<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,373,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Sep 25 2026 03:41:46 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260925T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="25092026-MDU-02" position.sequence="02" ex-ref="25092026-MDU-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#0000ff" boxBorderWeight="1.97960263559774">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="38">ஞானேஷ்குமார் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup880512_02_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">“தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல்  ஆணையர் ஞானேஷ்குமார் இனியும் பதவியில் நீடிக்கக்  கூடாது: உடனடியாக அவர் நீக்கப்பட வேண்டும்!” என்று  தி.மு.க.  தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அகில இந்தியத்  தலைவர்கள் பலரும் இதே  கோரிக்கையை  விடுத்துள்ளார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இந்தியத் தேர்தல் ஆணையம் வெளிப்படைத் தன்மையுடன், சுதந்திரமாக, ஜனநாயகப் பூர்வமாகச் செயல்பட வேண்டிய அமைப்பு ஆகும். ஆனால் அது தலைமைத் தேர்தல் ஆணையரான ஞானேஷ்    குமாரின் தன்னிச்சையான அமைப்பாக மட்டுமே செயல்பட்டுள்ளது. மற்ற தேர்தல் ஆணையர்களுக்கு எதுவும் தெரியவில்லை என்பதைவிட, அவர்களது ஆலோசனைகளுக்கு மாறாக ஞானேஷ்குமார் நடந்து வந்துள்ளது அம்பலம் ஆகி உள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர், கடந்த 10 மாதங்களில் வாக்காளர்களைச் சேர்த்தல், பெயர்களை நீக்குதல், மீண்டும் சேர்த்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் தரவுகளைக் கையாளுதல் தொடர்பான முடிவுகளுக்கு குறைந்தது 14 முறை முறையான எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர் என்பதை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு வெளிப்படுத்தி இருக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">‘சிறப்புத் தீவிர திருத்தம்’ (SIR) என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான மக்களின் பெயர்களை நீக்கும் முடிவை ஜனநாயக சக்திகள் அனைவரும் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். அந்தக் குற்றச்சாட்டு எதற்கும் இந்தியத் தேர்தல் ஆணையம் முறையான பதிலைத் தரவில்லை. எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, உடனிருந்து பணியாற்றும் மற்ற தேர்தல் ஆணையர்களுக்கும் உரிய பதில் தரப்படவில்லை. அவர்களது எதிர்ப்பை மீறியே தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செயல்பட்டுள்ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மற்ற இரு  தேர்தல் ஆணையர்களான சுக்பிர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகிய இருவருக்கும், தேர்தல் கமிஷனில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் வைத்துள்ளார். கடந்த  10 மாதங்களில் 14 முறை அவர்கள் இருவரும் ஞானேஷ்குமார் முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள். அதனை ஞானேஷ்குமார் மதிக்கவே இல்லை. இதை வெறும் ஈகோ மோதலாகச் சுருக்கி விட முடியாது. தனது செயல்களை மற்ற ஆணையர்களுக்கு மறைப்பதன் மூலமாக பல்வேறு சதிச்செயல்களை மறைமுகமாக ஞானேஷ்குமார் செய்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இதை வைத்துப் பார்க்கும் போது  SIR-க்குப் பின்பு நடந்த அனைத்துச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளிலும்  சந்தேகம் ஏற்படுகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">“நீதிமன்றமே தலையிட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கச் சொன்ன பிறகும், அவர்களது பெயர்களைச் சேர்ப்பதற்கு எதிராக மேல்முறை யீடுகள் செய்யப்பட்டுள்ளன. யார் இதனைச் செய்தது? அதுகுறித்துக் கூட எங்களுக்குத் தெரியவில்லை.  சட்டப்படி வாக்காளர் பட்டியலில் திருத்தங்களைச் சரிபார்த்து மேற்கொள்ள ERO எனப்படும் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் உண்டு. ஆனால், தகுதியுள்ள வாக்காளர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் அவர்களால் சேர்க்க முடியவில்லை.  அதைச்செய்வதற்கான ERONet வலைதளம் முற்றிலுமாக ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது. எங்களால்கூட அதனை அணுக முடியவில்லை” என இரண்டு தேர்தல் ஆணையர்களும் தெரிவித்துள்ளார்கள் என்றால், ஞானேஷ்குமார் காலத்தில் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்தும் எப்படி  ஜனநாயகத் தேர்தல்களாக  இருந்திருக்க முடியும்?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கடந்த மார்ச் மாதத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில்  நோட்டீஸ் கொடுக்கப்பட்டதை நாடு மறந்திருக்காது. எதிர்க்கட்சிகள் சந்தேகப்பட்டது சரியானதுதான் என்பதை இரண்டு தேர்தல் ஆணையர்களும் உறுதி செய்துள்ளார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஒரே ஒரு தொகுதியை மட்டும் எடுத்து வைத்து. ‘அங்கு வாக்குத் திருட்டு எப்படி நடந்துள்ளது’ என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  அம்பலப்படுத்தினார்.  இவை இரண்டுக்கும் தானாக முன்வந்து பதில் அளித்திருக்க வேண்டும் தேர்தல் ஆணையம். மாறாக ராகுல் காந்தியை மிரட்டினார் ஞானேஷ்குமார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">“வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஏழு நாட்களுக்குள் தனது கையெழுத்துடன் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், அக்குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று உறுதி செய்யப்படும். அதற்காக நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மிரட்டினார். இப்போது இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ஞானேஷ்குமார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">“தேர்தல் ஆணையர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் எழுவது மிகத் தவறானது. இது வாக்காளர்களின்  மனதில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும். ஜனநாயகத்தில் இது துரதிஷ்டம்” என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் ஓ.பி.ராவத், எஸ்.ஒய்.குரேஷி ஆகியோர் சொல்லி இருக்கிறார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">‘’சர்வாதிகாரத்துடன் செயல்பட்ட ஞானேஷ்குமாரை  பதவி நீக்கம் செய்வதுடன் அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">‘’மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்” என்று உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கோரிக்கை வைத்துள்ளார். ‘’மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆருக்கு முந்தைய வாக்காளர் பட்டியலைப்  பயன்படுத்தி மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்” என்று சொல்லி இருக்கிறார், மேற்கு வங்க மாநில முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இந்திய ஜனநாயகத்தை, தேர்தல் நடத்தைகளை, மக்களாட்சி மாண்புகளை  குழிதோண்டிப்  புதைக்கும் செயலைத்தான் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்து வந்துள்ளார். அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அவரது செயல்பாடுகள் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து முழுமையாக விசாரிக்க வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>