு விஷ­யங்­க­ளில் முக்­கிய பங்­க­ளிப்­பு­க­ளைச் செய்­துள்­ளன. அவற்­றின் வர­லாற்­றுப் பங்­க­ ளிப்­புகள் விமர்­ச­னத்­திற்கு அப்­பாற்­பட்­டவை என்று சொல்ல முடி­யாது. ஆனால், ஒரே ஒரு கட்­சி­யால் மட்­டும் தமிழ்­நாட்­டின் ஜன­நா­யக மரபு உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. தற்­போது எந்­தக் கட்சி ஆட்­சி­யில் இருக்­கி­றதோ, அந்­தக் கட்­சிக்கு மட்­டும் சொந்­த­ மா­ன­து­மல்ல. அது தமிழ்­நாட்டு மக்­கள் அனை­வ­ருக்­கும் சொந்­த­மா­னது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>