<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,66,957,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Sep 25 2026 03:40:19 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260925T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="25092026-CHN-08" position.sequence="08" ex-ref="25092026-CHN-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="47">கட்டமைக்கப்பட்ட விஜய்யின் மாய பிம்பம் – உடைந்து உண்மை முகம் வெளிவருகிறது!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup899415_08_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தொட்­டுப் பார்த்­தால் இரத்த நிற­மாம்; 
புட்­டுப் பார்த்­தால் மொத்­த­மும் புழு­வாம்!” என்ற சொல­வடை அத்­திப் பழத்­தை­விட விஜய் ஆட்­சிக்­குத்­தான் மிக­வும் பொருத்­த­மாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">வேலை இல்­லையா? வேலை வரும். விவ­சா­யக் கடனா? தள்­ளு­படி. பெண்­க­ளின் குடும்­பச் சுமையா? மாதம் ரூ.2,500 கிடைக்­கும். பேருந்­துக் கட்­ட­ணமா? தமிழ்­நாடு முழு­வ­தும் பெண்­க­ளுக்கு இல­வ­சப் பய­ணம். மின்­கட்­ட­ணச் சுமையா? அனை­வ­ருக்­கும் 200 யூனிட் இல­வ­சம். சமை­யல் எரி­வாயு விலை அதி­க­ரிப்பா? அனைத்­துக் குடும்­பங்­க­ளுக்­கும் ஆண்­டுக்கு ஆறு சிலிண்­டர் இல­வ­சம். மருத்­து­வச் செலவா? ஒவ்­வொரு குடும்­பத்­துக்­கும் ரூ.25 இலட்­சம் காப்­பீடு. ஊழலா? ஒழித்­து­வி­டு­வோம். மாநில உரி­மையா? விட்­டுக்­கொ­டுக்க மாட்­டோம் என விஜய் கையில் ஏதோ மந்­தி­ரக்­கோல் இருப்­பது போன்ற தோற்­றத்­தைத் தேர்­தல் பிரச்­சா­ரத்­தின் போது த.வெ.க. உரு­வாக்­கி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மாற்று அர­சி­யல்”, “ஊழ­லற்ற ஆட்சி”, “தூய­சக்தி”, “மக்­க­ளின் தலை­வர்”, “தாய்­மா­மன்” என்று த.வெ.க–விற்­கும் விஜய்க்­கும் சமூக ஊட­கங்­க­ளில் பிரம்­மாண்ட பிம்­பம் கட்­ட­மைக்­கப்­பட்­டது. ஆனால், தேர்­த­லில் பேசி­ய­தை­யும் ஆட்­சி­யில் செய்­வ­தை­யும் ஒப்­பிட்­டுப் பார்த்­தால், அந்­தப் பிம்­பத்­தின் ஜிகினா தாள்­கள் ஒவ்­வொன்­றாக உரிந்து உண்மை முகம் வெளியே தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">த.வெ.க. தனது தேர்­தல் அறிக்­கை­யில் ஐந்து ஏக்­கர் வரை உள்ள விவ­சா­யி­க­ளின் கூட்­டு­ற­வுப் பயிர்க்­க­டனை முழு­மை­யா­கத் தள்­ளு­படி செய்­வ­தா­கப் பிரச்­சா­ரம் செய்­தது; ஆட்­சிக்கு வந்த பின் பல எதிர்ப்­பு­கள் வந்த பின்­பும் கூட கடன் தள்­ளு­ப­டியை ரூ.75,000 என்ற உச்­ச­வ­ரம்­புக்­குள் சுருக்­கி­விட்­டது. கொள்­மு­தல் விலை நெல்­லுக்கு குவிண்­டால் ரூ.3,500, கரும்­புக்கு டன் ரூ.4,500 என்­ற­வர்­கள், ஆட்­சிக்கு வந்­த­தும் நெல்­லுக்கு ரூ.2,600–ரூ.2,750, கரும்­புக்கு ரூ.4,000 என்று முடித்­துக்­கொண்­டார்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அதே­போல், பெண்­களை “மதிப்­பு­மிகு மக­ளிர்” என்று அழைத்து மாதம் ரூ.2,500 வழங்­கு­வோம் என்­றார்­கள்; ஆட்­சிக்கு வந்த பின்பு, அத்­திட்­டத்தை உடனே செயல்­ப­டுத்த வாய்ப்­பில்லை என்று பல்டி அடித்­தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்­த­தை­ய­டுத்து, மாதம் ரூ.1,000 என்ற பழைய தொகை­யைக் கொடுத்து அவ­கா­சம் கேட்டு காலம் கடத்­து­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">“வெற்­றிப் பய­ணம்” என்ற பெய­ரில் அனைத்­துப் பெண்­க­ளுக்­கும் தமிழ்­நாடு முழு­வ­தும் கட்­ட­ண­மில்லா பேருந்­துப் பய­ணம் என்­றார்­கள்; நடை­மு­றை­யில் பேருந்­தின் வகை, வழித்­த­டம், சேவை என அடுக்­க­டுக்­கான நிபந்­த­னை­கள். “அன்­ன­ப­பூ­ரணி சூப்­பர் சிக்ஸ்” என்­றார்­கள்; ஆறு சிலிண்­டர் மூன்­றா­கி­விட்­டது, அதற்­கும் ஆண்டு குடும்ப வரு­மா­னம் ரூ.2.5 இலட்­சத்­துக்­குள் இருக்க வேண்­டு­மென்ற உச்­ச­வ­ரம்பு. பெய­ரில் மட்­டும் மதிப்பு, வெற்றி, சூப்­பர் சிக்ஸ்; ஆனால், ஆட்­சிக்கு வந்­த­தும் கால அவ­கா­சம், வரம்பு, எண்­ணிக்­கை­யில் வெட்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அதி­லும் த.வெ.க. அர­சின் ‘சமத்­துவ’ அள­வு­கோல்­தான் மிக­வும் விசித்­தி­ர­மா­னது. மாதம் ரூ.20,833–க்கு மேல் வரு­மா­னம் இருந்­தால் ஒரு குடும்­பத்­துக்கு இல­வச சிலிண்­டரே கிடை­யா­தாம்! ஆனால், சுமார் ரூ.1,048 கோடி தனிப்­பட்ட சொத்­தும் குடும்­பத்­தோடு சேர்த்து ரூ.5,863 கோடி சொத்­தும் இருப்­ப­தாக அறி­வித்த லால்­குடி எம்.எல்.ஏ. லீமா ரோஸ் மார்­டி­னுக்கு அரசு கார் தாரா­ள­மா­கக் கிடைக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மக்­க­ளுக்கு நலத்­திட்­டம் கொடுப்­ப­தற்கு வரு­மான உச்­ச­வ­ரம்பு, நிதி நெருக்­கடி என நாட­கம் ஆடும் த.வெ.க. அரசு, எம்.எல்.ஏ–க்­க­ளுக்கு கார் வழங்­கும்­போது மட்­டும் எந்த வரம்­பை­யும் வைப்­ப­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அதே­போல், “போதை­யில்­லாத தமிழ்­நாட்டை உரு­வாக்­கு­வோம்” என்று கூறி ஆட்­சிக்கு வந்­து­விட்டு, இன்று டாஸ்­மாக் பார்­கள் தனி­யார்­ம­ய­மாக்­கல், இணை­ய­வழி மது முன்­ப­திவு என ஒட்­டு­மொத்த தமிழ்­நாட்­டை­யும் போதை­யின் பிடி­யில் சிக்க வைப்­ப­தற்­கான ஏற்­பா­டு­க­ளைச் செய்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தேர்­த­லில் அள்ளி வீசிய கவர்ச்­சி­க­ர­மான வாக்­கு­று­தி­க­ளைக் காற்­றில் பறக்­க­விட்டு தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள த.வெ.க–வின் முதல் நிதி­நிலை அறிக்கை (2026 – 2027) கார்ப்­ப­ரேட் சேவைக்கே முன்­னு­ரிமை அளிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கல்­வித்­து­றைக்­கான நிதி வெட்­டிச் சுருக்­கப்­பட்­டுள்­ளது; மின்­சா­ரம், போக்­கு­வ­ரத்து, மருத்­து­வம் என அனைத்­துத் துறை­க­ளி­லும் “அர­சு–­த­னி­யார் கூட்­டாண்மை (PPP)” முறை­யைப் புகுத்தி தனி­யார்­ம­யத்தை தீவி­ரப்­ப­டுத்­து­கி­றது; விவ­சா­யத்­து­றை­யி­லும் செயற்கை நுண்­ண­றிவை (AI) உள்­நு­ழைத்து கார்ப்­ப­ரேட் சேவை­யாற்­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அரசு ஊழி­யர்­க­ளுக்­கும் ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் பழைய ஓய்­வூ­தி­யத் திட்­டத்தை மீண்­டும் கொண்­டு­வ­ரு­வோம் என்று கூறி­விட்டு, திருத்­தப்­பட்ட 
நிதி­நிலை அறிக்­கை­யில் ஓய்­வூ­தி­யம் மற்­றும் பணி ஓய்­வுப் பலன்­க­ளுக்­கான ஒதுக்­கீட்­டில் சுமார் ரூ.14,003 கோடியை வெட்­டி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தேர்­த­லுக்கு முன்பு “நண்பா, நண்­பீஸ்!” என்று இளை­ஞர்­க­ளைக் கட்­டி­ய­ணைத்த விஜய், அவர்­கள் அர­சைக் கேள்வி கேட்­ட­தும் அடக்­கு­மு­றை­களை ஏவு­கி­றார். இட­து­சா­ரி­க­ளும் சி.ஜே.பி–யும் நடத்­தும் போராட்­டங்­க­ளில் மாண­வர்­கள் பங்­கேற்­ப­தைத் தடுக்க ஒரு சுற்­ற­றிக்கை; குஜி­லி­யம்­பா­றை­யில் சி.பி.ஐ.–சி.பி.எம். செயல்­பா­டு­க­ளைக் கண்­கா­ணிக்க இன்­னொரு சுற்­ற­றிக்கை. தேர்­த­லுக்கு முன்பு மாண­வர்­கள் நண்­பர்­கள்! ஆட்சி அமைக்க உத­வி­ய­போது சி.பி.ஐ.–சி.பி.எம். தோழ­மைக் கட்­சி­கள்! ஆட்­சிக்கு வந்த பின்போ, இளை­ஞர்­க­ளைப் போராட்­டத்­தி­லி­ருந்து விலக்­க­வும் இட­து­சா­ரி­க­ளைக் கண்­கா­ணிக்­க­வும் அதி­கா­ரி­கள் ஏவப்­ப­டு­கி­றார்­கள். எதிர்ப்பு எழுந்­த­தும் இரண்டு சுற்­ற­றிக்­கை­க­ளும் திரும்­பப் பெறப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அதே­போல், தமிழ்­நாட்­டில் த.வெ.க. ஆட்­சிக்கு வந்து இந்த நூறு நாட்­க­ளில் ஏழு லாக்­கப்  படு­கொ­லை­கள் நடந்­துள்­ளன. போரா­டும் ஜன­நா­யக சக்­தி­களை கண்­கா­ணிப்­பது, பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் மீது அடக்­கு­மு­றை­கள் ஏவு­வது, அதி­க­ரிக்­கும் கொட்­ட­டிப் படு­கொ­லை­கள் ஆகி­யவை த.வெ.க. ஆட்­சி­யில் போலீசு ராஜ்­ஜி­யம் நிறு­வப்­பட்டு வரு­வ­தைக் காட்­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தூய்­மைப் பணி­யா­ளர்­க­ளி­ட­மும் இதே இரட்டை வேடம். கடந்த தி.மு.க. ஆட்­சி­யில், தனி­யார்­ம­யத்தை எதிர்த்­துப் போரா­டிய தூய்­மைப் பணி­யா­ளர்­களை பனை­யூ­ருக்கு அழைத்து ‘ஆத­ரவு’ தெரி­வித்­தார் விஜய். ஆனால், த.வெ.க. ஆட்­சிக்கு வந்­த­தும் 12 மாந­க­ராட்­சி­க­ளின் திடக்­க­ழி­வுப் பணி­களை அரசு – தனி­யார் கூட்­டாண்­மைக்கு திறக்க ஆய்வு டெண்­டர் விடப்­பட்­டது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">த.வெ.க. ஆட்­சிக்கு வந்­த­தி­லி­ருந்து இது­வரை 10–க்கும் மேற்­பட்ட ஆண­வப் படு­கொ­லை­கள் அரங்­கே­றி­யுள்­ளன. “ஆட்­சிக்கு வந்­தால் ஆண­வப் படு­கொ­லை­களை தடுக்க சிறப்­புச் சட்­டம் இயற்­று­வோம்” என்ற வாக்­கு­று­தியை தற்­போது வரை த.வெ.க. அரசு நிறை­வேற்­ற­வில்லை. தமிழ்­நாடு முழு­வ­தும் தலித் மக்­கள் மீதான சாதி­வெ­றி­யாட்­டங்­கள் கட்­ட­விழ்த்து விடப்­ப­டு­வதை கைகட்டி வேடிக்கை பார்க்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அண்­மை­யில், “அண்­ணல் அம்­பேத்­கர் அய­லக உத­வித்­தொகை” கடந்த ஐந்து மாதங்­க­ளாக வர­வில்லை என மலே­சி­யா­வில் பயி­லும் தமிழ்­நாட்டு ஆராய்ச்சி மாண­வர் பார­தி­தா­சன் அம்­ப­லப்­ப­டுத்­தி­யி­ருந்­தார். இவ்­வி­வ­கா­ரத்­தில் பாதிக்­கப்­பட்ட மாண­வ­ரையே குற்­ற­வா­ளி­யாக்­கும் போக்கை த.வெ.க. அரசு கையாண்­டது; அந்த வேலையை அமைச்­சர் வன்­னி­ய­ரசு முன்­னின்று செய்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மறு­பு­றம், ஆதி­தி­ரா­வி­டர் நலத்­து­றைக்கு “சமூ­க­நீ­தித் துறை” என்று பெயர் மாற்றி பார்ப்­ப­னிய சக்­தி­க­ளின் பிரித்­தா­ளும் சூழ்ச்­சிக்கு த.வெ.க. அரசு துணை­போ­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பெண்­கள் பாது­காப்­பிற்­காக “சிங்­கப்­பெண்” படை உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால், ஆயு­தப் படை பெண் போலீசே கூட்­டுப்­பா­லி­யல் வன்­கொ­டு­மைக்கு உள்­ளாக்­கப்­பட்ட அவ­லம் அரங்­கே­றி­யுள்­ளது. குழந்­தை­கள், சிறு­மி­கள் மீதான பாலி­யல் வன்­மு­றை­கள் தீவி­ர­ம­டைந்து வரு­கி­றது. பாலி­யல் வன்­கொ­டுமை, போக்சோ வழக்­கு­க­ளில் த.வெ.க. நிர்­வா­கி­களே அடுத்­த­டுத்து கைதா­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஆட்­சிக்கு வரும் முன்பு கன்­னி­யா­கு­மரி ஐ.ஆர்.இ.எல். (IREL) அணுக்­க­னி­மச் சுரங்­கத் திட்­டத்தை எதிர்த்த விஜய், தனது ஆட்­சி­யில் அத்­திட்­டத்­திற்­கான 1,144.06 ஹெக்­டேர் நில ஒதுக்­கீட்­டின் செல்­லு­ப­டிக் காலத்தை ஓராண்டு நீட்­டித்­துள்­ளார். தேர்­த­லுக்கு முன்பு கட­லோர மக்­க­ளின் அச்­சம் கண்­ணுக்­குத் தெரிந்­தது; ஆட்­சிக்கு வந்­த­தும் மோடி அரசு கூறும் ‘தேசி­யப் பாது­காப்பு’, ‘போர்த்­தந்­திர முக்­கி­யத்­து­வம்’ கண்ணை மறைத்­து­விட்­டதா? அனைத்­தும் கார்ப்­ப­ரேட் சேவை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பரந்­தூர் விமான நிலை­யத் திட்­டம் மக்­கள் போராட்­டத்­தின் கார­ண­மாக ரத்து செய்­யப்­பட்­டி­ருப்­பது மக்­க­ளின் வெற்றி. ஆனால், அத்­திட்­டத்­திற்­கா­கக் கைய­கப்­ப­டுத்­திய நிலங்­களை மீண்­டும் அம்­மக்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கா­மல் அங்கு வேறு திட்­டத்­தைக் கொண்­டு­வ­ரு­வோம் என்று கூறு­வது எந்த விதத்­தில் நியா­யம்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்த நூறு நாட்­க­ளின் மொத்­தச் சித்­தி­ரத்­தை­யும் வைத்­துப் பார்த்­தால் 2013–14–இல் மோடி­யைச் சுற்­றிக் கட்­ட­மைக்­கப்­பட்ட பிம்ப அர­சி­ய­லு­ட­னான ஒற்­றுமை தெளி­வா­கும். அப்­போது “ஊழ­லற்ற தலை­வர்”, “வளர்ச்­சி­யின் நாய­கன்”, “வேலை­வாய்ப்­பின் மீட்­பர்” என்று மோடியை முன்­னி­றுத்­தி­னார்­கள்; இன்று “மாற்று அர­சி­யல்”, “ஊழ­லற்ற தலை­வர்”, “மக்­க­ளின் மீட்­பர்” என்று விஜய்­யைச் சந்­தைப்­ப­டுத்­து­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஒற்­றுமை விளம்­ப­ரத்­தில் மட்­டும் இல்லை; போலி வாக்­கு­று­தி­கள், பொய் பிரச்­சா­ரங்­கள், மக்­கள் பிரச்­சி­னை­க­ளில் கள்­ள­மௌ­னம் காப்­பது, அரசை எதிர்ப்­ப­வர்­கள் மீது கண்­கா­ணிப்பு – அடக்­கு­முறை, பொதுத்­து­றை­யில் தனி­யார்­ம­யம், கார்ப்­ப­ரேட்­டுக்கு சிவப்­புக் கம்­ப­ளம் என அனைத்­தி­லும் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">விவ­சாயி முதல் மீன­வர் வரை, பெண்­கள் முதல் அரசு ஊழி­யர் வரை அனை­வ­ருக்­கும் கொடுத்த வாக்­கு­று­தி­க­ளில் ஏமாற்று, மோசடி செய்த விஜய்.. ஆம் இவர் ஒரு மோசடி முத­ல­மைச்­சர்..</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>