<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,32,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="8"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Sep 25 2026 03:39:21 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260925T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="25092026-CHN-10" position.sequence="10" ex-ref="25092026-CHN-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">25.09.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="26">தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமா­ரின் தன்­னிச்­சை­யான நட­வ­டிக்­கை­கள்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="50">இந்­திய நாட்­டின் ஜன­நா­ய­கத்­துக்­கும், குடி­ய­ர­சுக்­கும் ஆபத்து!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி எச்­ச­ரிக்கை!</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="18">மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்தில் – நாளை</lang>
	<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="18"> </lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="29">கழக வேட்பாளர் இ.பரந்தாமன் வாக்கு சேகரிக்கிறார்!</lang>
	</hl7>
<hl8 id="Headline1" class="1" style="Headline8">
		<lang class="3" style="Headline8"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="19">தொகுதிப் பொறுப்பாளர்கள் தா.மோ.அன்பரசன் – க.சுந்தர் அறிவிப்பு!</lang>
	<lang class="3" style="Headline8"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="19"> </lang>
	</hl8>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame898488_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup899195_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup899194_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup898553_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup865226_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="6" source="veeramani_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="7" source="24092026வல்ல_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="8" source="AnbarasanT.M_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="9" source="KSundar_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="10" source="24092026வல்ல1_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="11" source="Theerargal1_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="12" source="Alanthur2492_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">சென்னை, செப். 25–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி விடுத்­து ள்ள அறிக்கை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இந்­தி­யத் தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மா­ரின் மீது, மற்ற இரு தேர்­தல் ஆணை­யர்­க­ளும் புகார் தெரி­வித்­துள்­ள­னர். தேர்­தல் ஆணை­யத்­திற்­குள் நடந்­து­வ­ரும் பிரச்­சி­னை­கள் குறித்து நேற்று (23.9.2026) ஆங்­கில நாளே­டான ‘தி இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ்’ வெளிக் கொண்­டு­வந்­துள்ள செய்­தி­கள் நாட்­டையே அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் படி, தேர்­தல் ஆணை­யம் என்­பது சுயேட்­சை­யான அமைப்­பா­கும். ஒரே ஒரு தேர்­தல் ஆணை­யர் மட்­டுமே இருந்த சூழ­லில், 1989 ஆம் ஆண்டு மூன்று தேர்­தல் ஆணை­யர்­கள் என்ற அமைப்பு தோற்­று­விக்­கப்­பட்டு, இரண்­டரை மாதங்­கள் மட்­டுமே இருந்­தது. பின்­னர், 1993 அக்­டோ­பர் முதல் மூன்று தேர்­தல் ஆணை­யர்­கள் என்­ப­தும், அதில், ஒரு­வர் தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் என்­ப­து­மான நடை­முறை உரு­வாக்­கப்­பட்­டது. ஒரு­வரே தன்­னிச்­சை­யாக முடி­வெ­டுப்­ப­தற்­குப் பதி­லாக, நாட்­டின் மிக முக்­கி­ய­மான இந்­தப் பொறுப்­பில், கூட்­டுப் பொறுப்­பும், கூட்டு அறி­வும் (Collective Wisdom) இருப்­பது நல்­லது என்ற நோக்­கத்­திற்­கா­கவே, இந்த மூன்று தேர்­தல் ஆணை­யர்­கள் என்ற முறை உரு­வாக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தேர்­தல் ஆணை­யர்­க­ளைத் தேர்ந்­தெ­டுப்­பது தொடர்­பான  ‘அனூப் பரன்­வால் எ. இந்­திய ஒன்­றிய அரசு’ வழக்­கில் தேர்­தல் ஆணை­யர் சார்­பற்­ற­வ­ராக இருக்க வேண்­டும் என்ற நோக்­கில், 2023 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் அய்ந்து நீதி­ப­தி­கள் அடங்­கிய அமர்வு தீர்ப்பு வழங்­கி­யது. அதில் பிர­த­மர், எதிர்க்­கட்­சித் தலை­வர், இந்­தி­யத் தலைமை நீதி­பதி அடங்­கிய மூவர் குழு தேர்­தல் ஆணை­யர்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்து குடி­ய­ர­சுத் தலை­வர் மூலம் நிய­மிக்­க­லாம் என்று கூறி­ய­து­டன், நாடா­ளு­மன்­றம் இதற்­கான தனிச் சட்­டத்தை இயற்­றும் வரை இந்த ஆணை இருக்­கும் என்று கூறி­யது. ஆனால், அதே ஆண்­டின் இறு­தி­யில், தேர்­தல் ஆணை­ய­ரைத் தேர்ந்­தெ­டுக்­கும் குழு­வில் இந்­தி­யத் தலைமை நீதி­ப­திக்­குப் பதி­லாக, ஓர் ஒன்­றிய அமைச்­சர் இடம்­பெ­றும்­வ­கை­யில் சட்­டத்தை வடி­வ­மைத்து நிறை­வேற்­றி­யது ஒன்­றிய பா.ஜ.க. அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இதன் மூலம், நடு­நி­லைமை ஏற்­ப­டு­வ­தற்கு மாறாக, மூவ­ரில் இரு­வர் (பிர­த­மர், ஒன்­றிய அமைச்­சர்) ஆளுங்­கட்சி சார்­பா­ன­வர்­க­ளா­க­வும், ஒரு­வர் மட்­டுமே மாற்று அணி­யி­ன­ரா­க­வும் (எதிர்க்­கட்­சித் தலை­வர்) இருக்­கும் வகை­யில் இந்­தச் சட்­டம் உரு­வாக்­கப்­பட்­டது. நாடா­ளு­மன்­றத்­தின் இந்­தச் சட்­டம், உச்­ச­நீ­தி­மன்­றத் தீர்ப்­புக்கு மாறா­னது என்று கூறி தொடுக்­கப்­பட்ட வழக்கு (ஜெயா தாக்­கூர் எ. இந்­திய ஒன்­றிய அரசு) உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் நடை­பெற்று வந்த நிலை­யில், இரு நீதி­ப­தி­க­ளின் மாறு­பட்ட முடி­வு­கள் கார­ண­மாக, அவ்­வ­ழக்கு உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் அர­சி­ய­ல­மைப்­புச் சட்ட அமர்­வுக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது. (அது­கு­றித்து பிறகு தனி­யாக அறிக்கை வெளி­வ­ரும்).</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">ஞானேஷ்­கு­மா­ரின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">செயல்­பா­டு­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">மேற்­சொன்ன 2023 ஆம் ஆண்டு சட்­டத்­தின் படி நிய­மிக்­கப்­பட்­ட­ வர்­கள் தான் தற்­போது உள்ள தேர்­தல் ஆணை­யர்­கள் மூவ­ரும். அவர்­க­ளில் டாக்­டர் சுக்­விர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகி­யோர் 2024 மார்ச் 15 அன்­றும், மற்­றொரு தேர்­தல் ஆணை­யர் டாக்­டர் விவேக் ஜோஷி 2025 பிப்­ர­வரி 19 அன்று நிய­மிக்­கப்­பட்­ட­து­டன், அன்றே ஞானேஷ் குமார் தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ரா­க­வும் பதவி உயர்வு பெற்­றார். (ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதி­கா­ரி­க­ளான சந்­து­வும், ஞானேஷ் குமா­ரும் 2024 இல் தேர்­தல் ஆணை­யர்­க­ளாக நிய­மிக்­கப்­ப­டும்­போதே காங்­கி­ரஸ் கட்சி எதிர்ப்பு தெரி­வித்­தது குறிப்­பி­டத்­தக்­கது.)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இவர்­க­ளில், தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் மட்­டும் தன்­னிச்­சை­யா­கச் செயல்­ப­டு­வ­தும், முக்­கிய முடி­வு­கள் எடுக்­கப்­பட்ட கடந்த பல மாதங்­க­ளில் தேர்­தல் ஆணை­யத்­தின் கூட்­டமே கூட்­டப்­ப­டா­மல் தவிர்க்­கப்­பட்­ட­தும், மற்ற இரு­வ­ரின் கருத்­து­கள் அறி­யப்­ப­டா­மலேமுடி­வு­கள் எடுக்­கப்­பட்­ட­தும் இப்­போது வெளிச்­சத்­திற்கு வந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">கேபி­னெட் செய­லா­ள­ருக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">இரு ஆணை­யர்­க­ளின் கடி­தம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இது தொடர்­பாக டாக்­டர் சுக்­வீர் சிங் சந்­து­வும், டாக்­டர் விவேக் ஜோஷி­யும் தனித்­த­னி­யாக, இந்­தி­யா­வின் தலை­மைச் செய­லா­ள­ரான கேபி­னெட் செய­லா­ள­ருக்­குக் கடி­தம் எழு­தி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">புதிய வாக்­கா­ளர்­க­ளைச் சேர்ப்­பது, பெயர்­களை நீக்­கு­வது உள்­ளிட்ட பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் குறித்து தங்­க­ளுக்­குத் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை என்று அவர்­கள் குற்­றம் சாட்­டு­கின்­ற­னர். புதிய வாக்­கா­ளர்­கள் மீதான நட­வ­டிக்­கை­கள் சட்­டத்­தால் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டா­தவை என்­றும், சட்­ட­வி­ரோ­த­மா­னவை என்­றும் அவர்­கள் குறிப்­பி­டு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">நாடு முழு­வ­தும் 13 கோடி வாக்­கா­ளர்­களை நீக்­கம் செய்­துள்ள எஸ்.அய்.ஆரை நடை­மு­றைப்­ப­டுத்­தும் முடிவு குறித்து கேள்­வி­கள் எழுந்­துள்­ளன. (பா.ஜ.க. மூத்த தலை­வர்  எல்.கே.அத்­வானி, ஒன்­றிய வெளி­யு­ற­வுத் துறை அமைச்­சர் எஸ்.ஜெய்­சங்­கர், மேனாள் குடி­ய­ர­சுத் துணைத் தலை­வர் ஜெக­தீப் தன்­கர் ஆகி­யோ­ரின் வாக்­கு­களே எஸ்.அய்.ஆரால் கேள்­விக்­குள்­ளாகி உள்­ளன!)  எஸ்.அய்.ஆர் எனப்­ப­டும் ‘வாக்­கா­ளர் பட்­டி­யல் சிறப்பு தீவிர மறு ஆய்வை’ நாடு முழு­வ­தும் அமல்­ப­டுத்­தும் பணி மூன்று ஆணை­யர்­க­ளின் மேற்­பார்­வை­யி­லும் நடை­பெற்று வரு­வ­தா­கச் சொல்­லப்­ப­டு­கி­றது. ஆனால், தங்­க­ளுக்­குத் தெரி­யா­மலே எடுக்­கப்­பட்ட முடி­வு­கள், பிறப்­பிக்­கப்­பட்ட உத்­த­ர­வு­கள் குறித்து, கடந்த 10 மாதங்­க­ளில் குறைந்­தது 14 முறை­யா­வது சந்து மற்­றும் ஜோஷி ஆகி­யோர் அதி­கா­ரப்­பூர்­வ­மா­கத் தங்­கள் ஆட்­சே­ப­னை­யைப் பதிவு செய்­துள்­ள­னர் என்று தற்­போது தெரி­ய­வந்­துள்­ளது. அதில் ஒரே நாளில் இரு­வ­ரு­மாக நான்கு முறை தங்­கள் மறுப்­பைப் பதிவு செய்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">எனி­னும், இவை எது­வும் கணக்­கில் எடுத்­துக் கொள்­ளப்­ப­டா­மல், தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ரின் முடிவு மட்­டுமே செயல்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­ற­தென்­றால், நாட்­டின் தன்­னிச்­சை­யான அதி­கா­ரம் படைத்த, நடு­நி­லை­மை­யில் நின்று செய­லாற்ற வேண்­டிய ஓர் ஆணை­யத்­தில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள இந்த அதி­கார வரம்பு மீறல், அர­சி­ய­ல­மைப்­புச் சட்ட மீறல் என்­பது சாதா­ர­ண­மா­னதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">மூன்று தேர்­தல் ஆணை­யர்­கள் இருக்­கி­றார்­கள் என்­றால், அவர்­க­ளில் எது பெரும்­பான்­மையோ அது தானே இறுதி செய்­யப்­ப­டும். நீதி­மன்­றங்­க­ளி­லும் இது தானே நடை­முறை! உச்­ச­நீ­தி­மன்­றத் தலைமை நீதி­ப­தி­யா­கவே இருந்­தா­லும், அவர் இடம்­பெற்­றி­ருக்­கும் ஓர் அமர்­வில் பெரும்­பான்­மைத் தீர்ப்பு அவ­ரது தீர்ப்­புக்கு மாறாக இருந்­தா­லும், பெரும்­பான்மை நீதி­ப­தி­க­ளின் தீர்ப்பு தானே உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் முடி­வாக அமை­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">ஆனால், தேர்­தல் ஆணை­யப் பிரச்­சி­னை­யில் இவற்­றுக்கு மாறாக, தலை­மைத் தேர்­தல் ஆணை­யரே, தனக்கு இல்­லாத அதி­கா­ரங்­களை எடுத்து வைத்­துக் கொண்டு, பிற தேர்­தல் ஆணை­யர்­க­ளின் கருத்­து­களை, மறுப்­பைப் புறக்­க­ணித்­துள்­ளார் என்­றால், நாடு நீதி­யின் போக்­கில் தான் செல்­கி­றதா? சட்­டப்­ப­டி­தான் நடக்­கி­றதா என்ற மிக முக்­கி­ய­மான கேள்வி வெடிக்­கி­றதே! இரண்டு ஆணை­யர்­க­ளின் எழுத்­துப்­பூர்­வ­மான அறி­வு­றுத்­த­லுக்கு முர­ணா­கத் தேர்­தல் ஆணை­யம் செயல்­பட்­ட­தா­க­வும், அதன் நட­வ­டிக்கை ‘‘அதி­கார வரம்­புக்கு அப்­பாற்­பட்­ட­தும், சட்­ட­வி­ரோ­த­மா­ன­து­மான’’ ஒன்று என்­றும் டாக்­டர் சந்து, தனது கடி­தம் ஒன்­றில் குற்­றம் சாட்­டி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">ஞானேஷ் குமார் தலை­மைத் தேர்­தல் அதி­கா­ரி­யாக இருக்­கும்­போது தான் இத்­தனை மாநி­லத் தேர்­தல்­கள் நடை­பெற்­றுள்­ளன என்­றால், அவற்­றின் நம்­ப­கத்­தன்மை கேள்­விக்­கு­ரி­ய­தல்­லவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">வாக்­கா­ளர் பட்­டி­ய­லைத் தயா­ரிக்­கும் அதி­கா­ரம் அந்­தந்த தொகு­தி­க­ளில் உள்ள தேர்­தல் பதிவு அதி­கா­ரிக்கு (ERO) மட்­டுமே உரி­யது. இந்த அதி­கா­ரம் பர­வ­லாக்­கப்­பட்­டுள்­ளது – ஓரி­டத்­தில் குவிக்­கப்­ப­ட­வில்லை என்­ப­து­தான், வாக்­கா­ளர் பட்­டி­யல் முறை­கேடு குறித்த ஒவ்­வொரு அர­சி­யல் குற்­றச்­சாட்­டுக்­கும் எதி­ராக ஆணை­யத்­தின் வாத­மாக இருந்­து­வந்­தது. ஆனால், இப்­போது  இணை­யத்­தில் அப் பட்­டி­யலை அணு­கு­வ­தி­லேயே அவர்­க­ளுக்கு அதி­கா­ரம் குறைக்­கப்­ பட்டு, தேர்­தல் ஆணை­யத்­தின் தக­வல்­தொ­ழில்­நுட்­பப் பிரி­வுக்­குக் கூடு­தல் அதி­கா­ரம் வழங்­கப்­பட்­டுள்­ளது; அதி­கா­ரம் ‘டில்­லி­யில்’ குவிக்­கப்­பட்­டுள்­ளது என்று தேர்­தல் ஆணை­யர்­கள் குற்­றம் சாட்­டு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">விரி­வாக விசா­ரிக்க</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">வேண்­டி­யது அவ­சி­யம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">வாக்­கா­ளர் மென்­பொ­ரு­ளின் நம்­ப­கத்­தன்மை குறித்த கவ­லை­களை தேர்­தல் ஆணை­யர்­களே எழுப்­பி­யி­ருப்­பது, எதிர்க்­கட்­சி­கள் இத்­த­னைக் கால­மாகஎழுப்­பி­வ­ரும் பிரச்­சினை எவ்­வ­ளவு முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தது என்­பதை எடுத்­துக் காட்­டு­கி­றது. இப்­போது வெளி­வந்­தி­ருப்­பது கூட பனிப்­பா­றை­யின் ஒரு முனை (Tip of the Iceberg) மட்­டுமே! இன்­னும் தேர்­தல் ஆணை­யத்­தின் அதி­கா­ரக் குவிப்­பி­னா­லும், சார்பு நட­வ­டிக்­கை­க­ளா­லும் எத்­த­கைய சிக்­கல்­கள் ஏற்­பட்­டுள்­ளன என்­பதை விரி­வாக விசா­ரிக்க வேண்­டிய அவ­சி­யம் எழுந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">கடும் குற்­றச்­சாட்­டுக்கு ஆளா­கி­யுள்ள தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் தானா­கப் பதவி வில­கு­வதே நியா­யம் ஆகும். அதற்கு அனை­வ­ரும் வலி­யு­றுத்­த­வேண்­டும். குடி­ய­ர­சுத் தலை­வர் தலை­யிட்டு, உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­வேண்­டும். பின்­ன­ணி­யில் இருந்து இவரை இயக்­கு­ப­வர்­கள் யார் என்­பது வெளிக்­கொண்டு வரப்­ப­ட­வேண்­டும். இது மிக­வும் அவ­ச­ர­மான கால­கட்­டம்! நாட்­டின் ஜன­நா­ய­கத்­திற்கு ஏற்­பட்­டுள்ள மிகப் பெரிய ஆபத்­துக்கு அடிப்­ப­டை­யான முறை­கே­டு­கள் வெளிச்­சத்­திற்கு வரத் தொடங்­கி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">மேலும் ஒரு செய்­தியை இந்த நேரத்­தில் சுட்­டிக்­கா ட்­டு­வது இன்­றி­ய­மை­யா­த­தா­கும். 2023 ஆம் ஆண்டு தேர்­தல் ஆணை­யர்­கள் நிய­ம­னச் சட்­டத்­தில், ‘பணிக் காலத்­தில் தேர்­தல் ஆணை­யர்­கள், தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஆகி­யோர் மேற்­கொள்­ளும் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக, பிற்­கா­லத்­தில் அவர்­கள் மீது வழக்­குத் தொடுக்க முடி­யாத’ அள­வுக்­குச் சட்­டத்­தைத் திருத்­தி­யுள்­ள­னர். இதன்­மூ­லம், தேவை­யான பாது­காப்பு ஏற்­பா­டு­களை முன்­னெச்­ச­ரிக்­கை­யா­கச் செய்­து­கொண்டு, அதன்­பி­ற­கு­தான் முறை­கே­டு­கள் திட்­ட­மிட்­டுச் செய்­யப்­பட்­டுள்­ளன என்று சந்­தே­கிப்­ப­தற்கு முகாந்­தி­ரங்­கள் உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">ஓர­ணி­யில் நின்று</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">களம் காணு­வது அவ­சி­யம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">ஏற்­கெ­னவே ஓட்­டுத் திருட்டு, வாக்­கா­ளர் பட்­டி­யல் திருத்­தம், வாக்­குப் பதிவு இயந்­தி­ரங்­கள் மீதான நம்­ப­கத் தன்மை இன்மை என்ற பிரச்­சி­னை­க­ளு­டன், தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ரின் அதி­கார அத்­து­மீ­ற­லும் வெளி­வந்­துள்­ளது.  நாட்­டில் நடந்து வரும் அத்­தனை அநீ­தி­க­ளும், பாசி­சப் போக்­கும் இந்­தத் தேர்­தல்­கள் மூலம் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு ஆட்­சி­யில் உள்ள ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வினா­லேயே மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது என்ற சூழ­லில், அத்­தனை ஆபத்­து­க­ளுக்­கும் அடிப்­படை, இக் கால­கட்­டத்­தில் நடந்த தேர்­தல்­களே – அதில் நிகழ்ந்­தி­ருக்க வாய்ப்­புள்ள முறை­கே­டு­களே! நாட்­டின் ஜன­நா­ய­கமே கேள்­விக் குறி­யாகி, இந்­தி­யக் குடி­ய­ர­சுக்கே ஆபத்து நேர்ந்­துள்ள இந்­தச் சூழ­லில், அனைத்து எதிர்க்­கட்­சி­க­ளும்,  முன்­னாள், இந்­நாள் மாநில முத­ல­மைச்­சர்­க­ளும், ஜன­நா­ய­கத்­தில் நம்­பிக்­கை­யுள்ள அமைப்­பு­க­ளும், சமூக ஆர்­வ­லர்­க­ளும், ஊட­கங்­க­ளும் இப் பிரச்­சி­னை­யில் ஓர­ணி­யில் நின்று களம் காணு­வது அவ­சி­ய­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">06.10.2026 அன்று  நடை­பெற உள்ள சட்­ட­மன்ற இடைத்­தேர்­த­லில் மது­ராந்­த­கம் சட்­ட­மன்றத் தொகு­தி­யில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் ஆசி­யு­டன் மதச்­சார்­பற்ற முற்­போக்கு கட்­சி­க­ளின் சார்­பில் போட்­டி­யி­டும் தி.மு.கழக வெற்றி வேட்­பா­ளர் -– வழக்­க­றி­ஞர் இ.பரந்­தா­மன்  மதுராந்தகம் வடக்கு ஒன்­றி­யத்­தில் நாளை (26.9.2026 – சனிக்கிழமை) உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திற்கு வாக்கு சேக­ரிக்க ஊராட்சி வாரி­யாக  மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி கட்சி நிர்­வா­கி­க­ளு­டன் வருகை தர உள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அது சம­யம் கூட்­டணி கட்­சி­க­ளின் நிர்­வா­கி­கள் கலந்­தா­லோ­சித்து அனை­வ­ருக்­கும்  முறை­யாக தக­வல் தெரி­வித்து வாக்கு சேக­ரிப்­ப­தற்கு எழுச்­சி­யு­டன் ஏற்­பா­டு­களை செய்து உற்­சாக வர­வேற்­பை­யும் அளித்­தி­டு­மாறு தங்­களை அன்­பு­டன் கேட்­டுக்­கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">மதுராந்தகம் சட்டமன்ற இடை தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் ஐ. பரந்தாமன் ஆதரித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அச்சரப்பாக்கம் வடக்கு  ஒன்றியம்  பாப்பநல்லூர், திட்டாளம்,  கோழிளாம், தண்டரை புதுச்சத்திரம், ஆகிய ஊராட்சியில் மாவட்ட கழகச் செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் தலைமையில்   விதி விதியாகச்  சென்று வாக்கு  சேகரித்தார்கள் இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, எம்.பிக்கள் இரா.கிரிராஜன், க.செல்வம், ஒன்றிய செயலாளர் தம்பு,  நிர்வாகிகள் மு.பகலவன், எம்.எல்.ரவி, மு.கதிரவன், எஸ்.ரமேஷ், பா.செ.குணசேகரன், பி.வெங்கடாஜலபதி, கே.ஜி.பாஸ்கர் சுந்தரம், வெ.அன்புவாணன், ஜி.ஸ்டாலின், ஏ.கே.சுரேஷ், டி.கே.சந்திரசேகர்,  ஆ.சக்தியவேலு, நா.பரிமளம், மு.மணிபாலன், ஆ.ராஜா, ந.செல்வசேகரன், ஞாயிறு வே.ஆனந்த் குமார், மு.முரளிதரன், ஜான் பொன்னுசாமி,  ஏ.ஆர்.டி.உதயசூரியன், ஜி.ரவிக்குமார், அபிராமி குமரவேல்,   க.சு.தமிழ் உதயன் உள்பட திமுக நிர்வாகிகள் உள்ளனர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணிச் சார்பில் மேயர் பிரியா ராஜன் தலைமையில், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சரிதா மகேஷ் குமார்,மாவட்ட மகளிர்- -– தொண்டரணி அமைப்பாளர்கள் சுதா தீனதயாளன், ராஜேஸ்வரி ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலையில் அண்டவாக்கம் 38 வது பாகம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். இந்த வாக்கு சேகரிப்பில் வரலட்சுமி,சந்திரகலா,கலைவாணி,குயின் அனிதா, அனுசியா, ஈஸ்வரி, சாந்தி,மாசிலாமணி, சரசு, விஜயகுமாரி, சத்ய நாகலிங்கம்   மற்றும் அப்பாகத்தின் பொறுப்பாளர்கள் மணிபால்,நாகப்பன்,ஏகதாஸ்,நவீன் குமார், முனியம்மாள்,தில்சாத், ராஜகுமாரி, அஸ்வினி, யுவராணி. ஆகியோர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மதுராந்தகம் (தனி) இடைத்தேர்தலை முன்னிட்டு அருங்குணம் ஊராட்சியில் ஏரிக்கரை தெரு, மேட்டுத்தெரு, தெற்கு தெரு, ஆகிய பகுதிகளில் உள்ள பெண்களிடம், ஆலந்தூர் தெற்கு பகுதி கழக செயலாளரும், 12-வது மண்டல குழு தலைவருமான, என். சந்திரன், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். இப்பிரச்சாரத்தில்   மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு டி. பிரகாஷ், 167 வது வட்ட கழக செயலாளர் ஜெ. நடராஜன், கண்டோமென்ட் நகர மாணவர் அணி அமைப்பாளர் மகேஷ்,  மாவட்ட பிரதிநிதி வீ. ரமணா, மாவட்ட தொ. அ. து. அமைப்பாளர் டி. பிரான்சிஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>