<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,64,493,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Sep 24 2026 16:47:02 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260925T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="25092026-MDU-06" position.sequence="06" ex-ref="25092026-MDU-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="36">தி.மு.க. வெற்றி பெறும்; தமிழ்நாட்டில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="25">செங்கல்பட்டில் நடைபெற்ற தி.மு.க. வழக்கறிஞர் அணி</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="29">ஆலோசனைக் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="RSBharathi_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Theerargal1_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">செங்­கல்­பட்டு, செப். 24–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தி.மு.க. சட்­டத்­துறை சார்­பில் மது­ராந்­த­கம் சட்­ட­மன்ற தொகுதி கழக வேட்­பா­ளர்,  சட்­டத்­துறை இணைச் செய­லா­ளர் ஐ.பரந்­தா­மனை ஆத ரித்து, இடைத்­தேர்­த­லில் ஆற்ற வேண்­டிய தேர்­தல் பணி குறித்த வழக்­க­றி­ஞர்­கள் ஆலோ­ச­னைக்­கூட்­டம் சட்­டத்­துறை செய­லா­ளர், மூத்த வழக்­க­றி­ஞர்  என்.ஆர்.இளங்கோ  முன்­னி­லை­யில் செங்­கல்­பட்­டில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">இந்த ஆலோ­ச­னைக் கூட்­டத்­திற்கு  செய­லா­ளர் காஞ்­சி­பு­ரம் தெற்கு மாவட்ட அமைப்­பா­ளர் கார்த்­தி­கே­யன் தலைமை வகித்­தார்.  காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்ட அமைப்­பா­ளர் கன­க­ராஜ் வர­வேற்­புரை ஆற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">இக்­கூட்­டத்­தில்  கழக அமைப்­புச் செய­லா­ளர், மூத்த வழக்­க­றி­ஞர் ஆர்.எஸ்.பாரதி பங்­கேற்று ஆலோ­ச­னை­களை வழங்கி உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவர் பேசி­ய­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மது­ராந்­த­கம் சட்­ட­மன்ற தேர்­தல் என்­பது மிக மிக முக்­கி­ய­மான தேர்­தல் ,இதற்கு முன்­னால் நடை­பெற்ற இடைத்­தேர்­தல் எல்­லாம் வேறு,  வேறு கார­ணங்­க­ளுக்­காக நடை­பெற்­றது,  சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் இறந்­து­விட்­டால் இடைத்­தேர்­தல் வரும், இல்­லை­யென்­றால், அதை­விட உயர்ந்த வேறொரு பொறுப்­புக்கு அவர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டால்,  அவர் ராஜி­னாமா செய்­யும் நிலை­யில் அங்கு இடைத்­தேர்­தல் வரும், ஆனால் தற்­பொ­ழுது இடைத்­தேர்­தல் நடை­பெ­றும் இரண்டு தொகு­தி­க­ளி­லும் அவ்­வாறு நடக்­க­வில்லை,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">முப்­பெ­ரும் விழா­வில் கழ­கத் தலை­வர் அவர்­கள் குறிப்­பிட்­டதை போல ஜன­நா­ய­கம் சாக­டிக்­கப்­பட்டு விட்­ட­தால் இந்த இரண்டு தொகு­தி­க­ளி­லும்  இடைத்­தேர்­தல் நடை­பெ­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இதனை நமது வழக்­க­றி­ஞர்­கள் மக்­கள் மத்­தி­யில் தெளி­வாக எடுத்­துச் சொல்ல வேண்­டும்,  இந்­தத் தேர்­தல் என்­பது எவ்­வ­ளவு முக்­கி­ய­ மா­னது,  கடந்த கால தேர்­த­லுக்­கும் தற்­போது இப்­பொ­ழுது நடை­பெ­று­கிற இடைத்­தேர்­த­லுக்கு என்ன வித்­தி­யா­சம் என்­பதை மக்­க­ளுக்கு எடுத்து கூற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">1962 – இடைத்­தேர்­தல்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்த இடைத்­தேர்­த­லில் நாம் எப்­ப­டி­ப­ணி­யாற்­றிட வேண்­டும் என்­ப­தை­ஒரு வர­லாற்று நிகழ்வை சுட்­டிக்­காட்டி குறிப்­பிட விரும்­பு­கி­றேன் ,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">1962இல் நடை­பெற்ற பொதுத் தேர்­த­லில் நாம் 50 பேர் வெற்றி பெற்­றோம்,  ஆனால் அன்­றைய தினம் காஞ்­சி­பு­ரத்­தில் போட்­டி­யிட்ட அண்ணா அவர்­கள் தோல்­வி­யுற்­றார்,  அப்­பொ­ழுது ஏற்­பட்ட அந்த வேத­னையை நேர­டி­யாக பார்த்­த­வர்­க­ளின் நானும் ஒரு­வன்,   இங்கு உரை­யாற்­றிய என்.ஆர்.இளங்­கோ­வின் தந்தை சோளிங்­கர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் வெற்றி பெற்­றார், அப்­பொ­ழுது திருச்­செங் ­கோடு நாடா­ளு­மன்ற தொகுதி இடைத்­தேர்­தல் நடை­பெற்­றது, அப்­போது அங்கு வெற்றி பெற்­ற­வர் இறந்­த­தால் இடைத்­தேர்­தல் நடக்­க­வில்லை,   தமிழ்­நாட்­டின் முன்­னாள் முத­ல­மைச்­ச­ராக இருந்த டாக்­டர் சுப்­பு­ராஜ் வெற்றி பெற்ற திருச்­செங்­கோடு தொகு­தி­யில் , அவர் மராட்­டிய மாநில கவர்­ன­ராக நிய­மி க்­கப்­பட்ட கார­ணத்­தால்,  அங்கு பொதுத் தேர்­தல் முடிந்த 2 மாதத்­தில் இடைத்­தேர்­தல் வந்­தது,  அந்த கால­கட்­டங்­க­ளில் விலை­வாசி போராட்­டம் நடை­பெற்­றது,  அந்­தப் போராட்­டத்­தில் அண்ணா, கலை­ஞர்  உள்­ளிட்ட அனைத்து தலை­வர்­க­ளும் கைது செய்­யப்­பட்டு சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­னர்,  மிகப்­பெ­ரிய பலம் பொருத்­திய காங்­கி­ரஸ் கட்­சியை எதிர்த்து போட்­டி­யிட்ட தி.மு.க.  வேட்­பா­ளரை,  ஒவ்­வொரு தி.மு.க. தொண்­டனும் , எங்­கள் அண்­ணா­வையே தோற்­க­டித்து விட்­டீர்­கள்,  எப்­ப­டி­யா­வது வெற்றி பெற வேண்­டும் என்று தீவி­ர­மு­டன் பணி­யாற்­றி­ய­தன் கார­ண­மாக  திருச்­செங்­கோடு இடைத்­தேர்­த­லில் திமு­க­ழ­கம் வெற்றி பெற்­றது. இந்த வெற்­றி­தான் 1967–ல் தி.மு.க.  ஆட்­சிக்கு வரு­ வ­தற்கு  ஒரு திருப்­பு­மு­னை ­யாக அமைந்­தது,  அதன் தொடர்ச்­சி­யாக தான் 1967 –ல் நடை­பெற்ற பொது தேர்­த­லில் தி.மு.க.  ஆட்­சி­யைப் பிடிக்க கார­ண­மாக அமைந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">வர­லாற்று வெற்­றியை பெறு­வோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அது­போன்ற வர­லாறு 64 வரு­டங்­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் இந்த இடைத்­தேர்­த­லில் நடை­பெற போகி­றது,  கழ­கத் தலை­வரே தோற்­ற­தால் ஒவ்­வொரு தி.மு.க.  தொண்­ட­னும் எப்­ப­டி­யா­வது இந்த இடைத்­தேர்­த­லில் வெற்றி  பெற்­றாக வேண்­டும் என்று தீவி­ர­மாக பணி­யாற்ற வேண்­டும்,  1962–யை போல் ஒரு வர­லாற்று வெற்­றியை இந்த இடை தேர்­த­லில் நாம் பெற்­றாக வேண்­டும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எனவே இந்த இடைத்­தேர்­த­லில் திமு­க­வி­னர் குறிப்­பாக வழக்­க­றி­ஞர்­கள் விழிப்­பு­டன் பணி­யாற்ற வேண்­டும்,   ஆளுங்­கட்­சி­யி­னர் அதி­கார துஷ்­பி­ர­யோ­கம், அத்­து­மீ­றல்­கள் நிச்­ச­யம் அதி­க­மாக இருக்­கும்,  அதனை  எல்­லாம் வழக்­க­றி­ஞர்­கள் கண்­கா­ணித்து உட­னுக்­கு­டன் சட்­டத்­தின் துணை­யோடு எதிர்­கொள்ள வேண்­டும்,  இங்கு பணி­யாற்­று­கின்ற கழ­கத் தோழர்­க­ளுக்கு, நிர்­வா­கி­க­ளுக்கு வழக்­க­றி­ஞர்­கள் பாது­காப்பு அர­ணாக இருக்க வேண்­டும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">தேர்­தல் ஆணை­யர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">புகார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இன்று கூட தேர்­தல் ஆணை­யத்­தில் கழ­கத்­தின் சார்­பில் ஒரு புகார் அளிக்­கப்­பட்­டது, தேர்­தல் ஆணை­யத்­தி­டம் த.வெ.க. வினர் அனு­மதி பெற்று இருந்த 40 பேர் கொண்ட ஸ்டார் பேச்­சா­ளர் பட்­டி­ய­லில்,  காங்­கி­ரஸ்,  வி.சி.க.,  மற்­றும் இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீக்,  தலை­வர்­க­ளின் பெய­ரும் அந்­தப் பட்­டி­ய­லில் இருந்­தது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஒரு கட்சி ஸ்டார் பேச்­சா­ளர் என்று அனு­மதி பெற தேர்­தல் ஆணை­யத்­தி­டம் அனு­மதி கேட்­கும் போது,  அந்­தப் பேச்­சா­ளர் அந்த கட்­சி­யின் உறுப்­பி­ன­ராக தான் இருக்க வேண்­டும்,  அவ்­வாறு வேறு ஒரு கட்சி தலை­வ­ருக்கு அனு­மதி வாங்­கு­வது என்­றால் அவர் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத அர­சி­யல் கட்­சி­யின் தலை­வ­ராக இருக்க வேண்­டும்,  ஆனால் த.வெ.க.  சார்­பில் கொடுக்­கப்­பட்ட நட்­சத்­திர பேச்­சா­ளர்­கள் பட்­டி­ய­லில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அர­சி­யல் கட்­சித் தலை­வர்­க­ளின் பெயர்­க­ளை­யும் சேர்த்து அனு­மதி பெற விண்­ணப்­பித்தி ­ருப்­பது தேர்­தல் ஆணை­யத்­தின் விதி­க­ளுக்கு முர­ணா­னது,  எனவே தான் , நாம் தேர்­தல் ஆணை­யத்­தின் விதி­களை சுட்­டிக்­காட்டி புகா­ரினை அளித்­துள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தற்­பொ­ழுது சட்ட அமைச்­ச­ராக உள்­ள­வர் மிக ஓவ­ராக பேசு­கி­றார், சட்­டத்­திற்­கும் அவ­ருக்­கும் சம்­பந்­தமே கிடை­யாது, வாயை திறந்­தாலே பொய்­தான் பேசு­கி­றார்,  ரீல்ஸ் போடு­வ­தற்­காக வாய்க்குவந்­ததை எல்­லாம் உள­ரு­கி­றார்,
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவ­ருக்கு அவர் பாணி­யில் இனி­மேல் பதி­லடி கொடுக்க தி.மு.க.  தயா­ராக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">விழித்­துக் கொண்ட மக்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்த நான்கு மாத த.வெ.க.  ஆட்­சி­யில் மக்­கள் நன்­றாக விழித்­துக் கொண்­டுள்­ள­னர்,  எதற்­காக தற்­போது இடைத்­தேர்­தல் நடை­பெ­று­கி­றது என மக்­கள் நன்­றாக புரிந்து வைத்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அத­னால் தான் தற்­பொ­ழுது இடைத்­தேர்­தல் நடை­பெ­றும் மது­ராந்­த­கம் மற்­றும் தாரா­பு­ரம் ஆகிய தொகு­தி­க­ளில் த.வெ.க.  வேட்­பா­ளர்­களை பொது­மக்­கள் விரட்­டி­ ய­டி­கி­றார்­கள் , ஓட்டு கேட்க தொகு­திக்­குள்ளே செல்ல முடி­யாத நிலை உள்­ளது, அத­னால் த.வெ.க.  வேட்­பா­ள­ருக்கு  போலீஸ் பாது­காப்பை  அதி­க­ரித்து போலீஸ் பாது­காப்­போடு ஓட்டு கேட்டு வரு­கி­றார்­கள்,    அவர்­க­ளது வேட்­பா­ள­ருக்கு மட்­டும் போலீஸ் பாது­காப்பு கொடுத்­தால் மற்ற வேட்­பா­ளர்­கள் அதற்கு எதிர்ப்பு தெரி­விப்­பார்­கள் என்ற கார­ணத்­தி­னால் , அத­னால் திருட்­டுத்­த­ன­மாக ஒரு சட்­டத்தை போட்டு,  அனைத்து வேட்­பா­ளர்­க­ளுக்­கும் போலீஸ் பாது­காப்பு அளிக்­கி­றார்­கள்,  இது இது­வரை எந்த தேர்­த­லி­லும் நடை­பெ­றாத புது­மை­யானதாக உள்­ளது,  நாங்­கள் எங்­க­ளது வேட்­பா­ள­ருக்கு போலீஸ் பாது­காப்பு வேண்­டாம் என்று சொல்­லி­விட்­டோம்,  ஏனென்­றால் தி.மு.க.  வேட்­பா­ளர்­கள் செல்­லும் இட­மெல்­லாம் மக்­கள் உற்­சாக வர­வேற்பு தரு­கி­றார்­கள்,  திமு­க­விற்கு மக்­கள் துணை இருக்­கும் பொழுது எங்­க­ளுக்கு எதற்கு போலீஸ் பாது­காப்பு என்று வேண்­டாம் என்று சொல்­லி­விட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">மக்­களை ஏமாற்­றிய விஜய்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இன்­னும் ஒரு 15 நாட்­கள் தி.மு.க.  வழக்­க­றி­ஞர்­கள் விழிப்­பு­டன் பணி­யாற்ற வேண்­டும்,  ஆங்­காங்கு உள்ள பிரச்­சி­னை­களை கண்­ட­றிந்து அவற்றை நமது கழக நிர்­வா­கி­கள் மூலம் உட­னுக்­கு­டன் தீர்த்து வைக்க துணை­யாக இருக்க வேண்­டும், இடைத்­தேர்­தல் நடை­பெ­று­கின்ற இந்த இரண்டு தொகு­தி­க­ளுமே திமு­க­விற்கு சாத­க­மான தொகு­தி­கள் தான்,  தற்­பொ­ழுது நடை­பெ­று­கின்ற ஆட்சி  தேர்­த­லுக்கு முன்­னர் கொடுத்த வாக்­கு­று­தி­க­ளை­யெல்­லாம் இது­வரை நிறை­வேற்­றா­மல்,  ஓட்டு போட்ட நம்­மை­யெல்­லாம் ஏமாற்றி விட்­டார்­கள் என்று வாக்­கா­ளர்­கள் கொந்­த­ளித்து வரு­கி­றார்­கள், தி.மு.க.  ஆட்­சி­யின் போது பெற்ற நன்­மை­களை தவிர,  புதி­தாக வந்த த.வெ.க.  ஆட்சி எந்­தத் திட்­டத்­தை­யும் புதி­தாக கொண்டு வர­வில்லை என்­பதை மக்­கள் புரிந்து வைத்­தி­ருக்­கி­றார்­கள்,  இவை­யெல்­லாம் நமக்கு சாத­க­மாக நிச்­ச­யம் அமை­யும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எனவே இந்த தேர்­த­லில் ஒன்றை மட்­டும் நமது நிர்­வா­கி­கள் மற்­றும் வழக்­க­றி­ஞர்­கள் மன­தில் வைத்து பணி­யாற்ற வேண்­டும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்த இரண்டு இடைத்­தேர்­த­லில் நாம் வெற்றி பெற்­றால் நிச்­ச­யம் தமிழ்­நாட்­டில் வரும் ஜன­வரி மாதத்­திற்­குள் ஆட்சி மாற்­றம்  ஏற்­ப­டும். எனவே இந்த வர­லாற்று வெற்றி கிடைக்க நாம் இடை­வி­டாது பணி­யாற்ற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு அவர் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மேலும் இக்­கூட்­டத்­தில் சட்ட திட்ட திருத்­தக்­குழு செய­லா­ளர் இரா.கிரி­ரா­ஜன் எம்.பி., கழக கொள்கை பரப்­புச் செய­லா­ளர் சி.வி.எம்.பி.ஏ.எழில­ ரசன், சட்­டத்­துறை இணைச் செய­லா­ளர்­கள்  கே.எஸ்.ரவிச்­சந்­தி­ரன்,  ஜெ.பச்­சை­யப்­பன், சட்­டத்­துறை துணை செய­லா­ளர்­கள் கே.சந்­துரு, பெ.இரகு , என்.மரு­து­க­ணேஷ்,  ஜி.சந்­தி­ர­போஸ், தலைமை கழக வழக்­க­றி­ஞர்­கள் ஜெ. சர­வ­ணன், மீஞ்­சூர் கே.சுரேஷ்,  சு.வை சுரேஷ், முன்­னாள் அரசு வழக்­க­றி­ஞர் ஜி.தேவ­ரா­ஜன், மற்­றும் கழக வழக்­க­றி­ஞர்­கள்  நன்­மா­றன்,  ஆறு­மு­கம், மனோ­க­ரன்,  பாலாஜி, கலை­ய­ழ­கன், தன­சே­கர், பக­வதி, வெற்­றிச்­செல்­வன், மற்­றும் காஞ்­சி­பு­ரம் வடக்கு மற்­றும் தெற்கு மாவட்ட, திண்­டி­ வ­னம்,  வழக்­க­றி­ஞர் அணி நிர்­வா­கி­கள் ,கழக வழக்­க­றி­ஞர்­கள் பங்­கேற்று சிறப்­பித்­த­ னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நிகழ்ச்­சி­யின் நிறை­வாக செங்­கல்­பட்டு மாவட்ட  அரசு முன்­னாள் வழக்­க­றி­ஞர் 
திரு­மு­ரு­கன் நன்றி கூறி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>