<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,66,957,1220" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Sep 25 2026 03:36:39 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260925T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="25092026-CHN-05" position.sequence="05" ex-ref="25092026-CHN-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame899028_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup898990_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup899869_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="16">இ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ந்­தத் தலைப்பு  அறி­ஞர் அண்ணா வைத்த தலைப்பு. வேறொரு பிரச்­சி­னை­யைப் பற்றி இத்­த­லைப்­பின் கீழ் அறி­ஞர் அண்ணா விளக்­கம் தந்­தி­ருப்­பார். அந்­தத் தலைப்பை ஆ.இரா­சா­வின் சமீ­பத்­திய பேச்­சைப் பற்றி என் கருத்­தைச் சொல்வ தற்­காக நான் இங்கே பயன்­ப­டுத்­திக் கொண்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சட்­ட­மன்­றத்­தில் முத­ல­மைச்­சர் விஜய்­யும் சட்ட அமைச்­சர் CTR நிர்­மல்­கு­மார் என்­ப­வ­ரும் கழ­கத் தலை­வர் ஸ்டாலின் மிசா கைதி­யாக சென்­றது தியா­கப்­போ­ராட்­டம் அல்ல. வேறு கார­ணங்­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு சிறை­யில் அடைக் கப்­பட்­ட­வர். ஸ்டாலின் சிறை அதி­கா­ரி­க­ளால் தாக்­கப்­ப­ட­வில்லை என்­றெல்­லாம் பொய்த் தக­வல்­க­ளைப் பேசி­யி­ருக்­கி­றார்­கள். சமூக விரோ­தச் செயல்­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்­டார்­கள் என்று கூறி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இதற்­குக் கண்­ட­னம் தெரி­விக்­கும் வித­மாக கடந்த செப்­டம்­பர் 12 ஆம் தேதி கழ­கத்­தி­னர் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­தி­னர். அந்த ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்­குக் கழக முன்­னணி வீரர்­கள் தலை­மை­யேற்று உரை­யாற்­றி­னர். சென்­னை­யில் இரண்டு இடங்­க­ளில் கண்­டன ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெற்­றன. வட­சென்­னை­யில் நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டத்­திற்கு ஆர்.எஸ்.பாரதி தலைமை ஏற்­றார். தென் சென்­னை­யில் சைதை­யில் நடந்த கண்­டன ஆர்ப்­பாட்­டத்­திற்­குத் தலைமை தாங்கி ஆ.இராசா உரை­யாற்­றி­னார். முதல்­வர் விஜ­யை­யும் இதர அமைச்­ச­ரை­யும் மிகக் கடு­மை­யாக விமர்­ச­னம் செய்து அப்­போது அவர் பேசி­னார். அப்­பேச்சை அவர், அவ­ரா­கவே முன்­வந்து பேசி­னாரா? இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கழ­கத் தலை­வர், முன்­னாள் முதல்­வர், நூறாண்டு கடந்த அர­சி­யல் இயக்­கத்­தின் குரு பீடத்தை அலங்­க­ரிப்­ப­வர் பொய்த் தக­வல்­க­ளால் தாக்­கப்­ப­டு­கி­றார். அதற்­கான கண்­ட­னம் தமி­ழ­கம் முழு­மை­யும் நடை­பெ­று­கி­றது. ஒவ்­வொரு முன்­னணி வீர­ரும் ஒவ்­வொரு வித­மான கருத்­து­
களை  – விமர்­ச­னங்­களை எடுத்து வைக்­கி­றார்­கள். ஆனால் ஆ.இராசா ஆவே­சத்­தி­னால் உணர்ச்சி மேலீட்­டி­னால் தலை­வர் தாக்­கப்­ப­டும் நிலை­யைக் கண்டு பொறுக்­கா­மல் கடு­மை­யான சொற்­க­ளால் 
தாக்­கு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘கல்கி’ ஒரு காலத்­தில் எழு­தி­யது போல ‘தாக்­கி­னால் திருப்­பித் தாக்­குங்­கள்’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">என்­கிற அறம் இரா­சா­வின் ஆயு­த­மா­கி­றது. அதை வலு­வான காரண, காரிய விவா­த­மாக்­கி­விட்­டார். கே.பால­சந்­த­ரின் 
கதா­நா­ய­கன் ஒரு திரைப்­ப­டத்­தில் நல்ல உடுப்பு அணிந்து வீதி­யில் நடந்து போய்க்­கொண்­டி­ருப்­பான். அந்த வீதி­யில் தண்­ணீர் தேங்­கி­யி­ருக்­கி­றது. அதைக் கடந்து கொண்டு இருக்­கி­றான் அந்­தக் 
கதா­நா­ய­கன். ஒரு கார் அப்­போது வேக­மாக வரு­கி­றது. வீதி­யில் தேங்­கிய தண்­ணீர் மீது கார் செல்­கி­றது. அத­னால் தண்­ணீர் கதா­நா­ய­க­னின் மீது அடிக்­கி­றது;  அவன் அணிந்த உடுப்­பெல்­லாம் நனைந்து விடு­கி­றது. கதா­நா­ய­கன் ஆவே­ச­மாக அந்­தக் காரோட்­டியை ‘....யா பையா’ என்று திட்­டு­கி­றான். உணர்ச்சி – ஆவே­சப் பேச்சு வெளிப்­பட்டு விடு­கி­றது. இது எல்லா மனி­தர்­க­ளுக்­கும் உண்­டா­ன­து­தான். ஆகவே திரைப்­ப­டக் காட்­சி­யா­க­வும் அது ஆகி­
விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தமி­ழக அர­சி­யல் மேடை­க­ளில் பூங்­காற்­றும் வீசு­வ­துண்டு. தென்­றல் வந்து தெம்­மாங்­குப் பாடு­வ­தும் உண்டு. சண்­ட­மா­ரு­தம் – பெருங்­காற்று – கடும் புயல் வீசி சேதப்­ப­டுத்­தி­ய­தும் உண்டு. சற்­றொப்ப 70 ஆண்­டு­க­ளா­கத் தமி­ழக மேடை­க­ளைப் பார்த்­தும், கேட்­டும், பக்­கம் நின்று செவி­ம­டுத்­தும் இருக்­கின்­றேன். இப்­போது எனக்கு வயது 85. யாரும் மறு கன்­னத்­தைக் காட்­ட­வில்லை. தேவ­தத்­தன் புத்­த­னைக் கொல்ல வந்­த­போதுஅவர் போல புன்­ன­கைப் பூக்­க­வில்லை. அவ­ர­வர் உணர்ச்­சிக்­கேற்ப மேடைப் பேச்­சு­க­ளுக்கு எதிர்­வினை ஆற்­றிக்  கொண்­டு­தான் இருந்­த­னர். அதற்­காக ஆவே­சப் பேச்சை நான் சரி என்று  சொல்ல வர­வில்லை. மனித இயல்பு மாறு­வ­தற்கு – குண­மா­று­தலை அடை­வ­தற்கு ‘அறம்’­­கூட சற்­றுப் பின்­வாங்­கத்  தொடங்­கு­கி­றது என்றே சொல்ல வரு­கின்­றேன். அறத்­தின் செயல்­பாடு இல்­லாத போது அங்கே மறம் வந்து கோலோச்­சு­கி­றது. அது எதிர்­வி­னை­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அறி­ஞர் அண்ணா பொதுக்­கூட்ட மேடை­க­ளில் விபூதி வீர­முத்து என்­ற­வர் எப்­ப­டிப் பேசு­வார் என்­பதை எடுத்­துக் கூறி­யி­ருக்­கி­றார். நான் வீபூதி வீர­முத்து பேச்­சைக் கேட்­ட­தில்லை. ஆனால் அணு­குண்டு அய்­யாவு, திருப்­பூர் வின்­சென்ட், எம்.எஸ்.கிரி­கோரி, திருப்­பத்­தூர் ராம­மூர்த்தி (பின்னா ளில் இவர் தி.மு.க.வில் இணைந்­து­விட்­டார்) ஆகி­யோர் ஆபா­சத்­தின் உச்­சிக்­குப் போய் பொது மேடை­க­ளில் ஆடி ஆடிப் பேசி­ய­தைப் பார்த்­தும் கேட்­டும் இருக்­கி­றேன். அண்­ணா­து­ரைக்­கும் கருணா நிதிக்­கும் அப்­பன் யார் என்றே தெரி­யா­த­வர்­கள். இவர்­கள் எல்­லாம் கட்­சி­யின் தலை­வர்­கள் – என்று பேசி­னார்­கள். அறி­ஞர் அண்­ணா­வின் முகத்­தைப் பற்றி ஒரு தலை­வர் கேலிச் செய்து பேசி­னார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘மூஞ்­சி­யைப் பார் மூஞ்­சியை.... இந்த மூஞ்­சியா முதல் மந்­தி­ரி­யா­கப் போகுது’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">என்று கேட்­டார்­கள். அண்ணா சொன்­னார்,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘இந்த முகம் பார்க்க வேண்­டி­ய­வர்­கள் பார்த்து இர­சிக்க வேண்­டி­ய­வர்­கள் இர­சித்த முகம்’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">என்று பெருத்த ஆர­வா­ரத்­திற்­கி­டையே பொதுக்­கூட்­டங்­க­ளில் பதில் அளித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நீதிக்­கட்சி காலத்­தில் கண்­ணி­ய­மிக்க பேச்­சு­க­ளைத் தேர்­தல் பரப்­பு­ரை­யா­கப் பேசு­வ­தற்­குப் பதில் தரக்­கு­றை­வான பேச்­சு­க­ளைப் பேசத் தொடங்­கி­ய­வர் சத்­தி­ய­மூர்த்தி அய்­யர்­தான் என்று ஏடு­க­ளைப் புரட்­டிப் பார்த்­தால் தெரிந்­து­கொள்ள முடி­கி­றது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">“தாலி அறுத்த இரா­ம­சாமி முத­லி­யார்க்கா உங்­கள் ஓட்டு”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">என்று பிரச்­சா­ரம் செய்­த­வர் சத்­தி­ய­மூர்த்தி அய்­யர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆபர்ட்ஸ்­பரி மாளி­கை­யில் (அறி­வா­ல­யத்­தின் பக்­கத்­திலே இருந்த பெரிய திரு­மண மண்­ட­பம் – இப்­போது வேறு பெய­ரில் ஏதோ அலு­வ­ல­கம்  ஒன்று அங்கே இயங்­கு­கி­றது) சி.பா.ஆதித்­த­னா­ருக்­குப் பிறந்­த­நாள் விழா நடை­பெற்­றது. அந்த விழா­வில் கலை­ஞ­ரும், இலட்­சிய நடி­கர் எஸ்.எஸ்.ஆரும் கலந்து கொண்­ட­னர். கல்­கண்டு ஆசி­ரி­யர் தமிழ்­வா­ணன் அந்­நி­கழ்ச்­சி­யில் கலந்து கொண்டு பேசி­னார். அண்ணா அப்­போது தமது கடு­மை­யான தோள்­வ­லிக்­குச் சிகிச்சை எடுத்­துக் கொண்­டி­ருந்த காலம். தமிழ்­வா­ணன் பேசு­கி­ற­போது</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘இந்­தக் காலத்­தில் தோள்­வ­லித் தலை­வர்­கள், கால்­வ­லித் தலை­வர்­கள் எல்­லாம் உண்டு. ஆதித்­த­னார் அப்­படி அல்ல’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">என்­றார். கூட்­டம் தமிழ்­வா­ண­னைப் ‘பேசாதே, போ’ என்று குரல் எழுப்­பி­யது. பிறகு கலை­ஞ­ரும் எஸ்.எஸ்.ஆரும் அவ­ரைப் பத்­தி­ர­மா­கக் கூட்­டத்­தி­லி­ருந்து வழி அனுப்பி வைத்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">‘குரல் கெட்ட புது­வைக்­கு­யிலே! பாதக்­கு­றடு எடுத்து பன்­நூறு முறை அடிப்­பேன்’ என்று கண்­ண­தா­சன் ஒரு முறை பார­தி­தா­சனை எழு­தி­விட்­டார். பெரிய சர்ச்சை ஆயிற்று. இதே பாணி­யில் கண்­ண­தா­சன், பிர­த­ம­ராக இருந்த நேரு­வை­யும் தாக்­கி­னார். அவர் ஒரு வாரத்­தில் சென்னை வரு­வ­தாக இருந்­தது. காங்­கி­ரஸ் ஊழி­யர் கூட்­டத்­தில் நேரு ஆபர்ட்ஸ்­ப­ரி­யில்  வந்து கலந்து கொண்­டார். அந்­தக்  கூட்­டத்­திற்கு வந்த நேரு­வின் காலில் நெடுங்­கி­டை­யாக எட்டு அங்­கங்­கள் மண்­ணில் பட கண்­ண­தா­சன் விழுந்­தார். 1971 இல் நடை­பெற்ற தேர்­த­லில் மகா­கூட்­ட­ணி­யி­னர் ‘முண்­டச்சி’ என்­கிற சொல்­லைப் பயன்­ப­டுத்­தி­னர். அதே ஆண்டு நடை­பெற்ற தேர்­த­லில் மயி­லாப்­பூ­ருக்­குத் தி.மு.க. ஆத­ரவு வேட்­பா­ள­ரா­கச் சிலம்­புச் செல்­வர் ம.பொ.சி. நிறுத்­தப்­பட்­டார். இவ­ருக்கு எதி­ராக ஒரு பெண் வேட்­பா­ளர் நிறுத்­தப்­பட்­டார். அவர் ம.பொ.சி.யின் மீசையை ஆபாச பேச்­சின் மூலம் எடுத்­து­ரைத்­தார். இது பெரும் சர்ச்சை ஆயிற்று. கல­வ­ரம் நடந்­தது. அந்­தப் பெண் வேட்­பா­ளர் தாக்­கப்­பட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">பிர­த­ம­ராக இருந்த நேரு ‘நான்­சென்ஸ்’ என்று கூறி­ய­தற்­காக இர­யில் நிறுத்­தப் போராட்­டத்தை நடத்­தி­யது தி.மு.க. அது மும்­மு­னைப் போராட்­டத்­தில் ஒன்று. தி.மு.க. தலை­வர்­க­ளுள் ஒரு­வ­ரான என்.வி.நட­ரா­சன் கடற்­க­ரைக் கூட்­டத்­தில், ‘மத்­திய மந்­தி­ரி­கள் தமி­ழ­கம் வந்­தால் கல்­லால் அடி­யுங்­கள்’ என்று பேசி­னார். அந்­தக் கூட்­டத்­தில் இருந்த அண்ணா அவரை அப்­பேச்­சைத் திரும்­பப் பெறு­மாறு கேட்­டுக் கொண்­டார். அவர் பேசிக் கொண்­டி­ருக்­கிற போதே அதற்­கான வருத்­தத்­தைத் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தென் தமிழ்­நாட்­டுத் தலை­வர்­க­ளுள் ஒரு­வர் அறி­ஞர் அண்­ணாவை மதுரை நக­ரில் நடை­பெற்ற கூட்­டத்­தில் தகாத சொற்­க­ளால் வசை­மா­ரிப் பொழிந்­தார். அறி­ஞர் அண்ணா மது­ரை­யில்­தான் அப்­போது இருந்­தார். அந்­தத் தலை­வர் பேசி­ய­தற்­குப் பிறகு இரண்டு நாள்­க­ளில் அண்ணா பேசு­வ­தாக முன்­னரே கழ­கத்­தி­னர் கூட்­டத்தை ஏற்­பாடு செய்து இருந்­த­னர்.  அந்­தக் கூட்­டத்­தில் அண்ணா பேசி­னார். கல­வ­ரம் நிக­ழக்­கூ­டும் என நினைத்து வேல், கம்பு, ஆயு­தங்­க­ளோடு அந்­தக் கூட்­டத்­திற்கு வந்­த­வர்­களும் உண்டு. ஆனால் அறி­ஞர் அண்ணா அந்­தத் தலை­வ­ருக்­குப் பதில் அளித்­துப் பேச­வில்லை. மாறாக, அப்­போ­தைய அர­சி­யல் பிரச்­சி­னை­க­ளைப் பற்றி பேசி­னார். எந்­தக் கல­வ­ர­மும் நடை­பெ­ற­வில்லை. கூட்­டம் அமை­தி­யாக நடந்­தது. எதி­ரி­கள் ஏமாற்­ற­ம­டைந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">1967 தேர்­தல் தொடங்­கப்­ப­டும் வரை தி.மு.க.வைக் காங்­கி­ரஸ், கம்­யூ­னிஸ்­டு­கள், சோச­லிஸ்­டு­கள், தமி­ழ­ர­சுக் கழ­கம் என அனை­வ­ரும் எல்லா வகை­யான‘ரசங்­களை’ பொது­மே­டை­க­ளில் பிழிந்­தெ­டுத்­த­னர்.  இப்­ப­டி­யான செய்­தி­க­ளைச் சொல்­லிக்­கொண்டே போக­லாம்.  எடுத்­துக் காட்­டாக சில­வற்றை கூறி இருக்­கி­றேன். தி.மு.க.வும் 
எல்­லாக்­கட்­சி­க­ளுக்­கும் பதில் கூறி­யது. எதி­ரி­கள் எந்த பாணி­யில் பதில் கூறு­கி­றார்­களோ அதே பாணி­யில் பதில் கூறி­யது தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அர­சி­யல் மேடை­கள் இவ்­வாறு இருப்­ப­தற்­குக் கார­ணம் முத­லில் தாக்­கு­தல் தொடுக்­கப்­ப­டு­கிற போது அந்­தத் தாக்­கு­தல் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளால் முடிக்­கப்­ப­டு­வது தானே – மேடை அறம்! அது அப்­போ­தும் நடந்­தது. இப்­போ­தும் நடக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அப்­படி நிகழ்ந்­த­து­தான் இன்­றைய ஆ.இரா­சா­வின் பேச்­சும்! அது முத­லில் தொடுக்­கப்­பட்­டது யாரால்?– என்று பார்க்­க­வேண்­டும். ஆகவே அதற்­கு­ரிய முடிப்பை ஆ.இராசா நிகழ்த்­தி­னார். அதற்­குக் கண்­ட­னங்­கள் எழுந்­தன. ஆ.இராசா வருத்­தம் தெரி­வித்து அறிக்கை வெளி­யிட்­டார். தினத்­தந்தி நாளே­டு­தான் கொஞ்­சம் முழு­மை­யாக அந்த அறிக்­கையை வெளி­யிட்டு இருக்­கி­றது. ஆ.இராசா தனது தலை­வர் பொய்­யு­ரை­யால் தாக்­கப்­ப­டு­கி­றார். அவ­ரது தியா­கத்­தைக் கொச்­சைப்­ப­டுத்­து­கி­றார்­கள். இழி­வு­ப­டுத்­து­கி­றார்­கள் என்­கி­ற­போது கண்­டன ஆர்ப்­பாட்­டக் கூட்­டத்­தில் தலை­மை­யேற்று பேசு­கி­ற­போது, ஆ. இராசா கே.பாலச்­சந்­தி­ர­ரின் திரைப்­பட நாய­கன் ஆகி­வி­டு­கி­றார். ஆவே­சப்­ப­டு­கி­றார். கோபப்­ப­டு
­கி­றார். பேசி­வி­டு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அப்­போது அவர் தி.மு.க.வின் துணைப் பொதுச் செய­லா­ளர் இல்லை. எம்.பி. இல்லை. அறம் அவ­ரி­ட­மி­ருந்து மறைந்­து­வி­டு­கி­றது. ‘உதைத்த காலுக்கு முத்­த­மி­ட­லாமா?’ என்ற உணர்வு மேலோங்­கி­வி­டு­கி­றது. சொற்­க­ளால் அவர்­கள் தாக்­கி­ய­தால் இவ­ரும் தாக்­கி­னார். இவ்­வ­ள­வு­தான் பிரச்­சினை. வழக்­குப் பதிவு செய்­யப்­பட்டு இருக்­கி­றது. விசா­ர­ணைக்கு வரு­மா­னால் தொடுத்­த­தும் பேசப்­ப­டும். முடித்­த­தும் பேசப்­ப­டும்.  நீதி­மன்­றம் தீர்ப்பு வழங்­கட்­டும். நீதிக்கு நாம் தலை­வ­ணங்­கு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆ.இராசா தனது வருத்­தத்தை வெளி­யிட்ட நாளே­டு­களை ஒன்­று­வி­டா­மல் நான்  படித்­துப் பார்த்­தேன். மற்ற ஏடு­க­ளில் எனக்­குத் தென்­ப­டாத ஒரு  செய்தி  ‘தீக்­க­தி­ரில்’ ஒற்றை வரி­யில் மிளிர்ந்­தது. ‘ஆ.இரா­சா­வின் பேச்­சுக்கு சி.பி.எம். உள்­ளிட்ட பல்­வேறு அர­சி­யல் கட்­சித் தலை­வர்­கள் கண்­ட­னம் தெரி­வித்­த­னர். மேலும் கனி­மொ­ழி­யும் பொருத்­த­மான திருக்­கு­றள் ஒன்­றைத் தனது ‘எக்ஸ்’ பக்­கத்­தில் பதிந்­துள்­ளார்’. இது­தான் மிளிர்ந்த அந்த ஒற்றை வரி. என்ன திருக்­கு­றள் பதிந்­துள்­ளார்’ – என்று விசா­ரித்­துப் பார்த்­த­தில், ‘யாகா­வா­ரா­யி­னும் நாகாக்க, காவாக்­கால் சோகாப்­பர் சொல்­லி­ழுக்­குப் பட்டு’ 
என்­பதே அந்­தக் குறள். இது அறத்­துப்­பா­லில் இல்­லற இய­லில் கூறப்­பட்­டுள்ள குறள். எதை­யும் காக்­கா­மல் போனா­லும் நாகாப்­பது  பேர­றம்­தான். ‘சிறு­மை­யுள் நீங்­கிய இன்­சொல்’ (குறள்98)லைத்­தான் ஆ.இராசா கூறி­யி­ருப்­பார். அவ­ருக்கு அந்த வாய்ப்பை எதி­ரி­கள் வழங்­க­வில்லை. அற­மல்­லாத தீமையை அகற்­று­வ­தற்­கும் அது­தான் துணை என்று (குறள்76) பொது­மறை கூறு­கி­றதே – ‘மறத்­திற்­கும் அஃதே துணை’ என்­கி­றதே. ஆகவே இராசா கடுஞ்­சொல்­லைப் பயன்­ப­டுத்­தி­னார். இது­தான் ஆ.இரா­சா­வின் ஆவே­சப் பேச்­சுக்­குக் கார­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">முதல்­வர் விஜய் வகை­ய­றாக்­கள் தி.மு.க. தலை­வர் மீது வைக்­கும் பொய்­யான – உண்­மைக்கு மாறான, அதைப்­போல நட­வாத ஒன்­றைச் சட்­ட­மன்­றத்­தி­லும் வெளி­யே­யும் கூறு­வ­தற்கு அவர்­கள் நாணப் பட­வில்லை.  அந்­தப் பொய்­யைச் சொல்­லிக் கொண்டே இருக்­கி­றார்­கள். நாணு­டை­மை­யைப் பற்றி மணக்­கு­ட­வர் சொல்­கி­ற­போது ‘அறம் பொருள் இன்­பங்­க­ளில் பிறர் பழி­யா­மல் ஒழு­கு­தல்’ என்­கி­றார். பரி­தி­யார் சொல்­கி­றார், ‘நாணு­டை­மை­யா­வது நீதி­யில்­லா­தது கண்­டால் நாணு­தல்’ என்­கி­றார். பொருள்­பா­லில் அர­சி­யல் ஒழி­பி­ய­லில்  நாணு­டை­மை­யைப் பற்றி பேசு­கிற வள்­ளு­வத்­திற்கு மணக்­கு­ட­வர், பரி­தி­யார் சொல்­லு­கிற விளக்­கம் அது. இந்த நாணம் இல்­லா­த­தால் – அற­மல்­லா­த­வற்றை அவர்­கள் பேசு­வ­தால் – கட்சி அறத்­தைக் காக்க வேண்டி ஆ.இராசா வெடிப்­புற பேச வேண்­டி­ய­தா­யிற்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆகவே ‘யாகா­வா­ரா­யி­னும்’ குறளை ஆ.இராசா செயல்­ப­டுத்த முடி­யா­த­தற்­குக் கார­ணம், அற­மல்­லா­த­வற்றை அவர்­கள் சொல்­வ­தா­லும், அத­னால் நாண­ய­மற்­ற­வர்­க­ளாக அவர்­கள் இருப்­ப­தா­லும், தொடர்ந்து பொய்­யைப் பேசு­வ­தா­லும்  ஆ.இராசா கடுஞ்­சொல்­லைப் பயன்­ப­டுத்த வேண்­டி­ய­தா­யிற்று – வலிந்தோ உள்­நோக்­கத்­தோடோ அவர் அப்­ப­டிப் பேச­வில்லை.  நாகாக்­கும் அறம் மறம் ஆகி 
விடு­கி­றது. இது வள்­ளு­வத்­தின் ஒரு கூரே. வள்­ளு­வம் ஒரு வாழ்­வி­யல் நூல். மேற்­ப­ரப்­பில் அதன் பொருள் பொது­மை­யாய் இருக்­கும். அதை நடை­
மு­றைப்­ப­டுத்தி பார்க்­கும்­போது அதன் வாழ்­வி­யல் நடை பெரும் பொரு­ள­ழ­குக் கொண்­ட­தாக இருக்­கும். அதன் பொரு­ளைக் கொண்­டும் கூட்­டி­யும் காணும்­போது பசி­பிக்­கின் ஆழ­மாய் சென்று கொண்டே இருக்­கும்.  குறளை விமர்­ச­னத்­திற்­குப் பயன்­ப­டுத்­து­வ­தி­லும் ஓர் ஆய்வு மனப்­பான்மை இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இது­வரை கழ­கத்­திற்­காக உயிர்த் தியா­கம் செய்­த­வர்­க­ளின் பட்­டி­யலை தயா­ரித்­தால் ஆயி­ரம் பேருக்கு மேல் இருக்­கும்.  அவர்­கள் எல்­லாம் உணர்ச்­சி­யின் மேலீட்­டால் – ஆவே­சத்­தால் – கொள்­கைப் பற்­றால் – தலை­வர் கலை­ஞர் மேல் காட்­டிய பிணைப்­பால் தம்­மு­யி­ரையே போக்­கிக் கொண்­ட­வர்­கள்,  அந்த வெளி­யில் தெரி­யாத வேர்­கள் வீர­வ­ணக்­கத்­திற் ­கு­ரி­ய­வர்­கள்; போற்­று­த­லுக்­கு­ரி­ய­வர்­கள்; என்­றும் தி.மு.கழ­கத்­தி­ன­ரால் நினை­வு­கூ­ரத் தக்­க­வர்­கள். அந்த அடி­மட்ட தோழ­னின் உணர்­வைத்­தான் வீரா­வே­சம் கொண்டு ஆ.இராசா பேசி­னார். எதி­ரொ­லித்­தார். அறி­ஞர் அண்ணா தலைப்­பிட்­டது போல உதைத்த காலுக்கு முத்­த­மி­டவா முடி­யும்?</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>